ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
ஐ.நா. மனித உரிமை ஆணைய தலைவராக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ் பெண் நீதிபதி நவநீதம் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் தாண்டி இந்தப் பதவிக்கு இவர் வந்துள்ளார். 67 வயதாகும் நவநீதம் பிள்ளை ஏழை தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்தவர். இவரது தந்தை பஸ் டிரைவராக இருந்தார். நிறவெறி தலைவிரித்தாடியபோது அதற்கு இலக்காகி பல்வேறு இன்னல்களை சந்தித்தவர் பிள்ளை. மிகுந்த வறுமை, நிறவெறிக் கொடுமைக்கு மத்தியிலும் சிறப்பாக படித்து சட்டப் படிப்பை முடித்தார் பிள்ளை. தென் ஆப்பிரிக்காவின் நேடால் மாகாணத்திலேயே முதல் முறையாக வழக்கறிஞரான பெண் என்ற பெருமையும் பிள்ளைக்கு உள்ளது. 1968ம் ஆண்டு வக்கீலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர் இனவெறி கொடுமைகளுக்கு எதிராக போராடினா…
-
- 1 reply
- 1.1k views
-
-
http://www.tubetamil.com/view_video.php?vi...30870060538746e ஈழப் போராட்டத்த பற்றி ஒரு மானங்கெட்ட ஈழத்தமிழன் என்ன சொல்லுறான் எண்டு பாருங்கோ.... பார்த்து சந்தோசத்த படுங்கோ
-
- 4 replies
- 1.5k views
-
-
வன்னிக் களமுனையில் இடம்பெற்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் எட்டு சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 838 views
-
-
இலங்கை படையினருக்கு ஆயுதங்களை வழங்குவதில்லை என ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவற்றை மீறி ஐரோப்பிய நாடொன்று இலங்கைக்கு தொடர்ந்தும் ஆயுதங்களை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. இது இலங்கைக்கு கிடைத்துள்ள வெற்றியென மூத்த படையதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வன்னி படைநடவடிக்கைகளை நிறுத்தும் நோக்கில் புலிகளுடன் தொடர்புடைய தன்னார்வ அமைப்புகள், இலங்கைக்கு வழங்கவிருந்த 10 ஆயிரம் ஆயுதங்களை நிறுத்துமாறு குறித்த ஐரோப்பிய நாட்டிடம் கோரிக்கை விடுத்திருந்தன. எனினும் அதனையும் மீறி குறித்த நாடு அந்த ஆயுதங்களை இந்த வாரம் அனுப்பி வைத்துள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கிடைக்க உள்ள இந்த ஆயுதங்கள் மூலம் படையினரின் பலம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என…
-
- 5 replies
- 2.3k views
-
-
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பேரில் நடத்தப்படும் போரின் பல்வேறு அணுகுமுறைகளினால் மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டுவரும் அனைத்துலக அமைப்புகளுக்கும் பாதிக்கப்படும் மக்களுக்கும் இடையிலான தொடர்பு படிப்படியாக குறைந்துவரும் நிலை இன்றைய உலகில் காணப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 622 views
-
-
வவுனிக்குளம் மற்றும் துணுக்காய் ஒட்டங்குளம் பகுதிகளில் மொத்தம் 33 போராளிகள் வீரச்சாவடைந்த தாக்குதல்களில் 14 படையினர் பலியாகி 26 பேர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு இன்று அறிவித்துள்ளது. இதில் துணுக்காயில் நேற்று 8 படையினரும் வவுனிக்குளத்தில் நேற்று முந்தினம் 6 படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். இரு இடத்திலும் தலா 13 படையினர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையே ஒரு 120 மிமி எறிகணை செலுத்தி மற்றும் 2, 81 மிமி எறிகணை செலுத்தி, 2 ஆர் பி ஜி மற்றும் 50 வரையான ரி 56 துப்பாக்கிகள் மற்றும் 15 க்கும் மேற்பட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் என்பனவற்றையும் பிற ஆயுத தளபாடங்களையும் படைத்தரப்பு மீட்டுள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 3 போராளிகள் வெவ்வேறு கள முனைகளில் படையினரிடம் சரணடைந…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
சிறீலங்கா அரச படைகளின் வன்னி ஆக்கிரமிப்பு தொடரும் நிலையிலும் சார்க் மாநாட்டை ஒட்டி விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள போர் நிறுத்தம் இன்று 26-07-2008 இல் இருந்து 04-08-2008 வரை அமுலில் இருக்கும் என்று விடுதலைப்புலிகளின் அதிகார பூர்வ வானொலியான புலிகளின் குரல் தெரிவித்துள்ளது.
-
- 7 replies
- 1.3k views
-
-
பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வினை எட்ட முடியாது: யுத்தத்தின் மூலமே தீர்வு பெற்றுக் கொடுக்க முடியும் - கொழும்பு பேராயர் இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு சமாதானப் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு எட்டக்கூடிய காலம் கடந்து விட்டதாகக் கொழும்புப் பேராயர் ஒஸ்வல்ட் கோமிஸ் தெரிவித்துள்ளார். வத்திக்கான் வானொலிச் சேவைக்குப் பேராயர் அளித்த செவ்வியை மேற்கோள்காட்டி கத்தலிக்நெட் என்ற இணையத்தளம் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. யுத்தத்தின் மூலமே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க முடியும் என்ற ஓர் நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இரண்டு தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டு சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டால் அது மி…
-
- 48 replies
- 4.3k views
-
-
அரசிடம் எதிர்க்கட்சிகள் ஏதாவது கேள்வி எழுப்ப வேண்டுமென்றால் அதற்கு உரிய நேரத்தில் உரிய முறைப்படி கேட்கவேண்டும் சும்மா கண்ட கண்ட நேரத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அரசு பதில் தராது இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் சுகாதார அமைச்சர் நிமால் சிறீபாலடி சில்வா. இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்புக்காக படையினர் இலங்கை வந்துள்ளனரா? இல்லையா? என்று ஐக்கிய தேசிய கட்சி எம்பி ரவி கருணாநாயக்க நேற்ற நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது நிமால் மேற்கண்டவாறு கூறினார். இந்தியப்படையினரில் ஒரு தொகுதியினர் கொழும்புக்கு வந்துள்ளனர் என்று அமைச்சர் நிமால் சிறீபாலடிசில்வா இதை மறுக்கிறார் என்றும் ரவி கருணாநாயக்க கூறினார். இதில் யார் சொல…
-
- 0 replies
- 588 views
-
-
School fear in Sri Lanka அந்த பகுதியில் தாக்குதல் நடக்கவில்லை ஆனாலும் இலங்கை படையின் விமானங்கள் கிளிநொச்சி நகரின் மேல் பறக்கும் போது பாதுக்காப்பு அரண்களை தேடி ஓடும் சிறுவர்களும் பெரியவர்களும்... பாதுக்காப்பாக பீதியுடன் காணப்படும் சிறுவர் கூட்டம் ... போரின் வடு 70000 பேரின் உயிரை பலி வாங்கி உள்ளது... ஆசிரியர்கள் மதகுகளின் அடியில் பதுங்கி கொள்கிறார்கள்.. சண்டை உக்கிரமாக இதனிலும் வடபகுதியில் இடம்பெறுகிறது... இராணுவ தகவல்களின்படி தமிழீழ தனியரசு கோரும் புலிகள் பெரிய அளவான இளப்புக்களுக்கு உள்ளாக்க படுகிறார்கள்... ( ஈழம் கேட்க்கும் இந்த மக்களை தான் புலிகளாக கருதுகிறார்கள் போலும்) இடம்பெயர்ந்து மரங்களின் கீழ் அமைதியை நோக்கி காத்த…
-
- 1 reply
- 1.9k views
-
-
அரசாங்கத்தின் அனுசரணையின்றி கடத்தல்கள் மற்றும் அது தொடர்பான படுகொலைகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. இதனை ஈ.பி.டி.பி. அலுவலக வளாகத்தில் தோண்டியெடுக்கப்பட்ட சடலம் உறுதி செய்திருப்பதாக ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும், கம்பஹா மாவட்ட எம்.பி.யுமான விஜித்த ஹேரத் தெரிவித்தார். கடத்தல்கள், காணாமல் போதல்கள் தொடர்பில் கேட்ட போதே அவர் இதனைத் தெ?வித்தார். இது தொடர்பில் விஜித்த ஹேரத் எம்.பி. மேலும் கூறியதாவது: இலங்கையைப் பொறுத்த வரையில் ஜனநாயகம் மரணித்துவிட்டது என்று கூறுவதைவிட கொலை செய்யப்பட்டுவிட்டது என்று கூறுவதே பொருத்தமானதாக இருக்கும். சகல விதத்திலும் மக்கள் துன்பத்தை மாத்திரமே அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இதில் கடத்தல் என்ற பிடிக்குள் பெரும்பாலும்…
-
- 0 replies
- 577 views
-
-
பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரான என்னையே இந்த அரசு புலியாக்குறதென்றால் இந்த நாட்டு மக்களின் நிலையென்னவென்பதை எண்ணிப்பார்க்கும்போது கவலையேற்படுவதாக ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான சந்திரசேகரன் தெரிவித்தார். புலிகளுக்கு எதிரான கட்சி எமது ஜே.வி.பி. நாம் புலிகளுக்கு எதிராக இலங்கையில் மட்டுமல்ல சர்வதேச ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தோம். புலிகளுக்கெதிரான பிரசாரங்களை மேற்கொள்ள அமைப்புகளை உருவாக்கினோம். வெளிநாடுகளுக்குச் சென்று எவ்வளவு வெளிநாட்டு அரசியல்வாதிகளைச் சந்திக்க முடியுமோ அவ்வளவு பேரையும் சந்தித்து புலிகள் தொடர்பாகவும் அவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கமளித்தோம். ஆனால் இன்று இந்…
-
- 0 replies
- 1.1k views
-
-
முஸ்லிம் தரப்புடன் அல்லது முஸ்லிம் அமைச்சர்களுடன் கலந்தாலோசனை செய்யாமல் திடீரென தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களை இணைப்பது எம்மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார் மு.காங்கிரஸின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹசன் அலி. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக சிங்கள மாணவர்களை அரசாங்கம் இணைத்துள்ளது. இது தொடர்பாக கருத்துக் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், இன ஒற்றுமை என்ற தோரணையில் அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நுரைச்சோலை திட்டம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு இம்முறை வைத்தியத்துறைக்கு முஸ்லிம் மாணவர்களை அனுமதித்தல் போன்றவற்றையும் அரசாங…
-
- 0 replies
- 734 views
-
-
கிளிநொச்சியை படையினர் கைப்பற்றுவதை விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனினால் தடுக்க முடியாது எனவும் தமது அதிகார பிரதேசத்தை பாதுகாத்து கொள்ளும் நோக்கிலேயே சார்க் மாநாட்டை முன்னிட்டு, போர் நிறுத்தம் ஒன்றை விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர் எனவும் கருணா தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் மிகவும் தளர்வடைந்துள்ளனர் எனவும் முன்னர் கிளிநொச்சியை தற்கவைப்பதற்காக தான் கிழக்கில் இருந்து 2 ஆயிரம் பேரை வன்னிக்கு அழைத்துச் சென்றதாகவும் அதன் மூலம் பிரபாகரனை காப்பற்றியதாகவும் கருணா கூறியதாக சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் தற்பொழுது அவர்களுக்கு உதவகூடிய படையை கொண்டு வரமுடியாத நிலையில் விடுதலைப்புலிகள் இருக்கின்றனர். பதுங்குகுழிக்குள் இருந்து கட்டளைகளை மாத்திரம…
-
- 11 replies
- 2.4k views
-
-
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் நடத்தப்படும் போரின் பல்வேறு அணுகுமுறைகளினால் மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டுவரும் அனைத்துலக அமைப்புகளுக்கும் பாதிக்கப்படும் மக்களுக்கும் இடையிலான தொடர்பு படிப்படியாக குறைந்துவரும் நிலை இன்றைய உலகில் காணப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 567 views
-
-
நான் ஒரு நாடோடி என்னுடைய நான்காவது இடைத்தங்கல் முகாமில் நிற்கிறேன். என் தரிப்பிடங்களில் மிகவும் வித்தியசமனது இது, என் போன்ற பலர் கூடிவழும் தேசமிது. வாசலில் வைத்தே பிச்சைப் பாத்திரம் தரப்பட்டது, அதனல் தானோ என்னவோ, கோழைகளின் கோட்டையில் குட்டிக் குடிசை நானும் போட்டு கொள்ள வசதியாய் போனது. வெள்ளையன் தானொதுங்க போட்ட கூடாரத்தில் ஒட்டகம் பொல நானும் ஒதுங்கிக் கொண்டேன். என் போல ஒதுங்கிய ஒட்டகங்கள் இருபத்தைந்து வருடதுக்கு முதல் நடந்ததுக்காக நாளை ஒன்றுகூடி ஓலமிட போகுது, ஒடிவந்து ஒளிச்சிருந்த பாவத்த கழுவ பொகினமாம், வாழ்க வாழ்க... இருபத்தஞ்சு வருசமா தொடருதைய்யா சோககதை!!!, என்ன காப்பாத்த வந்தவனுக்கு கைவிலங்கு போடுறியே, எனக்கு நீ பிச்சை போடுர படியால், நான் நீ என்ன சொன்னாலும் ச…
-
- 3 replies
- 1.7k views
-
-
விடுதலைப்புலிகள் இயக்கம்-விகடன் ஸ்பெஷல் சர்வே குறிப்பு: ஞாயிற்றுக்கிழமை (27.07.2008) இந்திய நேரம் மதியம் 12 மணிக்குள் வாக்களிக்க வேண்டும். 1. விடுதலைப் புலிகள் இயக்கத்தை... (அ)எப்போதும் ஆதரிக்கிறேன் (ஆ)எப்போதும் எதிர்க்கிறேன் (இ)ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்பு ஆதரித்தேன் 2. இலங்கைத் தமிழர்களுக்காக தமிழ் ஈழம் அமைப்பது... (அ)சரியான தீர்வு (ஆ)தேவையில்லை (இ)சுயாட்சி அதிகாரம் கொடுத்தால் போதும் 3. இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை.... (அ)தொடர வேண்டும் (ஆ)தடையை நீக்க வேண்டும் (இ)பொறுத்திருந்து பார்க்கலாம் 4. விடுதலைப்புலிகள் இயக்கத்தை வைகோ, ராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன் போன்றவர்கள் ஆதரிப்பது... (…
-
- 2 replies
- 4k views
-
-
சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் இராணுவ உயரதிகாரியும் வடமத்திய மாகாணசபையின் முதலமைச்சருக்கான வேட்பாளருமான ஜானக பெரெரா, தனக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உயர் நீதிமன்றம் சென்றுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 601 views
-
-
இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கு இராணுவ வழியில் யுத்தம் மூலம் தீர்வு காணலாம் என்ற ஒரே சிந்தனையில் போர் வெறிகொண்டு, சந்நதம் பூண்டு நிற்கிறது கொழும்பு அரசு. இலங்கை அரசின் ஆட்சியாளர்கள் மட்டுமல்லாமல் புத்திஜீவிகள் மட்டத்தை உள்ளடக்கிய முழு தென்னிலங்கையையுமே இந்தப் போர் வெறிச் சிந்தனை ஆகர்ஷித்து விட்டது என்பதே உண்மை. கொழும்பு பேராயர் அதி வண. ஒஸ்வோல்ட்கோமிஸ், கொழும்பில் இருந்து வத்திக்கான் வானொலிக்காகத் தெரிவித்த கருத்துகள் என்ற அடிப்படையில் இப்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் இதனை விளக்கும் நல்ல சான்றுகள் ஆகும். பேராயர் அதி வண.ஒஸ்வோல்ட் கோமிஸ், வெறும் மதத் தலைவர் மட்டுமல்ல. தென்னிலங்கையில் மதிக்கப்படும் ஒரு புத்திஜீவியும் கூட. சமாதானத்தை நிலைநிறுத்துவதன் அவசியத்…
-
- 1 reply
- 793 views
-
-
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தரும் பூநகரி பிரதேச பிரதி திட்டமிடல் பணிப்பாளருமான சாந்தலிங்கம் விமலகுமார் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 1.5k views
-
-
விளையாட்டு பொருட்களை இறக்குமதி செய்வதாக கூறி நிறுவனம் ஒன்று இறக்குமதி செய்த தயோனீல் குளோரைட் என்ற ஆபத்தை விளைவிக்க கூடிய இரசாயனம் அடங்கிய கொள்கலனை சுங்க அதிகாரிகள் அண்மையில் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைதுசெய்யப்பட்டு, தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்படுவதாக கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு நீதாவான் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளது. பாலசுப்ரமணியம் புஸ்பகுமார், எஸ்.நந்தகுமார், பேர்டும் டார்டின், ஏம்.எம்.எஸ்.சுபைர், லவ்ஜே, மற்றும் எம்.எஸ்.எம். இப்ராஹிம் ஆகியோரே கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்திய கப்பல் நிறுவனம் ஒன்று, ஜேட்சு என்ற கப்பல் மூலம் சென்னை துறைமுகத்தில் இருந்…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழர்கள் இடம்பெயர்வதைத் தடுக்க வேண்டுமானால் அவர்களுக்கென்று ஒரு நாடு உருவாகும் போதே அது சாத்தியப்படும் என்று எட்டுத் தடவைகள் இடம்பெயர்ந்துள்ளதாகக் கூறும் குடும்பஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். மன்னாருக்குத் தான் குடும்பத்துடன் சில வருடங்களுக்கு முன்னதாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்ததாகவும் பின்னர் கடந்த ஒருவருடத்தில் மட்டும் ஏழு தடவைகள் மாறி மாறி இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் தம்மைப்போன்று பல குடும்பங்கள் இந்த ஒன்றரை வருடங்களில் மட்டும் மன்னார் பகுதியிலிருந்து பல இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கைப் படையினர் தொடர்ந்தும் தமிழ் மக்களின் வாழ்விடங்கள்மீது எறிகணை வீச்சுக்களை நடத்தி அவர்களை வேரோடு பிடுங்கி எறிகின்ற நடவடிக்கைகளை மேற்கொண…
-
- 16 replies
- 2k views
-
-
அம்பாறை அக்கரைப்பற்றில் இன்று இரவு 8.30 அளவில் தமிழ் வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மரக்கறி வியாபாரியான 48 வயதான கணபதிபிள்ளை நடராஜா என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார். ஆலையடிவேம்பு பொதுச்சந்தையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்டவர், நெசவாலை வீதி அக்கரைப்பற்று 7 ஐ சேர்ந்தவர் என பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. http://isoorya.blogspot.com/http://isoorya...a.blogspot.com/
-
- 0 replies
- 538 views
-
-
இலங்கை அமைச்சர்கள் இந்தியாவிற்கு முன்னறிவித்தலின்றி தாம் நினைத்த நினைத்தவாறு விஜயம் மேற்கொள்வது குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள இந்தியா, எதிர்காலத்தில் இவ்வாறான விஜயங்க ளின்போது உரிய நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சினால் புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ கடிதத்திலேயே இந்தக் கண்டிப்பான அறிவுறுத்தல்விடுக்கப்பட் டுள்ளது. இலங்கை அமைச்சர்கள் பலர் முன்னறி வித்தலின்றி இந்தியாவிற்கு விஜயம் மேற் கொள்வதை சுட்டிக்காட்டியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு, இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக முடி விற்குக் கொண்டு வரவேண்டும் என்றும் கடுந்தொனியில் கோரியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சிற்கு முன்னறிவித்த…
-
- 0 replies
- 893 views
-