ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
தாய் மண்ணை காப்பதற்கும் மீட்பதற்கும் முன்னாள் போர் வீரர்களுக்கு அவசரமானதும் அவசியமானதுமான அழைப்பை தமிழீழ அரசியற்துறை விடுத்துள்ளது. முன்னாள் விடுதலை வீரர்களான நீங்கள் உங்கள் தாய் தேசம் முகம் கொடுத்திருக்கும் போர் நெருக்கடிக்கிடையில் தாய் நாட்டிற்கு நீங்கள் புரிய வேண்டிய கடமைக்கு முன்னுரிமை அளித்து விரைந்து வருவீர்கள் என்று நம்புகின்றோம். இந்த தேசத்தின் மைந்தர்களான நீங்கள் எமது மக்களும் மண்ணும் எதிரியின் பேரவலத்துக்குள்ளளாவதை ஒரு போதும் விரும்பமாட்டீர்கள் மானமுள்ள வீரமுள்ள எந்த தூய வீரனும் இதை விரும்பமாட்டான் உங்கள் உள்ளத்தில் நிறைந்திருக்கும் உணர்வும் குருதியில் ஓடும் ஓர்மமும் தேச விடுதலையை நோக்கி தள்ளவே செய்யும் இதன் முலம் நீங்கள் உயிரினும் மேலாக அன்பு செய்யும் தாய்…
-
- 18 replies
- 5.8k views
-
-
“நாட்டைக் காப்பது அல்லது நாட்டின் இறைமையைக் காப்பது” என்ற சுலோகங்களின் கீழ் இலங்கை அரசாங்கம் தற்போதைய யுத்தத்தை முன்னெடுத்து வருகிறது. ஆனால் அதன் உண்மையான நோக்கம் அதுவல்ல மீண்டும் ஒரு 1956 ஆண்டின் சிங்களமயமே அதன் பின்னால் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியாத விடயம். கிழக்கு மாகாணத்தை முழுமையாக மீட்டு விட்டோம் என்றும் அந்த மாகாணசபைக்குக் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்கப் போவதாக அரசாங்கம் சர்வதேசத்தின் முன்னால் கூறிவருகிறது. எனினும் கிழக்கு மாகாண சபைக்கு காணி அதிகாரம் வழங்கப்படாது. அதன்போது பாரிய தடங்கல்களுக்கு வாய்ப்புகள் உள்ளன என்பதைக் கோடிட்டு காட்டுவதாகவே கிழக்கு மாகாண சபைக்கு சிங்களவர் ஒருவரைக் காணி அமைச்சராக நியமித்தமையை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கிழக்கு மா…
-
- 0 replies
- 982 views
-
-
விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் இரவுவேளைகளில் இராணுவத்தினர் கடுமையான ஷெல் தாக்குதல்களை மேற்கொள்வதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. மாலை 5 மணிமுதல் மறுநாள் காலை 6 மணிவரை கடுமையான ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், ஆளில்லாத வேவு விமானங்கள் இரவுவேளைகளில் பறப்பில் ஈடுபட்டு உளவுபார்ப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் இராணுவத்தினரின் ஷெல் தாக்குதல்களால் பாரிய சிக்கல்களுக்கு முகம்கொடுத்திருப்பதாகத் தெரியவருகிறது. அதேநேரம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களை வவுனியாவிலிருந்து செயற்படுமாறு இராணுவத்தினர் பணிப்புரை வழங்கியிருப்பதாகவும் த…
-
- 0 replies
- 864 views
-
-
விடுதலைப்புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தலாமெனக் கூறப்படுவதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.அத்துடன் இவ்வாறான தவறான தகவல்கள் யுத்தமுனையில் போராடும் இராணுவத்தினரை படைகளிலிருந்து தப்பியோடுவதற்கே வழிவகுக்குமெனவும் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் வன்னிப் போரில் தோல்வியைத் தழுவி வருவதால் அவர்கள் இறுதிக்கட்டத்தில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த முயல்வார்களென கடந்த வாரம் கருணா கூறியிருந்தார். வெலிக்கந்தை பகுதியில் தனது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பேசுகையிலேயே கருணா இவ்வாறு தெரிவித்ததுடன், விடுதலைப்புலிகளிடம் இரசாயன ஆயுதங்களிருப்பது தனக்குத் தெரியுமெனவும் கூறியிருந்தார். கருணா கூறிய இந்தச் செய்தியை சிங்களப் பத்திரிகைகளும் ஊடகங்களும் முக்கியத்…
-
- 0 replies
- 1.7k views
-
-
தினக்குரல் வாரவெளியீட்டில் பாதுகாப்பு நிலவரம் பகுதியில் பிரசுரமாகிய விதுரனின் ஆய்வுக் கட்டுரை நன்றி தினக்குரல்
-
- 0 replies
- 2.5k views
-
-
போர் வெறித் தீவிரப் போக்குப் போன்றே தேர்தல்களையும் அணுகுகிறது அரசு 18.08.2008 சிங்களவர்கள் அதிகமாக வாழும் இரண்டு முக்கிய மாகாணங்களில் எதிர்வரும் சனிக்கிழமை இன்னும் ஐந்து நாட்களில் மாகாணசபைத் தேர்தல் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. வடமத்திய மாகாணம், சப்பிரகமுவ மாகாணம் ஆகிய இரண்டிலும் நடைபெறும் மாகாணசபைத் தேர்தல்களை ஒட்டிப் பெரும் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையின் தேர்தல் வரலாற்றில் மிக மோசமான வன்முறைகளுடனும் அராஜகங்களுடனும் நடத்தி முடிக்கப்பட்ட முன்னைய தேர்தல்களாக இரண்டு கருதப்படுகின்றன. முதலாவது ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில், அப்போது அவரது அணியில் இருந்த எஸ்.பி.திஸநாயக்கா போன்…
-
- 0 replies
- 526 views
-
-
வன்னியில் எரிபொருள் தட்டுப்பாடு: பெற்றோல் 800 ரூபாவாகவும் டீசல் 300 ரூபாவாகவும் விற்பனை வன்னிப்பிரதேசத்தில் தற்போது இடம்பெற்று வரும் சிறிலங்காப் படையினரின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து அங்கு எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் இல்லாததால் தனியார் வியாபாரிகள் அதிக விலையில் அதனை விற்பனை செய்கின்றனர். போதிய எரிபொருள் ஏ-9 பாதை ஊடாக வன்னிப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்படாததே காரணமாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் ஒரு லீற்றர் பெற்றோல் 800 ரூபாவாகவும் மண்ணெய் 250 ரூபாவாகவும் டீசல் 300 ரூபாவாகவும் விற்கப்படுகிறது. இதேவேளை மரக்கறி வகைகள் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் என்றுமில்லாத அளவு அதிகரித்…
-
- 0 replies
- 525 views
-
-
அக்கரைப்பற்று கண்ணகிபுரம் படைமுகாம் மீது எறிகணைத் தாக்குதல்: ஒரு படையினர் பலி: நால்வர் காயம் ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] நேற்று இரவு 9.45 மணியளவில் அக்கரைப்பற்று கண்ணகிபுரம் பகுதியில் அமைந்துள்ள சிறீலங்கா படைகளின் இராணுவ முகாம்மீது விடுதலைப்புலிகள் எறிகணை வீச்சு நிகழ்த்தியுள்ளனர். அத்துடன் அப்பகுதியில் அமைந்துள்ள இராணுவ காவலரண் ஒன்றையும் தாக்கியழித்துள்ளதாக தெரியவருகிறது. இதன்போது ஒருபடையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் நால்வர் காயமடைந்தள்ளதாகவும் அறியமுடிகிறது. இதேவேளை நேற்று மாலை கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த இருவர் இன்று இறந்துள்ளதாகவும் மேலும் அறியமுடிகிறது. http://www.pathivu.com/?p=2916
-
- 1 reply
- 1.1k views
-
-
“நாட்டைக் காப்பது அல்லது நாட்டின் இறைமையைக் காப்பது” என்ற சுலோகங்களின் கீழ் இலங்கை அரசாங்கம் தற்போதைய யுத்தத்தை முன்னெடுத்து வருகிறது. ஆனால் அதன் உண்மையான நோக்கம் அதுவல்ல மீண்டும் ஒரு 1956 ஆண்டின் சிங்களமயமே அதன் பின்னால் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியாத விடயம். கிழக்கு மாகாணத்தை முழுமையாக மீட்டு விட்டோம் என்றும் அந்த மாகாணசபைக்குக் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்கப் போவதாக அரசாங்கம் சர்வதேசத்தின் முன்னால் கூறிவருகிறது. எனினும் கிழக்கு மாகாண சபைக்கு காணி அதிகாரம் வழங்கப்படாது. அதன்போது பாரிய தடங்கல்களுக்கு வாய்ப்புகள் உள்ளன என்பதைக் கோடிட்டு காட்டுவதாகவே கிழக்கு மாகாண சபைக்கு சிங்களவர் ஒருவரைக் காணி அமைச்சராக நியமித்தமையை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கிழக்கு மா…
-
- 0 replies
- 640 views
-
-
ஆகஸ்ட் 12, 2008 ரொறன்ரோ திரு. கலைஞர் டாக்டர் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு! உருசிய ஆட்சித் தலைவரின் இனவுணர்வு, மாண்புமிகு முதல்வருக்கு, வணக்கம். உண்மையைச் சொன்னால் இந்த மடல் எழுதுவதால் ஏதாவது பயன் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு அடியோடு இல்லை. உங்களுடைய அண்மைக் காலப் பேச்சும் செயலும் அவ்வாறுதான் எம்மை எண்ண வைக்கிறது. இருந்தும் 1990 இல் தமிழீழ மக்களை கண்டபடி சுட்டும், வெட்டியும் கொன்றும் குருதிக் கறைபடிந்த கையோடு வந்த இந்திய அமைதிப்படையை வரவேற்க மறுத்த முதல்வர் கருணாநிதியின் தமிழின உணர்வு எங்கோயாவது ஒளிந்திருக்கலாம் என்ற நப்பாசையில் இந்த மடலை வரைகிறோம். கடந்த ஆகஸ்ட் 7 ஆம் நாள் 1990 களில் பிரிந்து போன தென் ஒசெட்டியாவைத் (South Osse…
-
- 3 replies
- 2.8k views
-
-
விடுவிக்கப்படாத பிரதேச மக்களை அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருமாறு விமானம் மூலம் துண்டுப் பிரசுரம் [ ஞாயிற்றுக்கிழமை, 17 ஓகஸ்ட் 2008, 09:21.53 AM GMT +05:30 ] கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தங்கியிருக்கும் பொதுமக்களை அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி நகருமாறு கோரப்படும் துண்டுப் பிரசுரங்கள் விமானம் மூலம் வீசப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி நகர் நோக்கி முன்னேறி வரும் படையினருக்கு எதிராகப் பிரதேச பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தப் புலிகள் உத்தேசித்துள்ளதாக இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. தமிழ் மொழி மூலமான இந்தத் துண்டுப் பிரசுரங்களில் தமிழீழ விடுதலைப் புலி உற…
-
- 14 replies
- 2.4k views
-
-
'சிறிலங்கா இராணுவத்தினர் புலிகளின் மைய நகரமாகவும், அவர்களின் தற்போதைய தள நகரமாகவுமுள்ள கிளிநொச்சியை நான்கு மாதத்திற்குள் கைப்பற்றிவிடுவர் எனத்தான் முழுமையாக நம்புகிறேன்" சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கோத்தபாய ராஜபக்சவின் இந்நம்பிக்கையானது அவரின் தனிப்பட்ட மதிப்பீடாகவோ அன்றி ஊகமாகவோ கொள்வதற்கில்லை. சிறிலங்கா இராணுவத் தலைமைப்பீடத்தின் மதிப்பீடும் அது என்றே கொள்ளமுடியும். அண்மையில் இதனைச் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவும் உறுதிப்படுத்தியிருந்தார். அண்மையில் அவர் வழங்கியிருந்த செவ்வி ஒன்றில் 'விடுதலைப் புலிகள் அடுத்த மாவீரர் தினத்தைப் பதுங்கு குழிகளிலேயே கொண்டாடுவர்" என்றார். இதற்கு அவர் …
-
- 5 replies
- 2.3k views
-
-
புலமைப்பித்தன் புது ஐடியா ''பிரபாகரனோடு ஒப்பந்தம்...'' ஐரோப்பிய நாடுகளுக்கு 26 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கூட்டங்களில் முழங்கிவிட்டு வந்திருக்கிறார் அ.தி.மு.க. முன்னாள் அவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன். இது தவிர, இலங்கைப் பிரச்னை பற்றி புதிய கோணத்தில் 'ஒரு பூகோளமே பலிபீடமாய்...' என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார் புலவர். அவரிடம் உரையாடியதிலிருந்து... ''ஐரோப்பிய நாடுகளுக்கு திடீர் விசிட் ஏன்?'' ''புலம் பெயர்ந்த தமிழர்கள் ஈழத்துக்கு ஆதரவாக கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எழுதியும் பேசியும் வருவதால் என்னை அவர்கள் அழைத்தார்கள். அதனால் நார்வே, சுவீடன், பெல்ஜியம…
-
- 1 reply
- 2.7k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போதைய யுத்தத்தில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவார்களா? என்பது குறித்து இன்றைய “லக்பிம’ நாளேடு ஆராய்ந்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், முன்னர் இந்த இரசாயன ஆயுதங்கள் தொடர்பாகக் கருத்துரைத்திருந்ததாக “லக்பிம” குறிப்பிட்டுள்ளது. அத்துடன், தாம் இயக்கத்தில் இருந்தபோது “அமோனியம் நைதரேட்” டை அடிப்படையாகக் கொண்ட இரசாயன ஆயுதங்களை இறக்குமதி செய்யப்பட்டதாகவும் எனினும் அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்துத் தனக்கு தெரியாது என்றும் கருணா தெரிவித்துள்ளதாக “லக்பிம” கூறியுள்ளது. அவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினால் அது படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு…
-
- 12 replies
- 3.4k views
- 1 follower
-
-
காலத்தின் தேவை அறிந்து மீண்டும் இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது. தமிழீழச் சிக்கலைத் தீர்ப்பதற்கான திறவுகோல் தமிழகத்திலேயே உள்ளது "சாமானியர்களின் சகாப்தம்" என்ற கூற்றை தமிழக மக்களிடம் எடுத்துக்காட்டிய அறிஞர் அண்ணா அதன் மூலம் தமிழக மக்களை ஓர் அரசியற் சக்தியாய் 1960களில் திரட்டி எடுத்தார். மக்கள் திரள் அரசியற் சக்தியான போது எதிரிகளின் கொடி, குடை, ஆலவட்டங்கள் சரிந்து விழுந்தன. இதன் வழியே தமிழகமானது மக்கள் திரள் அரசியலுக்கு பழக்கப்பட்ட களமாகியது. அப்படி மக்கள் திரளாக்கப்பட்ட தமிழக அரசியலின் பலம் தான் தமிழீழ மக்களின் பலமும் கூட. இதனை உலகலாவிய அரசியல் யதார்த்தத்தில் வைத்துப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். தமிழக மக்களை ஜனநாயக அலைக்குள் இழுத்து விட்டதில…
-
- 1 reply
- 1.8k views
-
-
தளபதி லெப். கேணல் விக்கீசுவரன் - செ.யோ.யோகி - இவர் 1991 இன் இறுதிப் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தார். 1992, 1993 ஆம் ஆண்டுகளில் பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1994 இல் இருந்து 1996 வரை எதிரி பற்றிய தகவல் சேகரிப்பில் ஈடுபட்டார். இவர் பெரும்பாலும் களநிர்வாகப் பொறுப்பாளராகவும் பின்னணி ஒழுங்கிணைப்பாளருமாக இருந்தார். 2000 ஆம் ஆண்டு மீள இணைந்தோரின் (4.1) படையணிக்குப் பொறுப்பாக இருந்தார். இதேயாண்டு உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற 21 காப்பரண்கள் மீதான தாக்குதலின் போது 4.1 படையணி, இம்ரான் பாண்டியன் படையணி, சிறுத்தைப் படையணி, எல்லைப் படையணி ஆகியவற்றிற்குப் பொறுப்பாக இருந்தார். இதேயாண்டு பளையைக் கைப்பற்றிய அணிக்குப் பொறுப்பாக இருந்த…
-
- 8 replies
- 2.8k views
-
-
கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்பதையே கடந்த வாரம் ரஷ்யா மேற்கொண்ட நடவடிக்கை கோடிட்டு காட்டியுள்ளது. அண்மைக்காலமாக மேற்குலகம் வரைந்து கொண்ட எழுந்தமானமான வரைவிலக்கணங்களுக்கு எல்லாம் இது ஆச்சரியக்குறி வைத்துள்ளது. சீனாவில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் ஆரம்பமான போது, கருங்கடலுக்கு அண்மையாக அமைந்துள்ள ஜோர்ஜியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் மோதல் களும் ஆரம்பமாகியிருந்தன. ஜோர்ஜியா வின் பிடியில் இருந்த போதும் சுதந்திர பிரகடனம் செய்த தென் ஒசேஷிய மற்றும் அப்காசியா (South Ossetia and Abkhazia) ஆகிய மாநிலங்கள் ஜோர்ஜிய படைகளின் தாக்குதல்களுக்கு தொடர்ச் சியாக உட்பட்டுவருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்த நிலையில் கடந்த வாரம் மோதல்கள் மூண்டிருந்தன. …
-
- 6 replies
- 3.7k views
-
-
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அண்மையில் மன்னார் அரிப்பு பிரதேசத்தில் தரையிறக்கப்பட்ட எம்.ஜ.17 உலங்குவானூர்தியில் சென்ற 11 இந்தியப்படையினரை அரசாங்கம் ரகசியமான முறையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த தகவலை ஊடகங்களுக்கு மறைக்க அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. வானூர்தி தரையிறக்கப்பட்டதும் அது இந்தியாவிற்கு சொந்தமான உலங்குவானூர்தி என தெரிவித்த அரசாங்கம் சில மணி நேரங்களின் பின்னர் அது இலங்கைக்கு சொந்மானது என கூறியது. திருத்தப்பணிக்காக இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மீண்டும் திரும்பி வரும் போது இந்த தொழிற்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும் அரசாங்கம் கூறியது. இதனை ஊடங்களுக்கு அரசாங்கம் மறைக்க மு…
-
- 4 replies
- 3k views
-
-
சனிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2008 வவுனியா பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதிகளில் மூன்று முனைகளில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட ஊடுருவல் தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நிகழ்த்திய தாக்குதலில் படையினர் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20 இற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர். கடந்த புதன்கிழமை தொடக்கம் நேற்று முன்தினம் பிற்பகல் வரை இப்பகுதிகளில் மூன்று முனைகளில் படையினர் ஊடுருவல் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர். படையினருக்கு உதவியாகப் பின்தளங்களிலிருந்து பல்குழல் எறிகணைத் தாக்குதல்களையும், ஆட்லெறி மற்றும் மோட்டார் எறிகணைத் தாக்குதல்களையும் இலங்கைப் படையினர் பின்தளங்களிலிருந்து தாக்குதலை நடத்த படையினர் ஊடுருவல் முயற்சியை மேற்கொண்டனர். இவ்வூடுருவிய படையினர் மீது…
-
- 4 replies
- 2.1k views
-
-
உலகத் தமிழர் பேரமைப்பின் ஆறாம் ஆண்டின் நிறைவு விழா, உலகத் தமிழ் எழுத்தாளர் சிறப்பு மாநாடாக நேற்று சனிக்கிழமை தமிழ்நாட்டின் மதுரையில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 691 views
-
-
வவுனியா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை உடனடியாக படையினரிடம் ஒப்படைக்குமாறு வவனியா வைத்தியசாலை பணிப்பாளருக்கு அரசால் நேற்று சனிக்கிழமை அவசர பணிப்புரை விடுக்கபட்டுள்ளது. இதற்கமைய வவுனியா பொதுவைத்திசாலையின் வெளிநோயாளர் பிரிவு இன்று முதல் படையினருக்கான சிகிகிச்சைப் பிரிவாக மாற்றப்படுவதுடன் படையினர் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான அனைத்து வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு இன்று முதல் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படவுள்ளது. பொதுமக்களுக்கான சிகிச்சசைகள் புதிய கட்டிடத்திலுள்ள வெளிநோயாளர் பிரிவிலேயே இன்று முதல் நடைபெறும். வன்னியில் நடைபெற்றுவரும் கடும் மோதல்களில் பெருமளவு படையினர் காயமடைந்து வருவதால் வவ…
-
- 2 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா அரசை அனைத்துலக சமூகம் தனிப்படுத்த வேண்டும்: யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் [ஞாயிற்றுக்கிழமை, 17 ஓகஸ்ட் 2008, 09:43 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா அரசாங்கத்தை தனிமைப்படுத்தி- தமிழ் மக்கள் மீதான இன அழிப்புப் போரை தடுத்து நிறுத்தி- தமிழ் மக்களின் உண்மையான அபிலாசைகளை தீர்க்க அனைத்துலக நாடுகள் முன்வர வேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: யாழ். குடாநாட்டை ஆக்கிரமித்து படைமயப்படுத்தி ஆயுதமுனையில் தமிழ் மக்களை அடக்கி- ஒடுக்கி குடாநாட்டு திறந்தவெளிச் சிறைச்சாலையில் ஆட்கடத்தல்கள், மக்கள் மீதான படுகொலைகள், கைதுகள…
-
- 0 replies
- 488 views
-
-
இனப்பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்ற போதும், விடுதலைப் புலிகளுக்குப் புரியும் பாசையிலேயே பதிலளிக்க வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். “ஜனாதிபதி மோதல்களை விரும்பவில்லை. எனினும், அப்பாவிப் பொதுமக்களை விடுதலைப் புலிகள் கொன்றுவருவதால், அவர்களுக்குப் புரியும் பாசையிலேயே பதிலளிக்கவேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். பேச்சுக்களை ஆரம்பிக்க நாங்கள் தொடர்ந்தும் தயாராகவே உள்ளோம். ஆனால், இரகசியமாக அந்தப் பேச்சுக்கள் இடம்பெறாது. கடந்த காலங்களில் படித்த பாடங்களுக்கமைய நாங்கள் கடுமையாக இருப்போம்” என கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் பச…
-
- 3 replies
- 2k views
-
-
எந்த ஆவணங்களுமின்றி வீதியில் நடந்து சென்ற நாராயணனை வெள்ளை வான் கடத்தவில்லை என்றால் அது அவரது அதிஷ்டம்: மனோ கணேசன் [சனிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2008, 09:02 பி.ப ஈழம்] [க.நித்தியா] தேசிய அடையாள அட்டை மற்றும் சிறிலங்கா காவல்துறை பதிவு பத்திரம் எதுவும் இல்லாமல் கொழும்பு வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே. நாராயணனை வெள்ளை வான் குழுவினர் கடத்தவில்லை என்றால் அதற்கு அவர் தனது குலதெய்வம் சிவபெருமானுக்கு நன்றி சொல்லவேண்டும் என்று மேல் மாகாண மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே. நாராயணன் சார்க் மாநாட்டு மண்…
-
- 4 replies
- 1.2k views
-
-
கொசோவா தனிநாட்டுப் பிரகடன காலத்தில் சிறியளவில் பேசப்பட்ட ஜோர்ஜியாவின் இரு மாநிலங்கள், இன்று உலகளவில் பேசப்படும் விவகாரத்திற்குரிய பிரதேசங்களாக மாறியுள்ளன. கடந்த 7ஆம் திகதி ஜோர்ஜியாவில் சுயமாக இயங்கும் 70,000 மக்கள் தொகை கொண்ட தென் ஒசேஷியா (South Ossetia) மாநிலத்தில் பெரும் படை நகர்வொன்றை மேற்கொண்டு ஏறத்தாழ 1400 பேரை கொன்று குவித்தது ஜோர்ஜிய இராணுவம். அங்கு பெரும்பான்மையாக வாழும் ஒசேஷியர்கள், தனி நாட்டிற்குரிய தனித்தன்மையுடன் எடுவார்ட் கொகொய்டி (Eduard Kokoity) தலைமையில் சுயமாக இயங்கி வருகின்றனர். 1992 ஆம் ஆண்டில் அன்றைய ரஷ்ய அதிபர் பொரிஸ் யெஸ்சின் , ஜோர்ஜிய அதிபர் எட்வேட், செவாட்னாட்சே கொண்ட உடன்பாட்டின் பிரகாரம் அமைதிப்படையொன்று தென் ஒசேஷியாவில் நிறுவப்பட்…
-
- 1 reply
- 955 views
-