ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142830 topics in this forum
-
-
- 0 replies
- 1.3k views
-
-
கொழும்பு முகத்துவாரத்தில் கடற்படையினரால் வெடிபொருட்கள் மீட்பு 1/15/2008 11:34:30 AM வீரகேசரி இணையம் - கொழும்பு முகத்துவாரம் பிரதீபா மண்டபத்திற்கும் காக்காதீவிற்கும் இடைப்பட்ட பகுதியிலிருந்து வெடிப்பொருட்களை கடற்படையினர் நேற்று இரவு மீட்டுள்ளனர். சி4 ரக வெடி பொருட்கள் எட்டு கிலோ கிராம், சைக்கில் சில்லுகள் போன்றவை இப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி.தசநாயக்க தெரிவித்தார். இப்பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான பொதிகளை சோதனைக்குட்படுத்தியபோது இவை மீட்கப்பட்டதாகவும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
-
- 0 replies
- 1.2k views
-
-
Posted on : 2008-01-15 இனி பொங்கலா? போரா? இன்று தைத் திருநாள் முதல் தினம். தைப் பொங்கல். இயற்கையின் இயக்கத்தின் உட்சூட்சுமத்தைப் புரிந்த தமிழர்கள் அதன் தெளிவாய்த் தேர்ந்து போற்றும் திருநாள் இது. அவனியின் அசைவியக்கத்திற்கு மூலமும் முதலும் ஆதவன். அவனின்றி அணுவும் அசையாது. சக்தியின் உறைவிடம் அவன்; ஊற்றுக்கண்ணும் அவனே. உலகின் உயிர்ப்புக்கும், உயிர் வாழ்வுக்கும் காரணம் அவன். ஆதவனின் அந்த சக்தியை உலகில் பதிக்கும் பணி பச்சைத் தாவரங்களுக்குரியது. சூரிய சக்தியைத் தொகுத்து விளைச்சலாக அவனிக்குத் தருபவை தாவரவர்க்கங்கள். உலகின் உணவுச் சங்கிலி இந்த ஒளித்தொகுப்பில் இருந்துதான் தொடங்குகின்றது என்பது விஞ்ஞானம். இந்த அறிவியல் அறிவையும் தாண்டி மெஞ்ஞானமும் உணர்ந்திருந்த தமி…
-
- 0 replies
- 1.8k views
-
-
புலிகளைக் களங்கப்படுத்தும் பிரசாரத்தில் தமிழக பொலிஸ் [13 - January - 2008] [Font Size - A - A - A] -கலைஞன்- தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் சம்பந்தப்படும் சிறு குற்றச் செயல்களில் கூட விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்தி அவர்கள் தலையில் பழியைப் போட்டு தமது சாதனைப்பட்டியல்களை நீட்டிக் கொள்ளும் விதத்தில் தமிழக பொலிஸ் துறையின் செயற்பாடுகள் அமைந்துள்ளதை அண்மைக்கால சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. கடந்த சில தினங்களுக்குட்பட்ட தமிழக நாளிதழ்களை எடுத்தப் பார்த்தால் அவற்றில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் புலிகளின் எண்ணிக்கையும் இலங்கையில் தமது தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக இராணுவம் கூறும் புலிகளின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட ஒரே அளவிலேயே காணப்படுகின்றன. …
-
- 7 replies
- 2.1k views
-
-
இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்துக்கான அமைத்தித் தீர்வு இன்னது தான் என்று புதுடில்லி வெளிப்படுத்தாது. ஆனால் வடக்கு, கிழக்கு இணைப்புத் தொடர்பாக அந்த மக்கள் ஜனநாயக ரீதியில் தமது முடிவைத் தெரிக்கக்கூடிய காலம் கனியும் வரை வடக்கு, கிழக்கு மாகாணம் நிர்வாக ரீதியாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையும், உத்தேச அதிகாரப் பகிர்வுத் திட்டம் அரசமைப்பின் 13வது திருத்ததுக்கு அப்பால் செல்ல வேண்டும் என்பதையும், புதுடில்லி இராஜதந்திர ரீதியிலும் மட்டத்திலும் தொடர்ந்த வலியுறுத்தும். விடயமறிந்த வட்டாரங்கள் இந்தத் தகவலை வெளியிட்டன. இந்தியத் தரப்பு இலங்கை இனப் பிரச்சினை விவகாரம் தொடர்பாகத்த தமிழர் பிரதிநிதிகள் உட்பட பல தரப்பினருடனும் தொடாந்து கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றது. …
-
- 3 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா அரசாங்கம் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியதற்கான காரணங்கள் குறித்து ஜப்பானின் சிறப்புத் தூதுவர் யசூசி அகாசிக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச விள்ககமளித்திருப்பதாக அரச தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடிப் பகுதியில் நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினால் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 632 views
-
-
மட்டக்களப்பில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைக்கான தேர்தலை இரத்துச் செய்யக்கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 578 views
-
-
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு சிறிலங்கா உயர்நீதிமன்றம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 930 views
-
-
போர் நிறுத்தத்தை உருவாக்கிய புலிகளின் பலமும் அதனை முடிவுக்குக் கொண்டுவரும் இராணுவத்தின் பலமும் -விதுரன்- நாட்டில் முழு அளவில் பெரும் போர் வெடிக்கப்போகிறது. தைப்பொங்கலுக்கு மறுநாளுடன் போர்நிறுத்த உடன்பாடு முடிவுக்கு வருகிறது. சமாதான முயற்சிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. விடுதலைப்புலிகளின் பலத்தில் உருவான போர்நிறுத்த உடன்பாடு இன்று இராணுவத்தினரின் பலத்தால் முடிவுக்கு வருகிறது. போர்நிறுத்த உடன்பாட்டை தொடரவும் நோர்வேயின் அனுசரணையுடன் சமாதான முயற்சிகளைத் தொடரவும் விடுதலைப் புலிகள் இறுதியாக விடுத்த கோரிக்கையையும் அரசு நிராகரித்துவிட்டது. இதனால், இலங்கை அரசு முழு அளவில் போருக்குத் தயாராகிவிட்டது. இவ்வாண்டை போராண்டாகப் பிரகடனப்படுத்தி போருக்கான வரவு - செல…
-
- 7 replies
- 2.1k views
-
-
13.01.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு http://www.yarl.com/videoclips/view_video....35d7baf04342e1c
-
- 0 replies
- 1.5k views
-
-
குழந்தைகள் கடத்தல் [14 - January - 2008] [Font Size - A - A - A] ஆட்கடத்தல், படுகொலைகள், கப்பம் அறவிடுதல் போன்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகளுக்குள் சிக்கித் தவிக்கும் மக்கள் பீதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலைமை ஒருபுறமிருக்க, பச்சிளம் குழந்தைகளை கடத்திச்சென்று விற்பனை செய்து பணம் சம்பாதிக்கும் குரூரத்தனமான நடவடிக்கைகள் குறித்து தற்போது தகவல்கள் அதிகளவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யும் நடவடிக்கைகளின் பின்னணியிலிருந்து செயற்பட்ட செல்வந்தப் பெண் ஒருவரை புலனாய்வுப் பிரிவினர் தேடிவருகிறார்கள். ஆஸ்பத்திரிகளில் பிரசவிக்கப்படும் குழந்தைகளை கடத்திச்சென்று விற்பனை செய்வதற்கு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிலரும் ஒத்தாசை புரிவத…
-
- 1 reply
- 1.8k views
-
-
வன்னி மீது அகோர வான் குண்டுத்தாக்குதலை சிறிலங்காப் படையினர் ஆரம்பித்துள்ளனர். இது வன்னி மீதான படையெடுப்புக்கான முன்னோடி நடவடிக்கை போல் தெரிகிறது. கொழும்பு ஆங்கில ஊடகமான மிரர் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...aspx?ARTID=3809
-
- 2 replies
- 3.4k views
-
-
அயர்லாந்திற்கான விசாவிணை இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் 1/14/2008 12:56:20 PM வீரகேசரி இணையம் - எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதி முதல் அயர்லாந்து விசாவிற்கு இலங்கையர்கள் இணையத்தளம் மூலம் நேரடியாக விண்ணப்பிக்க முடியுமென அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் தமது விண்ணப்பப்டிவத்தினை இணையம் மூலம் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க முடியும் www.inis.gov.ie என்ற இணையத்தள முகவரி மூலம் விசா விண்ணப்பபடிவத்தினை பெற்றுக்கொள்ள முடியும் என அயர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது
-
- 1 reply
- 3.6k views
-
-
வன்னியில் நான்கு முனைகளில் நகரும் படையினரின் உத்திகள் காகிதங்களில் எழுதப்படும் போது மிகவும் இலகுவானதாக தெரியலாம். ஆனால் களத்தில் அப்படியல்ல என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "த நேசன்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
வவுனியாவில் சிறிலங்காப் படையினர் மீது நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் படையினர் இருவர், ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மூன்று படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 2.1k views
-
-
யாழ். குடாநாட்டில் பணியாற்றிய போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கடைசி அனைத்துலக கண்காணிப்புப் பிரதிநிதியும் இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் வெளியேறுவதுடன் அதன் யாழ். அலுவலகமும் மூடப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.6k views
-
-
ஹொரவபொத்தானையில் இன்று காலை படையினரை இலக்குவைத்து தாக்குதல். 14.01.2008 / நிருபர் சங்கிலியன் வவுனியா ஹொரவ பொத்தானை துட்டுவேவ வீதியில் இன்று காலை சிறிலங்காப்படையினரை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ள கிளேமோர் தாக்குதலில் படையினர் ஒருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். ட்ரக் வண்டியொன்றே கிளேமோர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. http://www.sankathi.com/content/full_leadn...amp;ucat=1&
-
- 1 reply
- 2.1k views
-
-
தாய்மண்ணின் விடிவிற்காக இன்னுயிர்களை ஈந்த போராளிகளின் விபரங்கள் [sunday January 13 2008 11:57:15 PM GMT] [யாழ் வாணன்] தாய்மண்ணின் விடிவிற்காக இன்னுயிர்களை ஈந்த போராளிகளின் விபரங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்டுள்ளன. மணலாறு சிலோன் தியேட்டர் களமுனையில், நேற்று சிறீலங்கா படைகளுடன் நிகழ்ந்த நேரடி மோதல்களின் பொழுது, மேஜர் இளமகள் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த ஏரம்பு சிவகலை என்ற போராளி களப்பலியாகியுள்ளார். மன்னார் பெரியபண்டிவிரிச்சான் களமுனையில் கடந்த 11ஆம் நாளன்று இடம்பெற்ற மோதல்களின் பொழுது, லெப்ரினன்ட் அணியிசை என்றழைக்கப்படும், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த கோபாலகிருஸ்ணன் சுரேதா, லெப்ரினன்ட் ஈழமலர் என்றழைக்கப்படும், ய…
-
- 5 replies
- 1.6k views
-
-
Posted on : Sat Jan 12 9:40:00 2008 .மகேஸ்வரனின் மைத்துனியின் தாலியை கழற்ற வைத்தனராம் பாதுகாவலர்கள்! நாடாளுமன்றக் கெடுபிடி குறித்து விசனம் நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அமரர் மகேஸ்வரன் எம்.பிக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீதான உரைகளை அவதானிப்பதற்காக நாடாளுமன்றுக்கு வந்த மகேஸ்வரனின் சகோதரரான பரமேஸ்வரனின் மனைவியின் தாலியைக் கழற்றுமாறு நாடாளுமன்றப் பாதுகாப்புப் பிரிவினர் உத்தரவிட்டு அதனைக் கழற்ற வைத்தனர் என்று ஐ.தே.கட்சி எம்.பியான ஜயலத் ஜயவர்தன நேற்று நாடாளுமன்றில் கூறினார். தாலி சம்பிரதாய பூர்வமான ஓர் அணிகலன். அதற்கு உணர்வு பூர்வமான மதிப்பும், மரியாதையும், புனிதத் தன்மையும் உண்டு. பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி, ஒரு பெண்ணின் தாலியை அவரது கணவர் உயிருடன் இரு…
-
- 2 replies
- 1.7k views
-
-
வலையை விரித்தவர்களே அறுத்தெறிந்த நிகழ்வு-இதயச்சந்திரன் "தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் எழுதிய "போரும் சமாதானமும்' என்கிற வரலாற்று ஆவணத்தை மறுபடியும் வாசித்தேன். கனமான நூல் அது. இந்திய அமைதிப்படை காலத்தில், விடுதலைப் புலிகள் மேற்கொண்ட இராஜதந்திர நகர்வுகள் குறித்து விபரிக்கப்பட்ட விடயங்கள், சமகால அரசியல் மாற்றங்களுடன் ஏதோவொரு வகையில் இணைந்து செல்வது போலிருந்தது. நண்பனாக உட்புகுந்த எதிரிக்கும், நிரந்தரமான பகைவனிற்குமிடையே இருந்த முரண்பாடுகளை, மிக நுணுக்கமாகக் கையாண்டு, போராட்ட முனைப்பினை தக்க வைத்த இராஜதந்திரம் அந்நூலில் தெளிவாகக் கூறப்பட்டிருந்தது. அதைப்படிக்கும் போது, ஜப்பானிய மேலாதிக்கத்திற்கெதிராக, சீன ஆட்சியாளர் சியாங்கோ சேக்குடன் கூட்டுச் சேர்ந்…
-
- 5 replies
- 2k views
-
-
தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்கும் விடயத்தில் இந்தியா முன்னர் இழைத்த தவறுகளை மீண்டும் இழைத்தால் அதற்கான பலனை எதிர்கொள்ள நேரிடும் என்று ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க எச்சரித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கைக் கட்டமைப்புக்குள் தமிழர்களினது சட்டபூர்வமான அபிலாசைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 1.8k views
-
-
இலங்கை மந்திரி சபையில் சமுதாய வளர்ச்சித் துறை மந்திரியாக இருப்பவர் பி.சந்திரசேகரன். தமிழரான இவர் அந்த நாட்டில் உள்ள `தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் கட்சி' எம்.பி.யாக உள்ளார். ஆளுங்கட்சியின் கூட்டணியில் இந்த கட்சி இடம் பெற்று உள்ளது. சென்னையில் அவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 200 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்து ஆட்சியாளர்கள் இந்தியாவில் இருந்து இலங்கையில் தோட்ட வேலைகளுக்காக ஆட்களைக் கொண்டு சென்றனர். அவர்களை வெறும் தொழிலாளர்களாகத்தான் ஆங்கிலேய அரசாங்கம் நடத்தியதே தவிர எந்த வித வசதிகளையும் செய்து கொடுக்க வில்லை. இலங்கைக்கு 1948-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த பின்னரும் அங்குள்ள இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு…
-
- 0 replies
- 960 views
-