ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
போர் நிறுத்தத்தை உருவாக்கிய புலிகளின் பலமும் அதனை முடிவுக்குக் கொண்டுவரும் இராணுவத்தின் பலமும் -விதுரன்- நாட்டில் முழு அளவில் பெரும் போர் வெடிக்கப்போகிறது. தைப்பொங்கலுக்கு மறுநாளுடன் போர்நிறுத்த உடன்பாடு முடிவுக்கு வருகிறது. சமாதான முயற்சிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. விடுதலைப்புலிகளின் பலத்தில் உருவான போர்நிறுத்த உடன்பாடு இன்று இராணுவத்தினரின் பலத்தால் முடிவுக்கு வருகிறது. போர்நிறுத்த உடன்பாட்டை தொடரவும் நோர்வேயின் அனுசரணையுடன் சமாதான முயற்சிகளைத் தொடரவும் விடுதலைப் புலிகள் இறுதியாக விடுத்த கோரிக்கையையும் அரசு நிராகரித்துவிட்டது. இதனால், இலங்கை அரசு முழு அளவில் போருக்குத் தயாராகிவிட்டது. இவ்வாண்டை போராண்டாகப் பிரகடனப்படுத்தி போருக்கான வரவு - செல…
-
- 7 replies
- 2.1k views
-
-
13.01.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு http://www.yarl.com/videoclips/view_video....35d7baf04342e1c
-
- 0 replies
- 1.5k views
-
-
குழந்தைகள் கடத்தல் [14 - January - 2008] [Font Size - A - A - A] ஆட்கடத்தல், படுகொலைகள், கப்பம் அறவிடுதல் போன்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகளுக்குள் சிக்கித் தவிக்கும் மக்கள் பீதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலைமை ஒருபுறமிருக்க, பச்சிளம் குழந்தைகளை கடத்திச்சென்று விற்பனை செய்து பணம் சம்பாதிக்கும் குரூரத்தனமான நடவடிக்கைகள் குறித்து தற்போது தகவல்கள் அதிகளவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யும் நடவடிக்கைகளின் பின்னணியிலிருந்து செயற்பட்ட செல்வந்தப் பெண் ஒருவரை புலனாய்வுப் பிரிவினர் தேடிவருகிறார்கள். ஆஸ்பத்திரிகளில் பிரசவிக்கப்படும் குழந்தைகளை கடத்திச்சென்று விற்பனை செய்வதற்கு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிலரும் ஒத்தாசை புரிவத…
-
- 1 reply
- 1.8k views
-
-
வன்னி மீது அகோர வான் குண்டுத்தாக்குதலை சிறிலங்காப் படையினர் ஆரம்பித்துள்ளனர். இது வன்னி மீதான படையெடுப்புக்கான முன்னோடி நடவடிக்கை போல் தெரிகிறது. கொழும்பு ஆங்கில ஊடகமான மிரர் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...aspx?ARTID=3809
-
- 2 replies
- 3.4k views
-
-
அயர்லாந்திற்கான விசாவிணை இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் 1/14/2008 12:56:20 PM வீரகேசரி இணையம் - எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதி முதல் அயர்லாந்து விசாவிற்கு இலங்கையர்கள் இணையத்தளம் மூலம் நேரடியாக விண்ணப்பிக்க முடியுமென அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் தமது விண்ணப்பப்டிவத்தினை இணையம் மூலம் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க முடியும் www.inis.gov.ie என்ற இணையத்தள முகவரி மூலம் விசா விண்ணப்பபடிவத்தினை பெற்றுக்கொள்ள முடியும் என அயர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது
-
- 1 reply
- 3.6k views
-
-
வன்னியில் நான்கு முனைகளில் நகரும் படையினரின் உத்திகள் காகிதங்களில் எழுதப்படும் போது மிகவும் இலகுவானதாக தெரியலாம். ஆனால் களத்தில் அப்படியல்ல என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "த நேசன்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
வவுனியாவில் சிறிலங்காப் படையினர் மீது நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் படையினர் இருவர், ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மூன்று படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 2.1k views
-
-
யாழ். குடாநாட்டில் பணியாற்றிய போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கடைசி அனைத்துலக கண்காணிப்புப் பிரதிநிதியும் இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் வெளியேறுவதுடன் அதன் யாழ். அலுவலகமும் மூடப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.6k views
-
-
ஹொரவபொத்தானையில் இன்று காலை படையினரை இலக்குவைத்து தாக்குதல். 14.01.2008 / நிருபர் சங்கிலியன் வவுனியா ஹொரவ பொத்தானை துட்டுவேவ வீதியில் இன்று காலை சிறிலங்காப்படையினரை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ள கிளேமோர் தாக்குதலில் படையினர் ஒருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். ட்ரக் வண்டியொன்றே கிளேமோர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. http://www.sankathi.com/content/full_leadn...amp;ucat=1&
-
- 1 reply
- 2.1k views
-
-
தாய்மண்ணின் விடிவிற்காக இன்னுயிர்களை ஈந்த போராளிகளின் விபரங்கள் [sunday January 13 2008 11:57:15 PM GMT] [யாழ் வாணன்] தாய்மண்ணின் விடிவிற்காக இன்னுயிர்களை ஈந்த போராளிகளின் விபரங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்டுள்ளன. மணலாறு சிலோன் தியேட்டர் களமுனையில், நேற்று சிறீலங்கா படைகளுடன் நிகழ்ந்த நேரடி மோதல்களின் பொழுது, மேஜர் இளமகள் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த ஏரம்பு சிவகலை என்ற போராளி களப்பலியாகியுள்ளார். மன்னார் பெரியபண்டிவிரிச்சான் களமுனையில் கடந்த 11ஆம் நாளன்று இடம்பெற்ற மோதல்களின் பொழுது, லெப்ரினன்ட் அணியிசை என்றழைக்கப்படும், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த கோபாலகிருஸ்ணன் சுரேதா, லெப்ரினன்ட் ஈழமலர் என்றழைக்கப்படும், ய…
-
- 5 replies
- 1.6k views
-
-
Posted on : Sat Jan 12 9:40:00 2008 .மகேஸ்வரனின் மைத்துனியின் தாலியை கழற்ற வைத்தனராம் பாதுகாவலர்கள்! நாடாளுமன்றக் கெடுபிடி குறித்து விசனம் நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அமரர் மகேஸ்வரன் எம்.பிக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீதான உரைகளை அவதானிப்பதற்காக நாடாளுமன்றுக்கு வந்த மகேஸ்வரனின் சகோதரரான பரமேஸ்வரனின் மனைவியின் தாலியைக் கழற்றுமாறு நாடாளுமன்றப் பாதுகாப்புப் பிரிவினர் உத்தரவிட்டு அதனைக் கழற்ற வைத்தனர் என்று ஐ.தே.கட்சி எம்.பியான ஜயலத் ஜயவர்தன நேற்று நாடாளுமன்றில் கூறினார். தாலி சம்பிரதாய பூர்வமான ஓர் அணிகலன். அதற்கு உணர்வு பூர்வமான மதிப்பும், மரியாதையும், புனிதத் தன்மையும் உண்டு. பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி, ஒரு பெண்ணின் தாலியை அவரது கணவர் உயிருடன் இரு…
-
- 2 replies
- 1.7k views
-
-
வலையை விரித்தவர்களே அறுத்தெறிந்த நிகழ்வு-இதயச்சந்திரன் "தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் எழுதிய "போரும் சமாதானமும்' என்கிற வரலாற்று ஆவணத்தை மறுபடியும் வாசித்தேன். கனமான நூல் அது. இந்திய அமைதிப்படை காலத்தில், விடுதலைப் புலிகள் மேற்கொண்ட இராஜதந்திர நகர்வுகள் குறித்து விபரிக்கப்பட்ட விடயங்கள், சமகால அரசியல் மாற்றங்களுடன் ஏதோவொரு வகையில் இணைந்து செல்வது போலிருந்தது. நண்பனாக உட்புகுந்த எதிரிக்கும், நிரந்தரமான பகைவனிற்குமிடையே இருந்த முரண்பாடுகளை, மிக நுணுக்கமாகக் கையாண்டு, போராட்ட முனைப்பினை தக்க வைத்த இராஜதந்திரம் அந்நூலில் தெளிவாகக் கூறப்பட்டிருந்தது. அதைப்படிக்கும் போது, ஜப்பானிய மேலாதிக்கத்திற்கெதிராக, சீன ஆட்சியாளர் சியாங்கோ சேக்குடன் கூட்டுச் சேர்ந்…
-
- 5 replies
- 2k views
-
-
தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்கும் விடயத்தில் இந்தியா முன்னர் இழைத்த தவறுகளை மீண்டும் இழைத்தால் அதற்கான பலனை எதிர்கொள்ள நேரிடும் என்று ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க எச்சரித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கைக் கட்டமைப்புக்குள் தமிழர்களினது சட்டபூர்வமான அபிலாசைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 1.8k views
-
-
இலங்கை மந்திரி சபையில் சமுதாய வளர்ச்சித் துறை மந்திரியாக இருப்பவர் பி.சந்திரசேகரன். தமிழரான இவர் அந்த நாட்டில் உள்ள `தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் கட்சி' எம்.பி.யாக உள்ளார். ஆளுங்கட்சியின் கூட்டணியில் இந்த கட்சி இடம் பெற்று உள்ளது. சென்னையில் அவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 200 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்து ஆட்சியாளர்கள் இந்தியாவில் இருந்து இலங்கையில் தோட்ட வேலைகளுக்காக ஆட்களைக் கொண்டு சென்றனர். அவர்களை வெறும் தொழிலாளர்களாகத்தான் ஆங்கிலேய அரசாங்கம் நடத்தியதே தவிர எந்த வித வசதிகளையும் செய்து கொடுக்க வில்லை. இலங்கைக்கு 1948-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த பின்னரும் அங்குள்ள இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு…
-
- 0 replies
- 959 views
-
-
கொழும்பில் தெகிவளையில் இருக்கும் ஆஞ்சிநேயர் சுவாமிகள் பற்றி பல்வேறு செய்திகள் கேள்விபட்டிருப்பீர்கள். ஆரம்பத்தில் சாதாரண கார் ஓட்டுனராக இருந்து மேல்மருத்துவத்துர்ர் ஆதிபராசக்தி பங்காரு அடிகளார் போன்று தன்னையும் பாவித்து இன்று பெரிய நிலைக்கு இட்டுச்சென்றுள்ளார். இப்படிப்பட்டவர்களை நாம் இலகுவில் நம்பிவிடாது கூர்ந்து அவதானித்து இனங்காண வேண்டும். இவர் ஒரு தடவை அவுஸ்ரேலியா வந்தபோது அவரை பார்த்திருக்கிறேன். பலர் முன்னிலையில் தான் ஆஞ்சிநேயர் என நடித்தாலும் மற்ற நேரத்தில் அவர் டாம்பீகமான வாழ்வை வாழும் ஒரு சதாரண மனிதன்போலவே காணப்பட்டார். சிங்கள அரசியல் வாதிகளின் நட்பைப்பெற்றவாராகவும் இருக்கிறார். கோவிலுக்கு வரும் அடியார்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார். தனது முறைப்பட…
-
- 8 replies
- 3.5k views
-
-
இலங்கை அரசு சில இராணுவ வெற்றிகளைப் பெற்ற பின்னரும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுததுவது குறித்து ஆர்வமில்லமலிருப்பது கவலையளிப்பதாக பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் ஹிம் ஹவல்ஸ் தெரிவித்துள்ளார். பிரி. நடாளுமன்றரத்தில் இலங்கையின் தற்போதய நிலை குறித்து எழுப்படப்டட கேள்விக்கு பதிலளிக்கையிலலேயே அவர் அதனைத் தெரிவித்துள்ளர். ஜனவரி முதாலாம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் இடம் பெற்ற படுகொலைகள், அரசு யுத்த நிறுத்த உடன்பாடிக்ககையிலிருந்து விலகுவது ஆகியன குறித்து லிபரல் ஜனநாயக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியிருந்தார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண்பதற்காக இருதரப்பையும் மீண்டும் பேச்சு மேசைக்குக் கொண்டு வருவதற்கு பிரிட்டிஷ் அரசு என்ன நடவடி…
-
- 0 replies
- 1.5k views
-
-
இனம் தெரியாத நபர்களினால் படுகொலைகள் மேற்கொள்ளப்படுகிறது எனக்கூறுவது ~முழுப்பூசணிக்காயை சோற்றில் புதைப்பதற்கு| ஒப்பானது: தமிழர் மனித உரிமை மையம்
-
- 0 replies
- 880 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த உடன்பாட்டை ஒருதலைப்பட்சமாக முறிக்கும் இலங்கை அரசின் தீர்மானத்தையடுத்து, இலங்கை தொடர்பான ஜப்பான் கருத்து நிலைப்பாட்டை இலங்கைத் தலைவர்களுக்கு எடுத்து விளக்கும் நோக்குடன் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான ஜப்பானின் விசேட தூதுவர் யசூஷி அகாஷி இன்று திடீரென கொழும்புக்கு விஜயம் செய்கின்றார். கொழும்பில் மூன்று நாட்கள் மட்டும் தங்கியிருக்கும் அவர், இங்கு இலங்கை ஜனாதிபதியையும், பிரதமரையும் சந்தித்த பின்னர் செவ்வாயன்று மாலையே ஜப்பான் திரும்புவார் எனத் தெரிகிறது. விசேட தூதுவர் அகாஷி இன்று முதல் சுமார் ஒரு வார காலம் இலங்கையில் தங்கியிருந்து சில பணிகளை மேற்கொள்ள முன்னர் திட்டமிட்டிருந்தார். வன்னிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் தலைவர்…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கை மற்றும் இந்தியக் கூட்டுப் போர் தமிழரை அநாதைகளாக்குமா? ப.வி.ஸ்ரீரங்கன் ஒரு தேசியவினத்தை இன்னொரு தேசியவினம் காய்வெட்ட நினைக்கும் அல்லது காய்வெட்டும் அரசியலானது அடிப்படையில் கொடுமையான"கொடுங் கோன்மை"மிக்கது.இதைக் கடந்த பல தசாப்தங்களாக அநுபவித்துவரும் நாங்கள் எமது சமூக சீவியத்தின் உடைவுக்கும்,அந்நியத் தன்மைக்குமான பாரிய விளைவுகளைக் கற்பனைக்குள் திணிப்பதும்,கூடவே ஈழப்போருக்கான "முனைப்பு"ப் பெறுவதற்குமான அலகுகளாகப் பார்த்தொதுங்கக் கூடாது.மூன்றாமுலக நாடுகளினது பழைமையான புனைவுகளுக்குள் ஒரு தேசியவினத்தின் ஆற்றல்களை,வரலாற்றைக் காணும் அற்பத்தனமிக்க அரசாகவிருக்கும் சிங்களத் தேசமானது சமீபகாலமாகத் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தின் அறைகூவல்களைத் தாங்கிய…
-
- 3 replies
- 1.9k views
-
-
போர் நிறுத்தத்தில் இருந்து சிறிலங்கா அரசு தன்னிச்சையாக வெளியேறியது மற்றும் வடபகுதியில் மோதல்கள் உக்கிரமடைந்து வருவதனைத் தொடர்ந்து தமது உதவிப் பணிகளை மீளாய்வு செய்யப்போவதாக ஐ.நா.வின் உதவி அமைப்புக்கள் தெரிவித்துள்ளதாக ஐ.நா. சார்பு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 821 views
-
-
இறைமைக்காக மரணிப்பதற்கு மக்கள் தயாராகவுள்ளனர் அகாசியிடம் ஜே.வி.பி.தெரிவிப்பு இலங்கை நாட்டு மக்களை யாரும் பொருளாதாரத்தின் கீழ் அடிபணிய வை க்க முடியாது, எனினும் சர்வதேச சமூகங்களின் தலையீடுகளினால் நாம் அதிருப்தியடைந் துள்ளளோம் நாட்டின் இறைமை மற்றும் கௌரவத்தை காட்டிக்கொடுப்பதற்கு பதிலாக மக்கள் மரணிப்பதற்கும் தயாராக இருக்கின்றனர். அந்த மக்களுக்கு பின்னாலே மக்கள் விடுதலை முன்னணியும் இருக்கின்றது என்று ஜே.வி.பியின் தலைவர் சோமவங்ச அமர சிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய அமெரிக்காவை விடவும் இலங்கை மனித உரிமைகளை பாதுகாக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய சோமவங்ச பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரே ஜனநாயகம் நிலைநாட்டப்படவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். ம…
-
- 5 replies
- 1.5k views
-
-
பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கைக்கு உரிமை இருப்பதாவும் அதே சமயம் தமிழர்கள் உட்பட சிறுபான்மை இனங்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சியை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜீ தெரிவித்திருக்கும் அதே வேளை, சமாதானப் பேச்சுவார்த்தைகள் முற்றுப் பெறாதிருக்கும் நிலையில் இலங்கை தொடாபாக ஊறுவிளைவிக்கும் அறிக்ககையை முகர்ஜீ வெளியிட்டுள்ளதாக உலக சமாதான அமைப்பான தேசிய ஒருங்கிணைப்பு சபை ( National Integration Assembly) கடுமையாக சாடியுள்ளது. சி.என்.என்., ஐ.பி.என். ஒளிபரப்பு நிகழ்ச்சிக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் முகர்ஜீ அளித்த பேட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்படவுள்ளது. 'டெவில் அட்வோகேற்'…
-
- 7 replies
- 2.8k views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இன்று தமிழ்மக்களை காவல்துறையினர் பலவந்தமாக பம்பலப்பிட்டி "பொலிஸ் பார்க்" மைதானத்திற்கு அழைத்துச் சென்று அங்கு கூட்டத்தினை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-