ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
களமுனைக்கு வெளியே நகரும் போர்.-லண்டனிலிருந்து வன்னியன் சனி, 18 அக்டோபர் 2008, 05:40 மணி தமிழீழம் [] தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் போராட்டம் ஒரு இராணுவ நெருக்கடி மிகுந்த காலகட்டத்தினுள் பிரவேசிக்கின்ற போதோ அல்லது இனப்படுகொலை மிகத்தீவிரமடைகின்ற போதெல்லாம் ஈழத்தமிழினத்தையும் அவர்களது விடுதலைப் போராட்டத்தினையும் பாதுகாப்பதற்காக உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் உலகின் கவனத்தை ஈர்ப்பதற்கான வெகுஜனப் போராட்டங்களை நிகழ்த்தி ஒரு தற்காலிக சர்வதேச அழுத்தத்தினை இலங்கை அரசுக்கு ஏற்படுத்தி இனப்படுகொலையின் தீரத்தை தணிப்பதும் அது பின்னர் மறக்கப்படுவதும் வழக்கமாகியிருந்தது. ஆனால் கடந்தகாலங்களில் நிகழ்ந்த வெகுஜனப் போராட்டங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்ததைவி…
-
- 0 replies
- 1k views
-
-
என்ன விலை கொடுத்தேனும் ஈழத் தமிழர் படுகொலையை தடுப்போம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 622 views
-
-
தமிழகத்தில் அரசியற் கட்சிகளைத் தொடர்ந்த பல்வேறு மட்டங்களிலும், ஈழத்தமிழரு்களுக்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் நேற்று 17.10.08 ல் தமிழ்நாடு வக்கீல்கள் , தங்கள் ஆதரவினை ஈழத்தமிழர்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில், உயர்நீதிமன்றப்பணிகளைத் தவிர்த்து, நீதிமன்றுக்கு வெளியே நடாத்திய உண்ணாநிலைப் போராட்டத்தில் அனைத்து தரப்பு வக்கீல்களும் கலந்து கொண்டார்கள். இவரகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் , திரு பழ.நெடுமாறன், தோழர், தியாகு. இயக்குனர் சீமான் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டார்கள். இது குறித்து அங்கிருந்து கிடைக்கப்பெற்ற செய்தியின் ஒலிவடிவம். உண்ணாநிலை போராட்டக் காட்சிகளின் தொகுப்பு http://www.4tamilmedia.com/index.php?optio...&Item…
-
- 0 replies
- 694 views
-
-
கிளிநொச்சிப் படையெடுப்பும் இறுதி யுத்தமும் திகதி: 17.10.2008 // தமிழீழம் // [] எழுதியவர்- ஜெயராஜ் கிளிநொச்சியில் இருந்து மக்கள் வேகமாக இடம்பெயர்ந்து கொண்டிருந்தவேளை ஒரு படைப்பிரதேச வாசி கூறினார் "பளையை விட்டு நாழும் இவ்வாறுதான் இடம்பெயர்ந்தோம். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னமும் இராணுவம் பளையை வந்தடையவில்லை" கிளிநொச்சியின் நிலையும் அதேதான்" என்று. கிளிநொச்சி மீது சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா கிளிநொச்சிக்கான யுத்தப்பிரகடனம் செய்து சுமார் இரண்டு வாரகாலமாகின்றது. அதாவது கடந்தவாரம் ஆரம்பிப்பதற்கு முன்பாக கிளிநொச்சி மீது பாரிய தாக்குதலை ஆரம்பிக்கப்போவதாக அவர் கூறினார். ஆனால், கிளிநொச்சி நோக்கியதான நகர்வு அன்றி கிளிநொச்சி செல்வதற்கான மார்…
-
- 0 replies
- 1.2k views
-
-
காற்றில் கரையும் உயிர்கள்! மீண்டும் தமிழீழத் தகிப்பு தமிழகத்திலும் அனலாகப் பிரதிபலிக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் பதுங்கியிருக்கும் காட்டுக்குள் அப்பாவித் தமிழர்கள் தஞ்சம் அடைகிறார்கள். பொதுமக்களின் வாழ்விடங்கள், சிங்கள ராணுவ முகாம்களாக உருமாறுகின்றன. இதற்கிடையில் தமிழக மீனவர்களைத் துளைக்கத் தவறுவதில்லை சிங்கள ராணுவத்தினரின் தோட்டாக்கள். அவர்களைக் கட்டுப்படுத்த முடியாத மத்திய அரசு, 'இனி, இந்திய மீனவர்கள் சுடப்பட மாட்டார்கள்!' என்று பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் மூலம் தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொள்கிறது. 'பிரபாகரன் இனி பதுங்கு குழிகளில் இருக்க முடியாது!' என்று சிங்கள ராணுவ அதிகாரி கொக்கரிக்கிறார். 'இலங்கை ராணுவம் இனி எங்களிடம் தஞ்சம் கேட்டு வரும்!' என்று ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
"எங்கட சோகம்..." - ஈழத்து நிலையை சொல்கிறார் இலங்கை எம்.பி. ''ஈழப் பிரச்னைத் தீர்வுக்காகத் தமிழக எம்.பி-க்கள் கூண்டோடு ராஜினாமா செய்யவும் தயங்க மாட் டார்கள்'' என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி அதிர்வோடு அறிவித்த செய்தி, மத்திய அரசின் கவனத்தை உலுக்கி இருக்கிறது. இதற்கிடையில், தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஈழ நிலைமையை விளக்குவதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் தமிழ் எம்.பி-யான சுரேஷ் பிரேமச்சந்திரன் சென்னை வந்திருந்தார். அவரை நாம் சந்தித்தோம். ''எங்கட மண்ணின் இன்னல் தீர்க்க தமிழக முதல் வரும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒருசேர கைகோத்திருப்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இதன்மூலம் எங்கட பலம் வலுப்ப…
-
- 0 replies
- 605 views
-
-
இந்தியப் பிரதமரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திக்க முடியவில்லை? கொழும்பு ஊடகம்: இலங்கையில் தற்போது நடைபெற்ற வரும் மோதல்கள் தொடர்பில் தமிழ்த் தரப்பின் நிலைப்பாடுகளை தெளிவுபடுத்த இந்தியாவுக்குச் சென்றுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை இந்தியப் பிரதமரை சந்திக்க முடியாது போயுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் இந்த சந்திப்பைத் தொடர்ந்தும் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள கொழும்பு சென்ற இந்தியப் பிரதமரின் அழைப்பை அடுத்து, இரண்டு மாதங்களுக்கு முன்னர், தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பினர், இந்தியா சென்றுள்ளனர். இந்தியப் பிரதமர் தமிழ்த்;தேசிய கூட்டமைப்பினருக்கு நேரடியாக இந்த அ…
-
- 0 replies
- 703 views
-
-
இந்திய ராஜதந்திரக் குழு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது:(விசேட பின் இணைப்பு) இலங்கையின் யுத்த நிலைமைகளைக் கண்காணித்து, இந்திய அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் நோக்கில், இந்தியா, ராஜதந்திரக் குழுவை கொழும்புக்கு அனுப்பி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ராஜதந்திரக் குழு இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தில் இருந்தபடி செயற்படுவர் என கூறப்படுகிறது. தமிழக மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லையில் சந்தித்து வரும் பிரச்சினைகள், வடபகுதி மக்களின் மனித உரிமை மீறல்கள், மோதல்களில் இந்த மக்களின் உயிர் உடமைகள் அழிக்கப்படுவது குறித்து இந்தக் குழுவினர் தமது கண்காணி;ப்புகளை மேற்கொள்ள உள்ளனர். இலங்கையின் யுத்த நிலைமை மற்றும்,தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து இந…
-
- 0 replies
- 784 views
-
-
சென்னை: இலங்கையில் தமிழ் இனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டிருப்பதை எண்ணி எண்ணி ஏங்குகிறேன்இ பெருமூச்சு விடுகிறேன். மனம் ஒரு நிலையில் இல்லை. உறங்க முடியாமல் தவிக்கிறேன். இந்த இனப் படுகொலையை என்ன விலை கொடுத்தாவது தடுப்போம் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை ஒரு சில ஏடுகள் மத்திய அரசுக்கு விடுத்த மிரட்டல் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டன. அதைப்பற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி, தமிழக கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசுக்கு விடுத்த மிரட்டலாக கருதவில்லை. அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவதற்கு வேதனை தெரிவித்திருப்பதா…
-
- 1 reply
- 1k views
-
-
புதுடெல்லி திமுக கொடுத்து வரும் தொடர் நிர்ப்பந்தத்தையடுத்து, இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவது தொடர்பாக இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு தனது கவலையை தெரிவித்ததோடு, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்தும் தனது கண்டனத்தை தெரிவித்தது. இந்திய வெளியுறவுத்துறை செயலர் சிவசங்கர் மேனன், நேற்று இலங்கை தூதர் சி.ஆர்.ஜெயசிங்கேவுக்கு தம்மை சந்திக்க வருமாறு சம்மன் அனுப்பியிருந்தார். இதனையடுத்து அவரது அலுவலகத்திற்கு வந்த ஜெயசிங்கேவிடம், இலங்கையில் அப்பாவி தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து இந்தியாவின் ஆழ்ந்த கவலையை மேனன் தெரிவித்தார். இலங்கையில் விடுதலைப்புலிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் போது அப்பாவி தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய…
-
- 0 replies
- 658 views
-
-
டெல்லி: இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று காலை பிரதமர் மன்மோகன் சி்ங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தமிழர்கள் வசிக்கும் பகுதியில் ராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அதிபரிடம் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். இத்தகவலை இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர மேனன் உறுதிப்படுத்தியுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகள் மீது நடக்கும் தாக்குதல்களில் அப்பாவித் தமிழர்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டு வருகிறார்கள். இதனைத் தடுக்கக் கோரியும், இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணக் கோரியும் தமிழகமே போர்க் கோலம் பூண்டு நிற்கிறது. தமிழக எம்பிக்கள், மத்திய அமைச்சர்கள் ராஜினாமா க…
-
- 1 reply
- 1.3k views
-
-
பாண்டிருப்பு திரெளபதை அம்மன் ஆலயத்தில் கருணா குழுவின் அட்டகாசம் கல்முனை பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்துக்குச் சென்ற கருணாகுழு உறுப்பினர்கள் ஆலய நிர்வாகத்தினரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ள சம்பவம் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது. தற்பொழுது கல்முனை - பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய தீமிதிப்பு வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. வருடந்தோறும் சுமார் 2லட்சம் மக்கள் இங்கு கலந்து கொள்வது வழக்கம். நேற்றுமாலை இவ்வாலயத்துக்கு தனது சகாக்களுடன் சென்ற கருணாகுழு உறுப்பினரான கீதன் என்பவர் ஆலய நிர்வாகிகளை ஆயுத முனையில் மிரட்டியுள்ளார். அதாவது ஆலய உண்டியலில் சேர்ந்த பணம் முழுவதையும் மக்களால் செலுத்தப்பட்டுவருகின்ற காணிக்கைகளை…
-
- 0 replies
- 1.1k views
-
-
சப்பிளேப் பாதையால் சில நேரம் பத்துப் பதினைஞ்சு ஆமிக்காறங்களை ஒரேயடியாய் போட்டுக்கொண்டு போனார்கள். சரியான பெரிய ஸ்ரெச்சர். அதில நாலு பக்கத்திலையும் நாலு ஆமிக்காறங்கள் பிடிச்சுத் தூக்கிக் கொண்டு போவாங்கள். ஏழு எட்டுத் தரத்துக்குமேல் பத்துப் பதினைஞ்சு ஆமிக்காறங்களை ஒரே தரத்தில் போட்டுக்குவிச்சுக் கொண்டு போனாங்கள். காயப்பட்ட ஆமிக்காறங்களை இப்பிடிக் குவியலாய் போட்டுக்கொண்டு போகமாட்டாங்கள். அப்பிடி எண்டால் இதில கொண்டுபோறது செத்த ஆமிக்காறங்களாய் தான் இருக்கவேணும். அப்படியே படுத்துக்கிடந்தபடி எட்டிப்பார்த்தன். அந்த ஸ்ரெச்சரில் கொண்டு போற ஆமிக்காறங்கள் சண்டையில் செத்துப்போன ஆக்கள். எனக்கு என்னோட அதில் நிண்ட பிள்ளையளுக்கும் அந்த ஸ்ரெச்சரைப் பாக்கப் பாக்கப் பெரிய சந்தோசமாய் இரு…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையில் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் 7 பேர் உட்பட 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவி விலகல் கடிதங்களைக் கையளித்துள்ளனர். முலமைச்சர் கலைஞர் கருணாநிதி, அமைச்சர் அன்பழகன் ஆகியோர் தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தினைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியிடம் இவர்கள் தமது பதவி விலகல் கடிதங்களை 29ஆம் திகதியிட்டு கையளித்துள்ளனர். தமிழ்நாடு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக எதிர்வரும் 29ஆம் நாள்வரை இந்திய மத்திய அரசுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டிருப்பதால், 29ஆம் திகதியிடப்பட்டு கடிதங்கள் கையளிக்கப்பட்டு வருகின்றன. ஈழத் தமிழர்கள் மீது சிறீலங…
-
- 0 replies
- 1.2k views
-
-
இராமேஸ்வரம் பேரணியில் 2 ஆயிரம் பேர் பங்கேற்பு- சென்ன மனித சங்கிலிக்கும் ஆதரவு: இயக்குநர் பாரதிராஜா [சனிக்கிழமை, 18 ஒக்ரோபர் 2008, 12:55 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கைத் தமிழர்களைப் படுகொலை செய்யும் சிறிலங்கா இராணுவத்தை கண்டித்து இராமேஸ்வரத்தில் எதிர்வரும் 19 ஆம் நாள் நடைபெறும் பேரணியில் 2 ஆயிரம் திரையுலகத்தினர் பங்கேற்பர் என்றும் சென்னையில் 21 ஆம் நாள் நடைபெறும் மனித சங்கிலி அணிவகுப்பிலும் தமிழ்த் திரையுலகத்தினர் பங்கேற்க உள்ளனர் என்றும் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அறிவித்துள்ளார். சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பாரதிராஜா கூறியதாவது: இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். இதை கண்டித்து வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு நிற்கிற…
-
- 4 replies
- 1.5k views
-
-
இன்று காலை சிறிலங்கா படையினர் தொடங்கியுள்ள முன்னகர்வு முயற்சியைத் தொடர்ந்து இது தரப்பினருக்கும் இடையே அக்கராயன் பகுதியில் கடும் மோதல் நடைபெற்று வருவதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. எனினும் இழப்பு விபரங்கள் எதுவும் படைத்தரப்பினால் வெளியிடப்படவில்லை.
-
- 1 reply
- 2.5k views
-
-
ஈழ மண்ணில் தோராயமாக 35 லட்சம் தமிழ் வாழ் சனங்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கும் கோடிக்கணக்கான தமிழர்களின் ஒருவிரல் எமை நோக்கி நீண்டால்கூட போதும்... எங்களின் இன்னல்கள் களையப்பட்டு விடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 957 views
-
-
தமிழக முதல்வர் கருணாநிதியால் டில்லியைப் பணிய வைக்க முடியுமா? நக்கீரன் (கனடா) - தூங்கிக் கிடந்த தமிழகம் இப்போது பொங்கி எழுந்துள்ளது. ஏன் கொதிநிலை அடைந்துள்ளது என்று கூடச் சொல்லலாம். அரசியல்வாதிகள், திரையுலகக் கலைஞர்கள், வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவர்கள், வணிகர்கள் என அனைவரும் தமிழீழ மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டப்பேரணி, கதவடைப்பு எனத் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். மேலவை உறுப்பினர் கனிமொழி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை முதல்வர் கருணாநிதியிடம் கையளித்துள்ளார். எதிர்வரும் ஒக்ரோபர் 21 இல் சென்னையில் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இந்தத் திருப்பங்கள் தமிழகத்தை தமிழீ…
-
- 0 replies
- 1.2k views
-
-
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறைகளினால் இலங்கைத் தமிழர் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் ஆளும் காங்கிரஸ் கூட்டணியே பொறுப்பு சொல்ல வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோ தெரிவித்துள்ளார். தனிப்பட்ட ரீதியில் மன்மோகன் சிங் மீது தமக்கு அதிக மரியாதை இருப்பதாகவும், எனினும் பிரதமர் என்ற ரீதியில் அவரது தீர்மானங்கள் தமிழரை அழிவுப்பாதையில் இட்டுச் செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி தமிழக சட்டத்தரணிகள் மேற்கொண்ட போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் முன்னெடுக்கப்படும் யுத்தம…
-
- 0 replies
- 924 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தவதற்கான இந்தியாவின் அரசியல் அழுத்தம் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தில் அதிகளவு மாற்றத்தை ஏற்படுத்தாது. ஏனெனில் ஆசியாவின் நீண்ட காலக் கிளர்ச்சிகளில் ஒன்றான இந்தப்பிரச்சினையைத் தன்னால் முடிவுக்குக் கொண்டு வர முடியுமென்று இலங்கை அரசு அதிகளவு நம்புகின்றது என ரொய்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. ஏனென்றால் இதுவே அரசாங்கத்தின் முக்க்யமான நிகழ்ச்சி நிரல் என யூரேசியா குறூப்பின் ஆய்வாளர் மரியா கூசிஸ்ரோ தெரிவித்துள்ளார். இந்தளவு தூரத்திற்கு அவர்கள் போயிருக்கும் போது பின்னோக்கிச் செல்வது எதிர்மறையானதாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் மோதல் அதிகரித்திருப்பதைய…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான பிரச்சினைகள் குறித்து இந்திய-இலங்கைத் தரப்புக்களிடையே இந்தியாவிலும், இலங்கையிலும் வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் சி.ஆர்.ஜயசிங்கவை அழைத்து, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் இலங்கையின் நிலைமை குறித்த இந்தியாவின் அக்கறைகளை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையில் உள்ள மனிதாபிமான பிரச்சினைகள் குறித்த இந்தியாவின் கவலைகளைக் கருத்தில் கொண்டு இலங்கை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும், இந்திய மீனவர்களை கொல்வதையும், துன்புறுத்துவதையும் நிறுத்தவேண்டும் எனவும் மேனன் இந்தச் சந்திப்பின்போது தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தியாவின் அச்சுறுத்தலுக்கு அடிபணியலாகாது. அவர்களால் எம்மை என்ன செய்து விட முடியும். மிஞ்சினால் வான் பரப்பில் இருந்து பருப்பு மூடைகளையே போட முடியும். இவ்வாறு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளரான விமல் வீரவன்ஸ தெரிவித்தார். தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் கூறியவை வருமாறு: வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாப்பதற்காக வாஷிங்டனும் புதுடில்லியும் மேற்கொள்ளும் சதித்திட்டத்தை தோல்லியுறச் செய்ய தேசப்பற்றாளர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். இந்தியாவின் அச்சுறுத்தலுக்கு அடிபணியலாகாது. அவர்களால் எம்மை என்ன செய்ய முடியும். மிஞ்சினால் வான் பரப்பில் இருந்து பருப்பு முடைகளைமட்டுமே போ…
-
- 0 replies
- 769 views
-
-
தி.மு.க மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் முதலமைச்சர் கருணாநிதியிடம் தமது ராஜீனாமா கடிதங்களை நேற்றிரவு கையளித்துள்ளனர். இதனையடுத்து டில்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவையை பிரதிநிதிப்படுத்தும் தி.மு.க.வின் 16 உறுப்பினர்களும் தமது ராஜனாமாக் கடிதங்களை தி.மு.க. தலைவரிடம் கையளித்துள்ளதாக கட்சித் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவர்களுள் மத்திய அரசு அமைச்சர்களாக பதவி வகித்தவர்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். நன்றி வீரகேசரி
-
- 0 replies
- 1.4k views
-
-
துப்பாக்கியின் மீது அரசியல் ஆணை செலுத்த வேண்டுமே தவிர, அரசியல் மீது துப்பாக்க ஆணை செலுத்தக்கூடாது" என்றார் மாசேதுங். பிரபாகரனின் அண்மைக்கால அரசியல் நகர்வுகளும் எதிர்த்தாக்குதல் சமரும் மாவோவின் புரட்சி உத்தியை நினைவு படுத்துகின்றன. சுருக்கமாகச் சொன்னால், அரசியல் களத்தில் தாக்குதல் தந்திரத்தையும் படைநகர்வில் எதிர்த்தாக்குதல் தந்திரத்தையும் அவா கடைபிடிக்கிறார். அரசியல் களத்தில் எதிரியை முன்னேறித் தாக்குகிறார். போர் களத்தில் எதிரியின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கிறார். அண்மையில் நடந்த சார்க் மாநாட்டின் பாதுகாப்பு கருதி, தாமாக முன்வந்து பத்து நாள் போர் நிறுத்தத்தை விடுதலைப்புலிகள் அறிவித்தனர். ஆனால் சிங்களக் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபட்ச இந்தப் போர் நிறு…
-
- 3 replies
- 2.4k views
-
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் பட்டினிப்போராட்டம் மேற்கொண்டனர். மதுரையில் நடந்த பட்டினிப்போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்றார். இலங்கையில் சிங்கள ராணுவம் தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஏராளமான தமிழர்கள் உயிரிழந்தனர். இதற்கு தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. வருகிற 21ந் தேதி சென்னையில் மாபெரும் மனித சங்கிலி நடத்த முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். நவம்பர் 1ந் தேதி திரைப்பட நடிகர் நடிகைகள் சென்னையில் பட்டினிப்போராட்டம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், தமிழர்கள் மீது இலங்கை ராணுவத்தின் தாக்குதலை கண்டி…
-
- 2 replies
- 745 views
-