ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
சோமாலிய நாட்டின் ஒருபகுதியில் 16 ஆண்டுகளுக்கு முன்னர் "சோமாலிலாந்த்" என்ற பெயரில் புதிய சுதந்திர நாடாக ஒருதலைபட்சமாக பிரகடனம் செய்யப்பட்டதை விரைவில் அமெரிக்கா அங்கீகரிக்கக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
அலெக்சா இணையதளம் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி இலங்கையில் அதிகம் பார்க்கப்படும் இணையதளங்களின் வரிசையில் முதலில் நிற்பது யாகூ.கொம் ஆகும். முதல் நூறு இணையதளங்களில் 27வது இடத்தில் புதினம்.கொம் இருக்கிறது. அலெச்சா.கொம்மிம் கணிப்பின்படி இலங்கையில் அதிகம் பார்க்கப்படும் தமிழ் இணையம் புதினம்.கொம் ஆகும் விரிவான விளக்கத்துக்கு கீழ் உள்ள இணைப்புக்கு போகலாம் http://www.alexa.com/site/ds/top_sites?cc=...y&lang=none
-
- 0 replies
- 2k views
-
-
சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதர் டொமினிக் சில்கொட்டை வெளியேற்ற வேண்டும் என்று ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றில் விமல் வீரவன்ச நேற்று வெள்ளிக்கிழமை பேசியதாவது: தமிழர் போராட்டத்தை ஆதரித்த சில்கொட்டின் கருத்துகள் மிகவும் பாரதூரமானவை. அதனை அவர் திரும்பப் பெற வேண்டும். அல்லது பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். அவரை சிறிலங்காவுக்கான தூதர் பணியிலிருந்து நீக்கச் செய்து வெளிநாட்டு தூதர்களுக்கு ஒரு பாடத்தை கற்பிக்க வேண்டும் என்றார் அவர். -Puthinam-
-
- 0 replies
- 978 views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை 13. இவ் அவசிய அறிக்கை தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களை நினைவு கூருகின்றது. http://www.yarl.com/videoclips/view_video....ee5a9d336962c53
-
- 0 replies
- 1.7k views
-
-
"சிறிலங்காவின் இராணுவ மயமாக்கப்பட்ட அரசாங்கமானது" வெளிநாட்டுத் தூதுவர்களுடன் மோதலைக் கடைப்பிடிக்கின்றது என்று அனைத்துலக செய்தி நிறுவனமான ஏஃஎப்.பி. கடுமையாகச் சாடியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.7k views
-
-
ஐரோப்பிய பயங்கரவாதப் பட்டியலில் உள்ளடக்கப்பட்ட 2 கொலம்பிய, பாலஸ்தீன அமைப்புகளுக்கு உதவுவதற்காக அந்த அமைப்புக்களின் அடையாளங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகளை விற்பனை செய்த 7 நபர்களுக்கு எதிரான வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதுடன் குறிப்பிடப்பட்ட இரண்டு அமைப்பும் டென்மார்க் சட்டங்களுக்கு அமைய பயங்கரவாத அமைப்புக்கள் அல்ல எனவும் கூறப்பட்டுள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருத்து கூறுகையில், தாம் இந்த வழக்கின் முலம் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடுபவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்பதையே வெளிக்காட்ட முயன்றதாகவும், அதில் தாங்கள் வெற்றி கண்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் வா…
-
- 4 replies
- 2.9k views
-
-
கனடா டிச 13: மலேசியாவில் தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்களைக் கண்டித்து கனடாத் தமிழர் தலைநகர் ஒட்டாவாவில் மலேசியத் தூதரகம் முன்பாக, அமைதிப் பேரணி ஒன்றை நடத்தியிருக்கின்றனர். கடந்த புதன்கிழமை நண்பகல் இடம் பெற்ற இந்தப் பேரணியில் ரொரான்ரோ மொன்றியல் ஒட்டாவா போன்ற நகரங்களில் இருந்து வந்த மக்கள் கலந்துகொண்டிருந்தனர். அனைத்துலகத் தமிழர் ஒருமைப்பபாட்டுக் கழகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இப் பேரணியில், வேறு பல அமைப்புகளும் கலந்து கொண்டன. பல மலேசியத் தமிழர்களும் கலந்து கொண்டு தம் மக்களுக்காகக் குரல் எழுப்பினர். மலேசியத் தமிழர்கள் ஏனைய மக்களைப்போல் சமமாக நடத்தப்பட வேண்டும். அங்கு மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும். காவற்துறையினர் வனிமுறைகள…
-
- 1 reply
- 1.3k views
-
-
சர்வதேச வலைப் பின்னல் இந்தச் சமயத்தில் யாருக்காக? 15.12.2007 சர்வதேச விவகாரங்களை இலங்கை கையாளும் விதம் சந்தி சிரிக்கின்றது. ஐ.நா. உயரதிகாரிகளை ஒரு மூத்த அமைச்சர் பயங்கரவாதிகள் என்கிறார். அதுவும் நாடாளுமன்றத்தில் வைத்து அரசின் பிரதம கொறடா அப்படி அறிவிக்கின்றார். மற்றைய ஐ.நா. அதிகாரிகள் இலங்கை விவகாரம் புரியாமல் விடயம் தெரியாமல் உளறுகின்றனர் என்று அரசுத் தரப்பில் குற்றச்சாட்டு. ஐ.நா. உதவி அமைப்புகள் பயங்கரவாதிகளான புலிகளுக்கு உதவுகின்றன என்று நாடாளுமன்றில் ஒரே ஏச்சும் திட்டும். அந்த வரிசையில் மேற்கு நாட்டுத் தூதுவர்களும் இப்போது இலங்கை அரசிடம் "அர்ச்சனை' வாங்கிக் கட்டத் தொடங்கியிருக்கின்றனர். மனதில் பட்ட சில உண்மைகளையாவது பகிரங்கமாக ஒப்புக் கொண்டமைக்கா…
-
- 1 reply
- 1.4k views
-
-
சென்ற ஆண்டு இதே நாளில் மண்ணுலகில் இருந்து சென்றாலும், என்றும் தமி்ழர்களின் நினைவுலகில் வாழும் " தேசத்தின் குரல்" ஆண்டண் பாலசிங்கம் அவர்களுக்கு எம் வணக்கங்கள். அண்ணாரது ஆன்மா, தமி்ழ் தேசியத்தின் விடியலில் தான் சாந்தியடையும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. விரைவில் அண்ணாரது ஆன்மா சாந்தியடைய எல்லாரும் ஒன்றாய் வேண்டுவேம்.
-
- 2 replies
- 1.4k views
-
-
"வாகரையைப்போல் வன்னியைக் கையாள முடியுமா?" மனோகரன் மீண்டும் ஒரு வாகரையைப்போல வன்னியையும் ஆக்குவதற்கே அரசாங்கம் முயற்சிப்பதாக நிலைமைகளை அவதானித்துவரும் ஒரு நண்பர் சொன்னார். அண்மையில் வன்னி மீதான சிறீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் ஏறக்குறைய அப்படித்தான் இருக்கின்றன. வன்னியைச் சுற்றியும் வன்னிக்கு உள்ளேயும் தாக்குதல்களை அது தீவிரப்படுத்தியிருக்கிறது. இது ஒரு வகையில் வன்னி மீதான பெரும் படையெடுப்பை இலகுவாக்குவதற்கான தந்திரோபாயமாகவும் இருக்கிறது. அதேவேளை ஒரு தொடரான நீண்டகால அடிப்படையிலான போர் நடவடிக்கையாகவும் இது கொள்ளத்தக்கது. ஏனென்றால் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் வன்னி மீதான போரை நடத்தாமலிருக்க முடியாது. இதற்கு இரண்டு காரணங்களிருக்கின்றன. ஒன்று வன்னி…
-
- 1 reply
- 1.8k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்துவது பெருமைக்குரிய விடயம் எனப் பெருமிதத்துடன் கருத்துத் தெரிவித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். செங்கல்பட்டில் நேற்று முன்தினம் இடம் பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார் அவர் 'விடுதலைபப் புலிகளுக்காக ஆயுதம் ஏந்திப் போரட எம்மால் முடிவில்லை. குறைந்த பட்சம் ஆயுத உதிரிகளைக் கடத்தினேன் என்று கூறப்படுவது எனக்குப் பெருமையாக இருக்கிறது'. என்றார் மேலும். தலித் (தாழ்த்தப்பட்ட சாதி) இளைஞர்களுக்கு ரவுடி முத்திரை குத்தி சிறையில் அடைக்கும் பொலிசாரைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் நடந்…
-
- 1 reply
- 2k views
-
-
இலங்கை அரசு விமானப்படைக்கு ரஷ்யவிடமிருந்து 'மிக்-29' ரக போர் விமானங்களை கொள்வனவு செய்வதை விடுத்து சீனாவிடமிருந்து 'எவ்-7' ரக மிக நவீன போர் விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதைவிட குறிப்பிட்டளவு ஆளில்லா உளவு விமானங்களையும் (யு.ஏ.வி.) 'எம்.ஐ.-35 ரக தாக்குதல் உலங்குவானுர்திகளையும் அரசு வரைவில் கொள்வனவு செய்யவுள்ளது. செக். குடியரசும் இலங்கை விமானப்படைக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் அல்லது நவீன 'எஎ' ரக ஏவுகணைகளை வழங்க முன்வந்துள்ளது. எனினும் இலங்கை விமானப்படைக்கு எத்தகைய போர்த் தளபாடங்களைக் கொள்வனவு செய்வதென தற்போது இலங்கை அரசு ஆராய்ந்து வருகிறது. ஏனைய போர் விமானங்களுடன் ஒப்பிடுகையில் சீனத் தயாரிப்பு 'எவ்-7' போர் விமானங்களைது பாரமரிப்…
-
- 0 replies
- 1.6k views
-
-
சிங்கள வியூகம் சிதைகிறதா? -சேனாதி- கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி, கிழக்கைக் கைப்பற்றிவிட்டோம் என்ற எண்ணக்களிப்பில் சேனாதிபதிகள் புடைசூழ, ராசகளை சொட்ட, டாம்பீகமான சோடசவுபசாரங்களோடு வெற்றிமடலைப் பெற்றுக்கொண்டு நுனிக்காலில் நின்று பன்னாட்டுச் சமூகத்தையே எள்ளி நகையாடிப் பேசிய போது, இப்படியெல்லாம் நேரும் என்று ராஜபக்ச நினைத்திருக்கவில்லை. மன்னாரில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிட்டதாத நிலையில் செக்கிலே பூட்டிய புசியன் காளையாக தம்பனையையும், மாந்தையையும் சுற்றிச் சுற்றி நடவடிக்கைப் படைகள் அல்லாடிக்கொண்டிருக்க, கிழக்கிலே அடுத்தது என்ன என்ற கேள்விக்குப் பதில் கிடையாமல் காட்டையும் மேட்டையும் ஐந்தாறு பிரிகேடுகள் காவல் செய்ய, கொழும்பு, அம்பாந்தோட்டை, அனுராதபுரம், கெப்பிற்ற…
-
- 2 replies
- 2.4k views
-
-
சனி 15-12-2007 02:46 மணி தமிழீழம் [ஜபிசி வானொலி] வன்னி மண்ணை ஆக்கிரமிக்கும் ராஜபக்சவின் கனவு ஒருபொழுதும் பலிக்காது - பா.நடேசன் வன்னி மண்ணை ஆக்கிரமிக்கும் ராஜபக்சவின் கனவு, ஒருபொழுதும் பலிக்காது என தமிழீழ விடுதலைப் புலிகள் சூளுரைத்துள்ளனர். தமிழீழத் தாயகத்தில் நேற்று வெளிவந்த வெள்ளி நாதம் இதழுக்கு செவ்வி வழங்கியிருக்கும் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், வன்னி மீது போர் தொடுத்து அதனை ஆக்கிரமிக்க வேண்டும் என்பது, சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆசை மட்டுமன்றி, அனைத்து சிங்கள ஆட்சியாளர்களினதும் விருப்பம் என சுட்டிக் காட்டியுள்ளார். வன்னி மண்ணை கபளீகரம் செய்வதன் மூலம், தமிழின அழிப்பை பூர்த்தி செய்துவிட முடியும் என்று சிறீலங்கா அரசாங்கம் …
-
- 0 replies
- 1.4k views
-
-
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 114 வாக்ககுகளும் எதிராக 67 வாக்குகளும் பெற்று மேலதிக 47 வாக்குகளால்வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜே.வி.பியினர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத போதும் நந்தன குணதிலக்க அரசுக்கு சார்பாக வாக்களித்துள்ளார். அரசிலிருந்து விலகிச் சென்ற மு.கா உறுப்பினர்கள் எதிராக வாக்களித்திருக்கின்றனர். 38 பா.உக்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஐ.தே.க, தமிழ்க் கூட்டணி, மு.கா, மங்கள, சிரிபதி எதிர்த்து வாக்களித்தனர். எதிர்க்கட்சி வரிசையில் சென்றமர்ந்த அநுரா, விஜேயதாச ராஜபக்சா ஆகியோரும் ஜே.வி.பியினரும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. ஜானா
-
- 6 replies
- 3.7k views
-
-
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்களை உடனே விடுதலை செய்ய அனைத்துலக நாடுகளின் நாடாளுமன்றக் கூட்டமைப்பாகிய நாடாளுமன்றங்களிடை ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 959 views
-
-
கில்லாரி கிளின்டனின் தேர்தல் செலவுக்கு புலிகள் பண உதவி -- ஸிரீ லன்கா அரச உத்தியேர்கபூர்வ செய்தி. http://www.defence.lk/new.asp?fname=20071213_05
-
- 10 replies
- 3.6k views
-
-
சற்று நேரத்திற்கு முன் பாரளுமன்றத்தில் அரசுத்தரப்பிலிருந்து அநுரபண்டரநாயக்கா எதிர்த்தரப்பு ஆசனத்தில் வந்தமர்நததாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றில் ஜே.வி.பியின் விமல் வீரவன்ச அரசை எதிர்த்து கடுமையான பேசிக்கொண்டிருக்கும் போது அநுரா பண்டாரநாயக்கா எதிர்த்தரப்பு ஆசனத்தில் வந்தமர்ந்ததக அறியவருகின்றது. ஜானா
-
- 3 replies
- 1.6k views
-
-
"தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் முதலாம் ஆண்டு நினைவெழுச்சி நாளையொட்டி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அகவணக்கம் செலுத்தினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழத் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு, தமிழீழத் தாயகம் எங்கும் நினைவெழுச்சியுடன் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 906 views
-
-
மனமாற்றம் வராமல் களமாற்றம் வராது! 14.12.2007 ஆட்கள் காணாமல் போகும் வீதத்தில் இலங்கைதான் முன்னணியில் திகழ்கின்றது என்று இலங்கைக்கு உலக சாதனைக் கிரீடம் சூட்டியிருக்கின்றது ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு. தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் குறுகிய ஒரு வாரகால அமர்விலும் ஆறாவது கூட்டத் தொடரிலும் இலங்கை குறித்து ஒரு பிடி பிடிக்கப்பட்டிருக்கின்றது. அந்தக் கூட்டத் தொடரில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கையில் சீர்கெட்டு வரும் மனித உரிமைகள் விவகாரம் குறித்து பல்வேறு விடயங்களை விலாவாரியாக சுட்டிக்காட்டியிருக்கின்றா
-
- 0 replies
- 1.5k views
-
-
ராடா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 125 மில்லியன் புலிகளின் கைகளுக்கு சென்றுள்ளது அமைச்சர் ஜெயராஜ் சந்தேகம் வீரகேசரி நாளேடு வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடமைப்பு திட்டத்திற்காக ராடா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிதி விடுதலைப்புலிகளின் கைகளுக்கு சென்றிருக்கலாம் என அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே நேற்று சபையில் சந்தேகம் வெளியிட்டார். எம்.பி.க்களுக்கான வாய்மூல கேள்வி நேரத்தின்போது ஜே.வி.பி. எம்.பி. அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, வடகிழக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட…
-
- 0 replies
- 2.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தில் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் விசாரணைகளை நடத்த சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் இருவர் சென்னை செல்ல உள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 987 views
-
-
சிறிலங்காவின் உள்விவகாரங்களில் பிரித்தானியத் தூதுவர் டொமினிக் சில்கொட் தலையிடுவது குறித்து பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிடம் சிறிலங்கா அரசாங்கம் முறைப்பாடு செய்யும் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 959 views
-
-
புதிய வானூர்திகளை கொள்வனவு செய்யும் முயற்சியில் சிறிலங்கா வான்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-