Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பில் கடத்தப்பட்ட தமிழ் இளம்பெண் கொழும்பில் தப்பினார் [வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2008, 05:33 பி.ப ஈழம்] [க.நித்தியா] மட்டக்களப்பில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட தமிழ் இளம்பெண் ஒருவர் கொழும்பில் தப்பிச்சென்ற வேளை சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது: மட்டக்களப்பு பொது நூலகத்துக்கு சென்று கொண்டிருந்தவேளை கடந்த செவ்வாய்க்கிழமை மாலை குறிப்பிட்ட இளம்பெண் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளார். அங்கிருந்து கல்லடிக்கு கொண்டு செல்லப்பட்டு அதன்பின் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளார். கடத்தப்பட்டப்பட்ட வேறு சில இளம்பெண்களுடன் கொழும்பு கறுவாத்…

    • 3 replies
    • 1k views
  2. இந்திய விமானப்படையில் 11 பேருடன் இலங்கைக்கு பயனித்துக் கொண்டிருந்த எம்.ஜ.17 ரக உலங்குவானூர்தி தொழில்நுட்ப கோளாறினால் மயிரிழையில் தப்பியதாகவும் விமானம் மன்னார் அரிப்பு பிரதேசத்தில் தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வானூர்தி இந்தியாவில் இருந்து பயனித்த உலங்குவானூர்தி என பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வானூர்தியை செலுத்தி சென்ற இந்திய விமானிகள் உடனடியாக அதனை அரிப்பு பிரதேசத்தில் தரையிறக்கியுள்ளனர். விமானம் தரையிறக்கப்படாது இருந்தால் அது விபத்துள்ளாக நேர்ந்திருக்கும் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். இந்த உலங்குவானூர்தி இலங்கை விமானப்படைக்கு சொந்தமானது என விமானப்படையின் பேச்சாளர் வின் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்தார். …

    • 3 replies
    • 3k views
  3. வன்னியில் நிலவும் மிகப்பெரிய மனிதத்துன்பியல் நிகழ்வுகள் உலகின் கவனத்துக்கு மறைக்கப்பட்டுள்ளன என்று கத்தோலிக்க திருச்சபையின் நீதி சமாதானத்துக்கான வன்னி துணை ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் செயலருக்கு அனுப்பிய மனுவில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  4. சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ சீனா சென்றடைந்திருக்கின்றார்.சீன

    • 0 replies
    • 786 views
  5. இந்தியாவின் புதுச்சேரி, காரைக்கல் ஆகிய பகுதிகள் விடுதலைப் புலிகளுக்கு உதவியளிக்கும் பிரதேசங்களாக மாறியிருக்கின்றன எனும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என இந்திய பொலிஸ் பணிப்பாளர் ஏ.எஸ்.கான் 'ஹிந்து' பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் இயக்க செயற்பாட்டாளரான நிக்ஷன் என்றழைக்கப்படும் க்ரிஷ்ண நீதன் என்பவர் என்பவர் புதுச்சேரியிலிருந்து சில பொருட்களை எடுத்துவரும்போது ராமநாதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே பொலிஸ் பணிப்பாளர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுவருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கைப்பற்றப்பட்ட பொருட்கள் இந்தியாவில் தடைசெய்யப்பட்டவை அல்ல எனவும், அவற்றை எந்தவொரு கடைகளிலும் வாங்கிக் கொள்ள முடியும் எனவு…

  6. பண வீக்கம், விலைவாசி என்பன கிடுகிடு என எகிறி வானைத் தொட்டு நிற்கும் பின்புலத்தில், அன்றாட சீவியத்துக்கான வயிற்றுப்பாட்டுக்கு உணவு பெற முடியாத இக்கட்டில் சிக்கலில் சாதாரண குடும்பம் ஒவ்வொன்றும் சிக்கித் தவிக்கும் பேரவல நிலைமை இன்று உருவாகியிருக்கின்றது. அடிப்படைத் தேவைகளுக்குரிய அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியாத அளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் வரவு செலவுத் திட்டம் கையை மீறி விட்டிருக்கின்றது. இந்தச் சூழ்நிலையில் சூடானின் டாபூர் நிலைமையை ஒத்த மோசமான பட்டினி நிலையை இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் பேராபத்துக் கட்டம் சூழ்ந்து நெருங்கி வருவதாக முக்கிய ஆய்வு மையங்களும், நிறுவனங்களும் எச்சரித்திருக்கின்றன. இந்தப் பின்புலத்தில் இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து சாதா…

  7. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவர் தனது தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதங்களை வழங்கியிருப்பதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டினார். இதுதொடர்பான குற்றச்சாட்டு மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் அண்மைய அறிக்கையிலும் முன்வைக்கப்பட்டிருந்ததாக ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் விவாதத்தில் கலந்துகொண்டபோது சுட்டிக்காட்டினார். ஒருவர் கடந்த ஜுலை மாதம் 14ஆம் திகதி வெள்ளைவான் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டமை தொடர்பாக மட்டக்களப்பு பள்ளிவாசல்கள் சம்மேளனம் விடுத்திருக்கும் அறிக்கையையும் ஹக்கீம் மேற்கோள்…

    • 0 replies
    • 674 views
  8. சார்க் மாநாட்டுக்காக இலங்கை வந்த நாடுகளின் தலைவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விதிவிலக்கு அளிக்கப்பட்டதே தவிர எந்தவொரு நாட்டின் படையும் இலங்கைக்கு வரவில்லையென சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். சார்க் மாநாட்டின்போது எந்தவொரு நாட்டின் படைகளும் இலங்கைக்கு வராதென சபை முதல்வர் கடந்த சபை அமர்வின்போது உறுதிவழங்கினார். ஆனால்,இந்திய யுத்தக் கப்பல்கள் வந்தன.அந்நாட்டின் ஹெலிகள் எமது வான் பரப்பில் பறந்தன.துருப்புகள் வந்தன. இவ்வாறான நிலையில் பொறுப்பு வாய்ந்த சபை முதல்வர் பொய்யான தகவல்களை வழங்கி சபையை தவறாக வழிநடத்தியுள்ளாரென ஐ.தே.க.எம்.பி.ரவிகருணாநாயக்க குற்றம்சாட்டினார். இதற்குப்பதிலளிக்கும் போதே, சார்க் நாடுகளின் தலைவர்கள் இலங்கை …

    • 0 replies
    • 945 views
  9. யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, பெரியவிளான் பகுதியிலுள்ள கிணற்றில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீட்கப்பட்ட உடலம் தொடர்பான விசாரணைகளில் திரும்பம் ஏற்பட்டுள்ளது. 57 அகவையுடைய ஜேசுதாசன் என்பவரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டார். வெளிநாட்டிலிருந்து சென்றிருந்த இவர் அணிந்திருந்த நகைகளையும், பணத்தையும் பறிக்கும் நோக்கில் மூன்று பெண்களால் இவர் கொலை செய்யப்பட்டு, கிணற்றில் வீசப்பட்டிருக்கின்றார். இந்த மூன்று பெண்களும் மல்லாகம் நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டபோது, தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 1.1k views
  10. ராஜீவைத் தாக்கிய சொய்ஸா இருந்திருந்தால மன்மோகன், நாராயணனின் கதி என்னவாகியிருக்கும். இலங்கை மீதிருந்த கரும்புள்ளி கருவடுவாக மாறியிருக்கும் என்று அவர் குற்றஞ்சாட்டியனார். நாராயணன் வாடகை வாகனத்;தில் செல்லுமளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் அமைச்சர்கள் வாடகை வாகனங்களில் செல்ல முடியுமா எனவும் அவர் கேள்வியெழுப்பினார். நேற்று அவசரகால சட்ட பிரேரணை நீடிப்பின் போது பேசிய பா.உ லக்ஷ்மன் செனவிரத்தன மேலும் : இராணுவத்தினா படையை விட்டு வெளியேறும் நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக கள நிலைமைகள் தெரிவிக்கினறன. இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யுத்தத்தில் பயங்கரவாதிகள் தொடர்பான செய்தியை அறிவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. இந்த நிலையில் இராணுவத்தள…

  11. அணுத் தொழில்நுட்பம் தொடர்பாக இலங்கையுடன் சேர்ந்து தொழிற்படத் தயாராக இருப்பதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மனோச்சர் முட்டாகி தெரிவித்துள்ளார். 15வது சார்க் மாநாட்டிற்கு இலங்கை சென்றிருந்த ஈரானிய வெளிநாட்டமைச்சர் இலங்கையும் ஈரானும் நீண்டகால நட்பு நாடுகள், எல்லாத்துறைகளிலும் இரண்டு நர்டுகளும் இணைந்து தொழிற்படுகின்றன. அந்த வகையில் யரேனியத் தொழில்நுட்பம் தொடர்பாகவும் இணைந்து செயற்படும் எனத் தெரிவித்துள்ளார். பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வு என்பற்றின் அடிப்படையிலேயே இரண்டு நாடுகளும் தொழிற்படுகின்றன. அந்த நம்பிக்கையினதும் நட்பினதும் அடிப்படையில் 450 மில்லியன் அமெரிக்க டொலர் தொகை பணத்தை இலங்கையின் பல்வேறு துறைகளின் அபிவிருத்திக்கென ஈரான் வழங்கியுள்ளது. …

    • 0 replies
    • 757 views
  12. படையினர் வடக்கை கைப்பற்றும் தீர்க்கமான இந்த சந்தர்ப்பத்தில் ஊடகசுதந்திரத்தை வேண்டி மகஜரில் கையெழுத்து பொறுவதானது காலனித்துவத்தின் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் தேசத்துரோக செயல் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார். மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் மாதாந்த சஞ்சிகையான கிருளவின் முதலாவது இதழ் வெளியிட்டு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். வன்முறைகளை தடுத்து நிறுத்தி ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் பாதுகாக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜே.வீ.பீ உள்ளிட்ட 11 அரசியல் கட்சிகள் இணைந்து கையெழுத்தை பெற்றுவரும் கூட்டு மகஜர் குறித்து விமல் வீரவன்ஸ …

    • 0 replies
    • 639 views
  13. இலங்கை விமானப்படையில் பதிய பணித்தரமொன்று அறிமுகப்படுத்தப்பட்டள்ளது. இற்றைவரை Warrant Officer (WO) எனும் பணித்தரமே உயர்ந்ததாக இருந்து வந்தது. ஆனால் ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து 19 அதிகாரிகள் (MWO) ஆக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். புதிதாகப் பதவி உயர்த்தப்பட்ட 19 பேரும் விமானப்படை கொமாண்டர் றொசான் குணதிலக, எயர் வைஸ் மார்சல் பி.வி.பிரேம்சந்திர, பதில் எயர்வைஸ் மார்சல் எச்.டி.அபேவிக்ரம ஆகியோருடனிருந்து எடுத்த புகைப்படங்களும் ஊடகங்களால் வெளியிடப்பட்டள்ளன. http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 829 views
  14. சப்பென்று முடிந்த சார்க் மாநாடு! சார்க் நாடுகளின் 15-வது மாநாடுஇலங்கை கொழும்பு நகரில் எந்தவித அசம்பாவிதமும் இன்றி நடந்து முடிந்துள்ளது. இந்த மாநாட்டில் கச்சத்தீவு பிரச்னை விவாதிக்கப்படும், தமிழக மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றெல்லாம் பத்திரிகைகளில் செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால், அதுபற்றி உருப்படி யாக எந்தவொரு தீர்வையும் காணாமல் இந்த மாநாடு முடிந்திருக்கிறது. சார்க் என்பதும் ஜி-8 நாடுகளின் கூட்டமைப்பு போல, எட்டு நாடுகளைக்கொண்ட ஒரு கூட்ட மைப்புதான். இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய எட்டு தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பாக 1985-ல் உருவாக்கப்பட்டதுதான் சார்க் என்பதாகும். பிராந்திய அளவில் அர…

  15. வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு நவ்வி குஞ்சுக்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் பத்து படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 19 பேர் காயமடைந்துள்ளனர். படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் உட்பட படைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

  16. த.தே.தொலைக்காட்சியின் இன்றைய செய்திகள்- 06.08.08 http://www.nettamil.tv/play/News/NTT_Tamil_News_06082008

    • 0 replies
    • 1.2k views
  17. மட்டக்களப்பு மாவட்டம் தரவையில் செவ்வாய் பி.ப 6.30 மணிக்கு விடுதலை புலிகளின் கிளைமோர் தாக்குதலில் வாகனத்தில் பயணம் செய்த சிங்கள படையனர் 23 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 4 பேர் காயங்களுக்கு உள்ளானார்கள்.மட்டக்களப்பு மாவட்டத்தில் 1 வருடத்தின் பின் புலிகள் நடத்திய பெரிய தாக்குதல் இதுவாகும். காயமடைந்தவர்கள் வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை பாதுகாப்பு தரப்பினர் 1 படையினர் கொல்லப்படதாகவும் மேலும் 3 பேர் காயங்களுக்குள்ளானதாகவும் அறிவித்துள்ளனர் ஆதாரம் தமிழ் நெற் 23 Sri Lankan soldiers killed in Claymore ambush in Batticaloa [TamilNet, Wednesday, 06 August 2008, 10:29 GMT] 23 Sri Lanka Army (SLA) soldiers were killed and four wounded in a…

    • 16 replies
    • 3.7k views
  18. த.தே.தொலைக்காட்சியின் அம்பலம் http://www.nettamil.tv/play/Eelam_Videos/Ambalam இதை மகிந்தருக்கு போட்டு காட்டணும். நன்றி- நெற் தமிழ்

  19. மாங்குளத்துக்கு அண்மித்த பகுதியில் கடந்த மாதம் 20 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் "உள்ளக பாதுகாப்பு அணியினர்" நடத்திய தாக்குதலில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர் என்று சிறிலங்கா படைத்துறை சார் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  20. இலங்கையில் நான்கில் ஒரு குழந்தை போசாக்கின்மையால் பாதிக்கப்படுவதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. போசாக்கின்மையைப் போக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளபோதும் மோதல்கள் இடம்பெறும் பகுதிகளிலுள்ள சிறுவர்கள் போசாக்கின்மையால் அதிகம் பாதிக்கப்படுவதாக அரசாங்கத்தின் அண்மைய கணக்கெடுப்புகளின் மூலம் அறிந்துகொள்ள முடிவதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள சிறுவர்களில் 22 வீதமானவர்கள் சராசரி எடையைவிட குறைவான எடையைக் கொண்டவர்கள் என சுகாதார மற்றும் போசாக்கு அமைப்பும், குடிசன மதிப்பீட்டுத் திணைக்களமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 18 வீதமான சிறுவர்கள் வளர்ச்சி குன்றியவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. “நான்கில் ஒரு குழந்தை போசாக்கின்மையால…

    • 0 replies
    • 648 views
  21. விடுதலைப் புலிகளை ஜேர்மனில் தடை செய்யுமாறு கோரிக்கை [புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2008, 07:14 பி.ப ஈழம்] [கி.தவசீலன்] ஜேர்மனியில் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அந்த இயக்கத்துக்கு ஆதரவான அமைப்புக்களையும் தடை செய்யுமாறு கோரி விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்கா அமைப்பு அந்நாட்டு வெளிவிவகார அமைச்சிடம் மனு ஒன்றை கையளித்துள்ளது. அந்நாட்டு வெளிவிவகார கொள்கை ஆலோசகர் ஹன்றிச் க்ரெவ்ட்டை அவரது அலுவலகத்தில் கடந்த 30 ஆம் நாள் சந்தித்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்கா அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த நான்கு பக்க மனுவை கையளித்துள்ளனர். - விடுதலைப் புலிகளை ஜேர்மனியில் தடை செய்யவேண்டும். - விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் தமிழ்ர் புனர்வாழ்வு கழகம், தமிழ…

  22. படையினர் மற்றும் பொலிஸ் உறுப்பினர்கள் உட்பட 106 பேரும் 24 பொதுமக்களும் ஆடி மாதத்தில் மாத்திரம் உயிரிழந்துள்ளனர் என இன்று பாராளுமன்றத்தில் பிரதமர் ரத்னசிரி விக்ரமனாயக்க தெரிவித்துள்ளார். தக்குதல்களின் போது படையினர் பொலிசார் உட்பட 664 பேரும் 31 பொதுமக்களும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் தமிழ் நெற் 106 forces killed, 664 wounded in July - Sri Lankan PM [TamilNet, Wednesday, 06 August 2008, 04:12 GMT] Sri Lankan Prime Minister Ratnasiri Wickramanayake who opened the debate on extending the State of Emergency in the Sri Lankan Parliament on Wednesday said 106 Sri Lankan military and police personnel were killed and 664 wounded during the month of July…

    • 7 replies
    • 1.8k views
  23. கலைஞரின் இரண்டு நாள் சுற்றுப் பயணத்தை முன்னிட்டு, தமிழகம் மதுரையில் ஈழத்தமிழர்கள் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளையும், வியாழக்கிழமையும், மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தமிழக முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி, அங்கு இடம்பெறும் இரண்டு நிகழ்வுகளில் பங்கேற்கின்றார். இதனை முன்னிட்டு, மதுரை ஆனையூர், திருவாதவூர், உச்சப்பட்டி ஆகிய பகுதிகளில் அமைந்திருக்கும் நலன்புரி நிலையங்களில், ஏதிலிகளாக தங்கியுள்ள ஐயாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தொன்பது ஈழத்தமிழர்கள், இரண்டு நாட்களுக்கு வெளியில் நடமாடுவதற்கு மாநில காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். ஆத்துடன் மூன்று பகுதிகளிலும் உள்ள நலன்புரி நிலையங்களிலும் தமிழக காவல்துறையினரும், ‘கியூ| புலனா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.