ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
இலங்கை அரசாங்கம் சர்வதேச யுத்த சட்டங்களுக்கு புறம்பான வகையில் இராணுவ முன்நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் தெரிவித்துள்ளது. சிவிலியன் இலக்குகள் மற்றும் சிவில் காரியாலங்களை இலக்கு வைத்து விமானப்படையினரால் மேற்கொள்ளப்படும் வான் தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் தாயகப் பிரதேசத்தில் அமைந்துள்ள சிவில் காரியாலங்கள் மீது அரச படையினர் தாக்குதல் மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவத் தலைமையகம் மற்றும் அரசியல் பணிமனை ஆகியவற்றின் மீது விமானப்படையினர் அண்மையில் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். வன்;னியில் இடம்பெயர்ந்து அல்லலுறும் சிவிலியன் நலன்புரி ச…
-
- 0 replies
- 1.4k views
-
-
சென்னை(ஏஜென்சி) 9 அக்டோபர் 2008 நாளை நடைபெற உள்ள சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் கூட்டத்தில்இ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை நாடு கடத்தும் கோரிக்கையை எழுப்ப வேண்டுமென்று சிபிஐக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்ததாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்குத் தொடர்பாக விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனும்இ அந்த இயக்கத்தின் உளவு பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும் தேடப்படுபவர்கள் ஆவர். அவர்கள் இருவரையும் நாடுகடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் நடைபெறவுள்ள இன்டர்போல் கூட்டத்தில் எழுப்ப வேண்டுமென்று சிபிஐக்கு…
-
- 12 replies
- 3.9k views
-
-
இப்போது வன்னியில் நடை பெறும் போரை நிறுத்தி நாட்டில் சமாதானச் சூழல் உருவாகுவதற்கு உடன் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்த பிரிட்டிஷ், நோர்வே தூதுவர்களிடம் மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டது. பிரிட்டிஷ் தூதுவர் பீற்றர் ஹைஸ், நோர்வே தூதுவர் ரோர் ஹட்டறிம், அகதிகளுக்கான ஐ.நா.தூதரக வெளிக்கள அதிகாரி ஈடா சுகத் ஆகியோர் கொண்ட ராஜதந்திரிகள் குழு யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளது. கடந்த ஒரு வருடத்துக்கு பின்னர், யாழ்ப் பாணத்துக்கு வருகை தந்துள்ள ராஜதந் திரிகள் குழு இதுவாகும். இக்குழு நேற்றுப் பலரையும் சந்தித்து குடாநாட்டு நிலை மையைக் கேட்டறிந்தது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இ.த.விக்ன ராஜா, யாழ்.அரச அதிபர் க…
-
- 0 replies
- 863 views
-
-
http://vimbamkal.blogspot.com/2008/10/bbc-...n-north-of.html
-
- 0 replies
- 1.1k views
-
-
கொழும்புக்குள் நோயாளர்களாக நுழையும் தற்கொலைதாரிகள்: அமைச்சரவை சகாக்களிடம் மகிந்த தகவல் [வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2008, 08:04 மு.ப ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா தலைநகர் கொழும்புக்குள் நோயாளர்களாக புலிகளின் தற்கொலைதாரிகள் நுழைவதாக தனது அமைச்சரவை சகாக்களிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்ற காபினட் அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் கூறியதாவது: புலிகளின் தற்கொலைதாரிகள் முதலில் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர். பின்னர் தங்களை கொழும்பு தேசிய மருத்துவமனைகளுக்கு மாற்றுமாறு அவர்கள் கோருகின்றனர். பின்னர் மருத்துவர்களின் சான்றிதழ்களுடன் அவர்கள் கொழும்பு மருத்துவமனையில் சேர்ந்து கொள்கின்றனர். …
-
- 0 replies
- 764 views
-
-
சந்திரிகாவுக்கு சிறிலங்கா தலைமை நீதிமன்று தண்டத்தொகை விதித்தது [வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2008, 08:11 மு.ப ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவின் பதவிக்காலத்தில் பத்தரமுல்ல பகுதியில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதை சிறிலங்கா தலைமை நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளதுடன் தண்டத்தொகை செலுத்தவும் சந்திரிகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. பத்தரமுல்லவில் 225 ஏக்கர் நிலத்தை ரொணி பீரிஸ் என்பவருக்கு ஒதுக்கீடு செய்ய சந்திரிகாவின் பதவிக்காலத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சந்திரிகாவின் அதிகார முறைகேட்டின் மூலம் இந்த நில ஒதுக்கீடு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறி ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரிகளான சுகதபால மெண்டிஸ், ராஜா சேனநாயக்க ஆகிய இருவரும…
-
- 0 replies
- 623 views
-
-
ஜானக பெரேரா மரணத்துக்கு கோத்தபாயதான் பொறுப்பு: ஐ.தே.க. குற்றச்சாட்டு [வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2008, 08:16 மு.ப ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்காவின் முன்னாள் தரைப்படைத் தளபதி ஜானக பெரேராவின் மரணத்துக்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சதான் பொறுப்பு என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறியதாவது: ஜானக பெரேராவின் பாதுகாப்பு தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது ஜானகவுக்கு எதுவித உயிராபத்து அச்சுறுத்தலும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவில் குறிப்…
-
- 0 replies
- 623 views
-
-
மெல்பேர்ண், கன்பராவுக்கு சிறிலங்காவின் வெளிவிகார அமைச்சர் ரோகித போகல்லகமா வருகை செய்யவுள்ளார். சிறிலங்கா அரசு தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையையும், வன்னியில் இருந்து ஐ.நா அமைப்புக்களை வெளியேற்றியமையும் , நியாயப்படுத்தவும் அவுஸ்திரெலியாவுக்கு வருகிறார் . நேற்று சிறிலங்கா அரசின் பிரச்சாரத்தினால் ஜானக பேரேராவின் மறைவிற்கு அவுஸ்திரெலியா வெளிவிகார அமைச்சர் ஸ்ரிபன் ஸ்மித் கண்டனம் தெரிவித்தது தெரிந்ததே. http://www.tamilsydney.com/content/view/1452/37/ http://www.tamilsydney.com/content/view/1449/37/
-
- 0 replies
- 700 views
-
-
http://img379.imageshack.us/my.php?image=ammanamvh4.jpg லப்டினன் கோணல் கருணா அம்மணம் யாரிந்த தமிழ் அண்ணை?? மஹிந்த? கோத்தபய்யா?? நன்றி வீரகேசரி
-
- 2 replies
- 1.8k views
-
-
அமெரிக்காவிலுள்ள தமிழர்ளை உள்ளடக்கிய 'ஒபாமாவுக்கான தமிழர்கள்' என்ற அரசில் செயற்பாட்டுக் குழுவானது ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான பராக் ஒபாமாவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருக்கிறது. அமெரிக்காவுக்கு தமிழ்நாடு மற்றும் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் அமெரிக்காவில் பிறந்த தமிழர்களை உள்ளடக்கியதே இந்தக் குழுவாகும் அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக ஒபாமாவே தேர்ந்தெடுக்கப்படுவாரென இந்தத் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாகவும் அவர் கவனம் செலுத்துவாரென அவர்கள் கருதுவதாக இணையத்தளமொன்றில் நேற்று புதன் கிழமை குறிப்பிடப்பட்டுள்ளது. ஓபாமா ஜனாதிபதியானால் இலங்கை விடயம் த…
-
- 2 replies
- 1.8k views
-
-
தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் டக்ளஸ் சபையில் கடும் வாய்ச்சண்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையே கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதனால் சபை சிறிது நேரம் அல்லோலகல்லோலப்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்டநீடிப்பு விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவரது பேச்சில் குறுக்கீடு செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீகாந்தாவின் கருத்துகளுக்கு எதிரான கருத்துக்களை கூறிக்கொண்டிருந்தார். ஸ்ரீகாந்தா எம்.பி.டக்ளஸின் கருத்துகளை சாட்டை செய்யாமல் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், ஒருகட்டத்தில் …
-
- 9 replies
- 2.7k views
-
-
நோர்வே மற்றும் பிரிட்டன் ஆகிய நாட்டுத் தூதுவர்கள் இன்று யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். நோர்வே தூதுவர், பிரித்தானிய தூதுவர் ஆகியோருடன் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினது இலங்கைக்கான வெளிக்கள பிரதிநிதி ஈடா சுவத் பயணஞ் செய்துள்ளார். விமானமூலம் பலாலியைச் சென்றடைந்தவர்கள் பல தரப்பினருடனும் கலந்துரையாடல் நடத்தியுள்ளனர். மேலும் இவர்கள் யாழ்ப்பாண மேல்நீதிமன்றத்திற்கு சென்று, மேல்நீதிமன்ற நீதிபதியை சந்திந்துள்ளனர். உயர்பாதுகாப்பு வலயங்களில் சிவிலியன்களைக் குடியமர்த்துதல் மற்றும் சட்டம் ஒழுங்கு என்பனவற்றை பேணுதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. tamilwin.com
-
- 0 replies
- 1.8k views
-
-
http://vimbamkal.blogspot.com/2008/10/blog-post.html
-
- 1 reply
- 3.7k views
- 1 follower
-
-
சென்னையில் ம.க.இ.க. ஆர்ப்பாட்டம் [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 08:23 பி.ப ஈழம்] [ந.ரகுராம்] சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவைக் கண்டித்து மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற அமைப்பினர் சென்னையில் இன்று புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைக் கண்டித்தும், இனப்படுகொலையை நடத்தும் சிறிலங்காவுக்கு இந்தியா ஆயுதங்கள் மற்றும் இராணுவப் பயிற்சி வழங்குவதைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. புதினம்
-
- 0 replies
- 926 views
-
-
தமிழக முதல்வருக்கு நோர்வே தமிழ்ச் சங்கம் நன்றி [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 08:26 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] சிங்கள அரசால் இனப்படுகொலைக்குள்ளாகி ஆதரிக்க யாருமற்று இருந்த ஈழத் தமிழருக்கு ஆறுதலளிக்கும் வகையில் நிலைப்பாடு மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நோர்வே தமிழ்ச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. நோர்வே தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: பெறுநர்: முதல்வர் தலைமைச் செயலகம் சென்னை பெரும் மதிப்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கட்க்கு! ஐயா!! ஆதரிக்க யாருமற்று நாளாந்தம் சிறிலங்கா பேரினவாத சிங்கள அரசினால் இனப்படுகொலை செய்யப்படும் எம் தமிழ் மக்களின் துயர் தாங்காது தாய் தமிழகத்தின் தலைமகனாகிய …
-
- 0 replies
- 647 views
-
-
வன்னிப் பகுதியில் அதிகரித்திருக்கும் மோதல்களால் கிளிநொச்சி நகரப் பகுதியிலிருந்து அனைத்துப் பொதுமக்களும் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் தலைமையாகக் கொண்ட மனித நேய அமைப்புக்களின் ஒன்றியம் வெளியிட்டுள்ள இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி நோக்கிய அரசாங்கப் படைகளின் வான் தாக்குதல்கள் மற்றும் எறிகணைத் தாக்குதல்களால் பல்வேறு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் தங்கியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்பொழுது முல்லைத்தீவை நோக்கி இடம்பெயர்ந்திருப்பதாக மனிதநேய அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. “பெரும்பாலும் கிளிநொச்சியில் தங்கியிருந்த அனைவரும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்துள்ளனர்” என அந்த ஒன்றியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு…
-
- 3 replies
- 2.3k views
-
-
தமிழகத்து அனைத்து அரசியல் கட்சி தலைமைகளுக்கு நன்றி: விடுதலைப் புலிகளின் அரசியல்துறை [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 06:53 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] போர் வெறி பிடித்த சிங்கள ஆட்சியாளர்களின் இராணுவ பிடிக்குள் சிக்கி தவிக்கும் ஈழத்தமிழர்களுக்கும் அவர்களின் போராட்டத்துக்கும் ஆதரவாக தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுசேர்ந்து எழுச்சி கொண்டிருப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நன்றி தெரிவித்துள்ளனர். கட்சி பேதங்களுக்கு அப்பால் தமது தமது தொப்புள் கொடி உறவுகளின் உரிமை போருக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தின் சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்திருப்பதை வரவேற்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறை விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அரசியல்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள…
-
- 3 replies
- 1.3k views
- 1 follower
-
-
வடபகுதியில் நடைபெற்றுவரும் மோதல்களில் விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டாலும் இலங்கையில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெற்றுவரும் மோதல்கள் முடிவுக்கு வராது என இராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சி மீது அரசாங்கப் படைகள் தாக்குதல்களை நடத்தியிருப்பதானது கடந்த 13 வருடங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவு எனவும் 1995ஆம் ஆண்டுக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் பின்னடைவுகளைச் சந்தித்து வருவதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். விடுதலைப் புலிகளின் முக்கிய ஆயுதமான தற்கொலைக் குண்டுத் தாக்குதல் அவர்களுக்குப் பலமாக இருப்பதாகவும் அந்தப் பலம் இன்னமும் அழிக்கப்படாததால் முன்னேறிச் செல்லும் இராணுவத்தி…
-
- 4 replies
- 3k views
-
-
சண்டிலிப்பாய் சீரணி நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் தேர்முட்டிக்குள் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டவர்களில் மூவர் மானிப்பாய் பொலிஸாரால் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 1ஆம் திகதி சண்டிலிப்பாய் சீரணி நாகம்மாள் ஆலயத்தின் தேர்முட்டியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஒருதொகுதி ஆயுதங்களை இராணுவத்தினர் மீட்டிருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள், ஆலய பரிபாலனசபை உறுப்பினர்கள் உட்பட 11 பேர் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டவர்கள் மல்லாகம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய மானிப்பாய் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டனர். இவர்களில் மூவர் காயங்கள் காரணமாக நீதிமன்ற உத்தரவுக்கமைய யாழ் போதனா வைத்த…
-
- 2 replies
- 2.2k views
-
-
இடம்பெயர்ந்த மக்களை நேரில் சென்று சந்தித்தார் தேசியத் தலைவர் [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 03:16 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா படையினரின் தாக்குதல்களால் இடம்பெயர்ந்து அவலப்படும் மக்களை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் நேரில் சந்தித்து அவர்களுக்கான உதவிகளை வழங்கும் பணிப்புரை வழங்கினார். சிறிலங்கா படையினரின் தாக்குதல்களால் பெருமளவில் மக்கள் இடம்பெயர்ந்து அவலப்படும் சூழ்நிலை காணப்படுகின்றது. அந்த மக்களின் அவலங்களை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு அவர்களுக்குரிய உதவிகளை வழங்குமாறு போராளிகளுக்கு பணிப்புரை வழங்கினார். மேலும் அவலப்படும் மக்களுக்கு தமிழீழ அரசியல்துறை மற்றும் தமிழீழக் கட்டமைப்புக்கள் உதவி…
-
- 3 replies
- 2.5k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த உயரதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
உயிரிழந்த இராணுவ உயர் அதிகாரியான மேஜர் ஜென்ரல் ஜானக பெரேராவுக்கு அரசாங்கம் உரிய மரியாதையை வழங்கவில்லையென ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. உயிரிழந்த ஜானக பெரேரா மற்றும் அவருடைய மனைவியின் பூதவுடல்கள் மக்கள் அஞ்சலிக்காக அநுராதபுரம் எடுத்துச்செல்லப்படுகின்றன. உலங்குவானூர்தி மூலம் அநுராதபுரத்துக்கு எடுத்துச்செல்வதற்காக இரண்டு பூதவுடல்களும் இரத்மலானை விமானநிலையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டபோதும், பாதுகாப்பு அமைச்சிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லையெனக் கூறி இரண்டு பூதவுடல்களையும் விமானநிலையத்துக்குள் அனுமதிக்காமல் வீதியோரத்தில் வைத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது. நண்பகல் வரை இருவரின் பூதவுடல்களை விமானநிலையத்துக்குள் கூட அனுமத…
-
- 6 replies
- 3.7k views
-
-
இந்தியாவின் அக்கறையின்மையால்தான் தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழிக்க சிறிலங்கா முடிவு: தினமணி குற்றச்சாட்டு [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 12:09 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்] இந்தியாவின் அக்கறையின்மையால்தான் இலங்கைத் தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழிக்க சிறிலங்கா அரசும் படையினரும் முடிவு செய்துள்ளனர் என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தினமணி நாளேடு குற்றம்சாட்டியுள்ளது. இன்று புதன்கிழமை வெளிவந்த தினமணி நாளேட்டின் ஆசிரியர் தலையங்கம்: "பாவப்பட்ட ஜென்மங்கள்" என்கிற வார்த்தைப் பிரயோகத்துக்கு மிகவும் பொருத்தமானவர்கள் யார் என்று கேட்டால், இலங்கையில் வாழும் யாழ்ப்பாணத் தமிழர்கள்தான். காஸ்மீரப் பண்டிட்டுகளாவது அகதிகளாக அவர்களது உறைவிடத்திலிருந்து விரட்டப்பட்டு விட்டனர். ஆனால் இலங்…
-
- 2 replies
- 1.8k views
-
-
http://isooryavidz.blogspot.com/2008/10/gt...sri-lankas.html GTV Unmayin Tharisanam: Sri Lanka's Psychological Operations against the Tamils Part-2 GTV Unmayin Tharisanam: Sri Lanka's Psychological Operations against the Tamils Part-3
-
- 0 replies
- 1.6k views
-
-
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக குடியேறிய இலங்கையர் உள்ளிட்ட 13 பேரை அந்நாட்டு குடிவரவு குடியகல்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சாண்டோஸ் கைத்தொழில் பேட்டையில் நேற்றைய தினம் இடம்பெற்ற தேடுதலில் குறித்த சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முறையான தொழில் வீசா அற்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 20 அதிகாரிகளினால் இந்த தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் உக்ரேய்ன் போன்ற நாடுகளைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு சட்டவிரோதமாக பிரித்தானியாவில் தொழில் புரிவோருக்கு 10,000 ஸ்ரேலிங் பவுண்கள் வரையில் அபராதம் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட…
-
- 0 replies
- 1.2k views
-