ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
இலங்கை மத்திய வங்கி இவ்வருடம் சுமார் 41.7 பில்லியன் ரூபா நாணயத்தாள்களை புதிதாக அச்சிட்டு பாவனைக்கு விடவுள்ளது. கடந்த வருடம் மத்திய வங்கி பொருளாதாரத்திற்கென 24.6 பில்லியன் ரூபா நாணயத்தாள்களை அச்சிட்டு வெளியிட்டிருந்தது. கடந்த வருடம் 27.7 பில்லியன் ரூபாவுக்கான நாணயத் தாள்களை அச்சிட திட்டமிடப்பட்டிருந்த போதும் குறைவாகவே அச்சிடப்படடிருந்தது. இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலப் பகுதியில் மாத்திரம் 16.9 பில்லியன் ரூபா நாணயத்தாளகளை புதிதாக அச்சிட்டு வெளியிடுவதற்கு மத்திய வங்கி திட்டமிட்டிருந்தது. புதிதாக அச்சிடும் பணத்தை குறிப்பிட்ட இலக்க மட்டத்திற்கு அதிகமாகச் சென்று விடாதவாறு நடைமுறைப்படுத்த மத்திய வங்கி நடவடிக்கை பலவற்றை மேற்கொண்டுள்ளது. …
-
- 12 replies
- 1.7k views
-
-
சரத் பொன்சேகா இந்தியாவுக்கு அவசர விஜயம். 01.03.2008 / நிருபர் சங்கிலியன் சிறிலங்காப் படைத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா அவசர விஜயமாக நாளை இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். ஒருவார காலம் அங்கு தங்கியிருக்கும் அவர் சிறிலங்கா இந்திய இராணுவ ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து இந்திய உயர் அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்துவார். சிறிலங்கா இராணுவத் தளபதி மிக உயர்மட்ட இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தொடக்கம் சந்தித்துப் பேசுவார் என்றும் அதனைத் தொடர்ந்து முக்கிய விடயங்கள் குறித்து பல தரப்பினருடனும் கலந்துரையாடி இந்தியாவின் இராணுவ உதவியையும் ஒத்துழைப்பையும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள், வழிமுறைகளை ஆராய்வார் என்றும் பாதுகாப்பு வட்டாரங…
-
- 32 replies
- 3.9k views
-
-
இலங்கையில் மனித உரிமைகள் கொள்கைகளுக்கு அமைவாக கடமையாற்றுவதை புறந்தள்ளி, சமூக ஒடுக்குமுறை பின்பற்றப்படுவதாக உயர் நீதிமன்ற நீதவான் சிறியானி திலகவர்தன தெரிவித்துள்ளார். சிறுபான்மையினத்தவரின் தேவைகளை புரிந்து கொண்டு நடப்பது பெரும்பான்மை சிங்கள மக்களின் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு சமூகம் ஒதுக்கப்பட்டு இழிவு படுத்தப்பட்டால் சரியானதோ அல்லது பிழையான வழியிலோ சமூகம் தங்களை இழிவுபடுத்தியுள்ளதாக கருதுவர் எனவும், இதனால் பெரும்பான்மை மக்கள் சம அந்தஸ்துடன் அனைவரையும் நோக்கக்கூடிய பக்குவமுடையவர்களாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை புற்று நோய் சங்கத்தின் 60 விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜா…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐ.நாவின் மனித உரிமைகள் சபையின் 7ஆவது கூடத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பம் 3/3/2008 11:33:55 AM வீரகேசரி இணையம் - ஜெனீவாவில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 7வது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முன்வைக்கப்படவிருக்கும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கத்தின் உயர்மட்டக்குழு எதிர்க்கவுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் பங்கு பற்றுவதற்காக இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழு ஜெனீவா சென்றுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பொதுமக்கள் கடத்தப்படுதல், அச்சுறுத்தப்படுதல், கைதுசெய்யப்படுதல் போன்ற குற்றச்சாட்டுக்களை இந்த அரசாங்கக் குழு ஐ.நா. மனித உரிம…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபைக் குழுவான யுஎன்எச்சிஆர் இலங்கையில் தனது செயற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 648 views
-
-
தள்ளாடியை நோக்கிப் புலிகள் சனி இரவு கடும் ஷெல் தாக்குதல் [Monday March 03 2008 06:48:22 AM GMT] [யாழினி] மன்னார், தள்ளாடிப் படைமுகாம் மற்றும் முருங்கன் பொலிஸ் காவலரண் ஆகியவற்றின்மீது நேற்றுமுன்தினம் இரவு 9.15 மணியிலிருந்து விடுதலைப் புலிகள், கடும் ஷெல் தாக்குதல்களை நடத்தினர். மன்னார், மாந்தை தோப்புப் பகுதியிலிருந்தே இந்தத் தாக்குதல்களை அவர்கள் மேற்கொண்டனர் என்று கூறப்படுகின்றது. இந்தத் தாக்குதல்களை அடுத்து நேற்றுக்காலை 7.15 மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரை தலைமன்னார் மதவாச்சி இடையிலான போக்குவரத்துகள் முற்றாகத் தடைப்பட்டிருந்தன. இதேசமயம், மன்னார் மூர் வீதி மற்றும் மன்னார் பொதுவைத்தியசாலைப் பிரதான வீதி ஆகிய இடங்களில் படையினர் மற்றும் பொலிஸா…
-
- 1 reply
- 2.4k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்திற்கான படைத்துறை உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் பின்னடித்து வருகையில் பெருமளவான உதவிகளை வழங்குவதற்கு ரஷ்யா முன்வந்துள்ளதாக ரஷ்ய தூதரகத்தின் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 43 replies
- 4k views
-
-
நாட்டில் எந்த நிலைமை தோன்றினாலும் நான் அனைத்துலக சமூகத்திடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தி செல்லப்போவதில்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 16 replies
- 2.2k views
-
-
விடுதலைப் புலிகளின் முதன்மை உத்திகள் -வேல்சிலிருந்து அருஸ்- மன்னார் வடக்கு, வவுனியாவின் தென்மேற்கு, மணலாற்றின் கொக்குத்தொடுவாய் கரையோரம் ஆகிய பகுதிகளில் மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. அரசு தனது படை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்ற அதேசமயம் படை அதிகரிகள் போர் தொடர்பாக தெரிவித்து வரும் கருத்துக்கள் மற்றும் கால எல்லைகள் தெடர்பான அறிவித்தல்களின் அழுத்தம் குறைந்து வருகின்றது. அண்மையில் வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் ஒருகால அவகாசத்திற்குள் தற்போது நடைபெற்று வரும் போருக்கு முடிவைக் கண்டுவிட முடியாது என இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளது அனைத்துலக மட்டத்தில் ஆச்சாரியங்களை தோற்றுவித்துள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவன…
-
- 2 replies
- 3.4k views
-
-
யாழ் மாவட்ட மொத்த சனத்தொகையில் 20 வருடங்களில் 30 சதவீத வீழ்ச்சி [Monday March 03 2008 02:29:21 PM GMT] [யாழ் வாணன்] இலங்கையில் உள்ள தமிழ் மாவட்டங்களில் கடந்த இருபது வருடங்களில், யாழ். மாவட்டத்தில் தான் மொத்த குடிப்பரப்பில் முப்பது சதவீதமான வீழ்ச்சி காணப்படுவதாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார். 1981 இல் யாழ். மாவட்டத்தில் எடுக்கப்பட்ட குடிசன மதிப்பீட்டில் மக்கள் தொகை 7,39,798 ஆக இருந்ததாகவும் 2001 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மக்கள் குடிப்பரம்பல் 4,90,621 ஆகக் குறைந்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளார். பல்வேறு அரசியல் நெருக்கடிகளாலும் யுத்தச் சூழ்நிலைகளாலும் இம் மாவட்ட மக்களில் பெரும் எண்ணிக…
-
- 1 reply
- 1.6k views
-
-
திங்கள் 03-03-2008 21:32 மணி தமிழீழம் [மயூரன்] பண்டாநாயக்கா வானூர்தி நிலையத்தில் சுவீடன் குடியுரிமை பெற்றவர் கைது பண்டாரநாயக்கா வானூர்தி நிலையத்தில் வைத்து சுவீடன் குடியுரிமை பெற்ற நபர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்திற்கு வந்த இவரிடம் ஆயுதங்கள் தொடர்பிலான கையேட்டுப் புத்தகம் (weapons catalogues) வைத்திருந்ததை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.6k views
-
-
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய இராணுவத்தினரின் நடவடிக்கைகளால் சாதாரண மக்கள் பாதிகப்படுவது குறித்து சுவிற்சர்லாந்தின் வெளிநாட்டு அமைச்சர் மிஸ்ஸெலின் கால்மி ரே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளை ஸ்தாபனத்திடம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதேவேளை பர்மா இலங்கைத்தீவு ஆகியவற்றின் நிலைமைகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளை நிறுவனத்திடம் கண்டனம் செய்துள்ளார். இஸ்ரேலிய இராணுவத்தினரின் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தபடவேண்டும் என்று சுவிற்சர்லாந்து கோரியுள்ளது. இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளால் குழந்தைகள் உட்பட சாதாரண மக்கள் பாதிக்கபடுவதாக சுவிஸ் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் பலஸ்தீனிய ஏவுகணைத்தாக்குதலையும் திருமதி கால்மி ரே கண்டித்துள்ளார். மனித உரிமைகளை மீறும் இஸ்…
-
- 0 replies
- 1.7k views
-
-
திங்கள் 03-03-2008 16:41 மணி தமிழீழம் [நிலாமகன்] அனைத்து கட்சி குழுவில் பிள்ளையான் குழுவை இணைக்க மகிந்த முடிவு சிறீலங்கா துணை இராணுவக் குழுவான பிள்ளையான் குழுவை அனைத்துக்கட்சி குழுவில் மகிந்த ராஜபக்ச இணைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான முடிவினை சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச எடுத்துள்ளதாக அரச அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அனைத்து கட்சி குழுவில் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மட்டுமே அங்கம் வகிக்கும் நிலையில் பிள்ளையான் குழுவை மகிந்த ராஜபக்ச இணைத்துக்கொண்டுள்ளார். மகிந்த ராஜபக்சவின் இந்த முடிவினால் பாராளுமன்றில் பிரசன்னமாகாத கட்சிகளும் அனைத்து கட்சி குழுவில் இணைந்து கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டால் அது பல சி…
-
- 2 replies
- 1.4k views
-
-
திங்கள் 03-03-2008 19:47 மணி தமிழீழம் [மயூரன்] ஒட்டுசுட்டானில் வான்வழித் தாக்குதல்கள் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறீலங்கா வான்படையினர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இன்று திங்கட்கிழமை மதியம் 12.45 மணியளவில் ஒட்டுசுட்டான் குளமுறிப்பு பகுதியில் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தியுள்ளன. குண்டு வீச்சில் ஏற்பட்ட சேதாரங்கள் இதுவரை வெளியாகவில்லை http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.4k views
-
-
மணலாறு கொக்குத்தொடுவாயில் மோதல்கள்: 2 படையினர் பலி! மேலும் 10 பேர் காயம் மணலாறு பகுதியில் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை மணலாறு கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் மாலை 3.30 மணியளவில் இப்பகுதியில் கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன. மோதலின் போது இரு படையினர் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் 10 படையினர் காயங்களுக்கு உள்ளாகினர் என சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடாக தகவல் மையம் தெரிவித்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 0 replies
- 758 views
-
-
கொழும்பு துறைமுக அபிவிருத்தியில் இந்திய பாதுகாப்புக்கு முன்னுரிமை [03 - March - 2008] * சீனச்சார்பு கம்பனியின் கேள்விமனு நிராகரிப்பு கொழும்புத் துறைமுகத்தில் புதிய கொள்கலன் இறங்குதுறையை நிர்மாணிப்பதற்கான கேள்வி மனுக் கோரலில் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான விடயம் சர்ச்சைக்குரிய விவகாரமாக உருவெடுத்திருக்கிறது. ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட கம்பனியான ஹட்கிசன் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலென இலங்கையின் ஊடகத்தில் சிறிய அளவிலான பிரசாரத்தை குறிப்பிட்ட ஒரு சாரார் மேற்கொண்டுள்ளனர். இந்தப் பிரசாரம் வெற்றி கண்டிருப்பதன் அடையாளமாக இலங்கை அரசாங்கம் முன்னர் கோரியிருந்த கேள்வி மனுக் கோரலை இரத்துச் செய்து வி…
-
- 1 reply
- 907 views
-
-
ஈழத் தமிழர்களுக்காக அழுதால் கூட குற்றம்- ராமதாஸ் திங்கள்கிழமை, மார்ச் 3, 2008 சென்னை: ஈழத் தமிழர்களுகாக அழுதால் கூட குற்றம் என்கிறது ஊடகம் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் பேரியக்கத்தின் தொடக்க விழாவில் அவர் பேசியதாவது, பணியாளர்கள் வைத்திருப்பது சங்கம், இயக்கம் என்று தான் இருக்கும். ஆனால் நீங்கள் பேரியக்கம் என்று வைத்துள்ளீர்கள். அரசு பணியாளர்கள், சங்கம்- இயக்கம் என்று ஆரம்பித்தாலும், அதை இரண்டாக்கத்தான் பார்ப்பார்கள். அதுபோல் இல்லாமல் அரசு செய்யும் தவறுகளை தட்டிக் கேட்கின்ற போராடும் சங்கமாக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். உங்களுக்கு பாமக, விடுதலைச் சிறுத்தைகளின் ஆதரவு என்றும் உண்டு. இந்த பேரியக்…
-
- 1 reply
- 1.6k views
-
-
அவுஸ்திரேலியா சிட்னியில் "மாமனிதர்" தில்லை ஜெயக்குமார் நினைவான சுற்றுக் கிண்ணத்திற்காக தமிழர் வரலாறு, பண்பான்மை, வாழ்வு, இறைமை பற்றிய புதிர்ப்போட்டி நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 798 views
-
-
சிறிலங்காவின் தென்பகுதியான மொனராகலைப் பகுதியில் முச்சக்கர வண்டியுடன் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக் கிழமை கடத்தப்பட்டுள்ளார். மொனராகலைப் பகுதியின் நக்கலை தோட்டத்தை சேர்ந்த 28 வயதுடைய எஸ். புண்ணியமூர்த்தி என்பவரே கடத்தப்பட்டவராவார். இது சம்பந்தமாக ஊவா மாகாண சபையின் மலையக மக்கள் முன்னணியின் மாகாணப் பொறுப்பாளர் அ.அரவிந்குமாரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதும், அவர் மொனராகலை மாவட்ட காவல்துறை அதிபர் எட்சன் குணதிலக்கவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். இதுபற்றி கூறப்படுவதாவது, மொனராகலையிலிருந்து புத்தலைக்கு குறிப்பிட்ட தமிழ் இளைஞர் முச்சக்கரவண்டியைச் செலுத்தி செல்லும் வேளையில் ஓரம்புவ என்ற இடத்தில் நிறுத்தப்பட்டு, இவ் இளைஞர் கடத்தப்பட்டுள்ளார். ஓரம்புவ என்ற காட்டுப…
-
- 0 replies
- 980 views
-
-
வீரகேசரி நாளேடு - விடுதலைப்புலிகள் அமைப்பிற்காக நிதி சேகரிக்கும் தொண்டு நிறுவனங்களை தடை செய்ய வேண்டுமென பிரித்தானிய அரசாங்கத்தை இலங்கைகோரியுள்ளது. புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடை செய்துள்ள பிரித்தானியா, அவ்வமைப்புக்காக நிதி சேகரிப்பில் ஈடுபடும் அமைப்புக்களையும் தடைசெய்ய வேண்டுமென லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பில லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளதாவது: பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புக்கள் நிதி சேகரிப்பில் ஈடுபடுகின்றன. இந்த நிதி அரசாங்கத்துக்கு எதிரான போர் மற்றம் மக்கள் மீதான வன்முறைகளும் பயன்படுத்தப்படுகின்றது. இதேவேளை, தமிழ் அமைப்பினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலாசார நிகழ்ச்சி த…
-
- 1 reply
- 908 views
-
-
இரத்மலானை விமான நிலைய பகுதியில் வெடித்த அமுக்க வெடியினால் பதற்றம் [03 - March - 2008] -டிட்டோ குகன்- இரத்மலானை விமானப்படைத்தளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை அமுக்க வெடியொன்று வெடித்ததனால் அப்பகுதியில் சிறிது பதற்றம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. காலை 6.35 மணியளவிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானப் படைத்தளத்தை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு வேலிகளுக்கு அண்மையில் பாதுகாப்புக் காரணம் கருதி சுற்றிவரப் புதைக்கப்பட்டிருக்கும் அமுக்க வெடியொன்றே வெடித்திருக்கிறது. இந்தச் சம்பவத்தின்போது எழுந்த சத்தம் பல பகுதிகளுக்கும் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் சிறிது நேரம் பதற்றம் நிலவியதாகவும் தெரிவிக்கப்பட்டது. http://www.th…
-
- 1 reply
- 1.6k views
-
-
இலங்கையில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள சாக் நாடுகளின் 15 வது மாநாட்டிற்கு முன்னர் வடக்கு கிழக்கு பிரச்சனைகளுக்கான தீர்வை முன்வைத்து செயல்படுத்துமாறு இந்தியா இலங்கை அரசை கோரியிருப்பதாக தூதுவராலய வட்டாரம் சுட்டிக் காட்டியுள்ளது. 15 வது சாக் மாநாடு மாலைத்தீவில் இம் முறை நடைபெறவிருந்த போதும் மஹிந்தவின் வேண்டுகோளுக்கிணங்க எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில் கண்டி மாநகரில் மாநாட்டை நடத்த அனுமதி வழங்கபட்டு ஏற்பாடுகளும் செய்யபட்டு வருகின்றன. இம் மாநாட்டிற்கு முன்னதாகவே வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பதற்கு தீர்வு யோசனைகளை சர்வ கட்சி முன் வைத்துள்ளது. அதனை மாநாட்டிற்கு முன்னர் நடைமுறைப்படுத்துமாறு இந்தி அரசு வலியுறுத்தியுள்ளது. இலங்கை இந்தியா அரசுகள் கை…
-
- 7 replies
- 3.1k views
-
-
வீரகேசரி நாளேடு - திருச்சி: இலங்கை தமிழர்களுக்கு பொருட்கள் அனுப்புவதற்காக அனைத்து கட்சிகளையும் திரட்டி போராட்டம் நடத்துவோம் என பழ. நெடுமாறன் கூறினார். தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் மேலும் தெரிவித்ததாவது: அகிம்சைவாதியான மகாத்மா காந்தியை தேசத்தந்தையாக ஏற்றுக்கொண்ட நம் நாட்டில் இராணுவ செலவுக்கு ஆண்டுக்கு ஆண்டு நிதி ஒதுக்குவதை அதிகரித்து கொண்டே போவது தவறான முன் உதாரணம். இந்தப் பணத்தை மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்கு பயன்படுத்தி மற்ற நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியாக இந்தியா விளங்க வேண்டும். நதிநீர் இணைப்புக்கு முன்பு ஏற்கனவே இருக்கும் கால்வாய்கள், குளங்கள் மற்றும் ஏரிகளை தூர்வாரி பராமரித்தல் வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலமாக அனுப்ப…
-
- 0 replies
- 908 views
-
-
நான்காம் கட்ட யுத்தம் ஆரம்பித்து இன்று சிறீ லங்கா முழுவதுமான ஒரு யுத்தம் நடை பெறுகின்ற இந்த வேளையில் சிறீ லங்கா அரசானது ஒரு தந்திரோபாயமான உளவியில் ரீதியான ஒரு போரை புலம் பெயர் தமிழ் மக்கள் பக்கம் முடக்கிவிட்டுள்ளது. கிழக்கு மீட்கப்பட்டு விட்டது, வடக்கில் இராணுவம் வெற்றியை நோக்கி நடைபோடுகிறது என்ற பாணியில் தனது உளவியில் ரீதியான ஒரு பிரச்சார யுத்தத்தை தமக்கு ஆதரவான தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்கள் ஊடாக நடாத்தி வருகிறது. புலிகளின் தலைவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார், பொட்டம்மானுக்கு இருதய வருத்தம், புலிகளுக்குள் மோதல், புலிகள் பலவீனமடைந்து விட்டனர் என்று தினமும் தொடர்ச்சியாக சிறீ லங்கா அரசின் உளவுப்பிரிவு மிகவும் கட்சிதமாக தனது பரப்புரையை செய்து வருகிறது. இன்று புலம் பெயர்…
-
- 22 replies
- 3k views
-
-
"சார்க்' மாநாட்டுக்கு மன்மோகன் சிங்கை அழைத்து வருவதில் இலங்கை அரசு தீவிரம் ரோஹித போகொல்லாகம புதுடில்லியில் கடும் முயற்சி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் கண்டியில் நடைபெறவிருக்கும் தென்னாசிய பிராந்திய ஒத்துழைப்பு (சார்க்) மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைக் கலந்துகொள்ளச் செய்வதில் கொழும்பு அரசு பகீரதப் பிரயத்தன முயற்சி எடுத்துவருகின்றது எனத் தெரிகின்றது. இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் தாமே நேரடியாகக் கலந்துகொள்வதற்கு இணங்கினார் என்ற பதிலுடன் வருமாறு பணித்து, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதுடில்லிக்கு அனுப்பி வைத்திருக்கின்றார் என்றும் தெரியவருகின்றது. இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தை கொழும்பு அரசு கையாளு…
-
- 0 replies
- 796 views
-