ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
Published By: DIGITAL DESK 5 24 APR, 2023 | 12:33 PM கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (24) காலை தெருநாய்கள் சுற்றித் திரிந்ததமை அவதானிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் நுழையும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை அந்த நாய்கள் சிரமப்படுத்தும் வகையில் நடந்துகொண்டிருந்தன. இது குறித்து ஊழியர்களிடம் கேட்டபோது, விமான நிலைய முனைய கட்டிடத்தின் நுழைவு வாயில்களுக்கு அருகில் உள்ள விமான நிலைய வளாகத்தில் இந்த நாய்கள் சுற்றித் திரிவதாக தெரிவித்தனர். இந்த நாய்கள் எப்படியாவது விமான நிலைய ஓடுபாதையிலோ அல்லது விமானக் கட்டடத்திலோ நுழைந்தால், கடுமையான விபத்துகள் ஏற்பட வாய…
-
- 1 reply
- 364 views
- 1 follower
-
-
Published By: T. SARANYA 24 APR, 2023 | 01:48 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம் தீவகத்தில் முறையற்ற வகையில் பரம்பரை காணியை மோசடியான முறையில் தனது பெயருக்கு உரிமம் மாற்றிய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மோசடிக்கு துணை நின்றனர் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 12 சகோதரங்கள் இடையே பிரிவிடல் செய்யப்பட்டவேண்டிய ஆதனத்தை ஒரு சகோதரர் மட்டும் முறையற்ற வகையில் தனது பெயருக்கு மாற்றிய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தார்…
-
- 0 replies
- 313 views
- 1 follower
-
-
ஹம்பாந்தோட்டை கடற்கரையில் இருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற்பரப்பில் இன்று (24) காலை ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இதனால் சுனாமி அபாயம் எதுவும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட பணிப்பாளர் (புவியியல்) கலாநிதி ஸ்டெரின் பெர்னாண்டோ இது குறித்து கருத்து தெரிவிகையில் :- . “இந்த பூகம்பத்தால் சேதங்கள் ஏற்பட்டதாக எமக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இத்தாக்கம் அதிகமாக உணரப்பட்டுள்ளது. பதுளை, கண்டி மற்றும் மாவனல்லையிலும் உணரப்பட்டுள்ளது. ப…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய வழக்கு விசாரணை 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு Published By: Digital Desk 5 11 Apr, 2023 | 09:02 AM வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய உடைப்பு தொடர்பான வழக்கு எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. வவுனியா வடக்கு, ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் பொலிசார் தாக்கல் செய்த வழக்கு மீதான விசாரணைகள் திங்கட்கிழமை (10) வவுனியா நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. இதன்போது பொலிஸார் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான விசாரணை அறிக்கையினை மன்றில் சமர்ப்பித்ததுடன், இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்…
-
- 1 reply
- 217 views
- 1 follower
-
-
வடக்கு, கிழக்கில் சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்பு என சொல்லப்படுவதனை ஏற்றுக்கொள்ளமுடியாது : ஜனாதிபதி! வடக்கு, கிழக்கில் சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்பு என சொல்லப்படுவதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் நாளைய தினம்(செவ்வாய்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பில் ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஹர்த்தால் போராட்டம் மக்களின் நாளாந்த வாழ்வாதாரத்தை முடக்குகின்ற போராட்டமாகும். நாட்டின் பொருளாதாரத்துக்கும் பாரதூரமான தாக்கத்தை செலுத்துகின்ற போராட்டமாகும். ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ள தமிழ்க் கட்சிகள் இதைக் கவனத்த…
-
- 3 replies
- 739 views
-
-
மாணவர்களை இலக்கு வைத்து போதை கலந்த மாவா விற்பனை : யாழில் இளைஞன் கைது யாழ்ப்பாணத்தில் மாணவர்களை இலக்கு வைத்து போதை கலந்த மாவா பாக்குகளை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். . கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து தலா 100 ரூபாய் பெறுமதியான 250 மாவா போதை பாக்கு பொட்டலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். ஊரெழு பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனையே கைது செய்துள்ளதாகவும், குறித்த நபர் யாழில் மாணவர்களை இலக்கு வைத்து இந்த விற்பனையில் ஈடுபட்டார் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட நபரிடம் விசரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்…
-
- 0 replies
- 505 views
-
-
யால தேசிய சரணாலயத்தில் இருந்த மிகப்பெரிய தந்தம் கொண்ட யானையான ‘தல கொட்டா’ உயிரிழந்தது. 40 வயதுடைய குறித்த யானை நீண்ட நாட்களாக நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிகிச்சை அளித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் லுணுகம்வெஹர நீர்த்தேக்கத்திற்கு அருகில் உயிரிழந்த நிலையில், யானையின் சடலம் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது. யால தேசிய சரணாலயத்திற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்த மிருகமாக இந்த யானை காணப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/250392
-
- 0 replies
- 349 views
- 1 follower
-
-
Published By: VISHNU 23 APR, 2023 | 09:08 PM (எம்.மனோசித்ரா) உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு மேலும் பங்களிப்பு வழங்கப்படும் என சீனா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளது. சீன மேர்ச்சன்ட்ஸ் குழுமத்தின் தலைவர் மியாவ் ஜியான்மின் உள்ளிட்ட குழுவினர் 22 ஆம் திகதி சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்திருந்தனர். இதன் போதே ஜனாதிபதியிடம் இவ்வாறு உறுதியளிக்கப்பட்டதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சந்திப்பின் போது பல முக்கிய முதலீட்டு முன்மொழிவுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ள…
-
- 0 replies
- 423 views
- 1 follower
-
-
கொழும்பு துறைமுக நகரம் இன்னும் முதலீடுகளை ஈர்க்கவில்லை! சீனாவின் முதலீட்டிலான போர்ட் சிட்டி என்ற கொழும்பு துறைமுக நகரம் இன்னும் முதலீட்டை ஈர்க்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பொறுத்தவரையில் பூஜ்ஜிய நிலையே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிகங்கள் மற்றும் முயற்சிகளுக்கு வழங்கப்படவேண்டிய சட்டப்பூர்வ சலுகைகள் மற்றும் விலக்குகளை அரசாங்கம் இன்னும் வர்த்தமானியில் வெளியிடாமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகரம் கடைசியாக பிரவுன்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிஎல்சி நிறுவனம், 2021ஆம் ஆண்டு டிசம்பரில், நிலம் ஒன்றின் 99 வருட குத்தகைக்காக 114 மில்லியன் அமெரிக்க டொலர்கள…
-
- 1 reply
- 453 views
-
-
இரு அமைச்சுக்களை ஒன்றாக்கியது இதற்குத்தான்! ஆசிய வலயத்தின் முழுமையான விநியோக மற்றும் போக்குவரத்து மாற்றங்களை கருத்திற்கொண்டு இந்து சமுத்திரத்தின் விமான மற்றும் கப்பற்துறை கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்குரிய திட்டமிடல் அரசாங்கத்தின் 25 வருட அபிவிருத்தி திட்டத்திற்கு உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கொழும்பு – வடக்கு துறைமுகத்தின் 30 வருட அபிவிருத்தி திட்டத்தினை வெளியிடுவதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 1 reply
- 309 views
- 1 follower
-
-
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்பட்டால் மக்கள் வாய் இருந்தும் மௌனிகளாக இருப்பார்கள்: இராமலிங்கம் சந்திரசேகர் (Video) மக்களை அடக்கு முறைக்கு உள்ளாக்குகின்ற சட்டமாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் விளங்குகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழில் இன்று(23.04.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது மக்களின் பேச்சு சுதந்திரத்தை மறுதலிக்கின்ற மூர்க்கத்தனமான சட்டமாக பார்க்கப்படுகின்றது. இந்த சட்டமானது கருத்து சுதந்திரத்தை பறிக்கின்ற காவாலித்தனமான சட்டமாக காணப்படுகின்றது. …
-
- 0 replies
- 323 views
-
-
அருண் சித்தார்த் உள்ளிட்ட 5 பேருக்கு விளக்கமறியல் அருண் சித்தார்த் உள்ளிட்ட 5 பேர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது கடந்த 20ஆம் திகதி இரவு அருண் சித்தார்த் தலைமையில் பெண்கள் அடங்கிய 7 பேர் கொண்ட வன்முறை கும்பல் தாக்குதல் மேற்கொண்டது. பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் அருண் சித்தார்த், அவரது மனைவி உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 06 பேரையும் விசாரணைகளின் பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்களில் ஒருவருக்கு கடுமையான எச்சரிக…
-
- 5 replies
- 1.2k views
-
-
இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 400,000 ஆக உயர்வு ! NO COMMENTS இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் 20 வரை இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை 400,000 ஐ எட்டியுள்ளது, இது நாட்டின் சுற்றுலாத் துறையானது மீட்சியின் பாதையில் உறுதியாக இருப்பதைக் குறிக்கிறது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தற்காலிகத் தரவுகளின் படி ஏப்ரல் 01-20 வரையான காலப்பகுதியில் மொத்தம் 69,799 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளனர். முதல் மூன்று மாதங்களில் 335,679 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் ஜனவரி முதல் ஏப்ரல் 20 வரை இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 405,478 ஆக இருந்தது. …
-
- 0 replies
- 485 views
-
-
யாழ்ப்பாணம் -காரைக்கால் படகுசேவை -திடீரென ஒத்திவைப்பு யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் காரைக்காலுக்கும் இடையில் ஏப்ரல் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த பயணிகள் படகு சேவை இந்தியாவின் வேண்டுகோளின் பேரில் மே 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த படகு சேவையை பராமரிக்க குடிவரவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளை பணியமர்த்துவதற்கு தேவையான கட்டடங்கள் மற்றும் இதர உபகரண வசதிகளை வழங்க மேலதிக கால அவகாசம் தேவைப்படுவதால் படகு பயணத்தை மே 15ம் திகதி வரை ஒத்திவைக்க வேண்டும் என இந்தியா அறிவித்துள்ளது. இந்த படகு சேவை ஒரு தனியார் நிறுவனத்தால் நடத்தப்படவுள்ளது. மற்றும் ஒரு பயணத்திற்கு US$50 வசூலிக்கப்படுகிறது, அனைத்து வரி விலக்குகளும் உண்டு. ஒரு பயணி 100 கி…
-
- 0 replies
- 543 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம் மிரட்டல் விடுக்கின்றது – உறவுகள் கவலை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகத்தினால் தற்போது மிரட்டல் விடுக்கப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மூன்று தடவைகள் அறிவித்தும் அலுவலகத்திற்கு மதிப்பு கொடுக்கவில்லை என்றும் நான்காவது தடைவ அறிவித்து வரவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுப்போம் என மிரட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் ஓ.எம்.பி. அலுவலகத்தினால் வழங்கப்படும் நட்ட ஈடுட்டினை பெற்றுக்கொள்ளுமாறும் அதற்காக பிள்ளைகளையும் வங்கி கணக்கு இலக்கத்தையும் கொண்டுவரவும் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். ஒ.எம்.பி அலுவலகத்தினா…
-
- 0 replies
- 287 views
-
-
ஹெரோயின் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் விடுதலை : சவால் செய்கின்றார் சட்டமா அதிபர் இந்த மாத தொடக்கத்தில் கொழும்பு ட்ரயல் அட்-பார் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் தீர்மானித்துள்ளார். 196 கிலோகிராம் எடையுள்ள பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரை ஏப்ரல் 06 அன்று கொழும்பு ட்ரயல்-அட்-பார் விடுதலை செய்தது. https://athavannews.com/2023/1330662
-
- 0 replies
- 533 views
-
-
Published By: DIGITAL DESK 5 22 APR, 2023 | 04:47 PM (நா.தனுஜா) இலங்கையில் பொருளாதார நெருக்கடியை அடுத்து ஏற்பட்ட தொழில்வாய்ப்பு இழப்பு, உயர் உணவுப்பணவீக்கம், வரையறுக்கப்பட்டளவிலான உரம் மற்றும் எரிபொருள் விநியோகம் என்பவற்றின் விளைவாக வறுமை உயர்வடைந்திருப்பதுடன், அது எதிர்வரும் வருடங்களிலும் 25 சதவீதத்துக் குமேல் காணப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது. உலக உணவுத்திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்குரிய வருடாந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு: வெளிநாட்டுக்கையிருப்பு வீழ்ச்சி, விவசாய உற…
-
- 0 replies
- 462 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 22 APR, 2023 | 01:53 PM எந்தவொரு குடிமகனும் தமிழ் அல்லது சிங்கள மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் இருந்து சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் அனுராதா விஜேகோன் தெரிவித்துள்ளார். சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் அரசியலமைப்பில் அரச கரும மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு குடிமகன் இந்த நாட்டில் உள்ள அரசாங்க நிறுவனத்தில் சேவையைப் பெறும்போது, நபர் ஒருவர் தனக்கு தேவையான சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு சிங்களம் அல்லது தமிழ் மொழிகளில் கோரலாம். அந்த உரிமை அரசியலமைப்பில் உறுதிப்படுத்…
-
- 2 replies
- 407 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 22 APR, 2023 | 01:54 PM (எம்.மனோசித்ரா) திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் டில்லியுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். வேகமாக வளரும் இந்திய பொருளாதாரத்துடன் இலங்கையை இணைத்து இந்துமா சமுத்திரத்தில் கப்பல் , விமான பொருளாதாரத்தின் கேந்திர நிலையமாக உருவெடுக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மலேசியா, இந்தியா, மியன்மார் ஆகிய நாடுகளுக்கிடையிலான கடல் போக்குவரத்தில் திருகோணமலையை முக்கிய துறைமுகமாக மாற்றுவதே தனது நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். கொழும்பு துறைமுகத்தின் எதிர்வரும் 30 ஆண்ட…
-
- 2 replies
- 544 views
- 1 follower
-
-
இலங்கை விமானத்தில் மீண்டும் கோளாறு துபாய்க்கு புறப்பட்ட இலங்கை விமானத்தில் மீண்டும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை 06.27 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-225 விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 256 பயணிகள் மற்றும் 14 பணியாளர்கள் இருந்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சுமார் ஒரு மணி 06 நிமிடங்களின் பின்னர் விமானத்தின் உள்ளே குறைந்த காற்றழுத்தம் காரணமாக மீண்டும் திரும்பி நேற்றிரவு 07.33 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதையடுத்துஇ விமானத்தில் இருந்த பயணிகள் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு அ…
-
- 1 reply
- 285 views
-
-
பாராளுமன்றில் IMF விவாதம்; எதிர்க்கட்சிகள் பங்கேற்காது மொழிப் பிரச்சினையை முன்வைத்து தப்பித்துக்கொள்ள முயற்சி அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கை தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்காதென பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவாதம் எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறுமென கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் மொழிமாற்றம் செய்யுமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 520 views
-
-
Published By: DIGITAL DESK 5 22 APR, 2023 | 12:00 PM வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்தினுள் புகுந்து ரௌடிகள் வர்த்தகரை தாக்கியதில் வர்த்தகர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை (21) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக மூவர் அடங்கிய ரௌடி கும்பல் ஒன்று சிறுநீர் கழித்துள்ளனர். இதன் காரணமாக குறித்த வர்த்தக நிலைய வர்த்தகர் இவ்விடத்தில் சிறுநீர் கழிக்காது அருகில் உள்ள பொது கழிப்பறைக்கு செல்லுங்கள் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரௌடி …
-
- 1 reply
- 674 views
- 1 follower
-
-
இலங்கை அரசியல்வாதிகள் முட்டாள்களாக செயற்படுகிறார்கள் ! கோட்டாவுக்கு பொது அறிவு இல்லை ! – ஜனக ரத்நாயக்க இலங்கையின் அரசியல்வாதிகளை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கடுமையாக விமர்சித்துள்ளார். அரசியல்வாதிகள் முட்டாள்களாக செயற்படுகிறார்கள் என்று அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். மின் கட்டண உயர்வை ஆதரிக்க மறுத்த தம்மை பதவி நீக்கம் செய்ய எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அழுத்தம் கொடுத்து வருகிறார். எனினும், தன்னை நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் தேவைப்படும் 113 பெரும்பான்மையை பெற முடியாது என்று ரத்நாயக்க சவால் விடுத்துள்ளார். மின்சாரத்தின் தேவை வெகுவாகக் கு…
-
- 1 reply
- 516 views
-
-
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவு! உலகத்தையே அதிர்வுக்குள்ளாக்கிய ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன்(வெள்ளிக்கிழமை) நான்கு வருடங்கள் கடந்துள்ளன. உலக வாழ் கிறிஸ்தவ மக்கள், சமாதானத்தின் இறைவனாம் இயேசு கிறிஸ்த்துவின் உயிர்ப்பை கொண்டாடிக் கொண்டிந்த, இன்று போன்றதொரு தினத்தில் தான் அந்தக் கொடியச் சம்பவம் நிகழ்த்தப்பட்டது. 8.45 மணி முதல் 9 மணிவரையான அந்த நேரப்பகுதிக்குள் இலங்கைத் தீவின் 8 இடங்கள் குண்டுச் சத்தங்களினால் அதிர்ந்தன. 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, கத்தோலிக்க – கிறிஸ்தவ தேவாலயங்களையும் நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்குவைத்து பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் 269 பேர் க…
-
- 18 replies
- 1k views
-
-
22 APR, 2023 | 10:40 AM இலங்கை பொறுப்பான ஆட்சியாளர்கள் அற்ற நாடு என ஓமல்பே சோபிததேரர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் சம்பவம் இடம்பெற்று நான்குவருடங்களாகிவிட்டபோதிலும் அதற்கு பொறுப்பேற்க எவரும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு யார் காரணம் என்பதை கண்டறிவதற்கு தவறியுள்ளமை பௌத்த கோட்பாடுகளிற்கு எதிரான விடயம் என குறிப்பிட்டுள்ள ஓமல்பே சோபிததேரர் நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வது ஆட்சியாளர்களின் கடமை என புத்தர் போதித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/153458
-
- 3 replies
- 599 views
- 1 follower
-