Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2,000 ரூபா நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுமாறு வாசுதேவ நாணயக்கார முன்மொழிவு 2000 ரூபா நோட்டுக்களை நிதி அமைப்பில் இருந்து வாபஸ் பெறப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் , பல்வேறு வரிகள் அதிகரிக்கப்பட்ட போதிலும், நாட்டில் “கறுப்புப் பண” சந்தை செழித்து வருகிறது. ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவது குறித்த அறிவிப்பு வெளியானால், “கறுப்புப் பணம்” அம்பலமாகும் என்றார். ஊழலை ஒழிப்பதற்கு இந்த நடவடிக்கை அவசியமானது எனவும், இது தொழிலாளர் வர்க்கத்தின் சுமையையும் குறைக்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். https://thinakkural.lk/article/241760

  2. சுங்கத்துறையிடம் உள்ள புற்றுநோய் வைத்தியசாலை உபகரணங்களை விடுவிக்க உத்தரவு இலங்கை சுங்கத்தின் அனுமதியின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த புற்றுநோய் வைத்தியசாலையில் இயந்திரம் பழுதுபார்ப்பதற்காக இறக்குமதி செய்யப்பட்ட உபகரணங்களை உடனடியாக விடுவிக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உத்தரவிட்டுள்ளார். சரக்குகளை இறக்குமதி செய்த தனியார் நிறுவனத்தினால் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே உபகரணங்களை நிறுத்தி வைத்துள்ளதாகவும், இலங்கை சுங்கத்தினால் ஏற்பட்ட தாமதத்தினால் அல்ல எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்கூட்டியே அறிவிக்கப்பட்டால், முன்னுரிமை அடிப்படையில் அத்தகைய உபகரணங்களை பெற்றுக்கொள்ள முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். புற்று…

  3. வாகன உதிரிபாகங்களின் விலைகள் 300 % அதிகரிப்பு ! சந்தையில் வாகன உதிரிபாகங்களின் விலைகள் 300 சதவீதம் அளவில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதானமாக மின்கலம், மின்குமிழ், கண்ணாடி, வாகன இலக்க தகடு மற்றும் இயந்திரம் உள்ளிட்ட பல உதிரிபாகங்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக பஞ்சிகாவத்தை உதிரிபாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் சந்தையில் வாகன உதிரிபாகங்களுக்கான தட்டுப்பாடும் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. உதிரிபாகங்களை இறக்குமதி செய்யும் சில நிதி நிறுவனங்கள் கடன் பத்திரங்களை விநியோகிக்காமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன உதிரிபாகங்களை நாட்டுக்கு கொண்டு வரும் வர்த்தகர்கள் குற்றம் சுமத்துகின்றனர். அ…

  4. யாழ். சுன்னாகத்தில் வயோதிபத் தம்பதியிடம் நூதன மோசடி சுன்னாகத்தில் தனித்து வசிக்கும் முதியவர்களிடம் சமுர்த்தி உத்தியோகத்தர் எனக் கூறி நூதன மோசடி நடந்துள்ளது. சுன்னாகத்திலுள்ள வயோதிபத் தம்பதியின் வீட்டுக்கு கடந்த வாரம் சென்ற நபரொருவர் அரச உத்தியோகத்தர் போல தோன்றும் விதமாக ஆடையணிந்திருந்ததுடன் முகக்கவசமும் அணிந்திருந்தார். அந்தப் பிரதேசத்தின் சமுர்த்தி உத்தியோகத்தராக புதிதாக நியமனம் பெற்றவர் எனக் குறிப்பிட்டு அந்த முதியவர்களுக்கு சமுர்த்தி கொடுப் பனவு கிடைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சமுர்த்திப் பயனாளியாக இணைக்க வேண்டுமென குறிப்பிட்டு விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்துள்ளார். பின்னர் சமுர்த்திப் பயனாளியாவதற்கு 30,000 ரூபா செலுத்த வேண்டுமெனக் குறிப…

  5. புலம்பெயர் முன்னணித் தமிழ் தொழிலதிபருக்கு புலனாய்வுத் துறையால் நெருக்கடி! முதலீட்டாளர்கள் அச்சம் புதிய இணைப்பு சர்வதேச தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருப்பது முதலீட்டாளர்களிடையே அச்சத்தை தோற்றுவிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில், இலங்கை அரசாங்கம் புலம்பெயர்ந்து இருக்கும் முதலீட்டாளர்களை இலங்கைக்கு வருமாறும் முதலீடு செய்யுமாறும் அழைப்பு விடுத்திருக்கின்றது. இப்படியான சூழலில், புலம்பெயர் நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து முதலீடு செய்யும் தொழிலதிபர்களையும் அவர்களது ஊழியர்களையும் அதிருப்திக்கு உள்ளாக்கும் வகையில் புலனாய்வாளர்களின் செயற்பாடு இருப்பதன் கா…

  6. அமெரிக்க C17 Globemaster விமானத்தில் ஆயுதங்களோடு கட்டுநாயக்கவில் தரையிறங்கிய விசேட அதிகாரிகள்!(VIDEO) 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஒரு பாரிய ஆட்சி மாற்றம் இடம்பெற்றது, அதன் பின்னணியில் இருப்பது அமெரிக்கா என்பது எல்லோருக்கும் தெரியும் என இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார். எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஆட்சிமாற்றத்தின், தொடர்ச்சியாகத்தான், அதாவது அந்த இடத்திற்கு யாரை கொண்டு வரவேண்டும் என்று அமெரிக்கா விரும்பியதோ அவரை கொண்டு வந்த பின்னரான தொடர் நடவடிக்கைகளைத் தான் நாங்கள் இப்போது பார்க்கின்றோம். அமெரிக்காவின் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த …

  7. இல்லாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது : ஜனாதிபதி Published By: T. SARANYA 23 FEB, 2023 | 04:03 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இல்லாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது எனவும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். தேர்தலை பிற்போடுங்கள்,நாங்கள் கூச்சலிட்டு பின்னர் அமைதியாகி விடுகிறோம் என என்னிடம் பலமுறை கோரிக்கை விடுத்தவர்கள் தற்போது நான் தேர்தலை பிற்போடுவதாக என்மீது குற்றஞ்சாட்டுகிறார்கள் எனவும் குறிப்பிட்டார். மேலும் பொருளாதாரத்தை பாதுகாக்கவே முன்னுரிமை வழங்குகி…

  8. இலங்கைக்கு நம்பகரமான நிதி உத்தரவாதம் உடனடியாக தேவை - அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் Published By: RAJEEBAN 23 FEB, 2023 | 04:06 PM இலங்கைக்கான நம்பகமான நிதி உத்தரவாதம் மிகவும் அவசரம் என அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் யனெட் யெலென் தெரிவித்துள்ளார் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் அழுத்தத்தில் உள்ள உருவாகிவரும் சந்தைகளிற்கான அர்த்தபூர்வமான கடன் நடவடிக்கைகளில் சீனா உட்பட அனைத்து கடன் கொடுப்பனவு நாடுகளும் கலந்துகொள்ளவேண்டும் என அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல நாடுகளின் முன்னோக்கிய வளர்ச்சியை தடுத்துவைத்துள்ள கடன் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு இணைந்து பணியாற்…

  9. நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்தார் சஜித்! யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் (வியாழக்கிழமை) நல்லை ஆதீன குருமுதல்வர் சோமசுந்தர ஞானதேசிக பரமாச்சார்ய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடினார். நல்லூரில் உள்ள நல்லை ஆதீனத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின் போது செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன், எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளருமான உமாச்சந்திரா பிரகாஷ், யாழ் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அமைப்பாளர் விஜய்காந்த், யாழ் மவட்ட அமைப்பாளர் கு.மதன்ராஜ், தொகுதி அமைப்பாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். https://athavannews.com/2023/1325105

    • 1 reply
    • 709 views
  10. தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை – ஜனாதிபதி! தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று(வியாழக்கிழமை) விசேட உரையாற்றிய அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தற்போது தேர்தலை நடத்துவதற்கான நிதி அரசாங்கத்திடம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1325113 நடைபெறாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது – ஜனாதிபதி நடைபெறாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்று(வியாழக்கிழமை) விச…

  11. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அதிகாரம் புதிய திசையில் நகரும் போக்கினாலேயே ஒத்திவைக்க முயற்சி – அனுர உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அதிகாரம் புதிய திசையில் நகரும் போக்கு காணப்படுகின்றமை காரணமாகவே ஆட்சியில் உள்ளவர்கள் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1325067

  12. மின்சார அமைச்சின் அதிகாரிகளை சந்தித்து பேசிய அதானி குழுமத்தின் அதிகாரிகள்! இந்தியாவின் அதானி குழுமத்தின் அதிகாரிகள், கொழும்பில் மின்சார அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர். மன்னாரில், அதானி குழுமத்தால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 500 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நிர்மாணப் பணிகள் அடுத்த வருடம் டிசெம்பர் மாதம் நிறைவடைய உள்ளதாகவும், அதற்குத் தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1325070

  13. இலங்கை என்பது இந்தியாவிற்கு பாக்கிஸ்தான் இல்லை - ஜெய்சங்கர் Published By: RAJEEBAN 22 FEB, 2023 | 03:15 PM பாக்கிஸ்தானின் பொருளாதார நெருக்கடி குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கருத்து வெளியிட்டுள்ளார். பாக்கிஸ்தானின் எதிர்காலம் என்பதை அதன் தெரிவுகளும் நடவடிக்கைகளுமே தீர்மானிக்கும் என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் பாக்கிஸ்தான் தனது பொருளாதார நெருக்கடியிலிருந்து எவ்வாறு வெளிவரும் என்பதே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான இந்தியாவின் உதவி குறித்தும் கருத்து தெரிவித்துள்ள அவர் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த வேளை இந்தியா உத…

  14. மயில்களைக் கொல்ல இலங்கை உத்தரவிட்டது ஏன்? யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 58 நிமிடங்களுக்கு முன்னர் விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குரங்கு, மயில் உள்ளிட்ட ஆறு வகை உயிரினங்களை கொல்ல இலங்கையின் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஒப்புதல் அளித்துள்ளார். உருளைக்கிழங்கு விவசாயிகளுடனான சந்திப்பு ஒன்றின் போது, அமைச்சர் இந்த வியடத்தைக் தெரிவித்தார். தமது பயிர்களை குரங்குகள் சேதமாக்குவதாக அமைச்சரிடம் விவசாயிகள் இதன்போது முறையிட்டனர். செங்குரங்கு (Toque macaques), மயில், குரங்கு, மர அணி…

  15. தமிழர்களின் சுய உரிமை பாதுகாக்கப்படும் வகையில் உரிய வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் - அமைச்சர் அலி சப்ரி Published By: DIGITAL DESK 5 22 FEB, 2023 | 02:02 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) தமிழ் மக்கள் இந்த நாட்டில் ஒன்றாக வாழும் மக்கள் என்பதை உணர்ந்து கொண்டு அவர்களுக்கு சுய உரிமை பாதுகாக்கப்படும் வகையில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் சுய உரிமை பாதுகாக்கப்படும் வகையில் அவர்களது மொழி மற்றும் கலாசாரம் உள்ளிட்டவைகளுக்கு உரிய வாய்ப்புகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழம…

  16. இலங்கையின் தேசிய புலனாய்வுத் தகவல்களை அமெரிக்காவின் மத்திய புலனாய்வுக் பிரிவுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படுகிறதா ? - விமல் கேள்வி Published By: DIGITAL DESK 5 22 FEB, 2023 | 02:06 PM (எம்.ஆர்.எம்.வசீம் , இராஜதுரை ஹஷான்) இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்காவின் பென்டகன் முதன்மை பிரதி பாதுகாப்பு செயலர் ஜெடிடியா பிறோல் தலைமையில் 22 பேர் பாதுகாப்பு அதிகாரிகள் ஆயுதம் தரித்து தேசிய புலனாய்வுத் திணைக்களத்திற்குள் பிரவேசிக்கும் போது எமது புலனாய்வு அதிகாரிகளின் ஆயுதம் கலைக்கப்பட்டு அவர்கள் நிராயுதபாணியாக்கப்பட்டுள்ளார்கள். இலங்கையின் தேசிய புலனாய்வு தகவல்களை அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பிரிவுக்குள் கொண்ட…

  17. ( எம்.ஆர்.எம் வசீம்.இராஜதுரை ஹஷான் ) வடக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படுமாக இருந்தால் அதற்கு எதிராக தமிழ்த் தேசிய மக்களை அணிதிரட்டி போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற கொழும்புதுறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இரண்டு கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை நாட்டின் ஒருபகுதியாக வலுக்கட்டாயமாக 1948இல் இர…

  18. (நா.தனுஜா) இலங்கையில் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுப்பதற்குத் தமிழ்மக்கள் கொண்டிருக்கும் உரிமை தொடர்ந்து முடக்கப்பட்டுவருவதைக் கண்டிக்குமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்தியிருக்கும் கனேடியத் தமிழர் தேசிய அவை, தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை வழங்குவதொன்றே இந்திய - பசுபிக் பிராந்தியத்தில் நிலையான அமைதி உருவாவதற்கு வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இதுகுறித்து கனேடியத் தமிழர் தேசிய அவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: அண்மையில் தமிழர் தாயகப்பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒடுக்குமுறைகள் இந்திய - பசுபிக் பிராந்தியத்தில் ஸ்திரமற்றதன்மையை…

  19. அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் – எதிர்க்கட்சி அறிவிப்பு உள்ளூராட்சித் தேர்தலை தாமதப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி அமைச்சுக்கு முன்பாக இடம்பெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு நிதி இல்லை என கூறுவதற்கு முன்னர் உரிமைகளை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ரஞ்சித் மத்தும பண்டார கேட்டுக்கொண்டுள்ளார். திவாலான நாட்டில் மக்களின் வாக்குரிமையை இல்லாது செய்து ஜனநாயகத்தையும் திவாலாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளா…

  20. தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருதாக ஜனாதிபதி விக்னேஸ்வரனிடம் தெரிவிப்பு Published By: DIGITAL DESK 5 22 FEB, 2023 | 03:15 PM (செய்திப்பிரிவு) அரசியல்கைதிகளின் விடுதலை, காணாமல்போனோரது குடும்பங்களின் கோரிக்கை மற்றும் இராணுவத்தினரின் வசமுள்ள காணிகளை விடுவித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஜனாதிபதி தன்னிடம் கூறியதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கடந்த 11 ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் ஜெட்விங் ஹோட்டலில் இடம்பெற்ற சந்த…

  21. இடைநிறுத்தப்பட்ட இலங்கைக்கான செயற்திட்டங்களை மீள ஆரம்பிக்கும் JICA ! நிதி நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) அனைத்து செயற்றிட்டங்களையும் மீள ஆரம்பிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அந்நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் நாயகத்தை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தினால் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் நிறைவு பெற்றதன் பின்னர், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் செயற்றிட்டங்களை விரைவாக ஆரம்பிக்கவுள்ளதாக அவர் இதன்போது உறுதியளித்துள்ளார். நிதி நெருக்கட…

  22. விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்கள் கையேற்பதில் தயக்கம் - மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் Published By: T. SARANYA 22 FEB, 2023 | 04:55 PM (எம்.நியூட்டன்) வலி வடக்கில் இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்கள் கையேற்பதில் தயக்கம் காட்டுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ,சிவபாலசுந்தரன் தெரிவித்தார். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காங்கேசன் துறையில் இராணுவத்தினிடமிருந்தும் கடற்படையினரிடமிருந்தும் 108 ஏக்கர் க…

  23. வடக்கின் நிலைவரம் குறித்து விஜயகலாவிடம் கேட்டறிந்தார் ஜப்பான் தூதரக அரசியல் ஆலோசகர் Published By: DIGITAL DESK 5 22 FEB, 2023 | 04:01 PM ஜப்பான் தூதரக அரசியல் ஆலோசகர் விஜயகலா மகேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்தும் வட மாகாணத்தில் நிலைமை தொடர்பாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான திருமதி. விஜயகலா மகேஸ்வரனை ஜப்பான் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் கானா மொரிவகி சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பிலுள்ள திருமதி. விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் வட மாகாணத்தின் தற்போதைய நிலைவரம் குறித்து ஜ…

  24. நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படைகளை அழைப்பதற்கு உத்தரவிட்டார் ஜனாதிபதி! Published By: DIGITAL DESK 5 22 FEB, 2023 | 04:01 PM நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படைகளை அழைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்க்ஷ இன்று (22) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 ஆவது பிரிவின்படி வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/148879

  25. வன்முறைகளை யாரும் கையிலெடுக்க கூடாது என்கிறார் அமைச்சர் டக்ளஸ்! இந்தியக் கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகிய செய்தி தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாரை கேட்டுள்ளதுடன், அவ்வாறான சம்பவம் நடைபெற்றிருக்குமானால் கண்டிக்கப்பட வேண்டியது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், எந்தவொரு சூழலிலும் யாரும் வன்முறைகளை கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது எனவும், எமது தொப்புள்கொடி உறவுகள் பாதிக்கப்படாத வகையிலே இந்த விவகாரம் கையாளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.