ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
மட்டக்களப்பு மற்றும் வவுனியா வைத்தியசாலைகள் இஸ்தம்பிக்கும் நிலை – தனது வைத்தியசாலை நிலை குறித்து வைத்திய கலாநிதி முருகானந்தம் பேசுகிறார்: ஒலிச் செய்திகள் http://www.globaltamilnews.net/tamil_news....=2357&cat=1 வவுனியா பொது மருத்துவ மனையில் கடமையாற்றி வந்த தென்பகுதியைச் சேர்ந்த வைத்தியர்கள் பாதுகாப்புக் காரணம் காட்டி வவுனியா பொது மருத்துவ மனையை விட்டு நேற்று மாலையுடன் வெளியேறியுள்ளனர். மட்டக்களப்பு பகுதியில் வைத்து சிங்கள மொழி பேசும் வைத்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமையால் தங்களின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்தே வவுனியாவில் பணியாற்றி வந்த வைத்தியர்கள் வெளியேறியுள்ளனர் வவுனியா பொது மருத்துவ மனையில் 17 சிங்கள மொழி பேசும் வைத்தியர்…
-
- 0 replies
- 689 views
-
-
நான் சொல்ல வருவதை சுருக்கமாகவே சொல்லி விடுகிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக படைத்துறைரீதியில் செய்யப்பட்ட எதிர்வுகூறல்கள், ஆய்வுகள் சரியான முறையில் நடக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறிலங்காப் படையினர் வன்னி மீதான படை நடவடிக்கையை ஆரம்பித்த பொழுது, அவர்கள் பூநகரி வரை வருவார்கள் என்று எம்மில் எத்தனை பேர் எதிர்பார்த்தோம்? கிழக்கை சிறிலங்காப் படையினர் கைப்பற்றுவார்கள் என்பதை ஒரு சிலர் எதிர்பார்த்திருந்தோம். (அதைக் கூட ஏற்றுக் கொள்ள மறுத்தவர்களும் இருந்தார்கள்). ஆனால் வன்னியின் நிலைமை இப்படி வரும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. இத்தனைக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பாலகுமாரன் அவர்கள் ஒரு உரையின் போது இப்படிக் குறிப்…
-
- 63 replies
- 8.7k views
-
-
வரலாற்றுக் காலம் தொட்டு இந்தியா சந்தித்த படையெடுப்புக்களெல்லாம் இமயம் கடந்து வந்தவைதான். அதன் பின்னர் பாகிஸ்தான் படையெடுப்புக்களைச் சந்தித்தோம். இந்திய - சீன எல்லைப் பிரச்னை கூட இமயத்தின் மடியில் நடந்த விபரீத விளையாட்டுத்தான். எனவே, ஆபத்து என்பது இந்தியாவிற்கு வடதிசையிலிருந்துதான் வரும் என்ற நம்பிக்கை இருந்தது. இனி அந்த ஆபத்து தென் திசையிலிருந்தும் கடல் கடந்தும் வரும் என்ற அச்சம் ஏற்பட்டது. ராணுவ தளங்களை அமெரிக்கா தனது எல்லைக் காவல் சாவடிகளாகக் கருதுகிறது. ஆகவே உலகம் முழுமையும், குறிப்பாக ரஷ்யா, சீனம் ஆகிய நாடுகளைச் சுற்றி அத்தகைய தளங்களை அமைத்த அந்த நாடு, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நமது தலைக்கு மேலே பாகிஸ்தானில் ராணுவ தளம் அமைத்தது. நமது காலடியில் இ…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இன்று புதன்கிழமை காலை ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 8 மணித்தியாலங்கள் விசாரிக்கப்பட்டார். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கஜேந்திரனுடன் தொலை பேசியில்; தொடர்பு கொண்ட ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கடந்த யூன் மாதம் யேர்மனியில் நடை பெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் பங்கு பற்றியமை தொடர்பான விசாரணைகளுக்கு வரவேண்டும் என கூறியமைக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் குற்றப் புலனாய்வு பிரிவு தலைமையகத்திற்கு இன்று சமூகமளித்திருந்தார். இன்று 19-11-2008 கொழும்பு குற்றப் பலனாய்வு பிரிவு தலைமையகத்திற்ன் நான்காம் மாடியில் வைத்து காலை 10:30 மணி தொடக்கம்…
-
- 1 reply
- 944 views
-
-
-
ஈழத்தமிழ்மக்கள் மீதான சிறிலங்கா அரசின் இனவன்முறையைக் கண்டித்து பிரித்தானியப் பாராளுமன்றத்தின் முன்னால் எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆயிரக் கணக்கில் கூடியிருக்கும் ஈழத்தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமை வலியுறுத்தியவாறும், சிறிலங்காவின் இனப்படு கொலை நடவடிக்கைகளைக் கெதிராக வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்து கொண்டுமிருக்கின்றனர். அங்கிருந்து எமது சிறப்புச் செய்தியாளர்கள் தரும் ஒலிவழிச் செய்தியினூடு, அக்க கவனயீர்பில் கலந்து கொண்டுள்ள தமிழ்மக்களின் உணர்வோடு உங்களையும் இணைத்துக் கொள்கின்றோம். http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=266
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழகத்தில் சேகரிக்கப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட நிவாரண பொருட்கள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக நாளை மறுநாள் சனிக்கிழமை வன்னிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 554 views
-
-
வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்வதற்கு சிறிலங்கா படைத்தரப்பின் உயரதிகாரிகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கொழும்பு தகவல் தெரிவிக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 676 views
-
-
இரட்டை பெரியகுளம் மற்றும் மதவாச்சி சோதனை சாவடி ஊடாக செல்ல அனுமதி வழங்குவதில்லை என பாதுகாப்பு தரப்பு தீர்மானித்துள்ளது. தென்பகுதிகளில் இடம்பெறக்கூடிய நாசகார வேலைகளை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். வவுனியா உள்ளிட்ட வடபகுதியில் இருந்து கொழும்பு போன்ற வெளியிடங்களுக்கு செல்வோர் சோதனையிடப்பட்டு, அவர்களது விபரங்களை காவற்துறையினரால் பதியப்படுகின்றன. இந்த நிலையில் பாதுகாப்பு தரப்பு மேற்கண்ட தீர்மானத்தை எடுத்துள்ளது. இதேவேளை வவுனியா இரட்டை பெரியகுளம் மற்றும் மதவாச்சி சோதனை சாவடியில் வெளியிடங்களுக்கு செல்வோரின் நீண்ட வரிசை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
-
- 0 replies
- 626 views
-
-
மாங்குளம் பகுதியை கடந்த திங்கட்கிழமை இராணுவம் கைப்பற்றி விட்டதாக அரசு அறிவித்தது. அங்கு தான் இப்போது கடும் சண்டை நடந்து வருகிறது. இதில் இருந்து மாங்குளம் இன்னும் விடுதலைப் புலிகளிடம் தான் இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. இராணுவ தரப்பில் நேற்று அதிகாலை தான் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு ஜெயவர்த்தனா மருத்துவமனைக்குக் நேற்று காலை காயமடைந்த ஏராளமான வீரர்கள் கொண்டு வரப்பட்டனர். இராணுவ விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வடக்கு பகுதிக்கு பறப்பதும் இராணுவ வீரர்கள் உடல்களை ஏற்றிக் கொண்டு கொழும்பு திரும்புவதுமாக இருந்தன. இராணுவ தாக்குதல் தொடர்பான செய்திகளை இலங்கை பத்திரிகைகள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு நடக்கும் உண்மையான தகவல்கள் வெளியே சரியாக தெர…
-
- 4 replies
- 2.3k views
-
-
கொழும்பு: கிளிநொச்சியைப் பிடிக்க முயலும் ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கடும் தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கிளிநொச்சியைப் பிடிக்க ராணுவம் கடுமையாக முயன்று வருகிறது. விமானப்படையின் துணையுடன் கடந்த பல நாட்களாக ராணுவம் போராடி வருகிறது. முதலில் கிளிநொச்சி நகருக்கு அருகில் வந்து விட்டோம் என்று கூறினர். ஆனால் இதுவரை அப்படி நடந்ததாக தெரியவில்லை. விடுதலைப் புலிகள் அதிரடியான போர்த் திட்டங்களை வகுத்து இலங்கை ராணுவத்தினரை தற்போது நிலை குலைய வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3 முனைகளில் ராணுவம் தாக்குதலை தொடுத்து வருகிறது. கிளிநொச்சிக்கு வடக்கில் இருந்து ஒரு படையும், தெற்கில் இருந்து ஒரு படையும் மேற்கு பகுதியில்…
-
- 6 replies
- 2.9k views
-
-
தாயகத்தில் உள்ள மக்களின் அவலங்களை யேர்மனிய அரசுக்கும் யேர்மனிய மக்களுக்கும் எடுத்துரைக்கும் கவனயீர்ப்பு போராட்டங்கள் யேர்மனிய நகரங்கள் தோறும் அங்கு வாழும் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 619 views
-
-
இலங்கையில் போரை நிறுத்துமாறு கோரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பாக இன்று புதன்கிழமை உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 634 views
-
-
மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட சிங்கள மருத்துவரின் கொலையுடன் துணைப்படைக் குழுவின் தலைவர் கருணா குழு சம்பந்தப்பட்டுள்ளதாக, மற்றொரு துணைப்படைக் குழுவின் தலைவரான பிள்ளையான் குற்றம் சாட்டியுள்ளார். இவ்வாறான கொலைகள் மூலம் கிழக்கின் பாதுகாப்பை சீர்குலைத்து, இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்க கருணா நினைப்பதாகவும் பிள்ளையான் குற்றம் சாட்டினார். இவ்வாறான செயல்கள் மூலம் மாகாண சபை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து தன்னுடைய பதவியை பறிக்கவே கருணா இவ்வாறான ஏற்பாடுகளைச் செய்வதாக பிள்ளையான் தெரிவித்துள்ளார். அத்துடன், வரதராஜப்பெருமாளின் ஆட்சி காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணசபையை சீர்குலைத்ததைப் போன்று, கிழக்கு மாகாணசபையை சீர்குலைக்க சில சக்திகள் முனைவதாக அவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழக்கிழவனுடன் கொஞ்ச நேரம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 7 replies
- 2.4k views
- 1 follower
-
-
நன்றி தினக்குரல்
-
- 0 replies
- 1.4k views
-
-
வெற்றி வானொலியின் பொது முகாமையாளர் ஏ.எர்.வாமலோஷனன் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியுடன் தொடர்புவைத்திருந்தவர் என ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். “தற்கொலை அங்கி வைத்திருந்த தற்கொலைக் குண்டுதாரி ஒருவருடன் லோஷன் தொடர்பு வைத்திருந்துள்ளார். குறிப்பிட்ட தற்கொலைக் குண்டுதாரி சைனட் அருந்தித் தற்கொலை செய்துவிட்டார். அவர் குறித்து விசாரணை செய்யும் போதே லோஷனுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது” என இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன்யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டிருப்பதாகக் கூறி கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு லோஷன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்ப…
-
- 7 replies
- 1.9k views
-
-
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மிக நெருங்கிய எல்லைப்புற பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் காணப்படுவதாகவும், இந்தத் தடைகளை மீறி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும் பிரபல இந்திய பாதுகாப்பு ஆய்வாளர் பீ.ராமன் தெரிவித்துள்ளார். இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவு மற்றும் கடற்படையினர் மிகவும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், தமிழகத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் காணப்படும் நெருங்கிய பிணைப்பு ஆயுத கடத்தல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த பெரும் இடையூறாக அமைந்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பலஸ்தீன பயங்கர…
-
- 12 replies
- 3.2k views
-
-
ஓமந்தையிலிருந்து படையினர் புளியங்குளத்திற்கு முன்நகர்வு [19 - November - 2008] [Font Size - A - A - A] * வன்னிக்கான தரை வழிப் பாதை திறக்கப்படவில்லை வவுனியா, ஓமந்தை இராணுவ சோதனை நிலையத்திற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் (ஐ.சி.ஆர்.சி.) நேற்று செவ்வாய்க் கிழமை காலை செல்லாததால் வன்னிக்கான தரைவழிப்பாதை ("ஏ9' வீதி) மூடப்பட்டிருந்தது. ஓமந்தையில் நிலை கொண்டிருந்த படையினர் "ஏ9' வீதியூடாக புளியங்குளம் சென்றுள்ளதாகக் கூறப்படுவதையடுத்தே ஐ.சி.ஆர்.சி.யினர் நேற்று சோதனை நிலையப் பணிக்குச் செல்லவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது. புளியங்குளத்திலிருந்து விடுதலைப் புலிகள் வெளியேறி விட்டதால் எதுவித மோதலுமின்றி ஓமந்தையிலிருந்து படையினர் புளியங்குளம் சந்திக்கு சென…
-
- 10 replies
- 2.8k views
-
-
-
இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வே பொருத்தமானது என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் கலந்துகொண்டவர்களில் பொரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர். “இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வே சரியானது” என வர்த்தக சஞ்சிகையான எல்.எம்.டி. மற்றும் ரி.என்.எஸ்.நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில் கலந்துகொண்டவர்களின் 80 வீதமானவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். “பயங்கரவாதம் நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டும், அதுவும் இராணுவ ரீதியாகவே ஒழிக்கப்பட வேண்டும்” என பெரும்பாலானவர்கள் கருத்துத் தெரிவித்திருப்பதாக எல்.எம்.டி. சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமாதானப் பேச்சுவார்த்தைகள் தேவையற்றவையெனக் கூறியிருக்கும் பெரும்பாலானவர்கள், பேச்சுவார்த்தை மேசைகளில் அமர்ந்து பேசுவது தீர்வைத் தராது …
-
- 6 replies
- 1.7k views
-
-
படங்கள் இணைப்பு.... http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 0 replies
- 1.1k views
-
-
போர்நிறுத்தத்துக்கு மறுப்பு ஏன்? [19 நவம்பர் 2008, புதன்கிழமை 9:55 மு.ப இலங்கை] 2009ஆம் நிதி ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்புக் கடந்த வாரம் நாடாளு மன்றத்தில் நிறைவேறிவிட்டது. 42 மேலதிக வாக்குகளால் நாட்டின் உத்தேச - வரவு செலவுகள் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக வரவு செலவுத் திட்டத்தின் மீதான இறுதிக்கட்ட வாக்கெடுப்பு அடுத்த மாதம் எட்டாம் திகதி நடைபெற நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவும் அநேகமாக அரசுப் பக்கத்துக்குச் சார்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். வரவு - செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட கையோடு, சிறு இடைவெளியில் தேர்தல் நடைபெறலாம் என்ற பேச்சு அடிபடத் தொடங்கிவிட்டது. தேர்தல், நாடாளுமன்றத்துக்கா அ…
-
- 0 replies
- 1.6k views
-
-
''இலங்கைப் படையில் இந்திய அதிகாரிகளா?'' ராஜபக்ஷே ஸ்பெஷல் பேட்டி... ''புலிகளின் அரசியல் தலைநகர் கிளிநொச்சியை விரைவில் பிடித்துவிடுவோம். இனிமேல் புலிகளுடனான போர்நிறுத்தம் என்பது கிடையாது. தேவையா னால், புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண்டர் ஆகட்டும்!'' என இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியாவுக்கே வந்து வீராவேசம் காட்டிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் பிரபாகரனோ, ''இலங்கையோடு போரிட்டு வென்று தமிழீழம் மலரச் செய்வோம்...'' என சூளுரைக்க... இலங்கையில் உச்சகட்டப் போர்! இந்த நிலையில், சமீபத்தில் இந்தியாவுக்கு வந்தஇலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். ''நீங்கள் இலங்கை அதிபரான பிறகுதானே தமிழர்கள் மீதான தாக்குதல்கள் கடுமையாகி இருக் கின்றன..?'' …
-
- 0 replies
- 2.5k views
-
-
குடும்பத்தில் காதுகுத்து, கல்யாண நிகழ்ச்சிகளில் மொய் எழுதிய வர்கள்கூட, தங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கும் அதே போல வர வேண்டும்; அதே அளவு திருப்பிச் செய்ய முடியாதபோதும், ஏதாவது சக்திக்கு ஏற்பச் செய்ய வேண்டும்; அப்படிச் செய்தால்தான் தங்க ளுக்கு மரியாதை கொடுக்கப்பட்டதாக அர்த்தம் என்ற எண்ணம் பொதுவானது. ஆனால் இந்த நாகரிகம், தமிழக அரசியல் கட்சிக ளுக்கு மட்டும் இல்லாமல் போனது எப்படி என்பதுதான் புரிய வில்லை இலங்கைப் பிரச்னை தொடர்பாக திமுக சார்பில் அனைத்துக் கட்சி கள் கூட்டம் நடத்தப்பட்டபோது அனைத்துக் கட்சிகளும்-அதிமுக, மதிமுக, தேமுதிக தவிர- பங்குகொண்டன. இந்தக் கூட்டத்தில், அக் டோபர் 28-ம் தேதிக்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவது என்று…
-
- 0 replies
- 1.5k views
-