ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
வன்முறையைக் கைவிட்டால் புலிகளுடன் பேச்சுகளுக்குத் தயார்: அமைச்சர் ரோகித போகல்லாகம [வியாழக்கிழமை, 2 ஓகஸ்ட் 2007, 18:39 ஈழம்] [சி.கனகரத்தினம்] தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தையும், வன்முறையையும் கைவிட்டால் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். மணிலாவில் ஆசிய பாதுகாப்பு சபையின் கூட்டத்தின் பின்னர் இன்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் ரோகித போகல்லாகம கூறியதாவது: இலங்கையில் அரசியல் பேச்சுக்கள் மூலம் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளை அரசாங்கம் கைவிடவில்லை. ஆனால் போராளிகள் தங்களது நேர்மையை வெளிப்படுத்த வேண்டும். விடுதலைப் புலிகளுடன் நாளையே பேச்சுக்களை நடாத்…
-
- 10 replies
- 3k views
-
-
பிரபாகரனைப் பற்றி இந்தியா புரிந்துகொள்ளாதது தவறானது: "றோ" முன்னாள் தலைவர் ஏ.கே.வர்மா ஒப்புதல் [வெள்ளிக்கிழமை, 3 ஓகஸ்ட் 2007, 14:53 ஈழம்] [ப.தயாளினி] தமிழ் மக்கள் சார்பாக ஒரு தீர்மானத்தை எடுக்கக்கூடிவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சிங்களத் தலைமைகள் மாற்றியிருந்ததை இந்தியா புரிந்துகொள்ளாதது தவறானது என்று இலங்கையில் இந்திய அமைதிப்படை இருந்த காலத்தில் இந்திய உளவு அமைப்பான "றோ"வின் தலைவராக இருந்த ஏ.கே.வர்மா ஒப்புக்கொண்டிருக்கிறார். இலங்கையில் இந்தியாவின் தலையீடு தொடர்பாக முதல் முறையாக உத்தியோகப்பூர்வமான ஆராய்வாக புதுடில்லியில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் ஏ.கே.வர்மா கட்டுரை ஒன்றை வாசித்தார். அக்கட்டுரையின் தமிழ் வடிவம்…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையில் மீண்டும் அனைத்துலகத்தின் திருவிளையாடல் தொடக்கம் [வெள்ளிக்கிழமை, 3 ஓகஸ்ட் 2007, 14:54 ஈழம்] [சி.கனகரத்தினம்] தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய போர் நகர்வுகள் மேற்கொள்வதைத் தடுத்து மீளவும் அமைதிப் பேச்சு என்னும் சதிவலைக்குள் தமிழர் தரப்பை சிக்க வைக்க தனது திருவிளையாடல்களை அனைத்துலக சமூகம் மற்றும் ஒருமுறை இலங்கைத் தீவில் தொடங்கியிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய செயற்பாடுகளில் தம்மை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டிருந்த இரு இளம் மாணவர்கள் தொடர்ச்சியாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களைப் படுகொலை செய்யும் நிகழ்வுகள் மீளவும் அரங்கேறியிருக்கும் இதே கால கட்டத்தில் தென்னிலங்கை அரசியல் களத்திலும் கள நிலைமைகள் மாற்றமும்…
-
- 0 replies
- 996 views
-
-
மகிந்த ராஜபக்ஸவை பலவீனப்படுத்தும் மேற்குலகம் - தமிழர் தரப்பை குறிவைத்து நடவடிக்கை! சிறிலங்காவின் அரசியல் நிலை கடந்த சில வாரங்களாக மிகப் பரபரப்பாகக் காணப்படுகிறது. சிறிலங்காவின் ஜனாதிபதிக்கு எதிராக எதிர்கட்சிகள் தமது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. மகிந்தவின் அரசை கவிழ்க்கின்ற வேலைகள் திடீரென்று வேகம் எடுத்துள்ளன. சில மாதங்களுக்கு முன்பு மகிந்த ராஜபக்ஸ எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பல உறுப்பினர்களை தன்னுடைய கட்சிக்குள் இழுத்தார். அவர்கள் அனைவருக்கும் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளை வழங்கினார். 107 அமைச்சர்களோடு உலகின் மிகப் பெரிய அமைச்சரவையை மகிந்த ராஜபக்ஸ அமைத்தார். இந்த நேரத்தில் மகிந்தவின் நடவடிக்கைகளால் அதிருப்தியில் இருந்த மங்க…
-
- 1 reply
- 1.4k views
-
-
அநுராதபுரம், மதவாச்சி , கெப்பிட்டிக்கொல்லாவ பகுதிகளில் அகதி முகாம்களை அமைக்கும் நிலை வீரகேசரி நாளேடு யுத்த அச்சம் காரணமாக வவுனியாவில் உள்ள 20 சிங்கள கிராமங்களின் மக்கள் படிப்படியாக இடம்பெயர்ந்துவருகின்றனர். விரைவில் அநுராதபுரம், மதவாச்சி மற்றும் கெப்பிட்டிக்கொல்லாவ போன்ற பிரதேசங்களில் அகதி முகாம்களை நிறுவவேண்டிய அபாயம் எற்பட்டுள்ளது. ஏற்கனவே வவுனியாவில் இடம்பெயர்ந்துள்ள மூன்று கிராமங்களின் மக்கள் தங்குமிட வசதியின்றியும் உணவின்றியும் தவிக்கின்றனர். அரசாங்கம் கண்ணைமூடிக்கொண்டிருக்கின்ற?ு என்று ஐக்கிய தேசியக் கட்சியின் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.ஹெரிசன் தெரிவித்தார். மூன்று மாதங்களில் பெற்றுத்தருவதாக கூறப்பட்ட கௌரவ சமாதானம் எங்கே என்று அரசாங்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட புலிகள் மலையக தோட்டப் பகுதிக்குள்ளும் ஊடுருவலாம் [03 - August - 2007] * நுவரெலியா மாவட்ட செயலாளர் எச்சரிக்கை `கிழக்கிலங்கையில் பல இடங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியதையடுத்து அங்குள்ள விடுதலைப் புலிகள் எங்கு சென்றார்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்று எவருக்கும் தெரியாது. அவர்கள் மலையகத் தோட்டப் பகுதிகளுக்குள்ளும் ஊடுருவலாம். ஆகையால் இப்பகுதியில் வாழும் தோட்ட கிராம , நகர மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நுவரெலியா மாவட்ட செயலாளர் ஆர்.எம்.எம்.ரட்ணாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நுவரெலியா நகர வர்த்தகர்கள் கலந்து கொண்ட பாதுகாப்பு சம்பந்தமான கூட்டத்தில் உர…
-
- 0 replies
- 1.1k views
-
-
பேச்சுவார்த்தை தோல்விகளுக்கு அடிப்படைக் காரணம் என்ன? [03 - August - 2007] கலாநிதி நீலன் திருச்செல்வம் நினைவுப் பேருரையை நிகழ்த்துவதற்காக அவுஸ்திரேலியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் காரத் ஈவான்ஸ் கடந்தவாரம் கொழும்பு வந்திருந்தார். பெல்ஜியத்தை தலைமையகமாகக் கொண்டியங்கும் சர்வதேச நெருக்கடி குழு (International Crisis Group) என்ற அரசாங்கசார்பற்ற சர்வதேச தொண்டர் நிறுவனத்தின் தலைவராகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் ஈவான்ஸ் இப்போது பணியாற்றுகின்றார். உலகளாவிய ரீதியில் மோதல்களையும் நெருக்கடிகளையும் தடுப்பதற்காக இந்த சர்வதேச நெருக்கடிக் குழு பாடுபடுகின்றது. வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈவான்ஸ் சந்தித்து இலங்கை நிலைவரங்கள் தொடர்பாக கல…
-
- 0 replies
- 935 views
-
-
Posted on : 2007-08-03 அரச பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் விசேட சட்ட விலக்களிப்பு ஏற்பாடுதான் ஆட்கள் கடத்தப்படுதல், காணாமற் போகச் செய்யப்படுதல், கொலை செய்யப்படுதல், அச்சுறுத்திக் கப்பம் அறவிடப்படல் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் கொழும்பில் மக்கள் கண்காணிப்புக் குழு நடத்திய இரண்டாவது மாநாட்டின் மூலம் இந்த விவகாரத்தின் மோசமான நிலைமையை சர்வதேச மட்டத்திற்கு அம்பலப்படுத்தும் வாய்ப்புக் கிட்டியிருக்கின்றது. இந்த மோசமான மனித உரிமை மீறல்களின் பின்னணியில் "அரச பயங்கரவாதமே' மூலகாரணமாக இருக்கின்றது என்பதும் இந்த மாநாடு மூலமாக அம்பலப்படுத்தப்பட்டிருக்கி
-
- 0 replies
- 710 views
-
-
மிதிவெடி அகற்றமுயன்ற படையினர் ஆறு பேர் அது வெடித்ததில் படுகாயம் [ த.இன்பன் ] - [ ஓகஸ்ட் 02, 2007 - 11:30 AM - GMT ] வெலிகந்தைக்கு அண்மையில் உள்ள பகுதி ஒன்றில் மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் அறுவர் மிதிவெடி ஒன்று வெடித்ததினால் படுகாயமடைந்துள்ளனர். இன்று நண்பகல் 12.00 மணிக்கு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன்போது காயமடைந்த படையினர் மகாஓயா மற்றும் பொலநறுவை மருத்துமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். eelatamil.net
-
- 2 replies
- 1.5k views
-
-
எத்தனை பில்லியன் ரூபாக்களை கொடுத்தாலும் பிரபாகரனை விலைக்கு வாங்க முடியாது வீரகேசரி நாளேடு எத்தனை பில்லியன் ரூபாக்களைக் கொடுத்தாலும் வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்ற போராட்டத் தலைவர் ஒருவரை விலைக்கு வாங்க முடியாது. இது அனைத்துத் தரப்பினரும் அறிந்துள்ள விடயம். பணத்திற்கு சோரம் போகும் ஒருவராக பிரபாகரனை கருதவும் முடியாது என்று நிர்மாண மற்றும் பொறியியல்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜயவர்தன, ஆர். பிரேமதாஸ, டி.பி. விஜயதுங்க, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரால் விலைக்கு வாங்க முடியாமல்போன வேலுப்பிள்ளை பிரபாகரனை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ விலைக்கு வாங்கியிருந்தால், அது தேசியத்திற்கு கௌரவமளிக்கும் செயலாகும் என…
-
- 2 replies
- 1.9k views
-
-
டெல்லி: இந்திய நிறுவனங்கள், இலங்கையில் அதிக அளவில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை முதலீட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் நவீன் திசநாயகே கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லி வந்துள்ள திசநாயகே, மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்திய நிறுவனங்கள் இலங்கையில் அதிக அளவில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக எண்ணை உற்பத்தி, சுத்திகரிப்பு, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைப் பிரிவுகளில் அதிக அளவிலான இந்திய முதலீடுகளை இலங்கை வரவேற்கிறது. திரிகோணமலையில் 1000 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு பொருளாதார மண்டலத்தை இலங்கை அரசு உருவாக்கவுள்ளது. இதற்குத் தேவைய…
-
- 0 replies
- 992 views
-
-
வடக்கில் அரச கட்டுப்பாடற்ற பகுதியில் மக்கள் மருந்து, உணவு இன்றி தவிப்பு வடக்கில் அரச கட்டுப்பாடற்ற பகுதிகளில் உள்ள மக்கள் மருந்து, உணவு மற்றும் குடிப்பதற்கு தண்ணீ“ர் கூட இன்றி தவித்துக்கொண்டிருக்கின்றனர
-
- 0 replies
- 709 views
-
-
வெள்ளி 03-08-2007 02:42 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கை அவுஸ்ரேலிய அமைச்சரால் ஆளப்படவில்லை - ஸ்ரீலங்கா அரசாங்கம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தாங்கள் எந்த ஓரு நாட்டிற்கும் பயப்பட வேண்டியதில்லை என்றும் தமது நாட்டை அவுஸ்ரேலிய அமைச்சர் ஆட்சி புரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட அவுஸ்ரேலியாவின் முன்னாள் அமைச்சர் கரத் இவான்ஸ் ஸ்ரீலங்கா அரசாங்கம் வடக்கை கைப்பற்றும் நோக்கில் படை நடவடிக்கையினை ஆரம்பித்தால் அனைத்துல நாடுகள் அதனை தடுப்பதற்கு முயற்ச்சிக்கும் என்று கூறியிருந்தார். அவுஸ்ரேலிய முன்னாள் அமைச்சரின் கருத்திற்கு பதிலளித்த அமைச்ச் ஜ…
-
- 4 replies
- 1.6k views
-
-
போர்முனைக் கேடயங்கள் [03 - August - 2007] -எஸ்.ராஜாராம்- இலங்கையில் சிறுவர்களைப் படையில் வலுக்கட்டாயமாகச் சேர்ப்பதாக விடுதலைப் புலிகள் மீது அவ்வப்போது புகார்கள் எழுதுவதுண்டு. ஆனால், உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான சிறுவர்கள் ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்பட்டு சண்டையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆபிரிக்க நாடுகளில்தான் அதிகபட்சமாக சுமார் 2 இலட்சம் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெப் தெரிவிக்கிறது. புரூண்டி, கொங்கோ, ருவாண்டா, லைபீரியா,சோமாலியா, சூடான், உகண்டா உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் ஆயுதக் குழுக்கள் சிறுவர்களுக்கென தனிப்படைப் பிரிவையே உருவாக்கியுள்ளன. `18 வயது நிரம்பும்வரை போர்முனைக்க…
-
- 1 reply
- 2.2k views
-
-
வியாழன் 02-08-2007 14:32 மணி தமிழீழம் [மயூரன்] சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சின் செயலர் இஸ்ரேல் விஜயம் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சின் செயலர் பாலித்த ஹோகண நான்கு நாள் அரச பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேல் சென்றிருக்கும் பாலித்த ஹோகண இஸ்ரேலின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சின் இயக்குநர் ஆரொன் அப்ரமோவிச்சை (Mr. Aaron Abramovich) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பில் இருநாடுகளுக்கிடையில் விவசாயம், கைத்தொழில், பயங்கரவாதம், கல்வி தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றபோதும் சந்திப்பானது இஸ்ரேலிடம் இருந்து படைத்துறை உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கம் சார்ந்ததே என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். பதிவ…
-
- 2 replies
- 980 views
-
-
கொள்ளுப்பிட்டி படப்பிடிப்பில் கேட்ட குண்டுச் சத்தங்களால் பெரும் பதற்றம் [03 - August - 2007] - டிட்டோ குகன் - கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் நேற்று புதன்கிழமை பிற்பகல் நடைபெற்ற திரைப்படப்பிடிப்பில் குண்டுச் சத்தங்கள் கேட்கவே ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதாக மக்கள் மத்தியில் பெரும் பீதியேற்பட்டது. இந்தப் படப்பிடிப்பில் குண்டு வெடிப்பு காட்சி படமாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பம்பலப்பிட்டி சந்தியைக் கடந்து சற்றுத் தூரத்தில் கொள்ளுப்பிட்டி பகுதியில் காலி வீதியில் இப்படப்பிடிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதன்போது அங்கு இராணுவ சீருடை அணிந்தவர்களும் வாகனங்களும் நின்று கொண்டிருந்தன. படப்பிடிப்பின்போது அப்பகுதியில் பாரிய வெடிச்சத்தங்கள…
-
- 1 reply
- 1.2k views
-
-
கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்றிரவு வெடிகுண்டுப் புரளியால் பதற்றம் [03 - August - 2007] - டிட்டோ குகன் - கொழும்பு, கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று புதன்கிழமை இரவு ஏற்பட்ட குண்டுப் புரளியால் அப்பகுதியில் சிறிதுநேரம் பெரும் பரபரப்பு நிலவியது. ரயில் நிலையமருகில் எவரும் உரிமை கோராத நிலையில் சந்தேகத்துக்கிடமான `பொதி' ஒன்று கிடந்ததையடுத்தே இந்தக் குண்டுப்புரளி ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு 8.30 மணியளவிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. சந்தேகத்துக்கிடமான இந்த `பொதி' குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரைக் கொண்டு சோதனைக்குட்படுத்தப்பட்டபோத
-
- 0 replies
- 935 views
-
-
சீரழிந்து வரும் பொருளாதாரம் சிக்கலுக்குள் நாட்டின் மக்கள் தினசரி எகிறிவரும் விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பவற்றுக்கு முகம் கொடுக்க முடியாது திணறிக் குமுறிக் கொண்டிருக்கின்றார்கள் இலங்கைத் தீவின் மக்கள். இதுவரை காலமும் யுத்தப் பிரதேசங்களில் - குறிப்பாகத் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் வாழும் மக்களே அன்றாட ஜீவனோபாயத்தைப் பறிகொடுத்து, வாழிடத்தையும், உடைமைகளையும் இழந்து தினசரி வாழ்வியலுக்காகப் போராடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அது இப்போது தென்னிலங்கைக்கும் பரவி விட்டது. அன்றாட வாழ்வைக் கொண்டு நடத்த முடியாத இக்கட்டுக்கு விலைவாசி அதிகரிப்பு உயரப் பாய்ந்து விட்டதால் இலங்கைத் தீவு மக்கள் அனைவருமே பெரும் நெருக்கடிக்கும் திண்டாட்டத்துக்கும் உள்ளாகியி…
-
- 1 reply
- 924 views
-
-
ஓடிப்போன ஓணானை மடியினில் செருகிய ராஜபக்சே! - கிழக்கை மீட்பதாக புறப்பட்டவர் தூரகிழக்கு நாட்டுக்குச் செல்ல திட்டம். ஜ வியாழக்கிழமைஇ 2 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ ராஜபக்சே ஆட்சிக்கு வந்ததும் தனது தம்பிமாரை அழைத்து நாட்டின் பாதுகாப்பையும், தனது பாதுகாப்பையும் அவர்களிடத்து ஒப்படைத்தார். புலிகளிடமிருந்து ஓடிப்போன கருணாவை சந்திரிகா சரியாகப் பயன்படுத்தவில்லை. நான் எப்படிப் பயன்படுத்துகிறேன் பாருங்கள் என்று கூறி பல வித்தைகள் செய்து கருணாவை கொழும்புக்கு அழைத்துவந்தார். காசேதான் கடவுளுக்கு மேல் என்றிருந்த கருணா சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு தனது கைவரிசையைக் கொழும்பில் காண்பித்தார். ஒன்று இரண்டு பேரல்லாது ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் முஸ்லீம் வியாபாரிகள் …
-
- 0 replies
- 1.7k views
-
-
ஆயுதங்களுடன் கருணா குழு தேர்தலில் போட்டியிடலாம்: சிறிலங்கா அழைப்பு [புதன்கிழமை, 1 ஓகஸ்ட் 2007, 20:39 ஈழம்] [கொழும்பு நிருபர்] கிழக்குப் பிரதேசத்தில் சிறிலங்கா அரசாங்கம் நடத்தவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கருணா குழுவினரைப் பங்கேற்குமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்திருக்கிறது என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது: கிழக்கு மாகாணத்திற்கான தேர்தலை அரசாங்கம் விரைவில் நடத்த உள்ளது. தற்போதைய நிலையில் ஆயுதங்களுடன் இருக்கும் கருணா குழுவினரும் இந்த தேர்தலில் போட்டியிடுவர். அவர்களது ஆயுதங்களைக் களைவது அவர்களது பாதுகாப்பிற்கு சிறந்ததல்ல. தற்போதைய சூழ்நிலையில் அவர்களுக்கு ஆயுத…
-
- 4 replies
- 1.7k views
-
-
01.08.2007 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு
-
- 1 reply
- 1.5k views
-
-
வேண்டாம்... வலிக்குது... அழுதிடுவன்... தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்ட மௌனம் ஸ்ரீலங்கா அரசாங்கத் தரப்பை குறிப்பா மகிந்த ராஜபக்சவை பீதியடைவைத்துள்ளதாக அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். கிழக்கு மாகாண ஆக்கிரமிப்பிற்காக பெருமளவு படை பலத்தை கிழக்கில் குவித்துள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம் அங்கிருந்து படையினரை விலக்கிக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வடக்கில் விடுதலைப்புலிகள் தாக்குதல் ஒன்றை ஆரம்பித்தால் கிழக்கில் இருந்து படையினரும் ஆயுத தளபாடங்களும் வடக்கிற்கு நகர்த்தப்பட வேண்டும். அவ்வாறு நகர்த்தப்படும் போது விடுதலைப்புலிகள் மீண்டும் கிழக்கை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான ஏது நிலைகள் காணப்படுவதால் அரசாங்கம் தற்போது குழப்பமடைந்துள்…
-
- 2 replies
- 1.6k views
-
-
அரசபடைகளுடன் இணைந்து தாக்குதல் நடத்தும் கருணா குழு! தமிழகத்தில் வைத்து அம்பலப்படுத்துகிறார் இலங்கை பிரதியமைச்சர் ராதாகிருஸ்ணன். இராமேஸ்வரம் ஓக. 02 இலங்கை அரச படைகளுடன் இணைந்து கருணா குழுவினர் பல தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என தமிழத்தில் வைத்துத் தெரிவித்திருக்கும் பிரதியமைச்சர் ராதாகிருஸ்ணன், இதனால் அப்பாவிப் பொதுமக்கள் பலரும் உயிரிழக்க நேரிடுகின்றது என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு தமிழகத்தின் இராமேஸ்வரம், கோஸ்வாமி மடத்தில் குடும்பத்தினருடன் தற்சமயம் தங்கியிருக்கும் தொழிற்கல்வி மற்றும் தெழில்நுட்ப பயிற்சி பிரதி அமைச்சர் பி. ராதாகிருஸ்ணன், நேற்று இராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி தசிசனம் செய்தார். இந்தச் சந்…
-
- 0 replies
- 1.5k views
-
-
கிழக்கில் ஆக்கிரமிப்பு சின்னமாக புத்தர் சிலைகள் நிறுவப்படுகின்றன: த.தே.கூ. துரைரட்ணசிங்கம் கிழக்கை ஆக்கிரமித்த சிறிலங்கா அரசாங்கம் தனது ஆக்கிரமிப்பின் சின்னமாக புத்தர் சிலைகளை நிறுவி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: மூதூர் கிழக்கில் இருந்து வெளியேறிய மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போதும் வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தழிழ் மக்களுக்கு சிறிலங்காவில் ஒரு நீதியான தீர்வு கிடைக்காது என்பது தெளிவாகின்றது. இது தமிழ் மக்கள…
-
- 1 reply
- 1.1k views
-
-
தொப்பிகல வெற்றிவிழாவுக்கு எதிராக நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு த. தர்மேந்திரா தொப்பிகல வெற்றி விழாவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. களுத்துறையை சேர்ந்த விஜயபால கந்தபான்கொட என்பவர் இம்மனுவைத் தாக்கல் செய்தார். அவர் இம்மனுவில் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க, பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கரு ஜயசூரிய, சட்டமா அதிபர் உட்பட 07 பேரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார். அவரின் சார்பாக இம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; "புலிகளிடமிருந்து தொப்பிகல பிரதேசம் ஷ்ரீலங்கா இராணுவத்தால் மீட்கப்பட்டது. இந்த வெற்றி தேசிய விழாவாக கொழும்பில் கடந்த ஜூலை 19 ஆம் திகதி வெகு விமரிசையாக கொண்…
-
- 0 replies
- 851 views
-