ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளரின் ஊழல் நடத்தை மற்றும் மக்களின் உரிமை மீறல் தொடர்பாக அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பணிப்பாளர் பதவியில் இருக்க அவர் தகுதியற்றவர் என்றும் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உத்தரவிட்டுள்ளார். ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவருமான வாசுதேவ நாணயக்கார மற்றும் நிஹால் அமரசேகர ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரின் நடவடிக்கைகள் தொடர்பில் பிரதம நீதியரசர் இந்தக் கடுமையான விமாசனத்தை வெளியிட்டுள்ளார். இதேவேளை கொழும்பு கொள்ளுப்பிட்டியி…
-
- 0 replies
- 752 views
-
-
இப்பாலகனை பாருங்கள்!உலகின் மனச்சாட்சிக்கு தெரியப்படுத்துங்கள்! வன்னியில் உள்ள குழந்தைகளை எரிகுண்டுகளிலிருந்து காப்பாற்ற உலகுக்கு முறையிடுங்கள்!!
-
- 2 replies
- 1.4k views
-
-
வீதித்தடைகளை உடனடியாக அகற்றுமாறு சிறிலங்கா உயர்நீதிமன்றம் உத்தரவு [செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2008, 08:59 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் பொருளாதார மையமான கொள்ளுபிட்டியிலிருந்து காலிமுகத்திடல் வரையான காலி வீதியில் உள்ள வீதித்தடைகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என அந்நாட்டு உயர்நீதிமன்றம் காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்னவுக்கு உத்தரவிட்டுள்ளது. வீதித்தடைகளால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் மற்றும் வர்த்தக ரீதியிலான பாதிப்புக்கள் ஆகியவற்றினை சுட்டிக்காட்டி சுற்றாடல் பாதுகாப்பு அமைப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனு நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. படைத்தரப்பினர…
-
- 0 replies
- 488 views
-
-
சிறிலங்கா படைப்பிரிவின் திட்டமிட்ட நடவடிக்கையே புறக்கோட்டை குண்டுவெடிப்பு [செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2008, 09:11 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு புறக்கோட்டை மல்வத்தை வீதி வாகன தரிப்பிடத்தில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவமானது சிறிலங்கா படைப்பிரிவின் திட்டமிட்ட நடவடிக்கை என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கொள்ளுபிட்டியிலிருந்து காலிமுகத்திடல் வரையான காலி வீதியில் உள்ள வீதித்தடைகளை உடனடியாக அகற்றுமாறு சிறிலங்கா உயர்நீதிமன்றம் அறிவிக்கவுள்ளமை குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக முன்கூட்டியே தெரிந்தமையினால் இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டிருக்கலாம் என்று படைத்துறை ஆய்வாளர்கள் சந்தேகம் தெரி…
-
- 0 replies
- 565 views
-
-
இலங்கை பௌத்த இராஜ்ஜியம். எனவேஇ இங்கு ஒருபோதும் பயங்கர வாதம் வெற்றிபெற முடியாது. பௌத்த தர்மம் எமது நாட்டைப் பாதுகாக்கும். எமது ஆட்சிக் கால த்திற்குள் விடுதலைப் புலி பயங்கரவாதத்திற்கு இறுதித் தீர்வைக் காண்போம் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். சைப்பிரஸுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர்இ நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மொரவக்க சோரத தேரருக்கு சங்க நாயக்கர் பதவி வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: பல வருடங்களாக எமது நாட்டில் தலைதூக்கியுள்ள பயங்கரவாதத்தால் பெறுமதிமிக்க பல உயிர்களை இழந்துள்ளோம். சொத்துக்களையும் இழந்து நாடு அதளபாதாளத்தில் தள்ளப்பட்டது. பல வருட காலங்களாக இந்த அழிவுகளுக்கு மு…
-
- 0 replies
- 731 views
-
-
கண்டியில் குடிநீரில் நஞ்சு கலப்பு: தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு மறுப்பு [செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2008, 08:52 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் கண்டியில் குடிநீர் வழங்கும் பிரதான குழாய்க்குள் நஞ்சு கலக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியில் உண்மை எதுவும் இல்லை என தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது. குடிநீர் வழங்கும் பிரதான குழாய்க்குள் அடையாளம் தெரியாத சிலர் நஞ்சு கலந்ததாக நேற்று திங்கட்கிழமை இரவு தகவல் ஒன்று வெளியானது. இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபை அதிகாரிகள் பரிசோதனை நடத்தினர். பின்னர் நஞ்சு எதுவும் கலக்கப்படவில்லை என்றும் அவ்வாறு வெளியான தகவல் பொய்யானவை எனவும் அதிகாரிகள் இன்று…
-
- 0 replies
- 569 views
-
-
கொழும்பு: இலங்கையில், கிளிநொச்சி நகரில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு விடுதலைப்புலிகள் உத்தரவிட்டுள்ளனர். இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையில் கடும்மோதல்கள் நடைபெற்று வருகின்றன. விடுதலைப்புலிகன் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி உட்பட பல்வேறு பகுதிகளை பிடித்துவிடவேண்டும் என்ற நோக்கத்தில் இலங்கை ராணுவம் அங்கு மும்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. கிளிநொச்சி பகுதியில் புலிகளின் தலைமை அலுவலகம், அரசியல் பிரிவு அலுவலகம் ஆகியவை உள்ளன. இந்நிலையில், கிளிநொச்சி நகரை விட்டு பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று புலிகள் அறிவித்துள்ளனர். கிளிநொச்சியை பிடிப்பதற்காக ராணுவத்தினர் முன்னேறி வருவதாகவும், எனவே, எந்நேரத்திலும் அங்கு அதிரடி தாக்குதல் நடத்தி ராணுவத்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ்கள தோழர்களுக்கு நன்றி, கம்யூனிஸ்ட் கட்சித் தோழரும் நமது ஆத்ம நண்பருமான மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன் (தாமரை மகேந்திரன்)காலையில் தொடர்புகொண்டபோது பல புலம்பெயர்ந்த உறவுகள் தொடர்புகொண்டு தமது நன்றிகலையும் ஆதரவையும் வெளிப்படுதியதாக சொன்னார். இது அவர்களை மிந்த உற்சாகப் படுத்தியுள்ளது. மாநில செயலாளர் தோழர் த.பாண்டியன் நேற்று பி.பி.சி தமிழ் ஓசைக்கு வளங்கிய செவ்வி மிக முக்கியமானது. இந்தச் செவ்வியைக் கேட்டு தோழர் மகேந்திரனுக்கும் பி.பிசிக்கும் உங்கள் கருத்தை எழுதுங்கள். யாழ்க்கள தோழ தோழியர்கள் யாராவது தோழர் பாண்டியனின் செவ்வியை எழுதுருவில் இணைப்பது பயனுள்ளது. இன்று பதிரிகைகளில் உண்ணாவிரதம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. Times of India நமது பாராளுமண்ற உறுப்பினர்கள் சுரே…
-
- 1 reply
- 845 views
-
-
வீரகேசரி நாளேடு - கொழும்பு காலி வீதியில் அமைக்கப்பட்டுள்ள சகல வீதித் தடைகளையும் அகற்றுமாறு உயர் நீதிமன்றம், பொலிஸ் மா அதிபருக்கு இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. இந்த வீதித்தடைகள் மக்கள் சுதந்திரமாகப் பயணம் செய்வதற்கான உரிமையை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவே பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ணவிற்கு மேற்கண்ட உத்தரவை விடுத்துள்ளார். இதன் பிரகாரம் கொழும்பிலிருந்து காலி வீதியூடாக பயணிக்கும் பஸ் வண்டிகள் டுப்பிளிகேஸன் வீதியூடாக பயணிப்பதை தடைச்செய்யுமாறும் பொலிஸாருக்கு பிரதமநீதியரசர் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் அநாவசியமாக …
-
- 0 replies
- 650 views
-
-
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள பா.ஜ.க அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங், 'ஈழத்தமிழர்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் அமையவுள்ள பா.ஜ.கட்சி அரசு செயற்படும்' என்று உறுதியாக தெரிவித்துள்ளார். இவ்வாறு பா.ஜ.க. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஸ்ணன் தெரிவித்தார். இராமேஸ்வரத்தில் நேற்று முன்தினம் பா.ஜ.க.வின் தொழில் அணி சார்பில் நடந்த தனுஷ்கோடி ஆஞ்சநேயர் ரத யாத்திரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போதே ராதாகிருஷ்ணன் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் அங்கு பேசியவை வருமாறு : தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டிற்கும் சிலர் பலியாகின்றனர். இலங்கைத் தமி…
-
- 3 replies
- 1.1k views
-
-
கொழும்பு: இந்திய ராணுவம் முன்பு பயன்படுத்திய தடுப்பரண்களைப் போல விடுதலைப் புலிகள் ஏற்படுத்தி வைத்துள்ள தடுப்பரண்களால், தரை மார்க்கமாக முன்னேற முடியாமல் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளதாம் இலங்கை ராணுவம். விடுதலைப் புலிகள் குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவி வந்தாலும் அவர்களின் ராணுவ உத்திகள் பெரும் வியப்பளிப்பவையாகவே உள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு நாட்டின் ராணுவத்திடம் இருக்க வேண்டிய அத்தனை வசதியும், சாதுரியமும், புத்திசாலித்தனமும், ஆயுத, ஆள் பலமும் புலிகளிடம் உள்ளது. இந்த நிலையில் புலிகள் ஏற்படுத்தி வைத்துள்ள பாதுகாப்பு அரண்கள் குறித்த வியப்பட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அதில் என்ன ஆச்சரியம் என்றால், இத்தகைய பாதுகாப்பு அரண்களை இந்திய ராணுவமு…
-
- 2 replies
- 2k views
-
-
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது கட்சியிலிருக்கும் மூளைசாலிகளின் ஆலோசனைகளை கலந்தாலோசிக்காது தான் நினைத்தவைகளைச் செய்து வருவதாலேயே அக்கட்சியின் அழிவுக்கும் பலவீனத்துக்கும் வழி கோலியுள்ளதாக தபால் தந்தி, தகவல் அமைச்சர் மகிந்த விஜேசேகர ரத்மல என்ற இடத்தில் நூல் நிலையமொன்றை அங்குரார்ப்பணம் செய்து வைத்தபின் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது; ஐ.தே.க. தலைவர் ஒன்றைக் கூற அக்கட்சிப் பிரதான உறுப்பினர்கள் இன்னொரு கருத்தைத் தெரிவிக்கின்றனர். இதனால் மக்கள் ஐ.தே.க. வெளியிடும் கூற்றில் தெளிவற்ற தன்மையை புரிந்து கொள்ள முடியாது. தடுமாறி வருவதுடன் வேறு கட்சிகளுக்கும் தாவுகின்றனர். இதற்காக மக்களுக்கு நாம் குற…
-
- 0 replies
- 570 views
-
-
வன்னிக்களமுனையில் புலிகளின் தாக்குதல்களில் 6 படையினர் பலி; 29 பேர் காயம் [செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2008, 06:16 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] வன்னிக்களமுனையில் சிறிலங்கா படையினர் மீது நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் ஆறு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 29 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் சிறிலங்கா படைத்தரப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அக்கராயன்குளம் மற்றும் கொக்காவில் பகுதிகளில் நேற்று முன்னாள் 57 ஆவது டிவிசன் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். ஆறு பேர் காயமடைந்தனர். வன்னேரி மண்ணியகுளம்…
-
- 0 replies
- 680 views
-
-
வன்னேரிக்குளம் மேற்கு களத்தில் சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு முறியடிப்பு [செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2008, 05:54 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னேரிக்குளம் மேற்கு களத்தில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய எடுப்பிலான முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. வன்னேரிக்குளத்துக்கும் பண்டிவெட்டிக்குளத்துக்கும் இடைப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னரண்களை தாக்கி முன்நகரும் பெரும் நடவடிக்கையினை நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா படையினர் மேற்கொண்டனர். இம்முன்நகரும் நடவடிக்கையினை விடுதலைப் புலிகள் தொடர் தீவிர தாக்குதல் மூலம் முறியடித்துள்ளனர். சிறிலங்கா படையினருக்கு ஆதரவாக களப்பகுதியில் சிறிலங்கா வ…
-
- 0 replies
- 692 views
-
-
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 63ஆவது கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ. நா. சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கடந்த 26ஆம் திகதி நியூயோர்க்கிலுள்ள ஐ. நா. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இச்ச்சந்திப்பின்போது இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்காக அரசாங்கம் தற்போது மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான இலங்கையின் தெளிவான நிலைப்பாடு என்பன குறித்து ஐ. நா. செயலாளருக்கு மகிந்த விளக்கிக் கூறினார். விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்கும்வரை அவர்களுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது என திட்டவட்டமாகத் மகிந்த தெரிவித்துள்ளதாக செய்திகள்…
-
- 0 replies
- 1.1k views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து ஜக்கிய நாடுகள் சபை மற்றும் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களை சிறிலங்கா அரசாங்கம் வெளியேற்றியதனைக் கண்டித்து நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இன்று அடையாள உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 561 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் உள்ள ஜெய்ன் மெத்தப் பள்ளிவாசல் முன்பாக அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதலில் நான்கு சிறார்கள், பெண்ணொருவர் உட்பட 23 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 656 views
-
-
சிங்களப் பேரினவாத சிறிலங்கா அரசாங்கத்துக்கான படை உதவிகளை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டின் தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 610 views
-
-
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரனும் நேற்று செப் 28ல் சந்தித்து உள்ளனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கருணா அணி - பிள்ளையான் அணி என்ற முரண்பாடு தீர்க்கப்படாத சூழலில் ஈபிடிபி க்கும் ரிஎம்விபி யின் கருணா அணிக்கும் இடையே இந்த சந்திப்பு இடம்பெற்று உள்ளது. விடுதலைப் புலிகளில் இருந்து கருணா பிரிந்த காலகட்டங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் கருணாவுக்கும் இடையே ஒரு நெருக்கம் இருந்தது. ஆனால் அதன் பின்னர் கருணா ஈஎன்டிஎல்எப் உடன் உறவை ஏற்படுத்திக் கொண்டு இந்தியா சென்றது ஒரு பரகசியமான உண்மை. லண்டன் கிருஸ்ணன் தலையீட்டுடன் ஈஎன்டிஎல்எப் - கருணா வின் தேன்நிலவு கசக்க ஆரம்பிக்க கருணா இலங்கை புலனாய்வுத் துறை…
-
- 10 replies
- 3k views
-
-
நல்லூர் வீதியில் பொதுமகன் சுட்டுக்கொலை யாழ்ப்பாணம் நல்லூரில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 1.8k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் 7 சிறுவர்கள் உள்ளிட்ட 21 பேர் காயம் அடைந்துள்ளனர். இன்று இலங்கை நேரம் மாலை 6.20 அளவில் இந்தக் கைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலைநேர பிரார்த்தனையில் ஈடுபட்ட முஸ்லீம்களே இந்த கைக்குண்டுத் தாக்குதலின் இலக்கு எனக் கூறப்படுகிறது. காயம் அடைந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காத்தான்குடியில் தற்போது பதட்டம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிஙறது. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 1 reply
- 692 views
-
-
சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வுக்கு எதிராக புலிகள் முறியடிப்புத் தாக்குதல் [திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2008, 07:38 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னேரிக்குளத்துக்கும் பண்டிவெட்டிக்குளத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் சிறிலங்கா படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட முன்நகர்வுத் தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இம் முறியடிப்புத் தாக்குதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி தொடர்ந்து இடம்பெற்று வருவதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன. வன்னியின் மேற்குப்பகுதி களத்தில் வன்னேரிக்கும் பண்டிவெட்டிக்குளத்துக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே சிறிலங்கா படையினர் பெருமெடுப்பில் முன்நகர்வுத் தாக்குதலை ம…
-
- 0 replies
- 1.7k views
-
-
பொலநறுவை, மெதிரிகிய (Medirigiriya) பகுதியில் சிங்கள பொதுமக்களிற்கும், சிறீலங்கா ஊர்காவல் படையினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் சென்ற 16 அகவையுடைய சிறுவன் ஒருவர் ஊர்காவல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்த
-
- 0 replies
- 1k views
-
-
புறக்கோட்டை குண்டுவெடிப்புச் சம்பவத்தினையடுத்து 7 தமிழ் இளைஞர்கள் கைது [திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2008, 06:34 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு புறக்கோட்டையில் உள்ள மல்வத்தை வீதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தினையடுத்து கோட்டை, புறக்கோட்டை ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட தேடுதலில் ஏழு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் மற்றும் மலையகத்தைச் சேர்ந்த இளைஞர்களே கைது செய்யப்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். படையினரும் காவல்துறையினரும் இணைந்து நடத்திய தேடுதலில் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். வாகனங்களும் வழிமறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டன. வாகனம் மற்றும் அரச தனியார் பேருந்து தரிப…
-
- 0 replies
- 641 views
-
-
பதவியைத் தக்க வைத்துக் கொள்கிற சுயநல நோக்குடன் இலங்கைத் தமிழர் நலனைக் காற்றில் பறக்க விட்டுள்ள முதலமைச்சர் கருணாநிதி இனியாவது தனது தவறை உணர்ந்து இலங்கையிலுள்ள இந்திய இராணுவப் பொறியியலாளர்களை திருப்பியழைக்க மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள பாரதிய ஜனதாக்கட்சியின் பொதுக்குழு இலங்கைத் தமிழருக்கு எதிராக இந்தியா செயற்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த சனியன்று (செப்27) சேலத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது அதில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களுக்கெதிராக இந்திய அரசின் செயற்பாடு அமைந்துள்ளது. இப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தான் ஒரே வழி. இராணுவத் தீர்வு சாத்தியம…
-
- 0 replies
- 1.1k views
-