Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சித்தாண்டியில் 16 அகவையுடைய சிறுவன் சுட்டுக்கொலை மட்டக்களப்பு சித்தாண்டிப் பகுதியில் சிறுவன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

  2. Posted on : Fri Jun 29 6:15:02 EEST 2007 தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் ஒரு போதும் செயற்படமாட்டாது - ஜனாதிபதி அரசாங்கம் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்படப் போவ தில்லை. இப் படிக் கூறியுள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நாட்டின் பாதுகாப்பு மற்றும் சமாதான முன்னெடுப்புகள் குறித்து மகாசங்கத்தினருக்கு விளக்கம் அளிக்கும் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. அங்கு வைத்து ஜனாதிபதி தெரிவித்ததாவது: நாட்டில் யுத்தம் இடம்பெறுகின்ற அதேவேளை, அபிவிருத்தியும் முன்னெடுத் துச் செல்லப்படும். நாட்டின் பொறுப்பை என்னிடம் கையளிப்பதற்கு முன்னின்று உழைத்த வர்கள் மகா சங்கத்தினர். மக்கள் முன்வைக்கப் படும் முரண்பாடான கருத்துக்களின் உண்மை நிலையை மகா நா…

    • 5 replies
    • 1.5k views
  3. சிறிலங்கா மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் சதி உள்ளது: மகிந்த ராஜபக்ச. சிறிலங்கா அரசாங்கம் மீதான மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டில் சதி உள்ளது என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜ்பாக்ச குற்றம் சாட்டியுள்ளார். மகிந்தவின் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மகா சங்கக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: 1989-90 காலப் பகுதிகளில் மனித உரிமை மீறல் விடயங்களை வெளிப்படுத்தியவன் நான். தென்னிலங்கையில் மட்டுமல்ல வடக்கு கிழக்கிலும் அத்தகைய மனித உரிமை மீறல்களை எந்தச் சூழலிலும் அனுமதிக்க மாட்டேன். அரசாங்கம் மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் சதி உள்ளது. நாட்டின் தற்போதைய நெருக்கடியான நிலையில் உள்ளது. எமது தேசத்துக்கு நாம் துரோகம் செய்ய முடியாது. எந்த …

    • 1 reply
    • 904 views
  4. காரைநகரில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு. காரைநகர் கடற்கரைப்பகுதியில் உருக்குலைந்த நிலையிலுள்ள ஆணின் சடலமொன்றை ஊர்காவற்துறை பொலிஸார் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. சடலம் மிகவும் உருக்குலைந்த நிலையில் இருப்பதால் சடலத்தை அடையாளம் காண்பது சாத்தியமில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. -Tamilnet-

  5. கருணா குழுவை கலைக்க வேண்டும்: ரிச்சர்ட் பௌச்சர். சிறிலங்கா இராணுவத்தின் ஆதரவுடன் இயங்கும் கருணா குழுவை கலைக்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்க அமைச்சின் பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் வலியுறுத்தியுள்ளார். இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நோர்வே தலைநகர் ஓஸ்லோ சென்றிருந்த ரிச்சர்ட் பௌச்சர், நோர்வே தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காண்லில் இதனை வலியுறுத்தியுள்ளார். தமிழ்ப் புலிகளும் அரசாங்க படையின் ஆதரவு பெற்ற கருணா குழுவினரும் தொடர்ந்து சிறார்களை படையணிகளில் சேர்ப்பதாக யுனிசெஃப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. சிறார்களை படையணிகளில் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் கருணா குழு தொடர்ந்து ஈடுபட்டு வருவதை அமெரிக்கா அவதானித்து வ…

    • 3 replies
    • 1.9k views
  6. Posted on : Mon Jun 25 6:59:07 EEST 2007 இணைத் தலைமை நாடுகள் ஒஸ்லோவில் இன்று கூடுகின்றன இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் மாநாடு இன்றும் நாளையும் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெறவிருக்கின்றது. நோர்வேயின் சர்வதேச விவகாரங்களுக்கான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தலைமையில் இந்த மாநாடு நடைபெறும். இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமை மீறல்கள், சட்டம் ஒழுங்கு நிலைமை ஆகியன தொடர் பாக இன்றைய மாநாட்டில் விரிவாகவும் முன்னுரிமை கொடுத்தும் ஆராயப்படவுள்ளது. சமாதான முயற்சிகள் தொடர்பாக நாளைய மாநாட் டில் ஆராயப்படவுள்ளது. மாநாட்டின் முடிவில் அங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து அறிக்கை வெளி யிடும் சாத்தியம் இல்லை என்றும் தீர்மானங்கள் இரு தரப்புகளுக்கும் அன…

  7. வவுனியாவில் கிளைமோர் வெடிப்பு - 6 பேர் காயம் [ த.இன்பன் ] - [ யூன் 29, 2007 - 06:04 AM - GMT ] செட்டிக்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த பேரூந்து இன்று காலை 8.05 மணியளவில் கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இதன்போது பொது மக்கள் ஆறு பேர் காயமடைந்தள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. செட்டிக்குளம் பகுதியில் நடைபெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களில் இரு மாணவர்களும், இரு பெண்களும் அடங்கவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலதிக விபரங்கள் எதி்ர்பார்க்கப்படுகிறது. - ஈழத்தமிழ் http://www.eelatamil.net/index.php?option=...8&Itemid=67

  8. Posted on : 2007-06-29 ஊடக அடக்குமுறைச் சட்டத்தை மீளக் கொண்டுவரும் கபடத்தனம் இலங்கைத் தீவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் வந்த காலம் தொட்டு, இங்கு அடிப்படை மனித உரிமைகள் மோசமாக மீறப்படுவது குறித்து தேசிய, சர்வதேச மட்டங்களில் தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகின்றது. நாட்டின் உயர் சட்ட வேதமான அரசமைப்பில் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகளை நாசூக்காக மீறும் ஏற்பாடுகள் ஏற்கனவே அவசரகாலச் சட்டத்தின் கீழ்அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு ஒழுங்கு விதிகள் மூலம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டிருப்பது குறித்து பல தடவைகள் இப்பத்தியில் சுட்டிக்காட்டப்பட்டாயிற்று. போதாக்குறைக்கு மோசமான வன்முறைகள் மற்றும் அடிப்படை மனித உரிமை மீறல்களில் ஈடுபடக்கூடிய படையினரு…

  9. முல்லைத்தீவு பொது மருத்துவமனைக்கு எரிபொருள் விநியோகம் தடை: 8 மாத அவலம் தொடர்ந்தும் நீடிப்பு முல்லைத்தீவு பொது மருத்துவமனைக்கு எரிபொருள் விநியோகம் தடை செய்யப்பட்டதால் கடந்த 8 மாத காலமாக பாரிய அவலங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் மருத்துவ பொறுப்பதிகாரி வீரகத்தி சண்முகராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியதாவது: முல்லைத்தீவு மாவட்டம் என்பது நவீன வசதிகளைப் பெறுவதற்கு முடியாத அளவிற்கு மிகவும் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. அரசின் வசதிகள் இம் மக்களுக்குக் கிடைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே இருக்கிறது. இந்நிலையில் இலங்கையின் அனைத்து மாவட்டங்களுக்கும் பொது மருத்துவமனை அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.…

  10. இந்திய மீனவ சங்கத் தலைவர் திரு ஆண்டினி கோமஸ் அவர்களை "அவுஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்" அண்மையில் செவ்வி கண்டது. அதன்போது ஆண்டனி கோமஸ் அவர்கள் தமிழக மீனவர்கள் படுகொலை மற்றும் கடத்தல், இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசின் பாராமுகம், தமிழீழப் போராட்டம் போன்ற விடயங்கள் பற்றி மனம் திறந்து பேசினார். அந்தச் செவ்வியின் முழு விபரம்: செய்தியாளர்: இராமேஸ்வரம் அருகே ஜூன் 17ம் திகதி சிங்கள மீனவர்களால் தமிழக மீனவர்கள் குண்டு வீசி தாக்கப்பட்டதாக அறிகின்றோம். அதை பற்றி விபரங்களை கூற முடியுமா? கோமஸ்: கடந்த ஜூன் மாதம் அல்ல, ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்சி. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். எங்களை பொறுத்தவரையில் இலங்கை கடற்படை தாக்குதலாகவே நாங்கள் நினை…

    • 3 replies
    • 2.6k views
  11. 'வர்த்தமானியூடாகவும் வன்முறைகள்' - சபேசன் கடந்த 10.06.07 அன்று வெளியாகிய, சிறிலங்காவின் அரச வர்த்தமானியின் ஊடாக, மகிந்த ராஜபக்சவின் சிங்கள-பௌத்தப் பேரினவாதச் சிந்தனை, மீண்டும் ஒரு முறை வெளிப்பட்டிருக்கிறது. 'சம்பூரை உள்ளடக்கிய மூதூர் கிழக்குப் பிரதேசங்களை, அதியுயர் பாதுகாப்பு வலையமாகப்' பிரகடனப்படுத்தி உள்ள இந்த அரச வர்த்தமானி, 'அங்கே மக்கள் மீளக் குடியேற முடியாது' என்றும் 'மீறி அப்பகுதிகளுக்குள் நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றும் அறிவித்துள்ளது. தமிழ் மக்களின் பாரம்பரிய மண்ணைப் பறிப்பதற்காகச் சிறிலங்கா அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற பேரினவாதச் செயற்பாடுகளின் நீட்சிதான், இந்த வர்த்தமானி அறிவித்தலாகும்.! தமிழ் மக்களின் தாயகப் பிர…

  12. வெள்ளை வான்களின் நிறங்களை மாற்ற தீர்மானம் வீரகேசரி நாளேடு வெள்ளை வான்களின் நிறங்களை மாற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஊடகவியலாளர்களை நோக்கி நகைச்சுவையாகத் தெரிவித்தார். கொழும்பு கேம்பிரிஜ் டெரஸிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றுக்காலை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினரை சந்திப்பதற்கு முன்னதாக ஊடகவியலாளர்களிடம் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அரசியலில் என்ன மாற்றம்? என்று ஊடகவியலாளர்களைப் பார்த்துக் கேட்ட எதிர்க்கட்சித் தலைவர், வெள்ளை வான்களின் நிறங்களை மாற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாம் எனவும் சிரித்துக்கொண்டு நகைச்சுவையாக கூறினார். இதனையடுத்து, …

  13. முக்கிய அமைச்சர்கள் பலர் விரைவில் ஐ.தே.க.வுடன் இணைவர் அரசியல் அநாதையாகிவிடாமல் ஜே.வி.பி.யும் சேரவேண்டும் வீரகேசரி நாளேடு அரசாங்கத்திலிருந்து முக்கிய அமைச்சர்கள் பலர் விரைவில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துகொள்ளவுள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன. எந்தெந்த அமைச்சர்கள் எமது கட்சியுடன் இணைந்துகொள்ளவுள்ளனர் என்பதனை விரைவில் அறிவிப்போம். இன்னும் மூன்று மாதங்களில் நாட்டின் அரசியலில் பாரிய மாற்றங்கள் இடம்பெறும். ஐக்கிய தேசிய கட்சி உருவாக்கும் பொது கூட்டணியில் இணைந்துகொள்ளுமாறு ஜே.வி.பி.க்கும் அழைப்பு விடுக்கின்றோம் என்று ஐ.தே.க. வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். பத்திரிகையாளர்களுக்கு தண்டனை வழங்கும் குற்றவியல் ச…

  14. வியாழன் 28-06-2007 17:53 மணி தமிழீழம் [கோபி] சிறீலங்காவுக்கு யப்பான் 500 மில்லியன் ஜென் நிதியுதவி சிறீலங்காவுக்கு யப்பான் 500 மில்லியன் ஜென் நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது. யுத்த முன்னெடுப்புகளினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனித நேயப் பணிகளுக்காக இந்த நிதி வழங்கப்படுவதாக யப்பான் வெளிவிவகார அமைச்சர் ராரோ அசேசா தெரிவித்துள்ளளார். யப்பான் சென்றுள்ள சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம யப்பான் வெளிவிவகார அமைச்சரை சந்தித்து உரையாடிய பின்னர் இத்தகவலை யப்பான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். சந்திப்பில் சிறீலங்கா அரசாங்கம் மனித உரிமை மதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துரைத்த போகல்லாகம மனித உரிமை மீறல்களைக் கட்டுப்பட…

  15. தினக்குரல் ஊடகவியலாளர் வான் படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா வான் படையினரால் தினக்குரல் ஊடகவியலாளர் கே.பி.மோகன் இன்று வியாழக்கிழமை பிற்பகல் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகிந்தவின் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த போது அவரை வீதியில் வைத்து வழிமறித்து வான் படையினரும் மகிந்தவின் பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து தாக்கியுள்ளனர். பாதுகாப்புத் தடைகளைத் தாண்டிச் செல்ல முற்பட்டதால் அவர் தாக்கப்பட்டார் என்று வான் படையினர் தெரிவித்துள்ளனர். கடுமையான தாக்குதலுக்குள்ளான கே.பி.மோகன், கோட்டை காவல் நிலையத்தில் வான் படையினரால் கையளிக்கப்ப…

  16. கிழக்கு மாகாணத்தில் புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பெரும்பகுதி பிரதேசங்களையும் அண்மையில் கைப்பற்றிவிட்ட ஸ்ரீலங்கா அரச படையினர் தற்போது மட்டக்களப்பு பிரதேசத்தில் தொப்பிகல பகுதியில் புலிகள் வசமிருந்த பெரும் நிலப்பரப்பையும் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் தொப்பிகலயிலுள்ள புலிகளின் பிரதான பலம் வாய்ந்த முகமாகிய பெய்ரூட் பேஸ் முகாமையும் அதன் இணை முகாம்களாகிய ஷோவன் பேஸ், புலிபாய்ந்தகல் பேஸ் ஆகிய முகாம் தொடர்களை பெருமளவு அரச படையினர் சுற்றிவளைத்து வைத்திருப்பதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. பீரங்கி அணிகளுடன் குறித்த புலிகளின் பலம் வாய்ந்த மேற்படி பெய்ரூட் பேஸ் , ஷோவன் பேஸ் முகாம்களை நோக்கி அரச படையினர் முன்னேறிவிட்ட நிலையில் அந்த முகாம்களிலிருக்கும்…

  17. இந்தியாவுக்கு தவறாக புரிதலை ஏற்படுத்த மகிந்த முயற்சித்தார்: மங்கள குற்றச்சாட்டு. இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்கு தவறாக புரிதலை ஏற்படுத்த மகிந்த ராஜபக்ச முயற்சித்தார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர குற்றம்சாட்டியுள்ளார். இந்திய நாளேடான இந்துஸ்தான் ரைம்சுக்கு மங்கள சமரவீர அளித்த நேர்காணலில் கூறப்பட்டுள்ளதாவது: எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க- ஜவஹர்லால் நேரு காலத்திலிருந்து இந்தியா-சிறிலங்கா உறவானது வலுவானதாக இருந்தது. கடந்த 2005 ஆம் ஆண்டு அப்போதைய வெளிவிவகார அமைச்சராக இருந்த லக்ஸ்மன் கதிர்காமர், இந்தியா-சிறிலங்கா உறவானது உயர்நிலையில் இருப்பதாகக் கூறினார். ஆனால் தற்போதைய ராஜபக்ச அரசாங்கமானது 4 மாதங்களில் அந்த உறவ…

  18. வியாழன் 28-06-2007 04:56 மணி தமிழீழம் [சிறீதரன்] வான் படையினரின் பயிற்சி வானூர்தி விபத்தில் சேதம் இரத்மலானைப் பகுதியில் சிறீலங்கா வான் படைகளுக்குச் சொந்தமான பயிற்சி வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகி சேதமடைந்துள்ளது. நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்ட வானூர்த்தியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக அவசர அவசரமாக இரத்மலானை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட போது சிறீலங்கா பயிற்சி வானூர்தி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக சிறீலங்கா விமானப் படையினர் அறிவித்துள்ளனர். விபத்தில் சிக்கி சேதமடைந்த வானூர்த்தியை சீர்செய்துவிட முடியும் என கப்டன் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இவ் விபத்தையடுத்து நேற்று மாலைவரை வான்படைக்கு சொந்தமான வானூர்திகள் எதுவும் பற…

    • 1 reply
    • 1.4k views
  19. நெடுங்கேணியில் விமான தாக்குதல் வீரகேசரி இணையம் வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பகுதியில் இன்று காலை விடுதலை புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது விமான படையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நெடுங்கேணி தென்கிழக்கு பகுதியிலுள்ள விடுதலை புலிகளின் இரு நிலைகள் மீது இன்று காலை 6.15 மணியளவில் விமான படையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இதன் போது விடுதலை புலிகளின் இரு நிலைகளும் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது. எனினும் இது தொடர்பாக விடுதலை புலிகள் இதுவரை எது வித தகவலையும் வெளியிடவில்லை.

  20. ஏழாலையில் இளைஞர்கள் மீது ஈ-பி-டி-பியினர் தாக்குதல். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் உந்துருளியில் வந்தவர்களினால் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள். இரவு நேரம் ஊரடங்குச் சட்டம் அமுலில் இல்லாத நேரம் சுமார் 6.45 மணியளவில் ஆயுதங்களுடன் வந்த சுமார் ஆறு பேர் இந்த இளைஞர்களை எந்த வகையான கேள்விகளும் இன்றி தாக்கிவிட்டுச் சென்றள்ளார்கள். இந்த சம்பவம் ஏழாலை மகாவித்தியாலயத்திற்கு முன்னால் இடம் பெற்றுள்ளது. இதில் காயப்பட்ட இருவர் தனியார் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றள்ளார்கள். சுன்னாகத்தில் உள்ள ஈ.பி.டி.பி முகாமில் உள்ளவர்களே இத்தகைய நடவடிக்கையில் ஈடபட்டதாக தெரிய வருகின்றது. இவர்கள் பகல் வேளையில் சுன்னாகம் மற்றும் மருதனார் மடம் பகுதிகளில…

  21. தமிழர்களின் வாழ்வுரிமைக்கான போராட்டம் கால இழுத்தடிப்புக்களை இனியும் அனுமதிக்காது. தமிழர்கள் தங்களின் அரசியல் எதிர்காலத்தை தாங்களாகவே தீர்மானிப்பார்கள்.... 27.06.07 அன்றைய காலக்கணிப்பு

  22. யாழ் - நாவாந்துறை காக்கைதீவு வீதியில் கிளைமோர் தாக்குதல்: இரு இராணுவத்தினர் பலி. வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் நாவாந்துறை காக்கைதீவு வீதியில் ஈருறுளியில் சென்றுகொண்டிருந்த சிறீலங்கா காவல்துறையினர் மீது பதுங்கியிருந்து மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இரு சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது காயமடைந்தவர்கள் பலாலி இராணுவ வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தாக்குதலையடுத்து தேடுதல் நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது -Pathivu-

  23. பசுவதை கூடாது என்று பிரச்சாரம் செய்யும் நீங்கள் ஈழத் தமிழன் வதை செய்யப்பட்டு கொல்லப்படுவதற்கு ஒரு வார்த்தை கூட கண்டனம் தெரிவிக்கவில்லையே ஏன்? என்று நிகழ்ச்சி ஒன்றில் காஞ்சி சங்கராச்சாரியிடம் அண்ணா தி.மு.க.வின் முன்னாள் அவைத் தலைவரான கவிஞர் புலமைப்பித்தன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தினத்தந்தி நாளிதழிலில் வெளியான செய்தியில் இடம்பெற்றுள்ளதாவது: உங்களை (சங்கராச்சாரியாரை) கைது செய்த போது தமிழகத்தில் யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே ஏன்? பசுவதை கூடாது என்று கூறும் நீங்கள்இ ஈழத்தில் தமிழன் வதை செய்யப்பட்டு கொல்லப்படுவதற்கு ஒரு வார்த்தை கூட கண்டனம் தெரிவிக்கவில்லையே ஏன்? இதன் காரணமாகத்தான் உங்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஒரு குண்டூசியைக் கூட அசைக்க ய…

  24. மன்னாரில் 500 மீற்றர் நீளமான காவலரண்கள் தாக்கியழிப்பு: 5 இராணுவத்தினர் பலி புதன்கிழமை 27 யூன் 2007 05:53 ஈழம் வவுனியாவிலிருந்து த.சுகுணன் தள்ளாடியில் இருந்து மன்னார் நோக்கிய பகுதியில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினரின் 500 மீற்றர் நீளமான காவலரண்கள் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 5 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். தள்ளாடி படைத்தளத்தில் இருந்து மன்னார்ப் பக்கமான இராணுவத்தினரின் 500 மீற்றர் நீளமான காவலரண்கள் மீது அதிகாலை விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி அக்காவலரண்களை அழித்துள்ளனர். இச்சம்பவத்தில் 5 இராணுவத்தினர் கொல்லப்படஇ இழப்புக்களுடன் இராணுவ…

  25. Posted on : 2007-06-28 பிரிட்டன் பிடியை இறுக்குவது ஏன்? ஈழத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களை சர்வதேசம் கையாளும் முறைமைகள் குறித்து இப்பத்தியில் பல தடவைகள் குறை கூறியும் விசனம் தெரிவித்தும் வந்துள்ளோம். அந்த வரிசையில் இப்போது ஈழத் தமிழர் விவகாரம் குறித்து பிரிட்டன் நடந்துகொள்ளும் புதிய போக்குக் குறித்து குறிப்பிட வேண்டியிருக்கின்றது. லண்டனில் உள்ள புலிகளின் பொறுப்பாளர் சாந்தன் நீண்ட காலம் அங்கு தங்கியிருப்பவர். தமது பழைய வழைமையான நடவடிக்கைகளையே தொடர்ந்தும் மேற்கொண்டுவந்த அவரும், அவரது உதவியாளர் ஒருவரும் அங்கு கைதுசெய்யப்பட்டிருக் கின்றார்கள். ஈழத் தமிழர்கள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த சில அமைப்புகள் பிரித்தானிய அதிகாரிகளால் குடையப்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.