ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142851 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் எறிகணை வீச்சில் 3 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் வெவ்வேறு மோதல்களில் 4 படையினர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 826 views
-
-
சிறிலங்கா வெள்ள அனர்த்தத்தில் 18 பேர் பலி- 2 லட்சம் பேர் இடம்பெயர்வு [செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2008, 02:56 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தென்பகுதியிலும் மலையகத்திலும் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கடும் மழை மற்றும் மண் சரிவினால் இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர். 2 லட்சத்திற்கும் அதிகமானனோர் இடம்பெயர்ந்துள்ளனர். தென்பகுதியில் உள்ள களுத்துறை, காலி, இரத்தினபுரியிலும் மலையகத்தில் நுவரெலியா, கேகாலை, ஹற்றன் போன்ற இடங்களிலே கடும் மழையும் மண்சரிவும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக களுத்துறை மாவட்டத்திலேயே மழையினாலும் மண்சரிவாலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இங்குள்ள பெரும்பாலான கிராமங்களை வெள்ள நீர் மூழ்கியுள்…
-
- 3 replies
- 876 views
-
-
ஜனாதிபதியின் கிரகநிலை சரியில்லை Tuesday, 03 June 2008 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கிரக நிலை பாதகமாக காணப்படுவதாக சிங்கள இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது நடைபெற்றுவரும் சர்வதேச உணவுப் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் உடனடியாக ஜனாதிபதி நாடு திரும்ப மாட்டார் எனத் தெரியவருகிறது. ஜோதிடர்களின் ஆலோசனைப்படி எதிர்வரும் 5ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற கூட்டத் தொடரில் ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார் எனத் தெரியவருகிறது. எதிர்வரும் 7ம் திகதி இங்கிலாந்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளதாகத் தெரியவருகிறது. இதன்படி ஜனாதிபதி சற்று கால தாமதமாகியே நாடு திரும்ப உள்ளார். ஜோதிடர்கள…
-
- 2 replies
- 1.3k views
-
-
காத்தான்குடியில் இன்றும் கடையடைப்பு: வன்முறையில் மூவர் காயம் [செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2008, 04:34 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் தொடர்ந்து நாளாக மூன்றாவது இன்றும் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அங்கு தொடர்ந்தும் பதற்றம் நிலவுகிறது. இன்றைய நாள் அங்கு இடம்பெற்ற வன்முறையில் மூவர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. கல்லடியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக்கொல்லப்பட்டதனைத் கண்டித்தே இந்த கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த கடையடைப்பை முன்னிட்டு அங்கு இயல்பு நிலை செயலிழந்துள்ளது. கடைகள் மற்றும் அரச அலுவலகங்கள் என எவையும் இன்றைய நாள் இயங்கவில்லை. அங்கு தொடர்ந்…
-
- 0 replies
- 529 views
-
-
தாயக- தமிழகக் கலைஞர்களின் உருவாக்கத்தில் "எங்களின் கடல்" குறுவட்டு வெளியீடு [செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2008, 04:13 பி.ப ஈழம்] [வி.நவராஜன்] தாயகக் கலைஞர்களும் தமிழகக் கலைஞர்களும் இணைந்து உருவாக்கிய "எங்களின் கடல்" பாடல் குறுவட்டு நேற்று முன்நாள் வெளியிடப்பட்டது. புதுக்குடியிருப்பில் நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வுக்கு திரைப்பட வெளியீட்டுப்பரிவு பொறுப்பாளர் செழியன் தலைமை தாங்கினார். லெப். கேணல் நிசாந்தனின் துணைவியார் அமுதா பொதுச்சுடரினை ஏற்ற, முதல் மாவீரன் லெப். சங்கரின் திருவுருவப்படத்திற்கு புதுக்குடியிருப்பு வணிகர் சங்கத்தலைவர் செ.செல்வச்சந்திரன் ஈகச்சுடரிடனை ஏற்ற, முல்லை வலய - 01 காவல்துறை கண்காணிப்பாளர் கிருஸ்ணகுமார் மலர்ம…
-
- 0 replies
- 721 views
-
-
Posted on : 2008-06-03 ஜனநாயகக் கேலிக்கூத்தால்தான் இனப்பிணக்கு பூதாகரமானது தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் அடக்கி ஒடுக்காமலும், அவர்களை முற்று முழுதாக ஜனநாயக வழிக்குக் கொண்டு வராமலும் இலங்கையில் அமைதித் தீர்வு என்பது சாத்தியமேயில்லை. இப்படி ஒரு "கண்டுபிடிப்பை' வெளியிட்டிருக்கின் றார் இலங்கை அரசின் மூத்த இராஜதந்திரி எனக் கருதப் படுபவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிகநெருக் கமானவர் என வர்ணிக்கப்படுபவருமான தயான் ஜெயதிலக. ஜெனிவாவில் இலங்கைக்கான ஐ.நா.விடயங்களைக் கையாளும் நிரந்தரப் பிரதிநிதியான தயான் ஜெயதிலக, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் அமைதி சாத்தியமேயில்லை என்றும் அறுத்து உறுத்துக் கூறியிருக்கின்றார். இராணுவ ரீதியிலோ அல்லது வேறு எந்…
-
- 0 replies
- 679 views
-
-
அரசாங்கத்தினால் நியாயமற்ற ரீதியில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று நண்பகல் 12.00 மணிக்கு வாகன ஒலி எதிர்ப்பு போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாக ஐக்கியதேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஆட்சியாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்கள், காவற்துறை உத்தரவுகள் என்பவற்றை பொருட்படுத்தாது போராட்டத்தில் பெருமளவிலானவர்கள் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மேலக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டாக இணைந்து இந்த எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தன. இன்று (யூன்3) இலங்கை நேரப்படி நணபகல் 12.00 மணிக்கு வாகனங்களை ஐந்து நிமிட…
-
- 0 replies
- 547 views
-
-
வட,கிழக்கில் உள்ள படையினருக்கு இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கல்! வீரகேசரி இணையம் 6/3/2008 3:31:21 PM - வட,கிழக்கில் சேவையிலுள்ள படைவீரர்களின் பாவனைக்காக தொலைக்காட்சிப் பெட்டி,ஒலிப்பத்திவுக்கருவி போன்ற இலத்திரனியல் உபகரணங்களை அபான்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி அயோமா ராஜபக்ஷ நேற்று அமைச்சில் நடைபெற்ற வைபவமொன்றில் இந்த உபகரணங்களை படை வீரர்களுக்கு வழங்கியுள்ளார்.இவ்வைபவத்தில
-
- 0 replies
- 836 views
-
-
வீடியோ தொழிநுட்ப சாட்சிப்பதிவு நிறுத்தம். ஆதாரம் வீரகேசரி
-
- 0 replies
- 631 views
-
-
மக்களின் எழுச்சிதான் விடுதலையை நாம் பெறுவதற்கு பெரும் பங்களிப்பாக இருக்கும்: பா.நடேசன் [செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2008, 01:45 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மக்களின் எழுச்சிதான் விடுதலையை நாம் பெறுவதற்கு பெரும் பங்களிப்பாக இருக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற தேசியப் பணிக்குழு சங்கமம் நிகழ்வில் அவர் ஆற்றிய சிறப்புரை: தேசியப் பணிக்குழுவின் செயற்பாடுகள் தமிழீழத் தேசியத் தலைவருக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. இந்தியப் படைக்காலத்தில் இப்பகுதி மக்கள் பெரும் பங்களிப்பை அச்சுறுத்தலுக்கு மத்தியில் உதவினர். இதற்காக இந்தியப்படைய…
-
- 1 reply
- 783 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சி இன்றைய நாள் ஏற்பாடு செய்த வாகன நிறுத்தப் போராட்டம் சட்டவிரோதமானது என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனையடுத்து திட்டமிட்டபடி இன்று மதியம் பெரும் வாகன நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 645 views
-
-
தமிழக கடற்றொழிலாளர்களை சிறிலங்கா கடற்படையினர் படுகொலை செய்வது குறித்த தமிழகத்தின் முறைப்பாடுகள் தொடர்பில் இந்திய அரசாங்கம் பாராமுகமாகவும் இரக்கமற்ற தன்மையோடும் செயற்படுவதாக தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 685 views
-
-
அக்கரைபற்றில் இஸ்லாமியர் அட்டகாசம். பல இந்துக்கள் கிறிஸ்தவர்கள் வெட்டப்பட்டுள்ளார்கள். http://tamilnet.com/art.html?catid=13&artid=25853
-
- 14 replies
- 3.2k views
-
-
எழுச்சிப் போராட்டங்களுக்கு தயாராகுங்கள்: மாணவர்களுக்கு திருமலை தமிழ் மக்கள் பேரவை அழைப்பு [செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2008, 01:20 பி.ப ஈழம்] [திருமலை நிருபர்] தமிழீழத் தலைநகராம் திருகோணமலையில் நடைபெறும் சிங்களவரின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக தாயக மண்ணை மீட்கும் மாணவர் எழுச்சிப் போராட்டங்களுக்கு தயாராகுங்கள் என்று திருகோணமலை தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. தமிழீழ மாணவர் எழுச்சி நாளினை (06.06.08) முன்னிட்டு திருகோணமலை தமிழ் மக்கள் பேரவை வெளியிட்ட அறிக்கை: தமிழர் தம் வாழ்வியலை கல்வி வாய்ப்புக்களினை சரிவர பயனுடையதாக்கிய தமிழ் மாணவர் சமூகத்தின் கல்வியினை நசுக்குவதற்காக அவர்களின் உயர்கல்வி வாய்ப்பினை வெட்டுப்புள்ளிகள் மூலம் திட்டமிட்டு மட்டுப்படுத்திய சி…
-
- 1 reply
- 907 views
-
-
நளினியை விடுவிக்க எதிர்ப்பு . Monday, 02 June, 2008 03:15 PM . சென்னை, ஜூன் 2: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி தம்மை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்துள்ள மனுவை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார். . சேது சமுத்திர திட்ட பிரச்சனையில் முதலமைச்சர் கருணாநிதி முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என்றும், அவர் இந்தப் பிரச்சனையில் தனது தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜனதா கட்சித் தலைவர் சுப்பிர மணிய சாமி சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்திய - சீன உறவு குறித்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்…
-
- 3 replies
- 1.8k views
-
-
கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுடனான உறவுகளை நிறுத்திக் கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் விடுத்த கோரிக்கை முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது. பிள்ளையான் ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். அவருடனான தொடர்புகளை நிறுத்திக் கொள்ளுமாறு கோருவது நியாயமற்றதென அரசாங்கப் பிரதிநிதியொருவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. துணைக்குழுக்களுடன் தொடர்புகளைப் பேணும் அரச அதிகாரிகளையும் சர்வதேச நீதிமன்றின் முன் நிறுத்த முடியும் என பிலிப் அல்ஸ்டன் தெரிவித்திருந்தார். http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 897 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் அடக்கி ஒடுக்காமலும், அவர்களை முற்று முழுதாக ஜனநாயக வழிக்குக் கொண்டு வராமலும் இலங்கையில் அமைதித் தீர்வு என்பது சாத்தியமேயில்லை.இப்படி ஒரு "கண்டுபிடிப்பை' வெளியிட்டிருக்கின் றார் இலங்கை அரசின் மூத்த இராஜதந்திரி எனக் கருதப் படுபவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிகநெருக் கமானவர் என வர்ணிக்கப்படுபவருமான தயான் ஜெயதிலக. ஜெனிவாவில் இலங்கைக்கான ஐ.நா.விடயங்களைக் கையாளும் நிரந்தரப் பிரதிநிதியான தயான் ஜெயதிலக, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் அமைதி சாத்தியமேயில்லை என்றும் அறுத்து உறுத்துக் கூறியிருக்கின்றார்.இராணுவ ரீதியிலோ அல்லது வேறு எந்த வகையிலோ பிரபாகரன் "அடக்கப்படும்போதுதான்' இலங்கையில் அமைதி சாத்தியம் என்றும் அவர் கூறி…
-
- 0 replies
- 794 views
-
-
இலங்கை மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் அரியலூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தமிழர்கள் கடந்த 60 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். கடல் இலங்கையைப் பிரித்தாலும் தொப்புள்கொடி உறவு தமிழகத்துடன் தொடர்கிறது எனவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். ஈழத் தமிழர் பிரச்னை தொடர்பாக இலங்கை அரசு விடுதலைப் புலிகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இலங்கை அரசின் இனப்படுகொலைகளை சர்வதேச நாடுகள் புரிந்துக்கொண்டுள்ளன. தனது மனித உரிமை மீறல்கள் வெளி உலகிற்கு தெரியக்கூடாது…
-
- 0 replies
- 875 views
-
-
இலண்டனிலுள்ள தமிழ் சமூகத்தவர்களுக்குப் போதியளவு உளரீதியான ஆதரவு கிடைப்பதில்லையென கிழக்கு இலண்டனிலிருக்கும் இலங்கை உளவளத் துணையாளர் போல் சத்தியநேசன் தெரிவித்துள்ளார். “வீடுகளில் தனியாக உள்ளவர்களுடன் கதைப்பதற்கு எவரும் இல்லை. வீட்டுப் பராமரிப்பு மற்றும் நலன் தொடர்பாக ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் மன அழுத்தத்துக்கு உள்ளானால் அது இயலாமல் போய்விடும்” என அவர் கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இலண்டன் கார்ஷல்டன் எனும் பகுதியில் வசித்துவந்த இலங்கைத் தாயார் ஒருவர் தனது 5 வயது மகனையும், 4 வயது மகளையும் கத்தியால் குத்திக் கொலை செய்ததுடன், இந்தச் சம்பவத்தில் ஆறு மாதக் குழந்தையொன்று காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறது. …
-
- 0 replies
- 1.1k views
-
-
த நேசன், பொட்டம்லைன், ரிவிர ஆகிய பத்திரிகைகளை பிரசூரிக்கும் ரிவிர மீடியோ கோபரேசன் நிறுவனத்தின் உரிமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உறவினர் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளதாக ஊடக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மூன்று பத்திரிகைகளின் உள்ளடக்கங்களும் ராஜபக்ஸ சகோதரர்களின் கருத்துக்களை இனி பிரதிபலிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் பிரபல தொழில் அதிபர்களில் ஒருவரும், ஆர்பிகோ நிறுவனத்தின் தலைவருமான சேன யக்தெனியவிற்கு சொந்தமான ரிவிர பத்திரிகை நிறுவனத்தின் 49 வீத பங்குகளை ஜனாதிபதியின் உறவினரான நிலங்க ராஜபக்ஸ ஏற்கனவே கொள்வனவு செய்திருந்தார். யக்தெனியவினால் பெற்றுக்கொள்ளப்பட்ட 40 மில்லியன் கடன் தொகையொன்றை மீளச் செலுத்துவதற்காக பத்திரிகையின் பங்குகளை யக்தெனியா …
-
- 0 replies
- 1.3k views
-
-
""இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேசத்தின் எதிர்பார்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இதனால், மனித உரிமைப் பேரவையில் இருந்து நீக்கப்பட்ட இலங்கை மிக விரைவில் ஐக்கிய நாடுகளின் உறுப்புரிமையிலிருந்தும் தூக்கியெறியப்படும் நிலை உருவாகும்'' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். அடிப்படை உரிமைகளை இல்லாது செய்து கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தை அடிப்படையாக வைத்து சர்வதேச அழுத்தத்தின் உச்சக் கட்டமாக இலங்கை மீது பொருளாதாரத் தடையை கொண்டு வருவதே பயனுள்ளதாக அமையும் என்றும் அவர் சொன்னார். நாட்டில் அதிகரித்துள்ள மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மேற்கண…
-
- 0 replies
- 649 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு மாநாடு இத்தாலி தலைநகர் ரோமில் நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிறது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் அங்கு சென்றடைந்துள்ளனர். மாநாட்டின் ஆரம்ப அமர்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையாற்றவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலிக்கு சென்றுள்ளõர். இந்த மாநாட்டில் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, சீ.பி. ரத்நாயக்க ஆகியோரும் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். மாநாட்டில் 93 நாடுகளின் அரச தலைவர் உட்பட 3000 பிரதிநிதிகள் பங்குபற்றவுள்ளனர். உலக உணவு மாநாட்டில் இத்தாலி ஜனாதிபதி, ஐக்கிய, நாடுகள் சபையின் செயலாளர் நாயகம…
-
- 0 replies
- 546 views
-
-
நேற்று முந்தினம் கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தை ராஜசிங்க வீதி அருகில் தமிழர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டும், பத்துக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதலானது சிவிலுடையில் நின்றிருந்த சிறிலங்கா படையினர் ஒருவராலேயே நடத்தப்பட்டதாகவும், குண்டை வீசி எறிந்த கொலையாளி, வெள்ளவத்தை பொலிஸ் நிலையம் நோக்கி ஓடிச் சென்று மறைந்ததாகவும், குண்டு வெடிப்பை அடுத்து அப்பகுதியில் கடமையில் நின்ற பொலிஸாரோ, படையினரோ பெரிதாக அலட்டிக் கொள்லவில்லை என நேரில் கண்ட தன்னை அடையாளம் காட்ட விரும்பாத ஒருவர் குறிப்பிட்டார். இக்குண்டு வீச்சு சம்பவத்தை அடுத்து வெள்ளவத்தை பொலிஸார் அவ்விடத்தில் நின்றோர…
-
- 1 reply
- 1.5k views
-
-
எரிபொருள் மற்றும் பொருட்களின் விலை உயர்வு தொடர்பான கதைகளை பின்னுக்கு தள்ளி விட்டு, நாட்டை குறித்தே பேச வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. நாட்டை குறித்து பேசும் தலைப்பை ஜாதிக ஹெல உறுமயவே முன்னெடுத்து வந்துள்ளதாக அதன் தலைவர் எல்லாவள மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். ஹெல உறுமயவின் 5 வது மாநாட்டில் உரையாற்அவர், இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனநாயக குழு, ஈ.பீ.டீ.பீ மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி என்பன வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தன. ஜாதிக ஹெல உறுமய ஆத்ம லாபத்திற்காக அரசியலில் ஈடுபடவில்லை. பஞ்சீல கொள்கையின் மூலமே நாடு இன்று எதிர்நோக்கியுள்ள பிரச்சினையில் இருந்து வெற்றி பெற முடியும். ????? பௌத்த கலாசாரத்தின் புத்த பூமி கிழக்கு மாகாணமாகும். …
-
- 1 reply
- 1k views
-
-
கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கிழக்கில் தம்வசம் ஆயுதங்களை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என சிங்கள பாதுகாப்பு அதிகாரி இன்று அக்கரைபற்றில் தெரிவித்துள்ளனர். விசேட அதிரடிப்படையினர் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் (பிள்ளையான் ஒட்டுக்கும்பல்) இடையேயான பேச்சுவார்த்தை ஒன்று அக்கரைப்பற்று இராணுவ முகாமில் இன்று நடைபெற்றது. ஆயுதங்களை கொண்டு செல்ல தமக்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் கோரினர், இதற்கு படையதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததாகவும் பிரதேசத்தில் ஆயுதங்களை தம்வசம் கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர். http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1.8k views
-