ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
திருகோணமலை துறைமுகத்தில் உள்ள சிறிலங்காவின் பிரதான கடற்படை தளத்தின் மீது தமிழீழ விடுதலை புலிகள் வானூர்தி தாக்குதல் நடத்திய பின்னர் இன்று வரை 35 தமிழ் இளைஞர்கள் சிறிலங்காவின் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 670 views
-
-
வவுனியா வடக்கில் கிளைமோர் தாக்குதல்: அப்பாவிப் பொதுமகன் படுகொலை [வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2008, 10:42 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா வடக்கு பகுதியில் சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் அப்பாவி பொதுமகன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வவுனியா வடக்கில் உள்ள குறிசுட்டகுளம் பகுதியில் உந்துருளியில் சென்று கொண்டிருந்த போது இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:45 மணிக்கு இக்கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் விஞ்ஞானகுளம் கனகராயன்குளத்தைச் சேர்ந்த யோகநாதன் சிறீ என்பவர் கொல்லப்பட்டர். அனந்தர்புளியங்குளத்தைச் சேர்ந்த இராசு மனோகரராசா (வயது 36) என்பவர் படுகாயமட…
-
- 0 replies
- 547 views
-
-
தமிழீழத்தினை உலக நாடுகளே ஏற்றுக்கொண்ட பிறகு இந்திய அரசியல்வாதிகள் மௌனம் சாதிப்பது ஏன்? தமிழகத்தில் இருந்து வெளிவரும் வார இதழ் குமுதத்தில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா வாசகர்கள் கேள்விகளுக்கு பதில் எழுதி வருகிறார். அங்கு ஒரு வாசகர் இலங்கையில் தமிழர்கள் படும் அல்லல் தீருமா? என்று கேட்டுள்ள கேள்விக்கு பாரதிராஜா தமிழீழம் ஒன்றுதான் இதற்குத் தீர்வாகும் என்பதை உலக நாடுகளே ஏற்றுக்கொண்ட பிறகு இந்திய அரசியல்வாதிகள் மௌனம் சாதிப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை. அந்த மௌனம் கலைந்தால் அல்லல் தீரும்! என்று கூறியுள்ளார். http://www.tamilseythi.com/tamilnaadu/Bara...2008-09-05.html
-
- 2 replies
- 2.6k views
-
-
வவுனியா பம்பைமடுப் பிரதேசத்தில் 45 வயதான ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்டவர் 45 வயதான ரி.மகேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். வயலில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தபோது இவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. கொல்லப்பட்டவரது சடலத்தை இன்று முற்பகல் 11.30 அளவில் கைப்பற்றிய காவற்துறையினர் அதனை வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். மரணத்திற்குப் பின்னரான விசாரணைகளை வவுனியா நீதவான் மேற்கொண்டதாக வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50
-
- 0 replies
- 907 views
-
-
புலிகளின் தாக்குதல்கள் உதிரிகளானவையல்ல - ஜெயராஜ் - கிழக்கைப்போல் வடக்கும் மீட்கப்படும்; கிளிநொச்சி நகரம் விரைவில் கைப்பற்றப்படும்; விடுதலைப் புலிகள் விரைவில் தோற்கடிக்கப்படுவர் என மகிந்த ராஜபக்ச அரசாங்கமும், அதன் படைத்தரப்பும் அறிவிப்புக்கள் செய்து வரும் நிலையில், வடக்கு-கிழக்கில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களும் மாற்றங்களும் தீவிரம் பெற்றுள்ளன. கடந்த பத்து நாட்களுக்குள் வடக்கு-கிழக்கில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் பல இடம்பெற்றுள்ளன. இத்தாக்குதல்கள் தற்காப்புத் தாக்குதல்கள், அதிரடித்தாக்குதல்கள், முறியடிப்புத் தாக்குதல்கள், வலிந்து தாக்குதல்கள் எனப் பல வகைப்பட்டிருந்தன. இந்த வகையில், மூன்று வகை நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள…
-
- 0 replies
- 2.6k views
-
-
ஆயுத வர்த்தகம் தொடர்பில் 5 வருடங்களுக்கு முன்னர் தாய்லாந்தின் மெரையின் காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்ட சுஜி குணபால என்பவரே விடுதலைப்புலிகளுக்கு சிலின் 143 ரக இலகு ரக விமானங்கள் மூன்றை பெற்றுக்கொடுத்துள்ளதாக புலனாய்வுதுறையினருக்கு தற்போது தகவல்கள் கிடைத்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டு 18 மாதங்களில் பின்னர் கப்பல் ஒன்றின் மூலம் இந்த மூன்று விமானங்களையும் முல்லைத்தீவு பிரதேசத்திற்கு கொண்டு சென்றததாக குணபால தனது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுஜி குணபாலவின் தந்தை சிங்களவர் என்பதுடன் அவர் காவற்துறை சிப்பாயாக பணியாற்றினார். அவரது தாய் தமிழ் பெண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விட…
-
- 3 replies
- 2.6k views
-
-
அரசாங்கப் படைகள் வடபகுதியை முழுமையாக மீட்கப்பட்ட பின்னர் வடமாகாணசபைக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும் என இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.தற்பொழுது நாட்டில் எட்டு மாகாணசபைகளும் சுமுகமாக இயங்கிவருகின்றன. ஒன்பதாவது மாகாணசபையான வடமாகாணசபைக்கான தேர்தல், அரசாங்கப் படைகள் வடக்கைக் கைப்பற்றிய பின்னர் உடனடியாக நடத்தப்படும்” என அவர் குறிப்பிட்டார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக மக்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்கு அரசாங்கம் எடுத்த முயற்சிக்கு அமோக ஆதரவு கிடைக்கப்பெற்றிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். அரசாங்கத்தால் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த முடிந்தது எனக் குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்ஷ, தேர்தலுக்குப…
-
- 0 replies
- 629 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட அந்த இயக்கத்தின் தலைவர்கள் இராணுவத்தினரிடம் பிடிபடமால் விடுதலைப்புலிகளின் இலகுரக விமானங்களை பயன்படுத்தி இந்த நாட்டை விட்டு செல்ல எத்தனிக்கலாம், அந்த வேளையில் மேற்படி விமானங்களை அழிப்பதற்கும் தயாராகவே இராணுவத்தினர் உள்ளதாக சிறி லங்கா இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணக்கார தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நேற்று கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், மாவிலாறு பகுதிகளில் இராணுவத்தினர் தற்போது தமது நிலைகளை பலப்படுத்தி மிகப் பலமான நிலையிலேயே உள்ளனர். இப்பகுதிகளில் இருந்து பெருந்தொகையான விடுதலைப்புலிகள் தப்பித்து பின்வாங்கியுள்ளனர். எனினும் இ…
-
- 5 replies
- 1.7k views
-
-
இந்தியாவிற்கான சிறீலங்கா துணைத்தூதுவரை மத்திய, மாநில அரசுகள் கண்டித்து, அவரையும், சென்னையிலுள்ள துணைத் தூதரகத்தையும் தமிழ்நாட்டில் இருந்து அகற்ற வேண்டும் என, தமிழ்நாடு மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு கடற்றொழிலாளர்களை சிறீலங்கா கடற்படையினர் சுட்டுக்கொல்லவில்லை எனவும், தாக்கவில்லை என்றும் இந்தியாவிற்கான சிறீலங்காவின் துணைத் தூதுவர் அம்சா கூறியுள்ளமை பற்றி கருத்துக்கேட்டபோத மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பின் தலைவர் மங்கையர்ச்செல்வன் தொலைக்காட்சிக்கு இந்தக் கருத்தினைத் தெரிவித்தார். அண்மையில் தமிழ்நாட்டில் தொலைக்காட்சி ஒன்றிற்கு கருத்துரைத்திருந்த சிறீலங்கா துணைத் தூதுவர் அம்சா, தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் மீதான தாக்…
-
- 0 replies
- 932 views
-
-
பிரித்தானியாவிற்கு செல்ல வீஸா கோரும் இலங்கையர்கள் தங்களது விண்ணப்பங்களை முன்கூட்டியே அனுப்பி வைக்குமாறு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் கோரியுள்ளது. பித்தானியா செல்வதற்கு உத்தேசிக்கும் தினத்திற்கு முடிந்தளவு முன்னதாக அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. சென்னையில் அமைந்துள்ள பிரித்தானிய வீஸாக் காரியாலயத்தில், நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தினாலயே இவ்வாறு முன்கூட்டி விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கயில் இயங்கிய வீஸா காரியாலயத்தை சென்னைக்கு மாற்றியதன் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட செயற்திறனை அடைய முடியவில்லை எனவும், வீஸா கோரும் இலங்கையர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்த…
-
- 0 replies
- 1k views
-
-
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் காவல் நிலைக்கு கடமைக்குச் சென்ற சிறீலங்கா காவல்துறை அஙகத்தவர் ஒருவர் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகின்றது. இதேவேளை, பட்டிப்பளை, தாந்தாமலை படை முகாமிலிருந்து புளுக்குணாவ வீதியின் ஊடாக பயணித்த சிறீலங்கா காவல்துறையினரது உழவூர்தி நேற்று விபத்துக்குள்ளாகியதில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50
-
- 0 replies
- 782 views
-
-
ஜெயசிக்கிறு நடவடிக்கையில் படையினருக்கு எதிராக தொடரப்பட்ட செய் அல்லது செத்துமடி தாக்குதலை போன்ற தாக்குதலை விடுதலைப்புலிகள் கடந்த சில நாட்களாக ஆரம்பித்திருப்பதாக படைத்தரப்பை மேற்கோள் காட்டி அரச சார்பு ஊடகமான டெயிலிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. நாச்சிக்குடா, வன்னேரிக்குளம், அங்கராயன்குளம் வரை உள்ள 20 கிலோமீற்றர்கள் நீள பாதுகாப்பரண்களில் நிலை கொண்டிருந்த 4ம் சிங்க ரெஜிமெண்ட் , 11ம் சிறீலங்கா காலாட் படை, 6ம் கெமுனு வோர்ச் ஆகிய படைப்பிரிவுகளின் நிலைகளையே கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் தினங்களில் அலையலையாக வந்து புலிகள் தாக்கினர் என்றும் இதன் போது தந்துரோபாய ரீதியில் 11ம் சிறீலங்கா காலாட் படை மற்றும் 6ம் கெமுனு வோர்ச் பிரிவுகள் தாம் கைப்பற்றியிருந்த சில நிலைகளில் இருந்து …
-
- 0 replies
- 3.3k views
-
-
மேற்கு வன்னியில் இன்னொரு 'முகமாலை" வன்னிப் பெருநிலப்பரப்பின் ஊடாக குடாநாட்டுக்கு தரைவழிப்பாதையை திறப்பதற்கு சிறிலங்கா படைகள் மேற்கொண்ட பெருமெடுப்பிலான 'ஜெயசிக்குறு" நடவடிக்கை மண்கவ்விய நிலையில் தற்போது வன்னிப்பிரதேசத்தின் மேற்கு கரையோரமாக ஏ-32 பாதை வழியாக - பூநகரி ஊடாக - குடாநாட்டுக்கு பாதை திறக்கும் ஒரு இமாலய முயற்சியில் சிறிலங்கா படைகள் மூழ்கிப்போயுள்ளன. தமது இந்த முயற்சிக்கு எவ்வளவு விலையையும் கொடுக்க துணிந்துள்ள மகிந்த அரசுக்கு களநிலைமை ஒத்துழைக்கிறதா என்பதில்தான் தற்போது பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளன. கிழக்கை மீட்டுவிட்டதாக கூக்குரலிட்டவாறு வடக்கில் 'ஜனநாயகத்தை" நாட்ட புறப்பட்ட அரசு படைகள் எத்தனையோ நடவடிக்கைகளை வன்னியில் மேற்கொண்ட போதும் அவற்றின் நிகழ்ச…
-
- 7 replies
- 1.9k views
-
-
வன்னியில் நிலம் விழுங்கிய படி முன்னேறும் சிங்களப் படையின் நகர்வால் ஊக்கம் பெற்றுள்ள மஹிந்த அரசு போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. போரில் சிங்களப் படைகள் வெற்றிநடை போடுகின்றன. என்று மஹிந்த அரசு பிரகடனங்களை விடுத்து வருகிறது. என விடுதலைப்புலிகள் ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலெழுந்த வாரியகப் போரை ஆய்வு செய்வோரும் - புலிகள் அழிக்கப்பட வேண்டுமென்று விரும்புவோரும் மஹிந்த அரசின் வெற்றிப் பிரகடனங்களை நம்புகின்றனர். கண்ணால் காண்பதும் பொய் -காதால் கேட்பதும் பொய் - தீர விசாரிப்பதே மெய் என்ற அனுபவ வாக்கியம் போர் நடைமுறைக்கும் பெருந்தும். போரில் பல்வேறுவிதமான போக்குகள் காட்டி எதிரியை ஆழஉள்ளிழுத்து ? அழிக்கும் வல்லமையுடனேயே புலிகள் இயக்கம் உள்ளது. வன்னிநில அம…
-
- 19 replies
- 4.6k views
-
-
புத்தளம் மாவட்டம் முந்தல் - உடப்பு பிரதேசத்தில் இன்று (05) அதிகாலை 6 மணியளவில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். உடப்பு ஆண்டிமுனையைச் சேர்ந்த 35வயதான நபர் ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் முந்தல் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத ஆயுததாரிகள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட பின் தப்பிச் சென்றுள்ளதாக முந்தல் காவற்துறை பொறுப்பதிகாரி விஜித மாசக்கார தெரிவித்தார். கொல்லப்பட்டவர் தனது வீட்டில் இருந்த போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். புத்தளம் மாவட்டத்தில் உள்ள தனித் தமிழ் கிராமம் உடப்பு என்பது குறிப்பிடத்தக்கது. சரசாலையில் கழுத்து துண்டிக்கப்பட்டவர…
-
- 0 replies
- 1.1k views
-
-
இச்செய்திக்கும் எமக்கும் எந்தவித சம்மந்தமுமில்லை இதற்கு அவ் இணையமே பொறுப்பு கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் செயலாளர் இந்திய புலனாய்வுப் பிரிவினருடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக ஆங்கில இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வாரத்தில் தமிழகத்திற்கு விஜயம் செய்திருந்த பிள்ளையானின் செயலாளா ரகு, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களையும் சந்தித்து கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக தமிழகத்தில் இரகசிய பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பதற்கு ரகு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தம…
-
- 0 replies
- 1.5k views
-
-
நாட்டுப் பிரஜைகள் ஒவ்வொருவரையும் தலா ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபா கடனாளியாக்கியுள்ள அரசாங்கம், வரலாற்றிலேயே 30 வீத பண வீக்கத்தை ஏற்படுத்தி பொருளாதாரத்தை நெருக்கடிக்குள் தள்ளி விட்டுள்ளது. சர்வதேச நாடுகள் நிதி உதவிகள் வழங்காமையினால் வர்த்தகப் பிணை முறிகளுக்கு கடனை வாங்கி நாட்டைப் பாதாளத்தில் அரசாங்கம் தள்ளி விட்டுள்ளது என்று ஐ.தே.க. குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக இக்குற்றச்சாட்டை சுமத்தினார். இங்கு அவர் மேலும் கூறியதாவது, தேசிய வங்கிகளிலும் சர்வதேச வங்கிகளிலும் 230 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் வர்த்த…
-
- 6 replies
- 1.3k views
-
-
நாச்சிகுடாப் பகுதியில் இடம் இடம்பெற்றுவரும் மோதல்களில் பல இராணுவத்தினரை காணவில்லை என்றும் அவர்கள் விரைவில் தமது சக்காக்களுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இவ்வாறு காணாமல் போயுள்ள இராணுவத்தினருக்கு என்ன நடந்திருக்கின்றது என்பது இன்னமும் உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது எனவும் இராணுவத் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது. www.tamilwin.com
-
- 0 replies
- 2.1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் அதிகாரி தரத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 742 views
-
-
அம்பாறையில் சிறப்பு அதிரடிப்படையினர் மீது புலிகள் தாக்குதல்: 4 பேர் பலி; 12 பேர் காயம் [வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2008, 10:09 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய இருவேறு தாக்குதல் சம்பவங்களில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள சிறப்பு அதிரடிப்படையினரின் முகாமுக்கு அண்மையாக நேற்று வியாழக்கிழமை முற்பகல் 10:30 மணியளவில் சிறப்பு அதிரடிப்படையினர் பயணித்த ஊர்தி மீது விடுதலைப் புலிகள் அதிசக்தி வாய்ந்த அமுக்கவெடி தாக்குதலை நடத்…
-
- 2 replies
- 865 views
-
-
ஒன்பதாவது மாகாணசபையும் விரைவில் நிறுவப்படும் - ஜனாதிபதி [ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2008, 11:19.37 AM GMT +05:30 ] கிழக்கில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்து மாகாணசபையை நிறுவதனைப் போன்று வடக்கில் ஒன்பதாவது மாகாணசபையும் வெகு விரைவில் நிறுவப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு இராணுவப் படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தல்கள்களில் வெற்றி பெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். நிறைவேற்று அதிகாரம், அரசியல்சாசனம் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றுக்கு இடையில் சமநிலையான…
-
- 3 replies
- 1.1k views
-
-
நாச்சிக்குடா மற்றும் வன்னேரிக்குளம் பகுதிகளில் விடுதலைப்புலிகளின் எதிர்தாக்குதலில் மிகமோசமான பின்னடைவைச் சந்தித்துத் தமது உயர்வலுக்கொண்ட படையினரையும் படையப் பொருட்களையும் இழந்த சிறிலங்காப் படைத்தரப்பு தமது படுதோல்விகளை மூடிமறைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருவதாக கொழும்பு இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் முறையே நாச்சிக்குடாவிலும், வன்னேரியிலும் உயர்வலுக்கொண்ட படை அணியினரையும் பின்புல வான்பல தாக்குதல்களையும் ஒருங்கிணைத்து சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரியளவிலான முன்னேற்ற நடவடிக்கையை விடுதலைப்புலிகள் எதிர்த்தாக்குதல் மூலம் முறியடித்ததுடன் படைத்தரப்பிற்கும் பெரும் உயரிச்சேதத்தினையும் ஏற்படுத்தியிருந்தனர். இதில் 29 படையினரின்…
-
- 0 replies
- 1.7k views
-
-
அரசாங்கம் தற்போது வடக்கை மீட்கெடுக்கும் நோக்கில் தொடுத்திற்கும் யுத்தம் வெகுவிரைவில் முடிவுக்கு வந்து, வட பகுதி மீட்டெடுக்கப்பட்டு அங்கு வாழும் மக்களும் மீட்டெடுக்கப்பட்டு நாட்டின் பிற பகுதிகளில் வாழும் அவர்களது சகோதரர்களுடன் உறவாடுமாறு, 25 வருடகால அவலங்களை அவர்கள் மத்தியிலிருந்து அகற்றி அவர்கள் மகிழ்விக்கப்படுவர் என சிறி லங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டொக்ரர். பாலித்த ஹோகன தெரிவித்துள்ளார். கனடாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் சிறப்பு அதிதியாக கலந்தகொண்டு அங்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த பாலித்த ஹோகன, வெகுவிரைவில் பயங்கரவாதிகளிடமிருந்து வடபகுதி மக்கள் இராணுவத்தினரால் முற்றுமுழுதாக விடுவிக்கப்பட்டுவிடுவ…
-
- 0 replies
- 728 views
-
-
அக்கராயனைப் பிடித்தது அப்பட்டமான பொய்.- லண்டனிலிருந்து வன்னியன் புதன், 03 செப்ரம்பர் 2008 [செய்தியாளர் மயூரன்] கடந்த வாரங்களில் இடம்பெற்ற சண்டைகளானது மன்னார் மாவட்டத்தைக் கடந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி என்று விரிவடைந்து கொண்டே செல்லுகின்றது. இது படைகளை உசார்ப்படுத்தி மேலும் புலிகளின் பகுதிகளுக்குள் முன்நகர வைப்பதுடன் கிளிநொச்சி நகரை மிக விரைவில் கைப்பற்றி விடலாம் என்ற உணர்வுகளையும் அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விடுதலைப் புலிகள் தந்திரமான பின்நகர்வுகளை மேற்கொண்டு தமதுவளங்களை எல்லாம் பின்நகர்த்துவதுடன் முன்னேறும் படையினருக்கெதிராக பாரிய அளவிலான யுத்தத்தை மேற்கொள்ளாததே காரணம் ஆகும் மன்னார் - பூநகரி வீதியில் நாச்சிக்குடாச் சந்திக்கு அண்மையில் அதாவது ஏ…
-
- 8 replies
- 3.1k views
-
-
பதவியா, பாலமோட்டை மற்றும் மல்லாவிப் பகுதிகளில் கடந்த சில தினங்களில் நடந்த சண்டைகளில் வீரச்சாவடைந்த 20 போராளிகளின் உடலங்களை இராணுவம் இன்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் புலிகளிடம் கையளித்துள்ளது. அதேவேளை 19 இராணுவத்தின் உடலங்களும் புலிகளால் செஞ்சிலுவைச் சங்கத்தினூடு இராணுவத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மனிதாபிமான அடிப்படையில் வன்னி மக்கள் பாதுகாப்பாக இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுக்குள் போவதற்கு உதவி செய்ய ஐநா முன் வந்துள்ளது. வன்னியிலேயே மக்களுக்கு ஒரு பாதுகாப்பு வலயத்தை அமைக்க அரசு சம்மதிக்க மறுத்துவிட்டது. இதே ஐநா சபை 2000 ஓயாத அலைகள் நடவடிக்கையின் போது யாழ்ப்பாண மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர இராணுவம் அனுமதிக்காத போது.. …
-
- 13 replies
- 5.3k views
-