ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142851 topics in this forum
-
இலங்கையில் மார்ச் 9இல் உள்ளூராட்சி சபை தேர்தல்: எதிர்க்கட்சிகள் சந்தேகம் நீங்குமா? கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண்பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை பொருளாதார ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில், சவாலுக்கு மத்தியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 9ம் தேதி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலை நடத்தாதிருப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற…
-
- 1 reply
- 487 views
- 2 followers
-
-
மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட கரடியன்குளம் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க குசனார்மலைக்கு சுவிஸ் தூதுவர் இன்று (26) புதன்கிழமை மாலை விஜயம் செய்தார். கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள சுவிஸ் தூதுவர் டொமிங்க் பேர்கிலர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். இதன்போது மாவட்டத்தில் தொல்லியன் செயலணி ஊடாக தமிழர்களின் பாரம்பரிய இடங்களை தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்துவதற்கு முன்னெக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் தூதுவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து இந்த விஜயத்தினை முன்னெடுத்தார…
-
- 0 replies
- 694 views
-
-
யாழில் இந்தியாவின் குடியரசு தின நிகழ்வு! January 26, 2023 இந்தியாவின் 74 வது குடியரசு தின நிகழ்வு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அலுவலகத்தில் இந்தியா படையினரின் அணிவகுப்பு மரியாதையை அடுத்து, யாழ் இந்தியத்துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரனினால் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டதோடு இந்திய குடியரசு தலைவரின் சிறப்புரையும் யாழ் இந்திய துணை தூதுவரால் வாசிக்கப்பட்டது. https://globaltamilnews.net/2023/186745/
-
- 2 replies
- 597 views
- 1 follower
-
-
ரீயூனியன்தீவில் கைதுசெய்யப்பட்ட 38 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். By RAJEEBAN 26 JAN, 2023 | 03:17 PM ரீயூனியன்தீவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த 38 சட்டவிரோத குடியேற்றவாசிகள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடல்வழியாக ரீயூனியன் தீவிற்கு செல்ல முயன்ற 38 இலங்கையர்கள் 14ம் திகதி கைதுசெய்யப்பட்டனர். டிசம்பர் முதலாம் திகதி நீர்கொழும்பு துறைமுகத்திலிருந்து மீன்பிடி படகொன்று ஐந்து பேருடன் புறப்பட்டதாகவும் இதன் பின்னர் 13 -14ம் திகதிகளில் புத்தளத்திலிருந்து 64 குடியேற்றவாசிகள் படகில் ஏற்றப்பட்டனர் எனவும தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து குறிப்பிட்ட படகு டியோகார்சியாவை நோக்கி பு…
-
- 0 replies
- 450 views
- 1 follower
-
-
நாம் ஏன் சர்வகட்சி மாநாட்டில் பங்குபெற வேண்டும்? ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இன்றைய சர்வ கட்சி மாநாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்துக்கொள்ளவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எமது பிரச்சினைகள் பற்றியும் பேசப்படாவிட்டால் எதற்காக நாங்கள் பார்வையாளர்களாக கலந்துக்கொள்ளவேண்டும்?” என்ற கேள்வியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இது தொடர்பான நடத்தை தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டுள்ளார், இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான உங்கள் அறிவிக்கப்பட்ட செயற்பாட்டில், இந்திய வம்சாவளி மலையக தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடனும், எமது மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்…
-
- 0 replies
- 248 views
-
-
இலங்கைக்கு இத்தாலி ஹெலிகொப்டர்! மனிதக் கடத்தலுக்கு எதிராக இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும், அதற்கு தேவையான ஹெலிகொப்டர்களை வழங்கவும் இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா ஜி. மன்னெல்லா (Rita G. Mannella) விருப்பம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை நேற்று (25) பிற்பகல் சந்தித்த போது இத்தாலிய தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது, முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது, கலாசார நிகழ்ச்சிகளை பரிமாறிக்கொள்வது, மற்றும் இக்கட்டான நேரத்தில் இ…
-
- 0 replies
- 344 views
-
-
புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின ; அகில இலங்கை , மாவட்ட மட்ட தரப்படுத்தல்கள் இல்லை By T. SARANYA 26 JAN, 2023 | 04:27 PM (எம்.மனோசித்ரா) ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று புதன்கிழமை இரவு வெளியிடப்பட்டன. 2022 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி இடம்பெற்றது. இப்பரீட்சைக்கு 334,805 பரீட்சாத்திகள் விண்ணப்பித்திருந்த போதிலும் , 329,668 பரீசாத்திகளே பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இதற்காக மாவட்ட ரீதியில் வெட்டுப்புள்ளிகளும் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய கொழும்பு கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை,…
-
- 0 replies
- 299 views
- 1 follower
-
-
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் -புலம்பெயர் தமிழர் அமைப்புகள் அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபைக்கு கடிதம் By RAJEEBAN 26 JAN, 2023 | 12:11 PM அமெரிக்கா இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் சுதந்திரம் குறித்த சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும் என அமெரிக்காவை சேர்ந்த ஆறு புலம்பெயர் தமிழர்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளன. அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபைக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆறு புலம்பெயர் தமிழர் அமைப்புகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.தமிழர்கள் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்துவருகி…
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
யாழைச் சேர்ந்த இராணுவ அதிகாரி சுந்தரம் அருளம்பலத்தின் இறுதிக் கிரியை By VISHNU 26 JAN, 2023 | 12:43 PM யாழ்ப்பாணம், கீரிமலை பகுதியில் உயிரிழந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான சுந்தரம் அருளம்பலத்தின் பூதவுடல் இன்றைய தினம் வியாழக்கிழமை 21 வேட்டுக்கள் முழங்க தீயில் சங்கமானது. கடந்த 1958ஆம் ஆண்டு இராணுவ சேவையில் இணைந்து, 1980ஆம் ஆண்டு சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் வயது மூப்பு காரணமாக கடந்த 23ஆம் திகதி கீரிமலையில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தார். இறுதிச் சடங்குகள், இன்றைய தினம் வியாழக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, கீரிம…
-
- 0 replies
- 654 views
- 1 follower
-
-
இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய வைத்தியர் - பல பெண்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குருநாகலை அண்மித்த பிரதேசத்தில் அமைந்துள்ள அரச வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரியிடம் சிகிச்சை பெற வந்த பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஓய்வு பெற இன்னும் ஒரு வருடம் உள்ள இந்த வைத்திய அதிகாரி நோய்களை பரிசோதிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக மாவத்தகம பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டிற்கமைய, இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குடும்பத் த…
-
- 0 replies
- 533 views
- 1 follower
-
-
யாழ்.மாநகர முதல்வராக மீண்டும் ஆர்னோல்ட்-வெளியானது வர்த்தமானி யாழ். மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். இந்தப் பிரகடனத்தைத் தாங்கிய 2315/62 ஆம் இலக்க விசேட வர்த்தமானி நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு வெளியாகியது. யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அதன் முதலாவது சமர்ப்பிப்பின் போது தோற்கடிக்கப்பட்டது. இதனை அடுத்து முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்ததார். இந்த நிலையில் அவரது வெற்றிடத்திற்கு 2012ஆம் ஆண்டு 22ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் 66 (எ) பிரிவின் கீழ், கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட தெரிவின் மூலம், முன்மொழியப…
-
- 5 replies
- 716 views
- 1 follower
-
-
கோட்டாவை ஏன் இன்னமும் விசாரணைசெய்யவில்லை- நீதிமன்றம் சீற்றம் By Rajeeban 26 Jan, 2023 | 10:58 AM முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஏன் இன்னமும் விசாரணைக்கு உட்படுத்தவில்லை என கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம் இது தொடர்பில் பொலிஸ்மா அதிபர் விளக்கமளிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 2022 ஜூலை மாதம் கொழும்பில் ஜனாதிபதியின் இல்லத்தில் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்ட 17.85 மில்லியன் தொடர்பிலான விசாரணைகள் குறித்து கேள்விஎழுப்பியுள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த பணம் குறித்து முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு விடுக்கப்பட்ட உத்தரவினை நிறைவேற்றாதத…
-
- 1 reply
- 601 views
-
-
சரணடைந்த புலிகள் தொடர்பான விசாரணையில், நேரடியாக முன்னிலையாக படையினருக்கு பணிப்பு! January 26, 2023 சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பான பல்வேறு தகவல்களை கோரி இலங்கை இராணுவத்துக்கு எதிராக, தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீடு இன்று (25.01.23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேன்முறையீட்டாளர் பா.நிரோஸ்க்குமாரும் அவருக்காக சட்டத்தரணிகளான சுவஸ்திக்கா அருலிங்கம், பஷான், ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன, மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ ஆகியோர் இன்றைய விசாரணையில் முன்னிலையாகி இருந்தனர். மேலதிகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ரட்ணவேல் ஆணைக்குழு முன்பாக மேன்ம…
-
- 1 reply
- 205 views
-
-
இரண்டு நாட்களுக்குள் பாலத்தினை அமைத்து தர முடியாத இராஜாங்க அமைச்சர் மட்டக்களப்பிற்கு தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய பொங்கல் விழா மட்டக்களப்பு - கிரான் பிரதான வீதியில் விவேகானந்தா வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாட்டின் தற்போதைய நிலைக்கு காரணமானவர்கள் பலரும் மட்டகளப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்…
-
- 6 replies
- 932 views
-
-
(எம்.மனோசித்ரா) கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கையின் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சருக்கு சீன தூதரகத்தின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் வெளியான கடிதம் போலியானது என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட குறித்த கடிதத்தில் இருதரப்பு , வணிகக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 5 ஆண்டு கால அவகாசத்தை வழங்குவதன் மூலம் திருப்பிச் செலுத்தும் அட்டவணையைத் தளர்த்த சீனா தயாராக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தை மறுத்துள்ள சீனத் தூதரகம், தனது உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பின் கீழ், இலங்கை ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சருக்கு எழுதப்பட்ட சமூக ஊடகங்களில் பரவும் கடிதம் ம…
-
- 3 replies
- 553 views
-
-
சர்வதேச விமான வழிசெலுத்தல் கட்டணம் பெப்ரவரி 1 முதல் திருத்தப்படுகிறது கொழும்பு விமான தகவல் பிராந்தியத்தின் ஊடாக பயணிக்கும் சர்வதேச விமானங்களுக்கான விமான வழிசெலுத்தல் கட்டணத்தை திருத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு விமான தகவல் பிராந்தியத்தின் மீது பறக்கும் சர்வதேச விமானங்கள் தொடர்பான விமான வழிசெலுத்தல் கட்டணம் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட்டால் அறவிடப்படுவதாகவும், 1985 ஆம் ஆண்டு முதல் அது திருத்தப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அதன்படி, பெப்ரவரி 1, 2023 முதல் கொழும்பு விமான தகவல் பிராந்தியத்தில் பறக்கும் சர்வதேச விமானங்களுக்கான விமான வழிசெலுத்தல் கட்டணத்தை திருத…
-
- 0 replies
- 284 views
- 1 follower
-
-
அரச ஊழியர்களின் ஊதியம் தொடர்பான புதிய யோசனை அரச ஊழியர்களுக்கு வாரந்தோறும் சம்பளம் வழங்கும் முறைமையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இவ்வாறு செய்வதன் மூலம் ஒரேயடியாக பாரிய தொகையை திரட்டும் சவாலுக்கு அரசாங்கம் முகம் கொடுக்க வேண்டியதில்லை. மேலும் சம்பளம் வாங்குபவரும், சம்பளம் வாங்குபவரும் கடனில் சிக்காமல் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். உலகின் பல நாடுகளில் வாரந்தோறும் அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஊதியம் வழங்கும் முறைமை உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். என்றும் அவர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/235…
-
- 0 replies
- 616 views
- 1 follower
-
-
உருளைக்கிழங்கு,பெரிய வெங்காயம், சீனி என்பவற்றின் மொத்த விலைகள் குறைந்தன கொழும்பு புறக்கோட்டை மொத்த சந்தையில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குகளின் மொத்த விலை குறைந்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெங்காயத்தின் புதிய மொத்த விலை 130 ரூபா என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கின் புதிய மொத்த விலை 100 ரூபாவாகும். இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 50 ரூபாவினாலும், இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு கிலோ ஒன்றின் விலை 80 முதல் 100 ரூபாவினாலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளத…
-
- 0 replies
- 507 views
- 1 follower
-
-
முன்னாள் மத்திய வங்கி ஆளுநருக்கெதிரான முறைப்பாடு வாபஸ் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக தினியாவல பாலித தேரர் தாக்கல் செய்திருந்த தனிப்பட்ட முறைப்பாடு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதன்படி, நீதவான் திலின கமகே நடவடிக்கைகளை முடித்து வைத்தார். https://thinakkural.lk/article/235799
-
- 0 replies
- 419 views
- 1 follower
-
-
தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு! By T. SARANYA 25 JAN, 2023 | 12:44 PM தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு நேற்று (ஜன 24) அறிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாக சபைக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இது தொடர்பில் தெரிவிக்கையில், தேர்தல் பணிகளை முன்னெடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியதாக தெர…
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
இலங்கை விவகாரங்களில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தலையிடக்கூடாது என தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்க தூதுவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் குணதாச அமரசேகர இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தாமதமாவதற்கு சீனாதான் காரணம் என தெரிவிப்பதன் மூலம் சீன எதிர்ப்பு உணர்வை அமெரிக்க தூதுவர் உருவாக்க கூடாது என அவர் கடிதமொன்றில் தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதுவர் மக்களை தவறாக வழிநடத்த முயல்கின்றார் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் பகையை உருவாக்க முயல்கின்றார் என குணதாச அமரசேகர தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். சீனா ஏற்கனவே இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக…
-
- 1 reply
- 222 views
- 1 follower
-
-
பெரும்பாலான உள்ளூராட்சிமன்றங்களை நிச்சயம் கைப்பற்றுவோம் – பஷில் ராஜபக்ஷ January 25, 2023 பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் ஒன்றிணைந்தவர்கள் தனித்து சென்றுள்ளமை சவால் மிக்கதாகும். சவால்களை வெற்றிக்கொள்ள வேண்டும். ஒன்றிணைவதும் விலகிச் செல்வதும் இயல்பானது. தாமரை மொட்டுச் சின்னத்தில் 252 உள்ளூராட்சிமன்றங்களில் போட்டியிடுவோம். பெரும்பாலான உள்ளூராட்சிமன்றங்களை நிச்சயம் கைப்பற்றுவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவத்தார். தலதா மாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை மத வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இடம்பெறவுள்…
-
- 0 replies
- 248 views
-
-
3 இலட்சம் டொலர் பெறுமதியான 13 நவீன தடுப்பூசி களஞ்சிய அறைகளை நன்கொடையாக வழங்கியது ஜப்பான் By NANTHINI 25 JAN, 2023 | 11:11 AM (எம்.மனோசித்ரா) உரிய வெப்ப நிலையில் நீண்ட காலத்துக்கு தடுப்பூசிகளை களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடிய உயர் தொழில்நுட்பத்தினைக் கொண்ட 13 தடுப்பூசி களஞ்சிய அறைகள் ஜப்பான் அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. ஜப்பான் அரசாங்கத்தின் அவசர உதவியின் கீழ் நாட்டில் உள்ள குழந்தைகளின் நீண்ட கால மற்றும் குறுகிய கால சுகாதார தேவைகளை தொடர்ந்து மேம்படுத்துவதிலும் நிவர்த்தி செய்வதிலும் கவனம் செலுத்தி, இந்த அறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வேலைத்திட்டத்தை அடையாளப்படுத்தும் …
-
- 0 replies
- 545 views
- 1 follower
-
-
சுதந்திர தினத்தை புறக்கணித்து வடக்கிலிருந்து கிழக்குக்கு எழுச்சிப் பேரணி: யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு நாட்டின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரிநாள் எனத் தெரிவித்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பெப்ரவரி 4ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து மக்கள் எழுச்சிப் பேரணியில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் பேரணி வரும் பெப்ரவரி 4ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகி கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை மாவட்டங்கள் ஊடாக 7ஆம் திகதி மட்டக்களப்பை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட் டது. மாணவர் ஒன்றியம் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்தி…
-
- 0 replies
- 552 views
-
-
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் முயற்சிகள் மும்முரமாகியுள்ளதால், இது குறித்து, முஸ்லிம் தலைமைகள் கூடிய கவனம் எடுக்க வேணடும் என சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். இத்திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படுமானால், முஸ்லிம்கள் சார்பில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய பொறுப்பிலிருந்து முஸ்லிம் தலைமைகள் விலகி நிற்கக்கூடாது என்றும் அமைச்சர் நஸீர் அஹமட் மேலும் தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கைத் தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்து அண்மைக்காலமாக, இந்தியா அதிக அக்கறை செலுத்தி வருகிறது. புரையோடிப் போயுள்ள நாட்டின் தேசிய அரசியல் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்…
-
- 4 replies
- 591 views
-