ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
Posted on : 2008-07-14 தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகளுடன் பேசுங்கள்! ""புதிய அரசமைப்பு ஒன்றைத் தேடிக்கொள்ளும் நகர்வுகளை நோக்கி இலங்கை சென்றுகொண்டிருக்கின்றது.'' இப்படித் தகவல் வெளியிட்டிருக்கின்றார் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ விதாரண. "ஒற்றையாட்சி முறை', "சமஷ்டி முறை' என்ற இறுக்கமான நிலைப்பாடுகளைத் தளர்த்தி, ஒற்றையாட்சி முறைக்குள் அதிக அதிகாரப் பரவலாக்கத்தை ஏற்படுத்தவும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கொண்டுவரவும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்ற தகவலையும் அவர் வெளியிட்டிருக்கின்றார். கொழும்பில் வார இறுதியில் புத்தக வெளியீட்டு வைபவம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர…
-
- 0 replies
- 956 views
-
-
இந்தியத் தேவைகளுக்காக புதிய அரசியலமைப்பு அறிமுகம் செய்ய மகிந்த திட்டம்: எதிர்த்துப் போராட ஜே.வி.பி. Monday, 14 July 2008 அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இந்தியாவிடம் மண்டியிட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, இந்தியாவின் தேவைகளுக்காக புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு இந்த அரசாங்கம் முயலுமானால் போராடி அதனைத் தடுத்து நிறுத்துவதற்குத் தயங்கப்போவதில்லை எனவும் அறிவித்திருக்கின்றார். 1987 ஆம் ஆண்டு பலாத்காரமாக எமது நாட்டுக்குள் புகுந்து உயிரிழந்த இந்தியப் படையினருக்கு நினைவுத் தூபி அமைக்கும் அளவுக்கு அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு மண்டியிட்டுள்ளார். இந்தியாவிடம் மண்டியிட்டுள்ள அரசாங்…
-
- 0 replies
- 647 views
-
-
சார்க் மாநாட்டுப் பாதுகாப்பு: தமிழர்களுக்கு விடுதிகளில் தடை? Monday, 14 July 2008 கொழும்பில் நடைபெறவிருக்கும் சார்க் உச்சிமாநாட்டுக்கு இன்னமும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் உச்சிமாநாடு நடைபெறும் காலப்பகுதியில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் கொழும்பிலுள்ள தற்காலிக விடுதிகளில் தங்குவதைத் தடை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சார்க் உச்சிமாநாடு நடைபெறவிருக்கும் காலப்பகுதியில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்தவர்கள் விடுதிகளில் தங்குவதைத் தடுப்பதற்குப் பொலிஸார் முயற்சிப்பதால், அனுமதி வழங்க விடுதி உரிமையாளர்கள் பின்னடிப்பதாக மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். "சார்க் உச்சிமாட்டைத் தொடர்ந்து மு…
-
- 0 replies
- 608 views
-
-
வன்னிப் பெருநிலப்பரப்பின் மீதான படை நடவடிக்கைகள் குறித்த சிங்கள ஆய்வாளர்களின் தொனிகள் மாறத்தொடங்கியிருக்கின்றன. படையினர் வழங்கும் புலிகளின் இழப்புத் தொகைகளைப் பாடுகின்ற முன்னைய தெனாவெட்டு கொஞ்சம் அடங்கி, புலிகள் வலிந்த தாக்குதல் செய்யும் சூழல் பற்றிய ஆய்வுகளில் அவர்கள் இறங்கியிருக்கிறார்கள். படை நகர்வின் தொடக்க வேகம், படையினரின் சராசரி இழப்புக்கள், காலத்திற்குக் காலம் மாறுபடுவதாகத் தெரியும் அவர்களின் கால வரம்புகள் என்பன சிங்களப் படைய மூலோபாயத்தை நியாயப்படுத்தும் தென்னிலங்கை ஆய்வாளர்களையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. ~தமிழ்த் தேசியவாதத்தில் நம்பிக்கையுள்ள மக்கள் அங்கே இருக்கிறார்கள். ஒரு ஆயிரம் போராளிகள் மட்டில் இன்னமும் இரண்டு தசாப்தங்களுக்கு (அதாவது, இருபது வரு…
-
- 4 replies
- 1.8k views
-
-
வட போர் அரங்கில் பெருமெடுப்பிலான போரை நடத்திவரும் இலங்கை அரசுக்கு தனது படைகளில் ஏற்பட்டுள்ள ஆட்பற்றாக்குறையே புலிகளை விட பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தமது படைகள் வன்னியில் பெரிய பெரிய பிரதேசங்களையெல்லாம் கைப்பற்றிவிட்டன எனக் கொழும்பில் அரசு அறிக்கை விட்டு ஆனந்தம் கொள்கின்றபோதும், பிடித்த இடங்களைத் தக்கவைப்பதற்கு ஆட்கள் இன்றி அவதிப்படும் பெரும் சிரமம் களத்தில் நிற்கும் அரச படைகளுக்குத்தான் தெரியும். அரச படைகள் எதிர்நோக்கியுள்ள இந்தப் பெரும் பிரச்சினையை உடனடியாகச் சீர்செய்யும் வகையில், தெற்கில் படைகளுக்கு ஆட்சேர்க்கும் தீவிர முயற்சியில் இராணுவம் இறங்கியுள்ளது. அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள, கைத்தொலைபேசிகள் மூலம் குறுந்தகவல் ஊடாக படைகளுக்கு ஆட்சேர்ப்ப…
-
- 0 replies
- 1k views
-
-
உலக வல்லரசு நாடுகளின் சில புலனாய்வு சேவையினர் இலங்கையின் வடக்கில் நடைபெறும் யுத்தம் தொடர்பான புதிய தகவல்களை அறியும் நோக்கில் மறைமுகமாக செய்மதி படங்களை எடுத்து வருவதாக இலங்கை பாதுகாப்பு துறையின் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. வடக்கில் இடம்பெற்று வரும் மோதல்கள் தொடர்பாக வாராந்தம் செய்திமதி மூலம் புகைப்படம் எடுப்பதுடன் தற்போதைய போர் நிலைமைகளை கண்காணித்து அந்த தகவல்களையும் தமது நாடுகளுக்கு வெளிநாட்டு புலனாய்வு சேவைகள் வழங்கி வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ராஜதந்திர ரீதியில் பெற்றுக்கொள்ளும் தகவல்களுக்கு மேலதிகமாக இந்த நாடுகள் பெற்றுக்கொள்ளும் இந்த ரகசிய தகவல்கள் எந்த நோக்கத்திற்காக பெற்றுக்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து பாரிய பிரச்சினை எழுந்துள…
-
- 11 replies
- 2.5k views
-
-
தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்வது விடுதலைப்புலிகள் தான் என்று வீண் பழி சுமத்தும் மஹிந்தவின் பொய் பிரச்சாரத்திற்கு தற்போது இந்திய அரசும் ஒத்து ஊதுவது மிகுந்த வேதனைக்குரியது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாh. மேலும் : நாகை மாவட்டம், ஆறுகாட்டுத் துறையைச் சேர்ந்த மீனவர்கள் வாசகன் மற்றும் நாரயணசாமி ஆகியோர் கோடியக்கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேளையில் நமது கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கிலக்காகி பலியாயியுள்ளனர். தமிழக மீனவர்களை கொலை செய்வது இலங்கை கடற்படைதான் என்பது உலகறிந்த உண்மை. ஆனால், தமிழக மீனவாகளைச் சுட்டுக் கொல்வது விடுதலைப் புலிகள் தான் என்…
-
- 1 reply
- 876 views
-
-
சத்திரியன் " விடுதலைப் போராட்ட அமைப்புகள் தமது இலக்கை அடையும் வரையில் ஒருபோதும் ஆயுதக் களைவை மேற்கொள்ளக் கூடாது.' "கடந்த 50 வருடங்களில் ஆயுதக் களைவை மேற்கொண்ட எந்தவொரு விடுதலை அமைப்பாவது சமாதானத்தை அனுபவிக்கும் வரை உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.' இது கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும், கியூபாப் புரட்சிக்குத் தலைமை வகித்தவருமான பிடெல் காஸ்ட்ரோ தெரிவித்திருக்கின்ற கருத்தாகும். உலகின் மிகச்சிறந்த புரட்சியாளர்கள் என்று பட்டியலிட்டால் அதில் முக்கியமான இடத்தை பிடெல் காஸ்ட்ரோவுக்கு அவரது எதிரிகள்கூடக் கொடுப்பார்கள். தற்போது தள்ளாத வயதில் நோயுடன் போராடும் அவர் இன்னமும் இணையத்தளங்கள் வாயிலாகவும் வேறு ஊடகங்கள் வாயிலாகவும் புரட்சியாளர்களை ஊக்குவிக்கும் கருத்துக்களை வெளியிட்ட…
-
- 0 replies
- 1k views
-
-
சுமார் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் நேற்று முன்தினம் லண்டனில் திரண்டு 'பொங்குதமிழ்' எழுச்சியை வெளிப்படுத்தியிருக்கின்றனர
-
- 0 replies
- 733 views
-
-
சிறீலங்காவில் பணியாற்றும் அனைத்துலக மனிதநேய அமைப்புகள் மீது அழுத்தங்களை அதிகரிக்கும் நடவடிக்கையை சிறீலங்கா அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.வெளிநாட்டு மனிதநேய பணியாளர்களின் வீசா – நுழைவு அனுமதியில் புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதற்கு சிறீலங்கா அரசு எண்ணியுள்ளது என தெரியவருகின்றது. அரசின் மனித உரிமை மீறல்கள் பற்றிய விபரங்கள் வெளிநாட்டு மனிதநேய அமைப்புகளால் வெளியுலகுக்குக் கொண்டு செல்லப்படுவதால், இந்த புதிய நடைமுறைகள் கொண்டு வரப்படவுள்ளதாக, ஆய்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கூறுகின்றனர். இதனால் சிறீலங்கா அரசாங்கம் மிக மோசமான நெருக்கடிகளை சந்திக்க இருப்பதாக கூறுகின்றனர். -முகிலன் http://www.tamilseythi.com/srilanka/lanka-2008-07-13.html
-
- 0 replies
- 869 views
-
-
வீரகேசரி நாளேடு 7/13/2008 8:25:37 PM - இலங்கை கடற்படையின் மீனவர் மீதான தாக்குதலை மத்திய அரசு ஊக்குவிக்கின்றது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: வேதாரண்யத்தை சேர்ந்த நாராயணன், வாசகன், முரளி ஆகியோர் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் மீனவர்கள் நாராயணன் மற்றும் வாசகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். முரளி என்ற மீனவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையின் தாக்குதலைத் தடுத்து நிறுத்தக் கோரி இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை பலமுறை நேரிலும், கடிதங்கள் மூலமும் வலியுறுத்தியும் தம…
-
- 0 replies
- 838 views
-
-
கொழும்பு கொட்டாஞ்சேனை ஸ்ரீ சிவானந்தா வீதியிலுள்ள கருமாரியம்மன் ஆலயத்தின் முன்பாக நின்று வழிபட்டுக் கொண்டிருந்த பெண்ணின் தாலிக்கொடி ஆட்டோவில் வந்த மூவரால் அறுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு இடம்பெற்றுள்ளது. பலர் அவ்விடத்தில் நின்று வழிபட்டபோது திடீரென ஆட்டோவில் வந்த இவர்கள் அப்பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை அறுத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறித் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து கொட்டாஞ்சேனை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீசிவானந்தா வீதியில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல, வெள்ளிக்கிழமை பகல் 1.30அளவில் கொட்டாஞ்சேனை சுமித்திரா மாவத்தையில் வீதியால் நடந்து சென்று கொண்டி…
-
- 3 replies
- 1.4k views
-
-
களத்தில் தமிழர்களின் பலம் ஆயுதமுனையில் இருக்கும் அதேவேளை, புலம்பெயர் நாடுகளில் பொங்கு தமிழாக, மக்கள் திரட்சி அலையாக வெளிப்பட்டுகொண்டிருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 708 views
-
-
வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுத்தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் ஏழு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 15 படையினர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 688 views
-
-
கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் கோட்டத்தில் உள்ள ஜெயபுரத்தில் நேற்று சனிக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரவழி வானொலியான புலிகளின் குரலின் முத்தமிழ் கலையரங்கம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 793 views
-
-
கொழும்பு கோட்டையில் விமானப்படைத் தலைமையகத்திற்கு அருகிலுள்ள மக்கள் குடியிருப்பிலிருந்து மக்களை ஒரு வாரத்திற்குள் வெளியேறுமாறு விமானப் படையினர் விடுத்துள்ள உத்தரவால் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிர்க்கதி நிலைக்குச் சென்றுள்ளன. றீகல் திரையரங்குக்குச் சமீபமாக விமானப் படைத் தலைமையகத்தின் பின்புறத்திலுள்ள "களனி பசேஜ்' குடியிருப்பைச் சேர்ந்தவர்களையே ஒரு வாரத்திற்குள் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டுமென நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை விமானப்படையினர் அவசர உத்தரவை விடுத்துள்ளனர். தங்களுக்கு எதுவித மாற்று ஏற்பாடும் செய்யாதுஇ ஒரு வாரத்திற்குள் குடியிருப்புகளைக் காலி செய்துவிட வேண்டுமென்றும் இல்லையேல் அனைத்து வீடுகளையும் புல்டோசர்களால் இடித்துத் தள்ளிவிடப் போவதாகவும் வ…
-
- 1 reply
- 1.4k views
-
-
சார்க் மாநாட்டில் பங்கேற்கும் ஏனைய நாட்டு தலைவர்களுக்காக இலங்கை அரசாங்கம் 12 குண்டுத்துளைக்காத கார்களையும் பி எம் டபில்யூ பாதுகாப்பு மோட்டார் சைக்கிள்களையும் இறக்குமதி செய்யவுள்ளது. இவற்றுக்காக சுமார் 960 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்படவுள்ளன. இதேவேளை ஏற்கனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நிர்வாகம் சுமார் 31 கார்களை 8.6 மில்லியன் அமரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்துள்ளது. 12 கார்கள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு படையினரின் நிதிஒதுக்கீட்டின் கீழ் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதேவேளை இறக்குமதி செய்யப்படும் 31 கார்கள் ஜனாதிபதியின் ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்த்தன உட்பட்டோரின் பாவனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இதுமட்டுமன்றி “சார்க்” மாநாட…
-
- 1 reply
- 926 views
-
-
கருணா அழைக்கப்பட்டதன் பின்னணி என்ன? [ஞாயிற்றுக்கிழமை, 13 யூலை 2008, 04:02 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணைப்படைக் குழுவின் தலைவர் பிள்ளையானுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலை அடுத்தே லண்டனிலிருந்து கருணா மீண்டும் சிறிலங்காவுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் என்றும் இதன் பின்னணியில் சிறிலங்கா அரசின் பல திட்டங்கள் ஒழிந்துள்ளன என்றும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது. இவை தொடர்பாக தெரியவருவதாவது: கிழக்கு கள நிலைமைகளில் கைதேர்ந்தவர் என்ற நம்பிக்கையுடனும் தமது உத்தரவுகளுக்கு கட்டுப்படுபவராக இருப்பார் என்ற எண்ணத்துடனும் கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக சிறிலங்கா அரசால் நியமிக்கப்பட்ட பிள்ளையா…
-
- 6 replies
- 1.9k views
-
-
தமிழக மீனவர்கள் பிரச்சினை-தமிழக காங்கிரஸ் கட்சி கண்டனம் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.செய்தியாளர
-
- 3 replies
- 1.2k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள முடியாமையினால் அதிஷ்டான பூஜை என்ற போர்வையில் சமாதான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன. சில பௌத்த பிக்குகளின் ஊடாக இந்த சமாதான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்தத் தகவல்கள் சுட்டிக் காட்டி உள்ளன. இனங்களுக்கிடையிலான நல்லுறவை வளர்த்து நாடு இன்று எதிர்நோக்கியுள்ள சமூக பொருளாதார கலாசார பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அனைத்து சமயத் தலைவர்களும் இணைந்து செயல்படக்கூடிய வகையில் ஜாதிகதி`டான…
-
- 1 reply
- 1.1k views
-
-
அடுத்தமாதம் இரண்டாம் திகதி நடைபெறவுள்ள "சார்க்' மாநாட்டில் பங்குபற்றவரும் தலைவர்களுக்கு எமது படைகளே பாதுகாப்பு வழங்கும். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மட்டும் இந்தியப் படையினரே பாதுகாப்பு வழங்குவர் அவருக்கு பாதுகாப்பு வழங்க அவர்களின் ஹெலிகள் பறக்க எமது வான்பரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இத்தகவல்களை வெளியிட்டுள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அவர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: "சார்க்' மாநாட்டில் பங்கு பற்றவரும் தலைவர்களுக்கு தேவையான பாதுகாப் புக்களை இராணுவ, பொலிஸ், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் எமது படை யினர் வழங்குவர். அவர்களுக்கு தேவை யான சகல பாதுகாப்பு மற்றம் அது சா…
-
- 0 replies
- 978 views
-
-
கிழக்கில் சிங்கள வியாபாரிகள் சுட்டுக்கொல்லப்படுவது தொடர்பில் முஸ்லிம் ஆயுதக்குழுவான ஜிகாத்துக்கு தொடர்பிருப்பதாக புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் அதிகளவான முஸ்லிம் வர்த்தகர்கள் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் வேளையில் தமிழ் பிரதேசங்களே முஸ்லிம் வர்;த்தகர்களின் வர்;த்தகங்களுக்கு முக்கியத்துவமிக்கதாக உள்ளது. இந்த நிலையில் பல்வேறு பகுதிகளிலும் இருந்து லொறிகளில் பொருட்களை கொண்டுவரும் சிங்கள வர்;த்தகர்கள் அவற்றை குறைந்த விலையில் தமிழ்; பிரதேசங்களுக்குள் கொண்டுசென்று விற்பனை செய்துவிட்டு செல்வது வழமை.இதன் காரணமாக தமிழ் மக்களிடமும் இந்த பொருட்களுக்கு நல்லவரவேற்பு உள்ளது. இதனை உணர்ந்த முஸ்லிம் ஜிகாத் ஆயுதக்குழுவே தமிழ் பிரதேசங்கள…
-
- 0 replies
- 908 views
-
-
வடமத்திய மற்றும் சபரகமுவ மாகாணசபைத் தேர்தல் நெருங்கும் சந்தர்ப்பத்தில் விடத்தல் தீவை இராணுவத்தினர் பூரணமாக கைப்பற்றியுள்ளதாக அரசாங்கம் செய்தி வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரச படையினர் விடத்தல் தீவுப் பிரதேசத்தை ஏற்கனவே கைப்பற்றியுள்ள போதிலும், இறுதி நேரத்தில் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்த பிரதேசத்தை கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1.1k views
-
-
சார்க் உச்சிமாநாட்டுக்கு இன்னமும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் உச்சிமாநாடு நடைபெறும் காலப்பகுதியில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் கொழும்பிலுள்ள தற்காலிக விடுதிகளில் தங்கியிருப்பதைத் தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சார்க் உச்சிமாநாடு நடைபெறவிருக்கும் காலப்பகுதியில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்தவர்கள்; விடுதிகளில் தங்குவதைத் தடுப்பதற்குப் பொலிஸார் முயற்சிப்பதால், அனுமதிவழங்க விடுதி உரிமையாளர்கள் பின்னடிப்பதாக மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். “சார்க் உச்சிமாட்டைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கொழும்பு விடுதிகளில் தங்கவிருக்கும் மக்கள் மற்றும் விட…
-
- 0 replies
- 664 views
-
-
11.07.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை http://www.yarl.com/videoclips/video/308/Avasiya-arikkai-41
-
- 2 replies
- 1.3k views
-