ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
வன்னியைக் கைப்பற்றப் போவதாக் கூறிக்கொண்டு அரசு அப்பாவித் தமிழ் மக்கள் மீது விமானக் குண்டுத் தாக்குதல்களையும் ஷெல் தாக்குதலையும் நடத்திக் கொலை செய்வதை கடுமையாகக் கண்டிக்கின்றோம். தென் பகுதி சிங்கள மக்கள் மத்தியில் வன்னியை கைப்பற்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி மாகாண சபைத் தேர்தல்களில் வெற்றி பெறவே தமிழ் மக்கள் அழிக்கப்படுகின்றனர் என்று இடது சாரி முன்னணி தெரிவித்துள்ளது. முல்லைத்தீவில் விமானத் தாக்குதல் மற்றும் ஷெல் தாக்குதல்கள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே இடது சாரி முன்னணியின் அமைப்புச் செயலாளரும் சம்பிரகமுவ மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளருமான சமில் ஜயநெத்தி இவ்வாறு தெரிவித்தர். மேலும் : விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்திக் கொண்டு பிரத…
-
- 0 replies
- 537 views
-
-
தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் இன்று அதிகாலையும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருப்பதாக, தமிழ்நாடு கடற்றொழிலாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளது. 500இற்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகளில் கச்சதீவுக்கு அருகில் தொழிலில் ஈடுபட்டபோது, அங்கு சென்ற கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.சில கடற்றொழிலாளர்கள் கடலில் குதித்ததுடன், மேலும் சிலர் படகில் மறைந்திருந்த காரணத்தினால், உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படாத போதிலும், 40 படகுகள் சேதமடைந்துள்ளன என தமிழகத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.tamilseythi.com/tamilnaadu/tami...2008-07-31.html
-
- 23 replies
- 3k views
-
-
யூதர்களுக்கு ஹிட்லர் போல, தமிழர்களுக்கு வாய்த்த ராஜபக்ச - சு.ஞாலவன் - குடியானவன் ஒருவன் கடும் பிரயத்தனங்களின் இறுதியிலே பேராற்றல் மிக்க முனிவர் ஒருவரைச் சந்திக்கிறான். 'சுவாமி! வாழ்க்கையில் துன்பங்களை மாத்திரமே சந்தித்து வரும் எனக்கு விரும்பியவற்றை எல்லாம் பெற்று மேன்மையான வாழ்க்கையை அடைந்துகொள்வதற்கான சக்தியை நீங்கள் அளிக்கவேண்டும்" என்று அவரை வணங்கினான். அவனுடைய வேண்டுதலுக்கு இரங்கிய முனிவர் தன் கைகளினால் அவனை ஆசீர்வதித்து விட்டு 'நீ கேட்டுக்கொண்ட சக்தியை இக் கணத்திலிருந்தே நான் உனக்கு அருளிவிட்டேன். இனிமேல் எது உனக்குத் தேவைப்பட்டாலும் என்னை நினைத்துக்கொண்டு தேவையானதை உரத்துக்கூறு! உடனே அது உனக்குக் கிடைக்கும். ஆனாலும், ஒரு நிபந்தனை: என்னை நினைக்கும்போது …
-
- 5 replies
- 1.5k views
-
-
சிங்கள தீவிரவாதப் போக்குடையவர்களின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைப் போக்கும், பரிவு மனப்பான்மை, புரிந்துணர்வு, பகிர்ந்தளிக்கும் ஆற்றல் என்பவற்றிலுள்ள குறைபாடுகளுமே இன்று நாட்டின் இனப்பிரச்சினை இவ்வளவு தூரம் வளர்ச்சியடைவதற்கு முக்கிய காரணம் என பொறியியல் மற்றும் கட்டுமான அமைச்சர் டாக்டர்.ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். http://www.tamilseythi.com/srilanka/rajitha-2009-08-10.html
-
- 0 replies
- 769 views
-
-
பாலமோட்டை, நவ்வி, குஞ்சுக்குளம் பகுதிகளில் முன்நகர்வுகள் முறியடிப்பு: 15 படையினர் பலி- 29 பேர் காயம் [சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2008, 08:12 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டை, நவ்வி, குஞ்சுக்குளம் வரையான பகுதிகளில் மூன்று முனைகளில் சிறிலங்காப் படையினர் இன்றும் நேற்றும் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில், 15 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 29 பேர் காயமடைந்துள்ளனர். பாலமோட்டை, நவ்வி, குஞ்சுக்குளம் வரையான பகுதிகளில் இன்று சனிக்கிழமை காலை 7:10 மணிமுதல் மாலை 6:00 மணிவரை மூன்று முனைகளில சிறிலங்காப் படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்நகர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். விடுதலைப்…
-
- 4 replies
- 1.8k views
-
-
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை மீதும் அதனைச் சுற்றியுள்ள குடிமனைகள் மீதும் சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ள கண்மூடித்தனமான எறிகணைத்தாக்குதல் ஐக்கியநாடுகள் சபையின் போரியல் விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது என்பதுடன் இத்தாக்குதலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாக சர்வதேச ஊடகமொன்றுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: “வன்னி பெருநிலப்பரப்பை கைப்பற்றப்போவதாகக் கூறிக்கொண்டு படை நடவடிக்கையை மேற்கொண்டுள்ள சிறிலங்கா படை தற்போது அங்கு விடுதலைப்புலிகளின் நிலைகள் மீது தாக்குவதாகக் கூறிக் கொண்டு மக்கள் குடியிருப்புகள், வைத்தியசாலை பாடசாலைகள், சிறுவர் இல்…
-
- 0 replies
- 635 views
-
-
சார்க்” மாநாட்டுக்காக இறக்குமதி செய்யப்பட்ட குண்டு துளைக்காத வாகனங்களுக்காக அமைச்சர்கள் மத்தியில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “கடந்த ஆகஸ்ட் 2 ஆம் 3 ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெற்ற “சார்க்” மாநாட்டுக்காக 31 குண்டுதுளைக்காத கார்களும் 100 ஜீப் வாகனங்களும் இறக்குமதி செய்யப்பட்டன. இந்தநிலையில் பல அமைச்சர்கள், குண்டுதுளைக்காத கார்களைப் பெற்றுக் கொள்வதற்காக, உயர் காவல்துறை அதிகாரிகளிடம் தமது பெயர்களையும் புலனாய்வுத் தகவல்களில் அச்சுறுத்தல் இருப்பதாகக் காட்டும் வகையில் சேர்த்துக்கொள்ளுமாறு கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் உள்ள அமைச்சர்களுக்கே குண்டு துளைக்காத கார்கள் வழங்கப்படவேண்டும் என …
-
- 3 replies
- 1.1k views
-
-
வன்னியின் வைத்திய சேவைகள் மீது இறுகி வரும் பிடி http://www.nesohr.org/files/Siege_on_healt...es_in_Vanni.pdf வன்னியில் இடம்பெயர்ந்துள்ளோர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது http://www.nesohr.org/files/Needs_of_IDPs.pdf வடக்கு கிழக்கு மனித உரிமைகள் அமைப்பின் ஏனைய அறிக்கைகள் http://www.nesohr.org/hrr/
-
- 3 replies
- 1.8k views
-
-
அழுத்துக http://puspaviji13.net84.net/page6.html http://puspaviji13.net84.net/
-
- 0 replies
- 1.1k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளை தேடியழிக்கும் நோக்குடன் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட ஊடுருவல் நடவடிக்கையில் - விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி - சிறப்பு அதிரடிப்படை உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 640 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் சார்க் மாநாடு நடைபெற்ற காலப்பகுதியில் இந்திய - சிறிலங்கா நாடுகளின் தலைவர்கள் சிரித்தவாறே கைலாகு கொடுத்த புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்தபோதும் அங்கு இடம்பெற்ற பல சம்பவங்களால் சிறிலங்கா அரசு தரப்பு மீது இந்திய அரசின் உயர்மட்டத்தினர் பயங்கர கடுப்பில் இருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 954 views
-
-
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில், கொடியேற்ற உற்சவத்தின்போது, குடாநாட்டின் சகல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். கொடியேற்றத்தின் போது பக்தர்கள் முண்டியடித்ததால் அந்நேரத்தில் சன நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது. உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட போதும் குற்றச் செயல்கள் எதுவும் இடம்பெறவில்லை. கடந்தவருடத்தை விட இம்முறை ஆலய வளாகப் பகுதிகளில் அதிக பந்தல்கள் போடப்பட்டுள்ளதுடன் தாகசாந்தியும் வழங்கப்பட்டன. தெல்லிப்பழை துர்க்கா மணிமண்டபம், நல்லை திருஞானசம்பந்தர் மடம் ஆகியவற்றில் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. யாழ்ப்பாண மாநகரசபை இந்துசமய விவகாரக் குழுவினரால் வருடாவருடம் வெளியிடப்ப…
-
- 111 replies
- 8.8k views
-
-
இலங்கை வம்சாவளியினரான "எம்.ஐ.ஏ' என்று அழைக்கப்படும் பிரிட்டனின் முன்னணிப் பாடகியான மாதங்கி அருள் பிரகாசம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர் என்று தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் மறுத்திருக்கிறார். இலங்கை துள்ளிசைக் கலைஞர் டிலான், விடுதலைப்புலிகளின் நடைமுறைகளை எம்.ஐ.ஏ.பயன்படுத்துவதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தார். ஒளிபரப்பில் எம்.ஐ.ஏ.ஆடைகள் மற்றும் புலிகளின் நடைமுறைகளை தொடர்ந்து பயன்படுத்துவதாகவும் தனது தந்தையை விடுதலைப்போராளியென எம்.ஐ.ஏ.குறிப்பிட்டதாகவும் டிலான் தெரிவித்திருந்தார். ஆனால் இதனை எம்.ஐ.ஏ. மறுத்துள்ளார்.ஒருபோதும் எந்த வொரு பயங்கரவாத குழுக்களுக்கும் தான் ஆதரவளிக்கவில்லையென கூறியுள்ள எம்.ஐ.ஏ., டிலானின் முயற்சிகள் சுயமேம்பாட்டுக்காக வெட்க…
-
- 15 replies
- 2.8k views
-
-
ஈழத் தமிழர்கள் வெறுக்கத் தக்கவர்கள் அல்ல: மறவன்புலவு சச்சிதானந்தம் சென்னை, ஆக. 9: ""ஈழத் தமிழர்கள் வெறுக்கத் தக்கவர்கள் அல்ல. தமிழகத் தமிழர்களின் பங்காளிகள்'' என்று காந்தளகம் பதிப்பக உரிமையாளர் மறவன்புலவு சச்சிதானந்தம் குறிப்பிட்டார். அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் "அறவாணர் சாதனை விருது 2007' வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு அனைத்துலக அறவாணர் சாதனை விருது வழங்கப்பட்டது. சச்சிதானந்தம், மருத்துவர் ச.சண்முகம் ஆகியோருக்கு அனைத்திந்திய அறவாணர் சாதனை விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சச்சிதானந்தம் பேசியது: இந்த விருது ஈழத் தமிழர்களுக்குக் கிடைத்ததாகக் கருதுகிறேன். காரணம் ஈழத்…
-
- 3 replies
- 1.6k views
-
-
தனியார் மயப்படுத்தப்பட்ட 40 அரச நிறுவனங்களை அரசாங்கம் மீண்டும் பொறுபேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், வரையறுக்கப்பட்ட இலங்கை மா உற்பத்தி கூட்டுத்தாபனம் போன்ற தனியார்மயப்படுத்தப்பட்ட 40 அரச நிறுவனங்களை அரசாங்கம் பொறுபேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனங்களை பொறுபேற்றால் அரசாங்கம் அதிக வருமானத்தை ஈட்டமுடியும் என இது குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவொன்று அரசாங்கத்திடம் அறிக்கை ஒன்றின் மூலம் பரிந்துரை செய்துள்ளது. தனியார்மயப்படுத்தப்பட்ட அரச நிறுவனங்கள் தொடர்பில் அமைக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவிடம் இந்த அறிக்கை விரைவில் கையளிக்கப்படும் என அரச உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். http://isoorya.blogspot.com/ htt…
-
- 1 reply
- 927 views
-
-
நூல் வெளியீட்டுத் திணைக்களம் தேவைக்கு மேலதிகமாக அச்சிடப்பட்ட 25 இலட்சம் இலவச பாடநூல்கள் மீண்டும் அரைத்து கடதாசியாக்கும் பொருட்டு கடதாசி ஆலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன. இந்தப் பாடநூல் தொகையின் பெறுமதி ஐந்து கோடி ரூபாவென தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய பாடப் புத்தகங்களை சேமிப்பதற்காக களஞ்சியசாலையில் இடத்தை ஒதுக்கும் பொருட்டு இந்த மேலதிக புத்தகத் தொகையை அடுத்த வாரத்தில் வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு அனுப்பிவைக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கல்வி வெளியீட்டுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார். பாடநூல்களை அச்சிடுவதற்கு பொறுப்பான அதிகாரிகளின் பொறுப்பற்றதும் தூரநோக்கற்றதுமான செயற்பாடுகளால் ஐந்து கோடி ரூபா வீண் விரயமா…
-
- 3 replies
- 973 views
-
-
பலவீனமா? தந்திரோபாயமா? வன்னிக் களமுனை குறித்துக் குழப்பம்! - ஜெயராஜ் - விடுதலைப் புலிகள் விரைவில் தோற்கடிக்கப்பட்டு விடுவர்; அடுத்த மாவீரர் தினத்தில் வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளிடம் எதுவும் இருக்காது பதுங்குகுழிகளிலேயே மாவீரர் நாளைக் கொண்டாட வேண்டும்; கிளிநொச்சி மீதான தாக்குதலுக்கு இராணுவம் தயாராகிவிட்டது என்பது போன்ற பிரகடனங்கள் சிறிலங்கா அரச தரப்பில் இருந்து வெளிவந்த வண்ணமுள்ளன. இவ்வாறாகப் பிரகடனங்கள் வெளிவருகின்றபோதும் - சிறிலங்காப் படைத்தரப்பில் தற்பொழுது சில கேள்விகள் தவிர்க்கப்பட முடியாதவையாகவும், உடனடியாகப் பதில் தேடப்பட வேண்டியவையாகவும் உள்ளன. சற்று, ஆழமாக நோக்கினால் படைத்தரப்பு சில குழப்பங்களுக்கு உள்ளாகியுள்ளதை நிராகரித்துவிட முடி…
-
- 7 replies
- 1.5k views
-
-
சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவின் பகை நாடுகள். ஆனால் இலங்கை? சாயங்கால வேளை.அதனால்தான் இலங்கை பாகிஸ்தான் சீனா என இந்தியாவின் இடது வலது எல்லைப்புற நாடுகளை வைத்து நம்மிடம் சீட்டாடிக் கொண்டியில் காஸ்மோபாலிட்டன் கிளப்புக்குப் போய் மது அருந்திய படி சீட்டாடுவார்கள் இல்லையா? அப்படி ஒரு கிளப்தான் இலங்கைக்கு இந்தியாருக்கிறது. இந்த சீட்டாட்டத்தில் மொத்தமாக அழிந்து போகும் ஆபத்தில் சிக்கியிருப்பவர்கள் ஈழத்தமிழர்கள். தமிழக மீனவர்களும் கூட, இந்தியாவின் அந்தப்புறத்தில் நடைபெறும் இம்மாதிரி விளையாட்டுக்கள் ஈழத்தமிழரின் உயிரையும் இந்தியத் தமிழரின் உயிர்களையும் சேர்த்தே குடித்துக் கொண்டிருக்கிறது. 1980_ பதுகளில் கொழுந்து விட்டெறிந்த தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கலவரத்தின் விளைவாய் இந்திய…
-
- 0 replies
- 3.7k views
-
-
வடக்கு களமுனைகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்டுவரும் வலிந்த தாக்குதல்கள் காரணமாக படையினர் கடும் இழப்புகளை சந்தித்துவருவதாக ‘லக்பிம’தனது வாராந்த ஆய்வில் தெரிவித்துள்ளது. படையினரின் வலிந்த தாக்குதலுக்கு தமது கடும் எதிர்ப்பை காட்டிவந்த விடுதலைப்புலிகள் கடந்த முதலாம் திகதி முதல் தமது வலிந்த தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக லக்பிமவின் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மல்லாவிக்கு தென்புறமான பகுதியூடாக முன்னேரிய 57டிவிசன் படையினர் தமது நிலைகளை பலப்படுத்திக்கொண்டிருந்த வேளையில் விடுதலைப்புலிகளின் சிறப்பு படையணிகளான இம்ரான் பாண்டியன் படையணி மற்றும் சார்ள்ஸ் அன்டனி படைப்பிரிவின் கடும் தாக்குதலுக்கு முகம் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 1.2k views
-
-
வீரகேசரி வாரவெளியீடு 8/10/2008 9:11:32 AM - விடுமுறையின்றி வீட்டில் நின்ற, சேவையின்போது தப்பிச் சென்ற 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை கைது செய்து சிறைத் தண்டனை வழங்கப்போவதாக இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார். படையினருக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலம் தொடர்பாக அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்தகால யுத்த சூழ்நிலையின் போது இராணுவ சேவையில் இணைந்து கொண்ட இராணுவ வீரர்களுள் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எந்தவித அறிவித்தலுமின்றி இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இவர்களுள் தற்போது 1600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையவர்களை கைது செய்யும் பணியில் பாதுகாப்பு படையினர் தேடுதலை மேற்கொண்டு வருக…
-
- 0 replies
- 818 views
-
-
தூத்துக்குடி: சென்னை திருமங்கலத்தில் சில தினங்களுக்கு முன் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த வெடிபொருளுக்கான மூலப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடல் வழியாக அவர்கள் இலங்கைக்கு வெடி பொருட்கள் கடத்தியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை கடலோர பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். வனத்துறையினரும், கடலோர பாதுகாப்பு படையினருடன் இணைந்து தூத்துக்குடி முதல் இராமேஸ்வரம் வரை உள்ள 21 தீவுகளை கண்காணித்து வருகின்றனர். இதுதவிர நெல்லை, தூத்துக்குடி மாவட்ட அகதிகள் முகாம்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அகதிகள் பயன்படுத்தும் வாகனங்களும் தீவிர …
-
- 0 replies
- 1.1k views
-
-
வன்னியின் போர்முனை மோதல்கள் தற்போது வெள்ளாங்குளம், தென் மல்லாவி மற்றும் துணுக்காய் ஆகிய இடங்களில் இடம்பெற்று வருவதாக “லக்பிம” செய்தித்தாள் தமது பாதுகாப்புக் கட்டுரையில் தெரிவித்துள்ளது. பிந்திக்கிடைத்த செய்திகளின்படி போர் முன்னரங்குகளில் இருந்த பெண் போராளிகளுக்குப் பதிலாக சார்ள்ஸ் அன்ரனி படையணியும் இம்ரான் பாண்டியன் படையணியும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் “லக்பிம” குறிப்பிட்டுள்ளது. அத்துடன் மல்லாவியிலும் துணுக்காயிலும் 700 க்கு மேற்பட்ட போராளிகள் மோதல் களத்தில் பிரவேசித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகக் களமுனையில் பாரிய எதிர்ப்புகளைப் படையினர் சந்தித்து வருவதாகவும்,அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை படையினர் பூநக…
-
- 0 replies
- 905 views
-
-
பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையின் இறுதி கட்டத்தில் படையினர் இருப்பதாகப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். மெதிரிகிரிய பிரதேசத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். பயங்கரவாதம் தற்போது கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு மாவட்டங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருப்பத
-
- 3 replies
- 1.3k views
-
-
கட்சி நிதி என்ற போர்வையில் தெரிவு செய்யப்பட்ட பிரபல வர்த்தர்களை அலரி மாளிகைக்கு அழைத்து ஜனாதிபதியினால் நிதி திரட்டப்பட்டுள்ளதாக பிரபல சிங்கள ஞாயிறு இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் டலஸ் அலப்பெரும மற்றும் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர்களில் ஒருவரான சஜித் வாஸ் குணவர்தன ஆகியோரே இந்தத் திட்டத்தை செயற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வர்த்தகர்களுக்கு விருந்துபசாரத்தை வழங்குவதற்காக பெருமளவிலான நிதி செலவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. வர்த்தகர்களுடான இணைப்பை ஏற்படுத்துவதற்கு 20 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்ததாகவும
-
- 0 replies
- 444 views
-
-
தமிழக மீனவர்கள் தினந்தோறும் கொல்லப்படும்போது, இந்திய இலங்கையின் நூற்றாண்டு கால ஆழமான உறவினை, பிரதமர் மன்மோகன் சிங் வெளிப்படுத்தியுள்ளார். சார்க் மாநாட்டில். இது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போலிருந்தது. கச்சதீவை மீளப் பெற்றால், இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறல்கள் தடுக்கப்படுமென தப்புக் கணக்குப் போடப்படுகிறது. இந்த கச்சதீவு கைமாறிய வரலாற்றை சிறிது பார்க்கலாம். கச்சம் என்றால் ஆமை என்றும் பொருள்படும். பச்சை நிற ஆமைகள் நிறைந்த இடமாக அத்தீவு விளங்கியதால், அதனை பச்சைத்தீவென்றே முன்பு அழைத்தார்கள். பின்னர் கச்சதீவாக மாறிவிட்டது.1882 ஆம் ஆண்டு முதல் இராமநாதபுரம் சேதுபதியின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சதீவு, பின்னர் கிழக்கிந்திய கம்பனியால் குத்தகைக்கு எடு…
-
- 1 reply
- 1.2k views
-