ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142829 topics in this forum
-
கொழும்பில் மற்றொரு பயணிகள் பஸ்ஸில் வெடிகுண்டு ஏற்படுத்தவிருந்த கோரவிளைவு, அந்த பஸ்ஸின் சாரதியின் கவனத்தால் தவிர்க்கபட்டது. கொழும்பு மருதானை வழியாக சென்ற 138 ஆவது இலக்க பஸ்ஸில் இருந்த இந்த அநாமதேயப் பொதியைக் கண்டு எச்சரிக்கையடைந்த சாரதி அக் குண்டுப் பொதியை பஸ்ஸிலிருந்து வெளியே வீசி மனிதப் பேரவலம் ஒன்றைத் தவிர்த்தார் கொழும்பு, மருதானை, காமினி பஸ்தரிப்பிடத்திற்கு அருகில் அமைந்துள்ள முஸ்லிம் கலாசார நிலையத்திற்கு முன்னால் நேற்றுப் பிற்பகல் 2:30 மணியளவில் வீசப்பட்ட இந்தக் குண்டுப் பொதி பின்னர் குண்டு செயலிழக்கும் படைப்பிரிவால் செயலிழக்க வைக்கபட்டது. இது குறித்து கூறப்படுவதாவது : கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு வழமையாக லேக்ஹவுஸ் சுற்று வட்டத்தைத் தாண…
-
- 0 replies
- 1.7k views
-
-
விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களை கைதுசெய்யவதற்கு சட்டநிபுணர்களுடன் ஆராய்ந்து நடவடிக்கை - கருணாநிதி 1/30/2008 1:07:13 AM வீரகேசரி இணையம் - விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களை கைதுசெய்ய வேண்டும் என்று கோரப்படுகின்றது. அவ்வாறு கைதுசெய்ய சட்டத்தில் இடம் உள்ளதா என்பதை சட்ட நிபுணர்களுடன் ஆராய்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி கூறினார். தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்பது குற்றமாகக் கருதி நடவடிக்கை எடுக்கும் வகையில் வழக்கறிஞர் குழுவொன்றை அமைத்து அவர்கள் மூலம் ஆராய்ந்து இதை தடுப்பதற்கு சட்டம் கொண்டுவர அரசு தயாராக இருக்கின்றது என்றும் அவர் சொன்னார். தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் உறுப்பினரான பிற்றர்…
-
- 18 replies
- 2.5k views
-
-
யுத்த செய்திகளும் சிங்கள ஊடகங்களும் -நாரதர்- சமூகத்தில் யதார்த்தமானதொரு எடுத்துக்காட்டொன்று உண்டு. ஒரு நாயின் மீது கல் எறிந்தால் அக்கல் நாயின் எப்பாகத்தில் பட்டாலும் அது தன் காலை தூக்கிக்கொண்டுதான் ஓடும். அதேபோல் தான் இலங்கையில் எந்தவொரு வன்முறைச் சம்பவம் இடம்பெற்றாலும் அதனை விடுதலைப் புலிகள் மீது சுமத்திவிட்டு அரசாங்கம் அவ்வன் முறைகளிலிருந்து தப்பித்துக்கொள்வதாகும். அதேவேளை, இன்று சமாதானத்திற்கு ஆதரவாக எந்தவொரு செயற்பாடுகளுமே இலங்கைத் தீவில் காண்பதற்கில்லை. அவ்வாறு ஆதரவாக செயலாற்றுபவர்களும் குரலெழுப்புவர்களும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாளர்கள் எனவும் தேசத்துரோகிகள் என முத்திரை குத்தப்படுவதுடன் உயிராபத்தையும் விளைவிக்கப்படுகின்றன. சமாதானத்திற்கு ஆரவாக பெரு…
-
- 0 replies
- 954 views
-
-
பலாலி மீதான தாக்குதலுக்கு தகவல் எவ்வாறு கிடைத்தது? -விதுரன்- வன்னியிலும் யாழ். குடாநாட்டிலும் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. பாரிய படைநகர்வுகளென்பதை விட தினமும் சகல களமுனைகளிலும் சிறுசிறு மோதல்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன. இந்தச் சிறு மோதல்கள் உடனடியாக பாரிய படைநகர்வுகளாகும் சாத்தியங்கள் குறைவென்பதால் வன்னிக் களமுனையில் இவ்வாறான மோதல்கள் நீண்ட நாட்களுக்கு தொடரப்போகிறது. விடுதலைப்புலிகள் வசமிருந்து கிழக்கை விடுவித்துவிட்டதாகக் கூறப்பட்ட நாள் முதல் வடக்கில் பாரிய தாக்குதல்கள் ஆரம்பமாகின. இந்தத் தாக்குதல்கள் ஆரம்பமாகி ஒரு வருடம் பூர்த்தியடையப்போகிறது. ஆனால், வன்னியிலோ அல்லது யாழ். குடாநாட்டிலோ குறிப்பிடத்தக்களவுக்கு படைத்தரப்பால் எந்தவொரு வெற்றியையும் பெற முடியவில்லை. …
-
- 0 replies
- 909 views
-
-
பத்துக்கும் அதிக களமுணைகளில் புலிகளுக்கு வைக்கப்படும் பொறி 2/3/2008 9:46:09 AM வீரகேசரி வாரவெளியீடு - வன்னியை நோக்கிய படைநடவடிக்கைகள் நாளுக்கு நாள் தீவிரம் பெறத் தொடங்கியிருக்கின்றன. மணலாறு, வவுனியா, மன்னார் என்று தென்முனையில் மூன்று முக்கிய களங்களும் வடமுனையில் கிளாலி, முகமாலை, நாகர்கோவில் என்று அருகருகாக அமைந்த மூன்று முனைகளிலும் தினமும் மோதல்கள் இடம்பெறுகின்றன. வடமுனையில் 53,55ஆவது டிவிசன்களும் தென்முனையில் 57,58,59ஆவது டிவிசன்களும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கிய நகர்வுகளில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் வவுனியாவின் மேற்கு மற்றும் மன்னாரின் கிழக்குப் பகுதிகளில் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் 57ஆவது டிவிசன் மூன்று முனைகளில் நகர்வுகளில் ஈடுப…
-
- 12 replies
- 4.5k views
-
-
பயங்கரவாத அழிப்பும் வறுமை ஒழிப்புமே எம்முன்னுள்ள சவால்கள் சுதந்திரதின செய்தியில் ஜனாதிபதி மஹிந்த 2/3/2008 9:05:13 PM வீரகேசரி நாளேடு - பயங்கரவாதத்தை பூண்டோடு அழிப்பதும் வறுமையினை ஒழிப்பதுவுமே எம்முன்னுள்ள சவால்களாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 60 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 2500 வருடங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றையும் நாகரீகத்தையும் கொண்ட ஒரு நாட்டுக்கு 60 வருடங்கள் என்பது ஒரு சிறிய கால இடைவெளியாகும். இருந்தபோதிலும் இந்த 60 ஆவது ஆண்டு சுதந்திர வைபவமானது நாம் சுமார் 500 ஆண்டுகள் பின்னர் காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரத்தை…
-
- 4 replies
- 1.8k views
-
-
தம்புள்ளவ பேருந்து குண்டு வெடிப்பை அடுத்து படைகள் நடத்திய தேடுதல் வேட்டையில் அப்பாவி தமிழர்கள் 16 கை செய்யப் பட்டுள்ளனர். இவர்களை அணைவரும் அந்த தக்கதக்கு உடைந்தையானவர்கள் என குற்றம் சாடடப்பட்டு விசாரகைள் நடைபெற்ற வருகிறது. விhவான செய்தி தொடரும்... மேலும் படிக்க... http://www.kalakam.com/forum/viewtopic.php?t=235
-
- 0 replies
- 1.4k views
-
-
புலிகளை தடை செய்யுமா குண்டு வெடிப்புக்கள்..? தென்னிலங்கையை தொடராய் அதிர வைக்கும் தொடர் குண்டு வெடிப்புக்களை அடுத்து இலங்கை அரசு வுPடுதலைப் புலிகள் மீது தடையை விதிக்காலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. இது சாத்தியமாகும் பட்சத்தில் இலங்கை இதைவிட பாரிய அழிவுகளையும் பொருளாதார கட்டுமான சிதைவுக்கு உட்படலாம் எனவும் கூறப்படுகிறது. அவ்வாறு தடைவிதித்த பின்னர் புலிகள் தமது தாக்குதல்களை தீவிரப்படுத்துவர்கள் எனவும் அதன் தாக்கம் நாட்டை வறுமைக்குள் உள்ளாக்கம் எனவும் அவ்வாறான ஆரம்ப நிகழ்வுகளாகவே பொருளாதார மையங்கள் மீதானதும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீதும் நடாத்தப்படும் தாக்குதலாக அமைகிறதென கூறப்படுகிறது. இந்த தடை உத்தரவை நாளை இலங்னை ஜ…
-
- 1 reply
- 1.9k views
-
-
கயவர்களின் திட்டமிட்ட செயல்களில் எம் தேசம் எரிந்து நிற்க. எம்மவர்களை பட்டினிசாவிலும் பெரும் மனித இடபெயர்விற்குள்லும் தள்ளி ஒட்டுகுழுக்களின் துணையோட ஆயுதமுனைக் கொலைகளையும் கடத்தல்களையும் அன்றாடம் நாடத்திகொன்டு தம் நாட்டின் சுதந்திரத்தை கொண்டாட நினைக்கும் பேரினவாதிகளின் போலியான முகத்திரையை கிழித்தெறியவும் எம்மக்களின் உண்மை நிலையை இவ் உலகிற்கு எடுத்தியம்பும் வகையில் பெப்ரவரி மாதம் 4ம் திகதி காலை 11 மணியிலிருந்து மதியம் 3மணிவரை இங்கிலாந்து பிரதமரின உத்தியபூர்வ வாசல்தலமான 10 Downing Street இல் ஒழுங்கு செய்யப்பட்ட கண்டன ஒன்று கூடலில் கலந்து எம்கண்டனத்தை தெரிவிக்க அனைத்து தாயக உறவுகளையும் அன்புடன் அழைக்கின்றார்கள் ஏற்பாட்டு குழுவினர்களாகிய ஐக்கிய இராட்சிய தமிழ் இளையோர் அமைப்பினர…
-
- 0 replies
- 903 views
-
-
இலங்கையின் கலாசார முக்கோண வலயம், இயற்கை பூங்காக்கள் உள்ளி ட்ட முக்கிய இடங்களுக்கு செல்ல வேண்டாம் என தனது பிரஜைகளை அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை அடுத்து அவுஸ்திரேலிய வெளிவிவகார திணைக்களம் தனது பிரஜைகளுக்கு விடுத்துள்ள புதிய பயண அறிவுறுத்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் மோதல்கள் மற்றும் வன்முறைகளால் மோசடைந்து வரும் பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற் கொண்டு இலங்கைக்கான பயணங்களை மீள் பரிசீலனை செய்யுமாறு அதில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய வெளிவிவகார திணைக்களம் இலங்கைக்கான பயணங்கள் தொடர்பில் விடுத்துள்ள புதிய பயண அறிவுறுத்தலில் மேலும் தெரிவிக்கப்பட்…
-
- 0 replies
- 1k views
-
-
சுதந்திர வாழ்வென்பது நாட்டு மக்கள் அனைவரும் தமது ஜனநாயக உரிமைகளைச் சரிசமனாகப் பெற்று அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்தலேயாகும். இச் சுதந்திரமானது தமிழ் மக்களைக் கைவிட்டுப் போனநிலையில், எதிர் வரும் பெப்ருவரி நான்காந் திகதி சிறீலங்கா அரசானது, தனது அறுபதாவது சுதந்திர விழாவினை மிகவும் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது. http://www.yarl.com/articles/node/962
-
- 0 replies
- 906 views
-
-
தொலைபேசி குறும் தவகல் mobile phone sms இன்று நிறுத்தம் 6am to 12pm ?
-
- 0 replies
- 1.7k views
-
-
சிறிலங்காவின் 60 அவது சுதந்திர நாள் கொண்டாட்டங்களின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வான்படை மூலம் தாக்குதல்களை மேற்கொள்ளும் சாத்தியங்கள் இருப்பதாக சிறிலங்கா படைப் புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 10 replies
- 2.8k views
-
-
இந்திய வங்கி ஒன்றிடம் இருந்து தேசிய சேமிப்பு வங்கியின் ஊடாக சிறிலங்கா அரசாங்கம் மேலும் 50 மில்லியன் டொலர்களை கடனாகப் பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
கொழும்பு தெஹிவலையி மிருகக் காட்சிசாலையினுள் சற்று முன் குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டுள்ளதாக கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். சேத விபரங்கள் இன்னமும் அறியப்படவில்லை. தற்போது கிடைத்துள்ள செய்திகளின் படி, கைகுண்டொன்றே வெடித்தாகவும் இதனால் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் இராணுவப் பேச்சாளன் தெரிவித்துள்ளார். ஜானா
-
- 11 replies
- 3.5k views
-
-
எனது பிரித்தானியப் பயணத்திற்கான எல்லா உதவிகளையும் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே வழங்கியிருந்ததாக துணை இராணுவக் குழுவின் முன்னாள் தலைவரான கருணா தெரிவித்துள்ளார் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே லீடர்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.7k views
-
-
சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு கொழும்பில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மேலதிக காவல்துறையினரும், படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1k views
-
-
சிறிலங்காவில் உள்ள பிரித்தானியத் தூதரகத்தின் விசாப் பிரிவு எதிர்வரும் ஏப்பிரல் மாதத்தில் இருந்து மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.9k views
-
-
விமானக்குண்டு வீச்சுக்களும் உளவியல் தாக்கங்களும் 2/3/2008 9:38:54 AM வீரகேசரி வாரவெளியீடு - இலங்கை விமானப்படை 1986 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இத்தாலியத் தயாரிப்பான "சியாமாசெற்றி' குண்டுவீச்சு விமானங்களைத் தாக்குதலுக்குப் பயன்படுத் தத் தொடங்கியது. கடந்த 22 வருடங்களாக மேற்கொள்ளப்படும் விமானக்குண்டு வீச்சுக்களின் மூலம் உளவியல் ரீதியாகப் புலிகளையும் தமிழ் மக்களையும் பலவீனப்படுத்தவே விமானப்படை முயன்றிருக்கிறது. தற்போது புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பெருநிலப்பரப்பில் இலங்கை விமானப்படை நடத்திவரும் தொடர்ச்சியான விமானத் தாக்குதல்களும் அதுதொடர்பாக அரசதரப்பில் இருந்து வெளியிடப்படும் செய்திகளும் உளவியல் போர் நடவடிக்கையாகவே கருதத்தக்கவை. இலங்கை விமானப்படையிடம் தற…
-
- 0 replies
- 1.5k views
-
-
கொட்டாஞ்சேனையில் தமிழ் குடும்பஸ்தர் கடத்தல் கறுப்பு காரில் வந்தோர் கைவரிசை 2/1/2008 10:21:20 PM வீரகேசரி இணையம் - கொட்டாஞ்சேனை, சங்கமித்த மாவத்தையில் வைத்து தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் கறுப்பு நிறகாரில் வந்த நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். நேற்றுக் காலை கடத்தப்பட்ட இவர் தொடர்பில் இன்று இரவுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை என கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர். கோப்பாய் வடக்கு பூதல்மடத்தை பிறப்பிடமாகக் கொண்டவரும் 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கொழும்பில் வசிப்பவருமான ஒரு பிள்ளையின் தந்தையான மாணிக்கம் விக்னேஸ்வரன் (வயது 37) என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டவராவார். இக்கடத்தல் குறித்து பிரதி அமைச்சர் பெ.இராதா கிருஷ்ணனிடமும் முறையிடப்பட்டுள்ளது. இத…
-
- 1 reply
- 965 views
-
-
வடக்கு இடைக்கால நிர்வாக சபைக்கு நியமிக்கப்படவுள்ள மூன்று தமிழ் உறுப்பினர்களில் இரு உறுப்பினர்களை தமது கட்சியிலிருந்து நியமிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தை ஈ.பி.டி.பி. கேட்டிருப்பதாக தெரிய வருகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 603 views
-
-
சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர நாள் கொண்டாட்டம் நாளை காலை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் காலிமுகத்திடலில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 954 views
-
-
வன்னிமீது பொருளாதார தடையை இறுக்கும் சிறிலங்கா அரசாங்கம். 02.02.2008 / நிருபர் எல்லாளன் கிளிநொச்சி ? முல்லைத்தீவு மாவட்டங்கள் உட்பட விடுதலைப்புலிகளின் நிர்வாகப் பகுதிகளான மன்னார் வவுனியா மாவட்டப்பகுதிகளுக்கான அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தடைகளைபோட்டுவருகிறது. ஏற்கனவே வன்னிமீது பாரிய பொருளாதார தடைகளை விதித்துள்ள அரசாங்கம் தற்போது பல கட்டுப்பாடுகளைப் போட்டுள்ளது. இதனால் உணவுப்பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் வந்து சேராமல் மக்கள் சொல்லொணா கஸ்ரங்களை அனுபவிக்கின்றனர். முpக நீண்ட அவலத்தை சுமந்துள்ள மக்கள் இதனால் பட்டினிச்சாவை எதிர்கொள்ளநேரிடும் என்று மனிதஉரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்திற்கு உணவுஅல…
-
- 3 replies
- 1.9k views
-
-
சிறிலங்காவின் தம்புள்ளப் பகுதியில் இன்று காலை தனியார் பேரூந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 13பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக தகவல்கள் இல்லை.
-
- 28 replies
- 6.5k views
-
-
மன்னாரில் எண்ணெய் அகழ்வுக்காக மூன்று நிறுவனங்களிடமிருந்து கேள்வி மனு [saturday February 02 2008 09:49:25 AM GMT] [யாழ் வாணன்] மன்னார் வடிநிலப்பகுதியில் மூன்று இடங்களில் எண்ணெய் அகழ்வு தொடர்பில் கோரப்பட்ட கேள்வி மனுவுக்கு மூன்று நிறுவனங்களிடமிருந்து ஆறு கேள்வி மனுப்பத்திரங்களைப் பெற்றிருப்பதாக பெற்றோலிய மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எமக்குக் கிடைக்கப் பெற்ற ஆறு கேள்வி மனுப்பத்திரத்தையும் கரீன் இந்தியா, ஓ.என்.ஜி.சி. விதேன், நிக்கோ ரிசோர்ஸ் (சைப்ரஸ்) ஆகிய மூன்று நிறுவனங்கள் அனுப்பியுள்ளதாக அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்துள்ளார். இந்த மூன்று இடங்களில் முதலாவதுக்கு மேற்படி மூன்று நிறுவனங்களும் இரண்டாவது இடத்திற்க…
-
- 1 reply
- 1.1k views
-