ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143607 topics in this forum
-
தென்னாபிரிக்க வன்முறைகளும் வெளிநாட்டினர் பற்றிய கொள்கையும் - வெற்றித்திருமகள் செவ்வாய், 01 ஜுலை 2008 [நிருபர் வி.சிறீதரன்] உலகளாவியரீதியில் உணவுப் பொருட்க ளின் அதீத விலையேற்றத்தால் வன்முறைகள் வெடிக்கக் கூடிய சாத்தியக் கூறு தென்படுவ தாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத் திருக்கும் இத்தருணத்தில் தென் ஆபிரிக்காவில் பரவியிருக்கும் வன்முறைகள் பற்றியதாக அமைகின்றது இன்றைய இச் சிறு அலசல். கடந்த 11ஆம் திகதி மே மாதம் தொடக்கம் தென் ஆபிரிக்காவின் 6 மாநிலங்களில் குடி யேறியிருக்கும் வெளிநாட்டவர்கள் மீது உள் ளுர் வன்முறைக் குழுக்களினால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ் வன்முறைக ளில் தென்ஆபிரிக்காவிற்குள் புலம் பெயர்ந்த வர்களில் குறைந்தபட்சம் 56 பேர் கொல்லப் பட்டி…
-
- 0 replies
- 819 views
-
-
சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினரால் துணுக்காய் உதவி அரச அதிபர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கிளிநொச்சி மாவட்ட அரச பணியாளர்கள் நாளை அடையாள எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தவுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 602 views
-
-
ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்தை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஊடகவியலாளர் எஸ்.ஜே. திஸ்ஸநாயக்கத்தை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பு நீதிமன்றிற்கு அருகாமையில் இன்று (ஜூன் 30) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், ஊடக சேவையாளர் சம்மேளனம், முஸ்லிம் ஊடகப் பேரவை, தமிழ் ஊடகப் பேரவை மற்றும் சுதந்திர ஊடக அமைப்பு அகியவை இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.மனித உரிமை அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியன இந்த எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். ஊடகவியலாளர் திஸ்ஸ நாயகத்தை உருவப்படத்தை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும், 100 நாட்களுக்கு அதிகமாக வழக்…
-
- 0 replies
- 733 views
-
-
பொய்க்குற்றச்சாட்டு வழக்குகளுக்கு நான் அஞ்சப் போவதில்லை –முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நான் அமைத்துக் கொடுத்த அரசாங்கமே தற்போது ஆட்சியில் உள்ளது. பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி எனக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து என்னை நெருக்கடியான சூழ்நிலைக்குத் தள்ள நான் வளர்த்துவிட்ட சிலர் முயற்சி மேற்கொள்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.இந்த அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் என்னிடம் பதில் உள்ளதென அவர் தெரிவித்துள்ளார். தனது 63 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 29ம் திகதி இரவு அத்தனகல்ல ரன்பொக்குனுகம விஹாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மத வழிபாட்டுச் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்ட…
-
- 3 replies
- 1.2k views
-
-
தனக்கு இங்குள்ளவர்களிடமிருந்து உயிராபத்தும், அவர்கள் மூலம் விரும்பத்தகாத செயற்பாடுகளும் இடம்பெற்றுவருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். நிட்டம்புவவில் சந்திரிகா குமாரணதுங்கவின் 63 ஆவது பிறந்த தினமான 29 ஜூன் அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத்தெரிவித்துள்ளார். அங்கு கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று தனக்கு தனிப்பட்ட உயிர் அச்சுறுத்தல் உள்ளதாகவும் நிற்சயமாக அது தற்போது பிரபாகரனால் அல்ல எனவும் தெரிவித்துள்ளார். அதேவேளை ஏற்கனவே தான் இந்த நாட்டில் வாழும் வறியமக்களுக்கு உதவும் பொருட்டு சர்வதேச ரீதியில் ஒரு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றை பதிவு செய்துள…
-
- 19 replies
- 2.9k views
-
-
அம்பாறை மாவட்டம் அறுகம்பை பாலத்தை திறந்து வைப்பதற்காக சென்றுவிட்டு கொழும்பு திரும்பிக்கொண்டிருந்த சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பயணம் செய்த உலங்குவானூர்தி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் உலங்குவானூர்தி சேதமடைந்துள்ள போதும் மகிந்த ராஜபக்ச நூலிழையில் உயிர்தப்பியுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் அம்பாறையிலிருந்து விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: அம்பாறை அறுகம்பை பாலத்தை திறந்து வைப்பதற்காக பலத்த பாதுகாப்புடன் இன்று முற்பகல் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அங்கு சென்றிருந்தார். அவரது பயணத்தினை ஒட்டி சுமார் 8,000-க்கும் அதிகமான படையினர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந…
-
- 49 replies
- 6.7k views
- 1 follower
-
-
இலங்கை முன்னர் ஸிம்பாப்வேயிடம் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக ஸிம்பாப்வே ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 1997 ஆம் ஆண்டு ஸிம்பாப்வே பாதுகாப்பு நிறுவனம், இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. 1997 ஆம்ஆண்டு லிபிய கப்பலில் ஸிம்பாப்வே இலங்கைக்கு அனுப்பிவைத்த 32 ஆயிரத்து 400 மோட்டர்கள், நடுக்கடலில் தமிழீழ விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை முகாபேயின் ஸிம்பாப்வே அரசாங்கம் இன்னமும் ஆபிரிக்க நாடுகளுக்கு சட்டவிரோத ஆயுதங்களை விற்பனை செய்து வருவதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. http://isoorya.blogspot.com/
-
- 1 reply
- 1.2k views
-
-
''உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும் அற்றது நாடு'' என்ற வாழ்வை 2000 ஆண்டுகள் சரித்திரமாக்கிய தமிழினத்தின் வாழ்வை ,மாண்பை, மரபுகளை, தன்மான உணர்வோடு வாழும் உரிமைகளை, மதியிலிருத்தி தமிழர்கள் வாழ முனையாது வயிற்றுப் பசியையும், வாழ்க்கை வசதிகளையும் எண்ணி இவற்றை எல்லாம் மறக்கவே முன்வருவர் என்று தப்புக் கணக்குப் போடும் குறுமதியாளர்களின் குதர்க்கங்களின் வெளிப்பாடே 5% தமிழர்கள் மட்டும்தான் தமிழ் ஈழத் தாயகக் கோட்பாட்டை ஆதரிக்கும் மக்கள் என்ற அமெரிக்க அரசுத் தூதுவரின் அண்மைய பிதற்றலாகும். திறந்த சிறையிலே 40இ000 ஸ்ரீ லங்காவின் இராணுவ காட்டு மிராண்டி வெறித்தன சித்திர வதைகளினிடையிலே நாளும் பொழுதும் சுதந்தரக் காற்றை சுவாசிக்க வழியின்றி பசியும், பொருட்தட்டுப்பாடுகளும், விலையேற…
-
- 4 replies
- 2.2k views
-
-
வவுனியா பாலமோட்டையில் நடைபெறும் உக்கிர மோதலில் 3 படயினர் பலியாகி எண்மர் காயங்களுக்கு ஆளாகி உள்ளனர் என் விடுதலைப்புலிகள் தெரிவித்து உள்ளனர். இன்று காலை 7 மணியளவில் ஆரம்பித்த மோதல் இன்னும் தொடர்ந்து கொண்டு இருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. http://tamilnet.com/art.html?catid=13&artid=26209
-
- 1 reply
- 1.1k views
-
-
சிங்கள அரசுக்கு பாதுகாப்பளிக்க 3000 இந்திய ஜவான்களும் அவர்களின் படைக்கலங்களும் கொழும்புக்கு விரைந்துள்ள நேரத்தில்.. இந்திய இறையாண்மைக்குள் வாழும் தமிழர்களுக்கு இக்கதி... --------------- இலங்கை கடற்படை தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவர் படுகாயம் ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரின் சித்திரவதையில் சிக்கி ராமேஸ்வரம் ம்ீனவர் படுகாயமடைந்துள்ளார். ராமேஸ்வரத்தில் மீண்டும் ஒரு கண்ணீர் கதை. இயற்கை மரணம் என்பதை விட இலங்கை கடற்படையின் வெறிக் கரங்களில் சிக்கி இறக்கும் நிலையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நேற்று மேலும் ஒரு அடி விழுந்தது. ராமேஸ்வரத்திலிருந்து 722 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டி…
-
- 2 replies
- 1.2k views
-
-
விடுதலைப்புலிகளின் இலக்கு முழு இலங்கைத்தீவையும் கைப்பற்றி முழு சிங்கள இனத்தையும் அழிப்பதே என்றும் அதனை தடுப்பதற்காகவே சிறீலங்கா படைகள் போராடி வருவதாக, சிறீலங்கா தரைப்படை தளபதி வியாக்கியானமளித்துள்ளார். கொழும்பில் உள்ள சிறீலங்கா தரைப்படை தலைமையத்தில், நேற்று திங்கட்கிழமை லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும், AFP, AP, BBC, JNW, ரொய்டேர்ஸ், சிங்குவா, த ஹிந்து, நியூ இந்தியா பிரஸ், இந்தியா ருடே, ஹந்துஸ்தான் ரைம்ஸ் ஆகிய பன்னாட்டு ஊடக நிறுவனங்களின் செய்தியாளர்களுக்கும் மத்தியில், சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது. இதன்பொழுது கருத்துரைத்த சிறீலங்கா தரைப்படை தளபதி, மரபுவழி ஆற்றலை கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, காட்டுப்பு…
-
- 12 replies
- 2k views
-
-
இலங்கையின் பாதுகாப்பு படையினருக்கு இந்தியா பயிற்சிகளை வழங்க இணங்கியுள்ளதாக த ரைம்ஸ் ஒவ் இந்தியா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் முதற் தடவையாக 500 க்கு மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய தரங்களிலான படையினர் இந்தப் பயிற்சிக்குத் தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்களுக்கு கலகத் தடுப்பு போரியல், காடுகளில் போரிடும் முறைமை, விசேட கடல்சார் பயிற்சி, தகவல், தகவல் வழிகாட்டி, நீர்மூழ்கி எpதிரத் தாக்குதல் முறைமை என பலதரப்பட்ட போரியல் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அந்த இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. http://isoorya.blogspot.com/
-
- 1 reply
- 767 views
-
-
அம்பாறையில் புலிகள் தாக்குதல்: அதிரடிப்படையைச் சேர்ந்தவர் பலி [செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2008, 08:40 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். அம்பாறையின் எல்லைப்பகுதியான குமுக்கன் ஓயாப்பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 6:20 மணியளவில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த படையினரையும் கொல்லப்பட்டவரினது உடலத்தையும் படையினர் உலங்குவானூர்தியில் ஏற…
-
- 13 replies
- 2.1k views
-
-
வீரகேசரி இணையம் - கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டின் பாதுகாப்புக்கென சுமார் மூவாயிரம் இந்தியத் துருப்பினர் இலங்கை செல்லவுள்ளனர். இவர்களைப் பயன்படுத்தி ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ஒடுக்க இலங்கை அரசு திட்டம் தீட்டியுள்ளது என பழ. நெடுமாறன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள கொழும்பு செல்லும் இந்தியப் பிரதமருக்கு பாதுகாப்பு அளிப்பது என்ற போர்வையில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியப் படைவீரர்கள் இலங்கைக்கு அனுப்பப்படுவதாகவும் முதல் கட்டமாக 1,500 வீரர்கள் கொழும்பு சென்றுவிட்டதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்…
-
- 3 replies
- 917 views
-
-
கொழும்பில் பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்காக இந்திய விமானப்படையின் உயர் மட்டக் குழுவொன்று மிக விரைவில் கொழும்பு வரவுள்ளது. கொழும்பில் ஆகஸ்ட் 2ம் 3ம் திகதிகளில் சார்க் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் எட்டு சார்க் நாடுகளில் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்தியப் பிரதமரின் பாதுகாப்பை இந்திப் படைகளே மேற்கொள்வதால் அதற்கான சில முன்னேற்பாடுகளில் இந்தியப் படையினர் இறங்கியுள்ளனர். இதனொரு கட்டமாக முதலில் இந்திய விமானப்டையின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று மிகவிரைவில் கொழும்பு வந்து பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பீடு செய்து அதற்கேற்ப விமானப்டையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளது. இலங்கையின் தற்போதைய பாதுக…
-
- 3 replies
- 921 views
-
-
சிங்களப் பேரினவாத அரசாங்கத்துக்கு தமிழினம் விரைவில் தகுந்த பதிலடி கொடுக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத்தளபதி அமுதாப் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற லெப். கேணல் வாணன், மேஜர் ஜெயசீலன் ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வில் வீரவணக்கவுரை ஆற்றிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: லெப். கேணல் வாணன், மேஜர் ஜெயசீலன் ஆகிய மாவீரர்கள் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் பல வெற்றிகரமான தாக்குதல்களில் முதன்மைப் பங்கு வகித்தவர்கள். எதிரியுடன் நேருக்கு நேர் மோதி சிறப்புப் படையணியின் மரபுக்கேற்ப வீரச்சாவடைந்தவர்கள். இம் மாவீரர்களின் கனவுகளை நாம் நிறைவேற்றுவோம். இன்றைய அரசியல் சூழலை எடுத்து…
-
- 0 replies
- 859 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அடையாளம் தெரியாதோரால் ஊடகவியலாளர் நமால் பெரேரா மற்றும் பிரித்தானிய தூதரக அதிகாரி ஆகியோர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதலை பிரித்தானிய தூதரகம் கண்டித்துள்ளதுடன் நீதி விசாரணைக்கும் கோரியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 597 views
-
-
நிலவரம்:வன்னித்தம்பி தங்கரத்தினம் 30. ஜூன் 2008 18:50 1987 இல் சிறி லங்கா ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா போட்ட அரசியல் கூழ் முட்டையே இலங்கையின் 13 வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் ஆகும்;. பரம்பரை பரம்பரையாகத் தமிழரை ஏமாற்றும் சிங்களத் தந்திரத்தின் தொடர்ச்சியே இந்தக் கூழ் முட்டையும். நேர்மையான தீர்வு காணும் எண்ணம் சிங்களத் தலைமைக்கோ ஜே.ஆருக்கோ இருந்திருக்குமானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டிருந்த மக்களவையில் வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசமாகத் தமிழர் தாயகத்தை பிரகடனப் படுத்தியிருக்கலாம். அப்படியான ஒரு வற்புறுத்தலை பிராந்திய வல்லரசு என நாட்டாண்மை பேசும் இந்திய அரசின் பிரதமரான ராஜீவ் காந்தியாலும் மேற்கொள்ள முடியவில்லை, அல்லது அந்த அளவுக்கு அவரிடம் ஜே.ஆர். ம…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் ராஜதந்திரி Mahendra Ratnaweera வும் உள்ளூர் பத்திரிகையாளரான Namal Perera வும் கொழும்பில் கடுமையாக தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். UK diplomat attacked in Sri Lanka A British High Commission employee in Sri Lanka's capital, Colombo, has been attacked along with a local journalist. Political officer Mahendra Ratnaweera and reporter Namal Perera were travelling by car together when they were stopped and attacked. The Sri Lanka Press Institute said a group of people carried out the assault. It is not clear who they were. Mr Perera is the latest of a number of journalists in th…
-
- 1 reply
- 2k views
-
-
துணுக்காய் உதவி அரச அதிபரின் இறுதி வணக்க நிகழ்வு [திங்கட்கிழமை, 30 யூன் 2008, 08:25 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதலில் பலியான துணுக்காய் உதவி அரசாங்க அதிபரான நாகலிங்கம் நந்தகுமாரின் இறுதி வணக்க நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. நாகலிங்கம் நந்தகுமாரின் புகழுடல் துணுக்காய் உதவி அரச அதிபர் செயலக மண்டபத்தில் மக்கள் வணக்கத்திற்காக வைக்கப்பட்டு, கந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. வணக்க நிகழ்வு, கந்தபுரம் உதவி அரச அதிபர் துணைப் பணிமனை அலுவலகர் மகேந்தி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் உரைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன்…
-
- 0 replies
- 812 views
-
-
துணுக்காய் உதவி அரச அதிபர் படுகொலை: தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கண்டனம் [திங்கட்கிழமை, 30 யூன் 2008, 08:42 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] துணுக்காய் உதவி அரசாங்க அதிபர் நாகலிங்கம் நந்தகுமார் படுகொலை செய்யப்பட்டதனை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கண்டித்துள்ளது. இது தொடர்பில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் விடுத்துள்ள அறிக்கை: மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளில் முனைப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படும் உதவி அரச அதிபர் மீது நடத்தப்பட்ட சிறிலங்கா அரசாங்கத்தின் ஆழ ஊடுருவும் படையினரின் இக்கொடூரமான தாக்குதலை மனிதாபிமானப் பணிபுரியும் முன்னணி அமைப்பு என்ற ரீதியில் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அரச படைகளின் நகர்வுகளினாலும் எறிகணை வீச்சுக்களினாலும் ஆயிரக்கணக்க…
-
- 0 replies
- 595 views
-
-
கிழக்கை முழுமையாக விடுதலைப் புலிகளின் கரங்களில் இருந்து மீட்டெடுத்து விட்டோம் என சிங்கள அரசு மேற்கொண்டு வந்த மித மிஞ்சிய பிரசாரங்களின் சாயம் வெளுக்கத் தொடங்கியுள்ளது. அண்மைக்காலமாக கிழக்கில் அதிகரித்து வரும் கரந்தடிப் பாணியிலான தாக்குதல்கள் அரச படைகளை மட்டுமன்றி கிழக்கில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறி, நிதிப்பிச்சை கேட்டு வரும் அரசாங்கத்தையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி வருகின்றது. கிழக்கின் அபிவிருத்தி என்ற போர்வையில் 1840 மில்லியன் டொலர்களை திரட்டி தனது யுத்தச் செலவீனத்தை ஈடுகட்ட முயற்சிகளை அரசு முடுக்கிவிட்டுள்ள நிலையில் புலிகளின் தாக்குதல்கள் அரசின் நோக்கத்தைக் குழப்புவதாய் அமைந்திருக்கின்றன. இம்மாதம் 17 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் தமிழ் ஒலிபர…
-
- 13 replies
- 3k views
-
-
புலிகளின் மரபுவழி போர்த்திறனை முற்றாக அழித்து விட்டோம்: சிறிலங்கா இராணுவத் தளபதி [திங்கட்கிழமை, 30 யூன் 2008, 06:12 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] தமிழீழ விடுதலைப் புலிகளால் இனிமேல் மரபுவழி இராணுவமாக சண்டையிட முடியாது. எமது இராணுவத்தினர் நடத்தும் தொடர்ச்சியான தாக்குதல்களால் தமது இராணுவ பலத்தை அவர்கள் இழந்துவிட்டார்கள் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளர் சங்க உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகள் இன்னமும் எமது படைகளுடன் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் முன்பிருந்த எதிர்ப…
-
- 19 replies
- 3.2k views
-
-
அறுகம்பே பாலம் நாளை திறக்கப்படவுள்ளது திங்கள், 30 ஜுன் 2008 [நிருபர் வி.சிறீதரன்] பொத்துவில் மற்றும் அறுகப்பே பகுதிகளை இணைக்கும் அறுகம்பே பாலத்தை நாளை(ஜூலை 01) பொதுமக்களின் பிரயாணத்திற்கு திறந்துவிடவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கிழக்கு உதயம் திட்டத்திற்கமைய 2004ஆம் அண்டு ஆழிப்பேரலையினால் தேமடைந்த இந்ப்பாலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 10 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தப்பாலம் திறக்கப்படவுள்ளமை, இப்பகுதிமக்களின் மீன்பிடி, மற்றும், விவசாய என்பதுடன், உல்லாசப்பயணத்திற்கும் மக்களின் இலகுவழிப் பயணத்திற்கும் உதவியாக இருக்கும் என சிறி லங்கா இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். http://w…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஹிக்கடுவ பகுதியில் தொடரூந்து தடம்புரண்டதில் மூவர் பலி: 5 வரை காணவில்லை திங்கள், 30 ஜுன் 2008 [நிருபர் வி.சிறீதரன்] றுகுணு குமாரி என அழைக்கப்படும் புகையிரம்; கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி சென்றதாகவும் வழியில் ஹிக்கடுவ பகுதியில் பாதையை விட்டு விலகியுள்ளதாகம் தெரியவருகிறது. இதன்போது மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டும் ஜந்து பொதுமக்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரியவருகிறது. இப்புகையிரதம் பாதையை விட்டு விலகியமைக்கான காரணம் இன்னமும் தெரியவில்லை என அறியமுடிகிறது http://www.pathivu.com/?p=1529
-
- 1 reply
- 715 views
-