ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
க.நித்தியா தமிழ் மக்களின் திருப்தி நிலை எட்டப்படாத வரை போருக்கு சிறிலங்கா அரசாங்கம் முகம் கொடுத்தேயாக வேண்டும் என்று "உலக அரசியல் கண்ணோட்டம்" இணையத்தளம் தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை (15.05.08) அந்த இணையத்தளத்தில் வெளிவந்த இலங்கை அரசியல் நிலவரம் தொடர்பான ஆய்வுப் பத்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. கடந்த 25 ஆண்டு காலமாக நீடித்து வரும் போருக்கு அரசாங்கத்தின் மாறுபட்ட உபாயங்கள் பயன் அளித்ததாகத் தெரியவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரட்டங்களில் ஆரம்ப கட்ட வெற்றிகளை அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது. மேலும் : http://puthinam.com/
-
- 1 reply
- 953 views
-
-
பி.கெளரிஸ சிறிலங்கா கடற்படைத் தளபதிஇ தனது தனிப்பட்ட நலன்களுக்காக மேற்கொண்ட நடவடிக்கைகளே திருகோணமலை துறைமுகத்தில் "இன்வின்சிபிள்" விநியோகக் கப்பல் மூழ்கிப் போவதற்கு காரணம் என்று "சண்டே லீடர்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டில் வெளிவந்த முக்கிய பகுதிகள் வருமாறு: நீருக்கு அடியில் கண்காணிப்புக்களை மேற்கொள்ளும் சோனார் கருவிகளை (SLPA sonar system) துறைமுக அதிகார சபை கொள்வனவு செய்த போதும் அது நிறுவப்படாது தற்போதும் பெட்டியில் தான் உறங்கி கிடக்கின்றது. இந்நிலையில் கடற்படை எம்வி இன்வின்சிபிள் என்ற விநியோகக் கப்பலை இழந்துள்ளது. எக்ஸ்- ரைப் ('X-Type' diver detection sonar system) எனப்படும் நீருக்கு அடியில் கண்காணிப்புக்களை மேற்கொள்ளும் ச…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கைக்குக் கடிதம் ஐ.நா. கண்காணிப்புக் குழுவை அனுப்புக! எஸ்.எம்.ஜி. இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நிபந்தனையற்ற பேச்சு வார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்படவேண்டுமென்ற குரல் மீண்டும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலு மிருந்து ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இலங்கையின் சிங்கள ஆதிக்க சக்திகள் எந்தக் காலத்திலேயுமே இனப்பிரச்சனைக்கு அமைதித் தீர்வு காண்பதற்கு விரும்பியதில்லை. தந்தை செல்வநாயகம் தலைமையில் தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற ஜனநாயக வழியில் தமிழ் பேசும் மக்கள் உரிமையுடன் வாழ்வதற்கு எடுத்த முயற்சிகள் பெரும்பான்மை ஜனநாயகத்தினரால் ஒடுக்கப்பட்டன. தமிழ் அரசுக் கட்சிக்கு முன்னர் இலங்கை சுதந்திரமடைவதற்கு முன் இலங்கையில் நாடாளுமன்ற நாயகம் நாட்டில் செயல்படுவதற்கு முயற்…
-
- 0 replies
- 560 views
-
-
சிங்கள அரசுக்கு பெரும் நெருக்கடி உலக நாடுகளின் போக்கில் மாறுதல் தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கொலை நடவடிக்கைகளுக்காககச் சிங்கள அரசுமீது "கண்டனம் செய்தல்" மற்றும் "எச்சரிக்கைகளை விடுத்தல்" என்ற நிலையிலிருந்து அதன மீது "தண்டனைகள் வழங்கல்" என்ற ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளில் உலக நாடுகள் படிப்படியாக இறங்கியுள்ளன. நீண்ட பல ஆண்டுகளாகச் சிங்கள அரசிற்குப் பொருளாதார - இராணுவ உதவிகளையும், அரசியல் ஆதரவுகளையும் வழங்கிவந்த மேலை நாடுகள் தற்போது சிங்கள அரசைக் கைவிட்டு ஒதுங்கும் அரசியல் போக்கை மேற்கொண்டு வருகின்றன. உலக அரசுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் தொடர்ச்சியான கண்டனங்களைப் புறந்தள்ளிவிட்டு தமிழினக் கொலையைத் தீவிரப் படுத்தியுள்ள சிங்கள அரசை ஒரு "பயங்கரவாத அரசா…
-
- 0 replies
- 610 views
-
-
சீனத்தின் மாணவர்கள், சிங்களரின் பங்காளிகள் - மருதமுத்து ஈழப்பிரச்சினையிலும், இலங்கையு டனான உறவிலும் இந்திய அரசு வேகமாகக் கீழ்நோக்கிச் சறுக்கிக் கொண்டே போகிறது. தமிழக அரசும் கண்மூடித்தனமாக இந்தச் சறுக்கலுக்குத் துணைபோகிறது. இச்சறுக்கல் விரைவில் பெரும் வீழ்ச்சியாகவும் மாறி விபரீதங்களை விளைவிக்கவிருக்கிறது. சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆயுத உதவியும், இராணுவப் பயிற்சியும் வழங்கிவரும் இந்திய அரசு தனது சறுக்கல் பாதையில் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. பொருளாதாரத் துறையில் சிங்கள அரசுக்குப் பெரிய அளவில் உதவுவது என்பதுதான் இந்தப் புதிய பரிமாணம். 2006, செப்டம்பரில் திருகோணமலையில் சிங்களப்படை மறு ஆக்கிரமிப்புச் செய்தது. அதே ஆண்டு டிசம்பரில் (ஆக்கிரமிப்பு நட…
-
- 0 replies
- 517 views
-
-
அலரி மாளிகையில் பிள்ளையான் இருந்த போதே ஹிஸ்டன் முன்பாக குண்டு வெடித்தது Sunday, 18 May 2008 கொழும்பு கோட்டை ஹில்டன் ஹொட்டலுக்கு முன்பாக நேற்று முன்தினம் காவல்துறையின் பேரூந்துகளை இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட போது அரசுத் தலைவரின் உத்தியோகபூர்வ வாஸஸ்தலமான அலரி மாளிகையில் விஷேட பிரமுகர்களுக்கான அறையிலேயே பிள்ளையான் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. முதலமைச்சர் பதவியேற்புக்காக கொழும்பு வந்திருந்த அவர் அரசுத் தலைவருடனான சந்திப்புக்காக அப்போது காத்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்காக உருவாகியுள்ள சர்ச்சை தொடர்பாக தனியான அறை ஒன்றில் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ அப்போது எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுடன் அப்போது பேச…
-
- 1 reply
- 1.1k views
-
-
கிழக்கு மண் தமிழருக்கு உரியதோ முஸ்லிம்களுக்கு உரியதோ அல்ல. இந்த நாடு சிங்களவருக்கு மட்டுமே உரியது. கிழக்கு சிங்களவருடையதே. கிழக்கில் சிங்களவரின் உரிமை பறிக்கப்படுமானால் உரிமைக்காக உயிரைத் தியாகம் செய்யவும் நாம் தயார் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சங்கைக்குரிய எல்லாவள மோதானந்த தேரர் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது. திகவாபிக்கு 12,000 ஏக்கர் காணி இருந்தது. இதை 560 ஏக்கர் காணியாக குறைத்தார் அஸ்ரப். அதற்கு எதிராக அப்போது நாம் எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுத்தோம். இப்போது அவரது மனைவி பேரியல் அஸ்ரப் வீடமைப்பு திட்டமொன்றை உருவாக்கி முஸ்லிம்களுக்கு மேலும் காணிகளை பகிர்ந்தளிக்க ஏற்பாடு செய்துள்ளார். ஒரு பௌத்த புண்ணியத்தலத்துக்…
-
- 2 replies
- 933 views
-
-
கிழக்கின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் கண்டி மல்வத்தை மற்றும் அஸ்கிரியா மஹாநாயக்க தேரர்களை இன்று பிற்பகல் 2.00 மணியளவில் (வைகாசி 18) சந்தித்து, ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தலதா மாளிகைக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி, அபிவிருத்தியை ஆரம்பிக்க போவதாக பிள்ளையான் நாயக்க தேரர்களிடம் தெரிவித்துள்ளார். பின் மலையகத் தலைநகரில் இருந்து நீங்க முன் கிஷ்வுல்லாவிற்கு தொலைபேசியளைப்பை மேற்கொண்டு தன்னுடனும் ஜனாதிபதியுடனும் இணைந்து கிழக்கை அபிவிரித்து செய்ய ஒத்துளைப்பை வளங்குமாறும் கேட்டுக்கொண்டார்!!! …
-
- 4 replies
- 2.3k views
-
-
கடற்படையின் செயற்பாட்டை சீர்குலைக்கும் கடற்புலிகள் [18 - May - 2008] விதுரன் நாட்டில் துறைமுகங்களினதும் கடற்படைத் தளங்களினதும் பாதுகாப்பு வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடற்படைக்கப்பல்கள் மீதான கடற்கரும்புலிகளின் இரு தாக்குதல்களையடுத்தே கடற்படையினர் தங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். எனினும் இந்தப் பாதுகாப்பையும் மீறி கடற் புலிகள் பாரிய தாக்குதல்களை நடத்தி விடலாமென்ற அச்சமும் அவர்களுக்குள்ளது. கடந்த வருடம் புலிகளின் பல ஆயுதக் கப்பல்களை ஆழ்கடலில் வைத்து அழித்து மூழ்கடித்ததாக கடற்படையினர் தெரிவித்திருந்தனர். இதில் உண்மையில்லாமலில்லை. கடற்படையினரின் இந்தத் தாக்குதல்கள் விடுதலைப் புலிகளுக்கு பெரும் சவாலாயிருந்த நிலையில் புலிகளின் ஆயுதக…
-
- 0 replies
- 969 views
-
-
மேற்குலகம் இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடக் கூடாது என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிரான போரை முன்கொண்டு செல்லும் நாடுகளே, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும் என இலங்கையை அச்சுறுத்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பாகிஸ்தான் தூதரகத்தினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். "அவர்கள் ஒசாமா பின் லேடனுக்கு எதிராக போர் புரிந்து கொண்டே, உலகின் முக்கிய பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளுடன் போர் புரிய வேண்டாம் என இலங்கையிடம் கேட்கின்றனர்" எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். ம…
-
- 5 replies
- 1.6k views
-
-
"வெசாக்' தின சிந்தனை 19.05.2008 இன்று வைகாசி விசாகம். வெசாக் பண்டிகையை அனுஷ்டிக்கும் தினம். இலங்கைத்தீவின் இரு பெரும் மதங்களான பௌத்தத்துக்கும், இந்து சமயத்துக்கும் போற்றுதற்குரிய மிக உயரிய திருநாள் இது. பௌத்த சீலத்தை உலகுக்குப் போதித்த கௌதம புத்தர் அவதரித்ததும், அரச மரத்தடியில் ஞானோதயம் பெற்றதும், அன்பு மார்க்கத்தைப் போதித்து பரிநிர்வாணம் அடைந்ததும் இந்த வைகாசிப் பௌர்ணமி நாளில்தான். சித்தார்த்த கௌதமரின் சிந்தனையில் இத்தினத்தில் சிறு ஒளிப்பொறியாக்கப்பட்டுத் தெறித்துத் தெளிந்த ஞானோதயம் உலகெங்கையும் ஆட்கொண்டது. சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இந்த அறிவியல் அதிர்வு இன்று வரை உலகை வளப்படுத்தி, வழிப்படுத்தி, வலுப்படுத்தும் ஓர் உயரிய…
-
- 0 replies
- 871 views
-
-
கடலடிக் கண்காணிப்புக் கருவிகளை வாங்கியும் பயன்படுத்த முடியாத நிலை! துறைமுக அதிகார சபைக்கு இப்படி இக்கட்டு கடலுக்கு அடியில் இடம்பெறும் செயற்பாடுகளைக் கண்டறிந்து கண்காணிக்கக்கூடிய "சோனார்' கருவிகளை கொழும்புத் துறைமுகத்தில் பொருத்துவதற்காகத் துறைமுக அதிகாரசபை கொள்வனவு செய்துள்ள போதிலும், கடற்படையின் ஒத்துழைப்பு இல்லாததால் இதனைப் பயன்படுத்த முடியாத இக்கட்டு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. கடந்த வாரத்துக்கு முந்திய வாரம் திருகோணமலைத் துறைமுகப் பகுதியில் கடற்படையின் விநியோக கப்பல் மூழ்கடிக்கப்படுவதற்கு முன்னதாகவே குறிப்பிட்ட சோனார் கருவி இலங்கையை வந்தடைந்து விட்டதாகத் தெரிவித்துள்ள ஆங்கில வார இதழ் ஒன்று எனினும்கடற்படையினர் இதனைப் பயன்படுத்துவதற்குத் துறைமுக அதி…
-
- 0 replies
- 802 views
-
-
மண் மீட்கும் போர் போன்று மொழி மீட்கும் போரிலும் வெல்வோம் என்று தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 935 views
-
-
யாழ் மாணவன் என்றால் அகதியா? வடக்குப் போர் முனை சூடுகண்டுள்ளதை நாம் நன்கறிவோம்। துப்பாக்கிச் சத்தத்துக்கு அடங்கிப்போய் பாடசாலைக்குச் செல்லாமல் பள்ளி வாழ்க்கைக்காக ஏங்கித்தவிக்கும் சிறுவர்கள் ஏராளம் என்பதும் எமக்கு நன்றாகத் தெரியும்। இந்நிலையில் பிள்ளைகளை எப்படியாவது படிப்பிக்க வேண்டும் என்ற தாகத்துடன் அங்கிங்கு கடன்பட்டு கொழும்புக்கு அழைத்துவருகின்றனர் பெற்றோர்। கொழும்புக்கு வருவதென்றால் விமானப் பயணம் தான்। ஒருவழிப் பயணத்துக்கு ஒருவருக்கு १०,००० ரூபா செலவாகிறது। அத்துடன் அங்கு ஆள் அடையாளப்படுத்தி உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு ஆவணங்கள் பெறவேண்டும்। இப்படி கஷ்டப்பட்டு பிள்ளைகளை கொழும்புக்கு அழைத்து வந்து படாத பாடுபட்டு பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு மத்தியில் …
-
- 0 replies
- 974 views
-
-
அரசாங்கத்தில் இணைந்து கொள்வதை விட வயலில் வேலை செய்வது சிறந்தது என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண தேர்தல் முடிந்த கையோடு ஐக்கிய தேசிய கட்சிக்குள் மற்றுமொரு சர்ச்சை எழுந்துள்ளது. அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் தொடர்பாகவே இந்த சர்ச்சை எழுந்துள்ளது. கிழக்கு மாகாண தேர்தலுக்கு பின்னர் சில ஊடகங்கள் எஸ்.பி. அரசாங்கத்தில் இணைய போவதாக புதுமையான செய்திகளை வெளியிட்டிருந்தன. எனினும் எஸ்.பி திசாநாயக்க இந்த ஊகங்களை மறுத்துள்ளார், எஸ்.பி. இருந்தாற்போல் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் பேசுவது இந்த ஊகங்களுக்கு காரணமாகியது. இந்த தகவல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் இருந்து சென்றிருக்குமா எனவும் சில ஊடகங்கள் சந்தேகம் கொண்டன.…
-
- 3 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையில் நேற்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார வழி வானொலியான புலிகளின் குரலின் முத்தமிழ் மன்றத்தின் தமிழ் விழா நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 544 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜூன் மாதம் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.3k views
-
-
கிழக்கில் அண்மையில் நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலின் போது பல்வேறு ஊழல் மோசடிகளை அரசாங்கத் தரப்பு மேற்கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. அரசாங்கத்தினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட தேர்தல் வன்முறைகளுக்கு முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தலைமை வகித்ததாக கூறப்படுகிறது அரசாங்கத்திடம் பல்வேறு வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஓய்வு பெற்ற பொலிஸ் மா அதிபர்கள் எவரும் இவ்வாறான செயல்களில் ஈடுபடவில்லை எனவும், பொலிஸ் திணைக்களத்திற்கே இதன் மூலம் களங்கம் ஏற்பட்டுள்ளதகாவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://isoorya.…
-
- 1 reply
- 990 views
-
-
எனக்கும் பிள்ளையானுக்கும் சுமூகமான உறவு உள்ளது: முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முடிவையே நான் எடுப்பேன் ஞாயிறு, 18 மே 2008 [நிருபர் அ.மயூரன்] முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முடிவையே நான் எடுப்பேன். எனது முடி இன்னும் ஒரிரு நாட்களில் தெரியும் என ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணசபை தொடர்பான எனது முடிவு பிள்ளையானுக்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எதிரானது அல்ல என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். எனக்கும் பிள்ளையானுக்கும் உள்ள உறவு சுமூகமாக உள்ளது. நேற்றுக் காலையும் பிள்ளையானுடன் தொல…
-
- 3 replies
- 1.3k views
-
-
கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை நியமிக்க சிறிலங்கா அரச தலைவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஈரான் அரச தலைவரை கோரிக்கை விடுக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 877 views
-
-
அம்பாறை சாய்ந்தமருது பகுதியில் நேற்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு டிப்போவுக்குச் சொந்தமான பயணிகள் பஸ் தாக்குதலுக்கிலக்காகியுள்ளத
-
- 0 replies
- 1k views
-
-
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையில் நேற்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார வழி வானொலியான புலிகளின் குரலின் முத்தமிழ் மன்றத்தின் தமிழ் விழா நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 608 views
-
-
இலங்கையில் தற்போது பரவலாகப் பேசப்படும் விடயங்களில் ஒன்று, ஜீ.எஸ்.பிளஸ் எனும் ஆடை ஏற்றுமதிச் சலுகையாகும். ஐரோப்பிய யூனியனால் முன்னிலைப்படுத்தப்படும், மனித உரிமை மீறல் குறித்த குற்றச்சாட்டிற்கும், இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்கும் இடையில் உரசல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜீ..எஸ்.பி. (Generalised System of Preferenced) பிளஸ் இனை அனுபவிக்க முடியாதவாறு, தொழிலாளர் நல உரிமை மற்றும் பொதுப்படையான மனித உரிமைகள் யாவும், இலங்கையின் அந்நிய செலவாணி வருமானத்திற்கு வேட்டு வைக்கத் தொடங்கியுள்ளன. இருப்பினும், மனித உரிமை மீறல்களை முன்வைத்து, இச்சலுகையினை ஐரோப்பிய யூனியன் இரத்து செய்யுமென்று கூற முடியாது. அரசின் மீது ஏதாவதொரு வகையில் அழுத்தத்தை திணிப்பதற்கே, ஜீ.எஸ்.பி. பிளஸ் ஒரு ஆய…
-
- 2 replies
- 1.2k views
-
-
இந்தியாவின் மிகவும் ஈர்க்கப்பட்ட விடுதலை வீரரான பகத்சிங்கின் குடும்பத்தினர் இந்திய இராணுவம் இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிராக போரில் ஈடுபட்டதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் என்று தற்போது தெரிய வந்துள்ளது. பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங் ஆவார். இவரது மகன் மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங் அண்மையில் இதை ஒப்புக் கொண்டுள்ளார். இந்திய இராணுவ அதிகாரியாக தான் புலிகளுக்கு எதிராக போரில் ஈடுபட்டதை எனது தந்தை விரும்பவில்லை. 'எனது குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் இந்தியாவின் இந்த நடவடிக்கையை நியாயத்திற்காக போராடும் மக்களுக்கு எதிரான நடவடிக்கையாகவே கருதினர்' என்கிறார் அவர். யாழ்ப்பாணத்தில் புலிகளுக்கு எதிரான போரில் சிறந்த பணி புரிந்தமைக்காக மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங…
-
- 0 replies
- 786 views
-
-
தமிழர் விடுதலைப் போராட்டம் என்பது வெறுமனே தமிழர் தேசத்துடன் மட்டுப்பட்டது அல்லது இலங்கை அரசியலுடன் மட்டுப்பட்டது இன்னும் சற்று மேலே போனால் பிராந்திய அரசியலுடன் தொடர்புபட்டது என்றெல்லாம் நாம் நம்புவோமானால் நம்மை விட முட்டாள்கள் வேறு யாருமில்லை. இன்றைய உலக அரசியல் போக்கென்பதே புவிசார் அரசியல் காய்நகர்த்தல்களில்தான் தங்கியிருக்கிறது. இந்த பின்புலத்தில் பார்ப்போமானால் சமீப காலங்களில் உருவாகிய முக்கிய புவிசார் அரசியல் கூட்டு அமெரிக்க-இந்திய கூட்;டாகும். அமெரிக்காவும் இந்தியாவும் தமக்கான கூட்டு நலன் சார்ந்து ஏற்படுத்தி வரும் நெருக்கத்தின் விழைவுகளைத்தான் நாம் தற்போது சந்தித்து வருகின்றோம். அமெரிக்க-இந்திய நெருக்கத்தின் விழைவுதான் இதுவரை காலமும் இல்லாதளவிற்கு சீனா…
-
- 0 replies
- 1.2k views
-