Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை அரசாங்கத்திற்குத் தமிழ் மக்களின் ஆதரவு இன்னமும் கிடைக்கப் பெறவில்லை என இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாரயணன் தெரிவித்துள்ளார். இந்தக் கூற்றுத் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தியடையக் கூடும் என்றபோதிலும் இதுவே யதார்த்த நிலை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த விசேட செவ்வியில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை அரச படையினர் வெற்றி கொள்ளக் கூடும் எனினும்இ தமிழ் மக்களின் நம்பிக்கையை வெற்றி கொள்ளவதற்கான நடவடிக்கைகள் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். நோர்வே அல்லது வேறும் ஓர் தரப்பு வழங்கக்கூடிய பங்களிப்ப…

    • 15 replies
    • 2.4k views
  2. வன்னியின் பல பகுதிகளிலும் எறிகணை மற்றும் வான் தாக்குதல்களைச் இலங்கைப் படையினர் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் மக்கள் பதுங்கு குழிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வடமராட்சி கிழக்குப் பகுதிகளிலுள்ள மக்களும் பதுங்கு குழிகளை அமைக்கும் வேலைகளில் தற்போது அவசர அவசரமாக ஈடுபட்டு வருகின்றனர் இப்பகுதி மக்கள் சிக்கல்கள் மத்தியிலும் தங்களின் மீன்பிடித்தொழிலில் ஈடுபட வேண்டியள்ளதால் தொடர்ந்தும் அப்பகுதிகளிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளது. எனவே அவர்கள் அப்பகுதிகளில் பதுங்கு குழிகளை அமைத்துத் தங்களுக்கான பாதுகாப்பை இயன்றவரை ஏற்படுத்திக் கொள்ள முயன்று வருகின்றனர். www.tamilwin.com

  3. வவுனியா வடமேற்கு குஞ்சுக்குளம், நவ்வி பகுதிகளில் முன்னகர்வு முயற்சியை மேற்கொண்ட சிறிலங்கா படையினர் மீது விடுதலைப்புலிகள் நடத்திய பதில் தாக்குதலில் 12 படையினர் கொல்லப்பட்டனர். 18 படையினர் காயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.3k views
  4. இராணுவத்திலிருந்து கடந்த 2 வருடத்தில் 12,000க்கும் மேற்பட்டோர் தப்பியோட்டம் இராணுவத்திலிருந்து கடந்த இரு வருடங்களில் மட்டும் 12,000க்கும் மேற்பட்டோர் தப்பியோடியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் 12 ஆயிரம் பேரை உடனடியாக கைது செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வன்னியில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் படைத் தரப்பு பெரும் ஆட்பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளது. எனவே படைகளிலிருந்து அண்மையில் தப்பியோடியவர்களில் 12 ஆயிரம் படையினருக்கு பொது மன்னிப்பு வழங்காது அவர்களை கைது செய்து களமுனைகளுக்கு கொண்டு செல்ல அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ள…

    • 1 reply
    • 1.2k views
  5. இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கான ஏதுநிலைகள் எந்தளவு தூரத்தில் உள்ளன.? ( ஒரு அரசியல் கண்ணோட்டம்) இலங்கையின் அரசியலில் பல்வேறு குழப்பநிலைகள் ஏற்பட்டுள்ளன. எனினும், படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்துகிறார்கள் என்ற செய்தியை வைத்துக்கொண்டு அரசாங்கம் அனைத்து விடயங்களையும் மூடிமறைத்துக் கொண்டிருக்கிறது. இதனையும் மீறிக்கொண்டு தற்போது, அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டணியை பதவியில் அமர்த்தவும் மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யவும் முக்கிய உந்துதலை அளித்த ஜே வி பி இன்று அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளமையாகும். ஜே வ…

    • 0 replies
    • 690 views
  6. 'மொழி உரிமை, சம உரிமை என்றும் பிரதேச சுயாட்சி, சமஷ்டி கூட்டாட்சி என்றும் காலங்காலமாக நாம் பேச்சுகளை நடத்தி உடன்பாடுகள், ஒப்பந்தங்கள் செய்து அவை கிழித்தெறியப்பட்டு ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்ட அந்த வரலாறு பற்றி இங்கு பேசுவதற்கு நான் விரும்பவில்லை." 'நிரந்தர தீர்வுமின்றி, இடைக்கால தீர்வுமின்றி, நிலையான அமைதியின்றி, நிரந்தர சமாதனாமின்றி, நிம்தியான வாழ்வின்றி, அழிவுகளையும் அனர்த்தங்களையும் இடர்பாடுகளையும் இடப்பெயர்வுகளையும் தினம் தினம் சந்திக்கும் சமூகத்தைப் பற்றியே இங்கு பேச விரும்புகிறேன்.' என கடந்த புதனன்று பாரளுமன்றில் பேசிய யாழ் மாவட்ட பா.உ சிறில் தெரிவித்தார் மேலும் : தற்போது வடக்குப் பகுதியில் குறிப்பாக வன்னி பெரு நிலப்பரப்பில் நடைபெறுகின்ற இராணுவ நட…

  7. எமது மண்ணில் அகலக்கால் பரப்பி நிற்கும் வன்பறிப்புப்படைகளை முற்றாக அழித்தொழிக்கும் வல்லமை எமது வீடுதலைப்போராட்டத்திற்கு எப்பொழுதும் உண்டு என்பது பலதடவைகள் உண்மையாக்கப்பட்டுவிட்ட போதிலும் மீண்டும் ஒரு முறை அதனை உறுதிப்படுத்தும் காலம் நெருங்கியுள்ளது என இன்று வெளியாகியுள்ள விடுதலைப்புலிகள் மகளிர் அமைப்பின் அதிகார பூர்வ ஏடான ‘சுதந்திர பறவைகள்” ஏட்டின் பிரதான தலைப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. வன்னியைக் கைப்பற்றும் பெரும் கனவுடனும் தமது முழுப்படைப்பலத்துடனும் சிங்களப் பேரினவாத அரசாங்கம் போரைத் தொடங்கியுள்ளது. எனினும் சிங்களப்படைகளால் அவர்கள் அறைகூவல் விடுத்த காலப்பகுதிக்குள் அதனை மேற்கொள்ள முடியவில்லை. சில பகுதிகளில் இறுக்கமாகவும் பல பகுதிகளில் தளர்வாகவும் வி…

  8. படையினரின் தாக்குதல்களை கண்டித்து புதுக்குடியிருப்பில் கண்டன பேரணி [செவ்வாய்க்கிழமை, 12 ஓகஸ்ட் 2008, 08:19 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] பொதுமக்கள் மீதும் அரச பணியாளர்கள் மீதும் மாணவர்கள் மீதும் சிறிலங்கா படையினர் மேற்கொண்டுவரும் தாக்குதல்களை கண்டித்து புதுக்குடியிப்பில் கண்டனபேரணியும் கண்டனகூட்டமும் நடைபெற்றுள்ளன. மக்கள் குடியிருப்புக்கள் மீதான சிறிலங்கா படையினரின் தாக்குதல்கள், முல்லைத்தீவு அரசாங்க அதிபர் மீதான தாக்குதல்கள், அரசபணியாளர்கள் மீதான தாக்குதல்கள், மருத்துவமனை மீதான தாக்குதல் போன்றவற்றைக் கண்டித்தே இப்பேரணியும் கூட்டமும் நடத்தப்பட்டன. அத்துடன், உயர்தர தேர்வு எழுதும் மாணவர்களை தாக்குதல்கள் மூலம் அச்சமடையச் செய்யும் படையினரின் செயலையையும…

  9. அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டை அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல திட்டவட்டமாக மறுத்துள்ளார். அரசாங்கத்திலுள்ள சிலர் விடுதலைப் புலிகளின் கீழ் மட்டத்தினருடன் இரகசிய தொடர்புகளைப் பேணி வருவதாக கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியிருந்தார். இது தொடர்பாக விளக்கமளிக்கும் முகமாக இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும்போதே அமைச்சர் ரம்புக்வெல்ல இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார். அத்துடன் ஐக்கிய த…

  10. இது தமிழர்கள் தமது வேற்றுமைகளை மறந்து ஒன்றுபடவேண்டிய தருணம். உலகின் பல்வேறு நாடுகளிலும் இயங்கும் விடுதலை ஆதரவாளர்கள் கடந்த கால அணுகுமுறையினால் அன்னியப் படுத்திவிட்ட புலம் பெயர்ந்த சமூக சக்திகளை மீண்டும் அணிதிரட்டியாகவேண்டிய தருணம். புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் விடுதலை சக்திகள் இதுகாறும் முன்வைக்கப் பட்ட எதிர் விமர்சனங்களை கருத்தில் எடுத்து விமர்சனம் மட்டுமன்றி சுயவிமர்சனங்களுக்கும் ஊடாக பரந்துபட்ட ஐக்கிய முன்னணிக்கான வாய்ப்பை உருவாக்கவேண்டும். எல்லா அணிதிரட்டல்களும் கடந்த காலங்களைப்போல துருக்கிய பி.கே.கே பாணியில் எங்கள் பலத்தை காட்டுவதற்க்குப் பதிலாக முனர் ஏ.என்.சி செயல்பட்டதுபோல நாம் வாழும் மேற்க்கு நாடுகளின் மக்களை வெண்றெடுப்பதையே முன்னிலைப் படுத்த வேண்டியது அவசி…

    • 8 replies
    • 2.1k views
  11. ஈழத்தில் எம் உறவுகள் மீது இலங்கை அரசாங்கம் நடத்திவரும் இன்னல்களை உலகிற்கு தெரிவிக்கும் விதமாகவும், கண்டிக்கும் விதமாகவும் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கும் "பொங்கு தமிழ்" சிட்னியிலும் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்றது. பல்வேறு ஊடகங்கள் மூலம் இந்நிகழ்வு பற்றி அறிந்திருப்பீர்கள். நிகழ்வில் பங்கெடுத்த எனது நேரடி அனுபவம் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். படம்: புதினம் புகழ் பெற்ற சிட்னி ஒலிம்பிக விளையாட்டு கூடல் அருகே இருக்கும் பச்சை பசேலென்ற மேசன் மைதானத்தில் அனைவரும் காலை 11 மணிக்கு கூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கனடாவில் நடந்தது போலவே, சிட்னியிலும் முன்னர் அறிவிக்கப்பட்ட இடம் மாற்றப்பட்டு, பின்னர் அவசரமவசரமாக இந்த இடம் அறிவிக்கப்பட்டது. சுதந்திர ஒஸ்திரேலியாவி…

  12. சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகள் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வடக்கு அபிவிருத்திப் பணிகளுக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஓர் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தக் குழுவின் செயற்பாடுகள் குறித்து ஆனந்தசங்கரி தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகள் குறித்து ஆனந்தசங்கரி கடுமையாக விமர்சித்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரம் செய்தி வெளியிட்டுள்ளது. 15 ஆவது சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் இலங்கை விஜயம் மேற்கொண்டிர…

  13. 30 ஆண்டு காலமாக நீடித்துக் கொண்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் காலம் மலந்துள்ளதாகப் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டைப் பூரணமாகப் பயங்கரவாதப் பிடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமெனப் பிரதமர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மெதிரிகிரியாவில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். எமது தாய்நாட்டைப் பாதுகாக்க உயிர்த் தியாகம் செய்யும் படைவீரர்களுக்குப் பக்கபலமா…

  14. மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து சிறிலங்கா படையினர் மேற்கொண்டஎறிகணைத்தாக்குதலில் முல்லைத்தீவு குமுழமுனையை சேர்ந்த அப்பாவி பொதுமகன்ஒருவர் கொல்லப்ட்டடுள்ளார். மூவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 599 views
  15. புலம்பெயர்ந்துள்ள தமிழ்மக்களிடம் உதவிகோரி மரணத்தின் விளிம்பில் நின்று மன்றாடும் வன்னி மக்கள்: செடோட் அறிக்கை [செவ்வாய்க்கிழமை, 12 ஓகஸ்ட் 2008, 04:53 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னி பெருநிலப்பரப்பு மீது சிறிலங்கா படைகள் மேற்கொண்டுள்ள திட்டமிட்ட இனச்சுத்திகாரிப்பு நடவடிக்கையால் இடம்பெயர்ந்து, வாழ்விழந்து மரணத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள், தமது அடிப்படை தேவைகளுக்கு உதவி புரியுமாறு புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களை மன்றாடி கேட்கிறார்கள் என்று புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் தொண்டுநிறுவனமான 'செடோட்' வன்னியில் இருந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- த…

  16. அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் நடைபெற்ற வேறு பல பிரதேசங்களில் இருந்து பாதுகாப்புக் கருதி வன்னேரிக்குளம், அக்கராயன் மற்றும் ஆனை விழுந்தான் ஆகிய இடங்களில் தஞ்சமடைந்தவர்கள் இப்போது அந்தப் பகுதிகளில் இருந்து அச்சம் காரணமாக பாதுகாப்புக் கருதி வேறு இடைப் பட்ட பகுதிகளை நோக்கி நகரும் இடம்பெயரும் பெரும் அவலநிலை தோன்றியுள்ளது. பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பதற்கேற்ப, இவர்கள் தாம் வந்து தங்கிய மேற்குறிப் பிட்ட இடங்களுக்கும் கிளிநொச்சி நகருக்கும் இடைப்பட்ட பகுதிகளை நோக்கி நகரத்தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. மன்னார், வவுனிக்குளம், மல்லாவி துணுக்காய் ஆகிய பகுதிகளில் மோதல்கள் தீவிரமாகியதைத் தொடர்ந்து அங்கிருந்து மக்கள் இடம்பெயர்ந்து முன்…

  17. மண்டூரில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது கிளைமோர் தாக்குதல்: ஒருவர் பலி [திங்கட்கிழமை, 11 ஓகஸ்ட் 2008, 08:44 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மண்டூரில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார். மண்டூர் 15 ஆம் கிராமத்தில் இன்று திங்கட்கிழமை முற்பகல் 9:00 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார். புதினம்

    • 6 replies
    • 1.4k views
  18. களனி புதிய பாலத்திறப்பு விழாவில் 'சிரச' தொலைக்காட்சி நிறுவன படப்பிப்பாளர் தாக்கப்பட்டு அவரது புகைப்படக்கருவி பறிமுதல் செய்யபட்டது தொடர்பாக மேர்வின் சில்வாவிடம் பேலியாகொட பொலிஸார் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அமைச்சர் மேர்வின் சில்வாவையும் தாக்குதலுடன் சம்பந்தபட்டவர்களையும் உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் ஆஜா செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். எனினும் மேர்வினை இதுவரை கைதுசெய்யாத அதே நேரம், அவரும் இதுவரை பொலிஸாரிடம் சரணடையவுமில்லை இந்நிலையில், கடந்த 9ம் திகதி மேர்வின் சில்வாவின் வீட்டுக்குச் சென்ற பேலியாகொட பொலிஸார். இந்த சம்பவம் தொடர்பாக மேர்வினிடம் நீண்ட வாக்கு மூலமொன்றைப் பெற்றுள்ளனர். இ…

  19. நாட்டின் ஏனைய இடங்களிலும் பார்க்க யாழ்ப்பாணத்தில் பொருடகளின் விலைகள் பல மடங்காக இருப்பதைச் சுட்டிக்காட்டி, இதனைக் குறைப்பதற்கு கப்பல் செலவை அராசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என சமாதானத்தி;ற்கும் சமாதானத்திற்கும் நல்லெண்ணத்திற்குமான மக்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த அமைப்பின் இணைச் செயலாளர் எஸ்.பரமநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் சங்கக் கடைகளில் சீனி 68 ரூபா 50 சதத்திற்கு விற்பனை செய்தாலும், ஒரு ஆளுக்கு அரை கிலோ மட்டுமே கொடுக்கப்படுவதாகவும், வெளிக்கடைகளில் 80, 90 ரூபாவுக்கு விற்கப்படுவதாகவும், அரிசி 90 ரூபா தொடக்கம் 120 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும், பரமநாதன் தெரிவித்துள்ளார். கெர்ழும்பில் 95 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் பூடு யாழ்ப்பாணத்தில் …

  20. வன்னிப் பிரதேசத்திற்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை நாளாந்தம் 20 லொறிகளில் ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக அனுப்பி வைப்பதற்கு வன்னிப்பிராந்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் இணக்கம் தெரிவித்திருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் எஸ்.சண்முகம் தெரிவித்துள்ளார். வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்கும் வன்னிப்பிராந்திய ஆயுதப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய அவர்களுக்கும் இடையில் திங்களன்று வவுனியாவில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஓமநதை சோதனைச்சாவடி ஊடாக 20 லொறிகளில் பொருட்களை வன்னிப் பிரதேசத்திற்கு அனுப்புவது தொடர்பி…

  21. சாய்நதமருதுவில் தொடர்ச்சியான வெள்ளைவான் கடத்தல்கள் செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மகான்] நேற்றிரவு(11.08.08) 8 மணியளவில் சாய்ந்தமருதுவில் ஐ.லத்தீப்(50) எனும் கடற்தொழிலாளி இனம் தெரியாத வெள்ளை வான் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். நிந்தவூர் 24ம் வட்டாரத்தினைச் சேர்நத இவர் முன்னர் மரவியாபாரத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இக் கடத்தல் தொடர்பாக சாய்ந்தமருது காவல்நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே வேளை நேற்று முன்தினம் (10.08.08) இரவு 7 மணிக்கு முகமட் ரபீன் எனும் 29 வயது இளைஞன் சாய்ந்தமருது கல்முனை வீதியில் உள்ள அவரது வாகனம் திருத்தும் நிலையத்தில் வைத்து வெள்ளைவான் கும்பலால் கடத்தப்பட்டுள்ளார். இக்கடத்தல் தொ…

  22. யாழ்ப்பாணத்தில் இரண்டு குழந்தைகள் கைவிடப்பட்டநிலையில் மீட்கப்பட்டன. இதில் இறந்த நிலையிலான குழந்தையும் அடங்குகின்றது யாழ்ப்பாணத்தில் இறந்தநிலையில் காணப்பட்ட குழந்தையொன்றின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் கொன்வன்ட் வீதி வாய்க்கால் ஒன்றிலேயே இந்த குழந்தையின் சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணம் பன்றிக்கோட்டு பிள்ளையார் கோயிலின் அருகில் அநாதரவாக கிடத்தப்பட்டிருந்த குழந்தையொன்றை பிரதேச மக்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். நன்றி தமிழ் வின்

  23. அரசாங்கமும் தமிழீழ விடுதலைப்புலிகளும் ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை,அரசாங்கத்தின

  24. வன்னிப் பகுதி மீது போர்நடவடிக்கை இருப்பதால் அங்கு மக்களுக்கான மனிதாபிமானப் பணியாளர்கள் மற்றும் அரச அதிபர் உள்ளிட்ட அரசஅதிகாரிகளின் மக்களுக்கான பணிகளின்போது அவர்களுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் தரமுடியாது என வன்னிப் பகுதி இராணுவத்தலைமையகம் தெரிவித்துள்ளது. நேற்று வவுனியாவில் இடம்பெற்ற நான்கு அரச அதிபர் மற்றும் வன்னிப் பகுதி இராணுவக் கட்டளைத்தளபதிகள், அதிகாரிகள் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பின் போது தற்போது வன்னிப் பகுதியில் நிலவுகின்ற மோசமான போர்ச் சூழலில் மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றார்கள் அவர்களுக்கான நிவாரணப்பணிகளை மேற்கொள்வதில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.