ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
Posted on : Sat Jun 16 8:38:54 EEST 2007 அமெரிக்கா, பிரிட்டனுடன் சேர்ந்து ஈழத்தமிழர் மீதான கொடுமைகளை இந்தியாவும் கண்டிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை இலங்கையில் தமிழினத்தை ஒட்டு மொத்தமாக அழித்துவிட வேண்டும் என் பதில் ராஜபக்ஷ சகோதரர்கள் தீவிரம் காட்டுகின்றனர். இதை உணர்ந்து பிரிட் டன், அமெரிக்கா நாடுகள் கண்டிக்கின் றன. இந்திய அரசும் இந்த நாடுகளுடன் சேர்ந்து கண்டிக்கும் அணுகுமுறை யைக் கடைப்பிடிக்கவேண்டும். இப்படிக் கோரியுள்ளார் பாட்டாளி மக் கள் கட்சியின் நிறுவுநர் டாக்டர் ராம தாஸ். தைலாபுரத்தில் பத்திரிகையாளர் களுக்கு அளித்த பேட்டியில் அவர் இப் படிக் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: "எவரும் எங்களை தனிமைப்படுத்த விடமாட்டோம். எங்கள் துணைக்கு சார்க் நாட…
-
- 0 replies
- 877 views
-
-
Posted on : 2007-06-16 சர்வதேசப் போக்குப் புரியாமல் "கிணற்றுத் தவளை'யாகக் கொழும்பு இலங்கையின் சார்பில் கடந்த தடவை ஐ. நா. செய லாளர் நாயகம் பதவிக்குப் போட்டியிட்டவரும், பிரபல இராஜ தந்திரியும், இலங்கை அரசின் சமாதானச் செய லகத்தின் முன்னாள் பணிப்பாளருமான ஜயந்த தனபால நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற நூல் வெளி யீடு ஒன்றில் உரையாற்றும் போது, இலங்கையில் தற் போது சில விடயங்கள் கையாளப்படும் விதம் குறித்து விச னமும் விரக்தியும் தெரிவிக்கும் விதத்தில் சில கருத்துக் களை முன்வைத்தார். ""கிணற்றுத் தவளைகள் உலக அறிவு இல்லாமல் கத் திக் கொண்டு இருக்கின்றன. உலகின் போக்கை அவை புரிந்து கொள்ளவில்லை. இலங்கை இனப்பிரச்சினை யைக் கிணற்றுத் தவளைச் சிந்தனையில் கையாளக்கூடாது; கையாளவும் ம…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழ் மக்களை வெளியேற்ற அரசு மீண்டும் முயற்சித்தால் வீதியில் இறங்குவோம் வீரகேசரி நாளேடு கொழும்பில் உள்ள தமிழ் மக்களை வெளியேற்றுவதற்கு மீண்டும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் ஐக்கிய தேசியக்கட்சி பாரிய எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும். அவ்வாறான முயற்சியை தோற்கடிக்க ஐ.தே.க. தன்னாலான அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்ளும். தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக வீதியில் இறங்கி போராடவும் எமது கட்சி தயாராக இருக்கின்றது. அரசியலமைப்பை மீறுவதற்கு அரசாங்கத்திற்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என்று கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக கேசரிக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம…
-
- 2 replies
- 1.5k views
-
-
65 கோடி ரூபாவிற்கான குறைநிரப்பு பிரேரணைகளை பாராளுமன்றத்தில் 19 ஆம் திகதி சமர்ப்பிக்க ஏற்பாடு வீரகேசரி நாளேடு இந்த ஆண்டிற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்படாத அமைச்சுக்களின் செலவுகளுக்காக 65 கோடி ரூபாவிற்கான குறைநிரப்பு பிரேரணைகளை அரசாங்கம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து அரசாங்கத்தில் இணைந்துகொண் டதையடுத்து ஏற்படுத்தப்பட்ட 7 புதிய அமைச்சுக்களின் ஆறுமாதகால செலவுக்காகவே 65 கோடி ரூபாவிற்கான இந்த குறைநிரப்பு பிரேரணைகள் பாராளுமன்றத்தில் சம ர்ப்பிக்கப்படவுள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பினால் அப்பாவி பொதுமக்கள் பல்வேறு …
-
- 0 replies
- 762 views
-
-
கொழும்பில் மிக பயங்கர தாக்குதலுக்கு புலிகள் திட்டம்- உளவுப் பிரிவு எச்சரிக்கை ஜூன் 15, 2007 கொழும்பு: கொழும்பில் மாபெரும் தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக இலங்கை உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது. கிழக்கு மாவட்டத்தில் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் கொழும்பை தாக்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அரசுக்குச் சொந்தமான டெய்லி நியூஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 1,000 கிலோ வெடிமருந்துகளுடன் கொழும்பை நிலைகுலைய வைக்க புலிகள் திட்டமிட்டுள்ளதாகவும், ரத்தக் களறி ஏற்படுத்த திட்மிட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதற்காக கொழும்பில் ஊடுருவி வரும் புலிகள் விடுதிகளிலும் புற நகர்ப் பகுதிகளில் பிற இடங்களில…
-
- 6 replies
- 2.9k views
-
-
கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு நேரடி சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகவுள்ளோம்: மேலக மக்கள் முன்னணி. கொழும்பிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படும் தமிழ் மக்கள் சார்பில் நேரடி சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மேலக மக்கள் முன்னணி தயாராகவுள்ளது. மனித உரிமை சட்ட வல்லுநர்களின் உதவியுடன் நாம் வெளியேற்றப்படும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கத் தயாராகவுள்ளோம். இவ்வாறு மேலக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொழும்பிலிருந்து வவுனியாவிற்கும் மட்டக்களப்பிற்கும் திருகோணமலைக்கும் தமிழ் மக்கள் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். இன்னொரு பிரிவினர் மலையக பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட…
-
- 1 reply
- 1.1k views
-
-
மகிந்த ராஜபக்ஸ - ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சந்திப்பு. சுவிஸிற்கு பயணம் மேற்கொண்டுள்ள சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ, ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பரைச் சந்தித்துப் பேசியுள்ளார். சிறீலங்கா அரசு, மனித உரிமை மீறல்களைக் குறைப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி அதிபர் மகிந்த ராஜபக்ஸவினால் இந்த சந்திப்பில் எடுத்து விளக்கப்பட்டதாக, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த ஐ-நா சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர், சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளபட்டுவரும் மனித உரிமை மீறல்கள் முதலில் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியதாகத் தெரிய வருகின்றது. சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல…
-
- 4 replies
- 1.4k views
-
-
மாரவிலவில் 14 தமிழர்கள் கைது [வெள்ளிக்கிழமை, 15 யூன் 2007, 19:46 ஈழம்] [செ.விசுவநாதன்] சிலாபம் மாவட்டம் மாரவிலப் பகுதியில் 14 தமிழர்களை சிறிலங்கா காவல்துரையினர் கைது செய்துள்ளனர். அப்பகுதியில் சிறிலங்கா காவல்துறையினர் நேற்று வியாழக்கிழமை இரவு நடத்திய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போது அனைவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் வடக்கு - கிழக்கிலிருந்து மலையகத்துக்கு பல்வேறு பணிகள் தொடர்பாக வந்திருவர்கள் என்றும் அனைவரும் 25 வயது முதல் 35 வயதுடையோர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தங்களது அடையாள அட்டையை காண்பிக்க தவறியதாலும் மாரவிலப் பகுதிக்கு வந்தமை குறித்து உரிய காரணங்களைத் தெரிவிக்காமையாலும் அவர்களைக் கைது செய்ததாக சிறிலங்கா…
-
- 0 replies
- 859 views
-
-
மனித உரிமை மீறல்களுக்கு அரசே பொறுப்பு - நான்கு மதத் தலைவர்களும் கூட்டாக வலியுறுத்தல். சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என, நான்கு மதத் தலைவர்களும் இன்று கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். சிறீலங்காப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல் வலுவடைந்துள்ள இந்தக் காலகட்டத்தில், மனித உரிமை மீறல்களும் அதிகரித்துச் செல்வதாக, மதத் தலைவர்கள் விடுத்த அறிக்கையில் கண்டிக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத் தலைவர் பெல்லன்வில விமலரத்ன, கிறிஸ்தவ மதத் தலைவர் பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ், மற்றும் இந்து, முஸ்லீம் மதத் தலைவர்கள் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகர்கள் மாநாட்டில் தமது கூட்டறிக்கையை வெளியிட்டனர். மனித உரிமை மீறல்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கைக்கு இந்தியா இரகசிய உதவி செய்ய முடிவு: தமிழக ஊடகம் தகவல் [புதன்கிழமை, 13 யூன் 2007, 14:04 ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கைக்கு இந்தியா இரகசிய உதவி செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தமிழ் ஊடகமான தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: இலங்கையில் உள்நாட்டுப் போர் வலுத்து வரும் நிலையில், இலங்கை அரசின் பக்கம் இந்தியா, மெல்ல மெல்ல சாயத் தொடங்கியுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய நிறுவனங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உதவி அளிக்கும் என தெரிகிறது. இலங்கையில் அமைதி முயற்சி பலன் தராததால், மீண்டும் உள்நாட்டுப்போர் ஏற்பட்டுள்ளது. இலங்கை இராணுவமும், விடுதலைப் புலிகளும் கடும் போர…
-
- 5 replies
- 1.6k views
-
-
காலியில் உள்ள பாடசாலை ஒன்றில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட ஒரு பெண் தனது படிப்பை தொடர அந்த பாடசாலை அதிபர் அனுமதி மறுத்துள்ளார். அவர் தனது மறுப்புக்கு கூறிய காரணம் "அந்த பெண் இப்ப ஒரு அவமானமானவள் அத்துடன் அவள் மற்ற மாணவர்களுக்கு இழிவான / கெட்ட உதாரணமாக அமைந்து விடுவாள்" என்பதாகும். http://www.bbc.co.uk/sinhala/news/story/20...irl_raped.shtml என்னால் ஊர்புதினம் பகுதியில் எழுதமுடியாமையால் இதனை இங்கு எழுதுகிறேன்
-
- 18 replies
- 3.4k views
-
-
சட்டவிரோத மனித போக்குவரவு பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கம் வீரகேசரி நாளேடு சட்டவிரோதமான மனித போக்குவரவு தொடர்பான அமெரிக்க கண்காணிப்பு பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இக்கண்காணிப்புப் பட்டியலில் அண் டை நாடான இந்தியா நான்காவது வருடமாகவும் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான மனித போக்குவரவு தொடருமானால் அந்நாடு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மனித போக்குவரவு தொடர்பான உரிய சான்றுகளை சமர்ப்பிக்காமை காரணமாகவே இலங்கை கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்…
-
- 2 replies
- 1.7k views
-
-
தமிழ் ஈழமே ஒரே தீர்வு : ராமதாஸ்! இலங்கையில் அமைதி திரும்ப வேண்டுமெனில் தமிழ் ஈழம் தான்அதற்கு ஒரே தீர்வு என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்! திண்டிவனத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், தமிழர்களின் சுய ஆட்சியே இலங்கை இனப்பிரச்சனைக்கு ஒரே தீர்வாகும் என்று கூறினார். இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சனைக்கு எவ்வாறு இரு இனத்தவரும் ஒருவொருக்கொருவர் அங்கீகரித்துக் கொள்வதன் மூலம் தீர்வு சாத்தியம் என்று சர்வதேச சமூகம் கருகிறதோ, அதே தீர்வுதான் இலங்கைக்கும் பொருந்தும் என்றும், தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் அவர்கள் வாழ வேண்டும் என்றும், அதேபோல சிங்களவர்களின் பகுதிகளில் அவர்கள் தனியே வாழ வேண்டும் என்றும், இதன்மூலம் இரு சமூகங்களும…
-
- 6 replies
- 2.1k views
-
-
தமிழர் வெளியேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் - மத்திய அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல் கொழும்பு நகரிலிருந்து தமிழர் களை வெளியேற்றும் சிங்கள அரசின் போக்கை மத்திய அரசு உடனடி யாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டுமென்று விடுதலைச் சிறுத் தைகள் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றும் சிங்கள ராணுவத்தைக் கண்டித்து சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கு. செல்வம், ரவிக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் வன்னியரசு, பாவலன், விடுதலைச் செழி…
-
- 1 reply
- 1.1k views
-
-
Posted on : Fri Jun 15 5:53:08 EEST 2007 விடுதலைப்புலிகளும் கருணா குழுவும் சிறுவர்களைச் சேர்ப்பதில் தீவிரம் ஐ.நா. செயற்குழு கண்டனமும் எச்சரிக்கையும் தமிழீழ விடுதலைப் புலிகளும் கருணா குழுவினரும் தத்தமது படைகளில் சிறுவர் களைச் சேர்ப்பதன் மூலம், கடுமையான முறையில் சிறுவர் உரிமைகளை மீறுவதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் ஆயுதப் போராட்டத்தில் சிறுவர் தொடர் பான செயற்குழு கண்டனம் தெரிவித்தி ருக்கின்றது. உடனடியாக இருதரப்பினர்களும் சிறு வர்களை அவர்களது பெற்றோர்களிடம் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் செயற் குழு வலியுறுத்தி உள்ளது. இதேவேளை தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள பாடசாலைகளில் குறித்த சிறுவர்களை இரு அமைப்புகளும் அனுமதிக்க வேண் டும் எனவும் ஐக்கிய நாடுகளின…
-
- 0 replies
- 1.3k views
-
-
Posted on : Fri Jun 15 5:59:27 EEST 2007 ரணில் சரித்திரம் படிக்க வேண்டுமாம் ஊடகத்துறை அமைச்சர் சொல்கிறார் ""எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சரித்திரம் தெரியவில்லை. 2ஆம் உலகமகா யுத்தத்துக்கு முன்னரும் பின்னருமான ஐரோப்பிய நாடுகளின் சரித்திரத்தை அவர் இப்போதாவது படிக்க வேண்டும்'' இவ்வாறு தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரிய தர்சன யாப்பா தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளைத் தெரிவிக்கும் செய்தியா ளர் மாநாடு நேற்று நடைபெற்றது. அதிலேயே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார். ஜேர்மனியை ஹிட்லர் அழித்தது போல் இலங்கையை மஹிந்த அழிக்க முனைகின்றார் என எதிர்க்கட்சித் தலை வர் ரணில் விக்கிரமசிங்க ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும் போது தெரிவித்துள்ளார். ஹிட்லர் ஜேர்மனிக்…
-
- 0 replies
- 1.5k views
-
-
Posted on : Fri Jun 15 6:00:32 EEST 2007 பெரும் குண்டுச் சத்தத்தால் நகரில் நேற்று பரபரப்பு நேற்று நண்பகல் 11.45 மணியளவில் யாழ். நகரம் பெரும் வெடிச்சத்தத்தால் அதிர்ந்தது. அது எதனால் உண்டான சத்தம், சம்பவம் எதுவாக இருக்கும் என்பது தெரியாமல் நகரப் பகுதி எங்கும் பெரும் பரபரப்பு நில வியது. கிளைமோர் தாக்குதலாக இருக்குமோ அல்லது குண்டு வீச்சுத் தாக்குதலாக இருக் குமோ என்று ஒருவரை மற்றவர் மாறி மாறி விசாரிக்கும் பதற்ற நிலை பல நிமிட நேரம் தொடர்ந்தது. யாழ். பொலீஸ் நிலையத்தில் வைத்து, குண்டு ஒன்று செயலிழக்கச் செய்யப்பட் டது என்ற தகவல் பரவிய பின்னரே முதலில் உண்டான பரபரப்பு அடங்கியது. யாழ். நீதிமன்ற வழக்கு ஒன்றின் தடயப் பொருளான குண்டு ஒன்று பொலிஸ் நிலையத்துக்குச் சமீபமாக…
-
- 0 replies
- 1.8k views
-
-
Posted on : 2007-06-15 காலம் தாழ்த்தி இப்போதேனும் நீதி செய்யுமா சர்வதேச சமூகம்? இலங்கை நிலைமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களை அழைத்து விளக்கியிருக்கின்றார். இலங்கையில் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், கப்பம் கோரல் போன்ற மனித உரிமை மீறல்கள் எல்லாம் எல்லை மீறி அதிகரித்து விட்டன. இவற்றைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் சர்வதேச சமூகம் உடனடியாக இறங்கவேண்டும். இல்லையேல் நிலைமை மிக மிக மோசமாகிவிடும் என எச்சரித்திருக்கின்றார் ரணில். இவற்றையெல்லாம் தடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தார்மீக ரீதியான கடமையும், பொறுப்பும் சர்வதேச சமூகத்துக்கு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்ட விழைகின்றார். ஆனால், அ…
-
- 0 replies
- 1.1k views
-
-
கொழும்பிலுள்ள லொட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த நான்கு தமிழர்கள் கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது. போலித்தங்க ஆபரணங்கள் தயாரிப்பதாகக் குற்றம்சாட்டியே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இவர்களிடம் இருந்த தங்க ஆபரணங்கள் சிலவும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மேற்படி நான்கு பேரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரிவித்த கொம்பனித்தெரு பொலிஸார் இவ்வாறு பலர் போலித்தங்க ஆபரண வியாபாரத்தில் ஈடுபட்டுவருவதாகவும் கூறினர். இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனித்தெரு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். -Tamilwin-
-
- 3 replies
- 1.2k views
-
-
சவுதி அரேபியாவில் இரண்டு சிங்களவர்களுக்கு ஆயுள் தண்டனை சவுதி அரேபியா, ஜெத்தாவில் கடந்த ஏப்ரல் மாதம் அரேபியப் பெண்ணொருவரின் நகைகளைக் கொள்ளையிட முயன்ற இரண்டு சிங்களவர்களுக்கும், மற்றொரு இந்தியருக்கும் கொலை முயற்சிக் குற்றத்தின்கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதே குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மேலும் ஐந்து சிங்களவர்களுக்கு ஐந்து வருட சிறைத் தண்டனையும், 500 சாட்டை அடியும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவிலுள்ள சிறீலங்கா தூதரகம், வெளிநாட்டு வேலை வாய்ப்புத் திணைக்களத்தின் ஊடாக தண்டனை வழங்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இந்தத் தகவலை அறிவித்துள்ளது. -பதிவு
-
- 2 replies
- 1.4k views
-
-
மௌபிம ஊடகர் பரமேஸ்வரியின் கடவுச்சீட்டு சிறிலங்கா புலனாய்வுத்துறையால் பறிப்பு. சிறிலங்காவில் கடத்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட மௌபிம ஊடகர் பரமேஸ்வரியின் கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டையும் சிறிலங்கா புலனாய்வுத்துறையால் பறிக்கப்பட்டுள்ளன. கொழும்பு பொறள்ளப் பகுதியில் நிலக்கீழ் சாலையில் சென்றுகொண்டிருந்த பரமேஸ்வரியை மறித்த ஆயுதம் தாங்கிய நபர்கள் தம்மை அரச புலனாய்வுத்துறையினர் என்று அடையாளப்படுத்தி அவரின் கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை பறித்துள்ளனர். -Puthinam-
-
- 2 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவை விமர்சிக்க அமெரிக்காவுக்கு உரிமை இல்லை: அமைச்சர் ராஜித சேனாரட்ன. சிறிலங்காவை விமர்சிக்க அமெரிக்காவுக்கு உரிமை இல்லை என்று சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரட்ன சாடியுள்ளார். கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியதாவது: கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட போது இதேபோன்ற நடவடிக்கையை அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்டது. அப்படியான நிலையில் சிறிலங்காவை விமர்சிக்க அமெரிக்காவுக்கு உரிமை இல்லை. பல முஸ்லிம்களை அமெரிக்கா கைது செய்தது. சதாம் உசேனின் இரு மகன்களைப் படுகொலை செய்தது. இப்போது எங்கள் நாட்டில் மனித உரிமைகளைப் பற்றி அமெரிக்கா பேசுகிறது என்றார் அவர். மற்றொரு அமைச்சரான ஜெயராஜ் பெர்ன…
-
- 5 replies
- 2.3k views
-
-
இலங்கையில் இன சுத்திகரிப்பு’? இலங்கைப் பேரினவாதத்தின் குரூரமுகம் மேலும் ஒருமுறை வெளிப்பட்டிருக்கிறது. தமிழர்களை வெட்டிக்கொன்று, ‘‘இங்கே தமிழன் கறி கிடைக்கும்’’ என்று எழுதி வைத்த ஜூலைப் படுகொலைகள் நடந்து இருபத்து நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டன. இருந்தாலும் அந்தப் பேரின வாதத் துக்கு இன்று வரையில் யாராலும் முடிவுரை எழுத முடியவில்லை. அந்த நெருப்பு தமிழர்களின் ரத்தத்தை பெட்ரோலாக்கி மேலும் மேலும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிக்கிறது என்பதுதான் நிஜம். அண்மையில் கொழும்பு நகருக்குள் தங்கியிருக்கும் ஏதுமறியா அப்பாவித் தமிழர்களை கைது செய்து பலவந்தமாக இலங்கைப் போலீஸார் வெளியேற்றி உள்ளனர். மருத்துவம் செய்து கொள்ளவந்த முதியோர்கள், வெளிநாடுகளிலிருந்து திரும்பி வருகின…
-
- 0 replies
- 1.1k views
-
-
இணைத்தலைமை நாடுகளின் கூட்டம் இம்மாதம் ஒஸ்லோவில். இலங்கையில் வன்முறைகளும் மனித உரிமை மீறல்களும் அதிகரித்துள்ள நிலையில், உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் சந்திப்பு எதிர்வரும் 25, 26 ஆம் திகதிகளில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெறவுள்ளன. இந்தச் சந்திப்பின் போது இலங்கையில் தற்போது அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்கள் குறித்தும், தொடர்ந்தும் மீறப்பட்டு வருகின்ற மனித உரிமைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என நோர்வேத் தூதரகப் பேச்சாளர் எரிக் நியூரன்பர்க் தெரிவித்துள்ளார். இலங்கையில் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், இலங்கைக்கு வழங்கப்படுகின்ற உதவிகள் குறித்து இணைத் தலைமை நாடுகள் மிகுந்த அக்கறையுடன் ஆராயலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நோர்வேயில் இந்த மா…
-
- 1 reply
- 1k views
-
-
சிறிலங்காவை அனைத்துலக நாடுகள் கை விடக்கூடும்: ரொய்ட்டர்ஸ் [வியாழக்கிழமை, 14 யூன் 2007, 18:44 ஈழம்] [பி.கெளரி] சிறிலங்காவில் உள்ள அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் ஒருவருக்கு ஒருவர் முரணான தகவல்களை உள்ளுரிலும், அனைத்துலகத்திலும் தெரிவித்து வருவதனால் நாடு மேலும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அனைத்துலக செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தி ஆய்வு விபரம்: இலங்கையில் தமிழ்மக்கள் நாடு கடத்தப்படுகின்றனர், படுகொலை செய்யப்படுகின்றனர். இச்சம்பவங்களுக்கு அரச படையினர் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் குற்றம் சுமத்தப்படுகின்றது. அங்கு போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினர், உதவி நிறுவனங்கள் போன்றவை …
-
- 1 reply
- 1.6k views
-