Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 4 மாகாணங்களிலுள்ள வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை பிரிவை தவிர வேறு எந்த சேவையும் இடம்பெறாது - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் Published By: DIGITAL DESK 5 11 MAR, 2023 | 12:50 PM (எம்.மனோசித்ரா) அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக்கொள்கையை மீளப் பெறுமாறு வலியுறுத்திய அரச மருத்து அதிகாரிகள் சங்கம் திங்கட்கிழமை (13) 4 மாகாணங்களில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. தமக்கான தீர்வுகள் கிடைக்கப் பெறாதபட்சத்தில் செவ்வாய்கிழமை முதல் ஏனைய அனைத்து மாகாணங்களிலும் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக் குழு உறுப்பி…

  2. யாழில் வீடு உடைத்து திருடிய மூவர் கைது யாழில் வீட்டை உடைத்து வீட்டு தளபாடப் பொருட்களைக் களவாடிய மூவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். இணுவில் பகுதியில் வைத்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். யாழ். சாவகச்சேரி கெருடாவில் பகுதியில் வீடொன்றை உடைத்து அங்கிருந்த வீட்டுத் தளபாடப் பொருட்கள் கடந்த மாதம் களவாடப்பட்டிருந்தன. அதனை அடுத்து வீட்டு உரிமையாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த சாவகச்சேரி பொலிஸார் இணுவில் பகுதியில் வீடொன்றில் தங்கியிருந்த மூவரை கைது செய்துள்ளதோடு களவாடிய பொருட்களையும் மீட்டுள்ளனர். கைதானவர்கள் சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலை…

  3. ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்திய கண்ணீர்ப்புகைக் குண்டுகள் காலாவதியானவையா ? - பொலிஸார் விளக்கம் Published By: DIGITAL DESK 5 11 MAR, 2023 | 12:18 PM (எம்.மனோசித்ரா) காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகள் செயலிழந்தவையாகவும் , செறிவு குறைந்தவையாகவுமே காணப்படும். அவற்றைக் கொண்டு ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாது. சில தரப்பினரால் தெரிவிக்கப்படுவதைப் போன்று கடந்த வாரங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பிரயோகிக்கப்பட்ட கண்ணீர்ப்புகைக் குண்டுகள் காலாவதியானவையல்ல என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். கடந்த வாரம் கொழும்பிலு…

  4. தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் – முழு விபரம் இதோ தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை நாடாளுமன்றம் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே மற்றும் கருணதாச கொடிதுவாக்கு ஆகியோர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமையவே இந்த பட்டியல் வெளியாகியுள்ளது, அதன்படி கடந்த பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி தகவல் அறியும் உரிமையின் கீழ் இவ்விரு உறுப்பினர்களும் நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் உரிய தகவல்களைக் கோரியுள்ளனர். 1977 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதிய சட்டத்தின் பிரகாரம் தற்போது ஓய்வு பெறும் உறுப்பினர்களின் பட்டியல் பின்வருமாறு வெளி…

  5. வாக்குச் சீட்டு அச்சடிக்க இன்னும் பணம் வழங்கப்படவில்லை – மீண்டும் தள்ளிப்போகுமா தேர்தல் ? வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பணம் இல்லாத காரணத்தினால் தபால் மூல வாக்கு சீட்டை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரச அச்சம் தெரிவித்துள்ளது. வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதற்கு செலவாகும் பணம் இதுவரை செலுத்தப்படாததால், அதற்கான பணிகளைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அரசாங்க அச்சக அலுவலகத்தின் பிரதானி தெரிவித்துள்ளார். வாக்குச் சீட்டுக்களை அச்சிட 152 மில்லியனும் ஊழியர்களின் கொடுப்பனவிற்காக 52 மில்லியன் ரூபானும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் இதுவரை தம்மால் பூர்த்தி …

  6. இராணுவ அதிகாரிகள் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்தது அரசாங்கம் இலங்கை இராணுவ அதிகாரிகள் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது என ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார். மனித உரிமைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட சில இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மை அல்லது நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் ஏற்பாடுகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறது என்பது குறித்த மீளாய்வுக்கூட்டத்தில் குறித்த குழு முன்வைத்த குற்றச்ச…

  7. அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அரசு வேலை இல்லை? அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரச சேவையில் வேலை வாய்ப்பு வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற போராட்டங்கள் அல்லது நாசவேலைகளில் ஈடுபடுபவர்கள் அடையாளம் காணப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பதிவுகள் டேட்டா பேங்க் வடிவில் பராமரிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது. அத்தகையவர்கள் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும்போது, அவர்கள் சம்பந்தப்பட்ட வேலைக்குத் தகுதியற்றவர்களாகக் கருதுவதற்கான அடிப்படை ஆவணம் தயாரிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://a…

  8. மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்! வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வாகனங்களை விடுவிக்கும் பணியை சுங்கத்துறை ஏற்கனவே ஆரம்பித்துள்ள நிலையில், நேற்று (வியாழக்கிழமை) முதல் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சட்டரீதியாக வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தின் அடிப்படையில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த தொழிலாளி இலங்கைக்கு அனுப்பப்பட்ட ப…

  9. கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியல் பீடம் ஆரம்பிக்க இந்திய அரசின் உதவியுடனான கேட்போர் கூடம் அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவிப்பு! kugenMarch 11, 2023 (சரவணன்) கிழக்கு பல்கலைகழகத்தில் பொறியல் பீடம் ஆரம்பிக்க மற்றும் இந்திய அரசின் உதவியுடனான கேட்போர் கூடம் அமைப்பதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதுடன் உரமானியம், நெல்விலை நிர்ணயம் மற்றும் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார். மட்டக்களப்பிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (10) விஜயம் மேற்கொண்டுடபோது மட்டக்களப்பு விமான நிலையத்தில் தமிழர் உணர…

  10. பழி வாங்கும் எண்ணங்களே தமிழரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளரை ஏனைய கட்சியினர் நிராகரிக்க காரணம் - சிறீதரன் Published By: Digital Desk 5 10 Mar, 2023 | 04:58 PM ( எம்.நியூட்டன்) 70 வருட வரலாற்றை கொண்ட தமிழரசு கட்சியின் மாநகர சபை முதல்வர் வேட்பாளரை அரசியல் விரோதங்களும், குரோதங்களும் பழி வாங்கும் எண்ணமும் தான் ஏனைய கட்சியினர் நிராகரிப்பதற்கு காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். யாழ் மாநகர சபையின் இடைக்கால முதல்வர் தெரிவு கோரமின்மையால் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கைய…

    • 2 replies
    • 621 views
  11. பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் கிழக்கு மாகாணத்தில் 1000 பேருக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவதன் நோக்கம் என்ன? - செல்வம் சபையில் கேள்வி Published By: Vishnu 10 Mar, 2023 | 01:12 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் கிழக்கு மாகாணத்தில் ஒரு குறித்த பிரதேசத்தில் உள்ள 1000 பேருக்கு மாத்திரம் புலமை பரிசில்கள் வழங்குவதன் நோக்கம் என்ன? அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ளாமல் இவ்வாறு புலமைபரிசில்கள் வழங்கப்படுவது தவறான நிலைமையை தோற்றுவிக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பா…

  12. இலங்கை அகதிகள் போர்வையில் இந்தியாவுக்குள் நுழையும் 'தேடப்படும் சந்தேக நபர்கள்' கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் (இந்தியா), ரஞ்சன் அருண் பிரசாத் (இலங்கை)) பதவி,பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் ஏராளமான இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள், இந்தியாவில் அடைக்கலம் கோரி தனுஷ்கோடி கடல் வழியாக தமிழ்நாட்டுக்குள் வந்துள்ளனர். அவர்கள் மண்டபம் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அடைக்கலம் தேடி வந்தவர்களை இந்திய அரசு அகதியாக கருதாததால், ம…

  13. எரிபொருளின் விலை எதிர்வரும் நாட்களில் குறைக்கப்படும்- சுசில் பிரேமஜயந்த Published By: DIGITAL DESK 5 10 MAR, 2023 | 04:43 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) அமெரிக்க டொலரின் பெறுமதிக்கு ஏற்றவாறு எதிர்வரும் நாட்களில் எரிபொருள் விலை குறைவடையும். அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மேற்கொள்ளும் போராட்டங்கள் நாட்டுக்கு எதிரானதாக அமையும்,பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண முடியும்,எதிர்வரும் மாதங்களில் வரி கொள்கை மறுசீரமைக்கப்படும் ஆகவே நெருக்கடியான சூழலில் சகல தரப்பினரும் விட்டுக் கொடுப்புடன் செயற்படும் என சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற ச…

  14. நாமலுக்கும் சமலுக்கும் புதிய பதவிகள்: நன்றி தெரிவித்து நாமல் டுவீட்! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, நாமல் ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ‘புதிய நியமனம் கிடைத்தமை பெருமையாக உள்ளது’ என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாடாளுமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ ஏகமனத…

  15. உலகின் துணிச்சலான பெண்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா விருது வழங்கி கௌரவிப்பு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் உலகில் துணிச்சலான பெண்களாக 2023 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட பெண்களை கௌரவிக்கும் நிகழ்வு வௌ்ளை மாளிகையில் நடைபெற்றது வருடாந்தம் இந்த நிகழ்வு நடத்தப்படுவதுடன், 2021 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டவர்களும் இம்முறை கௌரவிக்கப்பட்டனர். COVID பெருந்தொற்று காரணமாக 2021 ஆம் ஆண்டு இந்நிகழ்வு நடத்தப்படவில்லை. இதன்போது, 2021 ஆம் ஆண்டு உலகின் துணிச்சலான பெண்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ரனித்தா ஞானராஜாவிற்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. …

    • 6 replies
    • 907 views
  16. தேர்தல் குறித்து வௌியிடப்பட்ட வர்த்தமானி தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களின்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 25.04.2023 அன்று நடத்துவதற்கான திகதியை நிர்ணயித்து ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அதிகாரிகளாலும் விசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 2322/28 முதல் 2322/52 வரையிலான சிறப்பு வர்த்தமானி மூலம் ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அதிகாரியும் மேற்படி தேர்தலை நடத்துவதற்கான திகதியை நிர்ணயித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=171539

    • 0 replies
    • 569 views
  17. வெள்ளைப் பூரான் தொடர்பில் அவதானம் தேவை : நானட்டான், வங்காலை பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது - வைத்தியர் ரி.வினோதன் Published By: DIGITAL DESK 5 10 MAR, 2023 | 09:31 AM வெள்ளைப் பூரான் கடிப்பதால் ஏற்படும் விஷம் உயிர் ஆபத்தை ஏற்படுத்துவதில்லை. எனினும் வெள்ளை பூரான் தொடர்பில் அவதானம் தேவை என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வெள்ளைப் பூரான் கடிப்பதால் ஏற்படும் விஷம் உயிர் ஆபத்தை ஏற்படுத்துவதில்லை. அண்மையில் வெள்ளைப் பூரானால் கடிக்கப்பட்ட சிறு குழந்தை ஒன்று வைத்தியசாலையில் அனுமதிக்க தாமதமாகிய மையால் சிறுமி உயிரிழந…

  18. வவுனியாவில் வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு Published By: DIGITAL DESK 5 10 MAR, 2023 | 10:54 AM வவுனியா பூவரசங்குளம் மணியர்குளம் பகுதியில் நேற்று (09) இரவு வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மணியர்குளத்தின் அணைக்கட்டினை அண்மித்த பகுதியில் கழுத்து பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் நித்தியநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சக்திவேல் யசோதரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மாவட்டத்த…

  19. யாழில் சமூக சேவையில் நடிகர் சத்தியராஜ் மகள் திவ்யா நெடுந்தீவில் சமூக சேவையில் ஈடுபடும் தன் மகளை நடிகரும் தமிழ் உணர்வாளருமான சத்யராஜ் பாராட்டியுள்ளார். “இலங்கையில் உள்ள வடக்கு மாகாண பகுதியில் அமைந்திருக்கும் நெடுந்தீவில் பசுமைப்பள்ளி, பசுமைச் சமூதாயம் என்ற பெயரில் ஈழத்து காந்தி என அழைக்கப்படும் தந்தை செல்வாவின் பேத்தியாகிய பூங்கோதை சந்திரகாசனும், என் மகள் திவ்யா சத்தியராஜும் இணைந்து, ஒரு அற்புதமான திட்டத்தை துவங்கியுள்ளனர். இதில் நான் மிகவும் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். அந்த திட்டத்தில் பல பயனுள்ள விஷயங்கள் அடங்கியிருக்கிறது. முதலாவது ஈழ குழந்தைகளின் கல்வி, எதிர்காலம், விவசாயம் என்ற ஒரு அற்புதமான தொழிலை கற்றுக்கொள்வது, அதில் அந்தக் க…

  20. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளை விசேடமாக மாற்றுவதற்கு பொருளாதார ஒருங்கிணைப்பு அவசியம் - மிலிந்த மொராகொட Published By: Rajeeban 10 Mar, 2023 | 10:39 AM இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் தற்போது காணப்படும் உறவுகளை விசேடமானதாக மாற்றுவதற்கு பொருளாதார ஒருங்கிணைப்பு அவசியமானது என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார். இந்தியாவின் இராணுவ கல்லூரியில் இந்திய இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை இந்தியாவிற்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உறவுகள் வரை தற்போதைய விசேடமான உறவுகள் வரை…

  21. ஜோசப் முகாம் சித்திரவதைகள் தொடர்பில் மேஜர் ஜெனரல் குலதுங்கவிடம் கேள்வி எழுப்புங்கள் - ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல் Published By: Vishnu 09 Mar, 2023 | 05:34 PM (நா.தனுஜா) மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் குலதுங்கவிடம் ஜோசப் முகாமில் அவரது வகிபாகம் என்னவென்பது குறித்து கேள்வி எழுப்பப்படவேண்டும் என்று பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சிப் பாராளுமன்றக்குழுவின் தலைவருமான எலியற் கொல்பேர்ன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளார். …

  22. காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி கைது! தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா நேற்று (09) மாலை வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா ஏ9 வீதியில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 2210 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி தாய்மாரால் சுழற்சி முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் குறித்த போராட்டம் அப் பகுதியில் கொட்டகை அமைத்து நடைபெற்று வருகின்றது. குறித்த கொட்டகை அமைந்துள்ள வீதி மின் கம்பத்தில் பொருந்தப்பட்டிருந்த மின் விளக்கு இணைப்பு மூலம் மின்சாரம் பெறப்பட்டு போராட்ட கொட்டகைக்கு…

    • 1 reply
    • 465 views
  23. சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது – அருட்தந்தை மா.சக்திவேல்! சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(வியாழக்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வலி.வடக்கில் போர்த்துக்கீசர் கால மிக தொன்மை வாய்ந்த கீரிமலை சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. இது இனவாத, மதவாத அரச பயங்கரவாதத்தினதும் அதற்கு துணை நிற்கும் இயந்திரமான இராணுவத்தினதும் …

  24. அரசாங்கத்தின் இரு முக்கிய இணையத்தளங்களிற்கு ஹக்கர்கள் ஊடுருவல்! அரசாங்கத்தின் இரண்டு இணையத்தளங்கள் ஹக்செய்யப்பட்டுள்ளதாகவும் மிக முக்கியமான தகவல்கள் பறிபோயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை அரசாங்கத்தின் இரண்டு இணையத்தளங்கள்ஹக் செய்யப்பட்டு அதில் உள்ள மிகவும்இரகசியமான தகவல்கள் ஹக்கர்கள் குழுவொன்றிடம் வழங்கப்பட்டுள்ளதாக சைபர் ஆபத்து தொடர்பான புலனாய்வு அமைப்பொன்று தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் ஹக் செய்யப்பட்டு அதில் காணப்பட்ட விபரங்கள் ஹக்கர் குழுவொன்றிற்கு விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ளதாக பல்கொன் பீட்ஸ் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2023/1327004

  25. கண்ணீர்ப் புகைக்குண்டு தாக்குதலிலேயே பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்தார்? புத்திக பத்திரன சந்தேகம்! பொலிஸாரின் கண்ணீர்ப் புகைக்குண்டு தாக்குதலிலேயே கொழும்பு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தார் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த செவ்வாய்கிழமை பல்கலைக்கழக மாணவர்களுடனான மோதலின் போது, பொலிஸாரின் கண்ணீர்புகை பிரயோகம் அந்தப்பகுதியை நிரப்பியதுடன் அருகில் உள்ள பாடசாலைகளும் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இதனிடையே, பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.