ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
நடேசனுடன் 11 அரசசார்பற்ற நிறுவனங்கள் இரகசிய பேச்சுவார்த்தை Sunday, 20 April 2008 இலங்கையில் இயங்கும் 11 முன்னணி அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தப் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளருடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரியவருகிறது. தற்போது வடக்கில் முன்னெடுக்கப்படும் இராணுவ முன்னகர்வுகளை தடுத்து நிறுத்துவதற்கு இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளினால் அழுத்தங் கொடுக்கப்பட வேண்டும் என இந்த இரகசிய பேச்சுவார்த்தையின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த 11 அரச சார்பற்ற நிறுவனங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் இணை நிறுவனங்களும் அடங்குவதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் திவயின ஞாயிறு இதழுக்கு தெரிவித்துள்ளார். கிழக்குத் தேர்தல்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையில் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்து, அமைதியை நிலைநாட்டும் வகையில் சமாதான ஏற்பாட்டாளராக செயற்படத் தாம் தயாராக இருப்பதாக இந்தியாவின் ஆன்மிக குருவான ஸ்ரீ ரவிசங்கர் சுவாமிகள் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் தம்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாக ............................ தொடர்ந்து வாசிக்க........................................................... ........... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_6384.html
-
- 9 replies
- 1.4k views
-
-
அரசியல் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட பிராந்திய சுயனலனை மட்டும் பிரதி பலிக்கக்கூடிய கொள்கையை கொண்ட் வல்லரசாளர்க்ளிடமிருந்து தமிழ் மக்கள் எதனையும் எதிர்பாக்க முடியாது........................................................ ...... தொடர்ந்து வாசிக்க............................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5166.html
-
- 0 replies
- 1.7k views
-
-
கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் மிக மோசமாகவும் தமிழ் மக்களுக்கு பாதகமாகவும் காணப்படுவதால் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க நடவடிக்கையெடுக்கக் கோரி மகிந்த ராஜபக்ஷவுக்கு மூதூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மு. சௌந்தரராஜா அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்ததில் மேலும் தெரிவித்துள்ளதாவது திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் கிழக்கில் 24 தமிழ்க் கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மற்றும் திருகோணமலை நகரம் தொடக்கம் குச்சவெளி வரை கரையோர மக்கள் 30 ஆயிரம் பேர் வரை இந்தியாவில் அகதிகளாக உள்ளனர். மனித வாழ்வின் மிகத் துயரம் வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்தல் என்பது உங்களுக்குத் தெரி…
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரான்சின் புதிய சிறிலங்காத் தூதுவராக யாழ். மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபரும், முன்னாள் வெளிவவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் காலத்தில் வெளிநாட்டு அமைச்சின் செயலாளராகவும் பதவி வகித்த லயனல் பெர்னாண்டோ நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
படையினர் பாரிய தாக்குதலுக்கு தயாராவதை நன்கு அறிந்துவைதுள்ள புலிகள் அதனை முறியடிக்கும் நோக்கில் கேணல் தீபன் தலைமையில் தாக்குதல் அணிகளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்................. தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1948.html
-
- 0 replies
- 1.4k views
-
-
அமைச்சர் ஜெயராஜ் கொலை தொடர்பாக எண்மர் கைது செய்யபட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதே நேரம் இந்தக் கொலைத் திட்டம் தெஹிவலை அத்திடியாவில் தயாரிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பகுதியில் கொலையாளி சுமார் இரு வாரங்கள் தங்கியிருந்தது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அமைச்சர் மீதான தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர் பயன்படுத்தியதாகக் கருதப்படும் கையடக்கத் தொலைபேசியின் 'சிம்காட்' அந்தப் பகுதியிலிருந்து கண்டெடுக்கபட்டு அதன் மூலம் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் சி.ஐ.டி.யினர் தெரிவிக்கின்றனர். அமைச்சர் மீதான தாக்குதல் தொடர்பான திட்டத்தை ஒரு குழுவினரே தயாரித்துள்ளதாகவும் இந்தக் குழுவின் தல…
-
- 0 replies
- 1.3k views
-
-
பாக்.மற்றும் சீனாவிடமிருந்து ஆயுதங்களை இலங்கை கொள்வனவு செய்து வருகின்றது. இதனை நாம் அறிவோம். தமிழக மீனவர் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசை கேட்டுக் கொண்டுள்ளோம் என்று பாரதப் பிரதமர் தெரிவித்துள்ளார். ம.தி.மு.கழகத்தின் செயலாளர் வைகோ நேற்று முன்தினம் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போதே பிரதமர் மன்மோகன் சிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஆயுத உதவி செய்வதை நிறுத்த வேண்டும் என்று வைகோ எழுதிய கடிதத்தினை நினைவு கூர்ந்த பிரதமர், இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கவில்லை என்று தெரிவித்தார். இலங்கை இராணுவத் தளபதிகளும் அமைச்சர்களும் இந்தியா ஆயுதங்களை வழங்குவதாக கூறியுள்ளானரே என வைகோ கேட்ட போது அது தவறான தகவல், அதி…
-
- 5 replies
- 985 views
-
-
மடு மாதா திருச்சொரூபத்தை மீண்டும் மடு தேவாலயத்திற்கு எடுத்து வரவேண்டும் என கோரப்பட்டுள்ளது. இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ஹேமந்த வர்ணக்குலசூரிய, இது தொடர்பிலான கோரிக்கையை முன்வைத்துள்ளார். இத்தாலி நகரில் நேற்று ஊடகவியலாளர்கள் சந்திப்பை நடத்திய அவர,; இந்த கோரிக்கையை பாப்பரசர் 16 ஆம் ஆசிர்வாதப்பரிடம் முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டாh.;; நேற்றைய தினம் மன்னாரிலும் சர்வமதங்களையும் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். மடு தேவாலையப் பகுதி சமாதான வலையமாகப் பிரகடணப்படுத்தப்பட வேண்டும் எனவும், நாட்டிற்கு சாந்தி சமாதானம் ஏற்படவேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டு இருந்தது. ஏற்கனவே மடு தேவலையப் பகுதி குறித்த மஜர் ஒன்று விடுதலைப்புலிகளிடமும், அரசாங்கத…
-
- 8 replies
- 1.8k views
-
-
போரியல் வளர்ச்சியில் அதியுச்ச நிலையில் இன்று தமிழினம் உள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் திட்டமிடலுக்கும் மேம்பாட்டிற்குமான மகளிர் பிரிவு பொறுப்பாளர் தமிழினி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.5k views
-
-
ராஜீவ் காந்தி கொலை சம்பந்தமாக சிறை வாசம் அனுபவிக்கும் நளினியை, ராஜீவின் மகளான பிரியங்கா சென்று சந்தித்த செய்தி கடந்த வாரங்களில் ஊடகங்களில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் இந்திய அரசியல் வட்டாரங்களிலும் இலங்கை அரசின் மட்டத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள இச் சந்திப்பைப் பற்றி தற்போது கருத்துத் தெரிவித்த மஹிந்தவின் அரசு தமது கவலையை தனிப்பட்ட ரீதியாக இந்திய அரச உயரதிகாரிகளுக்குத் தெரிவித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சினுடாக செய்திகள் கசிந்துள்ளது. இச் சந்திப்பின் ஊடாக இந்திய காங்கிரஸ் அரசு விடுதலைப் புலிகளின் மீது கொண்டுள்ள அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டு வருகின்றதா என மஹிந்த அரசு விஷேடமகவும் மிக உண்ணிப்பாகவும் அவதானித்து வருவதாகவும் செய்தி…
-
- 2 replies
- 2k views
-
-
முல்லைத்தீவு சிலாவத்தை மக்கள் குடியிருப்பு மீதும் கடல் தொழிலாளர் துறைகளின் மீதும் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இன்று கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தின. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-
-
எண்ணக்கரு & ஓவியம்: யாழ் வாசகர் ச.அ * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 1 reply
- 5.4k views
-
-
பிள்ளையான் குழுவைச்சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொலை. மட்டக்களப்பு கல்குடாவில் சுதர்சன் எனப்படும் இவ்வொட்டுக்குழு உறுப்பினர் சற்று முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளளா
-
- 0 replies
- 1.3k views
-
-
சுதந்திர ஊடக அமைப்பின் பொருளாளர் கே.றுஸாங்கனிடம் விடுதலைப் புலிகளின் பெயரால் கப்பம் கோரப்பட்டுள்ளது. இது குறித்து தெஹிவளை காவல்துறையினரிடம் கடந்த 16ஆம் திகதி அவர் முறைப்பாடு செய்திருந்தார். எனினும் இந்த முறைப்பாடு தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சுதந்திர ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது. இது மிகவும் அபாயகரமான நிலை என கூறியுள்ள சுதந்திர ஊடக அமைப்பு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் அமைப்பின் ஈழவேந்தன் என தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட ஒருவர் கடந்த 13ஆம் திகதி பிற்பகல் 4 மணியளிலில் றுஷhங்கனின் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு ஒன்றை மேற்கொண்டிருந்ததுடன் மோட்டார் சைக்கிள் அல்லது அதற்கு ஈடான ஆயிரத்து 500 அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை…
-
- 0 replies
- 802 views
-
-
இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் நேரில் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 784 views
-
-
அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் லண்டனில் இரண்டு மணித்தியாலங்கள் ரகசிய பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றதாக கூறப்படுகிறது. லண்டன் ஈலிங் பிரதேசத்தில் உள்ள டிரான் அலசின் உறவினர் ஒருவரின் வீட்டில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டேபுள்ளேயின் மரணத்தின் பின்னர் கட்சிக்குள் சிக்கல் நிலைமை ஏற்பட்டு வருவதாகவும் முக்கியமாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையக நடவடிக்கைகளில் அமைச்சர் டலஸ் அழகபெரும தலையீடுகளை மேற்கொள்வதாகவும் இந்த பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் மைத்திரிபால தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் உள்ள சிலரின் தேவை கருதி தமது சகோதரர்கள் மீதும் வீணான போக்கு கடைபிடிக்கப…
-
- 0 replies
- 1k views
-
-
ஜே.வீ.பீயின் வேட்பாளர் ஒருவரும் அவருடன் இருந்த இரண்டு பேரும் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் அக்கரைபற்று அரசடி சந்தியில் வைத்து தாக்கப்பட்டதாக அக்கரைப்பற்று காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 7 மோட்டார் சைக்கிள்களில் சென்ற முகமுடி அணிந்த சிலர் இவர்களை.................. தொடர்ந்து வாசிக்க........................................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_228.html
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற பல்வேறு மோதல் சம்பவங்களில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 9 படையினர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 768 views
-
-
'பயங்கரவாத அமைப்பென்று விடுதலைப் புலிகளை இந்தியா பட்டியலிட்டிருக்கன்ற போதும், தமிழக அரசியல்வாதியான வைகோ புலிகளின் அனுதாபியாகவும் ஆதரவாளராகவும் பேச்சாளராகவும் இருப்பது அறிந்ததொன்றே' என்று கெஹெலிய கூறியுள்ளார். மேலும் : ஒஸ்லோவில் அண்மையில் இடம் பெற்ற சர்வதேச மாநாட்டில் வைகோ உரையாற்றியுள்ளார். வட,கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியதன் மூலம் புலிகள் தவறு இழைத்திருக்கக் கூடுமென அவர் கூறியுள்ளார். ஆனால் 24 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தமது இருப்பிடங்களுக்கு மீண்டும் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்பதை விளங்கிக் கொண்டிருப்பது அவசியமாகும். பேச்சுவார்த்தை மேசைக்கு செல்வதற்கான வழிவகைளை மேற்கொள்ளுமாறு சர்வதேச சமூகம் அரசை வலியுறுத்துகிறது. அவ்வாறாயின் …
-
- 3 replies
- 1.2k views
-
-
சினா, பாகிஸ்த்தான் ஆகிய நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள, இராணுவ மற்றும் பொருளாதார இணைப்புக்கள் இந்தியாவின் தூக்கத்தை கலைத்துள்ளமையை மறுக்க முடியாது. இது 1978 களில் இந்திய நலனுக்கு புறம்பாக மேலைத்தேயத்துடன் கைகோர்த்து முன்னாள் இந்தியப் ........... தொடர்ந்து வாசிக்க..................................................... http://isoorya.blogspot.com/2008/04/1980.html
-
- 3 replies
- 1.7k views
-
-
'கிழக்கை ஆதரிப்பவர்கள் அம்மாகாணம் மீது பற்று வைத்துள்ளவர்கள் இந்த மாகாணசபைத் தேர்தலில் தோற்கடிக்கபட்டால் கிழக்கு மாகாணம் என்ற ஒன்று இல்லாமல் போய்விடும். ஆகவே, கிழக்கு மாகாணமக்கள் இத் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்'. என பிள்ளையான் நேற்று நடைபெற்ற புத்திஜீவிகள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் இடம் பெறப்போகும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் எமது கிழக்கு மாகாண மக்களுக்கு மிக முக்கியமான தேர்தல் ஆகும். இத் தோதலில் பலதரப்பட்ட அரசியல் நோக்கங்களை உடையவர்கள் போட்டியிடுகின்றனர். அவ்வாறு போட்டியிடுபவர்களில் யாரை ஆதரிப்பது எந்தக் கட்சியை ஆதரிப்பது என்று தீர்மானமெடுக் வேண்டிய ஒரு கட்டாயத்தில் தற்பொது உள்ளனர். எடுக்கப்படும் தீர்மானம் கிழக்கு மக்களுக்கு நன்மை அளிப்பத…
-
- 3 replies
- 1k views
-
-
போரின் நீட்சி - தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை - 31 http://www.yarl.com/videoclips/view_video....52d13f5f431e4bb
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மெய்ப்பாதுகாப்பு அதிகாரிகளாகளாக கடமையாற்றிய இரண்டு தமிழர்களை ஆட்டுப்பட்டித்தெரு வீதி காவற்துறையினர்.................... தொடர்ந்து வாசிக்க................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_755.html
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கைத் தமிழர்கள் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் சட்ட விரோதமாகப் பயணம் செய்வதற்கு சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் முகவர்கள் கொழும்பு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் உள்ள வலைப்பின்னல்களினூடாக.............. தொடர்ந்து வாசிக்க............................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_6232.html
-
- 1 reply
- 1.1k views
-