Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உடனடியாக யுத்த நிறுத்தமொன்றைப் பெற்றுத்தருமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகத் திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இந்தக் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 7 ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் ஐக்கிய நாடுகள் சபையிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்திற்கு நேற்றைய தினம் இது தொடர்பாக அறிவித்துள்ளதாகவும் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளினால் விடுக்கப்பட்ட அவசரக் கோரிக்கையின் பிரதியொன்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹனவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. …

    • 5 replies
    • 2.1k views
  2. பொதுச்சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தார் என்று குற்றஞ் சாட்டப்பட்டு நீதிமன்றத்தால் 5இலட்சம் அபராதம் விதிக்கப்பட்ட திறைசேரியின் செயலாளர் பி.பி ஜயசுந்தரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை கண்டுகளிப்பதற்காக சீனாவுக்கு அழைத்து சென்றுள்ளார். இதுசரியான நடைமுறையா? இவ்வாறு நாடாளுமன்றத்தில் விஜித ஹேரத் கேள்வியெழுப்பினார். பொதுச்சொத்தை விரயம் செய்த ஒரு குற்றவாளிக்கு ஜனாதிபதி இவ்வாறு கௌரவத்தை கொடுப்பது ஏற்புடையதல்ல இவ்வாறான செயற்பாடுகள் இந்நாட்டு மக்களினதும் படையினரினதும் மனநிலையை பாதிப்படைய செய்யும் இவ்வாறான அநியாயங்களுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடுகின்ற பௌத்த பிக்குகளும் இதை எதிர்க்கின்ற ஊடகவியலாளர்களும் தாக்கப்படுகின்றனர். பயங்கரவாதத்தை ஒ…

    • 3 replies
    • 1.6k views
  3. மட்டக்களப்பு கொழும்பு மார்க்கத்தில் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஒன்றின் சாரதியும் நடத்துனரும் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மட்டக்களப்பில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட இந்தப் பேருந்து கொழும்பு மருதானை தரிப்பிடத்தில் தரித்து நின்ற வேளை நேற்று இரவு அங்கு சென்ற காவற்துறையினர் இவர்களைக் கைது செய்ததுடன் பேருந்தையும் மொறட்டுவ காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டு புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் புதுக்குடியிருப்பு மட்டக்களப்பைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இராசையா சிவச்சந்திரன் மற்றும் குருக்கல் மடத்தைச் சேர்ந்த 24 வயதுடைய எஸ் சேனுகாந்தன…

    • 0 replies
    • 766 views
  4. சில வெளிச்சக்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவொன்றை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் சில ஊடகங்கள் விசமத்தனமான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அக்கட்சியின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; தமிழ் ஊடகமொன்றின் முன்பக்கத்தில் என்னைப் பற்றி உண்மைக்குப் புறம்பான செய்தியொன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்ற அவசர காலச்சட்ட நீடிப்பு வாக்கெடுப்பில் நான் பங்கேற்கவில்லையென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் வாக்கெடுப்பு முடிந்த பின்னர் நான் சபைக்குள் வந்ததாகவும் சம்பந்தன் எம்…

  5. புதுக்குடியிருப்பில் மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுத்தாக்குதல்: ஆசிரியர் உட்பட இருவர் படுகொலை [சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2008, 01:36 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் ஆசிரியர் உட்பட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு இரணைப்பாலையில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று சனிக்கிழமை முற்பகல் 9:50 மணியளவில் சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தின. இத்தாக்குதலில் ஆசிரியரான சு.தயாபரன் (வயது 45), க.பசுங்களி (வயது 35) ஆகியோர் ப…

  6. பிரித்தானிய உயரதிகாரிகள் குழு வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் [ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2008, 07:37.53 AM GMT +05:30 ] பிரித்தானிய உயர் அதிகாரிகள் குழுவொன்று வன்னியில் உள்ள பாதுகாப்புப் படையினரின் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கான பிரித்தானியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் மார்க் குடிங் உள்ளிட்ட குழுவினர் வன்னியில் உள்ள பாதுகாப்பு படையினரின் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்னிப் பிரதேசத்தின் பாதுகாப்பு நிலவரம் மற்றும் மனிதாபிமான விவகாரங்கள் பற்றி ஆராய்வதற்காகப் பிரித்தானிய அதிகாரிகள் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். வன்னிப் பிரதேசத்திற்கான இராணுவக் கமாண்டார் மேஜர் ஜகத் …

  7. மட்டக்களப்பில் இருகிளைமோர் தாக்குதல்: 10 விசேட அதிரடிப்படையினர் பலி சனி, 09 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தரவைப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (08-08-2008) அன்று காலை 10 மணிக்கும் மதியம் 12மணிக்குமிடைப்பட்ட நேரத்தில் சிறிலங்கா படையினரக்கு எதிராக நடைபெற்ற இருவேறு கிளைமோர் தாக்குதல் சம்பவங்களில் 10ற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் சிலர் காயமடைந்துமுள்ளார்கள். இத்தாக்குதலில் காயமடைந்தவர்களை அங்கு விரைந்த விமானப்படையினரின் உலங்கு வானூர்தி ஏற்றிச் சென்றுள்ளது. இச்சம்பவத்தினை அங்குள்ள விடுதலைப்புலிகளும் உறுதி செய்திருக்கின்றார்கள். தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்ற பகுதி ஏற்கனவே விடுதலைப்புலிகளிடமிருந…

    • 5 replies
    • 2.2k views
  8. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. சார்க் பிராந்திய நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அதற்கு ஆதரவான அமைப்புக்களை அவுஸ்திரேலியாவில் தடை செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாகஅந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கும், அதற்கு எதிரான நடவடிக்கைகளுக்காக தெற்காசிய நாடுகளுடன் தொடர்புகளைப் பேணுவதற்கும் அவுஸ்ரேலியா விரும்புகிறது. இதற்காக தெற்காசியப் பிராந்தியத்தின் மு…

    • 23 replies
    • 3.7k views
  9. இலங்கை அரசின் தடைகளால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவி புரிய முடியவில்லை - ஐ.நா.சபை இலங்கைப் படையினது தடைகள் காரணமாக வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிபுரிய முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. இடம்பெற்றுவரும் மோதல்கள் காரணமாகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில்இ அவர்களுக்கான உதவிகள் புரிவதற்குத் தம்மிடம் தேவையான பொருட்கள் இல்லை என ஐ.நா.சபையின் அகதிகளுக்கான நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவுஇ குடிநீர் சுகாதார உபகரங்கள் தற்காலிக குடில்கள் எரிபொருள் என்பன தமது கையிருப்பில் மிகவும் குறைவடைந்திருப்பதாகவும் தெரிவித்தார். இவற்றை விடுதலைப் புலிகளின் நிருவாகப் பிரதேசங்களுக்குள் கொண…

    • 5 replies
    • 1k views
  10. யுத்தத்தினால் இடம்பெயர்ந்து, உண்பதற்கு உணவின்றி, குடிதண்ணீர், மருந்து வசதிகள் இன்றி, மர நிழல்களில் அவலப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்றுவதற்கு ஜனாதிபதிக்கு அக்கறையில்லை. அந்த மக்களைப்பற்றிச் சிறிதும் கூடக் கவலைப்படாமல் மடுமாதாத் திருவிழாவை நடத்துவதற்கும், அதில் தெற்கு மக்களைக் கலந்துகொள்ளச் செய்வதற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயற்சித்து வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், ஜயலத் ஜயவர்த்தன குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், ஜனநாயக நாட்டில் ஏன் இப்படியான பாரபட்சம் என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். “உண்மையாகவே மடுமாதா தேவஸ்தானத்தின் வருடாந்த உற்சவம் நடத்தப்படுமா? இல்லையா?, மடுமாதாத் திருச் சொரூபம் மீண்டும் தேவஸ்தானத்தில் பிரதிஷ்ட…

  11. ஜெனிவா பிரகடனத்தை மீறுகின்ற தாக்குதல் புலித்தேவன் இலங்கை அரசு ஜெனிவா பிரகடனத்தை மீறி வன்னிப் பகுதியில் பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதலை மேற்கொண்டு வருவதாக விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் குற்றஞ்சாட்டியுள்ளார். முல்லைத்தீவு அரச மருத்துவமனை மற்றும் அரச அதிபர் பணிமனை மீது மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதல் குறித்து இணையத்தளம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், ""பொதுமக்கள் மருத்துவமனை மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்குப் பொறுப்பாக உள்ள அதனைக் கண்காணிக்கின்ற அரச உத்தியோகத்தர் பணிமனை போன்றவற்றை வேண்டுமென்றே இலக்குவைப்பதன் மூலம் அரசு ஜெனிவாப் பிரகடனத்தை மீறுகின்றது'' என்றார். (தற) http://www.sudaroli.com/pages/news/today/02.htm

    • 1 reply
    • 934 views
  12. தெற்கிடம் நியாயக் கேள்வி எழுப்பும் ஜயலத் ஜயவர்த்தனா 09.08.2008 தென்னிலங்கை மக்கள் தமது மனதைத் தொட்டுப் பார்த்துக் கேட்கவேண்டிய கேள்வி ஒன்றை அவர்களிடம் எழுப்பியிருக்கின்றார் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனா. மடுமாதா ஆலயப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் ஏதிலிகளாக அகதிகளாக இடம்பெயர்ந்து, தங்க இடமின்றி, உண்ண உணவின்றி, அணிய உடைகளின்றி, அடிப்படைவாழ்வாதார வசதிகளின்றி அலைந்து கொண்டிருக்கையில், தெற்கிலிருந்து பக்தர்களைக் கூட்டிச்சென்று மடுமாதா உற்சவத்தைக் கொண்டாடி மகிழ முயல்வதா என்று நியாயக் கேள்வியை எழுப்பியிருக்கின்றார் அவர். ""வன்னியில் இடம்பெற்றுவரும் மோசமான யுத்தத்தினால் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள…

  13. குடும்பிமலை பகுதியில் நேற்றும் கிளைமோர்த் தாக்குதல்: 5 படையினர் காயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் தொப்பிக்கலப் பிரதேசத்துக்குட்பட்ட தாராவில்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் ஐந்து படையினர் காயமடைந்தனர். இவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை 7.15 மணியளவில் தாராவில்குளம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப் படையினரையும்இ படையினரையும் இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரமொன்றில் பொருத்திவைக்கப்பட்டிருந்த கிளைமோர்க் குண்டே வெடிக்க வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஐவரும் ம…

  14. ஆய்வு: முரசத்திற்காக பத்மா 8. ஆகஸ்ட் 2008 ஈழத் தமிழரின் அரசியற் தேவைகளையும் உயிர் வாழ்வின் அடிப் படை உரிமைகள் பற்றிய உண்மைகள் எதுவுமே அறியாதவர் சிக்கல்களின் திலகம் துக்லக் சோ இராமசாமி. சினிமாக் கோமாளியான இவர் அரசியல் கோமாளியாக மக்களை மகிழச் செய்வதில் எமக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் ஈழத் தமிழர் பற்றிய அவரது கோமாளித் தனங்களை எம்மால் சகிக்கவோ ரசிக்கவோ சிரிக்கவோ முடியாது இருக்கிறது. பூனைக்கு விளையாட்டு என்றால் சுண்டெலிக்கு சீவன் போவதைப் பார்த்துக் கிண்டல் செய்வதும் கிறுக்குத்தனமாக உளறுவதும் அவரது கோமாளித்தனமாக உள்ளது. ஈழத் தமிழ் மக்கள் சிறு சுண்டெலிதான். ஆனால் எமக்கும் உயிர் வலியும் உயிர் வாழும் உரிமையும் இப்பூமியில் இருக்கிறது. அதற்கு ஆரியரின் வேதமோ அந்நியப் பட…

  15. திருகோணமலை நீதிமன்ற வீதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை இனந்தெரியாததோர் கடத்திச் சென்றுள்ளனர் இந்த சம்பவம் நேற்று (ஆகஸ்ட்7) மாலை நடைபெற்றதாக திருகோணமலை காவற்துறையினரிடம் முறையிடப்பட்டுள்ளது. 37 வயதான முத்துகுமார் கமலேஸ்வரன் என்பவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவரது மனைவி சாந்தி காவல்துறையினரிடம் செய்துள்ள முறைப்பாட்டில் கூறியுள்ளார். கடத்திச் செல்லப்பட்டவர் 10 வருடங்கள்; வன்னியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வன்னியில் இருந்தமையே அவர் கடத்தப்படுவதற்கு காரணமாக அமைந்தது என தெரிவிக்கப்படுகிறது. http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 602 views
  16. இலங்கைக்கு காணாமல் போதலில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு இந்த ஆண்டு(2008) மட்டும் 200 பேர் உத்தியோக பூர்வமாக காணாமல் போயுள்ளனர் ஏறாவூரைப் பிறப்பிடமாகவும் வட்டவளையை வசிப்பிடமாகவும் கொண்ட 38 வயதுடைய சண்முகம் காளிதாஸ் என்பவர் காணாமல் போயுள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் காணாமல் போனவரின் மனைவி செல்வராஜா சுமதி முறைப்பாடொன்றைச் செய்துள்ளார். தந்தையான இவர் கடந்த கடந்த மாம் 28ஆம் திகதி காணாமல் போயுள்ளார். ஏறாவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட தங்களது குடும்பம் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வட்டவளையில் வசித்து வருவதாகவும் சம்பவ தினம் தயார் செய்யப்பட்ட நகைகளை கொழும்பிற்கு ஒப்படைப்பதற்காக எடுத்துச் சென்றதாகவும் கொழும்பிலிருந்து தொலைபேசி மூலமாக வவுனியாவிலிர…

    • 0 replies
    • 1.1k views
  17. கொழும்பு பாலத்துறையில் காரில் சென்ற மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பாலத்துறை பாலத்திற்குக் கிழாகச் செல்லும் வீதியிலேயே நேற்றிரவு ஒன்பது மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இனந்தெரியாத நபர்கள்மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயொகத்தில் ஸ்தலத்திலேயே மூவரும் பலியாகியுள்ளனர். கொல்லப்பட்டவர்களது சடலங்கள் இதுவரை அடையளம் காணப்படவில்லை என பாலத்துறைப் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 894 views
  18. 25 வருட போராட்டம்! ஈழத்தமிழர்களின் கருப்பு ஜூலை. ஈழத்தமிழர்களின் வரலாற்றில்... 1983 ஜூலை 23-ந் தேதி ஒரு திருப்பத்தை எற்படுத்திய நாள். தமிழினத்திற்கு எதிரான சிங்கள ராணுவத்தினர் மீது தமிழர்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து... தமிழர்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டது சிங்கள அரசு. அந்த அரச பயங்கரவாதத்தைத்தான் "கருப்பு ஜூலை' என்று ஈழத்தமிழர்கள் பதிய வைத்துள்ளனர். அந்த "கருப்பு ஜூலை' நிகழ்ந்து தற்போது 25 வருடங்கள் அகிவிட்டன. அன்றைய ஜூலையில் நடந்த கொடூரங்களை தமிழர்கள் இன்னமும் மறந்துவிட வில்லை. அன்று என்ன நடந்தது? எழுபதுகளின் தொடக்கத்திலேயே ஈழத்தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திவிட்டனர் என்றபோதிலும், அந்த ஆயுதங்களின் வலிமையை, சிங்கள அரசு 19…

  19. அம்பாறையில் சிறிலங்கா அதிரடிப்படையினர் - கருணா குழுவினர் முறுகல்: அப்பாவி பொதுமக்கள் இருவர் கைது [வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2008, 08:54 பி.ப ஈழம்] [க.நித்தியா] அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் சின்னத்தோட்டம் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கும் கருணா குழுவினருக்கும் இடையில் இடம்பெற்றுள்ள முறுகல் சம்பவத்தால் அப்பாவி பொதுமக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:- அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் சின்னத்தோட்டம் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படை முகாம் அருகே துணை இராணுவக்குழுவான இனியபாரதி குழுவினர் முகாம் நிறுவியதனை சிறப்பு அதிரடிப்படையினர் தமது பாதுகாப்புக் கருதி தடுத்த…

    • 0 replies
    • 1.1k views
  20. சிறிலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதல்களினாலும் வல்வளைப்புக்களினாலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இடம்பெயர்ந்து அக்கராயன்குளம், வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான போன்ற பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வீடமைப்பதற்கான உதவிகளை செய்து வருகின்றது. தொடர்ந்து வாசிக்க

  21. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் வழங்கப்படும் வாக்குறுதிகளை நம்பி அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ள முடியாதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பயங்கரவாதப் பிடியில் சிக்கித் தவித்த கிழக்கு வாழ் மக்களை அரசாங்கம் காப்பாற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வடக்கில் உள்ள அப்பாவிச் சிவிலியன்களை மீட்டெடுப்பதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மனிதாபிமான யுத்தமொன்றை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை நோக்கி அரசாங்கம் நகர்வதனை எம்மால் தெளிவாக உணரக்கூடியதாக இருக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார். தினமின நாளேட்டுக்கு அளித்த விசேட செவ்வியின் போது அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். பிள…

  22. தமிழீழ விடுதலைப் புலிகள் முற்று முழுதாக ஈழத்தை மீட்டெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என அரசியற்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வெற்றியடைவுறும் தருணம் தொலைவில் இல்லை எனவும் நடேசன் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கை அரச படையினர் அடைந்துள்ள வெற்றி குறித்துச் சர்வதேச தமிழர் சமூகம் விரக்தியடைந்துள்ளமையை ஏற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் வெகுவிரையில் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் விடுதலைப் புலிகள் வெற்றிகளைக் குவிப்பர் என அவர் குறிப்பிட்டுள்ளார். www.tamilwin.com

    • 10 replies
    • 3.4k views
  23. அமைச்சர் மேர்வின் சில்வாவினால் நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர் தாக்கப்பட்டு, கமராக்கள் பறிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொள்ளுப்பிட்டியில் இன்று நண்பகல் ஆர்ப்பாட்டம் நடந்தது. சுதந்திர ஊடக அமைப்பு உள்ளிட்ட ஐந்து ஊடக அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகவிலயாளர்கள், அரசியல் கட்சிகளின் அங்கத்தவர்களும், சிவில் அமைப்புக்களின் தலைவர்களும் கலந்துக்கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கும், பொலிஸாருக்கும் எதிராக கோஷமெழுப்பினர். அமைச்சர் மேர்வின் சில்வா நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர்களை தாக்கிய, கெமராக்களை பறித்துச் சென்றமைக்கு போதிய ஆதாரங்கள் இருக்கின்றபோதிலும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்…

    • 0 replies
    • 720 views
  24. கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து இடம்பெயர்ந்து மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பகுதியிலுள்ள முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் முகாம்களை விட்டு வெளியேறமுடியாத நிலையில் இருப்பதாக மன்னார் தகவல் தொடர்பாடல் ஊடக வலைப்பின்னல் நிலையம் தெரிவித்துள்ளது. மக்களைத் தேடிய ஊடகப் பயணம் இரண்டாம் கட்டத்தின் ஒரு அங்கமாக மன்னார் தகவல் தொடர்பாடல் ஊடக வலைப்பின்னல் நிலையத்தின் ஏற்பாட்டில் மன்னார் பகுதி ஊடகவியலாளர்கள் நானாட்டான் பிரதேச செயலாளர் பகுதியிலுள்ள முகாம்களுக்குச் சென்று அங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடியுள்ளனர். முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் முகாம்களை விட்ட…

    • 0 replies
    • 786 views
  25. நெடுங்கேணியில் கிளைமோர் தாக்குதல்: அப்பாவிப் பொதுமகன் பலி [வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2008, 04:31 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா வடக்கு நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் அப்பாவிப் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 8:00 மணியளவில் இடம்பெற்றது. நெடுங்கேணியில் இருந்து மருதோடை நோக்கி ஈருளியில் விவசாய நிலத்தைப்பார்க்கச் சென்று கொண்டிருந்த பொதுமகன் மீது சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் கிளைமோர் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் சுப்பையா நடராசா (வயது 57) என்பவர் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டுள்ளார். புதினம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.