ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
உண்டியல் பணத்தை இலங்கை தமிழர் நிதிக்கு வழங்கிய மாணவி தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டம் ஏ.கே.எஸ்., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி ராமலட்சுமி பாரதி உண்டியலில் சேமித்த பணத்தை இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். அவர் உண்டியலில் சிறுகசிறுக சேமித்து வைத்திருந்த 494 ரூபாயை, ஆசிரியர் உதவியுடன் "டிடி' எடுத்து இலங்கை தமிழர் நிவாரண நிதிக்காக , தூத்துக்குடி கலெக்டர் பழனியாண்டிக்கு தபாலில் அனுப்பிவைத்தார். முதல்வர் கருணாநிதி வேண்டுகோளை ஏற்று, பெற்றோர் தந்த ரூபாயை வீணாக செலவழிக்காமல் சேமித்து அதை இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு வழங்கிய "மனிதாபிமானமிக்க' ராமலட்சுமி பாரதிக்கு கலெக்டர், ஆசிரியர்கள், அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். மேல…
-
- 12 replies
- 2.4k views
-
-
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதனை கண்டித்தும் அங்கு உடனடியாக போரை நிறுத்த மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் எனக் கோரியும் தமிழ்நாடு முழுவதும் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வீதி மறியல் போராட்டம் நடத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 347 views
-
-
'புலிகளை முற்றாக தோற்கடிக்க முடியும் என்று கூறும் மஹிந்த எதற்காக ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு அமைதிப் பேச்சுக்கு வருமாறு புலிகளுக்கு அழைப்பு விடுக்கிறார்? அரசின் நிலைப்பாடு அடிக்கடி இலவ்வாறு மாறுவதற்கான கராணம் என்ன?' இவ்வாறு பாராளுமன்றில் நேற்று கேள்வி எழுப்பினார் ரவி கருணாநாயக்க. மேலும் : வடக்கில் படையினரால் கைப்பற்றபட்ட சில இடங்களை புலிகள் மீண்டும் கைப்பற்றிவிட்டனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த யுத்தத்தை மூன்று மாதங்ளில் முடிப்போம். நான்கு மாதங்களில் முடிப்போம் என்று அரசு சொல்லலாம். அது சாத்தியமல்ல. பயங்கரவாதத்தை முற்றதாக ஒழித்துக்கட்டப் போகிறோம் என்று மஹிந்த கூறுகிறார். மறுபுறம் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு அமைதிப்பேச்சுக்கு வருமாறு அவர…
-
- 1 reply
- 1.3k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள களுவாஞ்சிக்குடி பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் உந்துருளி அணி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 458 views
-
-
குமுதம் இணையத்தள முச்சந்தியில் 24.11.2008ல் வந்த 'தமிழக அரசியலில் கூட்டணி வியூகம்' என்ற தலைப்பில் வந்த ஆக்கம் தமிழக அரசியலில் கூட்டணி வியூகம்... மப்பும் மந்தாரமுமாக இருந்தது வானம். அவ்வப்போது சண்டைக்கோழி மாதிரி மழை பிய்த்துக் கொண்டு அடித்தது.. இந்த நிலையில் அலப்பறை டீமை கூட்டலாமா என்ற யோசனையில் இருந்த சித்தன், சுவரு முட்டி சுந்தரம் சண்டைக்கு வந்து விடுவாரோ என்ற கலக்கத்தில் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். அடுத்த சிலமணி நேரத்தில் லைட் அவுஸ் அருகே ஈரமான கடற்கரை மணலில் கூடியது கூட்டம். "என்னப்பா சித்தா. இடியும் மழையுமா இருந்தாலும் கடமையே கண்ணாக கூட்டத்தை கூட்டியிருக்கியே... உனக்கு ஒரு சபாஷ் போடலாமா"- அன்வர் பாய். "என்ன செய்யுறதப்பா. கொஞ்சம் தாமதமான…
-
- 1 reply
- 1.4k views
-
-
இடப்பெயர்வில் அழியும் ஈழம் - பூங்குழலி திங்கள், 24 நவம்பர் 2008, 10:00 மணி தமிழீழம் [செய்தியாளர் பூங்குழலி] ஈழத்தில் நடைபெறும் போர்ச் செய்திகள், தமிழக ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. மக்களின் வாழ்விடங்கள் மீது குண்டு வீச்சு; அதனால் சாவு என்பதே இச்செய்திகளின் மய்ய இழை. இதனைக் கடந்தும் மக்கள் எத்தகைய இன்னல்களை சந்திக்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள் நமக்கு தெரிய வருவதில்லை. ஏனெனில் போரின் விளைவு சாவு மட்டுமல்ல; போரின் மிகப் பெரிய பாதிப்பு - உள்நாட்டு இடப்பெயர்வுகள். மக்களின் வாழ்விடங்கள் மீதான தொடர்ந்த விமான தாக்குதல்கள், எறிகணை வீச்சுகள், இவற்றின் காரணமாக கையில் பச்சிளம் குழந்தைகளுடன் வெயில், மழை பாராது உயிருக்கு அஞ்சி ஊர் விட்டு ஊர் ஓடும் கொடுமை அது…
-
- 0 replies
- 1.1k views
-
-
கொழும்பு: கிளிநொச்சியை ராணுவம் நெருங்கி விட்டதால் தனது பதுங்கு இடத்திலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் விரைவில் தப்பி விடுவார் என்று இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்கள நாளிதழான தினமினாவுக்கு அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், கிளிநொச்சியின் இதயப் பகுதியான விஸ்வமடுவை ராணுவம் நெருங்கி விட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்போது 3000 வீரர்களே உள்ளனர். அவர்களிலிரும் 2000 பேர் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டவர்கள். இப்படிப்பட்ட நெருக்கடியில், இலங்கையை விட்டே பிரபாகரன் தப்பி விடும் வாய்ப்புகள் உள்ளன. மற்றவர்களில் சிலர் சரணடையக் கூடும். படகு அல்லது குறைந்த உயரத்தில் பறக்கக் கூடிய விடுதலைப் புலிகளின் விமானத்தில் ஏறி பிர…
-
- 17 replies
- 4.8k views
-
-
வீரகேசரி இணையம் - மாரவில பகுதியில் நேற்று இரவு ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணியொருவர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் . மாரவில பகுதியில் விடுதியொன்றில் தங்கியிருந்த இவரை அதே விடுதியில் தங்கியிருந்த மூன்று இளைஞர்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளனர் . இவ்விளைஞர்கள் மூவரும் ஆயுதங்களுடன் ஜேர்மன் நாட்டுப் பெண்ணின் அறையினுள் நுழைந்து அவரை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதுடன் , மூன்று மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளையும் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புதல்வர் இலங்கையர் ஒருவரைத் திருமணம் செய்து, மாரவில பகுதியில் சுற்றுலா விடுதியொன்றை நடத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாரவில பொலிஸ…
-
- 9 replies
- 3.3k views
-
-
வீரகேசரி நாளேடு - இந்திய நிவாரணப் பொருட்கள் இலங்கையை வந்தடைந்து பத்து நாட்களாகியும் அவை வன்னி மக்களைச் சென்றடையவில்லை. இதனால், அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளிச்சமாகியுள்ளது. எனவே, வன்னி மக்களுக்கான நிவாரண விடயத்தில் இந்தியாவின் நேரடித் தலையீடு அவசியமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். அரசாங்கம் தமிழர்களை மட்டுமல்ல, இந்தியாவையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. தமிழகத்து மக்களின் உணர்வுகளை உக்கிரமடையச் செய்யும் நடவடிக்கையானது இலங்கை அரசாங்கத்துக்கு அவ்வளவு நல்லதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தியா தமிழக மக்களிடமிருந்து போரினால் பாதிக்கப்பட்ட வன்னித் தமிழ் மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டு…
-
- 0 replies
- 717 views
-
-
இலங்கை தமிழர் போராட்ட க்ரைம் நாவல் சிறு வயதில் எனக்கு மிகவும் பிடித்த சரித்திர நாவல்கள் என்றால் அது சாண்டில்யன் மற்றும் கல்கியின் நாவல்கள் தான். அதுவும் சாண்டில்யன் நாவல்களை நெய்வேலி நூலகத்தில் முன்பதிவு செய்து படித்தது தனிக்கதை. சரித்திர நாவல்களை "உண்மையான வரலாறாகவே" கண்டு கொள்ளும் போக்கு தமிழக வாசகர் வட்டத்தில் இருந்து வந்துள்ளது. இன்றைக்கும் உள்ளது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை உண்மையான சோழ சரித்திரமாக நினைத்துக் கொண்ட பலரை நான் அறிவேன். வரலாற்று நாவல்களை முழுமையான கற்பனையாக மட்டும் இல்லாமல் வரலாற்றை சரியாக பொருத்தி எழுதிய நாவல்களாக நான் வாசித்த எழுத்தாளர் பிரபஞ்சனின் மானுடம் வெல்லும், வானம் வசப்படும் போன்ற நாவல்களை குறிப்பிட முடியும். புதுவையில் இருந்த…
-
- 0 replies
- 1.9k views
-
-
போரினால் உயிர்நீத்த ஈழத் தமிழர்களின் நினைவாக கானா கலைஞர் கானா விஜய் “மரண கானா” என்னும் இசை நிகழ்வொன்றை நடத்தவுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 962 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 706 views
-
-
வீரகேசரி இணையம் - வெள்ளை வேன் கும்பல்களால் இளைஞர் யுவதிகள் கடத்தப்படும் மற்றும் காணாமல் போகும் அவலங்கள் நாட்டில் மிதமிஞ்சித் தாண்டவமாடத் தொடங்கிவிட்டன. குறிப்பாக கொழும்பு, மன்னார், திருகோணமலைஇ புத்தளம் யாழ்ப்பாணம் போன்ற நகரங்களிலேயே கடத்தல் நாடகம் நாளாந்தம் அரங்கேறி வருகின்றது. சிறிது காலம் மட்டுப்பட்டிருந்த கடத்தல் சம்பவங்கள் மீண்டும் தொடர ஆரம்பித்திருக்கின்றன. அதுவும்; கடந்த சில வாரங்களாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்தே காணப்படுவதை பத்திரிகைச் செய்திகள் வாயிலாக அறியக் கிடக்கின்றது... இவ்வாறு கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் ஆயுததாரிகளே என்றும் பரவலாகக் கூறப்படுகின்றது. இந்தக் கடத்தல்கள் யாரால், ஏன்இ எதற்காக நடத்தப்படுகின்றன என்பது புரியாத புதிராகவ…
-
- 4 replies
- 1k views
-
-
அடுத்த மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள முல்லைத்தீவு, கிளிநொச்சி,யாழ்ப்பாணம், மன்னார் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களின் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை ஆட்பதிவுத் திணைக்களம் சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்குத் திருப்பியனுப்பியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. கிராமசேவகர்களின் சான்று இணைக்கப்படவில்லையென்ற காரணத்தைக் காட்டியே விண்ணப்பங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர் சங்கம் தெரிவித்தது. பாடசாலை ஊடாகத் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் அதிபர் மூலம் விண்ணப்பித்தால் போதுமானது. ஆனால் அடுத்த மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் வட மாகாணத்தைச் சேர்ந்த மாணவர…
-
- 0 replies
- 578 views
-
-
குஞ்சுபரந்தன் நோக்கிய சிறிலங்கா படையினரின் மும்முனை முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் சிறிலங்கா படையினர் 40 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 80-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். படையினரின் எட்டு உடலங்கள் உள்ளிட்ட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.9k views
-
-
ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பில் சட்டமன்ற கட்சி தலைவர்களுடன் நாளை கூட்டம் நடத்தவுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 724 views
-
-
சிறிலங்காவின் தலைநகரான கொழும்பு நகரில் உள்ள பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை பகுதிகளில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற படையினரின் தேடுதல் நடவடிக்கையின் போது ஐந்து தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 423 views
-
-
துக்ளக் இதழில் இலங்கை பிரச்சினை தீர்ந்தது என்ற தலைப்பில் வெளியான ஒரு கட்டுரையைக் படித்ததில் சிரித்து சிரித்து வயிறு வலித்தது தான் மிச்சம். அதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன் இங்கே... ---------------------------------------------------------------------------------------------------------------------- இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற முடியாவிட்டால் இந்த அரசு தேவையா என்று பொதுக்கூட்டத்தில் கேள்வியெழுப்பி, மத்திய அரசுக்கு தந்தி அனுப்பும்படி மக்களைக் கேட்டுக்கொண்டு, போர் நிறுத்தத்துக்கு வழி செய்யாவிட்டால், தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அச்சுறுத்தி, மனிதச் சங்கிலி நடத்தி – எல்லாம் ஓய்ந்துவிட்டது. இப்போது, மத்திய அரசின் நட…
-
- 4 replies
- 3k views
-
-
தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் மாவீரர்களுக்கான எழுச்சி நாள் நிகழ்வுகள் நாளை தொடங்குகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 385 views
-
-
பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலொன்றை நடத்தாமல், பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை மேலும் 6 வருடங்களுக்கு நீடிப்பதற்கான கருத்துக்கணிப்பொன்றை நடத்துவது பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 1977ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கம், 1983ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை நடத்தாமல் கருத்துக் கணிப்பை நடத்தி 1989ஆம் ஆண்டுவரை பாராளுமன்றத்தின் ஆட்சிக்காலத்தை அதிகரித்திருந்தது. ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பாணியில் 2010ஆம் ஆண்டுக்கு முன்னர் கருத்துக் கணிப்பொன்றை நடத்தி 2004ஆம்ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தை மேலும் ஆறு வருடங்களுக்கு நீடிப்பது பற்றி…
-
- 0 replies
- 1.2k views
-
-
தொண்டமான் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைபின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவார் - நிமால் சிறிபால டி சில்வா எதிர்வரும் தேர்தல்களின் போது அமைச்சர் தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி வெற்றிலை சின்னத்திலேயே போட்டியிடும் என சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். பதுளையில் உள்ள ஊவா மாகாணசபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். இதனால் சேவல் சின்னமா மண்வெட்டி சின்னமா என்ற குழப்பத்தை மக்கள் ஏற்படுத்தி கொள்ள அவசியம் இல்லையெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பிரதியமைச்சர்களான வடிவேல் சுரேஷ் மற்றும் சச்சிதானந்தன் ஆகியோரும் எதிர்வருங்காலத்தில் வெற்றிலை சின்னத்திலே போட்டியிடுவர்கள் என அமை…
-
- 0 replies
- 679 views
-
-
இந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலத்தில் சிங்களப் பேரினவாத அரசின் கொடூரத் தாக்குதலுக்குள்ளாகியிருக்கும் ஈழத் தமிழர் மீதான போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் மாநாடு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 481 views
-
-
இன்று சென்னையில் அவசரமாகக் கூட்டப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக முதல்வர் கருணாநிதி, நாளை காலை கோட்டையில் உள்ள தமது அறையில் சட்டமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஒரு அவசர சந்திப்புக்கு அழைப்ப விடுத்தாகத் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாசுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த அழைப்பினை விடுப்பதாகவும், விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்கு முன் வந்போதும், இலங்கை அரசு அதை நிராகரித்துள்ளமையால், இது விடயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்வது என்பது பற்றிக் கலந்தாலோசிக்கவே நாளை சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான இந்தக் கூட்டத்தை கூட்டுகிறேன் எனவும், தெரிவித்தார் . குறிப்பாக இலங்கையில் தமிழர்களைப் பாதுகாக்கவும், அவ…
-
- 6 replies
- 1.9k views
-
-
கிளிநொச்சி நோக்கிய முன்நகர்வு சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரிய பதிலடித் தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பில் 27 பேர் கொல்லப்பட்டதாகவும் 70 பேர் படுகாயமடைந்ததாகவும் அவர்களில் சிலர் மீண்டும் படையணிகளில் இணைய முடியாத நிலையில் உள்ளதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 408 views
-
-
ஈழத் தமிழர்களுக்காக உலகத் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள் [திங்கட்கிழமை, 24 நவம்பர் 2008, 11:28 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] ஈழத் தமிழர்களுக்கு உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக ஆயர்கள் பேரவையின் ஊடகக் குழுவான, சாந்தோம் கலைத் தொடர்பு நிறுவனம், முதலமைச்சர் கருணாநிதிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி கௌரவித்தது. இந்த விருதினையும், பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரத்தையும் பெற்றுக்கொண்ட கருணாநிதி ஆற்றிய ஏற்புரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இன்றைய நாள் "வாழ்நாள் சாதனையாளர்''…
-
- 0 replies
- 813 views
-