ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் தாக்குதல் நடவடிக்கை முறியடிப்பு: 2 உடலங்கள் மீட்பு [சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2008, 06:32 பி.ப ஈழம்] [வி.நவராஜன்] சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் தாக்குதல் நடவடிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளதுடன் அவர்களின் இரு உடலங்களையும் கைப்பற்றியுள்ளனர். வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்று வெள்ளிக்கிழமை ஆழ ஊடுருவும் தாக்குதலை மேற்கொண்ட நிலையில் அதனை விடுதலைப் புலிகள் முறியடித்தனர். இம்முறியடிப்பில் இரு படையினர் கொல்லப்பட்டதுடன் அவர்களின் உடலங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட இரு உடலங்களும் விடுதலைப் புலிகளால் இன்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. புதினம்
-
- 0 replies
- 1.2k views
-
-
சென்னை: இந்தப் பிள்ளைகள் (சீமான், அமீர்) எந்தத் தவறும் செய்யவில்லை. இவர்கள் விடுதலையாகும் வரை தமிழ் இன உணர்வுள்ள எந்த இயக்குவரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாரதிராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த இரண்டு பிள்ளைகளும் எந்தத் தவறும் செய்யவில்லை. பதவிக்காக இவர்கள் போராடவில்லை. தமிழர்களுக்காக, தமிழ் உணர்வுடன் போராடினார்கள். உலகில் எந்த நாட்டிலும் ராமேஸ்வரம் போராட்டத்தைப் போல திரைப்பட இயக்குநர்கள் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியதில்லை. இவர்கள் இருவரும் சிறையிலிருந்து விடுதலையாகும் வரை தமிழ் இன உணர்வுள்ள எந்த இயக்குநரும் படப்பிடிப்பில் கலந்து கொள்…
-
- 0 replies
- 1.8k views
-
-
கருணா என்று அழைக்கப்படும்.. தமிழ் ஒட்டுக்குழு ஆயுததாரியும் சர்வதேச மன்னிப்புச்சபை பிரகடனம் செய்த படுகொலைதாரியும் போர்க்குற்றவாளியுமான வி. முரளிதரன் அவர் சார்ந்த ஒட்டுக்குழுவின் தலைமைப் பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். ஆனால் சன நாய் அக நீரோட்டத்துக்குள் புகுந்துவிட்டதாகச் சொல்லும் அந்த குறிப்பிட்ட சிங்கள அரசு மற்றும் அமெரிக்க சார்பு ஒட்டுக்குழு தனது இராணுவப் பிரிவுக்கு அவரே தலைவராக தொடர்ந்தும் இருப்பார் என்று கூறுகிறது. உலகிலேயே அமெரிக்காவின் ஜனநாயகத்தில் சிறீலங்காவில் தான் ஜனநாயகம் என்பது பகிரங்கமாக ஆயுதம் தாங்கிய கட்சிகளால் (TMVP,EPDP,PLOTE,EPRLF(Varathar),ENDLF) நடத்தப்படுகிறது. அதுவும் ஜனநாயக நீரோட்டத்துக்குள் குருதியோட்டம் காட்ட என்று...இராணுவப் பிரிவுத…
-
- 2 replies
- 2.2k views
-
-
ஈழத்தமிழர் இனப்பிரச்சனை விவகாரத்தில் முதல்வர் கருணாநிதியின் நிலைப்பாட்டைப் பகிரங்கமாக வரவேற்றுப் பேசிய மலையக மக்கள் முன்னனி தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் அதற்காக மஹிந்தனிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். அமைச்சரை நேற்று நேரில் அழைத்து அவரிடம் காட்டமாக கண்டிப்பாக பேசிய மஹிந்த பொறுப்பான அமைச்சர் என்ற முறையில் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை அவர் மீற முடியாது என்றும் வலியுறுத்தினார். சுமார் இரண்டு மணி நேரம் இடம் பெற்ற இச் சந்திப்பின் போது தமது நிலைப்பாட்டிற்கான நியாயங்களை சந்திரசேகரன் மஹிந்தவிற்கு விளக்கினார் என்றும் தெரியவந்துள்ளது. இலங்கைத் தமிழர் தாயகத்துக்கு எதிரான யுத்தத்தை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரி முதல்வா கருணாநிதி தலை…
-
- 2 replies
- 1.8k views
-
-
இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இலங்கைத் தமிழர்களை மட்டுமல்லாமல், தமிழக மீனவர்களையும் சுடுகிறது இலங்கை ராணுவம். பல மீனவர்களைப் பிடித்து சிறையில் அடைக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்று இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் சித்திரவதைகள் அனுபவித்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களை இராமேஸ்வரத்தில் சந்தித்துப் பேசினோம். பீட்டர், லோயலன், சுவீசன், ஆரோக்யம் ஆகியோருடன் திவாகர் என்ற பத்து வயதுச் சிறுவனும் சில மாதங்களுக்கு முன் கடலுக்குச் சென்றுள்ளனர். திடீரென அவர்களைச் சுற்றி வளைத்த இலங்கை ராணுவம் துப்பாக்கி முனையில் அவர்களைக் கைது செய்துள்ளது. சுமார் இரண்டு மாதம் சிறைவாசத்திற்குப்…
-
- 2 replies
- 1.1k views
-
-
சீமான், அமீர் கைது கருத்துரிமை பறிக்கும் வன்கொடுமை : திருமாவளவன்! திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் கைது செய்யப்பட்டிருப்பது கருத்துரிமை பறிக்கும் வன்கொடுமை என்றும் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோரும் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோவைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இது கருத்துரிமைப் பறிக்கும் அரசு வன்கொடுமையென விடுதலைச் சிறுத்தைகள் கருதுகிறது. தமிழினத்தின் பகைவர்கள் மேலும் துள்ளுவதற்கு இத்தகு கைது நடவடிக்கைகள் இடம்கொடுக்கும் என்பதை தமி…
-
- 1 reply
- 764 views
-
-
"இலங்கையில் இருந்து தமிழர்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை. சண்டையால் இடம்பெயரும் மக்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதிகளை அளிக்க வேண்டியது இலங்கை அரசின் பொறுப்பு" - என, வெளியறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். ராஜ்ஜசபாவில் இது தொடர்பாக அவர் பேசியதாவது:- இலங்கையில் நடக்கும் சண்டையால், அங்குள்ள தமிழர்கள் அகதிகளாகத் தமிழகம் வருவதை நாங்கள் விரும்பவில்லை. இலங்கை நிலைவரத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்பதால், அகதிகள் இந்தியாவுக்கு வராமல் பார்த்துக்கொள்ளும்படி இலங்கை அரசைக் கேட்டுக் கொண்டுள்ளோம். புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையே நடக்கும் சண்டையால் இடம்பெயரும் மக்களுக்கு உணவும், தங்குமிட வசதியும் அளித்து அவர்களைப் பாதுகாக்க வேண்டியது இ…
-
- 1 reply
- 757 views
-
-
சென்னை: விடுதலைப் புலிகளை அழிக்க முடியாது. அவர்களை அழித்து விட்டுத்தான் இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று அதிபர் ராஜபக்சே கூறுவதை ஏற்க முடியாது. ராணுவ ரீதியிலான தீர்வு மிகக் கடினம். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளாக் கூறியுள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், விடுதலைப் புலிகள் முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே பேச்சுவார்த்தை நடத்த முடியும் என இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியிருப்பதை ஏற்க முடியாது. அது சாத்தியமும் அல்ல. ராணுவத் தீர்வு என்பது மிக மிக கடினமானது. இலங்கையின் வடக்கு முழுவதையும் ராணுவம் பிடித்தாலும் கூட, குறைந்தது ஆயிரம் விடுதல…
-
- 2 replies
- 1.3k views
-
-
சி்ங்கள இனவெறியன் இராஜபக்சேவுடன் கூட்டுசேர்ந்து தமிழினத்தை கொன்றுகுவிக்கும் மன்மோகன்சிங்கை கண்டித்தும் ஆவடி பகுதியில் 24/10/2008 காலை 11 மணியளவில் புரட்சிகர இளைஞர் முன்னணி, புரட்சிகர தொழிலாளர் முன்னணி, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் ஒன்றினணந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர தொழிலாளர் முன்னணி தோழர்.அன்பு அவர்கள், புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர்.வரதன், அவர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி தோழர்.குணாளன் அவர்கள் , ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி தோழர்.பரிதி அவர்கள் மற்றும் புரட்சிகர இனளஞர் முன்னணியின் தோழர்.கணேசன் அவர்கள் , ஆகியோர் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தார்கள். இறுதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்…
-
- 0 replies
- 771 views
-
-
சென்னை: பலத்த மழையையும் பொருட்படுத்தாமல், இலங்கை இனப் படுகொலையைக் கண்டித்து சென்னையில் இன்று மாலை பிரமாண்ட மனித சங்கிலிப் போராட்டம் தொடங்கியது. முதல்வர் கருணாநிதி மனித சங்கிலிப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிப்பதைக் கண்டித்து இன்று மாலை 3 மணியளவில் சென்னையில் பிரமாண்ட மனித சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னை நகரில் திமுகவினரும், பல்வேறு கூட்டணிக் கட்சிகள், தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குவிந்தனர். மனித சங்கிலிப் போராட்டம் தொடங்கவிருந்த நிலையில், வானம் இருண்டு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இருப்பினும் கன மழையைப் பொருட்படு…
-
- 25 replies
- 5.8k views
-
-
-
-
- 0 replies
- 866 views
-
-
விடுதலைப் புலிகள் மீதான தடை உத்தரவை நீக்குவதற்கு இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்தியாவின் டைம்ஸ் நௌவ் தெரிவித்துள்ளது. இந்தியாவின் டைம்ஸ் நௌவ் ஊடகத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வில் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்தியாவின் உண்மையான நண்பர்கள் யார் என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். எனவே, எமது அமைப்பு மீது அவர்கள் விதித்திருக்கும் தடையை நீக்கி எம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும். இலங்கைக்கு இராணுவ ரீதியான உதவிகளை இந்தியா நிறுத்தவேண்டும்” என நடேசன் கூறியிருந்தார். இந்தியா தடையை நீக்கவேண்டும…
-
- 1 reply
- 2.6k views
-
-
தமிழின எதிரி சுப்பிரமணியசாமி வீடு சூறை மதுரையில் இன்று மதியம் 2 மணியளவில் தமிழின எதிரி பார்ப்பான் சுப்பிரமணியசாமி யின் வீட்டின் மீது தமிழ்நாடு மாணவர்கழக சட்டக்கல்லூரி மாணவர்களும் தமிழின உணர்வாளர்களும் தாக்குதல். மாணவர்களும் தமிழின உணர்வாளும் கைது. Posted by பெரியார் பாசறை at 3:38 AM நன்றி http://periyaarpaasarai.blogspot.com/2008/...og-post_24.html
-
- 19 replies
- 2.5k views
-
-
நம்பிக்கை வீண் போகவில்லை, ஆனால்...: கருணாநிதி சனிக்கிழமை, அக்டோபர் 25, 2008 சென்னை: இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதன் மூலம் நாம் கொண்ட நம்பிக்கை வீண போகவில்லை. அதே நேரத்தில் அரசின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட விளைவுகள் நமக்கு முழு மன நிறைவைத் தரவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தமிழர்களை காக்கவும் அவர்தம் உரிமைகளை அறவழியில், அமைதி வழியில், அரசியல்ரீதியாக வாதாடி, போராடிப் பெறுகின்ற வழிமுறைகளை பின்பற்றி திமுக முயற்சிகளை மேற்கொண்டு, அதற்கு ஒத்து வருகின்ற கட்சிகள், இலங்கை தமிழர்பால் பரிவு கொண்ட இயக்கங்கள், அவற்றின் தலைவர்கள், முன்னோடிகள் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு, அவர்களும் ஈடுபாடு…
-
- 0 replies
- 1.2k views
-
-
சேர்ந்து மூச்சு விடுவோம்... 'ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து இங்கு வந்து அதிகாரம் செலுத்தும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நீங்கள் துப்பாக்கி தூக்க வேண்டியதில்லை; வெடிகுண்டு வீசவேண்டியதில்லை; ஒன்றை மட்டும் செய்யுங்கள்..! முப்பது கோடி இந்தியரும் ஒரே நேரத்தில் வெள்ளையரை நோக்கி மூச்சு விடுங்கள். அது புயலாக மாறி அவர்களைக் கொண்டுபோய் சீதளச் சீமையில் சேர்த்துவிடும். ஆனால், என் சகோதரர்களே, நீங்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சேர்ந்து மூச்சுவிடுவீர்களா?'என்றுஅர்த்தம் செறிந்த கேள்வியை அன்று கேட்டார் வ.உ.சிதம்பரம். இந்தக் கேள்விக்குத்தான் அவருக்கு இருபதாண்டு சிறைவாசம். இந்தியர்கள் சேர்ந்து மூச்சுவிடுவது இருக்கட்டும். இதுவரை தமிழர் தலைவர் வ.உ.சி. விரும்பியபடி எந்…
-
- 1 reply
- 1.1k views
-
-
சர்வதேசத் தரப்புகளின் விசாரணைக்கு இடமில்லை [25 ஒக்டோபர் 2008, சனிக்கிழமை 12:25 மு.ப இலங்கை சட்டத்தின் ஆட்சி, மனித கௌரவத்தை மதித்தல், சமத்துவம் பேணல், கருத்து வெளியிடும் சுதந்திரம், செயலாற்றுவதற்கான பொறுப்பு, நல்லாட்சி, நீடிக்கும் அபிவிருத்தி - இவற்றை ஆற்று வதற்கே தாங்கள் திடசங்கற்பம் கொண்டிருக்கின்றார்கள் என்று கூறியிருக்கின்றார் கனேடிய ஆளுநர் மிச்சலி ஜேன் ஸ்பீச் அம்மையார். கனடாவுக்கான புதிய இலங்கைத் தூதுவர் தமது நியமனக் கடிதத்தைக் கையளித்த சமயமே அவர் இவ்வாறு தெரிவித்தார் எனக் கனேடிய அரசின் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது. இலங்கையில் எது எதுவெல்லாம் இல்லையோ அவற்றைத்தான் கனேடிய ஆளுநர் வரிசைப்படுத்தி அவசியமானவை என்று வற்புறுத்தியிருக்கின்றார். சட்டத்…
-
- 0 replies
- 796 views
-
-
பெரும்பான்மை சிங்கள கட்சிகளிடையே இணக்கமின்மையே 25 ஆண்டு காலமாக இலங்கையில் தேசியப் பிரச்சினை நீண்டு கொண்டு செல்வதற்கு காரணம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் பிளெக் தெரிவித்துள்ளார். இராணுவ ரீதியிலான வெற்றிளை ஈட்டும் வரை காத்திருக்காது உடனடியாக அனைத்துக் கட்சிகளும் இணைந்து தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க முனைப்புடன் செயற்பட வேண்டியது இன்றியமையாததென அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியிலான தீர்வினை எட்டுவது நடைமுறைச் சாத்தியமற்றதொன்றென அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்த ரீதியில் தோற்கடித்ததன் பின்னர் அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் என்ற ஜனாதிபதி மஹிந்த ரா…
-
- 0 replies
- 862 views
-
-
ஆய்வு அக் 24, 2008 காலாவதியும்! காலக்கெடுவும்! எழுதியவர் - கலி விடுதலைப் புலிகள் விரித்தவலையில் இராணுவம் சிக்குண்டிருப்பது படைத்துறையின் வலுவை கணிசமாகக் குறைத்துவிட்டுள்ள நிலையில் இராணுவம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதோ அல்லது விடுதலைப் புலிகளை முற்றாகக் தோற்கடிப்பது என்பதோ கற்பனைக்கு அப்பாற்பட்டவிடயமே. சிறிலங்காப் பேரினவாத அரசாங்கம் தனது இனவெறிப் போரின் உச்சக் கட்டத்தாக்குதல் இலக்காகக் கிளிநொச்சியைத் தேர்வு செய்து அதனைக் கைப்பற்ற காலக்கெடுவும் விதித்து சிங்களத்தின் முழுப்பலத்தையும் குவித்து கிளிநொச்சியைக் கைப்பற்ற சிங்களப் படைகள் மேற்கொண்ட நகர்வு முயற்சிகள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதால் சிறிலங்கா அரசுத்தல…
-
- 0 replies
- 1k views
-
-
நாடாளுமன்றத்திற்கு வந்து போவதற்காக நாடாளுமன்றத்திற்குள் செல்லும் வீதிகள் காலையிலும் மாலையிலும் மூடப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் துன்பப்படுத்தப்படுகின்றனர் என்று ஐ.தே.கட்சி எம.பிக்கள் தயாசிறி ஜயசேகர மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் நேற்று நாடாளுமன்றில் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்தனர். இது தொடர்பாக ஜயசேகர சிறப்புரிமை மீறல் பிரச்சினை ஒன்றை எழுப்பி உரையாற்றியவை வருமாறு:- நாடாளுமன்ற அமர்வுகள் இருக்கும் நாட்களில் நாடாளுமன்றத்திற்குச் செல்லும் வீதிகள் அனைத்தும் காலையில் 9 மணிமுதல் 9.30 மணிவரையும் பிற்பகல் 5 மணிமுதல் 5.30 மணிவரையும் மூடப்படுகின்றன. இவ்வாறு மூடப்படுவதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர்; நாமும் பாதிக்கப்படுகின்றோம். இன்று (நேற்று) க…
-
- 0 replies
- 1k views
-
-
இன்று முதல் அஜித் மற்றும் அர்ஜூன் திரைப்படங்களை நாம் புரக்கணிப்போம் என ஜெனீவா வாழ் தமிழ் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களினால் விடப்பட்ட முழுமையான வேண்டுகோள்.... அன்பான தமிழ் மக்களே... இன்று முதல் அஜித்,அர்ஜூன் திரைப்படங்களை நாம் புரக்கணிப்போம். எமது மக்கள் படும் இன்னல்களையும் துன்பங்களையும் அவர்கள் அலட்சிய படுத்தி உண்ணா நிலை போராட்டமெல்லாம் எதற்காக என்று கூறியுள்ளார்கள். இப்படி பட்டவர்களுக்கு நாம் இனியும் ஆதரவு வளங்க கூடாது. அன்பார்ந்த ரசிகர்களே,இனியாவது நீங்கள் கொஞ்சம் சிந்தித்து செயல் படுங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழீழம். இப்படிக்கு ஜெனீவா வாழ் தமிழ் மக்கள் http://www.tamilseythi.com/tamilar/ajith-a...2008-10-24.html
-
- 26 replies
- 8.1k views
-
-
பிரபாவை காப்பாற்ற வைகோ வன்னிக்கு வந்தால் பதிலடி கொடுப்போம் - சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி தலைவர் பிரபாகரனை காப்பாற்றுவதற்காக வைகோ உட்பட குழுவொன்று இரகசியமான முறையில் வன்னிக்கு வருகை தந்தால் அவர்களுக்கு எதிராக செயற்பட பாதுகாப்புப் படைப் பிரிவினர் கடுமையாக செயற்படுவார்கள் என சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வைகோ உட்பட ம.தி.மு.க வின் குழுவொன்று வன்னிக்கு வந்து பிரபாகரனை தப்பிக்க வைக்க முயற்சிகள் இடம் பெறுபவதாக கிடைக்கப் பெற்ற தகவல்களைத் தொடர்ந்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பிரபாகரனுக்கு ஒத்தாசை புரியும் வைகோவும் ஓர் பயங்கரவதியே. எனவே பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதம் குறித்து பாதுகாப்பு தரப்பினர் நன்கு அறிந்து வைத்துள்ளனர் எனவும் அவ…
-
- 0 replies
- 1.3k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள புதுமுறிப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் பாடசாலை ஆசிரியர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 764 views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையில் போரில் பாதிக்கப்படும் தமிழ் மக்கள் மீது கரிசனை கொண்டுள்ளோம். ஆனால் அதற்காக இலங்கைக்கான இராணுவ உதவிகளை நிறுத்தமுடியாது. இலங்கையோடு நட்புறவை பேணிவருகின்றோம். இந்தியாவின் பிராந்திய நலனிற்கு இலங்கை தீவின் நட்புறவு அவசியமாகின்றது. நாங்கள் இலங்கைக்கு இராணுவ உதவி அளிக்காவிட்டால் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இப் பிராந்தியத்தில் காலூன்ற வழிவகுத்துவிடும். எனவே உங்கள் பாதுகாப்பு தேவைகளுக்கு எங்கும் அலையவேண்டிய அவசியம் இல்லை நாங்கள் இருக்கின்றோம் என இலங்கைக்கு உறுதியளித்திருக்கின்றோம் ( He said Colombo had been told that India would "look after your security requirements, provided you do not look around. ) எங்கள் முற்றத்தை சர்வதேச நாடுகளின் விளையாட்டு ம…
-
- 2 replies
- 1.5k views
-