ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
வன்னியில் பசிக்கொடுமையால் பழைய உணவினை உட்கொண்ட நான்கு சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி [புதன்கிழமை, 13 ஓகஸ்ட் 2008, 06:56 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] உணவு நஞ்சானதால் அதனை உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் தீவிர சிகிச்சைக்காக கிளிநொச்சி பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறிலங்காப் படையினரின் வல்வளைப்பால் தொடக்கத்தில் தட்சனாமருதமடுவில் இருந்து இடம்பெயர்ந்து- பெரியமடுவில் குடியமர்ந்து- அதன்பின்பு பெரியமடுவில் இருந்து இடம்பெயர்ந்து- வெள்ளாங்குளத்தில் தங்கியிருந்து- அங்கிருந்து இடம்பெயர்ந்து- ஆனைவிழுந்தானில் தங்கியிருந்து- அங்கிருந்து இடம்பெயர்ந்து- தற்போது புதுமுறிப்பில் தங்கியுள்ள புவனேந்திரன் என்பவரின் பிள்ளைகளே பசிக்க…
-
- 3 replies
- 942 views
-
-
மன்னார் மாவட்டத்தின் முழங்காவில் பகுதியினை சிறீலங்கா இராணுவத்தினர் இன்று மதியம் கைப்பற்றியுள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.முழங்காவில் பகுதி விடுதலைப் புலிகளின் முக்கிய இடம் எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்தச் செய்தி தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து எந்தச் செய்திகளும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilseythi.com/srilanka/mannar...2008-08-13.html நிருபர்:அன்பு ------------------------------------------------------------------------------------------- என்னங்க நடக்குது? விடுதலைப் புலிகல் என்ன செய்யுறாங்க? எல்லா இடங்களையும் விடுறாங்க?
-
- 4 replies
- 4k views
-
-
தமிழ் மக்கள் மீதான அரசாங்கத்தின் கரிசனை குறித்துச் சர்வதேச சமூகத்தைத் திருப்திபடுத்த இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாகப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஒப்புக் கொண்டுள்ளார். இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு சர்வதேச சமூகத்திற்கு உரிய முறையில் வெளிப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது மிகவும் அவசியமானதென இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் வெளியிட்டுள்ள கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்த ஒருபோதும் தயார் இல்லை எனவும், அது பயனற்றதெனவும் அவர் சு…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஒரு அவசரக் கேள்வி... புலிகளா? போலிகளா? சார்க் மாநாட்டுக்காக இடைவேளை விட்டிருந்த யுத்தம், இலங்கையில் மீண்டும் வேகம் பிடித் துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் தொடர்ச்சி யாக விடுதலைப்புலி இயக்கம் தொடர்புடையவர்கள் பிடிபட்டு வருவது, காவல்துறை வட்டாரத்தையே கலக்கமடைய வைத்திருக்கிறது! கடந்த ஜூலை கடைசி வாரத்தில் சென்னையில் பதுங்கி இருந்த புலிகளின் கொள்முதல் பிரிவைச் சேர்ந்த தம்பி அண்ணா கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஜூலை 28-ம் தேதி மாலை ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் கடற்கரைச் சாலையில் மாருதி வேனில் வந்து கொண்டிருந்த இலங்கை அகதிகள் நவீன், ரமணன், விக்னேஷ்நாதன், சிவராம் ஆகியோர் போலீஸிடம் சிக்கினர். அவர்களிடமிருந்து ஜெனரேட்டர் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்…
-
- 4 replies
- 2.7k views
-
-
UK- BBCயில் வெளிவந்த இலங்கையின் போர் பற்றிய விவரணம்
-
- 0 replies
- 2.7k views
-
-
புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஆயுதங்கைக் கீழே வைத்த விட்டு வெள்ளைக் கொடியை ஏந்தியவாறு மஹிந்தவிடம் சரணடையும் வரை தற்போதைய யுத்தம் நிறுத்தப்படவோ அல்லது அமைதிப் பேச்சுகள் ஆரம்பிக்கப்படவோ மாட்டாது என்று அமைச்சரும், அரச பாதுகாப்பு பேச்சாளனுமான கெஹெலிய தெரிவித்துதுள்ளார். சீனா சென்ற மஹிந்த இந்தச் செய்தியை உலக நாடுகளுக்கு உறுதியாகத் தெரிவித்து விட்டுதான் நாடு திருபினார். என்றார் மேலும் : புலிகளின் தலைவர் பிரபாகரன் 30 வருடங்களாக இந்த நாட்டை அலைக்கழிக்க வைத்துவிட்டார். அவரால் இந்த நாட்டுக்கு எற்பட்ட உயிர்சேதங்களும், பொருட்சேதங்களும் மிக அதிகம். அன்று ஆரம்பிக்கப்பட்ட பிரபாகரனின் வெறியாட்டம் இன்னும் அடங்கவில்லை. புலிகள் பலமிழந்த போதெல்லாம் அவர்கள் யுத்த நிறுத்தத்திற்கு வந்து…
-
- 14 replies
- 2.7k views
- 1 follower
-
-
இலட்சியத்தை நோக்கிய எமது விடுதலைப்போரில் இழப்புக்கள் ஏற்பட்டுக்கொண்டு தானிருக்கும். ஆனால், விடுதலைக்காக நாம் தொடர்ந்து போராடுவோம். இவ்வாறான பல துன்பங்களை தாண்டித்தான் விடுதலையை வென்றெடுக்கவேண்டும் என்று விடுதலைப்புலிகளின் வடபோர் முனை கட்டளை தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லெப்டினன்ட் கேணல் விக்கீஸ்வரனின் வீரவணக்க நிகழ்வில் வீரவணக்க உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தனது உரையில் மேலும் கூறியதாவது:- சிறிலங்கா படை தமிழ்மக்கள் மீது உளவியல்போர் ஒன்றை நடத்திக்கொண்டிருக்கின்றது. மக்கள் வாழ்விடங்களில் வான் தாக்குதல் நடத்தியும் எறிகணைத்தாக்குதல் நடத்தியும் உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துகி…
-
- 0 replies
- 1.4k views
-
-
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பொதுமக்களை இலக்குவைத்து இராணுவத்தினர் தாக்குதல்களை நடத்துகின்றனர் என பொய்யான பரப்புரைகளை தெரிவித்து இராணுவத்திற்கு கழங்கம் ஏற்படுத்தும் செயற்பாடுகளிலிலும், இதன்மூலம் தம்மீதான தாக்குதல்களை கட்டுப்படுத்திகொள்ளலாம் எனவும் தமிழீழ விடுதலைப்புலிகள் திட்டமிட்டுள்ளனர் என்று சிறி லங்கா இராணுவத்தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்று கருத்து வெளியட்டுள்ள அவர், பொதுமக்கள் செறிந்துவாழும் இடங்களை இனங்கண்டு அவர்களுக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் ஏற்பாடதவண்ணம் மிக நிதானமாகவே இராணுவத்தினர் தமது நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர், குறிப்பாக பொதுமக்கள் வாழும் இடங்களில் எந்தவொரு ஆட்லறி ஷெல்த்தாக்கு…
-
- 0 replies
- 926 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை நாசிவன்தீவுக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற படகு வெடித்துச் சிதறியதில் இரு மீனவர்கள் பலியானதோடு மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். வாழைச்சேனைப் பொலிஸார் இதுபற்றி இன்று காலை தெரிவித்துள்ளனர். ஓட்டமாவடி தியாவெட்டுவான் பகுதியைச் சேர்ந்த எம்.ஜ.கபீர் (32 வயது) எம். கே..பசீல் (19 வயது) பலியானவர்களாவர். இவர்கள் தகப்பனும் மகனுமாவர் ஏம்..பசூர்தின் (23 வயது) எம். அபுல்கசன்; (23 வயது) ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர். இவர்கள் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலில் மீன்பிடிக்கச் சென்ற படகில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் இவ் அனர்த்தம் நேர்ந்துள்ளதாகத் தெரிகிறது. www.t…
-
- 0 replies
- 973 views
-
-
வவுனியா பூந்தோட்டம் இடம்பெயர்ந்தோர் நலன்புரி முகாமில் இன்று புதன்கிழமை மீண்டு்ம் ஏற்பட்ட தீயினால் 80 தற்காலிக குடிசைகள் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 523 views
-
-
சிறிலங்காப் படையினரின் எறிகணை வீச்சுக்கள், வான் தாக்குதல்கள் இடப்பெயர்வுகள் மத்தியில் மாணவர்கள் உயர்தரத்தேர்வுக்கு தோற்றிக் கொண்டிருப்பது சவாலான விடயம் என்று கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.குருகுலராஜா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 560 views
-
-
யாழ். வடமராட்சி கிழக்கு சக்கோட்டை பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடும் நான்கு தொழிலாளர்களின் கடற்றொழில் அனுமதி அட்டைகளை சிறிலங்கா கடற்படையினர் பறித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 632 views
-
-
வன்னிப் பிரதேசத்திற்குப் பொருட்களை கட்டுப்பாடுகள் இன்றி விநியோகம் செய்யுமாறு ஐக்கிய நாடுகளின் அகதிகள் காரியாலயம் விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கொழும்பிலிருந்து கிடைக்கப் பெறும் பொருட்களைக் கொண்டே தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்தை முன்னெடுத்ததாக உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் இவ்வாறான ஓர் சந்தர்ப்பத்தை விடுதலைப் புலிகளுக்கு வழங்க அரசாங்கம் தயார் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் 167048 பேர் அகதிகளாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன…
-
- 0 replies
- 709 views
-
-
தமிழ் மக்கள் மீதான அரசாங்கத்தின் கரிசனை குறித்துச் சர்வதேச சமூகத்தைத் திருப்திபடுத்த இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாகப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஒப்புக் கொண்டுள்ளார். இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு சர்வதேச சமூகத்திற்கு உரிய முறையில் வெளிப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது மிகவும் அவசியமானதென இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் வெளியிட்டுள்ள கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்த ஒருபோதும் தயார் இல்லை எனவும், அது பயனற்றதெனவும் அவர் சுட…
-
- 0 replies
- 963 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி அரச படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளும் ஆற்றல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் இல்லை என இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டுமாயின் அமெரிக்க படைகளுக்கு நிகரான படைபலமொன்று இருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.அரச படையினரின் வலிந்த தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாது பின்வாங்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இரசாயன ஆயுதங்கள் காணப்படக்கூடிய சாத்தியம் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இறுதி முயற்சியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர். வே.பிரபாகரன் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தக் கூடுமென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர…
-
- 1 reply
- 1.4k views
-
-
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பொதுமக்களை இலக்குவைத்து இராணுவத்தினர் தாக்குதல்களை நடத்துகின்றனர் என பொய்யான பரப்புரைகளை தெரிவித்து இராணுவத்திற்கு கழங்கம் ஏற்படுத்தும் செயற்பாடுகளிலிலும், இதன்மூலம் தம்மீதான தாக்குதல்களை கட்டுப்படுத்திகொள்ளலாம் எனவும் தமிழீழ விடுதலைப்புலிகள் திட்டமிட்டுள்ளனர் என்று சிறி லங்கா இராணுவத்தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா பதிவில் http://www.pathivu.com/?p=2816 போர்புரியும் அரசுகளுக்கு இது புதுக் குற்றச்சாட்டு!
-
- 0 replies
- 637 views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் தொடர்ந்தும் சிறுவர் போராளிகளை வைத்திருப்பதாக யுனிசெப் குற்றஞ்சாட்டியுள்ளது. இருப்பினும், யுனிசெப் அமைப்பின் குற்றச்சாட்டை மறுத்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணா அம்மான், அமைப்பிலிருந்த சகல சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார். ஜூன் 30 ஆம் திகதி வரை 129 சிறுவர்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் படையில் சேர்த்திருப்பதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது. இவர்களில் 66 பேர் 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள் எனவும், ஏனைய 63 பேரும் படையில் சேர்க்கப்படும்போது 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களாகவே இருந்ததாகவும், தற்போது 18 வயதைத் தாண்டிவிட்டதாகவ…
-
- 0 replies
- 747 views
-
-
'இலங்கையில் தமிழர்: ஒரு முழுமையான வரலாறு' எனும் இலங்கையில் தமிழர் வரலாறை எடுத்துக்கூறும் நூல் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜேர்மனியில் வெளியிட்டுவைக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 834 views
-
-
வவுனிய நிருபர் - வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தின் ஒரு பகுதியில் தீப்பற்றியதாகவும், அதனால் அந்தப் பகுதி முழுமையாக அழிந்துள்ளதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா அரசாங்க அதிபரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். சம்பவ இடத்திற்கு தமது அதிகாரிகளை அனுப்பியுள்ளதாகவும், சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை என்றும் வவுனியா அரசாங்க அதிபர் எஸ்.சண்முகம் தெரிவித்தார். சில வாரங்களுக்கு முன்னர் இந்த நலன்புரி நிலையத்தில் மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தினால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டாவது சம்பவம் விபத்தா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒன்றா என்பது குறித்து அதிகாரிகள் சந்தேகம் கொண்டிருப்பதாகவும் …
-
- 0 replies
- 631 views
-
-
அம்பாறையில் விடுதலைப்புலிகளின் பொறிவெடியில் சிக்கி மூன்று படையினர் படுகாயம் [புதன்கிழமை, 13 ஓகஸ்ட் 2008, 02:56 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] கஞ்சிகுடிச்சாறு வேப்பேரிக்குள காட்டுப்பகுதியில் விடுதலைப்புலிகளின் பொறி வெடியில் சிக்கி சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் மூவர் படுகாயமடைந்துள்ளனர். கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பகுதியில் உள்ள விடுதலைப்புலிகளை தேடி அழிக்கும் நோக்குடன் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வேப்பேரிக்குளம் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கையின்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விசேட அதிரடிப்படையினரின் வருகையை முன்கூட்டியே அறிந்து நேற்று காலையே பொறி வெடிகளை விடுதலைப்புலிகள் பொருத்திவிட்டு காத்திருந்தனர். எதிர்பார்த…
-
- 0 replies
- 537 views
-
-
இங்கிலாந்தின் த ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் கிளிநொச்சி நகரை இந்த ஆண்டு இறுதிக்குள் தமது படைகள் கைப்பற்றிவிடும் என்று கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தனது படைகள் பல வெற்றிகளைக் குவித்த வண்ணம் முன்னேறி வருகின்றனர் என்றும்... 6500 சதுர கிலோமீற்றருக்குள் நின்ற புலிகளை 5000 சதுர கிலோமீற்றருக்குள் அடக்கி விட்டுள்ளதாகவும், 13,000 பேராக இருந்த அவர்களின் ஆளணியை 5,000 ஆகக் குறைத்திருப்பதாகவும் கோத்தபாய தெரிவித்திருக்கிறார். புலிகளை கிளிநொச்சியில் இருந்தும் அகற்றி காடுகளுக்குள் ஓட அனுமதிக்க மாட்டோம். அவர்களை தேடி அழித்து பூண்டோடு இல்லாது செய்வேன் அப்போதுதான் இந்த நாட்டில் பிரச்சனை தீர்ந்து சமாதானம் வரும் என்றும் கூறியுள்ளார். தனது படைகள் புலி…
-
- 20 replies
- 3.5k views
-
-
விடுதலைக்கான போரில் இழப்புக்கள் ஏற்படத்தான்செய்யும்: அதனையும் தாண்டி இலட்சியத்தை அடைவோம்: கேணல் தீபன் [புதன்கிழமை, 13 ஓகஸ்ட் 2008, 09:04 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] இலட்சியத்தை நோக்கிய எமது விடுதலைப்போரில் இழப்புக்கள் ஏற்பட்டுக்கொண்டுதானிருக்கு
-
- 3 replies
- 1.3k views
-
-
கள்ளித்துறை இறங்குதுறையும் இராணுவத்தால் கைப்பற்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு கூறி இருக்கின்றது...
-
- 18 replies
- 4.6k views
-
-
சப்பிரகமுவ, வடமத்திய, மாகாண சபைத் தேர்தல்களில் போர் வெறியா? அல்லது பொருளாதாரமா? - க.கிருஷ்ணபிள்ளை B.A (Cey) நாடு என்றுமில்லா பொருளாதார நெருக்கடியில் அமிழ்ந்திருக்கும் வேளையில், சப்பிரகமுவா மாகாண வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடாத்துவதின் நோக்கம் எதுவாக இருக்கும் என்பது நோக்கப்பட வேண்டியதோர் விடயமாகும். இவ்விரு சபைகளுக்குமான ஆயுட்காலம், முடிவடைவதற்கு முன்னதாக அச்சபைகள் கலைக்கப்பட்டு எதிர்வரும் 23.08.2008 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. நிறைவேற்று சனாதிபதியாக இருக்கும் ஒருவர் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற சனாதிபதித் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு, உள்ராட்சி, மாகாண சபைகளின் நிர்வாகங்கள் தமக்குச் சார்பானதாக அமைக்கப்…
-
- 1 reply
- 782 views
-
-
இலங்கை அரசாங்கத்திற்குத் தமிழ் மக்களின் ஆதரவு இன்னமும் கிடைக்கப் பெறவில்லை என இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாரயணன் தெரிவித்துள்ளார். இந்தக் கூற்றுத் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தியடையக் கூடும் என்றபோதிலும் இதுவே யதார்த்த நிலை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த விசேட செவ்வியில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை அரச படையினர் வெற்றி கொள்ளக் கூடும் எனினும்இ தமிழ் மக்களின் நம்பிக்கையை வெற்றி கொள்ளவதற்கான நடவடிக்கைகள் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். நோர்வே அல்லது வேறும் ஓர் தரப்பு வழங்கக்கூடிய பங்களிப்ப…
-
- 15 replies
- 2.4k views
-