Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எட்டுமாத குழந்தையை கொலை செய்வதாக அச்சுறுத்தி அக்குழந்தையின் தாயை வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவத்திலிருந்து தப்பி வந்த சிப்பாயை கைது செய்வதற்கு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்துள்ளனர் . 23வயதான இந்த யுவதியின் கணவர் கொழும்பில் தொழில் புரிந்து வருகிறார் யுவதி தனது எட்டுமாத குழந்தையுடன் ஆனமடுவில் உள்ள வீட்டிலிருந்த சமயம் இராணுவச் சிப்பாய் வானில் வந்து அவரை கடத்திச் சென்றுள்ளார் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து எட்டுமாத குழந்தையை கொலை செய்து விடுவதாக கூறி யுவதியை பாலியல் வல்லுறவு செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார் எனவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 1.2k views
  2. இலங்கை மோதலுக்கு சமாதானத் தீர்வு காண்பதற்காக அதிகாரத்தை அவுஸ்திரேலிய அரசு பயன்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதுடன், 2002 இல் அரசும் புலிகளும் மேற்கொண்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை முறையாக மீண்டும் அமுல்படுத்துமாறு கொழும்புக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மகஜரொன்றை அவுஸ்திரேலிய எம்.பி.யான ஜோன் மேர்பி நேற்று புதன் கிழமை சபைப் பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பித்தார். இந்த மகஜரில் 4ஆயிரத்துக்கும் அதிகமான அவுஸ்திரேலியர்கள் கையொப்பமிட்டுள்ளனர். இலங்கை மோதலுக்கு சமாதானத் தீர்வு காண்பதற்காக அவுஸ்திரேலிய அரசு தனது சகல அதிகாரத்தையும் பயன்படுத்த வேண்டுமெனவும் 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை முறையாக அமுல்படுததினால் இலங்…

    • 0 replies
    • 535 views
  3. இந்த வருடம் ஜனவரி முதல் தற்போது வரை புலிகளின் 228 சடலங்களைப் படையினா செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு மூலம் புலிகளிடம் ஒப்படைத்திருக்கின்றனர். என்று இராணுவ பேச்சாளன் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே இதனை தெரிவித்தார் மேலும் புலிகளுக்கெதிரான படை நடவஎக்கையின் போது நூற்றுக் கணக்கான புலிகள் கொல்லப்பட்ருக்கின்றனர். நாம் மன்னாரில் சில பகுதிகைளக் கைப்பற்ற மேற்கொண்ட நடவடிக்கையின் பேது அதிகமான புலிகள் கொல்லப்பட்டனர். நாம் அப் பிரதேசங்களைக் கைப்பற்றியதன் பின் அங்கு அண்மையில் இறந்த புலிகளின் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் அடக்க இடங்களைக் கண்டோம். அது மாத்திரமின்றி அண்மையில் இறந்தவர்கள் என்று கூறி புலிகள் 500 புலி உறுப்பினர்க…

    • 0 replies
    • 725 views
  4. இந்தியாவிலுள்ள பல்வேறு இராணுவப் பயிற்சி முகாம்களில் 500 க்கும் மேற்பட்ட இலங்கை படையினருக்குப் பயிற்சிகள் வழங்கபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரத்தைச் சேர்ந்தவர்களுக்கும் போர்ப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மிசோரம் மாநிலத்தில் வனபயிற்சி நிலையத்திலும், மாரட்டிய மாநிலம் தேவலாவியில் உள்ள பீரங்கிப் போர் பயிற்சி நிலையத்தில் போர் பயிற்சியும் அளித்து வருகின்றது. இலங்கை படைவீரருக்கு தனது இராணுவ பயிற்சி முகாம்களின் அனைத்து கதவுகளையும் இந்தியா திறந்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தகவல் தொழில்நுட்பம், நீர்மூழ்கிக் கப்பல் போர் பயிற்சி போன்ற பல்வேறு தொழில்நுட்ப பிரிவுகளிலும் பயிற்சி அளிக்கப்பட…

    • 2 replies
    • 1k views
  5. ஐக்கிய நாடுகள் சபையை பக்கச்சார்பான அமைப்பாக இலங்கை கருதுகிறது- ஐ.நா. அதிகாரி இலங்கை உட்பட ஏனைய நாடுகள் சில, ஐக்கிய நாடுகள் சபையை பக்கச்சார்பற்ற, சுதந்திரமான ஒரு அமைப்பாகக் கருதுவதில்லையென ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அல்ஜீரியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் சிரேஷ்ட ஐக்கிய நாடுகள் சபைக்கான இராஜதந்திரியுமான லக்டார் ப்ராஹிமியே இவ்வாறு கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை, உலகத்தின் பக்கச்சார்பற்ற அமைப்பு என்ற மதிப்பைக் குறைப்பதற்கு சக்திவாய்ந்த நாடுகள் முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் அவர், ஐக்கிய நாடுகள் சபை பக்கச்சார்பற்றதென நீண்டகாலத்துக்குப் பார்க்கமுடியாத நிலைமை உள்ளதாக ஐ.நா. அலுவலகர்கள் தமது குழுவுக்குக் கூறியிருப்…

  6. கனேடியத் தமிழர்களே! உங்கள் உணர்வுகளை ஒன்று திரண்டு கனேடிய அரசு மற்றும் பன்னாட்டு சமூகத்திற்கு வெளிப்படுத்த தயாராகுங்கள். எமது தலைவனிற்குப் பின்னால் நாம் இருக்கிறோம் என்பதை ஒன்று பட்டு ஒரே குரலாக ஓங்கியொலிப்போம்.

    • 2 replies
    • 1.6k views
  7. சிறிலங்காவின் உயர் இராணுவ அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படும் திட்டமிடப்படாத, முறையற்ற போரியல் நடவடிக்கையினால் ஐம்பது ஆயிரம் படையினருக்கு வன்னி மண்ணில் சமாதி கட்டும் காலம் நெருங்கிவிட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். பதிவு இணையத்தளத்திற்காக வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். போரியல் விதிகளை மீறி தமிழர் பகுதிகளுக்குள் செல்லும் சிங்கள படைகளுக்கும் அதனை வழிநடாத்திச் செல்லும் உயர் அதிகாரிகளுக்கும் தகுந்த பாடம் புகட்டி அவர்களுக்கான சமாதிகளை கட்டுவதற்கு விடுதலை புலிகளின் தாக்குதல் படையணி தயார் நிலையில் உள்ளனர். இன்னும் 27 கிலோமீற்றர் 18கிலோமீற்றர் என நீளங்களை அளவிடும் இராணுவத…

  8. வடபோர் முனைக்கான கனரக ஆயுதங்கள் கடந்த வாரம் கொழும்பு வந்து சேர்ந்தது [புதன்கிழமை, 02 யூலை 2008, 09:34 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] வடபோர் முனையில் பயன்படுத்துவதற்கான பெருந்தொகையான ஆயுத தளபாடங்கள் அடங்கிய தொகுதி ஒன்று செக் குடியரசிடமிருந்து கடந்த வாரம் கொழும்பு வந்து சேர்ந்திருப்பதாக சிறிலங்கா இராணுவ வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. செக் தயாரிப்பான 40 குழல்கள் கொண்ட ஆர்.எம். 70 பல்குழல் பீரங்கிகளுக்கான 122 மில்லி மீற்றர் ஏவுகணைகள், பி.எம்.பி.-3 தொடர் இலக்க துருப்புக்காவிகளுக்கான உதிரிப்பாகங்கள் உட்பட பெருந்தொகையான ஆயுத தளபாடங்கள் கடந்த சனிக்கிழமை கொழும்பு வந்து சேர்ந்திருப்பதாக மேற்படித்தகவல் மேலும் தெரிவித்தது. கடந்த வருடம் நவம்பர் மாதம் செக் நாட்டுக்கு…

  9. நொந்துபோன ஈழத் தமிழர்களை நோகடிப்பது வெந்தபுண்ணில் வேல் செருகுவது ஆகும்.- பழ. நெடுமாறன் "தமிழ்நாட்டில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்களில் சிலர் சட்டத் திற்குப் புறம்பான வகையில் ஆவணங் களைப் பெற்று தமிழகத்தில் சொத்து வாங்குவதாக அரசின் கவனத்திற்கு புகார்கள் வந்துள்ளன. இவற்றைப் பரி சீலித்து இந்தியக் குடிமக்களாக இல்லாத வர்கள் நிலம் மற்றும் வீடுவாங்குவதை மாவட்ட ஆட்சியர்களும் காவல் துறையினரும் தடுக்கவேண்டும். அகதி கள் என்ற போர்வையில் இந்திய இறை யாண்மைக்கு ஊறுவிளைவிப்போரை தமிழகத்தில் ஊடுருவ அனுமதிக்கக் கூடாது" என முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு ஈழத்தமிழர் மீது அவர் கொண்டிருக்கும் அளவற்ற வெறுப்பின் அடையாளமாகும். சொந்த மண்ணில் வாழ வழியி…

  10. கல்முனையில் இருந்து ஹொரனைப் பகுதிக்கு சென்ற 1 வயதுக் குழந்தை உள்ளிட்ட 5 பேர் அடங்கிய குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளர். திருமண நிகழ்வொன்னிற்காக புகையிரதமூலம் ஹொரண சென்று பேருந்து தரிப்பிடத்தில் நின்ற வேளை கைது செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்ட குடும்பத்தின் இளைய மகன் ராஜரட்ணம் லோரன்ஸ் பிரதி அமைச்சர் ராதாகிருஸ்ணனிடம் முறையிட்டுள்ளார். இந்தக் கைது குறித்து தகவல்களைப் பெறச்சென்ற அருட் தந்தை பற்றிக் லோறன்ஸை ஹொரன காவல் நிலையப் பொறுப்பதிகாரி அனுரறன்தெனிய கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 57 வயதுடைய ராஜமணி ராஜரட்ணம், 27 வயதுடைய ராஜரணம் கிறிஸ்ரோபர் பிறின்ந், 23 வயதுடைய ராஜர்ணம் கிறிஸ்ரோபர் பிரியாளினி, 23 வயதுடைய அருண் தர்மினி சொலமன், 1 வயது…

    • 1 reply
    • 1.1k views
  11. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருக்கு முல்லைத்தீவு அரசாங்க அதிபரின் ஊடாக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. [ புதன்கிழமை, 02 யூலை 2008, 01:13.45 PM GMT +05:30 ] முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் கொலை வழக்கில் பிரதிவாதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருக்கு முல்லைத்தீவு அரசாங்க அதிபரின் ஊடாக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது பிரசன்னமான குற்றப்புலனாய்வுத் துறையினர், பிரதிவாதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், புலனாய்வுத்துறை தலைவர் பொட்டு அம்மான் மற்றும் சார்ள்ஸ் மாஸ்டர், ஆகியோர் அரசாங்கத்தின் கட்டுப்பாடற்ற பிரதேசத்தி…

  12. இந்தியாவின் மினிப் படையெடுப்பு? [02 - July - 2008] வ. திருநாவுக்கரசு ""அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கவில்லை. அவர்களைப் பயங்கரவாதத்தின் கோரப்பிடியிலிருந்து மீட்டெடுக்கும் நோக்கத்துடனேயே யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பயங்கரவாதத்திற்குத் திடகாத்திரமாக முகம்கொடுத்து, கிழக்கை மீட்டது போல வடக்கையும் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது. அங்கே வாழும் மக்கள் சாப்பிடுவதற்கு மட்டும் தான் வாய் திறக்க முடியும். அவர்கள் ஜனநாயக காற்றைச் சுவாசிப்பதற்குச் சந்தர்ப்பம் அளிப்பதற்காகவே ஆயுதப் படையினர் உழைத்துவருகின்றனர்' மேற்கண்டவாறு சென்றவாரம் இடம்பெற்றதாகிய பேருவலை மீன்பிடித் துறைமுகத்தின் திறப்பு விழாவின் போது ஜனாதிபதி…

    • 2 replies
    • 1.6k views
  13. சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள வரும் முஷாரப்பின் பாதுகாப்பிற்கு பாகிஸ்தானிய படைகள் வரவில்லை! இலங்கையில் நடைபெறவுள்ள 15 ஆவது சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பின் பாதுகாப்பிற்காக பாகிஸ்தானிய படைகள் வரவில்லை என தூதுவராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பாகிஸ்தான் ஜனாதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மாத்திரம் இந்த விஜயத்தின் போது அவருக்கு பாதுகாப்பு அளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள இந்திய பிரதமரின் பாதுகாப்பிற்கு 3000த்திற்கும் மேற்பட்ட இந்திய படையினர் இலங்கை வருகை தரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏனைய அனைத்து அரச தலைவர்களின் பாதுகாப்பிற்காகவும் இந்திய படையினர் விசேட பாதுக…

    • 5 replies
    • 1.3k views
  14. உலங்குவானூர்தி மீது சத்தமற்ற தாக்குதலை நடத்திய புலிகள்: அமைச்சர் கேகலிய [புதன்கிழமை, 02 யூலை 2008, 07:53 பி.ப ஈழம்] [வவுனியா நிருபர்] அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம்குடாவில் சிறிலங்கா வான்படையினரின் உலங்குவானூர்தி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் சத்தமற்ற தாக்குதலையே நடத்தியுள்ளனர் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் கடந்த 20 வருடங்களுக்கும் மெலாக இருந்த பகுதிகளை படையினர் கைப்பற்றியிருப்பது அரசாங்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். நெல் விளையும் பாரிய நி…

    • 8 replies
    • 1.6k views
  15. அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம்குடாவில் சிறிலங்கா வான்படையினரின் உலங்குவானூர்தி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் சத்தமற்ற தாக்குதலையே நடத்தியுள்ளனர் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  16. வன்னி மண்ணில் 50 ஆயிரம் படையினருக்கு சமாதி கட்டும் காலம் நெருங்கி வருகிறது - ஜெயானந்தமூர்த்தி புதன், 02 ஜுலை 2008 [பதிவு நிருபர்] சிறிலங்காவின் உயர் இராணுவ அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படும் திட்டமிடப்படாத, முறையற்ற போரியல் நடவடிக்கையினால் ஐம்பது ஆயிரம் படையினருக்கு வன்னி மண்ணில் சமாதி கட்டும் காலம் நெருங்கிவிட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். பதிவு இணையத்தளத்திற்காக வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். போரியல் விதிகளை மீறி தமிழர் பகுதிகளுக்குள் செல்லும் சிங்கள படைகளுக்கும் அதனை வழிநடாத்திச் செல்லும் உயர் அதிகாரிகளுக்கும் தகுந்த பாடம் புகட்டி அவர்களுக்கான சமா…

    • 0 replies
    • 1.4k views
  17. வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டைப் பகுதியில் நேற்று சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இதில் 12 படையினர் கொல்லப்பட்டனர். 19 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 651 views
  18. கரும்புலிகள் நாளையொட்டி சிறப்பு கலையரங்கம் [புதன்கிழமை, 02 யூலை 2008, 06:57 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி பாரதிபுரம் வடத்தில் தொண்டமனாறு பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று கரும்புலிகள் நாளையொட்டிய சிறப்பு கலையரங்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை பாரதிபுரம் வட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திருமாறன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் பொதுச்சுடரினை கிளிநொச்சி கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன் ஏற்றினார். பொதுக்கரும்புலிகளின் திருவுருவப்படத்திற்கு தூயவன் அரச அறிவியல் கல்லூரி முதல்வர் அரசண்ணா சுடர் ஏற்றி மலர்மாலை சூட்டினார். கரும்புலி கப்டன் மில்லரின் திருவுருவப்படத்திற்கு தரைக்கரும்புலி மேஜர் யாழினியின் உடன்பிற…

    • 0 replies
    • 538 views
  19. வவுனியாவில் உள்ள அம்பலாங்கொடல்ல என்ற இடத்தில் சிறிலங்கா காவல்துறையின் முன்னாள் அதிகாரியின் வீட்டிலிருந்து வெடிகுண்டுகளை மீட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 541 views
  20. சிறிலங்கா வான்படையின் தாக்குதலையடுத்து ஏ-9 வீதி போக்குவரத்து நிறுத்தம் [புதன்கிழமை, 02 யூலை 2008, 05:42 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் ஓமந்தை சூனியப்பிரதேசத்தில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினர் பணியாற்றும் பகுதியில் நேற்று நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலையடுத்து ஓமந்தை சூனியப்பிரதேசத்தில் பணியாற்றுவதற்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஓமந்தை சூனியப்பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு திடீரென சிறிலங்கா வான்படையியின் வானூர்திகள் கடும் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தின. இதனால் பாதுகாப்பு போதியளவு இல்லை என்று தெரிவித்து நேற்றிரவு முதல் அப்பகுதியிலிருந்து விலகுவதாக செஞ்சிலுவைச் சங்கத்தினர் அறிவ…

    • 0 replies
    • 571 views
  21. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் கேளிக்கை நிகழ்வுகளில் பங்கேற்று வருவதாகத் தவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஒரு கட்டமாக, உலக சுகாதார நிறுவனத் தலைவராகத் தாம் தெரிவானமையைக் கொண்டாடும் முகமாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நடத்திய விருந்துபசாரம் அமைந்திருந்தது. இதில் இரண்டு தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கை சேர்ந்த ஒருவரும் பங்கேற்றதுடன் களியாட்டங்களிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், குடிபோதையில் “என்னடி ராக்கம்மா” என்ற பாடலை பாடி விருந்துக்கு வந்தோரை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். இதனைப்பார்த்த சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தமிழ்மக்கள் துன்பப்பட்டு கொண்டிருக்கும் போது தமிழ…

    • 10 replies
    • 2.8k views
  22. இலங்கை பத்திரிகை நிறுவனத்தின் பணியாளரும் ஊடகவியலாளருமான நாமல் பெரேரா, பிரித்தானிய தூதரகத்தில் பணியாற்றும் மகேந்திர ரட்ணவீர ஆகியோர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் ஊடகவியலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 531 views
  23. கிளிநொச்சியிலும், புதுக்குடியிருப்பிலும் துணுக்காய் உதவி அரசாங்க அதிபர் நா.நந்தகுமார் மீது சிறிலங்காப் படையினர் நடத்திய கிளைமோர் தாக்குதலினைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 550 views
  24. ஊடகவியலாளர் நாமால் பெரேரா மற்றும் பிரித்தானிய அரசியல் பிரிவின் ஊடக அதிகரி மகேந்திர ரத்னவீர ஆகியோர் தாக்கப்பட்டமைக்கு எதிராக ஊடக அமைப்புகள் இன்று கொழும்பு கொள்ளுப்பிட்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். கடந்த 30 ஆம் திகதி இந்த இருவர் தாக்கப்பட்டமை கண்டிப்பதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர். இன்று காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்களுடன் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார். இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், ஊடக சேவையாளர் சங்கம், இலங்கை முஸ்லிம் ஊடகப் பேரவை, இலங்கை தமிழ் ஊடகப் பேரவை மற்றும் சுதந்திர ஊடக அமைப்பு ஆகிய இணைந்து இந்த எதிர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன. அனைத்து அரசியல் கட்சிகள், வெகுசன அமைப்புக்கள…

    • 0 replies
    • 625 views
  25. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமும், ஹசன் அலியும் மீண்டும் நாடாளுமன்றப் பதவிகளை பொறுப்பேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 735 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.