ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
வீரகேசரி நாளேடு - மன்னாரிலும் கொழும்பிலும் விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல் நடத்தியதன் பின்னணியில் இந்திய ராடர் கருவிகள் மீதும் அதனை இயக்கும் இந்திய படையினர் மீதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் ஜே.வி.பி.யினர், புலிகளின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுவிட்டதாக அரசாங்கம் வெளியிட்ட செய்தி, உண்மைக்குப் புறம்பானது என்பது இத்தாக்குதல் மூலம் நிரூபணமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் எம்.பி.யுமான விஜித ஹேரத் மேலும் தகவல் தருகையில், புலிகளின் விமானங்கள் மன்னாரிலும் கொழும்பிலும் தாக்குதல்களை நடத்தி திரும்பிச் சென்றுள்ளன. ஏழாவது தடவையாக இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புலிகளைப் பலவீனப்படுத்திவிட்டதாகவும் அவர்களது விமா…
-
- 5 replies
- 1.8k views
-
-
யுத்தத்தை நிறுத்த வேண்டாம் என உத்தரவிட பௌத்த பிக்குகளுக்கு அதிகாரம் உண்டு – ஒமல்பே சோபித தேரர்: www.globaltamilnews.com யுத்தத்தை நிறுத்த வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் பௌத்த பிக்குகளுக்கு இருப்பதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். வடக்கில் முன்னெடுக்கப்படும் யுத்தத்தை நிறுத்தக் கூடாதென ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டணிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய வேண்டுகோள் விடுத்துள்ளது. கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற சங்க சம்மேளனக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் அமெரிக்க தூதுவர் போன்றோருக்கு எதிராக ராஜதந்திர ரீ…
-
- 1 reply
- 841 views
-
-
வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய தமிழ்நாடு சமூக சமத்துவம் பேணும் மருத்துவர்கள் சங்கம் இந்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது. அத்துடன், தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து தமது விருப்பத்தை தெரிவித்திருக்கும் இந்த சங்கத்தினர், சுகாதார அமைச்சர் அன்புமணி இராமதாஸ் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்ட இந்த அமைப்பினர், மழையின் மத்தியிலும் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய பொதுவுடமைக் கட்சியின் அங்கமான குறிப்பிட்ட மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 400 மருத்துவர்கள் ஏற்கனவே மருந்துப் பொருள்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். http://www.tamilskynews.com/index…
-
- 1 reply
- 894 views
-
-
காலியில் இருந்து அழுத்கம நோக்கிச் சென்ற தொடரூந்து கடற்படை ஊர்தியுடன் மோதியதில் கடற்படையினர் நால்வர் காயமடைந்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:30 அளவில் பிந்தலி (Pinthali) சந்தியிலுள்ள தொடரூந்துக் கடவையில் இந்த விபத்து இடம்பெற்றிருப்பதாக, காவல்துறைப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். தொடருந்து செலுத்துனரும், அதில் பயணித்த ஆசிரியர் ஒருவரும் காயமடைந்திருப்பதாகவும் அவர் மேலும் கூறியதாக கொழும்புச் செய்தியாளர் தெரிவித்தார். படங்கள் இணைப்பு.. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 0 replies
- 891 views
-
-
வன்னி மக்களின் துன்பங்கள் தீர வேண்டி, யாழ் குடாநாட்டில் இன்று வெள்ளிக்கிழமை உணவு தவிர்ப்பு பிரார்த்தனை ஒன்றை மக்கள் முன்னடுத்துள்ளனர். கொய்யாத்தோட்டத்தில் அமைந்துள்ள தேவாலயத்தில் கடந்த ஒரு மாத காலமாக வன்னி மக்களுக்கு ஆசி வேண்டி நடத்தப்பட்டு வந்த பிரார்த்தனையின் முடிவில், இன்று இந்த உணவுத் தவிர்ப்பு போராட்டம் நடத்தப்படுகின்றது. இதேபோன்று யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலுள்ள தேவாலயங்களிலும் இன்று மக்கள் உணவு தவிர்ப்பை மேற்கொண்டனர். காலை 8:00 மணிக்கு ஆரம்பமான இந்த பிரார்த்தனை மாலை 4:00 மணிவரை இந்தப் போராட்டம் நடைபெற்றது. http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 0 replies
- 676 views
-
-
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மின்நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படவுள்ளது : www.globaltamilnews.com மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் நீர் விநியோக மையங்களின் பாதுகாப்பு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பலப்படுத்தப்படவுள்ளது. இதன்படி, அதிகளவான காவற்துறை மற்றும் முப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைய பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படவுள்ளதாகத
-
- 0 replies
- 670 views
-
-
தொலைக்காட்சிகள் ராஜபக்ஷ குடும்பத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் நாடு சர்வாதிகாரத்தை நோக்கி –றணில்ஹக்கீமின் உரை இணைக்கப்பட்டுள்ளது) Click for Audio... http://www.globaltamilnews.com/tamil_news....=1710&cat=1 தொலைக்காட்சிகளை ராஜபக்ஷ குடும்பத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, நாட்டை சர்வாதிகார நிலைக்கு கொண்டு செல்ல அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சுமத்தியுள்ளன. ஊடகத்துறை அமைச்சர், இலங்கைத் தொலைக்காட்சி சட்டமூலத்திற்கான புதிய கட்டளைகளை அறிவித்து, வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்,ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள புதிய அச்சுறுத்தல் என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன. கொழும்பு கேம்பிரிஜ் பிளேசில் உள்ள எதிர்க்கட்சித் …
-
- 0 replies
- 593 views
-
-
மதுரை நடுவண் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகிய இருவரும் இன்று பிணையில் விடுதலையாகி வெளியே வந்தனர். அவர்களை இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், சேரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து கடந்த 19-ந் தேதி இராமேசுவரத்தில் தமிழ் திரையுலகம் சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்திய இறையாண் மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையிலும், தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்தும் பேசியதாக இயக்குனர்கள் சீமான், அமீரை இராமநாதபுரம் Q பிரிவு காவலர்கள் கைது செய்தனர். இவர்கள் இருவரும் இராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு மதுரை நடுவண் சிறைச்சாலையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் தற்போது எழுந்த ஆதரவு அலை, அதனால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த நன்மைகளையும் எற்படுத்தாமலேயே - கலைஞர் தனது கட்சியினரின் பதவி விலகல் முடிவை விலக்கிக் கொண்டதால் - வீணாகப் போய் விட்டது என்றும், கலைஞர் மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் நாடகம் வெளிச்சத்திற்கு வந்து விட்டதாகவும், ஒரு பதிவில் வெளியான கட்டுரையை எனது பதிவுகளைத் தொடர்ந்து படித்து வரும் ஒரு நண்பர் அனுப்பி இருந்தார். அந்தக் கட்டுரைக்கு பதில் அளிக்க வேண்டும் என விரும்புகிறேன், நான் பதிவுலகிற்குப் புதியவன் என்பதால் பதிவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. ஒருவருடைய பதிவிர்ற்கு நாகரீகமான முறையில் பதில் கூறுவது தவறில்லை என்றே நினைக்கிறேன், அதற்கு முன்னர் இலங்கைத் தமிழர் வி…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறீலங்கா அரசிடம் நிவாரண உணவுப் பொருள்கள், மற்றும் மருந்துப் பொருள்களை வழங்கவுள்ள தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை, இந்திய பொதுவுடமைக் கட்சியின் அதிகாரபூர்வ ஏடான "ஜனசக்தி" கண்டித்துள்ளது. தமிழ் நாளிதழான "ஜனசக்தி" ஏட்டில் வரையப்பட்டுள்ள கட்டுரை: "இக்கட்டான நேரத்தில் உதவிக்கரம நீட்டுவது நமது இன்றியமையாக கடமையாகும்" "ஈழத்தில் வேதனையால் விழி நீர்பெருக்கி வாடிக்கொண்டிருக்கும் சகோர சகோதரிகளுக்கு தமிழக மக்கள் இயன்றதை வழங்கி உதவிடுவிர்" "இலங்கைத் தமிழர் நிவாரணை நிதி முதல்வர் கலைஞர் பத்து இலட்சம் ரூபாய் வழங்கினார்" 29.10.08 முரசொலியின் முதல் பக்கத்தில் வெளிவந்துள்ள வரிச் செய்திகள். இது முதல்வரின் ஏடு. வேண்டுகோளும் முதல்வரால் வெளியிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 671 views
-
-
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவருடைய வழக்கறிஞர்கள் முறையிட்டுள்ளனர். . ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் நவநீத கிருஷ்ணன், சண்முகம் ஆகியோர் இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரனிடம் இது குறித்து முறையிட்டுள்ளனர். மலேசியாவிலிருந்து இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது. விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஏதேனும் கருத்து தெரிவித்தால், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெனாசிர் புட்டோவுக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கு ஏற்படும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் மைந்தன் என்பவர் பெயரில் இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில் ‘உலக தமிழின பாதுகாப்பு கழகம்’, பாங்காக், தாய்லாந்து எ…
-
- 17 replies
- 2.7k views
-
-
யாழ் முகமாலை மற்றும் எழுதுமட்டுவாழ் பகுதிகளில் நேற்றும் இன்றும் இடம்பெற்ற மோதல்களில் சிறீலங்கா படையினர் ஐவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். வன்னி நோக்கிய முன்னேற்ற முயற்சிக்கான தயார்படுத்தலில் ஈடுபட்டிருந்த சிறீலங்கா படையினரை இலக்கு வைத்து எழுதுமட்டுவாழ் நோக்கி விடுதலைப்புலிகள் எறிகணைத் தாக்குதல் மேற்கொண்தாகக் கூறப்பட்டுள்ளது. இதன்போது மூன்று படையினர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும். இதனைத்தொடர்ந்து விடுதலைப்புலிகள் முகமாலையில் ஊடுருவி மேற்கொண்ட தாக்குதல், மற்றும் பொறிவெடித் தாக்குதலில் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, முகம…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழர் விரோத செய்திகளை வெளியிட்டு வருவதாகக் கண்டித்து, தமிழ் சினிமா இயக்குனர் சங்கத் தலைவர் பாரதிராஜா தலைமையில் தினமலர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழர் நலனுக்கு எதிராக செய்தி வெளியிடுவதை தினமலர் ஏடு உடனடியாக நிறுத்த வேண்டும் என இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அத்துடன், தினமலர் தனது தவறை திருத்திக் கொள்ளத் தவறினால், ஒட்டுமொத்த தமிழர்களும் தினமலரை புறக்கணிக்க நேரிடும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் எச்சரித்துள்ளனர். படங்கள் இணைப்பு http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 5 replies
- 2.1k views
-
-
தமிழக மக்களுக்கும் தமிழக முதல்வருக்கும் முல்லைத்தீவில் நன்றி தெரிவிப்பு [வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2008, 07:55 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவில் பொது அமைப்புக்கள் இணைந்து தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு முல்லைத்தீவில் பேரணியை நடத்தியுள்ளனர். தமிழீழத் தமிழர்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் அந்த மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்திய தமிழக மக்களுக்கும் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதிக்கும் இதில் நன்றி தெரிவிக்கப்பட்டது. முல்லைத்தீவு இராயப்பர் கோவில் முன்றலில் இருந்து தொடங்கிய இப்பேரணி முல்லைத்தீவு மின்சார நிலையச் சந்தியினை சென்றடைந்தது. இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு…
-
- 1 reply
- 725 views
-
-
கிளிநொச்சியில் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல் [வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2008, 07:36 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி ஜெயந்தி நகர் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை இன்று குண்டுத்தாக்குதலை நடத்தி மக்களின் வீடுகளுக்கு அழிவை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:15 நிமிடத்துக்கு ஜெயந்தி நகர் மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுகளை வீசின. இதில் அப்பகுதியில் இருந்த ஆறு வீடுகள் அழிந்துள்ளன. ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளன. இத்தாக்குதலின் போது மக்கள் அவலப்பட்டு சிதறி ஓடியுள்ளனர். கிளிநொச்சி நகரப்பகுதியிலும் மக்கள் சிதறி ஓடினர். இதேவேளை, கிளிநொச்…
-
- 0 replies
- 437 views
-
-
வீரகேசரி நாளேடு 10/31/2008 8:43:47 AM - இலங்கை தமிழர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு நடத்தப்படுகிறது. இலங்கையில் தமிழர்கள் படுகொலை மற்றும் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை கண்டித்து, கடந்த 17ஆம் திகதி கடையடைப்புப் போராட்டம் நடத்த வணிகர் சங்கங்களின் பேரவை முடிவெடுத்திருந்தது. இந்நிலையில், முதல்வர் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், மத்திய அரசுக்கு 2 வார கெடு விதிக்கப்பட்டது. இதையடுத்து, கடையடைப்பு போராட்டத்தை வணிகர் சங்கங்களின் பேரவை பின்போட்டது. தொடர்ந்து 31ஆம் திகதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கப் பேரவை அறிவித்தது. தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு, டீக்கடை உ…
-
- 4 replies
- 1.5k views
-
-
கடந்த செவ்வாய்கிழமை இரவு தள்ளாடி படைத்தளம் மீது வான்புலிகள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் சிறிலங்கா வான்படையின் எம்.ஐ.24 தாக்குதல் உலங்குவானூர்தி ஒன்றும் பெல் ரக உலங்குவானூர்தி ஒன்றும் சேதமடைந்துள்ளதாக நம்பரமான படைய வட்டாரம் ஒன்றை மேற்கோள் காட்டி தமிழ்நெட் செய்தி வெளியிட்டுள்ளது இதோ தமிழ்நெட்டின் செய்தி: MI-24, Bell damaged in Tiger air strike on Mannaar garrison [TamilNet, Friday, 31 October 2008, 13:09 GMT] An MI-24 attack helicopter gunship deployed in the Sri Lankan offensive on Vanni by the Sri Lanka Air Force (SLAF) and a Bell helicopter used to transport the wounded soldiers from the battlefield, sustained damage Tuesday night when Liberation Tig…
-
- 1 reply
- 1.8k views
-
-
ஈழத்தமிழரின் எதிர்ப்பார்ப்பு தமிழ்நாட்டு கட்சிகளிடையே ஒற்றுமை: ஆனந்த விகடன் [வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2008, 06:49 பி.ப ஈழம்] [க.நித்தியா] எங்களுக்கு முக்கியத் தேவை உங்கள் ஒற்றுமைதான்! அதனை விடுத்து கவனம் திரும்பி, உங்களுக்குள் நடக்கும் யுத்தத்தை நோக்கி எல்லோர் கவனத்தையும் திசை திருப்பி விடாதீர்கள்' என்று கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சுகிறான் அந்த ஈழத் தமிழன் என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டில் வெளிவந்துள்ள ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா அரசுக்கு ஆயுதமும் இராணுவ நுட்பமும் கொடுக்காதீர்கள்' என்ற குரலுக்கு, இந்திய அரசு நிம்மதியான ஒரு பதிலும் தராமல் போனதில் ஈழத் தமிழனுக்கு ம…
-
- 0 replies
- 664 views
-
-
விடுதலைப் புலிகளின் முக்கிய இடமான நாச்சிக்குடாவைக் கைப்பற்றியிருப்பதாகவும் அந்த பிரதேசம் சிறீலங்கா இராணுவத்தினரினரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இராணுவத்தின் 58வது படைப்பிரிவு கிளிநொச்சி நாச்சிக்குடாவைக் கைப்பற்றியிருப்பதாக ஊடக மத்திய நிலையம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது சிறீலங்கா இராணுவத் தரப்பின் செய்தி மட்டுமே! http://www.tamilseythi.com/srilanka/naachi...2008-10-31.html
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கைத் தமிழர் துயர் துடைக்கத் திரட்டப்படும் நிவாரண நிதிக்கு தன் பங்காக ரூ. 5 லட்சத்தை நடிகை நயனதாரா வழங்கியுள்ளார். இந்தத் தொகையை வழங்க முதல்வரின் கோபாலபுரம் வீட்டுக்கு இன்று காலை நயனதாரா சென்றார். முதல்வரிடம் நிதியை வழங்கிய நயனதாரா, இலங்கைத் தமிழர் துயர் துடைக்க திரையுலகம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளிலும் தான் பங்கேற்பதாக முதல்வரிடம் தெரிவித்துள்ளார். மேலும் நாளை நடக்கும் உண்ணாவிரதத்தில் தான் பங்கேற்கவிருப்பதையும் முதல்வரிடம் கூறி ஆசி பெற்றார். இதற்கிடையே இலங்கைத் தமிழர் துயர் துடைப்பு நிதிக்கு தமிழ் திரையுலக புள்ளிகள் பலரும் இன்று திரண்டு வந்து நிதி வழங்கினர். நெப்போலியன் 5 லட்சமும், குஷ்பு, சுந்தர் மற்றும் விவேக் தலா ரூ. 1 லட்சமும் இன்று…
-
- 19 replies
- 2.8k views
-
-
கடந்த பல ஆண்டுகளாக நடைபெறும் இலங்கை யுத்தத்தின் காரணமாக, இலங்கை வாழ் ஈழ மக்கள் மிக பெருவாரியாக ஈழத்திலிருந்து வெளியேறி, உலக நாடுகள் முழுக்க பரவினார்கள். அப்படி புலம் பெயர்ந்து மிகுந்த சிரமப்பட்டு ஒரு மரியாதைக்குரிய வாழக்கை நிலையை அமைத்துக் கொண்ட ஈழத்தமிழர்கள், தமிழகத்திலிருந்து இரண்டு மிக மோசமான விஷயங்களை உலகம் முழுக்க கொண்டு சேர்த்தார்கள். விரிவு » http://www.tamilseythi.com/kaddurai/eelam-...2008-10-31.html
-
- 1 reply
- 1.5k views
-
-
DONATION FOR SRILANKAN PEOPLE இனிய தமிழ் நெஞ்சங்களுக்கு,வணக்கம், இலங்கையில் வாழும் நமது தமிழ்ச் சொந்தங்கள் படும்துயரம் நாமறிவோம். அவர்களுக்கு உதவும் வகையில் நிதி வழங்கக் கோரி தமிழக முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். குமுதம் இணைய தள நேயர்களாகிய நீங்களும் நிதி வழங்கி உதவலாமே... நீங்கள் அனுப்பும் நிதி, உரிய பட்டியலோடு தமிழக முதல்வரிடம் சேர்ப்பிக்கப்படும். அதற்கான ரசீது மற்றும் வரிச்சலுகைப் படிவம் உங்களுக்கு வந்து சேரும். நன்கொடை வழங்கியோரின் பெயர்களும் குமுதம் இணைய தளத்தில் வெளியிடப்படும். தாமதிக்காமல், இந்த நிமிடமே உங்கள் உதவித் தொகையை அனுப்பி வையுங்கள். நிதியுதவி செய்திட விரும்புவோர் "sri lankan tamils relief fund" எனும் தலைப்பில் காசோலைகளையும் (cheques), வரைவுக…
-
- 5 replies
- 1.6k views
-
-
சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் மருத்துவ பணியாளர் காயம் [வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2008, 10:56 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் மருத்துவ பணியாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். வடமராட்சி கிழக்கு ஆழியவளைப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தினர். இதில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார பணிமனையின் மருந்து தெளிக்கும் பணியாளரான லிங்கேஸ்வரன் என்பவர் மலேரியா தடுப்பு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது காயமடைந்தார். கண்டாவளை ஆழியவளைப் பகுதிகளில் மலேரியா தடுப்பு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இக்கு…
-
- 0 replies
- 505 views
-
-
இந்திய மருத்துவர்கள் வன்னி செல்வது பற்றி புதுடில்லியில் எதுவுமே பேசப்படவில்லையாம்! - பஸில் ராஜபக்ஷ திடீர் ‘பல்டி’ [31 ஒக்டோபர் 2008, வெள்ளிக்கிழமை 9:55 மு.ப இலங்கை] வன்னியில் உள்ள மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக, இந்திய மருத்துவர்களுக்கு அனுமதியளிப்பது குறித்து தனது சமீபத்தைய புதுடில்லி விஜயத்தின் போது ஆராயப்படவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இணையத்தளமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இதனைக் கூறினார். வன்னி மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக இந்தியா மருத்துவர்களை அனுப்புகின்றதா என்று கேட்கப்பட்டபோது, "அதற்கு அவசியமில்லை என்று கருதுகிறேன். சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் போதியளவு மருத்துவர்கள் இலங்கையில் உ…
-
- 0 replies
- 1.1k views
-
-
சர்வதேச அவதானிப்புக் குழு இலங்கைக்குத் தந்த சான்றிதழ் [31 ஒக்டோபர் 2008, வெள்ளிக்கிழமை 10:05 மு.ப இலங்கை]/td> இலங்கையில் ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறை, படுகொலைகள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், தொந்தரவுகள் போன்றவை மேலும் மோசமாகத் தொடர்கின்றன என சர்வதேச ஊடக சுதந்திரத்துக்கான தூதுக்குழு தெரிவித்திருக்கின்றது. ஊடகவியலாளர்களின் சர்வதேச சம்மேளனம், சர்வதேச ஊடக ஆதரவு அமைப்பு, சர்வதேச செய்திப் பாதுகாப்பு நிறுவனம், சர்வதேச ஊடக நிறுவனம், எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பு ஆகிய ஐந்து பன்னாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகளே இவ்வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து இங்கு ஐந்து நாட்கள் தங்கி நிலைமைகளை அவதானித்த பின்னர், தமது விஜயத்தை ஒட்டி வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு இல…
-
- 0 replies
- 1.3k views
-