ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143558 topics in this forum
-
மன்னார் பாலைக்குழியிலிருந்து அடம்பன் நோக்கி முன்னேறிய சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். இதில் 10-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். 20-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
------------------------------------------------------------------------------------------------------------------------------------
-
- 0 replies
- 898 views
-
-
கொசோவோ பாடங்கள் [24 - February - 2008] முன்னாள் யூகோஸ்லாவிய சம்மேளனத்தில் எஞ்சியிருக்கும் பெரியநாடான சேர்பியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கு அல்பேனிய இனத்தவர்களை அதிகப்பெரும்பான்மையாகக் கொண்ட கொசோவோ மாகாணம் கடந்த வாரம் செய்த சுதந்திரப் பிரகடனம் அரசொன்றை அங்கீகரிப்பதில் இருக்கக் கூடிய தகுதிகள் பற்றி உலகில் இன்று பரந்தளவில் விவாதங்களை மூளவைத்திருக்கிறது. கொசோவோவை சுதந்திரநாடாக முதன்முதலில் அமெரிக்கா அங்கீகரித்திருக்கின்றமையும
-
- 1 reply
- 1.3k views
-
-
மக்கள் ஆணையின்றி அரசாங்கம் ஆட்சி புலிகளாலேயே மஹிந்த ஜனாதிபதியானார்முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் 2/24/2008 5:18:51 PM வீரகேசரி நாளேடு - மக்கள் ஆணையின்றி அரசாங்கம் ஆட்சி செய்து வருகின்றது. விடுதலைப் புலிகளினாலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார். ஜனாதிபதி தேர்தலை புலிகள் பகிஷ்கரித்திருக்காவிடின் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ வந்திருக்க முடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பெரும்பான்மையற்ற அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.க. உறுப்பினர்களின் தயவிலேயே ஆட்சியை நடத்துகின்றனர் என்றும் அவர் கூறினார். நவீன சந்தை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவமும், பிரதேசசபை, தவிசாளர், உப தவிசாளர், …
-
- 2 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா வான்படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்ட தூரப் பீரங்கிகளை அழிக்க முடியவில்லை என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த நேசன்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.4k views
-
-
தெற்கில் பாடசாலைகள், பேருந்து மற்றும் தொடருந்து வண்டிகளின் பாதுகாப்பிற்காக பொதுமக்களில் இருந்து 1,50,000 பேரைத் திரட்டி சிவில் பாதுகாப்புப் பிரிவொன்றை ஆரம்பிக்க மஹிந்த அரசு தீர்மானித்துள்ளது. 'தற்போது உள்ள சிவில் பாதுகாப்பு அமைப்பை மேலும் விருத்தி செய்து ஒரு கிராமத்தில் பத்துப் பேர் வீதம் இவ் வமைப்பில் சேர்த்துக் கொள்ள அரசு தீர்மானித்துள்ளது' என்று மக்கள் பாதுகாப்புப்க் கமிட்டியின் இணைப்பாளர் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். 25 மாவட்டங்களில் 322 பிரதேச சபை காரியாலயங்களுடாக இப் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 14,913 கிரமசேவையாளர் பிரிவினூடாக முதற் தடவை 1,49,130 இளைஞாகளை சிவில் பாதுகாப்பு கமிட்டிக்கென சேர்த்துக் கொள்ளப்படுவாhகள்…
-
- 2 replies
- 976 views
-
-
எனக்கும் ஒருவிடயம் உதைக்குது அந்த நேரத்திலிருந்தே இராணுவம் தேவையில்லாமல் வெளிக்கிட்டு அல்லது வேவையில்லாமல் சண்டையைத்தொடங்கிப்போட்டு அடிவாங்கும்போது எல்லோரும் சொல்லுறவ அரசியல் லாபங்களுக்காக இராணுவத்திட்டங்களைப்போட்டா
-
- 15 replies
- 3.2k views
-
-
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் இன்று காலை முதல் சிறிலங்காப் படையினர் வீடு, வீடாகச் சென்று பாரிய தேடுதலை ஆரம்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 564 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் காரணமாக பிள்ளையான் குழு உறுப்பினர்கள் இருவரும் தற்கொலைதாரியும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.15 மணியளவில் களுவாஞ்சிகுடியில் மட்டக்களப்பு – கல்முனை வீதியின் அற்புதப்பிள்ளையார் கோவிலுக்கு முன்பாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி பிள்ளையான் குழு அலுவலகத்தில் கடமையாற்றும் ரொகான்,ஜெகன் என்பவர்களே கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் களுவாஞ்சிகுடியில் இருந்து கல்லாறு முகாமுக்கு சென்றுகொண்டிருந்தபோது துவிச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் இவர்கள் மீது தற்கொலை…
-
- 12 replies
- 2.9k views
-
-
மன்னாரில் மையம் கொள்ளும் யுத்தம் [24 - February - 2008] -விதுரன்- வன்னியில் மோதல்கள் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளன. விடுதலைப் புலிகளின் பகுதிகளினுள் நுழைந்துவிட படையினர் கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். சகல வளங்களுடனும் புலிகளுக்கெதிரான போரைத் தீவிரப்படுத்தினாலும் விடுதலைப் புலிகளின் பலத்த எதிர்ப்பால் படையினரின் வெற்றி சாத்தியப்படவில்லை. பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டிய நிலையில் படையினர் உள்ளனர். வன்னிக் களமுனையில் ஏதாவது பகுதியை கைப்பற்றிவிட வேண்டுமென்ற நோக்கில் கடந்த சில வாரமாக இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. தினமும் பாரிய தாக்குதல்கள் நடைபெறுகின்றன. புலிகள் தங்கள் நிலைகளிலிருந்து பின் வாங்குகிறார்கள், தினமும் ஐம்பதிற்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப…
-
- 7 replies
- 2.3k views
-
-
புலிகளை ஒழித்துக்கட்டுவதாக அரசு சூளுரைத்தபோதும் வட பகுதி இராணுவ நடவடிக்கையில் மந்த நிலை [24 - February - 2008] விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டும் சூளுரையுடன் அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுத்துச் செல்கின்ற போதிலும் தசாப்தகாலமாக தொடரும் மோதல்களின் இறுதி முடிவு தொடர்பாக முன்னொருபோதுமில்லாத அளவுக்கு நிச்சயமற்ற தன்மையே காணப்படுகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அரசியல்வாதிகளும் `பயங்கரவாதிகளை' அழித்தொழிக்கப் போவதாக உறுதியளித்திருக்கும் அதேசமயம் யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்தும் வாபஸ் பெற்ற பின் இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். ஆயினும், புலிகளை அழித்தொழிப்பது தொடர்பான இராணுவத்தின் வீரப் பேச்சுகளில் இப்போது தணிவேற்பட்டுள்ளது. `நாம் வெற்றிகண்டு வர…
-
- 1 reply
- 1.5k views
-
-
குறுகிய நேர இடைவெளியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தாக்குதல் நடத்த முடியும் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: விடுதலைப் புலிகள் கொழும்பில் பெரும் தாக்குதல்களை மேற்கொள்வதனை தடுப்பதற்காக பெருமளவிலான காவல்துறையினர், இராணுவத்தினர், ஊர்காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதாவது, அங்கு படையினரின் செறிவு அதிகமாகும். ஆண்களும், பெண்களுமாக பெருமளவிலான படையினர் தலைநகரில் குவிக்கப்பட்டுள்ளனர். படையினரின் கண்களில் படாமல் சில இடங்களில் சில மீற்றர் தூரம் கூட நகர்வது கடினமாகும். அரசு இதற்…
-
- 13 replies
- 1.8k views
-
-
சிறிலங்காவின் உட்பகுதியான யால வனப்பகுதியில் போர் நெருப்பு மீண்டும் மேலெழுந்திருக்கின்றது என்று கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
தந்தை செல்வாவின் பாசறையில் வளர்ந்த மசூர் மௌலானா கிழக்கின் பெரும் சொத்து [23 - February - 2008] * ஹென்றி மகேந்திரன் பாராட்டு தந்தை செல்வாவின் பாசறையில் வளர்ந்து இன்று இச்சபையின் பிரதி மேயராக பதவி வகிக்கும் மசூர் மௌலானா அவர்கள் கிழக்கிற்கு கிடைத்த பெரும் சொத்து என கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார். கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று 21 ஆம் திகதி இடம்பெற்றது. பிரதிமேயராக மசூர் மௌலான பதவியேற்றதைத் தொடர்ந்து மகேந்திரன் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த அமர்வு மாநகர மேயர் எம். அஜ்மீர் தலைமையில் நடைபெற்றது. அவசர வேலை நிமித்தம் அவர் சபையை விட்டு வெளியே சென்றதைத் தொடர்ந்து சபைக்கு மசூர் மௌலா…
-
- 1 reply
- 1.4k views
-
-
-
வவுனியாவில் மூன்று படையினர் பலி வவுனியா, நாவற்குளம் களமுனையின் சூனியப் பிரதேசத்தில் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறீலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று காலை 10.15 அளவில் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து சம்பவ இடத்திலேயே மூன்று படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். சூனியப் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதால், கொல்லப்பட்ட படையினரின் உடலங்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை படையினருக்கு ஏற்பட்டுள்ளது. சூனியப் பிரதேசத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலுக்கான தயார்படுத்தலில் ஈடுபட்டபோது படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகின்றது. கடந்த 17ஆம் நாளன்றும் இதே…
-
- 0 replies
- 896 views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் கூட்டணி அமைத்து செயற்படுவது குறித்து ஆராய்ந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் மாளிகைப் பகுதிக்குள் காவல்துறை அதிகாரி ஒருவரின் உதவியுடன் நுழைவதற்கு முயற்சித்த தமிழ் இளைஞர் ஒருவரை அரச தலைவர் மாளிகைக்குரிய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 2.7k views
-
-
பொட்டு அம்மான் நோய்வாய்ப்பட்டுள்ளார்! பிரபாகரன் குறித்த வதந்தி பொய்யானது!! கடந்த 13ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வு துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்களுக்கு இதய பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் , கிளிநொச்சி மருத்துவ மனையில் வைத்து சத்திர சிகிச்சைக்கு உட்படத்தப்பட்டதன் பின்னர் பாதுகாப்பான இடமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளாதாகவும், அவர் தற்போது வழமையான நிலைக்கு திரும்பி விட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. தவிரவும் விமானக் குண்டு தாக்குதலினால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் கால் ஒன்றை இழந்துள்ளார் என சிறீலங்காவின் சில ஊடகங்கள் மற்றும் சிறீலங்கா அரசு பரப்பிய வதந்தி முற்றிலும் பொய்யானது என்றும் தெரிய வந்துள்ளது. …
-
- 70 replies
- 11.6k views
-
-
தமிழ் பேசும் புத்திஜீவிகள் குழு லண்டனிலிருந்து இங்கு வருகை "வெளிநாட்டில் வதியும் இலங்கைப் புத்திஜீவிகளின் குழு பிரிட்டன்' என்ற பெயரில் தமிழ், முஸ்லிம் பிரமுகர்களைக் கொண்ட குழு ஒன்று கடந்த ஒரு வாரகாலமாக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசி வருகின்றனர் என்று தெரியவருகின்றது. தமிழ் ஜனநாயகக் காங்கிரஸின் தலைவர் ஆர்.ஜெயதேவன், பிரிட்டன் இந்து ஆலயங்களின் சம்மேளனத் தலைவர் என்.சச்சிதானந்தன், பத்திரிகையாளரும், எழுத்தாளருமான திருமதி ஆர்.பாலசுப்பிரமணியம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரிட்டன் பிரிவுத் தலைவர் கே.சுப்பையா, லண்டன் ஈழப்பசுபதீஸ்வரர் ஆலய அறங்காவலர் கே.விவேகானந்தன், டென்மார்க் தமிழ்ச் சமூக அமைப்பைச் சேர்ந்த அரு…
-
- 11 replies
- 3.7k views
-
-
கொழும்பில் பஸ் ஒன்றில் குண்டு வெடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன...... Bomb exploded in a bus The bomb had exploded inside a bus when the passengers were getting out the bus having seen a suspicious looking parcel. dailymirror Blast hits passenger bus in Sri Lanka - witness Sat Feb 23, 2008 11:25am COLOMBO (Reuters) - A blast rocked a passenger bus on the southern outskirts of the Sri Lankan capital on Saturday morning, an eyewitness said, adding he could see smoke rising into the air and ambulances rushing to the scene. The military confirmed there had been an explosion but had no further details. "There was an exp…
-
- 17 replies
- 4.6k views
-
-
இன்று காலை 6:35 மணியளவில் ஒட்டிசுட்டானில் அமைந்திருக்கும் விடுதலைப்புலிகளின் முகாம் மீது தமது ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக விமானப்படை பேச்சாளன் ஊடகங்களுக்கு தற்போது தெரிவித்துள்ளார். ஜானா
-
- 5 replies
- 2.8k views
-
-
மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான வன்முறைச் சம்பவங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளிலிருந்து விலகிக் கொள்வதாக மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம்; தெரிவித்துள்ளது. ஆயுதந்தரித்த குழுக்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டிருப்பதன் மூலம் நியாயமானதும், சுதந்திரமானதுமான தேர்தலை நடாத்த முடியுமா என்பது குறித்து சந்தேகம் நிலவுவதாக அந்த அமைப்பின் தலைவர் பாக்கியசோதி சரணவமுத்து தெரிவித்துள்ளார். மேலும், தற்போது பகுதியில் நிலவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேர்தல் ஒன்றை நடாத்தக்கூடிய வகையில் இல்லை எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக தேர்தல் இடம்பெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரும், தேர்தல் நட…
-
- 0 replies
- 905 views
-
-
கிழக்கில் முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் உதவியுடன் இயங்கும் ஆயுதக் குழுவொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். கிழக்கில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய முஸ்லிம் ஆயுதக்குழுவை அரசியல் சக்தியொன்று இயக்கி வருவதாக அந்த அமைப்பு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. இவ்வாறு வன்முறைச் செயல்களில் ஈடுபடும் சிலருக்கு எதிராக மாத்திரம் பொலிஸார் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட இந்த அரசாங்க அமைச்சர், ஆயுததாரிகளைக் கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினருக்கு பல்வேற…
-
- 1 reply
- 1.3k views
-
-
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் இராணுவத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் டென்னிஸ் பெரேராஇதேசியப் பிணக்குக்குத் தீர்வு காண்பது தொடர்பாக வார மத்தி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டிருக்கின்றார். ""இந்தப் பிணக்குக்கு எவ்வாறு தீர்வு காணப்பட முடியும்?'' என்று அவரிடம் கேட்கப்பட்டது. ""போரினால் அல்ல. ஆனால் பேச்சுகள் மூலம்'' என்று பதிலளித்த முன்னாள் இராணுவத் தளபதி அதை ஒட்டிய சில பட்டறிவுப் பாடங்களையும் முன்வைத்திருக்கின்றார். ""இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பின்னர் உலகில் ஏறத்தாழ இருநூற்றி நாற்பது கிளர்ச்சிகள் இடம்பெற்று வந்துள்ளன. ""அவற்றில் மூன்றே மூன்று கிளர்ச்சிகள் மட்டுமே யுத்தம் மூலம் எதிர்ப் போராட்டம் வாயிலாக வெற்றிகரமாக அடக்கப்பட்டிரு…
-
- 1 reply
- 1.4k views
-