ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
கடந்த சில தினங்களில் மன்னார், வவுனியா மாவட்டக் கள முனைகளில் பலியாகி இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட 6 விடுதலைப் புலிப் போராளிகளின் உடலங்களை சிறீலங்கா அரச படைகள் வவுனியாவில் வைத்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளித்துள்ளன. இவ்வாண்டில் இதுவரை இவ்வாறு நூறு வரையான உடலங்கள் சிறீலங்கா அரசால் கையளிக்கப்பட்டுள்ளதாக முன்னர் இராணுவப் பேச்சாளர் கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது. போர்க்களத்தில் தமக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று சிறீலங்கா அரசு அண்மைக் காலமாக வெளி உலகுக்கு கூறிவருவதுடன் கனடா ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற அமெரிக்க சார்பு நாடுகள் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தூண்டவும் படுகின்றன.
-
- 0 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாண குடாநாடு மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தப்போவதாக எழுந்துள்ள அச்ச நிலையைத் தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். குடாநாட்டுக்கு சிறிலங்கா இராணுவத் தளபதி சென்றுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
யாழ் முழுவதையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றுவது என்பது அவர்களது கனவாக மட்டும் தான் இருக்க முடியும். என இராணுவப் பேச்சாளன் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். குடாநாட்டின் மீதான விடுதலைப்புலிகளின் நடவடிக்கை குறித்த புலனாய்வுத் தகவல் தொடர்பாகச் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும தெரிவிக்கையில் : விடுதலைப் புலிகளால் குடா நாட்டு மக்களை இலக்கு வைத்து கிளைமோர் வைக்க முடியும், பிஸ்டல் குழுவாக இயங்க முடியும். இவை தவிர எதுவுமே செய்ய இயலாது. என தெரிவித்தார். நன்றி : உதயன்
-
- 8 replies
- 2.6k views
-
-
சிறிலங்கா இராணுவம் மோதல்களில் வெற்றி பெற்று வருவதனால் எமது பிரச்சினையில் இந்தியா தலையிடக்கூடாது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-
-
காவலரண் மீது கைக்குண்டு வீச்சுத் தாக்குதல் : படைச்சிப்பாய் பலி ஒருவர் காயம். 18.06.2008 / நிருபர் எல்லாளன் மன்னார் பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் உள்ள காவலரண் மீது இன்று அதிகாலை 2.05 மணியளவில் கைக்குண்டு தாக்குதல் மற்று துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து 45 நிமிடங்கள் வரை தொடர்ச்சியான துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தின் போது ஒரு சிறிலங்காப் படைச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு பொலிஸ் சிப்பாய் படுகாயமடைந்துள்ளார். பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் அருகிலிருந்த வீடுகளின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. இத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த படையினரின் சடலம் மன்னார்…
-
- 0 replies
- 901 views
-
-
லங்கா நியூஸ் ஆசிரியர், செய்தி ஆசிரியர் சி.ஐ.டி.யினரால் விசாரணை Wednesday, 18 June 2008 கொழும்பில் செயற்படும் லங்கா நியூஸ் இணையத்தளத்தின் அலுவலகத்துக்குச் சென்ற சி.ஐ.டி.யினர் குறிப்பிட்ட இணையத் தளத்தின் ஆசிரியரையும் செய்தி ஆசிரியரையும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளார்கள். குறிப்பிட்ட இணையத்தளத்தில் வெளியாகியிருந்த இரண்டு கட்டுரைகள் தொடர்பாகவே இந்த விசாரணைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு கட்டுரைகளும் அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையில் அமைந்திருந்ததையடுத்தே இந்த விசாரணைகள் இடம்பெற்றிருக்கின்றன. தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷமன் ஹலுகல்லவின் பணிப்பின் பேரிலேயே சி.ஐ.டி.யினர் இவ்விருவரையும் விசாரணைக்கு உட்படுத்த…
-
- 0 replies
- 905 views
-
-
அரசியல் சமாளிப்புகளுக்கும் கைகொடுத்து உதவும் யுத்தம் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஐயாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்பது உட்பட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து 366 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அடுத்த மாதம் 10 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒரு நாள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித் துள்ளன. இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் சமாதான முறையில் பேச்சு மூலமாக தீர்வு காண்பதில் உடன்பாடற்ற இலங்கை அரசுத் தலைமை, தமிழரை இராணுவ ரீதியில் அடக்கி, ஒடுக்கி, அவர்களின் பேரம் பேசும் வலுவைச் சிதறடித்த பின்னர், தான் விரும்பிய முடிவை அவர்கள் மீது தீர்வாகத் திணிக் கும் ஒரே இலக்கில் செயற்படுகின்றது. அதனால் போர்த் தீவிர முன…
-
- 0 replies
- 789 views
-
-
முன்னொரு போதுமில்லாதவாறு இந்த அரசின் ஆட்சிக்காலத்தில் மனித உரிமை மீறல்கள் மிக மோசமாக இடம் பெறுகின்றன. பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய் திறந்து பேசுவதற்கு அஞ்சும் நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில் சர்வதேசத்தின் கண்ணில் மண்ணை தூவுவதற்கான இராஜதந்திர நடவடிக்கையே சாட்சிகளை பாதுகாப்பும் சட்ட மூலமாகும். என த.தே.கூட்டணியின் பா.உ வான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார். அரசின் சட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டமூலம் சர்வதேச சமூகத்தை முட்டாள் ஆக்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியாகும். இது வெட்கக்கேடான செயற்பாடாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றில் நேற்று இடம் பெற்ற குற்றச் செயல்களுக்கு பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவா…
-
- 0 replies
- 844 views
-
-
திருகோணமலை மாவட்டம் மூதூரில் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டு தொண்டர் அமைப்பான பட்டினிக்கு எதிரான அமைப்பு தொண்டர்களின் படுகொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள அனைத்துலக விசாரணைக்குழு அவசியம் என்று பட்டினிக்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 423 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு வந்தால் தான் சமாதானப் பேச்சு என்று சிறிலங்கா அரசாங்கம் கடந்த வாரம் விடுத்திருந்த அறிவிப்பை அடியோடு நிராகரித்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகள், சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான போரில் தாம் வெற்றி பெறுவோம் என்று சூளுரைத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 769 views
-
-
சிறிலங்காவின் வங்கிகளில் வைப்பிலிடப்படும் தமிழ் மக்களின் பணம் போருக்கே பயன்படுத்துகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.கனகரத்தினம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 760 views
-
-
ஆயுதங்களை கைவிடவேண்டும் என்ற கோரிக்கையை புலிகள் நிராகரித்தனர் புதன், 18 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] சமாதான பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிப்பதாயின் ஆயுதங்களை விடுதலைப்புலிகள் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலைப்புலிகள் நிராகரித்துள்ளனர். இதுதொடர்பில் விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் ரொய்ட்ரர் செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கையில் சமாதான பேச்சுவார்த்தையினை தொடர்வதற்கு படைவலுச்சமநிலையும் சமத்துவ நிலையும் அவசியமாகது எனவும் இதனைப் பாதிக்கும் எவற்றையும் மேற்கொள்ள தயாராக இல்லை எனவும் தெரிவித்துள்ளார். கடந்தவாரம் விடுதலைப்புலிகள் நோர்வேயின் விசேட சமாதான தூதுவர்களை சந்திக்க வேண்டும் எனக் கூறியபோது சிறீலங்கா அரசாங்கம் அதற்கு…
-
- 0 replies
- 874 views
-
-
15.06.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு இவ்வாரம் நிலவரம் ஆய்வில் கருப்பொருளாக "உலகெங்கும் பொங்குதமிழ்" எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. http://www.yarl.com/videoclips/view_video....c9b924ec161e763 இந்நிலவரத்தில் இறுதிப்பகுதியில் சில நிமிடங்கள் (தொழில்நுட்பக் கோளாறு காரணமாக) இல்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
-
- 2 replies
- 890 views
-
-
தமிழ் மக்களுக்கு சுயாதீன தமிழ் ஈழமொன்று வழங்கப்பட வேண்டும் என நோர்வே அரசாங்கத்தின் ட்ரொன்ட் ஜென்ஸ்ட்ரெட் வெளியிட்ட கருத்துக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எந்த வகையிலும் தமிழீழம் வழங்கப்பட மாட்டாது என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. வன்னியில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்பட மாட்டாதென குறிப்பிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை நோர்வேயில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே குறித்த நோர்வே அரசியல்வாதி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
-
- 6 replies
- 1.9k views
-
-
சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டமூலம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் ஸ்ரீ லங்கா நாடாளுமன்றத்தில் சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை முன்வைத்து உரையாற்றுகையில் "இச்சட்டமூலம் மனித உரிமைகளைப் பாதுகாத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும்" என மகிந்த சமரசிங்க தெரிவித்தார். இவ்விவாத்தின்போது யாராவது அண்மையில் சிறைச்சாலையில் அடைக்கலம் புகுந்திருந்த சிலர் சிறைச்சாலை வாகனத்தில் செல்லும்போது சுட்டுக்கொல்லப்பட்ட விடயங்கள் பற்றி யாராவது விவாதித்தார்களா? ஆணைக்குழுவின் காணொளி நேரடிப்பதிவை நிறுத்திய இவர்கள், அதனால் வரும் விளைவுகளைச் சமாளிக்கத்தான் இச்சட்டம். ஆனால் வேலியே பயிரை மேயும். இதற்கு 83' பிந்துணுவெவ சாட்சிகள். தேவை விழிப்புணர்வு Witness Protection Bill will strengthen Rul…
-
- 0 replies
- 544 views
-
-
சாத்வீகப் பாதையில் சந்தி பிரித்தவன் -கி.பி.அரவிந்தன்- 'சாத்வீகப் பாதையில் சந்தி பிரித்தாய் கால வெளியில் சுவடுகள் பதித்தாய் காலக் கரைவிலும் உந்தன் சுவடுகள்..." பொன். சிவகுமாரனின் 15 ஆவது ஆண்டு நினைவின் போது 1989 ஆம் ஆண்டில் என்னால் எழுதப்பட்ட கவிதையின் சில வரிகள் இவை. 34 ஆண்டுகள் காலத்துள் கரைந்து சென்றாலும் அவனது சுவடுகள் இன்னமும் ஒளிர்ந்த வண்ணமேயே உள்ளன. அவனுடனான நினைவுகளும் என்னுள் கிளர்ந்த வண்ணமேயே உள்ளன. 1974 ஜனவரி 10 ஆம் நாளில் இருந்து அவனது இறுதி நாளான 1974 ஆம் ஆண்டு ஜுன் 5 ஆம் நாள் வரையில் நான் அவன் கூடவே இருந்தேன். அந்த ஐந்து மாதங்களும் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் எழுச்சிக்கான ஒரு காலகட்டமெனவும் குறிப்பிடலாம். திரவியம் என வ…
-
- 0 replies
- 662 views
-
-
சிறிலங்கா வங்கிகளில் வைப்பிலிடப்படும் தமிழர்களின் பணம் போருக்கே பயன்படுத்தக்கிறது: நா.உ. கனகரத்தினம் [செவ்வாய்க்கிழமை, 17 யூன் 2008, 06:16 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்காவின் வங்கிகளில் வைப்பிலிடப்படும் தமிழ் மக்களின் பணம் போருக்கே பயன்படுத்துகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.கனகரத்தினம் தெரிவித்துள்ளார். ஒட்டிசுட்டானில் நடைபெற்ற கிராமிய அபிவிருத்தி வங்கியின் 12 ஆவது கிளைத் திறப்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கிராமிய வங்கி மக்களுக்கு தேவையான ஒன்று, ஒட்டிசுட்டான் விவசாயத்தை முன்னோடியாகக் கொண்டது. மக்களுக்கு வங்கியில் கடன் பெற்று கடன் மீளளித்தல் இன்றியமையாத் தேவ…
-
- 0 replies
- 679 views
-
-
இலங்கைத் தீவு எதை நோக்கிச் செல்கிறது? - புனிதன் இன்றைய நிலையிலிருந்து இலங்கைத் தீவின் எதிர்காலம் எதை நோக்கிப் போகிறது என்ற வினாவுக்கு விடை தேடும் ஒரு சிறு முயற்சி இது. சகிப்புத் தன்மையுடன் தமிழ் சமூகம் தொடர்ந்து வாழும் என்றும், தமிழ் சமூகத்தின் உரிமைகள் சர்வதேச நிறுவனங்களால் பேணப்படும் என்றும், காந்தீய சிந்தனைகளால் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தில் மூழ்கியிருந்த - படித்த - தமிழ் அரசியல் வாதிகளில் பெரும் பகுதியினர் இலங்கைத் தீவினுள் ஒரு தமிழ் மாநிலத்தை நோக்கியே இலங்கை செல்கிறது என்று எண்ணியிருந்தனர். இச்சிந்தனையில் மாறுபட்ட தமிழ் அரசியல் வாதிகள் இன-மத-மொழி வேறுபாடற்ற இலங்கைத் தீவு நோக்கிய கனவில் திளைத்திருந்தனர். இந்த இரு சிந்தனைகளும் இன்னும் …
-
- 3 replies
- 1.8k views
-
-
இனவாதி மகிந்த காமன்வெல்த் மாநாட்டுக்கு வந்த போது ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 2 replies
- 1.7k views
-
-
கிளிநொச்சி தமிழ் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த இரண்டு பெண் ஆசிரியர்கள் உட்பட நான்கு ஆசிரியர்கள் மருதானை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 714 views
-
-
யாழ். வடமராட்சி கிழக்கு கடல் பரப்பில் தொழிலில் ஈடுபட்டு வந்த 33-க்கும் அதிகமான மீன்பிடிப் படகுகள் மீது சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கி கலங்கள் நீண்ட தூரம் துரத்திச் சென்று தாக்குதலை நடத்தியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 592 views
-
-
வெண்புறாவின் மனிதநேய விழிப்புணர்வு நடவடிக்கை – முதலாவது பரிசு செவ்வாய், 17 ஜுன் 2008 [தாயகன்] லண்டனில் நடைபெற்ற கேளிக்கை நிகழ்வில் ஈழத் தமிழ் மக்களின் அவலத்தை வெளிகொண்டுவந்த, வெண்புறா மனிதநேய அமைப்பிற்கு முதலாவது பரிசு கிடைத்திருக்கின்றது. லண்டன் கார்சல்ரன் (Carshalton) பகுதியில் வருடாவரும் நடைபெறும் Carnival Parade எனப்படும் கேளிக்கை நிகழ்வில் பிரித்தானிய வெண்புறா அமைப்பும் கலந்து கொண்டிருந்தது. கடந்த 14ஆம் நாள் சனிக்கிழமை நடைபெற்ற காட்சிப்பொருள் ஊர்வலத்தில் வெண்புறாவுடன், மேலும் 12 தொண்டு அமைப்புகளும் பங்குகொண்டிருந்தன. “ஆழிப்பேரலையில் வாழ்க்கை “ என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் வெண்புறாவின் இளம் தொண்டர்கள் உட்பட 25இற்கும் ம…
-
- 3 replies
- 1.1k views
-
-
யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கொலை அச்சுறுத்தல் காரணமாக நேற்று திங்கடகிழமை ஒரு குடும்பம் அடைக்கலம் கோரியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 482 views
-
-
இலங்கை வங்கி 1.36 பில்லியன் ரூபாவை அறவிடமுடியாகடனாக அறிவிப்பு செவ்வாய், 17 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] சிறீலங்காவின் இலங்கை வங்கி ரூ1.36 பில்லியன் பெறுமதியான பணத்தினை தள்ளுபடி செய்யவுள்ளதாக தெரியவருகிறது. 2006 ம் ஆண்டு அளவில் அறவிடமுடியாத கடனாக இத்தொகை காணப்படுவதாகவும் இவற்றினை தள்ளுபடி செய்யவுள்ளதாகவும் பாராளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/?p=1261
-
- 0 replies
- 917 views
-
-
களமுனைப் போராளிகளுக்கு உலர் உணவுகளை வழங்கும் செயற்பாடுகள் தாயகத்தில் நாள்தோறும் நடைபெற்று வருகின்ற நிலையில் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் ஆர்வத்துடன் தற்போது அவற்றினை வழங்கி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-