ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
பெரு வெற்றியை பெற்றுத்தரும் வகையில் நீண்டகால நோக்கில் போர் நுட்பங்களை மாற்றி, மாற்றி அமைப்பதில் தேசியத் தலைவர் அவர்கள் வல்லவர். தலைவர் அவர்களின் போர் நுட்ப முறைகளை இன்று உலக நாடுகளின் இராணுவ மேதைகள் ஏற்றுக்கொள்கின்றார்கள், புகழ்கின்றார்கள் என்று "விடுதலைப் புலிகள்" ஏட்டின் முதன்மை ஆசிரியர் ரவி தெரிவித்துள்ளார். புலிகளின் குரலின் கிளிநொச்சி வானொலி மன்றத்தின் முத்தமிழ்கலை அரங்க நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கரும்புலிகள் நாளை முன்னிட்டு புலிகளின் குரல் ஏற்பாட்டில் விளையாட்டுத்துறையால் பாடசாலைகளுக்கு இடையில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வினையடுத்து இந்த சிறப்பு முத்தமிழ் கலையரங்கம் நடத்தப்பட்டது. …
-
- 0 replies
- 1.3k views
-
-
திரியாய் மக்கள் வெளியேறுகின்றனர் [ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2007, 17:52 ஈழம்] [தாயக செய்தியாளர்] திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திரியாய் கிராம மக்கள் அச்சம் காரணமாக தமது கிராமத்தை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று மாதங்களில் திரியாய் கிராமத்தில் பதினொரு தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனதை தொடர்ந்து மக்கள் அங்கு வசிக்க அச்சமடைந்துள்ளனர். 1987 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற வன்முறைகளால் இக்கிராமத்தில் வசித்த 1,200 வரையான குடும்பங்கள் இடம்பெயர்ந்திருந்தனர். பின்னர் 2002 ஆம் ஆண்டில் மீளக்குடியமர்ந்ததில் 850 குடும்பங்கள் வரை வசித்து வருகின்றனர். தற்போது பதினொரு தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட…
-
- 0 replies
- 1.3k views
-
-
கிழக்கில் அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் உலக நாடுகளிடம் நிதிபெற அரசு திட்டம். கிழக்கில் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க இருப்பதாகக்கூறி, இணைத்தலைமை நாடுகள், மற்றும் பல உலக நாடுகளிடம் நிதியுதவி பெறுவதற்கு சிறீலங்கா அரசு திட்டமிட்டு வருகின்றது. இதற்கென கிழக்கில் சில அபிவிருத்தித் திட்டங்களை வரைவதற்கென, அரசினால் நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. செப்ரெம்பர் மாதம் உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு நடைபெற இருப்பதால் அதனை இலக்கு வைத்து இவ்வாறான நகர்வுகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. உலக நாடுகளிடம் இருந்து 1.8 பில்லியன் ரூபாவினை நிதியுதவியாகப் பெறுவதற்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்த அரசு, உலக நாடுகளின் கண்டனம் காரணமாக அ…
-
- 1 reply
- 932 views
-
-
ஞாயிறு 22-07-2007 18:09 மணி தமிழீழம் [மயூரன்] கொழும்பு டெல்கந்த சந்தையில் குண்டு கண்டுபிடிப்பு ஞாயிற்றுக்கிழமை சிறீலங்கா தலைநகர் கொழும்புக்கு சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள டெல்கந்த பகுதியில் அமைந்துள்ள சந்தைக்கு அருகில் நேரம் கணித்து வெடிக்க வைக்கும் எட்டு கிலோ எடையுள்ள குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே இக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவருகிறது. இதனையடுத்து குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் அவ்இடத்துக்கு விரைந்து குண்டினை செயலிழக்கச் செய்ததாகவும். pathivu
-
- 0 replies
- 928 views
-
-
ஞாயிறு 22-07-2007 16:35 மணி தமிழீழம் [மயூரன்] எச்சந்தர்ப்பத்திலும் புலிகளுக்கு நிதியை வழங்கவில்லை - மகிந்த ராஜபக்ச எச்சந்தர்ப்பத்திலும் தான் விடுதலைப் புலிகளுக்கு பெரும் நிதியைக் கொடுக்கவில்லை என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை நாவலப்பிட்டியில் நடைபெற்ற பொதுக்கூகூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எத்தகைய சந்தர்ப்பத்திலும் விடுதலைப் புலிகளுக்கு பெரும் நிதியைத் தான் வழங்கவில்லை. விடுதலைப் புலிகளுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து அவர்களுக்கு நிதியை வழங்கியதாகச் சொல்லப்படும் பரப்புரையில் எதுதுவித உண்மைத் தன்மையும் இல்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆளும் அரசாங்கம் கலைக்கப்படும் என பரப்புரைகள் மேற்கொள்ளப்படுக…
-
- 0 replies
- 950 views
-
-
சர்வதேச சமூகத்தின் இயலாமையின் சின்னங்கள் [21 - July - 2007] `கிழக்கின் உதயம்' கொண்டாட்டங்களின் போது நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இருந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை இராணுவ முனைப்பைத் தளர்த்தும் உத்தேசம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்பதை தெளிவுபடுத்துவதாக அமைந்திருந்தது. அரசியல் தீர்வு யோசனைகளை வகுக்கும் செயன்முறைகளை துரிதப்படுத்துமாறு சர்வ கட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவிடம் ஜனாதிபதி வேண்டுகோளொன்றை விடுத்தபோதிலும், அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு தென்னிலங்கை மக்களின் ஆதரவைத் திரட்டும் அக்கறை அவருக்கு இருப்பதாக அந்த உரை உணர்த்தவில்லை. மாறாக, இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்கு அரசாங்…
-
- 5 replies
- 2.5k views
-
-
தொப்பிகலவுக்குப் பதிலடியை மிகவிரைவில் எதிர்பாருங்கள்! சபையில் சிறிகாந்தா எம்.பி. எச்சரிக்கை. ஆரம்பத் தாக்குதலின்போது தந்திரோபாயமாகப் பின்வாங்கிய விடுதலைப் புலிகள் தக்க தருணத்தில் ஆனையிறவு, முல்லைத்தீவு ஆகிய இரு பெரிய இராணுவ முகாம்களையும் கைப்பற்றியமையை இந்த அரசு மறந்துவிடக் கூடாது. கிழக்கு மாகாணத்தில் கிடைத்த சிறு வெற்றியை பெருவிழாவாகக் கொண்டாடி இறுமாப்படைய வேண்டாம். கூடிய விரைவில் அதற்கான பதிலடி கிடைக்கத்தான் போகின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறிகாந்தா நேற்று நாடாளுமன்றத்தில் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார். ஜே.வி.பியினால் முன்வைக்கப்பட்ட முப்படையினருக்கும் நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீது உரையாற்றும் போதே அவர் இப்படிக் கூறினார…
-
- 0 replies
- 1.3k views
-
-
அரசு எங்களைப் புறந்தள்ளி நடந்தால் புலிகளை அழித்து ஒடுக்க முடியாது தொடர்ந்தும் ஆயுதங்களை வைத்திருப்போம் என்கிறார் கருணா [sunday July 22 2007 05:50:38 AM GMT] [சூரியன்] கிழக்கு மாகாணத்தில் எமக்கு மக்கள் ஆதரவு பரந்தளவில் இருக்கிறது. எங்களிடம் ஆலோசனை பெறாமல் கிழக்கு மாகா ணத்தில் ஏதாவது திட்டங்களை அரசு மேற் கொள்ளுமாக இருந்தால். விடுதலைப்புலி களை முற்றாக அழிப்பதில் அரசு பின்ன டைவையே சந்திக்கும். இவ்வாறு தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா தெரிவிக்கின்றார். நேற்று பி.பி.ஸி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது கிழக்கு மாகாணத்தில் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் எங்களுடைய அரசியல் அலுவலகங்களைத் திறந…
-
- 6 replies
- 1.5k views
-
-
Posted on : Sat Jul 21 8:47:56 EEST 2007 தேங்காய் எண்ணெய் என நினைத்துக் கொண்டு விளக்குக்குப் பெற்றோல் ஊற்றிய பூசகர் மரணம் எரிந்துகொண்டிருந்த விளக்கில் தேங் காய் எண்ணெய் என நினைத்து பெற் றோலை ஊற்றிய ஆலயப் பூசகர் தீக்கா யங்களுக்கு இலக்காகி உயிரிழந்தார். புங்குடுதீவு சிவன்கோயிலில் நேற் றுக்காலை இச்சம்பவம் இடம்பெற்றது. எரிகாயங்களுக்குள்ளான புங்குடு தீவு 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஆல யப் பூசகரான சிவசுப்பிரமணியம் தினேஸ் சர்மா (வயது 27) யாழ். ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பயனளிக்காத நிலையில் நேற்றுமாலை அவர் உயிரிழந்தார். ஆலயத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்குத் தணியும் தறுவாயில் இருப் பதைக் கண்டு தேங்காய் எண்ணெய் என நினைத்து பெற்றோலை ஊற்றியபோதே, தீப்…
-
- 20 replies
- 4.2k views
-
-
அச்செழுவில் கடத்தப்பட்டவர் கழுத்துவெட்டிப் படுகொலை [22 - July - 2007] [Font Size - A - A - A] * மருதனார்மடம் சந்தியில் சடலம் மீட்பு யாழ்ப்பாணம் அச்செழுப் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை உறவினர் வீட்டிற்கு சென்றபோது மோட்டார் சைக்கிளொன்றில் வந்த ஆயுதபாணிகளால் கடத்திச் செல்லப்பட்ட குடும்பஸ்தரொருவர் கழுத்துவெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். மருதனார்மடம் சந்திக்கு அருகில் நேற்றுக்காலை இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் அச்செழுவிலுள்ள தனது வீட்டிலிருந்து இவர் சுன்னாகம் மயிலங்காட்டிலுள்ள உறவினர்கள் வீட்டுக்குச் சென்றுள்ளார். இடையில் இவர் சென்றுகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இருவர் இவரை வழி…
-
- 1 reply
- 1.1k views
-
-
தலைநகரில் மீண்டும் தலைதூக்கும் ஆட்கடத்தல்கள் [22 - July - 2007] தலைநகர் கொழும்பில் சில வாரங்களாக தணிந்திருந்த ஆட்கடத்தல்களும் ஆட்கள் காணாமல் போகும் சம்பவங்களும் மீண்டும் தலைதூக்கியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. கடந்த வாரம் கொழும்பில் மூன்று தமிழர்கள் ஆயுதபாணிகளினால் கடத்திச் செல்லப்பட்ட சம்பவங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் தோற்றுவித்திருக்கின்றன. சில ஆட்கடத்தல்கள் பட்டப்பகலில் சனசந்தடி மிக்க வீதிகளில் இடம்பெற்றிருக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தனது தந்தையாருடன் வெள்ளவத்தையில் இருந்து பயணம் செய்த விக்னேஸ்வர கடாட்சன் மகோதரர் என்ற 27 வயது இளைஞர் கொட்டாஞ்சேனையில் பஸ்ஸில் இருந்து இறங்கி தனது வீடு நோக்கி நடந்து சென்று க…
-
- 0 replies
- 778 views
-
-
Posted on : Sun Jul 22 7:49:00 EEST 2007 இனப்பிரச்சினைக்கு என்றுமே தீர்வு காணமுடியாத ஆபத்தான விசித்திரப் போக்கில் மஹிந்த அரசு! முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சாடுகிறார் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு மஹிந்த அரசு கைக்கொண்டுவரும் விசித்திரமான புதிய போக்கு கொள்கை அதற்கு என்றுமே தீர்வு முடிவு காணமுடியாத ஓர் ஆபத் துக்குள் தள்ளி விடும். இவ்வாறு கண்டனம் தெரிவித்திருக்கிறார் முன்னாள் ஜனாதி பதி சந்திரிகா குமாரதுங்க. மஹிந்த அரசின் கொள்கைகள், நிர்வாக முறைகள் நாட்டு நலனுக்கு குந்தகமானவை எதிரானவை என்றும் சந்திரிகா விமர்சித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆரம்பகாலம் தொடக்கம் பின்பற்றிவந்த நாட்டை புதிய சகாப்தத்துக்கு இட்டுச்சென்ற முக்கிய கொள்கைகளை மஹிந்த நிர்வாகம…
-
- 1 reply
- 807 views
-
-
நுவரெலியாவில் இளம் தமிழ் தம்பதியர் கைது [சனிக்கிழமை, 21 யூலை 2007, 19:43 ஈழம்] [சி.கனகரத்தினம்] நுவரெலியாவின் நோட்டன் பிரிஜ் பிரதேசத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் தம்பதியரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வாகனம் ஒன்றில் வந்த தமிழ்த் தம்பதியரிடம் விசாரணைகளை நடத்தி வருவதாக நோட்டன் பிரிஜ் சிறிலங்கா காவல் நிலையப் பொறுப்பதிகாரி உதய ஹேமன்த்த தெரிவித்துள்ளார். அட்டன் பிரதேசத்திற்கு நேற்று முன்நாள் இருவரும் சென்று கொண்டிருந்த போது வீதிச்சோதனைச் சாவடி ஒன்றில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அட்டன் பிரதேசத்திற்கு செல்வதற்கான காரணத்தை தெரிவிக்காதததால் தாம் அவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியிருப்பதாகவும் சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்து…
-
- 0 replies
- 927 views
-
-
Posted on : 2007-07-22 தாம் முன்னர் ஏற்றுக்கொண்டதை இப்போது மறந்துவிட்டார் மஹிந்தர் தென்னிலங்கையில் இப்போது கிளப்பப்படும் பெரும் அரசியல் சித்தாந்த சர்ச்சை என்ன தெரியுமா? "பயங்கரவாதிகளான' விடுதலைப் புலிகளுக்கு இலங் கைத் தீவில் சட்டரீதியான அதிகாரப் பிரதேசம் இருக்கின் றது என ஒப்புக்கொண்டு, அந்தப் பகுதிகளைப் புலிகளுக் குத் தாரைவார்த்த தென்னிலங்கை அரசியல் தலைமை எது என்பதுதான் அந்தச் சர்ச்சை. இரு பிரதான சிங்களக் கட்சிகளும் இவ்விடயத்தில் மாறி, மாறி ஒன்றின் மீது மற்றது குற்றம் சுமத்துகின்றன. ""பயங்கரவாதத்துக்கு சட்டரீதியான அதிகாரப் பிரதேசம் ஒன்று இருக்கின்றது என்பதை ரணில் விக்கிரமசிங்க, விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலம் ஏற்றுக்கொண்டார். இதுபோன்ற…
-
- 0 replies
- 793 views
-
-
வெட்டுக்காயங்களுடன் கடற்படைச்சிப்பாயின் சடலம் மீட்பு. யாழ் மணற்காடு சவுக்கங்காட்டுப்பகுதியில் இன்று வெட்டுக்காயங்களுடன் கடற்படைச்சிப்பாய் ஒருவரின் சடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச் சடம் மீட்க்கப்பட்டு மந்திகை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது சடலத்தைப் பார்வையிட்ட நீதவான் சடலத்தை கொழும்புக்கு எடுத்துச் சென்று உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். வெட்டிக்கொலை செய்யப்பட்டவர் 39வயதுடைய பண்டார எனும் கடற்படைச்சிப்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். -Sankathi-
-
- 0 replies
- 989 views
-
-
"ஆள்பிடிக்கும்" வேலையில் மகிந்த தீவிரம். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு ஆதரவாக மேலதிக உறுப்பினர்களை இழுக்கும் வேலையில் மகிந்த ராஜபக்ச தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே கடந்த வாரம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தினால் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணித் தலைவர்களுக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்று ஐ.தே.க.வின் காலி மாவட்ட தலைவர் வஜிர அபேயவர்த்தனவை தொடர்பு கொண்டு மகிந்த ராஜபக்ச விளக்கம் கேட்டுள்ளார். மேலும் கொழும்பு மாவட்ட ஐ.தே.க. தலைவர் ரவி கருணாநாயக்கவையும் மகிந்த ராஜபக்ச தொடர்ப…
-
- 0 replies
- 883 views
-
-
வடக்கு வலிந்த தாக்குதல்களை நிறுத்த மகிந்த முடிவு? வடக்கு பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டு வரும் வலிந்த தாக்குதல்களை இடை நிறுத்தம் செய்ய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அமைதி முயற்சிகளை மீண்டும் தொடங்குவது குறித்து நோர்வே அனுசரணையாளர்களை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அணுகியிருப்பதாகவும் மகிந்தவின் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "கிழக்கு பிரதேசத்தின் புவியியல் அமைப்புக்கும் வடபகுதி அமைப்புக்கும் முற்றான வேறுபாடு உள்ளதாகவும் அப்பகுதியில் எதுவித ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதில்ல என்றும் சிறிலங்கா இராணுவத் தரப்பு கருதுவதாகக் கூறப்படுகிறது. அமைதி முயற்சிகளைத் தொடங்கும் வகையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள…
-
- 0 replies
- 959 views
-
-
சனி 21-07-2007 17:00 மணி தமிழீழம் [மயூரன்] பாலியல் துன்புறுத்தலுக்கு அஞ்சி பெண் நஞ்சருந்தியுள்ளார் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒன்பதாம் வட்டாரம் கொக்கட்டிச்சோலைப்பகுதியில் 44 அகவையுடைய பெண் ஒருவரை விசாரணைக்காக தனியாக இராணுவத்தினர் அழைத்ததையிட்டு அப்பெண் இராணுவத்தினர் பாலியல்துன்புறுத்தலுக்கு உட்படுத்துவர் என அஞ்சி நஞ்சருந்தியுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது நஞ்சருந்தியவர் பொன்னம்பலம் புவனேஸ்வரி எனத்தெரிவருகிறது. பதிவு
-
- 2 replies
- 1.9k views
-
-
வியாழன் 19-07-2007 13:15 மணி தமிழீழம் [மயூரன்] ''கிழக்கின் உதயம்'' வெற்றி நிகழ்வுகள் சுதந்திர சதுக்கத்தில் தொடங்கின '' கிழக்கின் உதயம் '' வெற்றி விழா சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 8.45 மணியளவில் மகிந்த ராஜபக்ச முப்படைகளின் அணிவகுப்புடன் சுதந்திர சதுக்கத்திற்கு அழைத்து வரப்பட்டார். பாடசாலைல மாணவர்கள் தேசிய கீத்தைப் பாட மகிந்த ராஜபக்ச தேசியக் கொடியை ஏற்றினார். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த படையினருக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டதும் கிழக்கின் உதயம் வெற்றி நிகழ்வுகள் ஆரம்பமாகின. வெற்றி நிகழ்வில் சிறீலங்கா அதிபரிடம் கிழக்கு மாகாணத்தை கைப்பற்றியதற்ககான சாசனத்தை முப்படைத் தளபதிகளும் கையளித்தனர். …
-
- 24 replies
- 3.2k views
-
-
புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்திய ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பரப்புரையா?: லக்ஸ்மன் செனிவிரட்ன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்திய ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசாங்க ஊடகங்கள் பரப்புரை மேற்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்ன கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அவர் பேசியதாவது: குடும்பிமலை தொடர்பாக ரணில் இன்று பேசியதை அரச ஊடகங்கள் திரிபுபடுத்தி பிரசாரப்படுத்தி வருகின்றன. 1993 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு அன்றைய பிரதமர் ரணில்தான் தலைமை தாங்கினார். குடும்பிமலை கைப்பற்றப்பட்டது இது முதல் தடவை போல கூறுகின்றனர்.…
-
- 3 replies
- 1.9k views
-
-
Posted on : Sat Jul 21 8:38:46 EEST 2007 புலிகளுடன் ஒப்பந்தம் செய்து குற்றமிழைத்தது இலங்கை! மனம் புழுங்குகின்றார் ஜனாதிபதி பயங்கரவாதத்திற்கு சட்டரீதியான பிரதேசம் ஒன்றைத் தாரைவார்த்து, உடன்படிக்கையொன்றைச் செய்ததன் மூலம் குற்றமிழைத்துள்ளது இலங்கை. அத்தகைய குற்றத்தை இழைத்த ஒரே நாடு இலங்கையைத் தவிர வேறெங்கும் இருக்க முடியாது. இவ்வாறு கூறியிருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை மஹரகம, தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 17ஆவது சம்மேளனம் தொடர்பாகத் தாம் அனுப்பி வைத்த ஆசிச் செய்தியிலேயே ஜனாதிபதி இப்படிக் குறிப்பிட்டிருக்கின்றார். ஜனாதிபதி அந்தச் செய்தியில் கூறியிருப்பதாவது: எமது வீரதீரமிக்க பாதுகாப்புப் படையினரால் மிலேச…
-
- 1 reply
- 2k views
-
-
உலக வலைபதிவாளர் சங்கம் தமிழீழ தேசத்தை ஒரு நாடாக அங்கீகரித்துள்ளது.இவ் ஒன்றிய இணையத்தின் பதிவாளர்களில் ஒருவராக நமது கள உறவான தூயா இருப்பது குறிப்பிடதக்கது http://worldub.blogspot.com/ இதில் வலது கரை கடைசியில் இந்ந்திய தேசியக்கொடிக்கு கீழே எமது தேசத்தின் கொடி பறக்கின்றது \ மேலதிக தகவல்களுக்கு http://thooya.blogspot.com/
-
- 9 replies
- 3.3k views
-
-
-
கடைசித் தமிழன் இருக்கும் வரை யுத்தம் தொடரும் என்று கஜேந்திரன் சூளுரை கௌரவமான வாழ்வு: இன்றேல் கொளரவமான சாவு என்கிறார். "தமிழன் ஒரு போதும் சிங்களவர்களுக்கு அடிபணியமாட்டான். கடைசி தமிழன் இருக்கும் வரை இந்த யுத்தம் நடந்து கொண்டேதான் இருக்கும். நாங்கள் கௌரவமாக வாழ வேண்டும். இல்லாவிட்டால் கௌரவமாகவெ செத்து விடுவோம். எம்மை இந்தச் சிங்களக் காடையர்கள் அடக்க முடியாது." இவ்வாறு நேற்று நாடாளுமன்றில் இடம் பற்ற தொப்பிகல கைப்பற்றப்ட்டமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றிய சமயம் த.தே.கூட்டமைப்பின் யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் சூளுரைத்தார். அவர் அங்கு மேலும் கூறியவையாவது : சிங்களக் காடையர்கள் கிழக்கைப் பிடித்து அங்கு தம…
-
- 1 reply
- 1.5k views
-
-
`எனக்கெதிராக நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் ஊழல் பெருச்சாளிகளின் வெற்றி' [21 - July - 2007] `எத்தனை தீர்மானங்களை கொண்டு வந்தாலும் என்னை பதவியிலிருந்து துரத்த முடியாது' கொழும்பு மாநகரசபையில் தனக்கு எதிராக அண்மையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக பிரதிமேயர் ஏ.கே.எம்.எஸ்.இராஜேந்திரன் அறிக்கையொன்றை பத்திரிகைகளுக்கு விடுத்திருக்கிறார். அந்த அறிக்கையின் விபரம் வருமாறு; 13.07.2007 ஆம் திகதி கொழும்பு மாநகர சபை பிரதி முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 21 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது என்ற தலைப்பின் கீழ் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றிலும் செய்திகள் வெளியாகியது சகலரும் அறிந்ததே. இச் செய்திகளில் மா…
-
- 0 replies
- 1.7k views
-