ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் இன்று முதல் வாசிப்புக்காக சபைத் தலைவரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்தவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கிக்கு நிதி மற்றும் நிர்வாக சுதந்திரத்தை வழங்குதல் மற்றும் மத்திய வங்கியால் தற்போது நிறுவப்பட்டுள்ள நாணய சட்டச் சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட துணை விடயங்களுக்காக இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது. புதிய சட்டமூலத்தின்படி, மத்திய வங்கியின் சுயாட்சி எல்லா நேரங்களிலும் மதிக்கப்படும் மற்றும் எந்தவொரு நபரும் அல்லது நிறுவனமும் இலங்கை மத்திய வங்கி ஆளுனர் அல்லது ஆளும் குழு மற்றும் நாணயக் கொள்கை சபையின் ஏனைய உறுப்பினர்கள் அல்லது மத்திய வங்கியின…
-
- 0 replies
- 182 views
- 1 follower
-
-
நான் எனது கடமையை நிறைவேற்றிவிட்டேன் : திட்டம் தோல்வியுற்றால் மிகவும் ஆபத்தான இடத்திற்கு நாடு தள்ளப்படும் - ஜனாதிபதி Published By: T. SARANYA 07 MAR, 2023 | 04:13 PM சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து நிதி உறுதி கடிதம் நேற்றிரவு கிடைத்ததையடுத்து, தானும் மத்திய வங்கி ஆளுநரும் கையெழுத்திட்ட இணக்கப்பாட்டுக் கடிதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். இதன்படி, நாட்டுக்கான தனது கடமையை நிறைவேற்றியுள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியம் தனது கடமையை இம்மாத இறுதிக்குள் நிறைவேற்றும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். பொருளாதாரத…
-
- 0 replies
- 661 views
- 1 follower
-
-
இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்த ஆராய்வு இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்தக்கூடிய நாணய அலகாக மாற்றவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்கமைய, இந்திய பிரஜைகள் அவர்களது பணத்தை நேரடியாக இலங்கையில் பயன்படுத்த முடியும் என்பதுடன் இலங்கையர்கள் வேறு நாணயங்கள் மீது தங்கியிருக்காமல் செயற்பட முடியும் என அமைச்சர் அலி சப்ரி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். …
-
- 0 replies
- 676 views
-
-
ஹரக் கட்டா, குடு சலிந்து உட்பட 8 பேர் மடகாஸ்கர் விமான நிலையத்தில் கைது Published By: SETHU 07 MAR, 2023 | 09:59 AM இலங்கையின் போதைப்பொருள் கடத்தல்புள்ளிகளான ஹரக் கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன, குடு சாலிந்து என அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக குணரத்ன ஆகியோர் மடகஸ்கார் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து உட்பட 8 பேர், மடகஸ்காரின் தலைநகர் அன்டனானாரிவோவின் இவாட்டோ சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கடந்த முதலாம் திகதி கைது செய்யப்பட்டனர் என எல்.எக்ஸ்பிரஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. ஹரக் கட்டாவின் மனைவி எனக் கூறப்படும் மடகாஸ்கர் பெண்ணொருவரும், அப்பெண்ணின் தந்…
-
- 0 replies
- 698 views
- 1 follower
-
-
அரசியல் விவகாரங்களில் பௌத்த தேரர்களின் தலையீடுகளே இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாமைக்குக் காரணம் - விக்னேஸ்வரன் சாடல் Published By: VISHNU 06 MAR, 2023 | 09:11 PM (நா.தனுஜா) இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு அரசியல் விவகாரங்களில் பௌத்த தேரர்களால் மேற்கொள்ளப்படும் தலையீடுகளே காரணம் என்பதே எனது நிலைப்பாடாகும். வட, கிழக்கு வாழ் தமிழ்மக்களின் பிரச்சினைகள் என்னவென்பதைக் கண்டறிவதற்கு ஆங்கிலம் அல்லது தமிழ்மொழி பேசக்கூடிய பௌத்த தேரர்கள் தமிழ் தலைவர்களுடன் கலந்துரையாடுவது இன்றியமையாததாகும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முத…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
இலங்கையின் கடன் மறுசீரமைப்பிறகு சீனா ஆதரவு – 2.9 பில்லியன் டொலர் கடனுதவி உறுதியானது ! சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவியை பெறுவதில் உள்ள தடையை நீக்கி, இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது. இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குனராக உள்ள சீனா, எக்ஸிம் வங்கி ஊடாக கடன் மறுசீரமைப்பிற்கான எழுத்து மூலமான ஆதரவை வழங்கியுள்ளதாக ப்ளூம்பேர்க் தெரிவித்துள்ளது. 2.9 பில்லியன் டொலர் பெறுமதியான கடனுதவியை பெற்றுக்கொள்வதற்கான இந்த உத்தரவாத இந்த கடிதம் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னதாக சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகை இம்மாதத்திற…
-
- 0 replies
- 299 views
-
-
சிங்கள மயப்படுத்தல் திட்டத்துக்கு ஒரு அங்குலம் நிலம் கூட வழங்க முடியாது: கஜேந்திரகுமார்! மட்டக்களப்பு- பொலன்னறுவை எல்லைப் பகுதியான தமிழ் மக்களுக்கு சொந்தமான மயிலந்தனைமடு மாதந்தனை மேச்சல்தரை பகுதியில் சிங்கள மயப்படுத்தலுக்காக திட்டமிடப்பட்ட மதுறு ஓயா வலதுகரை திட்டத்திற்கு தமிழ் பிரதேசத்தின் ஒரு அங்குலம் நிலம் கூட வழங்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். மேலும், இந்த திட்டத்துக்கு நிதியுதவி வழங்குகின்ற சர்வதேச நிறுவனங்கள் இதனை நிறுத்தவேண்டும் அல்லது உங்கள் அலுவலகங்களுக்கு முன்னால் போராட்டம் நடத்தப்படுமென அவர் எச்சரிக்கை விடுத்தார். தமிழ் தேசிய மக்கள்…
-
- 0 replies
- 460 views
-
-
யாழ். மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என அறிவித்தல் Share on FacebookShare on Twitter நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என்ற அறிவித்தல் தொல்பொருள் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. உடைந்து விழும் நிலையில் உள்ள அந்தக் கட்டடத்திற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நாடப்பட்டுள்ளமை காரணமாக அதற்குள் யாரையும் நுழையவேண்டாம் என தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது. https://athavannews.com/2023/1326541
-
- 14 replies
- 1.3k views
-
-
மின்சார சபை ஊழியர்கள் எண்ணிக்கையை 40 சதவீதத்தால் குறைக்க அவதானம் - டி.வி.சானக Published By: DIGITAL DESK 5 06 MAR, 2023 | 08:19 PM (இராஜதுரை ஹஷான்) மின்சார சபை ஊழியர்கள் எண்ணிக்கையை 40 சதவீதத்தால் குறைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான நிபுணத்துவ அறிக்கையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி துறை அமைச்சு தீர்மானித்துள்ளது என மின்சாரத்துறை இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக தெரிவித்தார். மின்சாரத்துறை மறுசீரமைப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 24 மணித்தியாலமும…
-
- 3 replies
- 645 views
- 1 follower
-
-
எதிர்வரும் வாரங்களில் எரிபொருள் விலைகள் குறைவடையலாம்? Published By: RAJEEBAN 06 MAR, 2023 | 04:32 PM எதிர்வரும் வாரங்களில் உள்ளுர் சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் பெட்ரோலிய உற்பத்தி பொருட்களின் விலைகள் குறைவடையலாம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை ரூபாயின் பெறுமதி வேகமாக அதிகரித்தால் பணவீக்கம் வேகமாக வீழ்ச்சியடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலைகள் குறைவடைந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எரிவாயுவிலைகளும் …
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
மட்டு மயிலந்தனையில் சிங்கள மயப்படுத்தல் மாதுறு ஓயா திட்டத்தை நிறுத்தவேண்டும் - பொ.கஜேந்திரகுமார் எச்சரிக்கை 06 Mar, 2023 | 11:28 AM மட்டக்களப்பு மயிலந்தனைமடு மாதந்தனை மேய்ச்சல்தரை பகுதியில் சிங்கள மயப்படுத்தலுக்காக திட்டமிடப்பட்ட மாதுறு ஓயா வலதுகரை திட்டத்திற்கு தமிழ் பிரதேசத்தின் ஒரு அங்குலம் நிலம் கூட வழங்க முடியாது என்பதுடன், நிதி உதவி வழங்குகின்ற சர்வதேச நிறுவனங்கள் இதனை நிறுத்தவேண்டும் அல்லது உங்கள் அலுவலகங்களுக்கு முன்னால் போராட்டம் நடத்துவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பல…
-
- 0 replies
- 674 views
-
-
ஐநா மனித உரிமை பேரவையின் தீர்மானம் -மீண்டும் நிராகரித்தது இலங்கை Published By: Rajeeban 06 Mar, 2023 | 11:26 AM ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை கடந்த வருடம்நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என இலங்கை மீண்டும்தெரிவித்துள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 52 அமர்வில்இடம்பெற்ற கூட்டமொன்றின் போது ஜெனீவாவில் உள்ளஇலங்கையின் ஐநாவிற்கான அலுவலகத்தின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலிஅருணதிலக இதனை தெரிவித்துள்ளார். மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்ட்டவை போன்ற தீர்மானங்கள்இலங்கை மக்களிற்கு உதவியாக அமையப்போவதில்லை மாறாக நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும…
-
- 5 replies
- 586 views
-
-
யாழ்.தெல்லிப்பழையில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு Published By: T. SARANYA 06 MAR, 2023 | 09:46 AM யாழ்.தெல்லிப்பழை - கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் நேற்று (05) உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த எஸ்.மாதுசன் (வயது -18) என்பவரே உயிரிழந்துள்ளார். கட்டுவன்புலம் பகுதியில் வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டும் பொழுது பிரதான அதிஉயர் மின்கம்பியில் கொப்பு தொடுகையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். https://www.virakesari.lk/article/149773
-
- 0 replies
- 408 views
- 1 follower
-
-
அனைத்து தமிழ் உறுப்பினர்களும் ஒன்றிணைந்தமை மகிழ்ச்சி – அமைச்சர் டக்ளஸ் பெருமிதம் இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக வடக்கை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோரும் சுதந்திரக் கட்சியை சேர்ந்த அங்கஜன் இராமநாதனும் பங்கேற்றனர். இக்கலந்துரையாடலில், இந்தியக் கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு எந்தவகையி…
-
- 1 reply
- 597 views
-
-
தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது தேர்தலை தாமதப்படுத்தும் – எம்.ஏ.சுமந்திரன் திறைசேரியின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருடன் தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது உள்ளூராட்சித் தேர்தல் குறித்த தீர்மானம் எடுப்பதை மேலும் தாமதப்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பின்னர் வாக்கெடுப்புக்கான புதிய திகதியை அறிவிப்போம் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிடுவது உள்ளூராட்சித் தேர்தலை தொடர்ந்து தாமதப்படுத்தும் செயற்பாடு என கருதுவதாக அக்கட்சியின் ஊடக பேச்சளார் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். திறைசேரியின் செயலாளர், அரசாங்க அச்சகமும் தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என…
-
- 0 replies
- 346 views
-
-
ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் – ஓமல்பே சோபித தேரர்! அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1326464
-
- 0 replies
- 174 views
-
-
வடக்கு மீனவர்கள் ஒன்றாகுவீர்களா? – சுமந்திரன் கேள்வி “வடக்கு மீனவர்களுடைய பிரச்சினைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் எல்லோரும் ஒன்றாக ஆதரவு வழங்கத் தயார். ஆனால் மீனவர்கள் எல்லோரும் ஒன்றாகப் போராடத் தயாரா?” – இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். வடக்கு மீனவ பிரதிநிதிகளுக்கும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தவிர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ். நகரிலுள்ள விடுதியில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்படி கேள்வியை எழுப்பினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “இழுவைமடி தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நாம் கடந்த காலத்தில் …
-
- 0 replies
- 538 views
-
-
யாழ். மாநகர சபை முதல்வர் தெரிவில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் சொலமன் சிறிலை நியமிக்க தீர்மானம் Published By: Nanthini 05 Mar, 2023 | 08:00 PM யாழ் மாநகர சபையில் நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக சொலமன் சிறிலை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை செயலகத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று (5) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது சொலமன் சிறிலின் வெற்றிக்காக சகல கட்சிகளிடமும் ஆதரவு கோர தீர்மானித்துள்ளதாகவும் மா…
-
- 0 replies
- 550 views
-
-
ஜனாதிபதிக்கு நீதிமன்றம் SHUT UP AND SIT DOWN என்று தீர்ப்பு SHUT UP AND SIT DOWN என இந்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளை அச்சுறுத்திய ஜனாதிபதிக்கு நீதிமன்றம் SHUT UP AND SIT DOWN என்ற வகையிலான தீர்ப்பை வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கும் ஒத்திவைக்கவும் கூட்டு உபாயங்களை முன்னெடுத்த ஜனாதிபதிக்கு உயர்நீதிமன்றம் தக்க பதிலை வழங்கியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இனிமேலும் தேர்தலை ஒத்திவைக்க இந்த அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட சிலர் மௌனம் காத்த வந்த வேளையில், ஐக்கிய மக்கள் சக்தி இந்நாட்டின் இரண்டு கோடிக்கும் அதிகமான மக்களின்…
-
- 0 replies
- 778 views
-
-
கிளிநொச்சியில் கால்நடைகளுக்கு மத்தியில் தீவிரமடையும் நோய் கிளிநொச்சி – பூனகரி, கரைச்சி, இயக்கச்சி, பளை, உருத்திரபுரம் மற்றும் நீவில் ஆகிய பகுதிகளில் பெரியம்மை (இலம்பி) நோய் அதிகளவில் கால்நடைகளிடையே தாக்கம் செலுத்தி வந்துள்ளது என கால் நடைப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இள வயதுடைய கால்நடை உயிரினங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கால்நடைகளின் உடலில் பாரிய கொப்பளங்கள் ஏற்பட்டு, அவை பெரும் புண்ணாக மாறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிப்புக்கள் இதனால் கால்நடைகள் நோய்வாய்ப்பட்டு இறக்கின்ற நிலமை காணப்படுவதாகவும், பால் உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural…
-
- 0 replies
- 621 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் புலனாய்வு தகவல்களே விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கு உதவின - அவர்களின் ஒன்பது ஆயுதக்கப்பல்கள் அழிக்கப்பட்டமைக்கும் அதுவே காரணம் - அலி சப்ரி Published By: Rajeeban 05 Mar, 2023 | 12:37 PM திருகோணாமலையில் இராணுவதளமொன்றை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளிற்காகவே சமீபத்தில் அமெரிக்காவின் உயர் மட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம மேற்கொண்டனர் என தெரிவிக்கப்படுவதை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நிராகரித்துள்ளார். இது முழுமையான முட்டாள்தனம் என பேட்டியொன்றில் அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் எங்கும் எவரும் இராணுவதளங்களை அமைப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை ஆனால் அதன…
-
- 18 replies
- 905 views
-
-
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஏப்ரல் 07 அல்லது 08ஆம் திகதி இடம்பெறலாம்? உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 07 அல்லது 08 ஆம் திகதிகளில் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்களின் அடிப்படை வாக்குரிமையை உயர்நீதிமன்றம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு தடையேற்படுத்த வேண்டிய தேவை திறைசேரியின் செயலாளருக்கு கிடையாது. பொருளாதார பாதிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போடு…
-
- 0 replies
- 449 views
-
-
நாட்டில் எந்தத் தேர்தல் முதலில் நடக்கும் என ஊகிக்க முடியவில்லை – பஷில்! நாட்டில் எந்தத் தேர்தல் முதலில் நடக்கும் என்பதனை தங்களால் ஊகிக்க முடியவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எந்தத் தேர்தல் நடந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றியடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எந்தத் தேர்தலிலும் தோற்ற வரலாறு மொட்டுக் கட்சிக்கு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், உள்ளூராட்சி சபைத் தேர்தலையும் தொடர்ந்து பிற்போட முடியாது எனவும், மக்களின் ஜனநாயக உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வருடமும் அடுத்த வருடமும் தேர்தல்களுக்கான வர…
-
- 0 replies
- 175 views
-
-
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் இலங்கையில் தரையிறங்கியது! உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான Airbus A380-800 இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. விமானத்திற்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே குறித்த விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. நியூசிலாந்தின் ஒக்லாந்தில் இருந்து டுபாய் நோக்கி பயணித்த போது, எரிபொருள் நிரப்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை இந்த விமானம் வந்தடைந்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து குறித்த விமானத்திற்கு 62 ஆயிரத்து 800 லீற்றர் எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த எரிபொரு…
-
- 0 replies
- 843 views
-
-
தெற்காசியப்பிராந்திய வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் நிகழ்நிலை அருங்காட்சியகத்தை உருவாக்கும் முயற்சியில் சர்வதேச மன்னிப்புச்சபை Published By: DIGITAL DESK 5 04 MAR, 2023 | 05:31 PM (நா.தனுஜா) இலங்கை உள்ளடங்கலாக தெற்காசியப்பிராந்தியத்தில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களை உள்ளடக்கிய நிகழ்நிலை அருங்காட்சியகமொன்றை உருவாக்குவதை முன்னிறுத்தி சர்வதேச மன்னிப்புச்சபை செயற்பட்டுவருகின்றது. இலங்கையைப் பொறுத்தமட்டில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும், அதற்கு முன்னரான இனக்கலவரங்களின்போதும் பெருமளவானோர் வலிந்து காணாமலாக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச கட்டமைப்புக்க…
-
- 0 replies
- 186 views
- 1 follower
-