ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143410 topics in this forum
-
நல்லது. மீண்டும் அந்தக் காலம் அரும்பியிருக்கிறது. ஈழத்தமிழர் நலனுக்காக ஒட்டுமொத்த தமிழகமுமே களம் இறங்கியிருக்கும் செய்திதான் அது. அம்மக்களின் நெடுங்காலப் போராட்டத்திற்கு ஆதரவாக ஆக்கபூர்வமாக என்ன செய்யப் போகிறோம் நாம்? என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி. என்னென்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்பதைக் காட்டிலும்…… என்னென்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதில் கவனத்தைக் குவித்தாக வேண்டிய வேளை இது. அது நாம் காலக்குதிரையை சற்று கழுத்தைத் திருப்ப அனுமதித்தால் மட்டுமே நடந்தேறக்கூடிய விசயம். முதலில், சமாதான மேசைகளில் பரிமாறப்பட இருப்பது ஈழத் “தமிழர்” குறித்ததான பிரச்சனை என்பது கவனத்துக்கு வருமேயானால்…… இந்தத் தமிழர்களது பிரச்சனைகள் குறித்து எந்தெந்தத் “தமிழரெல்லாம்” கூடி வி…
-
- 0 replies
- 1.8k views
-
-
தினமும் வீட்டை விட்டுக் கிளம்பும் முன் அருகிலிருக்கும் கடையில் செய்தித்தாள்களை லேசாக மேய்ந்துவிட்டுப் புறப்படுவது வழக்கம். அன்றும் அப்படித்தான் எதேச்சையாக நாளிதழைக் கையில் எடுக்கிறேன். நெஞ்சில் பேரிடி ஒன்று இறங்குகிறது. “இலங்கையில் தமிழர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்!” “தமிழ்க் கைதிகளை கொடூரமாகக் கொன்ற கோரம்!!” என விரிந்து கொண்டே போகிறது செய்தி. என்னை அறியாமல் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் கன்னத்தை நனைக்கிறது. வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த குட்டிமணி, ஜெகன், தம்பித்துரை உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் போராளிகளை அறை அறையாகச் சென்று தேடிப்பிடித்து நிராயுதபாணிகளான அவர்களை குத்திக் கொன்ற கொடூரமும்…….. உயிரிழந்தவர்களை இழுத்து வந்து அச்சிறையின் புத்தர் …
-
- 0 replies
- 1.2k views
-
-
மட்டகளப்பு மாவட்டத்தில் நாளை ஹர்த்தால் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக காவற்துறையின் பாதுகாப்பில் இருந்த இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்ட நிலையில் காத்தான்குடி பாலமுனைக் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பலர் கடத்தப்பட்டு காணாமல் போய் அல்லது கொல்லப்பட்டும் வருவதனை வெளி உலகிற்கு எடுத்துச் சொல்வதற்கும் இந்த ஹர்த்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்பேசும் மக்கள் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஹர்த்தால் அழைப்பு துண்டுப் பிரசுரம் அரசாங்க மற்றும் தனியார் அலுவலகங்கள், வியாபார ஸ்தலங்கள் என்பவற்றிற்கு தபால் மூலம் அனுப…
-
- 0 replies
- 1.4k views
-
-
வீரகேசரி வாரவெளியீடு - தமிழகத்தில் தற்போது இலங்கைத் தமிழ் மக்களுக்காக எழுந்துள்ள எழுச்சி யானது வெறும் தேர்தலை நோக்கியதல்ல. நாம் இலங்கையில் அல்லல்படும் தமிழ் மக்களுக்காகவே குரல் எழுப்புகிறோம் என்று தமிழக முதல்வரின் புதல்வியும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கேசரி வார இதழுக்கு வழங் கிய விசேட செவ்வியில் தெரிவித்தார். ""இலங்கையிலுள்ள தமிழர்களின் விவ காரம் உள்நாட்டு விவகாரம் என்பதை ஏற் றுக் கொள்கிறோம். ஆனால் அதற்காக நாம் ஒதுங்கியிருக்க முடியாது. நாஸி முகாம்களில் யூதர்களை ஹிட்லர் படுகொலை செய்த போது அதனை உள் நாட்டு விவகாரமென உலகம் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. அந்த வகையில் இலங்கையில் தமிழர்கள் பாதிக்கப்படு வது உள்நாட்டு விவகாரமாக இருந்தா லும் கூட அது குறி…
-
- 0 replies
- 913 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு கவிழும் நோக்கத்தில் செயல்படவில்லை என்று முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி விவரம்: போரை நிறுத்துவது சாத்தியமில்லை என்று அந்த நாட்டின் அதிபர் ராஜபக்ஷ கூறியிருக்கிறாரே? காலை பத்திரிகைகளில் அவ்வாறு செய்தி வந்துள்ளது. ஆனால், மாலை பத்திரிகைகளில் அவர் அப்படிக் கூறவில்லை என்று செய்தி வந்துள்ளது. திமுக எம்.பி.க்கள் அனைவரும் தாமாக முன்வந்து தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர். யாரையும் கட்சி வற்புறுத்தவில்லை. இலங்கையில் அமைதி ஏற்படுவதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? இலங்கையில் அமைதி ஏற்படுவதற்கு எத்தகைய வழிமுறையைக் கையாள வேண…
-
- 3 replies
- 1.8k views
-
-
தமிழக அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்றுக் கொண்டுள்ளனர் – கோதபாய: தமிழக அரசியல்வாதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு செயற்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறு குறித்த அரசியல்வாதிகளுக்கு புலிகள் லஞ்சம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தமது இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தமிழக அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கோதப…
-
- 5 replies
- 1.5k views
-
-
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி வரும் இலங்கை கடற்படையினரைக் கண்டித்து இலங்கை தூதரகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்ற மீனவ அமைப்பை சேர்ந்த 100 பேர் கைது செய்யப்பட்டனர். இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்துவதும், தாக்குதல் நடத்துவதும் தொடர் கதையாக உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகியுள்ளனர். இதை கண்டித்து அரசியல் கட்சியினர், மீனவர் அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர் முன்னேற்ற சங்கம், தென் இந்திய மீனவர் நலச் சங்கம் ம…
-
- 0 replies
- 845 views
-
-
"அல் ஜசிரா" தொலைக்காட்சி செய்தியாளர் பேர்ட்லி அண்மையில் வன்னி யுத்தகளத்திற்குச் சென்று சேகரித்த தகவலின்படி இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளின் இதயப் பகுதியை அடைவதற்கு இன்னும் 15 கிலோமீற்றர் தூரத்தைக் கடக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும் படையினரின் எந்த முனையில் இருந்து இந்த தூரம் என்ற விடயத்தை அவர் குறிப்பிடவில்லை. எனினும் இராணுவ பேச்சாளர் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல படையினர் கிளிநொச்சியை கைப்பற்ற இன்னமும் ஒன்றரை கிலோமீற்றரே இருப்பதாக குறிப்பிட்டுள்ளதை சண்டே டைம்ஸின் பாதுகாப்பு களத்தி;ல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் யுத்தக்களம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தரப்பு தகவலை தம்மால் பெறமுடியவில்லை என பேர்ட்லி குறிப்பிட்டுள்ளார். அமைச…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போதைய காலச் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் நான்காம் தலைமுறை யுத்த உபாயங்களைப் பயன்படுத்தி போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக லக்பிம நாளேட்டின் ஆய்வு தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை இராணுவம் மூன்றாம் தலைமுறை யுத்த தந்திரோபாயங்களை பயன்படுத்தி களத்தில் வெற்றிகளை ஈட்டி வருகின்ற போதிலும், யுத்தம் தவிர்ந்த ஏனைய விடயங்களில் அரசாங்கம் தோல்வியைத் தழுவியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வான்,தரை மற்றும் கடல்வழி மூலமாக முழுப்படைப்பலத்தையும் பயன்படுத்தி தொடர்ச்சியாக தாக்குல்களை மேற்கொள்வதே மூன்றாம் தலைமுறை யுத்த உபாயமாகும். யுத்த நடவடிக்கைகளுடன், சமய, கலாச்சார அரசியல் சக்திகளை இணைத்துக் கொண்டு இராஜதந்திர ரீதியில் போராட்டத்தை முன்னெடுப்படுப்பது நா…
-
- 0 replies
- 1.5k views
-
-
சென்னை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய தயாநிதி மாறன் முடிவு செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை நேரில் ஒப்படைக்க தமக்கு நேரம் ஒதுக்கி தருமாறு முதல்வர் கருணாநிதிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். திமுக சார்பில் மத்திய சென்னை தொகுதியிலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன். மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் அழகிரியுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பின் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அவரை நீக்க திமுக பொதுக்குழு முடிவு செய்தது. ஆனால் அதற்குள்ளாகவே தயாநிதி மாறன் தனது மத்திய அமைச்சர் பதவியை தாமே முன…
-
- 0 replies
- 950 views
-
-
புதுடெல்லி- கொழும்பு (ஏஜென்சி) தமிழர்கள் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி, தன்னிடம் தொலைபேசியில் பேசிய இலங்கை அதிபர் ராஜபக்சேவைஇ பிரதமர் மன்மோகன்சிங் கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக நேரில் விவாதிப்பதற்காக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்கிறார். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதை, மத்திய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங்கை இலங்கை அதிபர் ராஜபக்சே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி: பிரதமர் மன்மோகன் சிங்கை, இலங்கை அதிகர் ராஜபக்சே சனிக்கிழ…
-
- 0 replies
- 837 views
-
-
கே. இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட முடியாது. அது ஓர் இறைமையுள்ள அரசு. எனவே ஒரு வரையறைக்குள்தான் இந்தியா செயல்பட முடியுமென காங்கிரஸ் பேச்சாளர் அபிஷேக் சிங்வி கடந்த 15ம் திகதி கூறியிருக்கிறாரே? பதில் : கடந்த கால சம்பவங்களை அறியாமல் அபிஷேக் சிங்வி தன்னுடைய ஆசைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.இந்திய அரசு இலங்கை நாட்டு இறையாண்மையில் தலையிட முடிhயாது என்றால் எந்த அடிப்படையில் ராஜீவ் அவர்கள் இந்திய அமைதிப்படையை அங்கு அனுப்பினார்? இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எப்படி ஏற்படுத்தினார்? வடக்கு கிழச்கு மாகாணங்கள் ஒரே பகுதியாக இருக்க வேண்டும் என்கிற கருத்;தை அந்த ஒப்பந்தத்தில் எப்படிப் பதிவு செய்தார்? இந்த வரலாறு எல்லாம் தெரியாத அபிN|க் சிங்வி இன்று சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழினமும் ஒற்றுமையின் நிலைப்பாடும் - சாண்டில்யன் ஒற்றுமை என்பது, ஒரு குடும்பத்தின் / சமுதாயத்தின் / இனத்தில் வாழும் அங்கத்தவரினது கூட்டு முயற்சி. முதலாவதாக, ஒற்றுமை என்ற எண்ணம் / பார்வை, குடும்பத்திலிருந்துதான் உதிக்கவேண்டும். பிள்ளைகளை பெற்றோர் சரியாக வளர்த்தாலும், பிள்ளைகளுடைய வளரும் சூழல் நிலைகள் அவர்களைப் பாதிக்கலாம். ஒற்றுமையின்மை என்பது ஒரு இனத்தின் அங்கத்தவரிடம் எப்படி உருவாகின்றது / உதிக்கின்றது. இவைகளை அடையாளம் கண்டு, அப்படியான காரணங்களை எமது எண்ணத்திலிருந்து அழித்துவிட்டால், எமது எண்ணத்தில், எமது பழக்க வழக்கங்களிலிருந்து ஒற்றுமையின்மை என்ற குணாதிசியங்கள் முற்றாக அழிந்து விடும். தொழில் நுட்ப குறைகளை, மூலக் காரண ஆராய்வு செய்து, அவைகளை நிவிர்த்தி …
-
- 0 replies
- 1k views
-
-
http://vimbamkal.blogspot.com/2008/10/blog-post_19.html
-
- 0 replies
- 1.6k views
-
-
ஈழத்தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்ளுக்காகக் காலங்காலமாக "கவலை" தெரிவித்துக்கொண்டிருப்பவர்
-
- 0 replies
- 1.2k views
-
-
25 ஆண்டுகளுக்குப் பின்னர், தமிழகத்தில் உருவாகியுள்ள பேரெழுச்சி, ஈழப் போராட்ட வரலாற்றில் பெரும் மாறுதல்களைத் தோற்றுவித்துள்ளது. தடுத்து நிறுத்தும் தற்காப்புச் சமரினை முன்னெடுக்கும் விடுதலைப் புலிகள், அழித்தே தீருவோமென வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் தென்னிலங்கை மற்றும் இடம்பெயரும் மக்களென இறுக்க நிலையடைந்துள்ள களநிலைமைகள் மோசமடையும் போது தமிழக இன உணர்வலைகள் எழுந்து நிற்கின்றன. தமிழின அழிப்பிற்கு, படைக்கல உதவி புரிந்த இந்திய அரசின் மறைமுகத் தலையீடு, வவுனியா படைத்தளம் மீதான தாக்குதலின் போது அம்பலமானதால் தமிழக எழுச்சிக்கான அடித்தளம் தோற்றமுற்றது. இந்திய பொதுவுடமைக் கட்சியின் உண்ணா விரதப் போராட்டத்தினூடாக பல செய்திகள், தமிழ் நாட்டு மக்களின் கவனத்திற்கு கொண்டு செல…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழர் விரோத அணியில் கூட்டு இணையும் சக்திகள் [19 ஒக்டோபர் 2008, ஞாயிற்றுக்கிழமை 9:05 மு.ப இலங்கை]/td> ஈழத் தமிழருக்கு நியாயம் தேடிக் கொடுப் பதற்கான எழுச்சி - கிளர்ச்சி - தமிழகத்தில் பிரவாகம் எடுக்கத் தொடங்கியதுமே, தென்னிலங்கைச் சிங்க ளத்துக்காகக் காவடி தூக்கும் தமிழக சக்திகளும் தங் கள் பங்கு கைவரிசையை தம்பாட்டுக்கு ஆரம்பித்து விட்டன. அந்த வரிசையில் வழமைபோல, சென்னையி லிருந்து வெளியாகும் ‘த ஹிண்டு’ பத்திரிகையும் அதன் பிரதம ஆசிரியர் என்.ராமும் தங்கள் பங்கு கைங்கரியத்தை ஒப்பேற்றத் தொடங்கி விட்டனர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான தமிழகத்தின் எழுச்சிக் குரலை சகிக்க முடியாத ‘த ஹிண்டு’ பத்திரிகை ஒரு புறம் அந்த எழுச்சியை பயங்கரவாத இயக்கமான புலிகளுக்கு ஆதரவான கிளர்ச…
-
- 0 replies
- 1.4k views
-
-
வரவுசெலவுத் திட்ட பாதுகாப்பு நிதி மூலம் வடக்கை மீட்டு. 2009ஐ அமைதியின் வருடமாக மாற்ற அரசாங்கம் உத்தேசம். தேசிய பாதுகாப்பு செலவினங்களுக்கு மேலதிகமாக இம்முறை வரவு செலவுத்திட்டத்தில, சுகாதாரம், பெருந்தெருக்கள், விவசாய அபிவிருத்தி, கமத்தொழில்சேவை, தேசத்தை கட்டியெழுப்புதல், தோட்ட உட்கட்டமைப்பு துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பிரதிநிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். 2009 ஆண்டுக்கான துண்டு விழும் தொகையில் 5.8 வீதத்தை தேசிய உற்பத்திகள் மூலம் ஈடுசெய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க உள்ளார். பெருத் தெருக்கள் மற்றும் அபிவிருத…
-
- 1 reply
- 876 views
-
-
உள்ளுராட்சி திருத்த சட்டமூலத்தை எதிர்க்க SLMC - CWC என்பன தீர்மானித்துள்ளன: அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க உத்தேசித்துள்ள உள்ளுராட்சி திருத்த சட்டமூலத்தை எதிர்க்க ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பன தீர்மானித்துள்ளன.உள்ளுராட்ச
-
- 0 replies
- 689 views
-
-
பிரதமரின் வீட்டின் முன்பாக வெடி மருந்து கொண்டு சென்றார்களாம் நால்வர் கைது: களுத்துறை மாவட்டம் ஹொரண பிரதேசத்தில் உள்ள பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் இல்லத்திற்கு எதிரில், முச்சக்கர வண்டியில் வெடி மருந்தை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியையும், அவற்றை கொண்டு சென்றதாகக் கூறப்படும் 4 பேரையும் தாம் கைதுசெய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். 4.5 கிலோ கிராம் வெடி மருந்து, 4 ஜெலக்னைட் குச்சிகள், சிறிதளவு அமோனியம் என்பவற்றை கைப்பற்றியுள்ளதாக ஹொரணை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இவற்றை தாம் கடுவல பிரதேசத்திற்கு கொண்டு செல்விருந்ததாக கைதுசெய்யப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.
-
- 0 replies
- 911 views
-
-
ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் மறுக்கப்பட்டால் பாரிய பொருளாதார பின்னடைவு ஏற்படும் - ஜீ.எல்.பீரிஸ்: ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் மறுக்கப்பட்டால் பாரிய பொருளாதாரப் பின்னடைவு ஏற்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆடைத் தொழில் உற்பத்தியில் மட்டும் சுமார் 100,000 பேர் தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும் எனவும், மீன்பிடி, தோல் உற்பத்தி, மரக்கறி மற்றும் பழவகை ஏற்றுமதி வருமானத்திலும் பாரிய பின்னடைவு ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் மறுக்கப்பட்டால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 வீதம் குறைவடையக் கூடும் என தெரிவித்துள்ளார். 2007ம் ஆண்டில் …
-
- 0 replies
- 539 views
-
-
"அல் ஜசிரா" தொலைக்காட்சி செய்தியாளர் பேர்ட்லி அண்மையில் வன்னி யுத்தகளத்திற்குச் சென்று சேகரித்த தகவலின்படி இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளின் இதயப் பகுதியை அடைவதற்கு இன்னும் 15 கிலோமீற்றர் தூரத்தைக் கடக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும் படையினரின் எந்த முனையில் இருந்து இந்த தூரம் என்ற விடயத்தை அவர் குறிப்பிடவில்லை. எனினும் இராணுவ பேச்சாளர் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல படையினர் கிளிநொச்சியை கைப்பற்ற இன்னமும் ஒன்றரை கிலோமீற்றரே இருப்பதாக குறிப்பிட்டுள்ளதை சண்டே டைம்ஸின் பாதுகாப்பு களத்தி;ல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் யுத்தக்களம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தரப்பு தகவலை தம்மால் பெறமுடியவில்லை என பேர்ட்லி குறிப்பிட்டுள்ளார். அமை…
-
- 0 replies
- 1.5k views
-
-
கதிர்காமத்தில் சிறிலங்கா படையினரின் காவலரண் தாக்கியழிப்பு: ஒருவர் பலி [ஞாயிற்றுக்கிழமை, 19 ஒக்ரோபர் 2008, 09:20 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள கதிர்காமம் பகுதியில் சிறிலங்கா படையினரின் காவலரண் ஒன்று அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: கதிர்காமம் பகுதியில் சிறிலங்கா படையினரின் காவலரண் ஒன்று அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் தாக்குதல் அணியினால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். அக்காவலரணில் இருந்து ஆயுதங்களும் அடையாளம்…
-
- 0 replies
- 634 views
-
-
"போரில் எந்தவொரு பிரதேசத்தையும் கைப்பற்றுவதை விட அதைப் பாதுகாப்பதே முக்கியமானது. ஏனென்றால் அந்தப் போரின் வெற்றியை தக்க வைப்பதில் தான் தங்கியிருக் கிறது' என்று போரியல் வல்லுனர்களால் கூறப் படுவதுண்டு. இப்போது வன்னியல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையில் படைத்தரப்பு பெரும் பிரதேசத்தை கைப்பற்றியிருக்கின்ற போதும் அதைத் தக்கவைப்பதில் வெற்றி பெறுமாஎன்பது முக்கிய கேள்வியாக உள்ளது. காரணம், தக்கவைப்பதென்பது சுலபமான தல்ல. அதற்கென தனியான படைப்பிரிவுகள் தேவை. பாதுகாப்புக் கொள்கைகள் தேவை. தக்கவைத்ததை உறுதிப்படுத்துவதற்கு எதிர்த் தரப்பின் ஊடுருவல்களை முற்றாகக் கட்டுப் படுத்த வேண்டியது அவசியம். இந்தவிடயத்தில் அரசபடைகள் திணறுவதையே அண்மைய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. வன்ன…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை யுத்தம் உறுமுகிறது இந்தியா * ஆனால் முடிவு என்ன? விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கையை தடுத்துநிறுத்துவதற்கான இந்தியாவின் அரசியல் அழுத்தம் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தில் அதிகளவு மாற்றத்தை ஏற்படுத்தாது. ஏனெனில், ஆசியாவின் நீண்டகாலக் கிளர்ச்சிகளிலொன்றான இந்தப் பிரச்சினையை தன்னால் முடிவுக்கு கொண்டுவர முடியுமென்று இலங்கை அரசு அதிகளவுக்கு நம்புகின்றது. உள்நாட்டில் தமிழ் அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் 1980 களில் மேற்கொண்ட அனர்த்தத்தை ஏற்படுத்திய தலையீட்டை திரும்பவும் மேற்கொள்ள இந்தியா தயங்குவதுடன் இராணுவ நடவடிக்கையை இலங்கை சுதந்திரமாக முன்னெடுக்க விட்டுள்ளது. இந்த இராணுவ நடவடிக்கையானது ஜனாதிபதி மகிந்த ராஜப…
-
- 0 replies
- 882 views
-