ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
மட்டக்களப்பு தேற்றாத்தீவில் நியாப் திட்டத்தின் பொறியிலாளரான 28 அகவையுடைய பிறேமலதா யோகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 941 views
-
-
அமெரிக்காவின் கொடியாக் கரையோரப் பகுதியில் கப்பலொன்றில் காயங்களுடன் காணப்பட்ட இலங்கையர் ஒருவரை, அமெரிக்க கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். கொடியாக்கின் தென்கிழக்கு கரையோரத்தில் கப்பல் ஒன்றில் குறித்த இலங்கையர் காயங்களுடன் தத்தளித்துக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கப்பலிலிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களை அடுத்து விரைந்த அமெரிக்க கரையோரப் பாதுகாப்பப் படையினர் குறித்த இலங்கையரை மீட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. எனினும், குறித்த இலங்கையர் யார் என்பது பற்றியோ அல்லது உடல் நிலைப் பற்றியோ இதுவரையில் தகவல்கள் வெளியிடப்படவில்லை. http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=108
-
- 1 reply
- 1.4k views
-
-
கொழும்பிலுள்ள இந்திய உதவிக்தூதுவர் புலிகளை அழிப்பதைத்தவிர வேற வழிஏதும் இல்லை என்று கருத்துக்கூரினாராம் ஒரு தமிழ் தொலைக்காட்சியில் வந்ததாம், அறிந்தவர்கள் மேலதிக செய்திகளைத்தாருங்கள்.
-
- 5 replies
- 2.3k views
-
-
தற்போது வந்த செய்தியாம்( தட்ஸ்தமிழ்) http://thatstamil.oneindia.in/ இந்த செய்தியை தான் தமிழ்நெற் குறிப்பிடிகிரதோ தெரியவில்லை... Sri Lanka's air force jets bombed a house in the northern jungles believed to be frequented by the leader of the Tamil Tiger rebels on Wednesday, while infantry clashes killed 23 rebels and one soldier, the military said. It was not clear what damage or casualties were caused by the raid targeting Velupillai Prabhakaran with bombings of a house in Vattakachchi, a village in the rebel stronghold, said air force spokesman Wing Commander Janaka Nanayakkara. http://www.axilltv.com/bkpost-2.php?newsid=341577
-
- 10 replies
- 2.9k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சியில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் தங்கியிருந்த பகுதி மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் பொதுமக்கள் இருவர் படுகாயமடைந்தனர். எட்டு வீடுகள் சேதமாகியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 610 views
-
-
இலங்கை ஜனாதிபதி மஹிந்தவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவேண்டும்: வைகோ இலங்கை அரச படையினர் தமிழர்களைக் கூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு விட்டனர். இது போன்ற அக்கிரமங்களைச் செய்த எத்தனையோ உலக நாட்டுத் தலைவர்களைப்போல இலங்கை ஜனாதிபதியும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ம.தி.மு.க. செயலர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழக அண்ணா நூற்றாண்டு விழாவில் பேசுகையிலேயே வைகோ மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு: விடுதலைப் புலிகளைத் தடைசெய்துள்ள அமெரிக்காவிலிருந்து வெளிவரும் வாஷிங்டன் பத்திரிகையில் ராஜபக்ஷ கூட்டம் இலங்கைத் தமிழர்களை அழிக்கின்றது எனச் செய்தி வெளிவந்துள்ளது. …
-
- 2 replies
- 1.2k views
-
-
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிசக்தி வாய்ந்த கண்ணிவெடித் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 654 views
-
-
நயினாதீவு மற்றும் நெடுந்தீவுக் கடற் கரைப் பகுதிகளில் இருந்து நேற்றும் திங்கட்கிழமையும் நான்கு பெண்களின் சடலங்கள் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. ஊர்காவற்றுறை நீதிவான் திருமதி ஜோய் மகாதேவன் சம்பவ இடங்களில் நேற்று விசாரணைகளை மேற்கொண்டார். நெடுந்தீவில் குயின் ரவர் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் நேற்றைய முன் தினம் இரவும் நயினாதீவு சல்லி மயானத்துக்கு அருகில் மற்றொரு பெண்ணின் சடலம் நேற்றுக் காலையிலும் நயினாதீவு பிடாரி அம்மன் கோயிலடிக்கு சமீபமாக கடற்கரையோரமாக மூன்றாவது பெண்ணின் சடலம் நேற்று நண்ப கலும் நயினாதீவு வெள்ளைமணல் கடற்க ரைப்பகுதியில் நான்காவது பெண்ணின் சடலம் நேற்று காலையிலும் கரை ஒதுங்கியிருந்தன. இந்தச் சடலங்களில் உள்பாவாடையும் மேற்சட்டையும்(ஸ்கேட்டும்) மட்…
-
- 1 reply
- 724 views
-
-
விடுதலைப் புலிகளை முற்றாக அழித்தே தீருவோம். அவர்களுடன் இனி சமாதான உடன்படிக்கை ஒன்றைச் செய்வதற்கான எந்தச் சாத்தியங்களும் இல்லை. புலிகளை எப்போது அழித்து ஒழிப்போம் என்று காலஎல்லை எதனையும் இப்போது கூற முடியாது. ஆனால், அவர்களை முற்றாக அழித்தொழிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை இவ்வாறு சூளுரைத்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. திங்கட்கிழமை அலரிமாளிகையில் வெளிநாட்டு செய்தியாளர்களுடனான இரவு விருந்துபசார நிகழ்வின்போது அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு: நாட்டின் வடபகுதியில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கையில் காணப்படும் முன்னேற்றம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகளும் படைத்தளப…
-
- 0 replies
- 789 views
-
-
பிரபாகரனை ஆதரிக்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது நடவடிக்கை: ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தல் [புதன்கிழமை, 17 செப்ரெம்பர் 2008, 07:10 மு.ப ஈழம்] [சி.கனகரத்தினம்] தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஆதரிக்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கொழும்பில் ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் ஒமல்பே சோபித தேரர் கூறியதாவது: வன்னியில் இயங்கி வந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பல விடுதலைப் புலிகளின் பிரதான செயற்பாட்டு மையங்களாக இயங்கி வந்துள்ளமை தெரியவந்துள்ளது. மல்லாவி பகுதியில் சிறிலங்கா படையினர் பாரிய நடவடிக்கையை மேற…
-
- 0 replies
- 544 views
-
-
அக்கராயனில் புலிகள் நடத்தியது "வாயு" தாக்குதல்? பீதியில் சிறிலங்கா படை [புதன்கிழமை, 17 செப்ரெம்பர் 2008, 06:07 மு.ப ஈழம்] [செ.விசுவநாதன்] கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் மற்றும் வன்னிவிளாங்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய "வாயு" தாக்குதல்களினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 16-க்கும் அதிகமான சிறிலங்கா படையினர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகமான டெய்லி மிரரில் இது தொடர்பாக இடம்பெற்றுள்ள செய்தி: கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் மற்றும் வன்னிவிளாங்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் புலிகள் ஒருவகையான "வாயு"வை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். இதனால் பட…
-
- 5 replies
- 2.7k views
-
-
கனடாவில் "சிறிலங்கா நாளில்" தமிழ் மகளிரின் கவன ஈர்ப்புப் போராட்டம் [புதன்கிழமை, 17 செப்ரெம்பர் 2008, 05:58 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] கனடாவில் சிங்களவர்கள் நடத்தும் "சிறிலங்கா நாள்" அன்று தமிழர்களின் அவலங்களை வெளிப்படுத்தும் பொருட்டு கவன ஈர்ப்புப் போராட்டங்கள் நடைபெற உள்ளன. இது தொடர்பாக கனடா தமிழ் மகளிர் அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கை: கனடா வாழ் சிங்கள மக்கள் சிறிலங்கா நாளினை களியாட்டப் பொழுதுகளாக்கி வேடிக்கை விநோதங்களோடு Toronto Harbourfront Centre இல் எதிர்வரும் சனிக்கிழமை முற்பகல் 10:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையும் ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையும் விமரிசையாக கொண்டாடவுள்ளனர். இலங்கைத்தீவில் மற்றுமொரு பகுதியில் வாழும் …
-
- 5 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் சுழிபுரம் சத்தியக்காட்டுச் சந்தியில் நேற்று காலை கடை ஒன்றுக்குள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 689 views
-
-
கடந்த திங்களன்று (நேற்று) அக்கராயன் மற்றும் வன்னிவிளாங்குளம் பிரதேசத்தில் நடந்த மோதலில் விடுதலைப்புலிகள் பாவித்த கண்ணீர் புகையை ஒத்த புகைக் குண்டுகள் என்று கருதத்தக்க புகைக் குண்டுத் தாக்குதலால் 16 படையினருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டத்தாகக் கூறியுள்ள வன்னிப் படைத்தரப்பு... விடுதலைப்புலிகளின் இரசாயன ஆயுதங்களைச் சமாளிக்க தன்னைத் தயார்படுத்தி வருவதாக அரசை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. இது உண்மையில் விடுதலைப்புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பாவிக்கின்றனரா அல்லது அரசு தான் வன்னி மீது இரசாயன ஆயுதங்களைப் பாவித்து தாக்குதல் நடத்த திட்டுமிடுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்கிடையில் இவ்வாறான தாக்குதல் நடந்ததாக அரசு உத்தியோகபூர்வமாகச் சொல்லாதவிடத்தும்.. இது தொட…
-
- 42 replies
- 6.7k views
-
-
திருகோணமலை செல்வநாயகபுரத்தில் நான்கு தமிழ் இளைஞர்கள் சிறிலங்கா கடற்படையினரால் நடத்தப்பட்ட வீதி சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 533 views
-
-
அழுத்து http://puspaviji.net/page102.html
-
- 0 replies
- 1.3k views
-
-
கிளிநொச்சியை கைப்பற்றிய பின்னர் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டம்மானையும் கைது செய்யும் வரை யுத்தம் தொடரும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்தியாளர்களை நேற்று அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும். ஆனால், நிச்சயமான கால எல்லையினை இதற்கென கூற முடியாது. இராணுவ நடவடிக்கைகள் மிகவும் திருப்திகரமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. விடுதலைப் புலிகள் பலவீனம் அடையும் போது யுத்தநிறுத்தத்தை கோருவதால் தற்போதைக்கு யுத்த நிறுத்தத்திற்கான வாய்ப்பேதும் இல்லை. விடுதலைப் புல…
-
- 0 replies
- 1.5k views
-
-
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்கள் தம்மை தெற்கில் உள்ள பல்லைக்கழகங்களில் இணைக்குமாறு கோரி பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பணியகத்திற்கு எதிரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 58 மாணவர்கள் கலந்துகொண்டனர். ஒலுவில் சென்று துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாவதை விட ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு முன்னால் உண்ணாவிரதம் இருந்து மடிவது மேலானது என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர் ஒருவர் தெரிவித்து;ள்ளார். கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது எனினும் அங்கு வன்முறைகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ள அந்த மாணவர் இவ்வாறான சூழ்நிலையில் கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டு விட்டதென எப்படி கூறமுடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். …
-
- 0 replies
- 2.1k views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களின் கடைசிப் பணியாளரும் வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 661 views
-
-
இந்தியாவின் "உதவி" மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது: மகிந்த ராஜபக்ச [செவ்வாய்க்கிழமை, 16 செப்ரெம்பர் 2008, 09:19 பி.ப ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்காவுக்கான இந்தியாவின் "உதவி"கள் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கான வெளிநாட்டு ஊடகவியலாளர்களை மகிந்த ராஜபக்ச நேற்று திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார். வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் மகிந்த ராஜபக்ச கூறியதாவது: விடுதலைப் புலிகளுக்கு எதிராக வடபகுதியில் நடைபெற்று வரும் தாக்குதல்கள் மகிழ்ச்சியளிக்கும் வகையில் இருப்பதாக எமது படைத்தளபதிகள் தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்போம். இருப்பினும் படையினரின் வெற்றி…
-
- 0 replies
- 588 views
-
-
இந்தியப் படையை அனுப்பியதைக் கண்டித்து தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் [செவ்வாய்க்கிழமை, 16 செப்ரெம்பர் 2008, 08:42 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] சிறிலங்காவுக்கு ஆதரவாக இந்தியப் படை அனுப்பப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே இன்று திங்கட்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை வகித்தார். வவுனியாவில் விடுதலைப் புலிகள் நடத்திய வானூர்தி தாக்குதலின் போது சிறிலங்காப் படையினருக்கு உதவியாக செயற்பட்டு வந்த இந்தியப் படையினரின் பொறியியலாளர்கள் இருவர் படுகா…
-
- 1 reply
- 897 views
-
-
இந்தியாவின் பிஹார் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் 50,000 அமெரிக்க டொலர்கள் நன்கொடை வழங்கியுள்ளது. முதலமைச்சர்கள் நிதி ஒதுக்கீட்டிலிருந்து இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பீஹாரில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கினால் இரண்டு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரொமேஸ் ஜயசிங்க, டெல்லியில் உள்ள பீஹார் பிரதிநிதியிடம் குறித்த நன்கொடைக்கான காசோலையை கையளித்ததார்.. பீஹாருக்கான டெல்லிப் பிரதிநிதி சீ.கே. மிஸ்ரா இலங்கை அரசாங்கத்திற்கு பீஹார் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டார். http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=10…
-
- 0 replies
- 679 views
-
-
ராடர் கட்டமைப்பை இயக்குவதற்கு இந்திய அதிகாரிகளை பயன்படுத்துவது தேசிய பாதுகாப்பை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கை என ஜே.வீ.பீ தெரிவித்துள்ளது. இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ராடர் கட்டமைப்பை இயக்க இந்திய அதிகாரிகளின் உதவியைப் பெற்று கொண்டதன் மூலம் அரசாங்கம் தேசிய பாதுகாப்பைக் காட்டிக் கொடுத்துள்ளதாக ஜே.வீ.பீயின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் குற்றம்சுமத்தியுள்ளார். இந்தியாவிடம் இருந்து ராடர் கட்டமைப்பைப் பெற்றுகொண்ட பின்னர் அது தொடர்பான பயிற்சிகளைப் பெற இலங்கை அதிகாரிகளை இந்தியாவுக்கு அனுப்பியிருக்கலாம். அரசாங்கம் இந்த விடயத்தில் உரிய முறையில் செயற்படாது, தொடர்ந்தும் அதனை தவிர்த்து வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு தனது அதிக…
-
- 0 replies
- 911 views
-
-
தாயகத்தில் பராமரிக்கப்படும் செஞ்சோலைச் சிறார்களின் நல்வாழ்வுக்காக நல்வாய்ப்புச் சீட்டு மூலமான நிதித்திட்டம் கடந்த ஆண்டு நோர்வே, டென்மார்க் ஆகிய நாடுகளில் முன்னெடுக்கபபட்டன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 506 views
-
-
புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: பெண்கள் இருவர் காயம் [செவ்வாய்க்கிழமை, 16 செப்ரெம்பர் 2008, 07:51 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு வமாட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் பெண்கள் இருவர் காயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பாடசாலைக்கு அருகாமையிலும், உடையார் கட்டுப்பகுதியிலும் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6:45 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் கண்மூடித்தனமான குண்டுத்தாக்குதலை நடத்தின. இதில் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தில் இருந்து உடையார்கட்டுக்கு தனது உறவினர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த க.இராஜேஸ்வரி (வயது 52) என…
-
- 0 replies
- 401 views
-