ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
ஈழவேந்தனின் இடத்துக்கு இமாம் தேசியப் பட்டியல் எம்.பியாகிறார் தமிழ்க் கூட்டமைப்பில் முஸ்லிம் ஒருவருக்கு இடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்த ஈழவேந்தன் அப் பதவியை இழந்தமையை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு தமிழ்த் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் எம்.பியாக முஸ்லிமான சட்டத்தரணி ரஸீன் முகம்மது இமாம் (வயது 63) நியமிக்கப்பட்டிருக்கின்றார
-
- 5 replies
- 1.8k views
-
-
காலாவதியான காகிதத் திட்டத்துக்கு உயிர் கொடுத்து உசுப்பேற்றும் முயற்சி 24.01.2008 அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினர்களையும் ஏனைய சில கட்சிகளின் தலைவர்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் மாலையில் தமது அலரி மாளிகை இல்லத்துக்கு அழைத்துப் பேச்சு நடத்தினார். அதிகாரப் பகிர்வுக்கான முன்னேற்பாடாக அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் கூறப்பட்டவற்றைத் தாம் நடைமுறைப்படுத்த விழைகின்றார் என்ற தகவலை ஜனாதிபதி அங்கு கூடியிருந்த கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு எடுத்துரைத்தார். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் 1988 இல் இந்திய அமைதிப்படைகளின் பிரசன்ன காலத்தில் கொண்டுவரப்பட்டதே அரசமைப்பின் இந்த 13 ஆவது திருத்தம். அதை அப்போது முழு அளவில் எதிர்த்த மஹிந்தர் அணியே…
-
- 0 replies
- 902 views
-
-
22.01.08 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....15fa3c5a946e826
-
- 3 replies
- 2.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலில் கடந்த ஒரு வருடமாக ஒலிபரப்பாகிய "பாதை" தொடர் நாடகத்தின் படைப்பாளிக் கலைஞர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 850 views
-
-
இந்தியாவினால் இலங்கைக்கு நவீன நீர்மூழ்கி படகு அன்பளிப்பு. The Sri Lankan Navy has put in place an underwater defence system between Kachchatheevu and Neduntheevu (Delft Island) as part of efforts to curtail the movement of Sea Tigers of the LTTE. A communication about laying of sea mines was sent to the Indian Navy, the Indian media reported.
-
- 7 replies
- 3.8k views
-
-
சிறிலங்கா வான் படையினர் இன்று நடத்திய தாக்குதல் குறித்து வெளியிடப்படும் தகவல்களை மலிவுப்பரப்புரை என்று வர்ணித்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன், இந்த தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என்று "புதினம்" இணையத்தளத்திடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 2.4k views
-
-
வன்னி மற்றும் வட போர்முனைகளில் இடம்பெற்ற தாக்குதல்களில் 4 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 959 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பரின் கருத்துக்களைக் கண்டித்து கொழும்பில் உள்ள ஐ.நா. தூதரகத்திற்கு முன்பாக இன்று ஜே.வி.பி. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2.3k views
-
-
அரசும், பிள்ளையான் குழுவும் ஒப்பந்தம் சிறீலங்கா அரசும், பிள்ளையான் ஒட்டுக் குழுவும் மட்டக்களப்பு உள்ளுராட்சித் தேர்தலில் கூட்டாகப் போட்டியிடுவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இன்று (புதன்கிழமை) மதியம் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பாக அதன் பொதுச்செயலர் சுசில் பிறேம்ஜயந்தவும், ஒட்டுக்குழு சார்பாக பிள்ளையானும் கையெழுத்திட்டுள்ளனர். கொலை, கடத்தல், கொள்ளை, சிறுவர்களை படையில் இணைத்தல் போன்றவற்றுக்கு அனைத்துலக அரசு, மற்றும் மனித உரிமை அமைப்புகள் மட்டத்தில் கண்டனத்திற்கு உள்ளாகிவரும் பிள்ளையான் ஒட்டுக் குழுவுடன் சிறீலங்கா அரசு ஒப்பந்தம் செய்துள்ளமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. http://www.pathivu.com/i…
-
- 7 replies
- 1.7k views
-
-
கடந்த சில தினங்களில் (திங்கள் உட்பட) மன்னார் கள முனைகளில் சிறீலங்காப் படைகளுடன் நடை பெற்ற மோதலில் வீரச்சாவடைந்து சிறீலங்காப் படையினரால் கைப்பெற்றப்பட்ட புலிகளின் உடலங்களை சிறீலங்காத் தரப்பு ஓமந்தையில் வைத்து ஐ சி ஆர் சியுனூடு புலிகளிடம் கையளித்துள்ளது..! கள முனைகளில் பல இளம் பெண் போராளிகளின் உடலங்கள் கைப்பெற்றப்பட்டு அவை இராணுவ இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டு வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது..! ICRC hands over 9 bodies to LTTE in Oamathai [TamilNet, Wednesday, 23 January 2008, 08:59 GMT] International Committee of Red Cross (ICRC) officials in Vavuniyaa handed over nine dead bodies to Liberation Tigers of Tamil Eelam (LTTE) at Oamanthai in LTTE co…
-
- 3 replies
- 2.7k views
-
-
சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் தாக்குதல்களைத் தொடர்ந்து அரசாங்கம் அந்தப் பகுதியில் 8,000 படையினரை குவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-
-
வடபோர்முனையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி நிலைகள் மீது தாக்குதல்களை நடத்தி அதிக சேதங்களை உண்டு பண்ணுமாறு சிறிலங்காப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.4k views
-
-
கிழக்கு உள்ளூராட்சித் தேர்தல்: தமிழ்க் கூட்டமைப்பு இன்று முடிவு [Wednesday January 23 2008 07:36:36 AM GMT] [யாழ் வாணன்] மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், உயர்நீதிமன்ற வழிகாட்டலின்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் நேற்று முன்தினம் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இத்தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாடு குறித்து கூட்ட மைப்பு இன்று தீர்மானம் எடுக்கவுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு இது தொடர்பில் இன்று கூடி ஆராய்ந்து இறுதி முடிவை மேற்கொள்ளும் என்று கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான என். சிறிகாந்தா நேற்றுத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் …
-
- 0 replies
- 673 views
-
-
இன நெருக்கடிக்கான இறுதித் தீர்வுத்திட்டத்தை தயாரிப்பதற்காக அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் உருவாக்கப்பட்ட அனைத்து கட்சிக்குழு எந்தவித தீர்வுத்திட்டத்தினை தயாரிப்பதில் தோல்வி கண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்த அனைத்து கட்சிக்குழு இதுவரை 58 தடவைகள் ஒன்றுகூடி தீர்வுத்திட்டம் குறித்து ஆராய்ந்த போதும் இறுதியில் எதுவித முடிவையும் எட்ட முடியவில்லை என்று அனைத்து கட்சிக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் தீர்வுத்திட்டம் அமைய வேண்டும் என்று இறுதிக்கட்டத்தில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கொடுத்த அழுத்தமே அனைத்து கட்சிக்குழுவின் இதுவரையான முயற்சிகள் தோல்வியில் முடியக்காரணமாக அமைந்து…
-
- 0 replies
- 860 views
-
-
புதன் 23-01-2008 12:55 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] 19 வயது இளம்பெண் மீது பாலியல் வலோற்காரம் வேலை தேடிச் சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பாலியல் வலோற்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மருதானை தொழில் வழங்கும் முகவர் நிறுவனத்தில் இணைந்து செயற்படும், வெளிநாடுகளில் வேலை வாய்ப்பைத் தேடித் தரும் நிறுவனப் பணியாளர்கள் இருவர் மீது பாலியல் வலோற்காரம் புரிந்ததற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்னுக்கு, பாலியல் வலோற்கார குற்றச்சாட்டுக்கு ஆட்படுத்தப்பட்டிருக்கும் இருவருமே மருதானை விடுதியில் அப்பெண் தங்குதவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர். குறுகியகாலத்தில் கரடியனாறு திரும்பிய இளம்பெண் ந…
-
- 0 replies
- 1.5k views
-
-
கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் இளைஞரொருவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக காணாமல் போன இளைஞரது உறவினர்கள் பிரதி அமைச்சர் இராதா கிருஷ்னனிடம் முறைப்பாடு செய்துள்ளனர். காணாமல் போன இளைஞர் யாழ்பாணம் நீர்வேலியை சேர்ந்த மார்கண்டு சுமன்(வயது25) ஆவார். நிர்மாண பகுதியொன்றில் பணியாற்றிவருகிறார்.கடந்த வெள்ளிக்கிழமை மதிய உணவிற்காக வேலையிலிருந்து வீடு திரும்பிய வேளை காணாமற் போயுள்ளதாக அம் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதி அமைச்சர் இராதா கிருஷ்னன் இவ் இளைஞன் காணாமல் போயுள்ளமை தொடர்பாக விபரங்களை கொழும்பிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளார். -வீரகேசரி இணையம் -
-
- 0 replies
- 852 views
-
-
மட்டக்களப்பு உள்ளூராட்சி தேர்தலை பகிஷ்கரிக்க ஐ.தே.க தீர்மானம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ள 9 உள்ளூராட்சி சபை தேர்தலில் பஹிஷ்கரிக்க ஐக்கியதேசிய கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் பிரதிநிதி இன்று கூடி நீண்ட நேரம் இவ் விடயம் குறித்து ஆராய்த பின் இத்தீர்மானத்தை எடுத்ததாக ஐ.தே.க வின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் தற்போதைய நிலை குறித்து திருப்தியடைய முடியாமலுள்ள அதேவேளை வேட்பாளரின் பாதுகாப்பு,மற்றும் சில ஆயுதக்குழுக்கள் தேர்தல் நடவடிக்கைகளிற்கு இடையூறு விளைவித்து வருவதாகவும் அவர் சுட்டு காட்டினார். -வீரகேசரி இணையம் -
-
- 3 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சியில் புலிகளின் இலக்குகள் மீது தாக்குதல் கிளிநொச்சி இரணைமடு கிழக்கு கலாமக்குளம் பகுதியில் இன்று முற்பகல் ஸ்ரீலங்கா விமானப்படையினர் விமானத்தாக்குதல் நடத்தியுள்ளனர். விடுதலைபுலிகளின் முக்கிய முகாமொன்றின் மீது இன்ரு முற்பகல் 11.15 மணியளவில் விமானபடையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ் இலக்கு குறித்த பகுதியில் காட்டுப்பகுதியிலுள்ள விடுதலைப்புலிகளின் இராணுவ இலக்கு மீது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.. -வீரகேசரி இணையம் -
-
- 5 replies
- 4.5k views
-
-
புதன் 23-01-2008 12:19 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] சிறீலங்கா அரசு அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும்: வேண்டுகோள் விடுக்கின்றன இந்தியாவும் பிரித்தானியாவும் சிறீலங்கா அரசு அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை விரைவில் முன் வைக்கும் என இந்தியாவும் பிரித்தானியாவும் எதிர்பார்க்கின்றன. இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரித்தானிய பிரதமர் கோல்டன் பிரவுண்னும், இந்திய பிரதமர் மன்மோன் சிங்கும் கூட்டாக பேச்சுவார்த்தை நடாத்திவிட்டு வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்ட எதிர்பார்ப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், சிறீலங்காவின் இனப்பிரச்சனைக்கு இராணுவ நடவடிக்கை எப்பொழுதும் தீர்வாக அமையாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கி
-
- 0 replies
- 676 views
-
-
கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் 12 பேரை கடத்திய சிறிலங்கா கடற்படை! கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 599 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் அதிகாலை மீன் பிடிக்க சென்றனர். இதில், 596 படகுகள் நேற்று காலையில் கரை திரும்பிவிட்டன. ஆனால் 3 படகுகளில் சென்ற 12 மீனவர்கள் மட்டும் கரைக்கு திரும்பவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் 12 மீனவர்களை சிறிலங்கா கடற்படையினரால் கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது. தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிர…
-
- 1 reply
- 7k views
-
-
கடல் வழிப் பாதுகாப்பு தீவிரமடைந்ததால் புலிகளின் போரிடும் ஆற்றல் பாதிப்பாம்! கடல் பாதுகாப்பு குறித்து சர்வதேச அளவில் அதிகரித்துவரும் கரிசனையும், பிராந்திய ஒத்துழைப்பும் விடுதலைப் புலிகளின் போரிடும் ஆற்றலைப் பாதித்துள்ளன என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடற்படையைப் பொறுத்தவரை அழிப்பதை விட கண்டுபிடிப்பதே முக்கியமானது எனவும், சர்வதேச அளவில் இதற்கான ஒத்துழைப்பு அதிகரித்துள்ளதாகவும் இராணுவ அதிகாரி ஒருவர் "இந்தோ ஆசிய' செய்திச் சேவைக்குக் குறிப்பிட்டுள்ளார். அந்தமானின் போர்ட் பிளயரில் 12 நாடுகளின் கடற்படைகள் பங்குகொள்ளும் மாநாட்டிற்கு இந்திய கடற்படை ஏற்பாடு செய்துள்ளதையும் இலங்கையின் "சுரனிமல' எனும் கப்பல் கடற்படையதிகாரியொருவரின் தலைமையில் அதில் கலந்து கொள்ளவுள்ளதைய…
-
- 11 replies
- 3.1k views
-
-
அழுத்தத்துக்கு அடிபணியும் நிலையில் சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழு 23.01.2008 "பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதை' ஆகியிருக்கின்றது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கலந்துரையாடல். பிரதான எதிர்க்கட்சிகளான ஐ.தே.க., ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அமர்வுகளில் பங்குபற்றுவதில்லை. ஐ.தே.கட்சியும், ஜே.வி.பியும் அதன் அமர்வுகளில் இருந்து முற்றாக விலகிக் கொண்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த அமர்வுகளுக்கு அழைக்கப்படவேயில்லை. இந்த நிலைமையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இப்போதுள்ள பெரும்பாலும் எல்லாக் கட்சிகளுமே அரசில் அங்கம் வகிப்பவைதான். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் "எடுபிடி'களாக அமைச…
-
- 0 replies
- 824 views
-
-
மக்களின் சுயாதிபத்தியம் பாதிக்காத வகையில் ஜனநாயக அரசியல் தீர்வே நாட்டுக்கு அவசியம் - என்கிறார் ரணில் அரசியலமைப்பின் பிரகாரம் மக்களின் சுயாதிபத்தியம் பாதுகாக்கப்படல் வேண்டும் மக்களின் சுயாதிபத்தியம் பாதிக்காத வகையிலான அரசியல் தீர்வொன்றே நாட்டிற்கு அவசியமாகவுள்ளது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதி ர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டையும் மக்களையும் பயங்கரவாதத்திலிருந்து மட்டு மல்லாது ஏகாதிபத்தியத்திலிருந்தும் பாதுகாக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார். தேசிய தொழிலாளர் சங்க கட்டிடத்தில் தொழில்தருணர்கள், பல்கலைகழக பேராசிரியர்கள், மற்றும் பேராளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு…
-
- 0 replies
- 675 views
-
-
அதிகாரப் பகிர்வுத்திட்டம் சிறீலங்கா அரசால் முன்வைக்கப்பட்டால், ஆட்சி கவிழ்க்கப்படும்: விமல் வீரவன்ச எச்சரிக்கை சிறீலங்கா அரசு அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை முன்வைக்குமேயாயின், அது சிறீலங்கா படையினருக்கு இழைக்கப்படும் துரோகமாகும். வடக்கிலும் கிழக்கிலும் எமது வெற்றிக்காக இராணுவ வீரர்கள் தமது உயிர்களை அர்ப்பணித்து அளப்பரிய தியாகங்களை செய்துள்ளனர். இந்நிலையில் அதிகாரப் பகிர்வுத்திட்டத்தை முன்வைப்பது படையினருக்கு இழைக்கபடும் துரோகம் என்பதோடு, ஐக்கிய சிறீலங்காவை காப்பாற்ற முயன்ற மக்களையும் ஏமாற்றியதாக அமையும். இவ்வாறு ஜனதா விமுக்தி பெரமுனவின் பிரச்சார பேச்சாளர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சிறீலங்கா படைத்தரப்பினருக்கு அடுத்தடுத்துக் கிடைத்த வெற்றியை முறிவடை…
-
- 0 replies
- 873 views
-
-
இலங்கை இனப்பிரச்சனைக்கு இராணுவ வழியில் தீர்வினைக் காணமுடியும் என்று தான் நம்பவில்லை என இலங்கை ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சரும், முப்படைகளின் தளபதியுமாகிய மஹிந்த ராஜபக்க்ஷ இன்று தெரிவித்திருக்கிறார். செவ்வாய்க் கிழமையன்று அலரி மாளிகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பத்திரிகையாசிரியர்கள் ஆகியோருடன் நடத்திய விசேட சந்திப்பொன்றின்போது கருத்துவெளியிட்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றே காணப்படவேண்டுமென்று கூறியுள்ள அதேவேளை நாட்டில் பயங்கரவாதத்தினை முற்றாக ஒழிக்க தனது அரசு தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுக்குமென்றும் தெரிவித்தார். அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவிடம் இனப்பிரச்சினைத் தீர்விற்கான ஒரு …
-
- 6 replies
- 2.1k views
-