ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142847 topics in this forum
-
இந்தியாவின் மிகவும் ஈர்க்கப்பட்ட விடுதலை வீரரான பகத்சிங்கின் குடும்பத்தினர் இந்திய இராணுவம் இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிராக போரில் ஈடுபட்டதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் என்று தற்போது தெரிய வந்துள்ளது. பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங் ஆவார். இவரது மகன் மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங் அண்மையில் இதை ஒப்புக் கொண்டுள்ளார். இந்திய இராணுவ அதிகாரியாக தான் புலிகளுக்கு எதிராக போரில் ஈடுபட்டதை எனது தந்தை விரும்பவில்லை. 'எனது குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் இந்தியாவின் இந்த நடவடிக்கையை நியாயத்திற்காக போராடும் மக்களுக்கு எதிரான நடவடிக்கையாகவே கருதினர்' என்கிறார் அவர். யாழ்ப்பாணத்தில் புலிகளுக்கு எதிரான போரில் சிறந்த பணி புரிந்தமைக்காக மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங…
-
- 0 replies
- 786 views
-
-
தமிழர் விடுதலைப் போராட்டம் என்பது வெறுமனே தமிழர் தேசத்துடன் மட்டுப்பட்டது அல்லது இலங்கை அரசியலுடன் மட்டுப்பட்டது இன்னும் சற்று மேலே போனால் பிராந்திய அரசியலுடன் தொடர்புபட்டது என்றெல்லாம் நாம் நம்புவோமானால் நம்மை விட முட்டாள்கள் வேறு யாருமில்லை. இன்றைய உலக அரசியல் போக்கென்பதே புவிசார் அரசியல் காய்நகர்த்தல்களில்தான் தங்கியிருக்கிறது. இந்த பின்புலத்தில் பார்ப்போமானால் சமீப காலங்களில் உருவாகிய முக்கிய புவிசார் அரசியல் கூட்டு அமெரிக்க-இந்திய கூட்;டாகும். அமெரிக்காவும் இந்தியாவும் தமக்கான கூட்டு நலன் சார்ந்து ஏற்படுத்தி வரும் நெருக்கத்தின் விழைவுகளைத்தான் நாம் தற்போது சந்தித்து வருகின்றோம். அமெரிக்க-இந்திய நெருக்கத்தின் விழைவுதான் இதுவரை காலமும் இல்லாதளவிற்கு சீனா…
-
- 0 replies
- 1.2k views
-
-
காத்தான்குடி பகுதியில் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு முதல் அமைச்சர் பதவி வழங்கப்படாததை கண்டித்து ஹர்த்தால் அனுஸ்ட்டிக்கப்படுகின்றது. காலையில் டயர் எரிக்கப்பட்டு வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. எனினும் காவற்துறையினரின் தலையீட்டையடுத்து வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு போக்குவரத்து நடவடிக்கைள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக காத்தான்குடி பகுதியில் நேற்று மாலையளவில் துண்டுப் பிரசூரம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கிழக்கு மாகாண சபை தேர்தலில் கூடுதலான ஆசனங்கள் எடுக்கும் கட்சிக்கு முதல் அமைச்சர் பதவி வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அந்த வகையில் பொதுஜன ஐக்கிய முன்னனியில் சேர்ந்து போட்டியிட்ட முஸ்ஸிம் தரப்பினர் கூடுதலான ஆசனத்தைப் பெற…
-
- 1 reply
- 1.6k views
-
-
பிபிஸி நிருபர் கொழும்பில் இருந்து செய்தி தெரிவிக்கிறாரா அல்லது கருத்து வெளியிடுகிறாரா? கொழும்பை வாஸஸ்தலமாக கொண்டுள்ள பிபிஸி நிருபர் ரோலண்ட் போர்க் (Roland Buerk) திறமான எழுத்தும் ஆராய்ச்சி திறனும் கொண்டவர், அவர் விரும்பியபடி கொழும்பு, குருனாகல அல்லது மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இருந்து செய்திகள் வழங்க முடியும். அவருடைய நாட்டில் ஸ்ரீலங்கா ஒரு சிப்பியாகும். அவர் சமாதானம், ஸ்ரீலங்கா அரசாங்கம், வரையறுக்கப்பட்ட அதிகாரப்பகிர்வு, மற்றும் தசாப்தகாலமாக சிங்கள அரசு ஆட்சியாளர்களால் சிறுபான்மை தமிழர்கள் மீது அதிகாரம் செலுத்துவதாக தமிழர்கள் தெரிவிக்கும் முறைப்பாடுகள் பற்றி எல்லாம் எழுதுகிறார். ஆனால் தூரதிர்ஸ்டவஸமாக அவருக்கு சிங்கள முதற்பெயரை (first name) குடும்பபெயர்…
-
- 0 replies
- 1.8k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான பிள்ளையான குழுவின் முக்கிய நபருக்கு தொடர்புகள் இருப்பதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரித்தானிய உள்துறை அமைச்சர் ஜக்கி ஸ்மித்தை "வெண்புறா" அமைப்பின் ஐரோப்பியப் பொறுப்பாளர் மருத்துவ கலாநிதி என்.எஸ்.மூர்த்தி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 923 views
-
-
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக துணை இராணுவக் குழுவின் தலைவரான பிள்ளையான் நியமிக்கப்பட்டதனை முறியடிக்கும் முயற்சியில் முஸ்லிம் அமைச்சர்கள் தீவிரமாக இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 942 views
-
-
வவுனியாவில் இருந்து புலிகளின் நிலைகளை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் படையினர் இன்று மதியம் மன்னார் மடுவிற்கு வடக்காக 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலம்பிட்டி சந்தியை படையினர் கைப்பற்றினர். Sri Lankan troops capture rebel position, 16 killed Sat May 17, 2008 COLOMBO, May 17 (Reuters) - Sri Lankan troops have killed 16 Tamil Tiger rebels and captured a rebel-held position in the island's north, officials said on Saturday. A military spokesman said 17 people were injured on Saturday when Tamil Tiger rebels threw a hand grenade into a crowded street in northern Sri Lanka. "Seventeen civilians, including six females and two children, were inju…
-
- 6 replies
- 4k views
-
-
கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் ஆரம் பமாவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக, திருகோணமலைத் துறைமுகத்தினுள் வெடித்த குண்டு இலங்கைக் கடற்படைக்கு பாரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. கடந்த 10ஆம் திகதி அதிகாலை 2.23 மணி யளவில் திருகோணமலைத் துறைமுகத்தின் அஷ்ரப் இறங்குதுறையில் தரித்துநின்ற, அ520 என்ற கடற்படையின் விநியோகக் கப் பலுக்கு அடியில் பாரிய வெடிப்பு நிகழ்ந்தது. உடனடியாகக் கப்பலில் பற்றிக் கொண்ட நெருப்பும், கடலுக்கு அடியில் நிகழ்ந்த வெடிப் பினால் ஏற்பட்ட துவாரத்தின் வழியாக குபுகுபு வெனப் புகுந்த நீரும் 13 நிமிடங்களிலேயே கப்பலை துறைமுகக் கடல் விழுங்கிக் கொண் டது. ஒரு வாரமாகியும் கடலுக்கு அடியில் நிகழ் ந்த இந்தக் குண்டுத் தாக்குதல் எவ்வாறு நிகழ்த் தப்பட்டது…
-
- 0 replies
- 1.6k views
-
-
கடற்புலி லெப். கேணல் தமிழ்மாறன் அல்லது கஜேந்திரன் என்று அழைக்கப்படும் மாவீரரின் "நினைவுத் தடங்கள்" நூல் வெளியீட்டு நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 875 views
-
-
கிழக்கின் முதலமைச்சர் பதவி முஸ்லிம் ஒருவருக்கு வழங்கப்படாவிடின் அரசில் அங்கம் வகிக்கும் சகல முஸ்லிம் அமைச்சர்களும் உடனடியாக பதவி விலகுவார்களென்ற எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும் அது பிசுபிசுத்து விட்டது. அமைச்சர் அதாவுல்லா ஒத்துழைப்பு வழங்காததாலேயே இந்நிலையேற்பட்டதாக தெரிவித்த முஸ்லிம் அமைச்சர்கள் அத்தாவுல்ல தமது முதுகில் குத்திவிட்டதாகவும் விசனம் தெரிவித்தனர். பிள்ளையானை முதலமைச்சராக்கினால் தாம் இராஜினாமா செய்வதென்ற தீர்மானத்தை முன்னதாக முஸ்லிம் அமைச்சர்கள் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலைப்பாட்டுக்கு அமைச்சர் அதாவுல்லவும் முதலில் உடன்பட்டிருந்தார். எனினும், இறுதித் தருவாயில் தனது கட்சி சார்பில் தெரிவான 4 உறுப்பினர்களையும் அழைத்துக் கொண்டு அவர் பதவியேற்பு நிகழ…
-
- 3 replies
- 1.7k views
-
-
இரண்டு மாதங்களின் பின் மடுத் திருத்தலப் பிரதேசத்தை ஆலய நிர்வாகத்திடம் கையளிப்பதற்கு படைத்தரப்பு இணக்கம் தெரிவித்திருக்கின்றது என மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் தெரிவிக்கின்றார். கடந்த மார்ச் மாதம் படைத்தரப்பு மடுப்பிரசத்தின் மீது மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை காரணமாக மடுத் திருத்தலப்பகுதி யுத்தப் பிரதேசமாக மாறி இருந்த நிலையில் திருத்தலத்தில் இருந்த மடு அன்னையின் திருச் சொரூபத்துடன் ஆலய குருக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக தேவன் பிட்டி தேவாலயத் தில் தஞ்சமடைந்திருந்தனர். இந்நிலையில் மடுத் திருத்தலத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பன உயர் மட்டக் கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் மன்னார் ஆயர் இல்ல வட்டாரங்களுக்கும் இடையில் வவுனியாவில் இடம் பெற்ற…
-
- 2 replies
- 1.3k views
-
-
கிழக்கின் முதலமைச்சராக பிள்ளையான் பதவியேற்பார் Thursday, 15 May 2008 கிழக்கு மாகாண முதலமைச்சராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவே நியமிக்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் தாம் தமது பதவிகளைத் துறக்கப் போவதாகவும் 12 அமைச்சர்கள் எச்சரித்திருக்கின்ற போதிலும், சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானே கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கப் படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் இன்று காலை தெரிவித்தன. இது தொடர்பான அரசாங்கத்தின் முடிவை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ இன்று வெளிப்படுத்துவார் எனத் தெரிகின்றது. லண்டனில் விஜயத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ சிரேஷ்ட முஸ்லிம் அமைச்சர்கள் இருவருடன் இது தொடர்பாகத் தொலைப…
-
- 49 replies
- 6.1k views
-
-
கொழும்பு கோட்டை சம்போதி விகாரைக்கு அருகில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்களின் உரிமையாளர் பிள்ளையான் குழுவின் உறுப்பினர் என தெரிவிக்கப்படுகிறது. ஜனா என்ற இந்த தமிழர் நேற்று மாலை திருகோணமலையில்............... தொடர்ந்து வாசிக்க.................. http://isoorya.blogspot.com/2008/05/blog-post_6823.html
-
- 8 replies
- 3.5k views
-
-
வீரகேசரி இணையம் 5/17/2008 1:04:57 PM - வவுனியா பசார் வீதியில் படையினர் பயணம் செய்த இராணுவ கவச வாகனம் ஒன்றின் மீது இன்று காலை 11 மணியளவில் நடத்தப்பட்ட கைக்குண்டு வீச்சுத் தாக்குதலில் குறைந்தது 17 பொதுமக்கள் காயமடைந்ததாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். கவச வாகனத்தின் மீது பட்ட கைக்குண்டு கீழே வீழ்ந்து வெடித்ததில் அவிடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த யுவதி ஒருவர் படுகாயமடைந்தார். சம்பவ இடத்தில் வந்து நின்ற பஸ் ஒன்றில் இருந்த பிரயாணிகளில் பலரும், அந்த வேளையில் வீதியில் சென்றவர்களும், அருகில் இருந்த கடைகளில் இருந்த சிலருமே இந்தச் சம்பவத்தில் காயமடைந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர். இராணுவ வாகனத்திற்கோ அதில் இருந்த படையினருக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் பொலிசார்…
-
- 0 replies
- 1.2k views
-
-
கடற்படையினரால் இன்வென்சிபல் கப்பலை மூழ்கடித்த விடுதலைப்புலிகளின் தற்கொலை குண்டுதாரிக்கு கடைசியாக லண்டன் மற்றும் கிளிநொச்சியிலிருந்து தொலைபேசி அழைப்புகள் கிடைத்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வருகிறது. இதுதொடர்பாக விசாரணைகளில் ஈடுபட்டு வரும் விசாரணைக்குழு கடற்படையின் சுழியோடி.................. தொடர்ந்து வாசிக்க......................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_5200.html
-
- 4 replies
- 3k views
-
-
விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா மேலும் இரு வருடங்களுக்கு நீடித்தது வெள்ளி, 16 மே 2008 [நிருபர் அ.மயூரன்] விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா மேலும் இரு வருடங்களுக்கு நீடித்துள்ளது. தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகளை எதிர்ப்பதாக காண்பித்து அரசியில்நடத்தும் கட்சிகளின் அழுத்தங்கள், றோ மற்றும் இந்திய மத்திய புலனாய்வுத்துறையின் அழுத்தங்கள் காரணமாக விடுதலைப் புலிகள் மீது இருந்துவந்த தடையை மேலும் இருவருடங்கள் இந்திய அரசு நீடித்துள்ளது. விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு தொடர்ப்பில் இந்திய உள்த்துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 1993ம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீடித்து வருகிறமை இங்கே குறிப்பிடத்தக்கது. pathivu.com
-
- 6 replies
- 1.7k views
-
-
16.05.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை
-
- 0 replies
- 1.6k views
-
-
மனித உரிமைகளைப் பேணும் விவகாரத்தில் இலங்கையின் பெருமையும், கௌரவமும் எந்த மட்டத்தில் உள்ளன என்பது சர்வதேச மனித உரிமை ஆர்வலர் என மதிக்கப்படும் தென்னாபிரிக்கப் பேராயர் வண.டொஸ்மண்ட் டூட்டு விடுத்துள்ள பகிரங்க அறிக்கையில் அம்பலமாகியிருக்கின்றது. மனித உரிமைகளுக்காகவும் நிற வெறிக்கு எதிராகவும் கடுமையாகப் போராடி வருபவர் வண. டூட்டு. இதற்காக 1984 இல் அவருக்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது. மனித உரிமைகளைப் பேணும் விடயத்தில் மிகக் கேவலமான பதிவுகளைக் கொண்டிருக்கும் இலங்கை, மனித உரிமைகளுக்கான ஐ.நா. கவுன்ஸிலில் இடம்பிடிப்பதற்கான தேர்வில் போட்டியிடுவது பெரும் அபத்தம் என்று வெளிப்படையாகவே விமர்சித்து, இலங்கைக்கு அதன் மோசமான நிலையை எடுத்துரைக்க முயன்றிருக்கிறார் பேராயர் டூட்டு. …
-
- 1 reply
- 1.4k views
-
-
கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் 2009 ஆம் ஆண்டுக்கான மாணவத் தலைவர் ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள 'எச்.எவ்.எம்.' வானோலிச் சேவை நாளையிலிருந்து 3 நாட்களுக்கு (18,19,20 ஆம் திகதிகளில்) 96.1 பண்பலை வரிசையில் ஒலிபரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஒலிபரப்புச் சேவை குறித்து கல்லூரியின் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் : இந்துவின் மைந்தர்கள் வெறுமனே புத்தகப் பூச்சிகளாக மட்டுமன்றி, இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் சிறந்தவர்கள் என்பதனை வெளியுலகிற்கு பறைசாற்றும் ஒரு முயற்சியாகவும் எம்மவர்களின் பலவேறுபட்ட திறமைகளை வெளிக் கொணரும் ஒரு களமாகவும இந்த 'எச்.எப்.எம்' ஒலிபரப்புச் சேவை அமைந்துள்ளது. எமது இந்த முயற்சியானது ஏனைய வானொலிச் சேவ…
-
- 3 replies
- 1.3k views
-
-
லங்கா டிசென்ட் இணையத்தளத்திற்கு இன்று காலை முதல் தொழில்நுட்ப தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இது முழுமையாக அரசியல் பழிவாங்கல் என லங்கா டிசேன்ட்டின் ஆசிரியர் குழாம் தெரிவித்துள்ளது. அண்மையில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சினால் கொழும்பு சாட்டட் கட்டிடத்தில் அமைக்கப்பட்ட அலுவலகம் ஒன்றில், நிபுணர்கள் குழு ஒன்று இயங்கிவருகிறது. இது இணையத்தளங்களை எவ்வாறு தடைசெய்யலாம் என்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் லங்கா டிசென்ட் ஆசிரியர் குழுக்ம் குறிப்பிட்டுள்ளது. லங்கா டிசென்ட் முன்னாள் அமைச்சரும் தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசியல் எதிரியுமான மங்கல சமரவீரவுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் இணையத்தளமாகும். ஆரசாங்கத்தின் இந்த நடவடிக்…
-
- 1 reply
- 1.3k views
-
-
இன்று சிறீலங்கா தலைநகரில் நடந்த குண்டுவெடிப்பின் போது அதில் சிக்கிக் கொண்ட சிறீலங்காவின் விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே காயங்கள் இன்றி அதிஷ்டவசமாகத் தப்பியுள்ளார். ஆனால் அவருடைய கார் சாரதி பலியாகியுள்ளார். இத்தகவலை பிபிசி வெளியிட்டுள்ளது..! Sri Lanka's sports minister, Gamini Lokuge, was caught up in the blast but escaped unhurt. His driver was among the dead, police said. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7404147.stm
-
- 2 replies
- 1.9k views
-
-
போரும் அதன் வலியும் கொடியது கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் அனுபவிக்கும் துயரம் தான் எத்தனை எத்தனை? தமிழர்களுக்கு அவலத்திற்கு மேலாக அவலத்தைக் கொடுத்தாய் அதே அவலம் உன் முற்றத்தில் நிகழும் போது பதை பதைத்து புலம்புகிறாய். எங்கள் மண்ணில் குண்டு போடுவதை எங்கள் மக்களை ஏதிலிகளாக்கியும் தொடர்ந்தும் அவலத்தை கொடுப்பாயானால் அதே அவலம் உனக்கும்தான். மனிதர்களுக்கு உறவுகளும் அது சார்ந்த வட்டங்களும் தான் முக்கியம் அவ் அடிப்படை சித்தாந்தத்தையே சின்னாபின்னமாக்கி தமிழினத்தையே இத்தீவிலிருந்து முற்றாக அழித்தொழிக்க நினைக்கும் உனக்கு அதாவது தமிழனுக்குத்தான் வலிக்கும் சிங்களவனுக்கு வலிக்காது என்றும் கேடு கெட்ட இனவாதத்தை விட்டு தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக…
-
- 4 replies
- 2.4k views
-
-
சிறிலங்கா கடற்படை மீது எந்த நேரத்திலும் எதிர்பாராத திடீர் தாக்குதல்களை நடத்தும் வல்லமை கொண்டவர்கள் கடற்புலிகள் என்று இந்திய கடற்படையின் ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரி கொமோடோர் வாசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 834 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் வானூர்தி வன்னியில் உள்ள இரணைமடு வானூர்தி ஓடுபாதையை அண்டிய பகுதியில் பறப்பில் ஈடுபட்டதாக சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-