Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது! யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2025/1448885

  2. Published By: Digital Desk 1 29 Sep, 2025 | 10:30 AM பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் 18வது மைல்கல் அருகே இடம்பெற்ற விபத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பூநகரி நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள், அதன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் உடன் பயணித்த சிறுமியும் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த சிறுமி கொடிகாமத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூநகரி பொலிஸார் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். h…

  3. அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் இல்லை – ஜனாதிபதி உறுதி! கடந்த ஆண்டில் இராஜதந்திர உறவுகளில் சமநிலையைப் பராமரிக்க இலங்கையினால் முடிந்தது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தொடர்ந்தும் பொருளாதாரம் மற்றும் சந்தையில் தேசிய எல்லைகள் இல்லாத உலகில், எந்த நாடும் தனியாக முன்னேற முடியாது என்றும், சிறந்த இராஜதந்திர உறவுகள் இலங்கையை உலகின் உச்சத்திற்கு உயர்த்தும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு, தேசிய ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்றும், இலங்கை வரலாற்றில் எந்த இன மோதல்களும் தலைதூக்காத ஆண்டாக கடந்த வருடம் வரலாற்றில் இணைவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். டோக்கியோவில் உள்ள Reiyukai மண்டபத்தில் நேற்று (28) பிற்பகல் ஜப்பானில் வ…

  4. மேல் மாகாண பாடசாலை மாணவர்களிடம் அதிகம் போதைப்பொருள் பயன்பாடு! நாட்டில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் (NDDCB) தெரிவித்துள்ளது. இவர்களில் கொழும்பு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கிரோண்ட்பாஸ், தொட்டலங்க, கொம்பனி வீதி, அங்குலானை,வாழைத்தோட்டம், பாணந்துறை, தெஹிவளை, கல்கிஸ்ஸை, ஹிக்கடுவை மற்றும் பல இடங்களில் குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் போதைப்பொருள் பாவனைக்கு ஆளாகி வருவதாகவும் NDDCB குறிப்பிட்டுள்ளது. மேலதிகமாக, கண்டி மாவட்டத்தில் சில பகுதிகள் பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாக அதிக வா…

  5. 28 Sep, 2025 | 05:23 PM (எம்.மனோசித்ரா) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்துக்கு சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (28) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கதிர்காமத்தில் இருந்து கொழும்புக்கு செல்லும் வழியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின் போது, தான் சிறையில் இருந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய பங்களிப்பிற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும் இதன் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு குறித்து வ…

  6. Published By: Digital Desk 3 28 Sep, 2025 | 03:09 PM மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் நாளை திங்கட்கிழமை (29) மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்கல் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார். மன்னாரில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (28) 57 ஆவது நாளாக போராட்டம் இடம் பெற்று வரும் நிலையில் அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டம் முழுவதும் நாளை திங்கட்கிழமை பொது முடக்களுக்…

  7. 28 Sep, 2025 | 05:38 PM (லியோ நிரோஷ தர்ஷன்) 1995 உலக மகளிர் மாநாட்டின் 30ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பீஜிங்கில் உலக மகளிர் உச்சி மாநாட்டை நடத்த சீனா ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய அடுத்த வாரம் இறுதியில் சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் மற்றும் அந்நாட்டு பிரதமர் உள்ளிட்டவர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கவுள்ளார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஐக்கிய நாடுகள் சபையின் நான்காவது உலக மகளிர் மாநாடு பீஜிங்கில் நடைபெற்றது. அந்த மாநாட்டைக் கொண்டாடுவதற்கும், பீஜிங் பிரகடனம் மற்றும் செயற்றிட்டத்தின் அமுலாக்கத்தை ஊக்குவிப்பதற்கும், சீன அரசாங்கமும் ஐ.நா. பெண்கள் அமைப்…

  8. Published By: Vishnu 28 Sep, 2025 | 06:44 PM ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க சென்ற ஒருவரால் கொடுக்கப்பட்ட தகலுக்கமைய குழந்தை மீட்கப்பட்டு ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தற்பொழுது குழந்தை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (28) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் இவ்வாறு குழந்தை மீட்கப்பட்ட குழந்தை ஆரோக்கியமான நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. குறித்த குழந்தையை பொலிஸாரின் ஊடாக நீதிமன்றில் பாரப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்…

  9. 28 Sep, 2025 | 02:21 PM (இராஜதுரை ஹஷான்) 2014 முதல் 2022ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் இலங்கை மின்சார சபை 594,368 மில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக கோப் குழுவில் வெளிப்படுத்தப்பட்டது. இலங்கை மின்சார சபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்குரிய கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் நடைமுறை செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றை பரிசீலனை செய்வதற்காக கோப் குழுவின் தலைவர் நிஷாந்த சமரவீரவின் தலைமையில் குழு கடந்த வாரம் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியது. கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மின்சார சபையின் நட்டத்துக்கான பல காரணிகள் வெளிப்படுத்தப்பட்ட நிலையில் மின்சார சபையில் போதுமான சேவையாளர்கள் உள்ள நிலையில் ஒருசில கண்காணிப்பு நடவடிக்கைகள் வெளியக தரப்பிட…

  10. Published By: Digital Desk 3 28 Sep, 2025 | 10:21 AM (லியோ நிரோஷ தர்ஷன்) தீவிரவாதம் உலகமயமாக்கப்பட்ட வர்த்தகமாக மாறியுள்ளது. இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் இந்த யதார்த்தத்தின் கொடூரமான நினைவூட்டலாக உள்ளது. எனவே கடல்சார் பாதுகாப்பை எந்த ஒரு நாடும் தனியாக அடைய முடியாது என தெரிவித்த ஓய்வுப்பெற்ற இந்திய கடற்படை அதிகாரி அட்மிரல் அனில் குமார் சவ்லா, அனைத்துக் கடற்படைகளின் கூட்டு முயற்சி மற்றும் கடல்சார் இராஜதந்திரத்தின் தனித்துவமான அனுகூலங்களில் சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார். கொழும்பில் நடைபெற்ற 'கடல்சார் உரையாடல்' மாநாட்டில் கலந்துக்கொண்ட போதே அட்மிரல் அனில் குமார் சவ்லா மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், இலங…

  11. 28 Sep, 2025 | 10:49 AM (நா.தனுஜா) முன்னைய அரசாங்கங்களால் நினைவுகூரலுக்கான உரிமை மீது மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், இருப்பினும் தமது அரசாங்கம் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை முன்னிலைப்படுத்தாத வகையில் போரில் உயிரிழந்த அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான முழுமையான சுதந்திரத்தை வழங்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அந்த இடைவெளி எதிர்வருங்காலங்களில் மேலும் வலுப்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடருக்கு சமாந்தரமாக வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவின் 29 ஆவது கூட்டம் கடந்த திங்கட்கிழமை (22) ஜெனிவாவில் ஆரம்பமானது. எதிர்வரும் ஒக்டோபர் மா…

  12. Published By: Digital Desk 1 28 Sep, 2025 | 03:10 PM யாழ்ப்பாண சிறையில் 52 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்ததன் பின்னர், விடுவிக்கப்பட்ட இந்தியாவில் ஆந்திராவைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் செப்டம்பர் 30 ஆம் திகதி வீடு திரும்புவார்கள் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மீனவர்களை ஏற்றிச் சென்ற படகு செப்டம்பர் 27 ஆம் திகதி இலங்கை கடற்கரையிலிருந்து காக்கிநாடாவுக்குப் புறப்பட்டது. நான்கு மீனவர்களும் வெள்ளிக்கிழமை (26) இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். புதுடில்லியில் உள்ள ஆந்திரப் பிரதேச பவனில் உள்ள மாநில அரச அதிகாரிகளின் முயற்சிகளைத் தொடர்ந்து அவர்கள் நாடு கடத்தப்பட்டனர். இலங்கை கடலோர காவற்படை செப்டம்பர் 26 ஆம் திகதி மண்டபம் முகாமிலுள்ள இந்திய கடலோர காவற்படையி…

  13. 27 Sep, 2025 | 04:34 PM ( எம்.நியூட்டன்) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவரைச் சிரேஷ்ட பேராசியரகவும், சிரேஷ்ட விரிவுரையாளர்கள் ஆறு பேரைப் பேராசிரியர்களாகவும் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. விவசாய பீடத்தின் விவசாய உயிரியல் துறையைச் சேர்ந்த ரோசிரியர் ஒருவரைச் சிரேஷ்ட பேராசிரியராகவும், மருத்துவ பீடத்தின் சத்திரசிகிச்சையியல் துறை மற்றும் உடற்கூற்றியல் துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூன்று பேரையும், கலைப்பீடத்தின் புவியியல் துறை, இந்து கற்கைகள் பீடத்தின் சமஸ்கிருதத்துறை மற்றும் இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தின் விளையட்டு விஞ்ஞான அலகைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரையும் பேராசிரியர்களாகப் பதவி உயர்…

  14. 27 Sep, 2025 | 09:06 PM ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சனிக்கிழமை (27) முற்பகல் ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். தனது விஜயத்தின் முதல் நிகழ்வாக, ஜப்பானின் ஒசாகாவில் நடைபெறுகின்ற “எக்ஸ்போ 2025” கண்காட்சியில் இலங்கை தின நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்றார். இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகம் இணைந்து ஏற்பாடு செய்த இலங்கை தின நிகழ்வு, இலங்கையின் அடையாளத்தை பிரதிபலிக்கும் பல்வேறு கலாசார அம்சங்களுடன் வண்ணமயமாக இருந்தது. இந்த கலாசார நிகழ்வைக் காண ஏராளமான ஜப்பானியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் கூடியிருந்தனர். இந்த நிக…

  15. இலங்கை தற்போது நிலைபேறான மற்றும் பங்கேற்பு பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புகின்றது – ஜப்பானில் ஜனாதிபதி September 27, 2025 ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சனிக்கிழமை (27) முற்பகல் ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். தனது விஜயத்தின் முதல் நிகழ்வாக, ஜப்பானின் ஒசாகாவில் நடைபெறுகின்ற “எக்ஸ்போ 2025” கண்காட்சியில் இலங்கை தின நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்றார். இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகம் இணைந்து ஏற்பாடு செய்த இலங்கை தின நிகழ்வு, இலங்கையின் அடையாளத்தை பிரதிபலிக்கும் பல்வேறு கலாசார அம்சங்களுடன் வண்ணமயமாக இருந்தது. …

  16. “ஏக்கிய இராச்சிய” ; அரசியலமைப்பை கொண்டுவருவதற்கே அரசாங்கம் முயற்சி அதனைத் தோற்கடிக்க தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றுபடவேண்டும் என்கிறார் - கஜேந்திரகுமார் 28 Sep, 2025 | 09:12 AM (நா.தனுஜா) தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழர்களுக்கான முழுமையான தீர்வாக அமையாத “ஏக்கிய இராச்சிய” அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கே முயல்வதாகச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இவ்வேளையில் எதிரணியில் உள்ள தமிழ்த்தேசியக்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அதனை எதிர்க்காவிடின், “ஏக்கிய இராச்சிய” அரசியலமைப்பை அரசாங்கம் நிறைவேற்றிவிடும் என எச்சரித்துள்ளார். இலங்கை - சுவிஸ்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிஸ்லா…

  17. ஆடை வாங்க பணம் தராததால் உயிரை மாய்த்த சிறுமி மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சனிக்கிழமை (27)மாலை இடம் பெற்றுள்ளது. கொக்கட்டிச்சோலை குளிமடு காஞ்சிரம்குடாவைச் சேர்ந்த 13 வயதுடைய லிங்கம் லட்சுமி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுமியின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்துவரும் நிலையில் குறித்த சிறுமி அவரது தாய் மற்றும் இரட்டை சகோதரியும் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் தந்தையார் இரட்டை சகோதரிகளுக்கு ஆடைகள்வாங்குவதற்கு பணம் அனுப்பியுள்ளதுடன் அடுத்த மாதம் நாட்டுக்கு திரும்பி வந்ததும் குறித்த சிறுமிக்கு ஆடைகள் வாங்குவதற்கு பணம் தருவதாக கூறியுள்ளார். தனக்கு ஆடைகள் வாங்க தந்தை பணம் தரவில்லை என கோபமடை…

  18. திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் வழக்கு விவகாரத்தை தாம் கையாள்வதாக சட்டத்தரணி சுமந்திரன் கேட்டபோது அந்த விடயத்தை வைத்தியர் மனோகரன் நிராகரித்துள்ளதாக கனடாவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் றோய் சமாதானம் தெரிவித்துள்ளார். லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, குறித்த வழக்கு விவகாரத்தை படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவரின் தந்தையான மனோகரனே ஐக்கிய நாடுகள் சபை வரைக்கும் கொண்டு சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வைத்தியர் மனோகரனால் சுமந்திரன் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், https://tamilwin.com/

  19. 27 Sep, 2025 | 05:02 PM (எம்.மனோசித்ரா) இலஞ்சம் அல்லது ஊழல் என்பவற்றுடன் அதிகளவில் தொடர்புடைய முதல் 10 பொது சேவைகளில் பொலிஸ் முதலிடம் வகிக்கிறது. அரசியல்வாதிகள், சுங்கம், குடிவரவு – குடியகல்வு திணைக்களம், பாடசாலைகள், அமைச்சுக்கள் என முக்கிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த நிலைமை மாற்றப்பட்டால் மாத்திரமே இலஞ்ச, ஊழல் அற்ற நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்று இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணைகள் தொடர்பான ஆணைக்குழுவின் தலைவர் நீல் இத்தவெல தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மக்களின் நிலைப்பாட்டுக்கமைய இலஞ்சம் அல்லது ஊழல் என்பவற்றுடன் அதிகளவு தொடர்புடையது பொலிஸா…

  20. Published By: Vishnu 27 Sep, 2025 | 01:59 AM இலங்கை இராணுவத்தின் 76 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆசீர்வாதம் பெற ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு மத நிகழ்ச்சித் தொடர் இன்று, 2025 செப்டம்பர் 26, அன்று அநுராதபுரம் புனித ஜய ஸ்ரீ மஹா போதியில் நடைபெற்ற மத அனுஷ்டானங்களுடன் ஆரம்பமாகியது. இந்த மத நிகழ்ச்சி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ருவன்வெலி மகா சேய முன்பிருந்து ஆரம்பமாகிய இராணுவக் கொடிகளை ஏந்திய ஊர்வலம், ஜய ஸ்ரீ மஹா போதிக்குச் சென்று அங்கு ஆசீர்வாதங்களைப் பெற்றது. இந்த மதச் சடங்குகள் எட்டு வழிபாட்டுத் தலங்களுக்குமான (அடமஸ்தந்திபதி) பிரதம தேரர் அதி வண. கலாநிதி பல்லேகம ஹேமரத்ன நாயக்க தேரரின் தலைமையில் நடைபெற்றன. மேலும் இராணுவக் கொடிகள…

  21. 76 ஆவது ஆண்டு நிறைவு சீன மக்கள் குடியரசு தோற்றுவிக்கப்பட்டதன் 76 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொழும்பு சினமன் லைப் ஹோட்டலில் நேற்று (25) இடம்பெற்ற கொண்டாட்ட வரவேற்பு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார். இலங்கையில் அமைந்துள்ள சீனத் தூதரகம் ஏற்பாடு செய்த ஆண்டு விழா வரவேற்பு நிகழ்வில், இராஜதந்திரிகள் உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். https://web.facebook.com/Deranatamil/posts/1353905240072086?ref=embed_post https://adaderanatamil.lk/top-picture/cmg0og7qk00nnqplpm1s73b58

  22. பாவனைக்கு உகந்த தரத்தில் அல்லாத பழைய மின் சாதன பொருட்கள் காரணமாக அதிகளவான எரிசக்தி இழப்பு ஏற்படுவதாக இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை தெரிவித்துள்ளது. பெரும்பாலும் 10 ஆண்டுகளுக்கும் மேலான குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்துவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற விழா ஒன்றுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ விக்ரமசிங்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஹர்ஷ விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் உரிய தரம் அல்லாத வீட்டு மின்சார உபயோகப் பொருட்கள் அதிக மின்சாரக் கட்டணத்திற்குக் காரணம் என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை பொதுவாக 10 ஆண்டுகளுக்…

  23. 2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025 செப்டம்பர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அனைத்து வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவு தனிநபர்கள், பங்குடமை, கூட்டாண்மைகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட பிற நிறுவனங்களுக்கு பொருந்தும். வரி செலுத்துவோர், செலுத்த வேண்டிய வரித் தொகையை இலங்கை வங்கியின் எந்தவொரு கிளையிலும் அல்லது இணையவழி வரி செலுத்தும் வசதி (OTPP) மூலமும் செலுத்தலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது. கொடுப்பனவுக்கான இறுதித் திகதியான செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு பின்னர் செலுத்தப்படும் தொகைகள், வங்கி வரைவோலை அல்லது கொடுப்பனவு உத்தரவு மூலம் தீர்க்கப்பட்டாலும், தாமதமான செலுத்துதல்…

  24. ஓயா திட்டத்தை உடன் நிறுத்துங்கள் – ரவிகரன் September 26, 2025 வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக்குளங்கள் மற்றும் அவற்றின் கீழான காணிகள், பழந்தமிழ் கிராமங்கள் என்பவற்றை ஆக்கிரமித்து மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் கிவுல் ஓயா என்னும் பெயரில் நீர்பாசனத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். எனவே தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக் குளங்கள் மற்றும் அவற்றின் கீழான காணிகளையும், தமிழர்களின் பூர்வீக கிராமங்களையும் அபகரித்து மேற்கொள்ளப்படவுள்ள இந்தக் கிவுல் ஓயா திட்டத்தினை உடன் நிறுத்தி, தமிழ் மக்கள் தமது பூர்வீக வாழிடங்களில் நிம்மதியாக வாழ்வதற்கும், பூர்வீக விவசாய நிலங்களி…

  25. மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம்; பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல் சனி, 27 செப்டம்பர் 2025 06:03 AM ஆசிரியர் - Editor II மன்னாருக்கு காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை தடுக்க முயன்ற மக்கள் மீது பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதில் பலர் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காற்றாலைக்கு எதிராக மன்னார் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடாத்தி வரும் நிலையில், காற்றாலை உதிரி பாகங்களை தீவுக்குள் கொண்டு செல்லும் முயற்சி நடந்துள்ளது. நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் முதல் கட்டமாக காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றிவந்த வாகனங்களை மக்கள் தடுத்து நிறுத்த முற்பட்ட போதிலும் மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை உதிரிபாகங்கள் கொண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.