Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாணத்தில் படையினரால் மக்கள் கட்டாயப்படுத்தி துப்புரவு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் Monday, 24 March 2008 இராணுவ வாகனங்களில் அழைத்துச்செல்லப்பட்ட இவர்கள், இராணுவ முகாம்களின் வெளிப்புறங்கள், மற்றும் 5 கிலோ மீற்றர் தொலைவைக்கொண்ட கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள சோதனை சாவடிகள் இதன் சுற்றுப்புற காணிகள் என்பவற்றை துப்புரவு செய்யுமாறு இந்த 600 பொதுமக்களும் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளனர். இந்த கட்டாய பணிகள் மாலை வரை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விபரங்களுக்கு http://www.ajeevan.ch/content/view/1289/1/

  2. வெள்ளவத்தையில் ரயில் மோதியதில் பதுளையை சேர்ந்த தமிழ் யுவதி பலி [24 - March - 2008] டிட்டோ குகன் கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ரயிலில் மோதுண்டு தமிழ் யுவதியொருவர் பலியாகியுள்ளார். வெள்ளவத்தை ரயில் நிலையத்திலிருந்து மிக குறுகிய தூரத்திலேயே மாலை 3.18 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றிருப்பதாக ரயில் நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார். இளைஞர் ஒருவருடன் இந்த யுவதி கை கோர்த்தவாறு ரயில் பாதை வழியே நடந்து வந்து கொண்டிருந்த போதே பின்னால் வந்த ரயில் யுவதி மீது மோதியுள்ளது. சம்பவத்தின் போது யுவதி ரயில் பாதையிலும் இளைஞன் ரயில் பாதையை விட்டு சற்று வெளிப்புறமாகவும் இருவரும் கை கோர்த்த படி நடந்து வந்து கொண்டிருந்ததாக சம்பவத்தை நேர…

  3. மன்னாரில் நேற்று நடந்த மோதலில் 55 படையினர் பலியாகி 120 காயமடைந்ததாக புலிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் அரசு தரப்போ இரண்டு படையினர் உயிரிழந்ததாக அறிவித்திருந்தனர். புலிகள் தரப்பில் 52 பலியானதாக அறிவித்துள்ள அரசு புலிகளின் 11 உடலங்களையும் 7 துப்பாக்கிகளையும் கைப்பற்றியுள்ளதாகக் கூறி வருகிறது. எனின் அரசின் தகவல் படி சண்டை இன்னும் உயிலங்குளத்தை அண்டிய பகுதியிலேயே நடந்து கொண்டிருப்பது தெரிகிறது..! http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25072

  4. கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு போட்டியிடாது என அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான எஸ்.ஜெயானந்தமூர்த்தி அறிவித்திருக்கின்ற போதிலும், இவ்விடயத்தில் கூட்டமைப்பில் கருத்து முரண்பாடுகள் உருவாகியிருப்பதாகத் தெரியவருகின்றது. இந்தநிலையில் இத்தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பது தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ்க் கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டம் இன்று மாலை நடைபெறவிருக்கின்றது. இக்கூட்டத்திலேயே இத்தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக கூட்டமைப்பு எம்.பி.க்கள் மத்தியில் இரண்டு வேறுபாடான கருத்துக்கள் காணப்படுவதால் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட…

  5. கொழும்பிலிருந்து சென்ற கப்பல் கொல்கத்தா துறைமுகத்துடன் மோதியது [24 - March - 2008] கொழும்பு துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை மேற்கு வங்காளத் தலைநகர் கொல்கத்தா சென்ற கப்பலொன்று கொல்கத்தா துறைமுகத்தை மோதித் தகர்த்துள்ளது. இந்தக் கப்பல் தனது கட்டுப்பாட்டை இழந்த நிலையிலேயே துறைமுகத்துடன் மோதுண்டதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தால் எவருக்கும் எதுவித ஆபத்தும் ஏற்படாதபோதும் துறைமுகத்திற்கு பலத்த சேதமேற்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்திலிருந்து கொள்கலன்கள் மற்றும் கனரக கட்டுமானப் பொருட்களுடன் சென்ற கப்பலே இவ்வாறு துறைமுகத்துடன் மோதுண்டுள்ளது. கப்பலில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகவே கப்பல் கட்டுப்பாட்டை இழந்து சென்று …

    • 1 reply
    • 1.5k views
  6. திங்கள் 24-03-2008 15:56 மணி தமிழீழம் [மயூரன்] இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 13 அரச அதிகாரிகள் கைது ஸ்ரீலங்காவில் கடந்த இரண்டரை மாத காலப்பகுதியில் லஞ்ச ஊழல் மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 13 அரச அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக லஞ்ச ஊழல் மோசடியில் ஈடுபடுவதற்கு உடந்தையாக இருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் ஐந்து காவல்துறை உத்தியோகத்தர்கள், இரண்டு கிராம சேவை உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர், வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகாரி முதலியோர் கைதானவர்களில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை காவல்துறை திணைக்களத்திற்கு புதிதாக 40 ஜீப் வண்டிகளை கொள்வனவு செய்வது தொடர்பான விலை மனுக்கோரலை …

  7. வவுனியா பலாமேட்டையில் படையினரின் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு. வவுனியா பலாமோட்டைப் பகுதியில் நேற்று மாலை சிறீலங்காப்படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சி விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டு படையினர் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டுள்ளார்

  8. மன்னார் களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மிதிவெடிகளில் சிக்கி மூன்று சிறிலங்காப் படையினர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 758 views
  9. தமது எதிர்ப்பு நாடுகளுடன் இலங்கை உறவுகொள்வது குறித்து அமரிக்கா விசனம் அமரிக்க எதிர்ப்பு நாடுகளுடன் இலங்கை கொண்டுள்ள உறவுகள் குறித்து அமரிக்கா தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை அண்மைக்காலமாக சீனா மற்றும் ஈரான் ரஸ்யா ஆகிய நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்தி வருகிறது. இந்தநிலையில் இதற்கு தமது எதிர்ப்பை அமரிக்கா ராஜதந்திர மட்டத்தின் ஊடக இலங்கைக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரானிய ஜனாதிபதி மொஹமட் அஹமடிஜினாட் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு வருகைதத்தரவுள்ளார். இதன் போது அவர் உமாஓயா மின்சார திட்டம் உட்பட்ட ஈரான் உதவியளிக்கும் திட்டங்களை பார்வையிடவுள்ளார். இதற்கிடையில் சீனாவிடம் இருந்து இலங்கை ஒரு பில்லியன் டொலர்களை உ…

  10. தாயகக் கோட்பாட்டை சிதைக்கும் கிழக்குத் தேர்தல்கள் - சி.இதயச்சந்திரன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலிற்கான வேட்பு மனு, இந்த மாதம் 27ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 3 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. 2006ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தேர்தல் நடைபெறவுள்ளது. உள்ளூராட்சித் திருவிழா முடிவுற்ற கையோடு, மாகாணசபைத் தேர்தல் நாடகத்தை அரங்கேற்ற அரசாங்கம் காட்டும் அவசரத்திற்கு, இருவிதமான வியாக்கியானங்கள் முன்வைக்கப்படுகின்றன. இத்தேர்தல் மேற்கிலிருந்து நிதிபெறும் நோக்கமென ஒருசாராரும், இந்தியாவின் உறவினை இறுக்கமடையச் செய்வதற்கான நகர்வென்று இன்னொரு சாராரும் கணிப்பிடுகின்றனர். ஆனாலும், வடக்கு கிழக்கைப் பிரித்ததால், இந்திய இலங்கை ஒப…

  11. வடக்கில் முன்னெடுக்கபட்டகின்ற யுத்தம் தொடர்பான உண்மையான நிலைமைகள் மற்றும் யுத்த கள தகவல்களை தெற்கு மக்கள் தெரிந்து கொள்வதை அரசு தடுத்தது வருகின்றது. கண்ணுக்கெட்டிய தூரத்தல் இருப்பதாக தெரிவிக்கின்ற கிளிநொச்சியை பைப்பற்றி பிரபாகரனை அழிதொழிப்பதன் மூலமாக இந்த பிரச்சனைக்கு ஒரு போதும் தீர்வு காண முடியாது என்று ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான கோணல் ஜெய்லி பெர்னாண்டோ தெரிவித்தார். வடக்கில் நான்கு திசைகளிலும் நிலை கொண்டிருக்கின்ற படையினர் இராணுவகட்டுப்பாடற்ற பகுதிகளுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திவிட்டு பின்னர் தங்களது பழைய நிலைகளுக்கே திரும்பிவிடுகின்றனர். இவ்வாறான நோக்கமில்லாத யுத்தத்தின் மூலம் கிளிநொச்சியைக் கைப்பற்ற வேண்டுமாயின் இன்னும் 12 ஆண்டுகள் தேவைப்படும். நேற்று…

  12. பழ.நெடுமாறன், பெ.மணியரசன், பசுபதிபண்டியன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது தமிழர்களைப் படுகொலை செய்து வரும் சிங்களப் படைக்குத் துணைபோகும் இந்திய அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை 4.30 மணியளவில் சென்னை மெமோரியல் மண்டபம் முன் நடைபெற இருந்தது. முதலில் காவல்துறையினர் இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியளித்திருந்தனர். இன்று காலை அவ்வனுமதியை, சில சமூக விரோத சக்திகளும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதால், தடை விதிப்பதாய் கூறி, தடை விதிக்கப்பட்டது. சென்னை மெமோரியல் மண்டபம் முன் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது, தனித்தனிக் குழுக்களாய் பழ.நெடுமாறன், பெ.மணியரசன், பசுபதிபண்டியன் அவ்விடம் வந்து சேர்ந்தனர். அப்பொழுது, காவல்துறையினர் தடையை …

    • 20 replies
    • 3.6k views
  13. மன்னார் பஸ்நிலையத்தில் பொலிஸார் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் 3/24/2008 12:17:38 PM வீரகேசரி இணையம் - மன்னார் பஸ்நிலையத்தில் காலை 10.30 மணிமுதல் 12.00 மணிவரை பொலிஸார் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டனர். இதன்போது அப்பகுதியால் சென்ற பொதுமக்கள் அனைவரும் பாரிய சோதனைக்களுக்கு உட்படுத்தப்பட்டனர். இதன் போது 4 பேர் தடுத்துவைக்கப்பட்டு , அவர்களின் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் விடுதலைசெய்யப்பட்டனர்.இதன் காரணமாக மக்களின் நடமாட்டம் சற்று குறைவாக காணப்பட்டதாகவும் . அங்கும் சென்ற வாகனங்களும் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட.பின்னர் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக எமது மன்னார் செய்தியாளர் தெரிவித்தா…

  14. திருக்கோவிலில் கிளைமோர் கண்டெடுப்பு 3/24/2008 12:26:33 PM இணையத்தள நிருபர் - திருக்கோவில் பகுதியில் கிளைமோர்க் குண்டொன்றை விசேட அதிரடிப்படையினர் கண்டெடுத்துள்ளனர். விசேட அதிரடிப்படையினரின் வீதிச் சோதனைச் சாவடிக்கு சற்று தூரத்தில் இக் குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. 3 கிலோகிராம் நிறையுடைய இக் குண்டு சோதனைச் சாவடிக்கு அண்மித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் கார் ஒன்றில் செலுத்தியில் பொருத்தப்பட்டிருத்ததாக பொலிஸ் தரப்பு கூறுகிறது.

  15. மன்னாரில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரியளவிலான முன்னகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 55-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 120-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  16. இலங்கையர் ஒருவர் மலேஷியாவில் கொலை செய்யப்பட்டுள்ளார். 3/24/2008 10:26:37 AM வீரகேசரி இணையம் - இலங்கையர் ஒருவர் மலேஷியாவில் கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலைச்சம்பவம் மலேஷியாவின் கோலாலம்பூரில் உள்ள சந்துல் சந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவர் இருவருடன் வாய்தர்க்கத்தில் ஈடுப்பட்டதாலேயே இக்கொலை சம்பவம் இடம்பெற்றதாக மலேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

  17. அரசு கிழக்கில் இருந்து 10 அதிரடிப்படை முகாம்களை அகற்றியமையானது, பிள்ளையான் குழுவிற்கு கிழக்கை கையளிக்கும் முயற்சியின் முதலாவது கட்டம் என வடக்கு கிழக்கு சிங்கள சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன், கிழக்கில் இருந்து மேலும் 40 இராணுவ முகாம்களை அகற்றும முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் சுனில் அலுத்தகமகே தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைளின் மூலம் அரசு படையினரதும் பொலிஸாரினதும் தியாகங்களைக் காட்டிக் கொடுத்துள்ளதாக வடக்கு கிழக்கு சிங்கள சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தமது அமைப்பு விரைவில் அரசியல் எதிh நடவடிக்கைகளி ஈடுபடவுள்ளதாக தெரிவித்த அவர் ஜாதிக ஹெல உறுமைய போன்ற கட்சிகள் இது குறித்து மெனனம் காப்பது கவலையளிப்…

    • 0 replies
    • 1.7k views
  18. பாதுகாப்பு முக்கியஸ்தர்கள் இணைந்து கலந்துரையாடி எடுக்கபட்ட முடிவினை அடுத்தே கிழக்கிலுள்ள விசேட அதிரடிப் படையினரின் முகாம்களை இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் அமைக்கபட்டிருந்த விசேட அதிரடிப்படை முகாம்;களை அகற்றுமாறு யாருமே அழுத்தங்களைக்; கொடுக்கவில்லை. இந்த விடயத்தில் பிள்ளையான் குழுவின் அழுத்தம் இருப்பதாகக் கூறப்படுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும் அவர் சொன்னார். கொழும்பில் நேற்று இடம் பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் : சில கட்சிகள் கூறுவசது போல பிள்ளையான் குழுவின் அழுத்தத்தின் காரணமாகவே விசேட அதிரடிப் படையினரின…

    • 5 replies
    • 2.5k views
  19. வீரகேசரி நாளேடு - விடுதலைப் புலிகள் குறித்த கருத்துக்களில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் அருண்குமார் தெரிவித்தார். இதுகுறித்து டில்லியில் அருண்குமார் அளித்த பேட்டியில் கூறியிருப்பாதாவது; காங்கிரஸ் கட்சிக்கும் தி.மு.க வுக்கும் இடையே உள்ள உறவு பலமாகவும் உறுதியாகவும் உள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் கூட்டணியில் மாற்றம் செய்வதற்கான அவசியம் எதுவும் எழவில்லை. விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்துடன் காங்கிரஸ் நெருங்கி வருவதாக வெளியாகும் தகவல்களில் எந்த அடிப்படையும் இல்லை. விடுதலைப் புலிகள் பிரச்சனையில் தி.மு.கவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கருத்து வேறுபாடு எதுவும…

  20. முல்லைத்தீவு தாக்குதல் படையினரின் விநியோகத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது தமிழிழ விடுதலைப்புலிகளின் ஆழ்கடல் தாக்குதல் வலிமைகள் ஸ்ரீலங்காப்படையினருக்கு பாரிய ஆபத்தை கொண்டு வரலாம் என சண்டேடைம்ஸ் ஊடக இதழ் தெரிவித்துள்ளது. நேற்று அதிகாலை அவர்கள் முல்லைத்தீவு கடலில் நடத்திய ஸ்ரீலங்கா கடற்படையினரின் டோரா படகின் மீதான தாக்குதலின் பின்னரே இந்த ஆபத்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 14 கடற்படையினர் பலியானதாக தமிழிழ விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தனர் தமது தரப்பில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்ததாகவும் தமிழிழ விடுதலைப்புலிகள் அறிவி;த்திருந்தார்கள். எனினும் ஸ்ரீலங்கா கடற்படையினரின் படகு தாக்குதலுக்கு உள்ளான பின்னர் தேடுதலை நடத்தியவர்களின் தகவல்படி ஸ்ரீலங்…

    • 3 replies
    • 2.7k views
  21. மலேசியாவின் பெனாங் பிராந்திய பிரதிமுதல்வராக பேராசிரியர் ராமசாமி தெரிவாகியுள்ளார் - ஜெனீவாவில் நடைபெற்ற இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது புலிகளின் சார்பில் இடம்பெற்றிருந்தார் 2006 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் சார்பில் அரசியலமைப்பு விவகாரக் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் ராமசாமி மலேசிய பெனாங் பிராந்தியத்தில் பிரதி முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பெனாங் பிராந்தியம் மலேசியாவின் பொருளாதார நடுமையம் என அழைக்கப்படுகிறது. மலேசியாவில் மதிக்கப்படும் ஒரு அரசியல்வாதியான முன்னாள் பெனாங் பிராந்திய முதலமைச்சரான கோஹ் சூ கூனை அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் ராமசாமி தோற்கடித்தார். மல…

    • 3 replies
    • 1.3k views
  22. தமிழறிஞரும், சைவ சித்தாந்த பண்டிதரும், சிறந்த கணிதவியலாளரும், பஞ்சாங்க கணித விற்பன்னருமான கணபதிப்பிள்ளை சச்சிதானந்தம் தனது 87 ஆவது வயதில் காலமானார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1k views
  23. தமிழக மீனவர்களை தாக்குவது புலிகள்-இலங்கை மதுரை: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது விடுதலைப் புலிகள்தான். ஆனால், பழி ராணுவத்தின் மீது விழுகிறது என இலங்கை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஜெயராஜ் பெர்னாட்டோ புலே கூறினார். மதுரை வந்த அவர் புனித வெள்ளியை முன்னிட்டு தூய மரியன்னை தேவாயலத்தில் நடைபெற்ற சிறப்பு பிராத்தனையில் கலந்து கொண்டார். பின்பு நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்கி வருவதாக கூறுவது முற்றிலும் தவறான தகவல். தமிழக கடலோர எல்லை பகுதியில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது விடுதலைப் புலிகள்தான். ஆனால், பழியை இலங்கை ராணுவம் மீது போட்டு விடுகின்றனர். இலங்கையில் அமைதி திரும்புவதை புலிகள் விரும்பவில…

  24. 30 வருடங்களின் பின்னர் நாட்டில் மீண்டும் பட்டினி யுகம் - ரணில் குற்றச்சாட்டு 3/23/2008 7:05:42 PM வீரகேசரி நாளேடு - முன்னாள் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் ஆட்சியில் 1977 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பசி,பட்டினி,பஞ்ச யுகம் 30 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் மீண்டும் ஏற்பட்டுள்ளது என்று எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மக்கள் மரணித்தாலும் பரவாயில்லை ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிபீடம் ஏறிவிடக்கூடாது என்ற மனநிலையிலேயே ஜே.வி.பி இருக்கின்றது. இந்நிலையில் மக்களை பாதுகாப்பதற்காக மக்களை ஓரணியில் திரட்டி அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சி ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற…

    • 1 reply
    • 847 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.