ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு வன்னியை நோக்கிய பார்வை அதிகரித்துள்ளது.( வாராந்த ஆய்வு) லங்கையில் வசிக்கும் தமிழர்களும் சர்வதேச தமிழர்களும் ஏன் சர்வதேசமும் இன்று வன்னிப் பெருநிலப் பரப்பின் மீதே தமது பார்வையைச் செலுத்துகின்றன. இலங்கையில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக யுத்தம் நடைபெற்று வருகின்றபோதிலும் இந்த யுத்தமானது தமிழர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகும். இதனைவிடச் சிங்களவர்கள் மத்தியில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்கான யுத்தமாகும். எனவே இந்த யுத்தத்தைத் தமிழர்களும் சர்வதேசமும் விழிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன. வன்னியில் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ள போதும் அதனையும் பொருட்படுத்தாது அங்கு இலங்கை அரசாங்கதினால் …
-
- 0 replies
- 1.3k views
-
-
வீரகேசரி வாரவெளியீடு - புலிகள் நடத்திய விமான தாக்குதலில் எந்தவிதமான இராணுவ முக்கியத்துவமோ பாதிப்போ இல்லை. அவர்களை ஆதரிக்கும் சமூகத்தை ஆசுவாசப்படுத்துவதற்காகவே புலிகள் திருகோணமலை துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திவயின சிங்கள பத்திரிகையின் வார வெளியீட்டுக்கு அளித்துள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார். அவர் அளித்த செவ்வியில் மேலும் தெரிவித்திருப்பதாவது, புலிகளின் விமானப்படையினர் இதுவரை ஆறு தடவைகள் தாக்குதல்களை நடத்தி உள்ளனர். எமது விமானப் படையினரோ இக்காலக் கட்டத்தில் ஆறாயிரம் தடவைகள் விமான தாக்குதல்களை நடத்தி உள்ளனர். அவர்களின் விமானங்களில் முப்பது கிலோ எடை உள்ள குண்டை மாத்திரமே கொண்டு செல்ல முடியும். எமது விமானங்க…
-
- 4 replies
- 1.5k views
-
-
-
வன்னிக்கள நிலவரம் மேலும் மோசமாகப்போவதாக லக்பிம ஆங்கில செய்திதாள் தெரிவித்துள்ளது. இராணுவத்தினர் நாளொன்றுக்கு 10 தமிழீழ விடுதலைப்புலிகளை கொல்வதாக கூறுகின்ற போதும்இ கடந்தவாரம் வன்னியில் படையினர் மீது நடத்திய தாக்குதல்; அவர்கள் இன்னும் பலமாக இருக்கின்றார்கள் என்பதை உணர்த்தியுள்ளது என லக்பிம குறிப்பிட்டுள்ளது. கடந்த செவ்வாய்கிழமையன்று 57 -1 வது படைப்பிரிவைச்சேர்ந்த ; நான்காவது சிங்கப் படையணி வன்னேரிக்குளத்தில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளைத் தாக்கியது. சிறியரக ஆயுதங்களைக் கொண்டே இந்ததாக்குதல் நடத்தப்பட்டது. அதன் மூலம் சுமார் 600 மீற்றர் பிரதேசத்துக்குள் படையினர் முன்னேறினர். லெப்டினன்ட்கள் மங்கல ராஜித மற்றும் சமந்த திராணகம ஆகியோர் படையினரின…
-
- 5 replies
- 3.2k views
-
-
இந்த வருடம் டிசம்பர் மாதம் கிளிநொச்சியைக் கைப்பற்றிவிடலாம் எனத் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, அதனை இலக்காகக் கொண்டே இராணுவத் திட்டங்களை வகுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். கொழும்பு சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். "இராணுவத்தளபதி களநிலைமைகளைச் சரியாக ஆராய்ந்து, எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் கிளிநொச்சியை அடைந்துவிடலாம் என ஜனாதிபதியிடம் தெரிவித்திருக்கிறார். இந்தக் கால வரையறையை அடிப்படையாகக் கொண்டே நாம் எமது திட்டங்களை வகுத்துள்ளோம்" என்றும் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். போர் மிகச் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது எனத் தெரிவித்திருக்கும் அவர், மோதல…
-
- 7 replies
- 2.2k views
-
-
மட்டக்களப்பில் சர்வதேச கிரிக்கட் போட்டிகளை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.கிழக்கில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு வங்கி நிதி உதவிகளை வழங்க உள்ளது. இதற்கென சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2010ம் ஆண்டு மட்டக்களப்பில் முதலாவது சர்வதேச கிரிக்கட் போட்டியைத் நடாத்துவது குறித்தான சாத்தியங்களை இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன ரணதுங்க தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்று அண்மையில் கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை நேரில் கண்டறிந்ததாகத் தெ…
-
- 3 replies
- 961 views
-
-
யாழ்ப்பாணக் குடாநாட்டில் யுத்தத்தில் உயிரிழந்த முப்படையினர் மற்றும் பொலிஸாரை நினைவு கூரும் வகையில் விசேட ஞாபகார்த்தத் தூபியொன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பலாலி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள குறித்த ஞாபகார்த்தத் தூபியை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று முன்தினம் திறந்து வைத்துள்ளார். யாழ்ப்பாணம் நகரின் பாதுகாப்பு நிலைமைகளை நேரில் கண்டறியும் நோக்கில் அண்மையில் மேற்கொண்ட விஜயத்தின் போது இராணுவத் தளபதி இந்த ஞாபகார்த்தத் தூபியைத் திறந்து வைத்துள்ளார். இதேவேளை, யாழ் குடாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இராணுவ உயர் அதிகாரிகள் இராணுவத் தளபதிக்கு விளக்கம் அளித்ததாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
-
- 0 replies
- 886 views
-
-
சிறிலங்காவின் மாத்தளை மாவட்டத்தில் உள்ள நாவுல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையில் 12 தமிழ் இளைஞர்கள் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 651 views
-
-
வன்னிக்குள் ஆழ ஊடுருவியுள்ள இராணுவம் கடுமையான எதிர்ப்புக்களை சந்திக்க ஆரம்பித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை நாச்சிக்குடாவுக்கு தென்புறமாக நிலைகொண்டுள்ள 58 ஆவது படையணியும், அதற்கு சமாந்தரமாக நகரும் 57 ஆவது படையணியும் அக்கராயன் மற்றும் வன்னே?க்குளங்களுக்கு இடையில் உள்ள 8 ஆவது, 9 ஆவது மற்றும் 10 ஆவது மைல்கல் பகுதிகளை நோக்கி முன்நகர்வை மேற்கொண்ட போது கடுமையான சமர் வெடித்திருந்தது. திங்கட்கிழமை அதிகாலை நாச்சிக்குடாவுக்கு தென்புறம் மற்றும் துணுக்காய் பகுதிகளில் இருந்து வடகிழக்காக வன்னே?க்குளம் நோக்கி 58 ஆவது படையணியும், அதற்கு உதவியாக அக்கராயனை நோக்கி 57 ஆவது படையணியின் 1 ஆவது பிரிகேட்டும் நகர்வை மேற்கொண்டிருந்தன. நகர்வை மேற்கொண்ட படையினர் விடுதலைப்புலிகளின் கடுமையான எதிர்…
-
- 1 reply
- 994 views
-
-
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசத்தில் உள்ள கெளதாரிமுனை பகுதியில் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் முக்கிய தளம் ஒன்றின் மீது இன்று அதிகாலை 4.15 மணியளவில் விமானப்படையினர் நடத்திய தாக்குதல் ஒன்றில் அந்த முகாம் அழிக்கப்பட்டுள்ளதாக விமான்பபடை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளார். 'கடல்' என்று பெயரிடப்பட்டுள்ள கடற்புலிகளின் இந்தத் தளத்தின்மீது - விமானப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இந்த வான் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்தத் தாக்குதலின் பின்னர் இன்று காலை அந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது அவதானிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilsey…
-
- 1 reply
- 1.2k views
-
-
சட்டவிரோத ஆயுத முகவர்களின் மூலம் அதி நவீனரக ஆயுதங்களை புலிகள் சீனாவிலிருந்து அண்மையில் கொள்வனவு செய்துள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதேவேளை, இறுதிப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் உக்ரேய்னிலிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக பிரபல சிங்கள வார ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. உடனடியாக ஆயுதங்களை விநியோகிக்குமாறு புலிகளின் தலைமைத்துவம் உக்ரேய்னில் உள்ள ஆயுத முகவர் நிறுவனமொன்றிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உக்ரேய்ன் சட்டவிரோத ஆயுத சந்தையில் மிகவும் குறைந்த விலையில் ஆயுதங்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரியவருகிறது. ரி-56 துப்பாக்கியொன்று 4000 முதல் 5000 ரூபாவிற்…
-
- 10 replies
- 2.5k views
-
-
கிழக்கில் காணாமல் போனோரது குடும்பங்களுக்கு நட்டஈட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும் என மாகாண முதலமைச்சர் சிவேநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் கிழக்கில் காணாமல் போனோருக்காக இந்த நிதி வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அண்மையில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலான தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகளின் அடிப்படையில் நட்டஈட்டுத் தொகை வழங்கப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிழக்கில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் இவ்வாற…
-
- 3 replies
- 1.1k views
-
-
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள படையினர் மீண்டும் போர்க்களம் திரும்பினால் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் எனவும், அவர்கள் இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படமாட்டார்கள் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது இந்த சலுகை நாடளாவிய ரீதியில் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள 3,600 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் மீளத் திரும்பினால், அவர்களுக்கு அவர்கள் வகித்துவந்த அதே பதவி வழங்கப்படும் எனவும், அவர்கள் இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படமாட்டார்கள் எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இவ்வாறு தப்பிச் சென்ற இராணுவ வீரர்களில் 2,500 பேர் ஓகஸ்ட் 1 ஆம்…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிங்கப்பூரில் இலங்கை யுவதி கொலை இந்திய இளைஞன் சந்தேகத்தில் கைது சிங்கப்பூரில் 21 வயது இலங்கை யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 20 வயது இந்திய இளைஞனை சிங்கப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர் இங்குள்ள கேலங் பகுதி ஹோட்டல் ஒன்றில் வியாழக்கிழமை இந்தக் கொலைச்சம்பவம் இடம்பெற்றதாக சிங்கப்பூர் பொலிஸார் தெரிவித்தனர். இவர் நேற்று சனிக்கிழமை நிதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். சிங்கப்பூரில் கேலங் பகுதி விபசாரத் தொழிலுக்கு பெயர் பெற்ற இடமாகும்.இங்கு விபசாரத்தொழில் சுதந்திரமாக நடைபெற்று வருகிறது. சிவப்பு வெளிச்சப்பகுதி என்று கூறப்படும் இங்கு விபசாரத் தொழிலில் இலங்கைப் பெண்கள் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிங…
-
- 0 replies
- 1.7k views
-
-
போக்கு மாற்றம் - சேனாதி - மாவிலாற்றில் தொடங்கி இரு வருடங்களுக்கும் மேலாக நீடித்துச்செல்லும் நாலாம் கட்ட ஈழப்போரின் பிந்திய நிலைவரப்படி, இரு தரப்பும் கைவசம் வைத்துள்ள தேர்வுகளின் அடிப்படையில் போரின் போக்கை ஆராயும்போது, புதிய பரிமாணங்கள் தென்படுகின்றன. கிழக்கு மாகாணத்தில் இருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றுவதற்காக நிறுத்தப்பட்ட படைகளை 'எக்காரணம் கொண்டும் அகற்றமாட்டோம்" என்று சிறிலங்கா தரைப்படைத் தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா பலமுறை சத்திய வாக்குத் தந்திருந்தபோதும், அங்கே அண்மைக்காலத்தில் நடந்த நிகழ்வுகள், வேறுவிதமான யதார்த்தத்தைச் சொல்கின்றன. வன்னிப்போர் அரங்கிலே, கால அட்டவணை மற்றும் படைய வளங்களின் அடிப்படையில் கொழும்பின் கையை மீறிச் சென்று கொண்டிருக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
உள்ளிருந்து ஒரு குரல் - புரட்டாதி 2008 மன்னாரின் முள்ளிக்குளத்துக்கும் கீரிசுட்டானுக்குமிடையே சோலைக் காடொன்று உண்டு. காட்டின் ஒரு திசையில் போனால் விளாத்திக்குளம் வரும். அங்கே லெப். சாள்ஸ் அன்ரனி படையணியினர் சில கண்காணிப்பு நிலைகளை அமைத்தார்கள். விளாத்திக்குளத்தின் பின்புறமாக ஒரு திசையில் சோலைக் காட்டினுள் புகுந்த 2 ஆம் லெப். மாலதி படையணியின் ஒரு அணி தமிழ்தென்றலின் வழிகாட்டலில் கண்காணிப்பு நிலைகளுக்கான இடங்களைத் தேர்வு செய்து, இயற்கையான மரக்காப்புகளுடன் நின்றுகொண்டு, தேவையான அகழிகள் சிலவற்றைத் தம் தேவைக்கேற்ப வெட்டியது. காட்டிடையே எழுந்த இந்த முன்னரண் தொகுதிக்கு வலப்புறம் கோயில்மோட்டை இருந்தது. அவர்களும் இவர்களுமாக வேலை செய்து போர் முன்னரங்கை இணைக்க வேண்டும்…
-
- 0 replies
- 1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் கோரளைப்பற்று தெற்கு பிரதேசபைக்குட்பட்ட வேடமுனை கிராமம்பகுதியில் விடுதலைப்புலிகள் என்று எண்ணி படையினர் இரு அணிகளுக்கிடையில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் நான்கு படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு ரோந்துப்பணியில் ஈடுட்டிருந்த படையினர் இரு அணிகள் நேருக்கு நேர் சந்தித்தபோது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்திலேயே இவர்கள் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. tamilwin
-
- 1 reply
- 1.7k views
-
-
விதுரன் வன்னியில் யுத்த நிலைமை மோசமடைகிறது. பூநகரி மற்றும் கிளிநொச்சி நோக்கிய படை நகர்வு மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில் விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதலும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. நீண்ட நாட்களாக மௌனம் சாதித்து வந்த புலிகள் போர்க்கோலம் பூண்டு விட்டதால் இனி வன்னிக் களமுனை அதிரப்போகிறது. இதுவரை இருந்த நிலைமை இனியில்லையென்ற நிலையில் புலிகளின் பதிலடியை இனி ஒவ்வொரு கணமும் படையினர் எதிர்கொள்ளப் போகின்றனர். வன்னியை முழுமையாகக் கைப்பற்றிவிட வேண்டுமென்பதற்காக அரசும் படைத்தரப்பும் எதனையும் செய்யத் தயாராகிவிட்டன. வன்னியிலுள்ள நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றிவிட்டு வன்னியை முழுமையாகக் கைப்பற்றிவிடுவதற்காக சர்வதேச சமூகத்துடனும் சர்வதேச தொண்டர் அமைப…
-
- 0 replies
- 2.4k views
-
-
மிகவும் வல்லமை படைத்த போராளிகளைக் கொண்ட புலிகள் அமைப்பைத் தோல்வியுறச் செய்வது எளிதான காரியமல்ல என்று வோல் ஸ் ரீட் ஜேர்னல் (WALL STREET JOURNAL) என்னும் நாழிதழ் தனது ஆகஸ்ட் 28ம் திகதிய ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து பிரசுரமாகும் அந்த இதழின் ஆசிரிய தலையங்கத்தில் மேரும் கூறப்பட்டுள்ளதாவது:- இலங்கை இராணுவம் வடக்கு முனையில் தமிழ் புலிப் போராளிகளுக்கு எதிரான முழு அளவிலான தாக்குதலை இரண்டு மாத காலமாக மேற்கொண்டு வருகின்றது. கால் நூற்றாண்டு காலமாக நாட்டைக் கலக்கி வந்த யுத்தத்திற்கு முடிவு காணப்படலாம். அந்தப் பிராந்தியத்தில் பெருமளவு பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாகவும் புலிகளின் தலைநகர் கிளிநொச்சியையும் விரைவில்…
-
- 1 reply
- 1.5k views
-
-
கனடாவிலிருந்து வந்த மதகுருவிடம் நவீனரக தொடர்பாடல் கருவிகள் [07 - September - 2008] [Font Size - A - A - A] *கைதுசெய்யப்பட்டு தீவிர விசாரணை வெளிநாடொன்றிலிருந்து நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை நள்ளிரவு இலங்கை வந்த கிறிஸ்தவ மதகுரு ஒருவரிடமிருந்து மிகவும் சக்தி வாய்ந்ததும் மிக நவீன வசதிகள் கொண்டதுமான தொடர்பாடல் கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒலிபெருக்கிக் கருவிக்குள் மறைத்து வைக்கப்பட்டவாறு இவை கொண்டுவரப்பட்டபோதே சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தகவல் ஒன்றின் பேரிலேயே இந்த மதகுரு கொண்டுவந்த பொருட்களை சோதனையிட்டபோது ஒலிபெருக்கிக் கருவிக்குள் சுமார் 12 லட்சம் ரூபா பெ…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஆதாரம் வீரகேசரி
-
- 7 replies
- 2.4k views
-
-
தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளும் வயதெல்லை 15 ஆக குறைக்கப்படவுள்ளதென ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஏ.ஜீ. தர்மதாஸ தெரிவித்துள்ளார். 1968ம் ஆண்டு 32ம் இலக்க ஆட்பதிவு சட்டமூலத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் இந்த நடைமுறை அமுலப்;படுத்தப்படவுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள அடையாள அட்டைகளுக்குப் பதிலாக கைவிரல் அடையாளம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு காரணிகளைக் கொண்ட நவீன அடையாள அட்டைகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அடையாள அட்டைக்கான விண்ணப்பப்படிவம் ஒப்படைக்கப்பட்டு பத்து தினங்களுக்குள் அடையாள அட்டைகளை விநியோகிக்க கூடிய வகையில் புதிய நடைமுறைகள் மாற்றியமைக்கப்படவுள்ளன. http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50
-
- 0 replies
- 749 views
-
-
வடக்கில் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதல்கள் உக்கிரமடைந்துள்ள நிலையில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள மக்கள் எங்கு செல்ல வேண்டும் என்பதை தம்மால் தீர்மானிக்க முடியாது என ஐக்கிய நாடுகள் முகவர் அமைப்புகள் தெரிவித்துள்ளன "எந்தவொரு நபரும் தான் விரும்புகின்ற பாதுகாப்பான இடத்தை நோக்கிச் செல்வதற்கான சுதந்திரத்தைக் கொண்டிருக்கிறார். அவர்கள் எங்கு செல்ல வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை எம்மால் வழங்க முடியாது" என ஐ.நாவின் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், அப்பகுதியில் வாழும் மக்களின் மனிதாபிமானத் தேவைகளை நிறைவேற்றவே ஐ.நா அதிகாரிகள் அங்கு தங்கியிருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் கட்ட…
-
- 1 reply
- 934 views
-
-
இச்சட்டமூலம் முஸ்லிம் பள்ளிவாயில்களில் சத்தமிடும் ஒலிபெருக்கிகளின் குரல்வளையை நசுக்கும் நோக்கிலேயே பொதுநலச் சட்டமாகக் கொண்டுவரப்பட்டது. அந்நேரம் தெரியாத அநீதி இப்போது தெரிகிறதாம். தனக்கு தனக்கு என்றால்.......அடிக்குமாம். ஆதாரம் வீரகேசரி வாரவெளியீடு
-
- 0 replies
- 825 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் வான் தாக்குதல்களின் மூலம் பாதுகாப்புத் தரப்பின் மீது இராணுவ ரீதியான அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாதெனப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் அடைந்துவரும் தொடர் தோல்விகளை மூடி மறைப்பதற்காகவும், ஆதரவு வழங்கும் தரப்பினரைத் திருப்திப்படுத்தவுமே இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இதுவரையில் 6 தடவைகள் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும், விமானப்படையினர் 6000 தடவைக்கு மேல் அவர்கள் மீது விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதகாவும் கோத்தபாய சுட்டிக் காட்டியுள்ளார். விடுதலைப் புலிகளின் இலகுரக விமானங்களின் மூலம் 30 கிலோ எடையுடைய இரண்டு கு…
-
- 8 replies
- 1.9k views
-