ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
வன்னி மக்களின் இன்றைய நிலை.... யார் இருக்கா இவங்களுக்கு...??! புலம்பெயர்ந்த சொந்தங்களே உங்களை விட்டா யார் இருக்கா இவங்களுக்கு..??! எதிரியை விரட்டி அடிக்கும் பணியும் இம்மக்களை பாதுகாக்கும் பணியுமாக இரட்டைப் பணி புலம்பெயர்ந்தவர்களது பொறுப்பில். பொறுப்புணர்ந்து செயற்படுங்கள்..! விரைந்து செயற்படுங்கள்..! படங்கள்: http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26925
-
- 6 replies
- 1.9k views
-
-
2006 ஆம் ஆண்டு மாவிலாறு அணைக்கட்டுப் பிரச்சினை ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை 11,000 புலிகள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், 4,000 பேரே எஞ்சியுள்ளனர் எனவும் சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் நான்கு முனைகளில் வன்னிப்பகுதியில் படையினர் முன்னேறுவதாகவும், பூநகரியைக் கைப்பற்றி யாழ்ப்பாணத்திற்கு தரைப்பாதை திறப்பதுதான் முக்கிய நோக்கம் எனவும் கூறியுள்ளார்.. கொல்லப்பட்ட சிங்களப் படையினரின் தொகையைக் கூற மறந்துவிட்டார் போலுள்ளது (இன்னமும் எண்ணி முடியவில்லையோ!) 11,000 Tiger cadres killed, 4,000 remain: Army Chief About 11,000 Tiger guerrillas have been killed since the military launched its campaign to secure the Mavil Aru anicut in July…
-
- 10 replies
- 2.7k views
-
-
நான்காம்கட்ட ஈழப்போரில் சிறப்பு படை நடவடிக்கைகளுக்கான முக்கியத்துவங்கள் அதிகம். அரசின் படை நடவடிக்கைகளை பொறுத்தவரையில் கிழக்கு மீதான படை நடவடிக்கை மற்றும் வன்னியில் தற்போது மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைகளில் சிறப்பு படையினரின் செயற்பாடுகள் அதிகம். அதற்கேற்ப விடுதலைப்புலிகளின் தாக்குதல் உத்திகளும் வேறுபட்டவை, வான்படையை இந்த போரி அறிமுகப்படுத்திய விடுதலைப்புலிகள் ஆழஊடுருவும் சிறப்பு படை மற்றும் கரும்புலி அணிகளின் இணைந்த தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். வான்புலிகள் படைத்துறை மற்றும் பொருளாதார கேந்திரமையங்களை தொடர்ந்து தாக்கி வருகையில் அவர்களின் நடவடிக்கையுடன், பீரங்கி மற்றும் தரைப்படை சிறப்பு அணிகளை விடுதலைப்புலிகள் இணைத்து வருவது தற்போதைய போரியல் உத்…
-
- 1 reply
- 1.4k views
-
-
திருமலையில் இருவர் சுட்டுக்கொலை வீரகேசரி இணையம் 9/14/2008 11:43:01 AM - Description திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர். திருகோணமலை கப்பல்துறையைச் சேர்ந்த நாதப்பன் மற்றும் ராஜேந்திரன் என்ற இருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் சீன துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
- 0 replies
- 649 views
-
-
வவுனியாவில் இயங்கி வரும் வவுனியா கூட்டுப்படை தலைமையகத்தை (ஜோசப் முகாம்) மன்னார் தள்ளாடி பகுதிக்கு இடமாற்றுவது குறித்து பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து வருவதாக தெரியவருகின்றது. வவுனியா கண்டி வீதியில் அமைந்திருக்கும் கூட்டுப்படை முகாம் மீது கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை புலிகள் மும் முனைத் தாக்குதல்களை நடத்தினர். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன் ராடார் உட்பட இராணுவ தளபாடங்கள் சேதமடைந்தன. கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இந்த கூட்டுப்படை தலைமையகம் இயங்கி வருகிறது. பல நூறு ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட இந்த முகாமிற்குள்ளே விமானப்படை தளமும் ஓடு பாதையும் உள்ளன. வவுனியாவில் இயங்கி வரும் வவுனியா கூட்டுப்படை தலைமையகத்தை (ஜோசப் முகாம்) மன்னார் தள்ளாடி பகுதிக்கு இடமாற்றுவது க…
-
- 2 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (செப்.13) அதிகாலை 6 மணியளவில் களுவாஞ்சிகுடி அதிரப்படை முகாமில் இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். 29 வயதான ஜெயசிங்க என்ற அதிரடிப்படைச் சிப்பாயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் என்ன என்பது கண்டறியப்படவில்லை. இந்தத் தற்கொலைச் சம்பவம் குறித்து களுவாஞ்சிகுடி காவற்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=108
-
- 0 replies
- 978 views
-
-
வன்னியிலிருந்து அரசசார்பற்ற நிறுவனங்கள் வெளியேறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெயர்ந்த மக்கள் நடத்திய தொடர் வீதிமறியல் போராட்டங்களைத் தொடர்ந்து வன்னியிலிருந்து வெளியேறும் முயற்சிகளை அரசசார்பற்ற நிறுவனங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளன. மோதல்கள் உக்கிரமடைந்திருப்பதால் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கமுடியாதெனக் கூறி வன்னியில் செயற்பட்டுவரும் அரசசார்பற்ற நிறுவனங்களை வெளியேறுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை ஏற்று ஐ.நா. மனித உரிமை ஸ்தாபனங்கள் உட்பட பல அரசசார்பற்ற நிறுவனங்கள் வன்னியிலிருந்து வெளியேற ஆரம்பித்தன. எனினும், ஐ.நா. ஸ்தாபனங்கள் உள்ளிட்ட அரசசார்பற்ற நிறுவனங்களை வெளியேறவிடாது வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் பொதுமக்கள் வீதி மறியல் போரா…
-
- 0 replies
- 1k views
-
-
வவுனியாவில் நகரின் தென்பகுதியில் வன்னிப் பிராந்திய இராணுவத் தலைமையகம், விமானப்படைத் தளம் ஆகியவற்றை உள்ள டக்கியதாக அமைந்திருந்த ஜோசெவ் படைத்தளத்தின் மீது புலிகள் நடத்திய மூன்று முனைத் தாக்குதல் படைத் தரப்புக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. கடந்த செவ்வாயன்று (09) அதிகாலை வேளையில் புலிகளின் கரும்புலிக் கொமாண்டோக்கள் வன்னிப் படைத்தலைமையகத்தினுள் புகுந்து நடத்திய தாக்குதல், அதற்குத் துணையாக புலிகளின் வான்படை நடத்திய குண்டுவீச்சு, கிட்டு பீரங்கிப் படையணி நடத்திய அகோர ஆட்டிலறித் தாக்குதல் என்பன வவுனியாவையே கிலிகொள்ள வைத்தது. திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிலவு மறைந்துவிட இருள் கவ்விக் கொண்டது. அந்த இருளோடு இருளாக கரும்புலிக் கொமாண்டோ அணியொன்று வவுனியா நகருக்குத் தென…
-
- 1 reply
- 1.8k views
-
-
காரணம் எதுவுமின்றி தலைநகர் கொழும்பில் தங்கியிருக்கும் பெரும் எண்ணிக்கையிலானோரினால் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எவ்வித காரணமுமின்றி கொழும்பு காவற்துறைப் பிரிவில் அதிக எண்ணிக்கையிலானோர் தங்கியிருந்ததாகத் பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் 6950 பேர் எவ்வித காரணமும் இன்றி கொழும்பில் உள்ள தற்காலிக விடுதிகள் மற்றும் வீடுகளில் தங்கியிருந்ததாக பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைமை வழமைக்கு மாறானது, உண்மையில் இவ்வாறான சூழ்நிலைகளின் காரணமாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்படக் கூடும் என அவர் தெரிவித்துள்…
-
- 11 replies
- 2.1k views
-
-
பிரி"கேடி"யன் உதய நாணயக்காரனின் மிரட்டல்....... ஆதாரம் வீரகேசரி
-
- 3 replies
- 2.4k views
-
-
கிழக்கு மாகாண முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படுகிற பிள்ளையான் தனது மூத்த ஆலோசகர் டொக்ரர் விக்கினேஸ்வரனின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கலாநிதி விக்னேஸ்வரன் முன்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயலாளராகப் பதவி வகித்தவர். கிழக்கிற்கான மாகாண சபை அமைக்கப்பட்டவுடன் முதல் மூன்று மாதங்களுக்கு அதன் செயலாராக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது விக்னேஸ்வரன் கிழக்கு மாகாண முதலமைச்சரின் சார்பில் நிர்வாக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருக்க்pறார். கலாநிதி; விக்னேஸ்வரனுக்கு இந்தியாவுடன் உள்ள நெருங்கிய தொடர்பு காரணமாக அவருடைய பதவிக்காலம் நீடிக்கப்படக் கூடாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா எனப்படு…
-
- 0 replies
- 1.4k views
-
-
வன்னியிலிருந்து சர்வதேச தொண்டு நிறுவனங்களை உடனடியாக வெளியேற்றுவது இனக்குரூரத்தின் இன்னுமொரு உச்ச வெளிப்பாடாகும். சர்வதேச தொண்டு நிறுவனங்கள், தமிழ் மக்களை இடைநடுவில் கைவிட்டுச் சென்றால் அது பொறுப்பற்ற செயலாகும். இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; இலங்கையில் தமிழர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப்பிரதேசத்தில் சிங்கள அரசினால் கட்டவிழ்க்கப்பட்ட போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிவாரணப்பணி செய்துவந்த சர்வதேச தொண்டு நிறுவனங்களை வன்னிப்பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு சிங்கள அரசு கட்டளை விடுத்துள்ளது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இக்கட்டளையானது தமிழ் ம…
-
- 6 replies
- 1.3k views
-
-
இலங்கைப் போரில் இந்தியப் படை? இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு எதிரான யுத்தம், புதிய பரிமாணத்தை அடைந்திருக்கிறது. 'இலங்கை ராணுவம் தமிழர் பகுதி களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் ஒட்டுமொத்தத் தமிழர் பகுதிகளும் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். விடுதலைப்புலிகள் முற்றாக அழித்தொழிக்கப் படுவார்கள்' என்று தொடர்ந்து இலங்கை அரசு பிரசாரம் செய்து வருகிறது. இங்கே கிடைக்கின்ற செய்திகளும் ஒருதலைப் பட்சமானவையாகவே இருப்பதால், உண்மை நிலவரம் எதுவென்று நம்மால் தெரிந்துகொள்ள முடிவதில்லை. அதனால் இலங்கை அரசின் பிரசாரத்தை உண்மையென்று நாமும் நம்புகிற சூழல்! இதற்கிடையே, இலங்கையின் தலைநகரான கொழும்ப…
-
- 13 replies
- 2k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் இந்தியாவுக்கு சென்றுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இருவர் உயிரிழ்ந்துள்ளனர். நால்வர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 386 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சி பகுதியில் சிறிலங்கா வான்படை இடம்பெயர்ந்த மக்கள் மீது நடத்திய குண்டுத்தாக்குதலில் சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 418 views
-
-
யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டு வந்த மீன்பிடிப் படகுகள் மீது சிறிலங்கா கடற்படையினர் நேற்றிரவு தாக்குதல் நடத்தியதில் மீன்பிடிப்படகு முற்றாக நீரில் மூழ்கடிக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 475 views
-
-
சிறிலங்கா அரச படைகள் தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் வன்னிப்பிரதேசத்தின் மீது பெருமெடுப்பிலான படை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அனைத்துலக நிறுவனங்களின் வெளியேற்றம் மோசமான செயல் என்று முல்லைத்தீவு மேற்கு பொது அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 472 views
-
-
இந்தியக் கடல் எல்லையில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 7 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டதன் பின்னர் இவர்கள் காசி மேடு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த 7 மீனவர்களும் மாவட்ட ஆட்சியாளரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டனர். விசாரணைகளை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியாளர், இவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டதன் பின்னர், இன்று காலை இவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்தியச் செய்தி ஒன்று தெரிவித்துள்ளது. http://www.tamilwin.com/view.php?2aIWnfe0d...d436QV2b02ZLu3e
-
- 0 replies
- 943 views
-
-
படை நடவடிக்கை காரணமாக தென் தமிழீழத்தின் மூதூர் கிழக்கில் உள்ள கட்டைப்பறிச்சான்இ சேனையூர் கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் வீடுகளை உடைத்து ஜன்னல்கள்இ கதவுகள்இ ஓடுகள் போன்ற பொருட்களை சிறிலங்கா இராணுவத்தினர் எடுத்துச்செல்வதாக மக்கள் முறையிட்டுள்ளனர். குறித்த கிராம சேகவர் பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக திருகோணமலை செயலக அதிகாரிகளினால் நடவடிக்கை எடுக்கப்படுகின்ற போதும் இவ்வாறான திருட்டுச் சம்பவங்களில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன்இ துரைரட்ணசிங்கம் ஆகியோருடன் தொடர்பு கொண்டு கேட்டபோதுஇ வீடுகள் …
-
- 1 reply
- 656 views
-
-
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறிலங்காவில் தமிழ் ஈழம் மலரும்'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க. சார்பில் சென்னை வியாசர்பாடியில் நேற்றிரவு நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து ராமதாஸ் பேசுகையில், பா.ம.க. 7 ஆண்டுகளாக பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. எங்களை போல் எந்த கட்சியும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டது இல்லை. தி.மு.க. ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறோம். அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இலவச பொருட்களை கொடுப்பதை விட்டு விட்டு மக்களுக்கு நல்ல கல்வியை கொடுங்கள். நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள். வன்முறை கலாசாரம், கட் அவுட் கலாசாரம், காலில் விழும் கலாச…
-
- 8 replies
- 2.2k views
-
-
விடுதலைப் புலிகள் தலைவரின் வல்வெட்டித்துறை வீடு சிறிலங்கா இராணுவத்தினரால் இடித்து சேதம் [வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2008, 04:57 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] யாழ். வடமராட்சி வல்வெட்டித்துறைப் பகுதியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீடு நேற்று முன்நாள் நண்பகல் சிறிலங்கா இராணுவத்தினரால் இடித்து சேதமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்தப் பகுதி மக்கள் தனக்கு அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவரின் வீட்டுக்கு நேற்று முன்நாள் புதன்கிழமை நண்பகல் சென்ற சிறிலங்கா இராணுவ அணியொன்றே வீ…
-
- 14 replies
- 2.1k views
-
-
கஸ்டத்தை எதிர்நோக்கி உள்ள மிஹின் லங்கா விமான சேவையை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில் இம்முறை வரவுசெலவு திட்டத்தில் 2 ஆயிரம் மில்லியன் ரூபாவை கோரியுள்ளதாக விமான சேவை அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மிஹின் லங்கா விமான நிறுவனத்தின் புதிய தலைவராக ராஜா எதிரிசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவர் இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். அதேவேளை மிஹின் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக ஹேமலால் தல்கஸ்வத்த, இலங்கை பூமிபுத்ர அபிவிருத்தி வங்கியின் தலைவர் சரத் சில்வா, விமானப்படைத் தளபதி ரொஸான் குணதிலக்க, ஸந்தன லியபட்டபெந்தி, நிதியமைச்சின் சார்பில் கலாநிதி சமரதுங்க ஆகியோர் நியமிக்கப்பட்…
-
- 8 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் 4 பொலிஸார் காயம் 9/13/2008 10:28:50 AM - மட்டக்களப்பு வெலாவெளிப்பகுதியில் பொலிஸ் வாகனத்தை இலக்கு வைத்து இன்று சனிக்கிழமை காலை 9.40 மணியளவில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் 4 பொலிஸார் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் காயமடைந்த பொலிஸார் மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து இப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
-
- 4 replies
- 900 views
-
-
யாழ் குடாநாட்டில் நீண்டகாலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீடி.எம்.ஏ.தொலைபேசிச் சேவைகள் பகுதி பகுதியாக வழமைக்குத் திரும்பியிருப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புத் தரப்பினரின் அனுமதி பெற்ற சீ.டி.எம்.ஏ.தொலைபேசிப் பாவனையாளர்களின் சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டிருப்பதுடன், சில பகுதிகளில் பாதுகாப்புத் தரப்பினரின் அனுமதியைப் பெற்றுக்கொள்வதில் இழுபறிநிலை காணப்படுவதாக குடாநாட்டு மக்கள் கூறுகின்றனர். பொலிஸ் நிலையங்களில் அனுமதி பெறச் செல்லும்போது பொலிஸார் நாட்களை இழுத்தடிப்பதாக சீ.டி.எம்.ஏ. தொலைபேசி பாவனையாளர் ஒருவர் கூறினார். எந்தவித முன்னறிவுப்புக்களும் இன்றி யாழ் குடாநாடு மற்றும் மன்னார் பகுதிகளில் பயன்படுத்தப்பட்டுவந்த சீ.டி.எம்.ஏ.தொலைபேசிகள் யாவும் துண்டிக்…
-
- 1 reply
- 642 views
-