Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. சார்க் பிராந்திய நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அதற்கு ஆதரவான அமைப்புக்களை அவுஸ்திரேலியாவில் தடை செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாகஅந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கும், அதற்கு எதிரான நடவடிக்கைகளுக்காக தெற்காசிய நாடுகளுடன் தொடர்புகளைப் பேணுவதற்கும் அவுஸ்ரேலியா விரும்புகிறது. இதற்காக தெற்காசியப் பிராந்தியத்தின் மு…

    • 23 replies
    • 3.7k views
  2. 'பினான்சியல் ரைம்ஸ் பத்திரிகையில் ஜோ லெகி எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம் இலங்கையில் இன்றுள்ள இராணுவ நிலைமைகளையும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமைகளையும் ஒப்பு நோக்கும் ஒரு வரைபடத்தை இராணுவ நடவடிக்கைகள் பணிபாளர் பிரிகேடியர் உதய பெரேரா ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது வெளியிட்டார். 2006ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப்பட்ட பிரதேசம் சிவப்பு மையினால் அந்த வரைபடத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. வடக்கு கிழக்கில் கரையோரப்பகுதிகள் முழுமையாக தெற்கில் அரச கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்கள் வரை விரிவுடைந்து செல்கின்றது. இன்னோரு படம் இரண்டு ஆண்டுகாளக அரச படைகள் கைப்பற்றிய பிரதேசங்கள் நீலமையினால் காட்டபட்டிருந்தன. பெர…

    • 0 replies
    • 1.3k views
  3. இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரசாங்க அதிபர்களுக்கும், வவுனியாவில் உள்ள வன்னிப் பிரதேச ஆயுதப் படைகளின் தலைமையகத்தின் இராணுவ உயரதிகாரிகளுக்கும் இடையில் திங்களன்று... நடைபெற்ற முக்கிய உயர்மட்ட கூட்டத்தில் வன்னிப் பிரதேசத்திற்கு அத்தியாவசிய பொருட்களை சீரான முறையில் அனுப்புவது குறித்து கலந்துரையாடப்பட்டிருக்கின்

  4. முல்லைத்தீவு பிரதேசமக்கள் நேற்று எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தினர். அண்மைக்காலமாக இலங்கைப் படையினர் நடத்திவரும் தாக்குதல்களைக் கண்டித்தே இந்தப் பேரணி நடத்தப்பட்டுள்ளதாகத் தமிழ்நெற் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களின் போது கடந்த வாரத்தில் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் காயமடைந்தமை, துணுக்காயின் உதவி அரசாங்க அதிபர் இலங்கைப் படையின் ஆழ ஊடுருவும் பிரிவினரால் கொல்லப்பட்டமை, கிளிநொச்சி அபிவிருத்தித்துறை உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டமை, பொதுமக்கள் இலக்குகள் மீது விமானத்தாக்குதல் நடத்தப்பட்டு பல பொதுமக்கள் கொல்லப்பட்டமை போன்ற சம்பவங்களைக் கண்டித்தே இந்தப் பேரணி நடத்தப்பட்டது. பேரணியின் இறுதிக் கோரிக்கை மனு, முல்லைத்தீவு உதவி மேலதிக அரசாங்க அதிபர் பார…

  5. கடந்த 8ஆம் திகதி முல்லைத்தீவு வைத்தியசாலை, அரசாங்க அதிபர் இல்லம் ஆகியவற்றினை இலக்கு வைத்து மணலாறு முன்னரங்கு நிலையிலிருந்து ஏவப்பட்ட எறிகணை வீச்சில் முல்லைத்தீவின் அரசாங்க அதிபர்... திருமதி.இமெல்டா சுகுமார் கையில் மட்டும் காயமடைந்து உயிர்தப்பினார். எனினும் இத்தாக்குதலில் ஒன்றரை வயதான குழந்தை உடல் சிதறிப் பலியானது. 16க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். வைத்தியசாலைக் கட்டிடம், பல வீடுகள், பொதுக்கட்டிடங்கள் சேதமடைந்தன. மேலும் கால்நடைகள் பலியாகின.எனினும் அரசாங்க அதிபர் உயிர் தப்பியதை அறிந்து கொண்ட இலங்கை இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார இத்தாக்குதலை தாம் நடாத்தவில்லையென வழமைபோல் தெரிவித்துக் கொண்டார். எனினும் நேற்று வன்னிக் கட்டளைத் தளபதியைச் சந்தித்த வன்னிப்பகுதிக்க…

  6. அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய மின்னல் வேக அதிரடித் தாக்குதலில் உயரதிகாரி உட்பட படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கஞ்சிக்குடிச்சாறு வேப்பையடி சிறப்பு அதிரடிப்படை முகாமிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரம் முன்னேறி நிலைகொண்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினர் மீது இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் விடுதலைப் புலிகள் மின்னல் வேக அதிரடித் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் நிமால் லுகே எனும் உயரதிகாரி உட்பட அதிரடிப்படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர். …

  7. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் உள்ள மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்கா வான்படையின் வானுர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் பொதுமகன் ஒருவர் காயமடைந்துள்ளார். புதுக்குடியிருப்பு மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று திங்கட்கிழமை காலை 8:20 மணியளவில் சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தின. இதில் ஜி.சசிதமலர் என்பவர் காயமடைந்துள்ளார். பொன்னம்பலம் செல்வரத்தினம் என்பவரின் வீடு முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளதுடன் பத்து வரையான வீடுகள் மற்றும் பயன்தரு மரங்கள் சேதமாகியுள்ளன. www.puthinam.com

  8. வன்னியில் மணலாறுக் களமுனையில் ஆண்டாங்குளத்துக்கு கிழக்கே முல்லைத்தீவை நெருங்கி நடந்த சண்டையில் 7 போராளிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலங்களும் ஆயுத தளபாடங்களும் படையினரால் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை பாலமோட்டையில் நடந்த சண்டையில் இரண்டு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இரு போராளிகளின் உடலங்களும் ஆயுத தளபாடங்களும் இராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளன. இதற்கிடையே கிளாலியில் படையினர் திடீர் தாக்குதல் நடத்தி போராளிகளைக் கொன்றுவிட்டு மீண்டும் தமது நிலைக்குத் தரும்பியுள்ளனராம். இரண்டு பெண் போராளிகளின் உடலங்கள் படையினரால் மீட்கப்பட்டுள்ளன. இச்சண்டைகளில் சில படையினருக்கு காயம் மட்டும் ஏற்பட்டுள்ளது. என்று படைத்தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

    • 28 replies
    • 5.2k views
  9. அரச படையினரால் மேற்கொள்ளப்படும் வான் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமெனத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். வன்னிப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள சிவிலியன்களைக் கருத்திற் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளும், அரச படையினரும் யுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை நிறுத்துவதன் மூலம் சிவிலியன்களைப் பாதுகாக்க முடியுமென அவர் சுட்டிக் காட்டியுள்ளார். நாட்டின் சகல பாகங்களிலும் உள்ள சிவிலியன்களைப் பாதுகாக்கும் தார்மீகப் பொறுப்பு அரசாங்கத்திற்குக் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கையொன்றின் மூலம் ஆனந்தசங்கரி இந்தக் கருத்துகளை முன்வை…

  10. யாழ்ப்பாணத்தில் சிறுவர் இல்லங்களை நாடிச்செல்லும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்படும் சிறுவர்களுக்காக சிறுவர்களுக்கு உகந்த சூழல் - குடும்ப சூழலே என்ற திட்டத்தின் கீழ் சேவ் த சில்ட்ரன் இன் ஸ்ரீ லங்கா அமைப்பு மேற்கொண்டு வந்த பணிகள் கடந்த மே மாதத்துடன் முடிவடைந்துள்ளன. இந்த காலப்பகுதிக்குள் சேவ் த சில்ட்ரன் அமைப்பினால் 403 சிறுவர்கள் அவர்களின் பெற்றோர்களுடன் மீளிணைக்கப்பட்டுள்ளார்கள். எனினும் மே மாதத்தின் பின்னர் சிறுவர் இல்லங்களுக்கு வந்த சுமார் 408 சிறுவர்களை பராமரிக்கமுடியாமல் போயிரு…

  11. மட்டக்களப்பிலிருந்து மகான் எழுதிய ” மகிந்த பிள்ளாயான் இடையே ஆரம்பித்த நிழல் யுத்தம் ” ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் செந்தமிழ்] தெற்காசிய வலைய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் சந்தித்துக் கொண்ட பதினைந்தாவது உச்சி மகாநாட்டின் மூலம் மஹிந்தா அரசுக்கும் ஒட்டுக்குழுவின் தலைவர் பிள்ளையானுக்கும் இடையில் முதல் முறையாக பாரிய நிழல் யுத்தம் ஆரம்பித்துள்ளது. அரசாங்கத்தின் கைபொம்மையாக செயற்பட்டுவரும் ஆயுதக்குழுவின் தலைவர் பிள்ளையானை பாரத பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் சந்திக்க மறுப்பு தெரிவித்தமை பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்கும், முதல் அமைச்சருக்கும் அடித்த சாவு மணியாகும். 1987ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் இலங்கையின் சிறுபான்மை இனமா…

    • 13 replies
    • 2.3k views
  12. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், சிரேஷ்ட அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பகிரங்கமாக விமர்சித்துள்ளதாக பி.பி.சீ. உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை 100 வீதம் ஏற்றுக் கொள்ள முடியாதெனப் பொலன்னறுவைப் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சர் என்ற ரீதியில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பல கொள்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேனவின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி…

  13. பௌத்த மதத்தினர் எப்படி யுத்தம் செய்யலாம் என தமிழர்கள் தற்போது கேள்வி எழுப்புகின்றனர். தமது மதத்தை பரப்புவதற்காக கொலைகளை செய்யாதவர்கள் பௌத்தர்கள் மாத்திரமே. பொறுமை என்ற பண்டைய மரண தண்ணீரின் இறுதிக்குச் செல்ல இடமளிக்க முடியாது. அரச அதிகாரம் சிங்களவர்களுக்கு இல்லாதுபோனால் பௌத்த சாசனம் காணாமல்போவதுடன் பௌத்த தர்மமும் காணாமல் போகும் என சுற்றாடல்த்துறை அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமையவின் கொள்கை வகுப்பாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். உடனடி சரிவை எதிர்கொண்டுள்ள சிங்கள நாகரிகத்தை அதிலிருந்து தடுப்பதற்கு புத்த மதத்தின் பாதுகாவலனான துட்டகைமுனுவின் வழியில் செல்ல அனைவரும் ஒன்றுதிரள வேண்டுமெனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செயலமர்வ…

  14. வடக்குப் பிரதேசத்தின் முன்னரங்க நிலைகளில் கடும்மோட்டார் மற்றும் ஆட்லெறித் தாக்குதல்கள் இடம்பெறுவதோடு, வன்னிப் பகுதியினுள் கிளைமோர்த் தாக்குதல்களும் விமானக் குண்டுவீச்சுக்களும் மேற்கொள்ளப்பட்டுவருவதனால் பெருமளவு மக்களும் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐ.நா.முகவர் அமைப்புக்களின் நிலையியற் குழு தெரிவித்துள்ளது. வன்னிப் பிரதேசத்தினுள் உள்ள வைத்தியசாலைகளில் அடிப்படை மருந்துகளுக்குக்கூட பாரிய தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் அதுமேலும் சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கு கிழக்கு நிலைமைகள் தொடர்பாக ஐ.நா.முகவர் அமைப்புக்களின் நிலையியற் குழுவெளியிட்டுள்ள இறுதி அறிக்கையில் வன்னி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவு நடவடிக்கைகள் காரணமாக மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட…

  15. அக்கினிக்களமாக விரிந்திருக்கும் போர்க்களத்தை அணிதிரண்டு வென்றெடுப்போம்: தமிழீழ விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறை அழைப்பு http://www.puthinam.com/full.php?2b34OOI4b...3f1eW2cc4OcY4be அன்பார்ந்த அம்பாறை மாவட்ட தமிழீழ மக்களே! படைகளின் நோக்கத்தை மட்டுமே பிரதான காரணியாக கொண்டு எமது வனப்பகுதி எல்லையில் கூடியிருக்கும் அரச பயங்கரவாத படைகளை எமது தாய்மண்ணிலேயே சமாதியாக்கும்வரை தங்களின் ஒத்தழைப்பை அன்புடன் வேண்டிநிற்கிறோம். வெள்ளைக்கல் என அழைக்கப்படும் பகுதிக்கு உள்ளிருக்கும் வேட்டையடிக்குளம்இ வன்னேரிக்குளம் ஆகிய வனப்பகுதிகளுக்கோ வயல்பகுதிகளுக்கோ பெரியதளவா குளம்இ கூதைக்குளம் மற்றும் கஞ்சிகுடிச்சாறு பாடசாலைஇ தங்கவேலாயுதபுரம்இ கேணிக்குளம்இ கோமார…

    • 6 replies
    • 1.9k views
  16. சட்டவிரோதமான முறையில் போலி கடனட்டைகளைத் தயாரித்து விநியோகித்ததாகக் கூறப்படும் தமிழ் இளைஞர்கள் ஐவரை வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலொன்றை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமாகிய ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் தொடர்ந்தும் கூறியதாவது கடந்த 7ஆம் திகதி மாலையே பொலிஸாரால் இவர்கள் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர். வெள்ளவத்தை பகுதியில் மிகவும் இரகசியமான முறையில் நடத்தப்பட்ட நிலையமொன்றை பொலிஸார் சுற்றிவளைத்ததை அடுத்து இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களால் தயாரிக்கப்பட்ட போலி கடனட்டைகள் அனைத்தும் விடுதலைப் புலிகளுக்கு வழங்க…

  17. மீண்டும் ஒரு அரசியல் கண்ணோட்டம் எங்கட தமிழ்வின் இணையத்தில பார்த்தேன் யான் வாசித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி இலங்கையின் அரசியலில் பல்வேறு குழப்பநிலைகள் ஏற்பட்டுள்ளன. எனினும், படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்துகிறார்கள் என்ற செய்தியை வைத்துக்கொண்டு அரசாங்கம் அனைத்து விடயங்களையும் மூடிமறைத்துக் கொண்டிருக்கிறது. இதனையும் மீறிக்கொண்டு தற்போது, அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டணியை பதவியில் அமர்த்தவும் மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யவும் முக்கிய உந்துதலை அளித்த ஜே வி பி இன்று அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்க…

  18. முல்லைத்தீவு வைத்தியசாலையிலிருந்து 300 மீற்றர் சுற்றுவட்ட பிரதேசத்தை மோதலற்ற வலயமாக பேணுமாறு இராணுவத்தை அரசாங் கம் அறிவுறுத்த வேண்டும் என தாம் கோரு வ தாக முல்லைத்தீவு வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர் வி.சண்முகராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சகல தரப்பின ரிடமிருந்தும் மீள் உத்தரவாதத்தை நான் எதிர் பார்க்கிறேன். வைத்திய சாலை பாதுகாப்பாக இயங்குவதற்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு வைத்தியசாலையை அண்டிய பகுதியில் இடம் பெற்ற ஷெல் தாக்குதல்களைத் தொடர்ந்தே இக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி தாக்குதலில் மாவட்ட செயலாளர் திருமதி இமெல்டா சுகுமார், மருத்துவ அத்தி யட்சர் வி. சண்முகராஜாவின் மனைவி…

  19. வீரகேசரி நாளேடு 8/10/2008 7:44:52 PM - பெல்மதுளை, ஐக்கிய தேசியக் கட்சி தற்போதைய நிலையில் நொண்டிக் குதிரையாகவுள்ளது. அக்குதிரையில் ஓட முடியாது. தற்போது ஓடும் குதிரையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் திகழ்கிறது. இதனால்தான் நாம் அரசுடன் இணைந்துள்ளோம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். யானைக்கு மேல் சேவல் போகலாம், கதிரை மற்றும் வெற்றிலைக்கு மேலும் சேவல் போகலாம். ஆனால் சேவலுக்கு மேல் எதுவும் பயணிக்க முடியாது என்றும் அவர் கூறினார். இறக்குவாணை கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, இலங்கை த…

    • 6 replies
    • 1.2k views
  20. வன்னியில் இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளில் செயற்படும் அரசுசார்பற்ற அமைப்புகள் அப்பகுதியில் தாங்கள் பயன்படுத்தும் பொருள்கள், சொத்துக்க ளின் விவரங்களை சமர்ப்பிக்கவேண்டும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சு உத்தரவிட்டுள்ளது. அரசுசார்பற்ற அமைப்புகளின் வளங்கள் விடுதலைப் புலிகளின் கைகளுக்குச் செல்வதைத் தடுப்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதி காரிகள் குறிப்பிட்டுள்ளனர். "நோர்வே பீப்பிள் எய்ட்' எனும் அரச சார்பற்ற அமைப்பிற்கு சொந்தமான சில விசேட பயன்பாட்டு வாகனங்கள் தற்போது விடுதலைப் புலிகளிடம் உள்ளன எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு அதிகாரிகள் இது குறித்து "நோர்வேபீப்பிள்' எய்ட் அதிகாரிகளுடன் தனிப்பட்ட பேச்சுகளை மேற்கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. விட…

  21. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினருக்கும் ஜே வி பினருக்கும் இடையில் பாரிய மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுக் காலை இரத்தினபுரி எல்விட்டிக்கல என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் போது அமைச்சர் ஜெயசேகரவும் நேரடியாகச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருந்ததாக ஜே வி பி குற்றம் சுமத்தியுள்ளது. இரண்டு தரப்பினருக்கும் இடையில் பொல்லு மற்றும் கல்வீச்சுச் சண்டைகளும் இடம்பெற்றுள்ளன. ஒரு கட்டத்தில் அமைச்சர் ஜெயசேகரவும் கல்வீச்சுக்கு உள்ளானார். இரண்டு தரப்பும், ஒரு தரப்பை மறுதரப்புத் துரத்திச் சென்று தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சம்பவத்தில் காயமடைந்த பல ஜே வி பியினர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்…

  22. "மன்னார் தொடக்கம் பூநகரி வரையிலான ஏ 32 வீதியை பொதுமக்க ளின் பாவனைக்குத் திறப் பதே படையினரின் வடக்கு நடவடிக்கையின் அடுத்த இலக்காகும்.'' இவ்வாறு பாதுகாப்புத்துறைப் பேச் சாளரும் அமைச்சருமான ஹெகலிய ரம்புக் வெல கூறியிருக்கிறார். ஊடகம் ஒன்றிறுக்கு நேற்றிரவு வழங்கிய செவ்வியிலே ஹெகலிய இப்படித் தெரி வித்திருந்தார். ""விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு வந்தால் மாத்திர மே பேச்சுக்கான கதவுகள் திறக்கப்படும்'' என்றும் அவர் குறிப்பிட்டார். ஹெகலிய அந்தச் செவ்வியில்மேலும் கூறியவை வருமாறு: தற்போது படையினர் வடக்குப் பகுதி யில் தமது படை நடவடிக்கைகளை வெற் றிகரமாக முன்னெடுத்துச் சென்றுகொண் டிருக்கின்றனர். அவர்கள் திட்டமிட்டு இந்த முன்நகர்வை மேற்கொண்டு வரு கின்றனர். படை…

  23. யாழ்ப்பாண ஏரிப் பகுதியில் உள்ள நிலைகளில் இருந்து படையினர் நேற்று மாலை 6 மணியில் இருந்து தொடர்ச்சியாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் பூநகரிப் பிரதேசம் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் பாரிய சத்தங்களைக் கேட்கக்கூடியதாக இருந்துள்ளது. இதனால் குருநகர், கொழும்புத்துறை, பாசையூர் மற்றும் அரியாலை ஆகிய இடங்களின் மக்கள் பீதியடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல்கள் எதனையும் நடத்தவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது www.tamilwin.com

  24. வன்னி மீதான தனது கொடூரப் போரைத் தீவிரப்படுத்தியிருக்கின்றத

  25. வன்னியைக் கைப்பற்றப் போவதாக் கூறிக்கொண்டு அரசு அப்பாவித் தமிழ் மக்கள் மீது விமானக் குண்டுத் தாக்குதல்களையும் ஷெல் தாக்குதலையும் நடத்திக் கொலை செய்வதை கடுமையாகக் கண்டிக்கின்றோம். தென் பகுதி சிங்கள மக்கள் மத்தியில் வன்னியை கைப்பற்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி மாகாண சபைத் தேர்தல்களில் வெற்றி பெறவே தமிழ் மக்கள் அழிக்கப்படுகின்றனர் என்று இடது சாரி முன்னணி தெரிவித்துள்ளது. முல்லைத்தீவில் விமானத் தாக்குதல் மற்றும் ஷெல் தாக்குதல்கள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே இடது சாரி முன்னணியின் அமைப்புச் செயலாளரும் சம்பிரகமுவ மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளருமான சமில் ஜயநெத்தி இவ்வாறு தெரிவித்தர். மேலும் : விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்திக் கொண்டு பிரத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.