ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143554 topics in this forum
-
அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று(04) முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாறு விடுமுறை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/247792
-
- 1 reply
- 250 views
- 1 follower
-
-
14 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை Published By: VISHNU 03 APR, 2023 | 03:12 PM 14 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்று (03) விடுவிக்கப்பட்டனர். 2009 ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் இருந்த யாழ் வேலணையை சேர்ந்த இ. திருவருள், யாழ் கரவட்டியை சேர்ந்த ம. சுலக்சன், முள்ளியவளையை சேர்ந்த க. தர்சன் ஆகிய மூவருக்கும் எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில், குறித்து மூவரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில…
-
- 13 replies
- 973 views
- 1 follower
-
-
மின்சார கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். மின் தேவை குறைந்துள்ளமை, டொலரின் மதிப்பு சரிவு, எரிபொருள் மற்றும் நிலக்கரி விலை குறைப்பு போன்ற விடயங்களை கருத்திற்கொண்டு அதற்கேற்ப மின் கட்டணமும் குறைய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் மின்சாரத் தேவை 18 சதவீதம் குறைந்துள்ளது. மின் தேவை குறைவதால், மின் உற்பத்தி மற்றும் வழங்கல் செலவும் குறைகிறது. எனவே, இந்த வருடத்திற்கான மின்தேவை மின்சார சபையினால் சரியாக மதிப்பிடப்படவில்லை என…
-
- 1 reply
- 232 views
- 1 follower
-
-
வடக்கு, கிழக்கை முடக்குவோம்! - சாணக்கியன் தொல்பொருள் திணைக்களம் மக்களிடையே இனவாதத்தை ஏற்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றது. தொல்பொருள் திணைக்களத்தினதும் அரசினதும் இனவாதச் செயற்பாடுகள் வடக்கு, கிழக்கில் தொடர்ந்தால் தெற்கு இனவாதிகள் நுழைய முடியாதவாறு வடக்கு, கிழக்கை முடக்கியே தீருவோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “அமைச்சரே (விதுர விக்கிரமநாயக்க) நீங்கள் ஓர் இனவாதி. நீங்கள் கடந்த காலத்திலே மட்டக்களப்புக்கு வந்த போது குசலான மலையில் வைத்து உங்களைத் தடுத்து அனுப்பியமை காரணமாகவே இன்றும் குசலான மலையில் சைவ சமய வழிபாடுகளைச் செய்ய முடிகின்றது. இந்தத் தொல்பொருள் திணைக்…
-
- 1 reply
- 780 views
-
-
ஜனாதிபதி தேர்தல் அடுத்தவருட பிற்பகுதியிலேயே சாத்தியம்-மகிந்த தேசப்பிரிய Published By: Rajeeban 05 Apr, 2023 | 11:14 AM ஜனாதிபதி தேர்தல் அடுத்தவருட பிற்பகுதியிலேயே சாத்தியம் என தான் கருதுவதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல்கள் குறித்த கருத்துக்களிற்கு மத்தியில்ஜனாதிபதி தேர்தல்களை அடுத்த வருட பிற்பகுதியிலேயே நடத்த முடியும் என கருதுவதாக மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அரசமைப்பின் அடிப்படையில் தனது முதலாவது பதவிக்காலத்தின் நான்குவருடங்கள் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதியால் புதிய மக்கள் ஆணையை பெறு…
-
- 0 replies
- 382 views
-
-
”வடக்கு, கிழக்கில் நடப்பவை எனக்குத் தெரியாது என்று ஜனாதிபதி கூற முடியாது” - சார்ள்ஸ் நிர்மலநாதன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் காணி அபகரிப்பு நடவடிக்கை தனக்கு தெரியாது என ஜனாதிபதி குறிப்பிட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், தமிழர்களின் பூர்வீக நிலங்களை சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி செயலகத்தில் சேவையாற்றும் கீர்த்தி தென்னகோனே முன்னெடுத்துள்ளார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடி இந்…
-
- 0 replies
- 313 views
-
-
மூன்று மாதங்களில் தனியாள் முற்பை வருமான வரியாக 25 பில்லியன் !! 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தனியாள் முற்பை வருமான வரியாக 25 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை அரசாங்கம் ஈட்டியுள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரை தனியாள் முற்பை வருமான வரியில் 25,577 மில்லியன் வசூலித்ததாக உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் 3,106 மில்லியனும், பெப்ரவரியில் 10,540 மில்லியனும், மார்ச் மாதத்தில் 11,931 மில்லியனும் வரியாக வசூலித்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2023/1329429
-
- 0 replies
- 509 views
-
-
நாடாளுமன்ற முடிவை மீறிய சட்டக் கல்லூரி அதிபர் – நடவடிக்கை எடுக்குமாறு எம்.பி.க்கள் வலியுறுத்து மாணவர்களை அவரவர் தாய்மொழியில் பரீட்சை எழுத அனுமதிப்பது தொடர்பாக நாடாளுமன்றம் எடுத்த தீர்மானத்தை மீறி சட்டக்கல்லூரி அதிபர் செயற்பட்டுள்ளார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாடாளுமன்றத்தின் தீர்மானத்தை மீறி சட்டக்கல்லூரி அதிபர் செயற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்தோடு சட்டக் கல்லூரியின் அதிபரை சலுகைகள் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான குழுவின் முன் அழைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார முன்மொழிந்துள்ளார். சமீபகாலமாக சட்…
-
- 0 replies
- 394 views
-
-
Published By: DIGITAL DESK 5 04 APR, 2023 | 04:26 PM (எம்.ஆர் எம்.வசீம்.இராஜதுரை ஹஷான்) முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பின் போது அளிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் அழிக்கப்பட்டுள்ளது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) விசேட அறிவிப்புக்களை அறிவிக்கும் போது மேற்கண்டவாறு குறப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசியலமைப்பின் 40 ஆவது உறுப்புரையின் அத்தியாயம்,பாரா…
-
- 0 replies
- 411 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 04 APR, 2023 | 02:21 PM (எம்.மனோசித்ரா) வருமான வரி அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு , அரச உத்தியோக்கதர்களுக்கு ஏதேனும் நிவாரணத்தை வழங்க முடியுமெனில் அது தொடர்பான யோசனை அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் போது சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , வருமான வரி தொடர்பில் தொழிற்சங்கங்கள் அண்மையில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந…
-
- 0 replies
- 593 views
- 1 follower
-
-
Published By: T. SARANYA 04 APR, 2023 | 04:16 PM இலங்கை தலைமன்னாரில் இருந்து தமிழகம் தனுஷ்கோடி வரை 'ராமர்பாலம்' பகுதி ஊடாக கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலும், ஆன்மீக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது சம்பந்தமாகவும் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில், இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் இந்திய தூதரகத்தின் துணை தூதுவரும், அந்நாட்டு முதலீட்டாளர்களும் பங்கேற்றிருந்தனர். அத்துடன், இலங்கை கடற்படை …
-
- 0 replies
- 422 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 04 APR, 2023 | 02:35 PM (எம்.ஆர் எம்.வசீம்.இராஜதுரை ஹஷான்) இனவாதத்தின் உச்சம் தமிழர்களின் மத உரிமைகளையும் விட்டு வைக்கவில்லை.சிவ தோஷம்-குல நாசம் என்ற வாக்குக்கு அதிக பலம் உள்ளது, சிவன் மீது கை வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த நாடு நாசத்தை நோக்கி செல்லும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மீதான கட்டளைச்சட்டத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, வவுனியா வெடுக்குநாறி காட்டுப்பகுதியில் தமி…
-
- 0 replies
- 409 views
- 1 follower
-
-
Published By: T. SARANYA 03 APR, 2023 | 03:26 PM லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை நாளை (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராமுடைய ஒரு எரிவாயு சிலிண்டர் 1,000 ரூபா வரை குறைக்கப்படும் என தெரிவித்துள்ளது. வரலாற்றில் லிட்ரோ எரிவாயுவின் அதிகூடிய விலைத் திருத்தம் இதுவென அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிவாயு விலை வீழ்ச்சி மற்றும் ரூபாயின் மதிப்பு வலுவடைந்தது உள்ளிட்ட பல்வேறு காரணிகள் விலை குறைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/152046
-
- 2 replies
- 492 views
- 1 follower
-
-
முல்லைத்தீவில் தமிழ் மக்களின் காணிகள் திட்டமிட்ட வகையில் அபகரிப்பு !! முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட எல்லைக் கிராமமான கருநாட்டுக் கேணியிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்து. குறித்த பகுதியில் பொலிஸ் நிலையத்தை சூழவுள்ள தமிழர்களுக்குரிய காணிகளே அபகரிக்கப்பட்டு 180 சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் இந்த சிங்கள குடியேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் குறித்த காணிகளை பார்வையிடுவதற்கு, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள், கரைதுறைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு ம…
-
- 4 replies
- 413 views
-
-
தம்பாட்டி இறங்குதுறை காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் April 4, 2023 ஊர்காவற்துறை தம்பாட்டி பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (04) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாரந்தனை வடக்கு தம்பாட்டியில் உள்ள இறங்கு துறையில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஊர்காவற்துறை மீனவர்களுக்கு சொந்தமான தம்பாட்டி இறங்குதுறைக்கு அண்மையில் உள்ள பகுதியில் கடற்படையினரால் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்த நிலையில், இதனை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும் குறித்த அரச காணியிலிருந்து கடற்படையினர் வெளியேறாத நிலையில், நில அளவை த…
-
- 0 replies
- 589 views
-
-
இலங்கை இந்திய போக்குவரத்து விரிவுபடுத்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன - யாழ். அரச அதிபர் Published By: Digital Desk 5 04 Apr, 2023 | 09:53 AM (எம்.நியூட்டன்) இலங்கை இந்திய போக்குவரத்து விரிவுபடுத்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டள்ளது எனவே சுற்றுலாத்துறையில் மேம்படுத்தும் நோக்குடன் சுற்றுலாத்துறை சார்ந்த நிறுவனங்களை சட்டரீதியாக பதிவு செய்து ஒழுங்குபடுத்தலை மேற்கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகமும் இணைந்து இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணைய…
-
- 0 replies
- 431 views
-
-
புத்தாண்டு சுபநேரப் பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு தமிழ், சிங்கள புத்தாண்டு சுபநேரப் பத்திரம் பாரம்பரிய மற்றும் சம்பிரதாய முறைப்படி ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி மேளதாளத்துடன் கொண்டுவரப்பட்ட சுபநேரப் பத்திரத்தை, புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தார். வளர்பிறை தரிசனம், பழைய ஆண்டிற்கான நீராடல், புத்தாண்டுப் பிறப்பு, புண்ணியகாலம், உணவு சமைத்தல், சுப காரியங்களை ஆரம்பித்தல் கைவிசேடம் பெறுதல், உணவு உண்ணுதல், தலைக்கு மருத்துநீர் வைத்தல், தொழிலுக்காக புறப்படுதல், மரம் நடுதல் போன்ற சுப நேரங்கள் இ…
-
- 0 replies
- 188 views
-
-
எதிர்வரும் விடுமுறை காலத்தில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது. நீண்ட வார இறுதி மற்றும் எதிர்வரும் புத்தாண்டு காலங்களில் கோழி இறைச்சியின் தேவையை அதிகரிக்கும். என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார் . “எனவே, கோரிக்கையை எங்களால் பூர்த்தி செய்ய முடியுமா என்பதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. உள்ளூர் சந்தையில் கோழி இறைச்சியின் சில்லறை விலையானது தேவைக்கு ஏற்ப விநியோகத்தைப் பொறுத்து இருக்கும். “சந்தைக்கு தேவையான உறை கோழி போதுமான அளவு விநியோகத்தில் உள்ளது, இது ஏற்கனவே பல்பொருள் அங்காடிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. “சந்தைக்கு கோழி இறைச்சி வழங்குவதில் சிக்கல் உள்ளது. கோழி உற்பத்…
-
- 3 replies
- 798 views
- 1 follower
-
-
"13" அமுலானால் சமஷ்டி ஆட்சி மலரும்! - சரத் வீரசேகர “தமிழ் மக்கள் சமஷ்டியைக் கேட்கவில்லை. பிரிவினையை விரும்பும் தமிழ் அரசியல்வாதிகளும் புலம்பெயர் தமிழர்களுமே சமஷ்டியைக் கேட்கின்றனர்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார். “அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். 13 ஐ நடைமுறைப்படுத்தினால் ஒற்றையாட்சியின் கீழ் இருக்கின்ற நாடு சமஷ்டி ஆட்சிக்கு உட்படும்” – என்றும் அவர் சுட்டிக்காட்டினார். “தமிழ் நாட்டின் ஆதரவைப் பெறுவதற்காகத்தான் இந்திய அரசு 13 ஆவது திருத்தச் சட்டத்தை வடக்குக்குக் கொடுப்பதற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது” – என்றும் அவர் குறிப்பிட்டார். …
-
- 2 replies
- 433 views
-
-
30 கைவிடப்பட்ட குளங்களை அபிவிருத்தி செய்ய தீர்மானம் பல தசாப்தங்களாக கைவிடப்பட்ட 30 குளங்களை இந்த வருடத்திற்குள் புனரமைக்காமல் புனரமைக்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் 300 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடுச் செய்துள்ளது. 20 ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்களுக்கு உதவும் குளங்களை மாத்திரம் புனரமைக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி ஹம்பாந்தோட்டை, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, அனுராதபுரம், குருநாகல், புத்தளம், பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 30 கைவிடப்பட்ட குளங்களை இவ்வருடம் அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/243152
-
- 6 replies
- 991 views
- 1 follower
-
-
Published By: VISHNU 02 APR, 2023 | 03:57 PM கணினி குற்றங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் சீனப் பிரஜைகள் 38 பேர் நேற்று சனிக்கிழமை (1 ) கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர். நிதி மோசடி தொடர்பான கணினி குற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில் குறித்த சீனப் பிரஜைகள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சீன தூதரகத்தின் உதவியுடன் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 33 ஆண்கள், 5 பெண்களும் அடங்குவர். சந்தேக நபர்கள் வசமிருந்த 40 மடிக்கணினிகள், 120 கையடக்கத் தொலைபேசிகள், பல கணினி உபகரணங்கள் மற்றும் பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ள…
-
- 3 replies
- 718 views
- 1 follower
-
-
03 APR, 2023 | 07:26 PM தமிழ் மக்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களைப் பாதுகாப்பதற்கு தாம் எந்த எல்லைக்குப் போகவும் தயாராக உள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பூர்வீக எல்லைக்கிராங்களில் ஒன்றான முல்லைத்தீவு - கருநாட்டுக்கேணியில் தமிழர்களின் காணிகளை அபகரித்து சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளும் முயற்சிஒன்று 03.04.2023இன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதித் தமிழ் மக்களும், ரவிகரனும் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்…
-
- 0 replies
- 635 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 02 APR, 2023 | 04:33 PM மகாவலி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுமார் 10 லட்சம் காணிகளில் எந்த தமிழருக்கும் ஒரு துண்டு காணியேனும் வழங்கப்படவில்லை என யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார். யாழ். நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்தில் நேற்று முன்தினம் (31) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்து சமயம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்த கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் காணப்படுகின்ற தொல்லியல் திணைக்களம், வனவளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் என்பன மிக …
-
- 1 reply
- 400 views
- 1 follower
-
-
யாழ். பல்கலையில் போதிய வரவின்மையால் பரீட்சைக்கு அனுமதியில்லை : ஆராய கூடுகிறது விஞ்ஞான பீடச் சபை Published By: T. SARANYA 03 APR, 2023 | 09:55 AM யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் சிலரை, வரவு ஒழுங்கின்மை காரணமாக பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்காமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டை அடுத்து குறைந்த வரவு வீதமுள்ள மாணவர்களையும் பரீட்சைக்கு அனுமதிப்பது தொடர்பில் ஆராய்வதற்கென விசேட பீடச் சபைக் கூட்டத்தை இன்று பி.ப. 4 மணிக்கு கூட்டுவதற்கு விஞ்ஞான பீடாதிபதி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அனைத்துப் பல்கலைக…
-
- 0 replies
- 312 views
- 1 follower
-
-
யாழ். பருத்தித்துறையில் கடற்தொழிலாளர்கள் போராட்டம் Published By: Digital Desk 5 03 Apr, 2023 | 10:26 AM யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் திங்கட்கிழமை கடற்றொழிலாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். சுருக்கு வலை உட்பட்ட சட்டவிரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மீனவர்களை வாழ விடு அல்லது சாகவிடு, மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் சுருக்கு வலையை உடனடியாக நிறுத்து, தடை செய்யப்பட்ட அனைத்து தொழிலையும் உடனடியாக நிறுத்து என போராட்டங்களில் ஈடுபட்ட கடற்றொழிலா…
-
- 0 replies
- 348 views
-