ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
இராணுவ அதிகாரி தற்கொலை. 13.02.2008 / நிருபர் எல்லாளன் றத்மலான சிறிலங்கா பாதுகாப்பு கற்கைநிறுவனமான கொத்தலாவல பாதுகாப்பு அக்கடமியின் பயிலுனர் அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனது அறையில் சுருக்கிட்டு தொங்கியநிலையில் இவரது உடல் இன்று காலை கண்டெடுக்கப்பட்டதாக கொழும்பு ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது. எனினும் தற்கொலை செய்தவரின் பெயர் விபரம் தற்கொலைக்கான காரணம் குறித்து எந்தவித தகவல்களும் இதுவரை வெளியாவில்லை. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 5 replies
- 3k views
-
-
வவுனியாவிலிருந்து மதவாச்சி வரை பஸ் பயணத்துக்கு அனுமதி தென் பகுதிக்கான போக்குவரத்து பாதிப்பு 2/4/2008 6:35:20 PM வீரகேசரி இணையம் - வவுனியாவில் இருந்து தென் பகுதிக்கு செல்லும் பொதுப் போக்குவரத்துக்கான தடையுத்தரவு தொடர்ந்து நிலவுவதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.வவுனியாவிலிருந
-
- 3 replies
- 1.7k views
-
-
புலிகளுக்கு எதிராக செயற்பட மனித உரிமை அமைப்புக்கள் அஞ்சுகின்றன-கெஹெலிய [Wednesday February 13 2008 12:17:08 PM GMT] [Naffel] மனித உரிமை மீறல்கள் குறித்து அரசாங்கத்திற்கு எதிராக குற்றங்களை முன்வைக்கும் மனித உரிமைகள் அமைப்புக்கள் புலிகளுக்கு எதிராக செயற்பட அஞ்சுகின்றன என தேசிய பாதுகாப்பு பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். குறிப்பாக புலிகளால் அண்மைக்காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் பாடசாலைகள் மாணவர்கள் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், இதற்கு கண்டனம் தெரிவிக்கக் கூட எந்தவொரு மனித உரிமை அமைப்பு முன்வரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். tamilwin.com
-
- 0 replies
- 916 views
-
-
இன்று காலை 7:00 மணியளவில் வவுனியா தட்டான்குளம் பகுதியில் கிளைமோர் வெடித்ததில் இரு ஆக்கிரமிப்பு இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் என இராணுவ பேச்சாளர் ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார் ஜானா
-
- 2 replies
- 1.7k views
-
-
இந்திய நிறுவனமொன்றுக்கு திருகோணமலையில் 900 ஏக்கர் நிலம் தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் விசேட வர்த்தக வலயமொன்றை இலங்கையில் அமைப்பதற்காக இந்திய நிறுவனமான மஹிந்து லைப்ஸ்பேஸ் தனியார் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. விசேட வர்த்தக வலயமொன்றை அமைப்பதற்காக திருகோணமலை கப்பல்துறை பிரதேசத்தில் 900 ஏக்கர் நிலம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு உரிய ஒப்பந்தம் இன்னும் 30 நாட்களுக்குள் கைச்சாத்திடப்படும் என இந்திய வர்த்தக அமைச்சர் ஜெயராம் ரமேஸ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் தொழில்நுட்ப பூங்கா சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட உள்ளது. இந்தப் பூங்காவை அமைப்பதற்கான ஒப்பந்த…
-
- 5 replies
- 1.9k views
-
-
எகிப்தில் கொலை செய்யப்பட்ட இலங்கையரின் சடலம் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது [13 - February - 2008] எகிப்தில் கொலை செய்யப்பட்ட எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்த வதுகே வஜிர புஸ்பகுமார என்ற 31 வயது நபரின் சடலம் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2007 டிசம்பர் 12 ஆம் திகதி எகிப்தில் உள்ள அவரது அறையில் வைத்து இவர் கொலை செய்யப்பட்டார். இவரிடமிருந்து பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்தவர்களே இவரைக் கொலை செய்துள்ளனர். இக்கொலை தொடர்பாக அங்கு தொழில்புரியும் இலங்கையர் ஒருவர் உட்பட இரு எகிப்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இவரது சடலம் விமானமூலம் கொண்டுவரப்பட்டு மரண விசாரணைக்காக நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டது. சட்ட வைத்திய அதிகாரி…
-
- 0 replies
- 1.4k views
-
-
மன்னார் மாவட்டத்தில் உள்ள பாலைக்குழிப் பகுதியில் இருந்து அடம்பன் நோக்கி முன்நகர்ந்த சிறிலங்காப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2.8k views
-
-
திருகோணமலையில் இந்திய அரசின் உதவியுடன் அமைக்கப்படவுள்ள அனல் மின் நிலையத்துக்கான அடிக்கல் இன்று நடப்படவுள்ளது. படையினரால் மீட்கப்பட்ட சம்பூர் பிர தேசத்தில் இந்த அனல் மின்நிலையத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் ஆரம்பத்தில் நடவடிக்கை எடுத்திருந்தது. ஆயினும்இ அந்தப் பிரதேசத்தில் மின் நிலையத்தை அமைப்பதற்கு இந்தியா விருப்பம் தெரிவிக்கவில்லை. அதனைய டுத்து மின் நிலையத்தை நகரில் இருந்து ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் கப்பல்துறை என்னும் இடத்தில் அமைக்க முடிவு செய் யப்பட்டுள்ளது. இந்திய அதிகாரியான எஸ்.சங்கரலிங் கம்இ மின்சக்தி அமைச்சர் டபிள்யூ. ஜே. செனவிரத்தின ஆகியோர் இணைந்து இன்று முற்பகல் 10 மணிக்கு மின் நிலை யத்துக்கான அடிக்கல்லை அங்கு நடவுள் ளனர். நன்றி உதயன்
-
- 1 reply
- 1.4k views
-
-
போரை நிறுத்தி அரசியல் தீர்வினைக் காணும் முகமாக சிறிலங்காவுடனான அபிவிருத்தி ஒத்துழைப்புக்களை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டுவர ஜேர்மனி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
ஸ்ரீபதியின் மறைவிற்காக வெள்ளைக் கொடி கட்டியோர் மீது மேர்வின் கொலை மிரட்டல் ஸ்ரீபதி சூரியாரச்சியின் மறைவையொட்டி கிரிபத்கொட நகரை அண்டிய பகுதியில் இடப்பட்டிருந்த வெள்ளைக்கொடிகள் மற்றும் பதாகைகளை அமைச்சர் மேர்வின் சில்வாவின் குண்டர்கள் குழு அகற்றியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மீண்டும் வெள்ளைக் கொடிகளை ஏற்றினால் கொலை செய்து விடுவதாக அமைச்சர் மேர்வின் சில்வா மிரட்டல் விடுத்துள்ளார். அண்மையில் திடீர் விபத்தொன்றில் அகால மரணமடைந்த ஸ்ரீபதி சூரியாரச்சியின் மறைவையொட்டி, அவர் தொகுதி அமைப்பாளராக கடமையாற்றிய களனிப் பகுதியின் பிரதான நகரமான கிரிபத் கொடவில் வெள்ளைக் கொடிகள் மற்றும் பதாகைகள் இடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் க…
-
- 1 reply
- 2.2k views
-
-
Posted on : Tue Feb 12 2:00:00 2008 புலிகளை தோற்கடிப்பதற்கு இந்தியா இலங்கை அரசுக்கு உதவவேண்டும் ஆனந்தசங்கரி லண்டனில் தெரிவிப்பு விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா உதவ வேண்டும். இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி. நெடுங்காலமாக நீடித்துவரும் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு எந்த ஒரு தீர்வுக்கும் விடுதலைப் புலிகள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆகையால் அவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். லண்டனுக்கு விஜயம் செய்துள்ள 74 வயதான ஆனந்தசங்கரி செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றின்போதே இவற்றைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: இலங்கையில் தமிழர்களுக்கு தனித…
-
- 9 replies
- 2.2k views
-
-
இதனை யூடியூப்பில் தரவேற்றிய நண்பர் bloodpoliticsகு நன்றிகள் 6 மாதத்துக்கு முன்னர் யூடியுபில் இணைந்து இன்றைவரை 272 காணொளிகளை தரவேற்றி அனைத்து காணொளிகளையும் ஒவ்வொருவரையும் கவரும் விதமாகவும் எமது நாட்டு நடப்பினை கண்டு எமது நிலையை உணரவைக்கும் முகமாகவும் செயற்பட்டுவரும் நண்பர் bloodpolitics கு இந்த தருணத்தில் நன்றிகள் இவரின் காணோளிகளை பார்வையிட http://youtube.com/user/bloodpolitics
-
- 0 replies
- 1.5k views
-
-
உயிர் அச்சுறுத்தல் நீங்கவில்லை நீதிமன்றத்தை நம்பி நாடு திரும்பினேன் - மனோ கணேசன் எம்.பி. கூறுகிறார் [Tuesday February 12 2008 08:24:03 PM GMT] [யாழினி] எனக்கு ஏற்பட்டுள்ள பாரிய உயிர் அச்சுறுத்தல் இன்னமும் நீங்கவில்லை. இருந்த போதிலும் நீதிமன்றத்தை நம்பியே நான் நாடு திரும்பியுள்ளேன் என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் மக்கள் கண்காணிப்புக்குழு ஏற்பாட்டாளரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபதி சூரியாராச்சியின் மரணம் துர்ப்பாக்கியமானதும் துரதிஷ்டவசமானதுமாகும். ஆனால் அவரது மரணத்தில் மர்மம் இருக்கின்றது. இது குறித்து சர்வதேச மட்டத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். …
-
- 2 replies
- 1.8k views
-
-
யாழ்ப்பாணம் ஏரிப் பகுதியில் அரியாலை தனங்கிளப்புப் பகுதிகளை நோக்கி புலிகள் ஆட்லறித்தாக்குதல் நடத்தியுள்ளதுடன் புலிகளின் படகுகளின் நடமாட்டமும் அவதானிக்கப்பட்டுள்ளதை அடுத்து இராணுவமும் பதிலுக்கு ஆட்லறி மற்றும் பல்குழல் வெடிகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. எனினும் இராணுவத்தின் தாக்குதல் அகோரம் புலிகள் நடத்திய பதில் தாக்குதலை அடுத்து 10 நிமிடத்துள் சமாளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நெட் கூறுகிறது. இதற்கிடையே மிகச் சமீபத்தில் தனங்கிளப்புப் பகுதியில் தரையிறங்கிய புலிகளின் அணி ஒன்று இராணுவக் காவலரண்கள் இரண்டை தகர்த்து இராணுவத்தின் ஒரு படகையும் கைப்பெற்றி மீண்டும் தளந்திருப்பியதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன..! LTTE, SLA exchange artillery fire across Jaffna lagoon. …
-
- 6 replies
- 3.3k views
-
-
வட கிழக்கில் 469 சிறுவர்கள் படையணிகளில் மோதல்களில் 45 பேர் பலி; 77 பேர் அங்கவீனம் - ஐ.நா. விசேட அறிக்கை [Tuesday February 12 2008 04:06:37 PM GMT] [யாழினி] வடக்கு கிழக்கு பகுதிகளில் கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் 2007 ஆகஸ்ட் 31 வரையான காலப் பகுதியில் 469 சிறுவர்கள் பலவந்தமாக படையணிகளில் இணைக்கப்பட்டுள்ளனர். இக்காலப் பகுதியில் மோதல்கள் காரணமாக 45 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 77 பேர் அங்கவீனர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். மோதல்கள் காரணமாக வடக்கு கிழக்கு பிரதேசத்தில் 261 பாடசாலைகள் அழிவடைந்துள்ளன என்று சிறவர்கள் மற்றும் ஆயுத மோதல்கள் தொடர்பான ஐ.நா. வின் விசேட ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் ஆயுத மோதல்கள் இட…
-
- 0 replies
- 1.6k views
-
-
மாலைதீவு ஜனாதிபதிக்கு "லங்கா மித்ர விபூசன" பட்டம் வழங்கப்படவுள்ளது 2ஃ12ஃ2008 3:14:58 Pஆ வீரகேசரி இணையம் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மாலைத்தீவு ஜனாதிபதி மஹ்மூத் அப்துல் கையூமிக்கு லங்கா மித்ர விபூசன என்ற சிறப்புப் பட்டம் இன்று வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான வைபவம் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. சுவாத்திய வேறுபாடுகள் குறித்து மாலைத்தீவு ஜனாதிபதி ஆற்றியுள்ள சேவையைப் பாராட்டும் வகையிலேயே இலங்கையில் வழங்கப்படும் இந்த உயர் தேசிய கௌரவப் பட்டடம் அவருக்கு வழங்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாலைத்தீவு ஜனாதிபதி மஹ்மூத் அப்துல் கையூம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று பிற்பகல் 4 மணியளவில் ஜனாதிபத…
-
- 3 replies
- 1.6k views
-
-
-
இரகசிய பொலிஸின் பதில் பொறுப்பதிகாரி நீதவான் பாதுகாப்பு பிரிவின் தலைவர் மீது தாக்குதல் இரகசிய பொலிஸின் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் சந்தன சில்வா, நீதவான் பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் தலைவர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சீசர் ரணவீர மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொம்பனித்தெருவில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசேட விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பயணித்த வாகனத்தை கொம்பனி வீதியில் வைத்து வெள்ளை வான் ஒன்றினால் வழி மறித்ததாகவும், அதிலிருந்து இறங்கிய நபர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மீது தாக்குதல் நடத்த…
-
- 2 replies
- 2.8k views
-
-
-
ஏ.பி புகைபடபிடிப்பாளர் சிவில் பாதுகாப்பு பிரிவினரால் கைது 2/12/2008 11:44:56 AM வீரகேசரி இணையம் - கொழும்பு இஸபத்தான கல்லூரியை அண்மித்த பகுதியை படமெடுத்த ஏ.பி. செய்தி சேவையின் புகைப்பட பிடிப்பளார் கெமுனு அமரசிங்க சிவில் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நாராஹென்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இவர் இஸபத்தானை கல்லூரியை அண்மித்த பகுதியை புகைப்படம் எடுத்த வேளை கைது செய்யப்பட்டுள்ளார். இதனருகே அமைச்சர் டக்ளஸ் தேவேனந்தவின் அலுவலகம் காணப்படிகின்றது. கைது செய்யப்பட்ட புகைப்படப் பிடிப்பாளரிடம் நாராஹென்பிட்டிய பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், சுதந்திர ஊகட அமைப்புக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 956 views
-
-
செவ்வாய் 12-02-2008 10:14 மணி தமிழீழம் [மயூரன்] நீர்கொழும்பில் வெள்ளைச் சிற்றூர்தியில் வந்த ஆயுததாரிகளால் தமிழ் வணிகர் கடத்தல் நீர்கொழும்பில் வெள்ளைச் சிற்றூர்தியில் வந்த இனம் தெரியாத ஆயுததாரிகளால் தமிழ் வணிகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்டவர் விமலன் என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றிரவு வெள்ளைச் சிற்றூர்தியில் வந்த ஆயுததாரிகளே, இவரை வீட்டில் வைத்துக் கடத்திச் சென்றுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 929 views
-
-
இலங்கை இராணுவம் தொடர்ந்து முன்னேறி வருவதால், ஆயுதங்களைக் கைவிடுவதைத் தவிர விடுதலைப் புலிகளுக்கு வேறு வழியில்லை என்று அந்நாட்டு ராணுவத் தளபதி சரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் போரில், ராணுவத்தை எதிர்த்து சமாளிப்பதற்கு போதிய படைபலமும், ஆயுதபலமும் இல்லாமல் புலிகள் தவித்து வருவதாகவும், அதனை புலிகளின் அமைப்பின் தலைவர் பிரபாகரன் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நாடு பிளவுபடுவதை தாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், ஆனால், இலங்கையில் எந்தப் பகுதியில வேண்டுமானலும் தமிழர் பாதுகாப்பாக வாழ அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சரத் தெரிவித்தார். தற்போது வடக்கில் இரண்டு மாவட்டங்களில் மட்டுமே …
-
- 4 replies
- 3.4k views
-
-
மன்னார் பண்டிவிரிச்சான் பகுதியில் மும்முனைகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
அண்மையில் வாகன விபத்தில் கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிறீபதி சூரியாராச்சியின் நண்பர்களை சிறிலங்கா காவல்துறையினர் அடையாளம் கண்டு பின்தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டுக்கு ஜே.வி.பி.க்கு அழைப்பில்லை [Monday February 11 2008 03:16:44 PM GMT] [யாழ் வாணன்] இந்திய மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இடதுசாரிக்கட்சியான ஜே.வி.பி.யிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1970ஆம் ஆண்டு முதல் மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வருடாந்த மாநாட்டுக்கு ஜே.வி.பி.க்கு அழைப்பு விடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்டின் வருடாந்தா மாநாடு கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேண்டுகோளை அடுத்தே கம்யுனிஸ்ட் மாநட்டிற்காக ஜே.வி.பி.யிற்க…
-
- 1 reply
- 1.4k views
-