ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
கிழக்குப் பல்கலைக்கழகத்தை சிங்களப் பிரதேசத்திற்கு தரைவார்க்கும் நடவடிக்கைக்கு கிழக்குப் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் திரு. பத்மநாதன் ஒப்புதல் அளித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு.பந்மநாதன், விஞ்ஞானபீடாதிபதி திருமதி.தேவதாசன், வர்த்தக முகாமைத்துவ பீடாதிபதி அன்றூ ஆகிய மூவரும் தீடீரென கொழும்புக்குச் சென்றுள்ளனர். கொழும்பு சென்ற இவர்களுக்கும், சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் இரகசியப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. சந்திப்பின் போது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளாகம் ஒன்றை மொனராகலை மாவட்டத்தில் உள்ள புத்தல எனும் சிங்கப் பகுதியில் திறப்பதற்கு துணைவேந்த ஒப்புதல் அளித்துள்ளார். இச்சந்திப்பை நிறைவு செய்த இவர்கள், உள்ளுர் …
-
- 1 reply
- 1.1k views
-
-
வன்னி மக்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிதி சேகரிப்பு [சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2008, 12:09 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] போர் நடவடிக்கையினால் வன்னிபெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தங்கியுள்ள மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை உடனடியாக வழங்குவதற்கான நிதி சேகரிப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது சொந்த நிதியில் முதற்கட்டமாக சேர்த்த மூன்று இலட்சம் ருபாவை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவித்தனர். கத்தோலிக்க திருச்சபையின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கொழும்பில் தங்கியுள்ள யாழ். ஆயர் தோ…
-
- 0 replies
- 623 views
-
-
இலங்கையில் இராணுவத்துக்கு உதவியாக இந்திய இராணுவ வீரர்கள் மற்றும் பொறியியலாளர்கள் கடமையாற்றுவது தற்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது மத்திய அரசு தமிழ் மக்களுக்கு இழைக்கும் பெரும் துரோகமாகும். இலங்கையில் பசி பட்டினியால் தமிழர்கள் வாடுகின்றனர். ஆனால் இந்தியா இராணுவ வீரர்கள் மற்றும் இராணுவ தொழில்நுட்ப பொறியியலாளர்கள் ஆகியோரை இலங்கைக்கு அனுப்பி உள்ளது. இவர்கள் இலங்கை அரசின் கூலிப்படையாக செயற்படுகின்றன என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். அண்மையில் வவுனியா நகரிலுள்ள கூட்டுப் படை தலைமையகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் இரு இந்திய பொறியியலாளர்கள் காயமடைந்த சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிடுக…
-
- 0 replies
- 894 views
-
-
சிறீலங்கா அரசும், பிள்ளையானும் தம்மை ஏமாற்றியிருப்பதாகக் குற்றம் சுமத்தி, கிழக்கு மாகாண பட்டதாரிகள் இன்று இரண்டாவது நாளாகவும் உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சுமார் 300 வரையிலான பட்டதாரிகள் மட்டக்களப்பில் ஒன்றுகூடி நேற்று முதல் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு சிறீலங்கா அரசும், பிள்ளையானும் உரிய பதில் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தமக்கு அரசாங்கம் உறுதிமொழி வழங்கிய போதிலும், இதுவரை தமது பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை என உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டோர் சுட்டிக்காட்டினர். துணைப்படைக் குழுவின் துணைத் தலைவரும், கிழக்கின் முதலமைச்சருமான பிள்ளையான் தேர்தல் போட்டியிட்டபோது தமக்கு வாக்குறுதி வழங்கியபோதிலும், அந்த வாக்…
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் உள ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகக்கூடிய அபாயம் நிலவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ச்சியான யுத்தம், இடம்பெயர்வு போன்ற காரணிகளினால் சிறுவர்கள் பாரியளவில் மன உளைச்சலுக்கு உட்படக் கூடும் என சுட்டிக்காட்டப்படுகிறது. நல்லூரில் அண்மையில் நடைபெற்ற ஓவிய மற்றும் கைப்பணிக் கண்காட்சியொன்றின் படைப்புக்கள் மூலம் சிறுவர்களது பாதிக்கப்பட்ட மனோ நிலை வெளிப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நல்லூரைச் சேர்ந்த அரச சார்பற்ற தொண்டு நிறுவனமொன்று குறித்த கண்காட்சியை ஒழுங்கு செய்திருந்தது. அரசாங்கப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் அதிர்வு பாலர் மனதில் ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்திய…
-
- 0 replies
- 598 views
-
-
சிறீலங்கா படைகளில் ஏற்பட்டுள்ள ஆட்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கடுமையான ஆட்சேர்ப்பு இடம்பெற்று வருகின்றது. 60 ஆயிரம் பேர் வரையில் முப்படைகளுக்கும் இணைக்கப்பட்டிருப்பதால், தமது நாட்டின் வேலையில்லாப் பிரச்சினை 6 வீதமாகக் குறைவடைந்திருப்பதாக, சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. வன்னி களமுனைகளில் சிறீலங்கா படயினர் நாளாந்தம் கடுமையான இழப்புக்களை சந்தித்து வருகின்ற போதிலும், அவை பற்றி செய்திகள் முழுமையாக வெளியாகுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=108
-
- 0 replies
- 1.4k views
-
-
காலி சிறைச்சலையில் இடம்பெற்ற துப்பாகி பிரயோகத்தில் மூவர் உயிரிழப்பு வீரகேசரி இணையம் 9/12/2008 12:45:11 PM - காலி சிறைச்சாலையிலிருந்து தப்பி செல்ல முற்பட்ட கைதி மீது இடம்பெற்ற துப்பாக்க்கி பிரயோகத்தில் மூவர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிகின்றன.
-
- 0 replies
- 735 views
-
-
சிறிலங்கா இராணுவத்தின் பிரசார முகமூடியை கிழித்துள்ள வவுனியா தாக்குதல்: பி.இராமன் [புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2008, 09:04 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] சிறிலங்கா படையினரின் வவுனியா தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நேர்த்தியாக திட்டமிட்டு நடத்திய தாக்குதல் சிறிலங்கா இராணுவத்தின் பொய்ப்பிரசார முகமூடியை கிழித்தெறிந்திருக்கின்றது என்று இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பான றோவின் முன்னாள் பிரதிச்செயலரும் அனைத்துலக விவகார ஆய்வாளருமான பி.இராமன் தெரிவித்துள்ளார். வவுனியா தளம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் குறித்து அவர் எழுதியுள்ள பத்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: வடக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வ…
-
- 11 replies
- 2.9k views
-
-
வன்னியிலிருந்து வெளியேற வேண்டாம் எனக்கோரி கிளிநொச்சியில் ஐ.நா.நிறுனங்கள் முன்பாகத் திரண்ட பொதுமக்கள்! வன்னியிலிருந்து ஐ.நா.நிறுவனங்கள் உட்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்களை வெளியயேற வேண்டாம் எனக்கோரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்று கிளிநொச்சியிலுள்ள ஐ.நா. பணிமனைகள் முன்பாகத் திரண்டனர். இன்று காலை 6.00 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள யு.என்.எச்.சி.ஆர் நிறுவனப்பணிமனை மற்றும். உலக உணவுத்திட்ட நிறுவனத்தின் பணிமனை ஆகியவற்றின் முன்பாக திரண்டு நின்று தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். தற்போது நடைபெறும் படைநடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களும் ஏனைய பொதுமக்களுமாக உன்று திரண்ட பொது மக்கள் ஐ.நா.வின் வெளிநாட்டப்பிரதிநிதிகளிடம் தங்களில் அவல நிலையைக்கூறி அழுத காட்சினை…
-
- 8 replies
- 1.5k views
-
-
புலிகளுடன் “திருட்டுக் கல்யாணம்’ செய்துள்ள அரசியல்வாதிகளை கைது செய்ய வேண்டும். ஆனால் அரசு அவர்களை அழைத்து விசாரணை செய்வதுடன் மட்டும் விட்டுவிடுகின்றதென அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் (10) இடம்பெற்ற மன்னார் வளைகுடா எண்ணெய் அகழ்வாராய்ச்சி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுயிகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; புலிகளுடன் தொடர்புடையவரும் மனோகணேசன் எம்.பி.யை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் அழைத்து சில கேள்விகளை மட்டும் கேட்டு விட்டு விட்டுவிட்டனர். ஆனால் அவரோ இலங்கையிலுள்ள அனைத்து தூதுவராலயங்களுக்கும் சென்று ஒப்பாரி வைக்கின்றார். தனக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறுவதுடன் இந்த நாட…
-
- 0 replies
- 2.8k views
-
-
கொழும்பு, ஊறுகொடவத்தையில் தொடரூந்துப் பாதையில் மற்றொரு குண்டு வெடித்துள்ளது. இன்று இரவு 7:15 அளவில் இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் தெரியவரவில்லை. eurotv
-
- 7 replies
- 1.4k views
-
-
சிறிலங்காப் படைநடவடிக்கைகளுக்குக் கடுமையான பதிலடிகளை விடுதலைப்புலிகள் கொடுக்கும்போதும், அதனால் வரும் தோல்விகளை அவதானிகள் தவறெனச்சுட்டும் போதும், பெருமளவிலான இராணுவ ஆளணி இழப்புக்களோ அல்லது படைக்கல இழப்புக்களோ ஏற்படும் போதும், சிங்களப்பகுதிகளில் பேருந்துகளில்,பொது மக்களின் பாவனை அதிகமாகவுள்ள இடங்களில், குண்டுகள் வெடிப்பதும், சிங்களப் பகுதிகளில் இனந்தெரியாக் கொலைகள் நடைபெறுவதும் வழக்கமான ஒன்றாக இருப்பதைத் தொடர்ந்து அவதானிக்க முடிகிறது. இது ஏன்? இதற்கு என்ன காரணம்? இதன் சூத்திரதாரிகள் யார்? எனப் பலகேள்விகள் எழும்போது, அக் கேள்விக்களுக்கான பதில்களைத் தேடும் போது, சிறிலங்கா அரசின் மீதான சந்தேகங்களே அதிகம் வலுப்பெறுகின்றன. அந்தவகையிலேயே கடந்த இரு தினங்களில், புக…
-
- 0 replies
- 1.2k views
-
-
வனவிலங்குகளை பாதுகாக்கவும் அவற்றுக்கு சரணாலயங்களை அமைக்கவும் நடவடிக்கையெடுத்துள்ள அரசாங்கம் தமிழ் மக்கள் மீது, குண்டுகளை வீசுவதுடன் அவர்களின் வாழ்விடங்களையும் அழித்து வருகின்றதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கே. தங்கேஸ்வரி குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சுற்றாடல் இயற்கை வளங்கள் தொடர்பான திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; விலங்குகளுக்கு சரணாலயங்களையும் தாவரங்களுக்கு பூங்காக்களையும் அமைத்துக் கொடுக்கும் அமைச்சர்கள் வன்னியில் அகதிகளாக இடம்பெயர்ந்து வாழ்வதற்கு கூடாரங்களின்றியும் உண்பதற்கு உணவின்றியும், உயிருக்குப் போராடும் தமிழ் மக்கள் மீது மனிதாபிமானம் காட்டாத…
-
- 0 replies
- 1.8k views
-
-
யுத்த நடவடிக்கைகளில் வெளிநாட்டு படையினர் சம்பந்தப்படவில்லை - அரசாங்கம் அறிவிப்பு வீரகேசரி நாளேடு 9/11/2008 9:07:17 PM - இலங்கையில் நடைபெறும் யுத்த நடவடிக்கைகளில் இந்திய படையினரோ, வெளிநாட்டு படையினரோ சம்பந்தப்படவில்லை. எனினும், தேசிய பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு அயல் நாடான இந்தியா அதிநவீன ராடர் கருவியை வழங்கியமையையிட்டு இந்தியாவுக்கு அரசாங்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். வன்னியிலிருந்து சர்வதேச தொண்டு நிறுவனங்களை வெளியேறுமாறு கோரப்பட்டமை தற்காலிக ஏற்பாடாகும். அப்பிரதேசத்தில் நிலைமை வழமைக்கு திரும்பியதன் பின்னர் பணிகளை மேற்கொள்வதற்கு தொண்டு நிறுவனங்களுக்கு இடமளிக்கப்படும் என…
-
- 9 replies
- 1.9k views
-
-
வவுனியா படைத் தலைமையகம் மீதான தாக்குதல் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கான தொடக்கப்புள்ளி என, தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் ஐரோப்பிய தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார். படைத்தளத்திற்குள் நுழைந்த கரும்புலிகள் றாடர் கருவியை தாக்கியழித்த பின்னர், வான் புலிகளின் வானூர்திகளை றாடரில் அவதானித்திருப்பதாக சிறீலங்கா படையினர் கூறிவருவது வேடிக்கையான விடயம் எனவும் அவர் கூறினார். வவுனியாவில் இருந்து வன்னிக்கான சிறீலங்கா படைகளின் தலைமையகம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் தொடர்பாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்தார் http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=109
-
- 3 replies
- 3.3k views
-
-
வன்னி மக்களுக்காக வவுனியாவில் அமைக்கப்படும் முகாம்கள் குறித்து கசிந்துள்ள திடுக்கிடும் தகவல்கள்! வன்னியிலுள்ள மக்களை வவுனியாவிற்குள் வரவழைப்பது தொடர்பாகவும் அங்கு அம்மக்களை தங்கவைப்பதிற்கு மூன்று முகாம்களை அமைப்பது தொடர்பாகவும் சிறிலங்காப்படைத்தரப்பு அறிவித்துள்ளதன் உள்நோக்கம் மற்றும் பின்னணித்தகவல்கள் தற்போது வெளிவரத்தொடங்கியுள்ளன. வவனியாவிற்குள் வரவழைக்கப்படும் வன்னி மக்களை தங்கவைப்பதற்காக வவுனியாவில் மூன்று இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமடு சிதம்பரபுரம் செட்டிக்குளம் ‘மெனிக்பாம்’ ஆகிய மூன்று இடங்களே தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஓமந்தையை மையப்படுத்தி இன்னுமொரு முகாம் அமைக்கவும் படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது. வன்னியிலிருந்து வவுனியாவிற்குள் ப…
-
- 0 replies
- 1.9k views
-
-
வன்னியிலிருந்து கடந்த புதன்கிழமை சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் வெளியேறியுள்ள நிலையில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மாத்திரம் தொடர்ந்தும் ஓமந்தை சோதனைச் சாவடியிலும், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கிளிநொச்சியிலும் தமது பணிகளைத் தொடரும் என சங்கத்தின் பேச்சாளர் அலெக்சாண்ட்ரா மதிஜேவிக் தெரிவித்தார். இது தொடர்பாக அரசாங்கத்துடன் ஓர் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். “ நாம் தொடர்ந்தும் கிளிநொச்சியில் தங்கியிருப்போம். இந்தத் தீர்மானத்தினை எமக்குள்ள உரிமையின் மூலமும், அரசாங்கத்துடனான உடன்பாட்டின் மூலம்; எடுத்துள்ளோம். தொடர்ந்தும் எமது செயற்பாடுகளை நடுநிலையாக மேற்கொள்வோம்” என்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார். பாதுகாப்பு…
-
- 0 replies
- 700 views
-
-
அரசாங்கத்தின் பொய்ப்பிரசாரமும் பித்தலாட்டமும் புலிகளின் விமானத் தாக்குதலினால் அம்பலம்-ஐ.தே.க. கருத்து; வீரகேசரி நாளேடு 9/12/2008 8:43:26 AM - வெளிநாட்டுப் படைகள் இலங்கையில் இல்லை என்று அரசாங்கம் அடித்துக் கூறியது. ஆனால், வவுனியா கூட்டுப் படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலில் இந்தியப் படையைச் சேர்ந்த தொழில்நுட்பவியலாளர்கள் இருவர் காயமடைந்துள்ளனர். இதனை இந்தியாவும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதிலிருந்து அரசாங்கத்தின் பொய்ப் பிரசாரமும் பித்தலாட்டமும் அம்பலமாகியுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்க பண்டார தெரிவித்தார். புலிகள் 6 தடவைகளே விமானத் தாக்குதலை நடத்தியதாகவும் விமானப் படையினர் 6 ஆயிரம் தடவை தா…
-
- 0 replies
- 956 views
-
-
புகலிடம் கோருவோர் தொடர்பான ஐரோப்பிய கொள்கை குறித்து செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மாநாட்டில், உலகெங்கும் அச்சுறுத்தல்களுக்குள்ளாகிய
-
- 0 replies
- 514 views
-
-
மொழியும் இன்றய தமிழர் பண்பாடுகளும் - சாண்டில்யன் அன்றய காலத்தினில் அதாவது மனித வாழ்க்கை ஆரம்பமாகிய காலத்தினில் ஒரு தலைவன் உருவாகி ஒரு சமுதாயத்தை உருவாக்கி அதற்கு தானே அரசனென்று பிரகடனப்படுத்தி இனங்கள் உருவாக்கப் பட்டிருக்கின்றன. நாளடைவில் மொழிகள் மேம்படுத்தப்பட்டு தம் மொழிதான் சிறந்ததென்று இனத்தலைவர்கள் தம்பட்டம் அடித்தார்கள், அடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதற்காக போராடியும் இருக்கின்றார்கள். மொழியென்பது ஒருவருக்கொருவர் உரையாடுவதற்கு தொடர்பு கொள்ளும் தொட்டு அறியக்கூடிய சின்னங்கள். ஆதி காலத்தினில் ஒரு சில இனங்கள் உரையாடுவதற்கு படங்களை வரைந்தார்கள். மனிதர்கள் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகள் அவசியம். அத்தோடு முன்னேற்றத்திற்கு விஞ்ஞானம் அவசியம். இதன் அடிப்படையில் ஐ…
-
- 4 replies
- 1.4k views
-
-
வவுனியா தாக்குதலில் வீரகாவியமான கரும்புலிகளுக்கு தேசியத் தலைவர் வீரவணக்கம் [வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2008, 05:34 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியாவில் உள்ள சிறிலங்கா படைத்தள மையத்தில் கதுவீ (ராடர்) நிலையம் அழிப்பு மற்றும் படைத்தள அழிப்பு நடவடிக்கையில் தம்மை ஆகுதியாக்கி வீரகாவியமான கரும்புலி மாவீரர்களுக்கு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வீரவணக்கம் செலுத்தியுள்ளார். பிரத்தியேகமாக ஒழுங்கமைப்பட்ட இடத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார். வன்னி சிறிலங்கா படை நடவடிக்கை தலைமையகத்துக்குள் ஊடுருவி சிங்கள படைகளின் அதிஉயர் கதுவீ (ராடர்) கண்காணிப்பு நிலையத்தை அழிப்பு நடவடிக்…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஈழத்து இசை உலகில் நாதஸ்தவரச் சக்கரவர்த்திகளில் ஒருவரான வி.கே.கானமூர்த்தி (வயது 60) நேற்று முன்நாள் இரவு யாழ்ப்பாணத்தில் காலமானார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 752 views
-
-
மட்டக்களப்பு கிரானில் புலிகளின் தாக்குதலில் 4 விசேட அதிரடிப்படையினர் பலி, மூவர் காயம் கிரானில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது கிளைமோர் தாக்குதல்: 4 பேர் பலி; 3 பேர் காயம் [வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2008, 04:03 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிரான் பிரதேசத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கிரான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கூழாவடி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை முகாமிலிருந்து சுற்றுக்காவல் நடவடிக்கைக்காக சிறப்பு அதி…
-
- 0 replies
- 778 views
-
-
வன்னி மக்களின் அவலங்களுடன் கரையும் சுமைகள் - த.தமயா - இலங்கையின் ஜனநாயக ஆட்சிமுறையானது தமிழ்மக்களின் அபிலாசைகளுக்கு முற்றிலும் வேறுபட்டதொன்றாகவே காணப்படுகின்றது. ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலப்பகுதியில் தமிழனுக்கு பயங்கரவாதி எனும் முத்திரை குத்தப்பட்டு தமிழ் மக்களின் சொத்துக்கள் யாவும் சூறையாடப்பட்டு அவர்கள் இரத்த வெள்ளத்தில் மிதக்க வைக்கப்பட்டார்கள். அவருடைய ஆட்சியை விட மிகவும் கொடுங்கோலான ஆட்சி முறையையே இன்றைய மகிந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. நீதி கேட்டுப் போராடி வருகின்ற தமிழ் மக்களின் முதுகில் ஏறி எதுவித மனிதநேயமுமின்றி மகிந்தரின் நயவஞ்சக ஆட்சி அவர்களை நசுக்கிக் கொண்டிருக்கின்றது. தமிழ் மக்கள் எங்குமே சுதந்திரமாகவும் நிம்…
-
- 0 replies
- 573 views
-
-
இனங்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துமாறு கோரும் இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் ஜந்து நாள் மாநாடு எதிர்வரும் வியாழக்கிழமை (18.09.08) சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இடம்பெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 487 views
-