ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142825 topics in this forum
-
வெற்றி மமதைப் போக்கை கைவிடக் கோரும் மகஜர் 29.12.2007 இயேசு பாலன் பிறப்பு தினத்துக்கும் புதுவருடத்துக்கும் இடைப்பட்ட பண்டிகைக்காலம் இது. இலங்கைத் தீவில் அல்லலுற்று, அவலப்பட்டு, அடக்கு முறைக்கும், நெருக்குவாரங்களுக்கும் உள்ளாகி, அனர்த்தங்களை எதிர்நோக்கி வரும் ஈழத் தமிழ் மக்களுக்கு இது பண்டிகைக்கும் கொண்டாட்டங்களுக்கும் உரிய காலம் அல்ல. கடந்து போகும் பண்டிகை நாட்களை அவற்றுக்குரிய மாண்புகளோடு அனுஷ்டிப்பதையே இப்போதைய கால கட்டத்தில் அவர்களால் பின்பற்ற முடியும். இதற்கு அப்பால், மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் திளைப்பதற்கான சூழல் அவர்களுக்கு இல்லை. ஈழத் தமிழர்களுக்கு என்றில்லை, இலங்கைத் தீவில் நீதி கோரும் நியாயம் வேண்டும் அனைத்து மக்களினதும் நிலைமை இதுதான். ஆட்கடத்தல்…
-
- 0 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை இன்று முற்பகல் அங்கிருந்த துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த கைதிகள் கொடூரமாகத் தாக்கியதில் இருவர் படுகாயமடைந்து உயிராபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1k views
-
-
சனி 29-12-2007 01:34 மணி தமிழீழம் [சிறீதரன்] போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல் தாய்மண்ணிற்காக தமது இன்னுயிர்களை ஈந்த போராளிகளின்விபரங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்டுள்ளனர். மன்னார் முள்ளிக்குளம் களமுனையில், நேற்று சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற மோதல்களின் பொழுது, வீரவேங்கை சீரரசன் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த கணபதிப்பிள்ளை சுபராஜ் என்ற போராளி களப்பலியாகியுள்ளார். கடந்த புதன்கிழமை மன்னார் மாவட்ட யுத்த களமுனையில் நிகழ்ந்த மோதல்களில் லெப்.கேணல் நிலவன் என்றழைக்கப்படும் யாழ் மாவட்டத்தை சேர்ந்த அல்பிரட் தங்கராசா டென்சில் ஜெனஸ்கோ என்ற போராளியும், அதே நாளில் மணலாறு களமுனையில் இடம்பெற்ற மோதல்களின் பொழுது, லெப்ரினன்ட் வர்ணகீதன் என்றழைக்கப்ப…
-
- 4 replies
- 1.9k views
-
-
உங்கள் பொன்னான வாக்குகளை போடுங்கள். http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmHome.aspx Active poll The APRC should propose A Unitary State with district as unit of devolution A Unitary State with province as unit of devolution A semi federal State with province as unit of devolution A full federal state with a merged North and East
-
- 7 replies
- 2.6k views
-
-
பெண்கள் நலன்புரி நிறுவனத்தின் தகவலின்படி சனிக்கிழமை காலை வடமராட்ச்சியில் இமையாணனுக்கு அருகில் யாழ்பாணம் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு சென்ற ஆயுதக்குழு அங்கிருந்த பெண்ணை அவரது வீட்டுக்கு அருகில் இருந்த பற்றைக்குள் இழுத்துச்சென்று குழுவாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியாக தெரியவருகிறது. இதனையடுத்து மயக்கமுற்றநிலையில் இருந்த குறிப்பிட்ட பெண்ணை மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பின்னர் யாழ்பாண வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரியவருகிறது. ஊடகங்களுக்கு தெரியப்படுத்திய பெண்கள் நலன்புரி நிறுவனம் பெண்ணினது பெயரை ஊடகங்களுக்கு தெரியப்படுத்த விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்கள்
-
- 0 replies
- 1.5k views
-
-
பூசா தடுப்பு முகாமில் தடுத்துவைத்த 60 தமிழர்கள் விடுதலை [saturday December 29 2007 04:13:27 AM GMT] [யாழினி] கொழும்பு பிரதம நீதிபதியால் பூசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 60 தமிழ் பொதுமக்கள் குற்றம் புரிந்தமைக்குரிய எதுவித ஆதாரமும் இல்லாததால் விடுதலைசெய்யப்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் அண்மையில் கொழும்பில் இரு குண்டுகள் வெடித்தபோது மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையில் 2000 ற்கு மேற்பட்ட தமிழ்பொதுமக்கள் கைது செய்யப்பட்டபோது கைதானவர்கள் எனவும் இன்னமும் 400 ற்கு மேற்பட்ட பொதுமக்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது. http://tamilwin.net/article.php?artiId=595...;token=dispNews
-
- 0 replies
- 937 views
-
-
இலங்கை டெய்லிநியூஸ் பத்திரிக்கைக்கு கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கொட்டபாய ராஜபக்ச '' I think the most sensible thing is that we must end this Ceasefire Agreement by officially declaring there is no Ceasefire Agreement. Why should we hoodwink the people by saying there is a Ceasefire Agreement?,” என்றார். அவரது இந்த அறிவிப்பு அடுத்த ஆண்டு முழு அளவில் அரசு போரை முன்னெடுக்கவுள்ளதையே காட்டுகிறது. புலிகள் மீதான தடையை அரசு அறிவிக்குமானால் இலங்கையில் இருக்கும் உள்ளூர், சர்வதேச ஊடகவியளாளர்கள் புலிகளை நேரடியாக இலங்கையில் இருந்து தொடர்புகொள்ளமுடியாத நிலையேற்படும். இது ஈழப்போர்-4 குறித்த உண்மை நிலவரம் வெளிவருவதை தடுக்கும் அல்லது தாமதப்படுத்தும். டெய்லிந…
-
- 7 replies
- 2.3k views
-
-
தன்னினத்தைக் காட்டிக் கொடுப்பவனை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது-மாயா- விடுதலைப் போராட்டம் என்பது பெரும் விலைகொடுத்து நடத்துவது. மனிதர்களுக்கு அடிப்படைச் சுதந்திரம் உண்டு. அடிப்படை மனித உரிமைகளை அடையவிடாது தடுப்பதும், இடையூறு விளைவிப்பதும் தவறாகும். இந்த வகையில் சகல நாடுகளிலும் ஒரு விதிவிலக்கு உண்டு. எனினும் எல்லா வகையான உரிமைகளையும் ஒவ்வொரு பிரசையும் அடையவும், ஒவ்வொரு பிரசைக்குமான பாதுகாப்பை வழங்கவும் அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. எனினும் உரிமைகள் தொடர்பில் பேசுவோர் மிக அதிகமாகவும், கடமைகள் பற்றிப் பேசுவோர் மிகக் குறைந்தோராக வும் காணப்படுகின்றனர். போகிற போக்கில் பேசுவது போல நாட்டு நடப்புகளைப் பேசுவோர் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் போராட்டத்தைக் க…
-
- 0 replies
- 1.5k views
-
-
Posted on : 2007-12-28 மகிந்தரின் பெருமிதம் தென்னிலங்கையில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற் றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது அரசு அண்மைக் காலத்தில் களமுனைகளில் இராணுவ ரீதியாகவும் சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர ரீதியாகவும் பெரு வெற்றிகளை ஈட்டி யிருப்பதாகத் தெரிவித்துப் பெருமிதம் கொண்டிருக்கின்றார். கிழக்கில் நிலப்பரப்புகளை விடுதலைப் புலிகள் வசம் இருந்து மீட்டமையையும், சர்வதேச மட்டத்தில் தமது யுத்த வரவு செலவுத்திட்டத்துக்கு பெருமளவு நிதியைப் பெற் றுக்கொண்டமையையும் இத்தகைய பெரும் சாதனையாக அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழீழ காவல்துறையின் புதிய பொறுப்பாளராக இளங்கோ நியமனம் [Friday December 28 2007 03:35:18 PM GMT] [saravanan] தமிழீழ காவல் துறையின் புதிய பொறுப்பாளராக இளங்கோ இன்று தமிழீழ தேசியத்தலைவரால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேசியத்தலைவரால் 16 வருடங்களுக்கு முன்பு தமிழீழ காவல் துறை ஆரம்பிக்கபட்டது. கடந்த 16 வருடங்களாக பா.நடேசன் பொறுப்பாளராக பதவி வகித்து வந்தார். கடந்த காலங்களில் தமிழீழ காவல் துறை தனது சேவையை நேர்மையாகயும் பெறுமதியாகவும் சட்டம் வழியில் பேணி வந்துள்ளது. tamilwin.com
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தினால் புலிகளின் குரலை இலகுவில் நசுக்கி விட முடியாது என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 857 views
-
-
மணலாறு சிலோன் தியேட்டர்ப் பகுதியில் உள்ள வெடிவைத்த கல்லுப்பகுதிக்குள் இன்று ஊடுருவி கிளைமோர் தாக்குதல் நடத்த வந்த சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டியடிதுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 899 views
-
-
Hillary Clinton ன் செவ்வி காணொலியில்
-
- 0 replies
- 2k views
-
-
அறுகம்பே கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட இந்தோனேஷிய கப்பல் கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளது-இராணுவ பேச்சாளர் [Friday December 28 2007 01:40:30 PM GMT] [யாழ் வாணன்] அறுகம்பே கடற்ப்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்தோனேஷிய கப்பல் இன்று காலியிலிருந்து கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். கப்பல் கைப்பற்றப்பட்ட தினமன்றே காலி துறைமுகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டதோடு, மேலதிக விசாரணைக்காக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்படவுள்ளதாக அவர் கூறினார். அத்தோடு, கப்பலில் வைத்து கைது செய்யப்பட்ட 12 இந்தோனேஷிய பிரஜைகளிடமும் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பிரிகேடியர் உதய நாணயக்கார கூற…
-
- 0 replies
- 1.1k views
-
-
கடந்த வாரங்களில் சிங்கள தேசத்தின் ஊடகங்களிலும், சிங்களத்திற்கு சார்பான தமிழ் ஊடகங்களிலும் வன்னி குறித்து இரண்டு பரபரப்பான செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. தமிழீழ நிர்வாகம் வன்னியில் செயலிழந்து விட்டது என்பது ஒன்று, தேசியத் தலைவர் விமானக் குண்டுவீச்சில் காயமடைந்து விட்டார் என்பது மற்றொன்று. இந்த இரண்டு செய்திகளும் புலம்பெயர்ந்து வாழும் மக்களில் சிலரிடம் குழப்பங்களை ஏற்படுத்தியதைக் காணக் கூடியதாக இருந்தது. இந்தச் செய்திகள் மிகவும் திட்டமிட்டு திறமையான முறையில் வெளிக்கொணரப்பட்டிருந்தன. கடந்த வாரங்களில் வன்னியில் உள்ள விடுதலைப் புலிகளின் பணியகங்களின் தொலைபேசிகள் செயலிழந்து போயிருந்தன. சில பணியகங்களில் தொலைபேசி மணி அடித்தும் யாரும் எடுக்கவில்லை. தொடர்ந்து ஒரு சில நாட்…
-
- 19 replies
- 4.6k views
-
-
மட்டக்களப்பில் துணை இராணுவக் குழுவினரது கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் எதுவித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அவல நிலையை மட்டக்களப்பு சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதியான ஜெயக்குமார் விவரித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 846 views
-
-
யாழ். முகமாலை கண்டல் பகுதியில் நேற்று மாலை தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்த மிதிவெடியில் சிக்கி சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்துடன் மேலும் 5 படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 851 views
-
-
ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பு சீர்குலைக்கப்பட்டமையாலே ஆழிப்பேரலை மீளமைப்பு முயற்சிகள் பாதிக்கப்பட்டன என்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
சிறீலங்கா இனப்பிரச்சனை இந்தியாவிற்கு ஒரு பாடம் சிறீலங்கா இனப்பிரச்சனை தென் கிழக்காசிய நாடுகளுக்கு ஒரு பாடமாக அமையும். அதிலும் குறிப்பாக இந்தியாவுக்கு ஒரு சிறந்த பாடத்தை புகட்டியிருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அரசியல்வாதிகள் ஒரு போதும் இனவாதத்தை தம் இனத்திற்குள்ளே வளர்க்கக் கூடாது. அதன் விளைவு அந்நாட்டை நிரந்தர கண்ணீரில் மூழ்க வைக்கும் என சிறீலங்கா இனப்பிரச்சனையின் அறிவுசார்புடைய எஸ்.டி.முனி அவர்கள் தெரிவித்துள்ளார். பல் இனக் குழுமங்களைக் கொண்டதொரு நாடு இந்தியா. இந்தியாவிலும் ஆங்காங்கே பிரிவினைவாதங்கள் அதிகரித்துள்ளன. அவ்வகையில் சிறீலங்காவின் இனப்பிரச்சனை உலக சனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றது எனவும், இந்தியாவுக்கு நற்பாடத்தை புகட்டியிருப்பத…
-
- 2 replies
- 2k views
-
-
26.12.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....f55d4182bf88826
-
- 0 replies
- 1.5k views
-
-
மட்டு. மாநகரசபை உட்பட ஒன்பது உள்ளுராட்சிச் சபைகளுக்கான தேர்தலுக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான திகதியை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மட்டு மாவட்ட அமைப்பாளன் ரி.சிவானந்தராஜா ஒருங்கிணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கான கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு ஏனைய அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாளை சனியன்று மட்டு. ஈ.பி.டி.பி காரியாலயத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு புளொட், ரி.எம்.வி.பி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்மநாபா அணி) ஆகிய அமைப்புகளுக்கும் ஈ.பி.டி.பி அழைப்பு விடுத்துள்ளது. கிழக்கு மாகாண மக்களுக்கான இந்த உள்ளுராட்சிச் சபைத் தேர்தலில் ஐக்கியப்பட்டு ஒருங்கிணைந்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ் குடாநாடடில் இதுவரை காலமும் கடத்தப்பட்வர்கள் எங்கே? தினமும் இடம்பெற்று வரும் கொலைகளுக்கெதிராக படையினர் மேற்கொண்ட நடவடிக்ககைள் என்னவென யாழ். மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறியிடம் கேள்வியெழுப்பயுள்ள யாழ். மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் அராஜகங்கள் முடிவுக்கு வராவிட்டால் புதிய ஆண்டுத் தொடக்கத்திலிருந்து போரட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக யாழ்.மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 'யாழ் குடாநாட்டில் இடம் பெற்று வரும் கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்களுக்கும் படையினரும் அவர்களுடன் சோந்தியங்கும் ஆயுதக்குழுக்களுமே காரணம் என்பதை அனைவரும் நன்கற…
-
- 1 reply
- 1.7k views
-
-
-
- 1 reply
- 3.4k views
-
-
குடத்தனையில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் படை அதிகாரியின் சடலம் மீட்பு வடமராட்சி கிழக்கில் சிறீலங்கா படை அதிகாரி ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி குடத்தனையில் இன்று காலை இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. குடத்தனைக் கடற்கரையில் அமைந்துள்ள கடற்கரை கண்காணிப்பு காவலரண் அருகே இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட படை அதிகாரி லெப்ரினட் பண்டார என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது சடலம் கொழும்பு கொண்டு செல்லப்படுகின்றது. http://www.pathivu.com/
-
- 2 replies
- 2.2k views
-
-
கிழக்கு மாகாணத்தை தன்னுடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவுக்கு தாரை வார்க்கத் திட்டமிட்டுச் செயற்படும் மஹிந்த அரசு, அதன் முதற்கட்டமாக உள்ளுராட்சித் தேர்தலை அவசர அவசரமாக அங்கு நடத்தத் திட்டமிட்டடுள்ளது எனக் குற்றம் சுமத்தியுள்ளது த.தே.கூட்டமைப்பு. அரசின் இந்தச் சதித்திட்டத்திற்கு எதிராக விரைவில் நீதிமன்றம் செல்லத் மதீர்மானித்திருக்கும் கூட்டமைப்பு, அது தொடர்பாக சட்ட வல்லுநர்களின் ஆலோசகைனைகளை நடத்தி வருகின்றது என தெரிய வருகின்றது. 'மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை காலமும் ஒத்திவைக்கப்ட்டுவந்த 9 உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தல் வேட்பு மனுக்களை அரசு கோரியுள்ளது. 'கிழக்கில் அரச துணையுடன் ஆயுதக் குழுக்களின் அட்டகாசம் கேட்பாரற்று அரங்கேறிவரும் நிலையில் நீதியான - நியாய…
-
- 2 replies
- 1.6k views
-